ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Keywords

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 129 on Fri Jun 04, 2021 7:07 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும்

Go down

ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும் Empty ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும்

Post by arutsakthi Mon Nov 23, 2015 2:33 pm

ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும்
சுமார் 70 வருடங்களுக்கு முன் குண்டலினி சக்தி (The Serpent Power) என்பது பற்றி சென்னையில் ஆன்மிகவாதிகளிடம் பெரும் பேச்சாக இருந்தது.
அதை எழுதியவர் சர் ஜான் வுட்ராஃப்.
அவருக்கு ஒரு புனைபெயர் ‘ஆர்தர்அவ்லன்’ என்று இருந்தது. அவர் சம்ஸ்கிருதம் நிறையக் கற்று இந்து மத தந்த்ர சாஸ்திரங்களில் ஈடுபட்டார்.
அயர்லாந்தில் பிறந்த அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். இந்தியாவுக்கு ஏன் இவர் வந்தார்? உத்தியோக ரீதியாகத்தான் வந்தார்.
இந்தியச் சமூக சட்டங்கள் பற்றித் தேர்வு எழுதி வெற்றி பெற்று, பிறகு கல்கத்தா நீதி மன்றத்தில் முதன் முதலாக வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாகூர்சட்டப்பேராசிரியர் என்ற பதவியில் பணியாற்றினார்.
அந்த நாட்களில் ஆங்கிலேயர்கள் தீர்ப்புகள் வழங்குவதற்காக கோர்ட்டுகளை ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் எந்தவிதச்சட்டதிட்டங்களை அமலாக்குவது? இந்தியர்கள் அதை விரும்பி ஏற்றுக் கொள்வார்களா? என்ற எண்ணத்துடன் அமீர் அலி என்பவருடன் சேர்ந்து ஒரு நூலை இயற்றினார்.
1902இல் இந்திய அரசாங்கத்தில் கவுன்சிலராக இருந்தார். பின்னர் அவர் 2 வருடங்களுக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1915 வரை 18 வருடங்கள் முதன்மை நீதிபதியாக இருந்தார்.
பிறகு 1923இல் இங்கிலாந்துக்குச் சென்றார். இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய சட்டத்திற்கு ரீடராக இருந்தார். 1936ஆம் வருடம் ஜனவரி 18ஆம் தேதி மரணம் எய்தினார்.
இந்தியாவில் நீதித்துறையில் பணியாற்றிய போது ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஒரு யோகி. அவரை குற்றவாளியாக அவர் மனம் நினைக்காததால் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவரது ஞான திருஷ்டியை தெரிந்து கொண்டார். அதனால் இந்திய மண்ணின் வேறான வேதாந்தம் உபாசனை இதில் பற்று ஏற்பட்டு ஸ்ரீவித்யாதீக்ஷை பெற்று பல ஆண்டுகள் சாதனை செந்தார். அதனால் அவர் சம்ஸ்கிருதம் கற்கும்படி ஏற்பட்டது.. அதுதான் அவர் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இந்திய வேதாந்தந்தத்தைக் கற்றார். எல்லாவற்றையும் விட அவர் இந்து தந்த்ரங்களில் பெரிதும் ஈடுபட்டார். இவரது நூல்களே இன்று ஸ்ரீவித்யா உபாசனைக்கு மிகுந்த வழிகாட்டியாக உள்ளன.
கிட்டத்தட்ட 20 சம்ஸ்கிருத நூல்களை அவர் மொழி பெயர்த்திருக்கிறார். அந்தச் சமயத்தில் தான் அவர் ஆர்தர் அவ்லன் என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார். தந்த்ரங்களைப் பற்றி வெளியீடுகள் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் அங்கங்கே அவரே அவற்றைப் பற்றி உரையாற்றவும் செய்தார். தந்த்ரங்களில் எந்தவித ஏமாற்றுதலோ அல்லது மனத்துக்கு ஒவ்வாததோ கிடையவே கிடையாது என்று இந்தியருக்கே தெரிவித்தார். அதனால் இந்தியாவில் இந்த இலக்கியங்களைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.
அந்த நாளில் ஒரு பத்திரிகை அவரைப் பற்றி ‘அவர் நீதிபதியாக மட்டும் அல்லமல் இந்தியாவின் சமூக சட்டத்தில் பெரும் பண்டிதராக தேர்ந்தவராகவும் இருந்தார் என எழுதியுள்ளது. தந்த்ரங்களைக் கற்பதில் அவர் ஒரு மாணவராகவே ஈடுபட்டார். சொல்லப் போனால் அவர் எழுதிய குண்டலினிசக்தி என்ற புத்தகம் மேலேநாட்டு அறிஞர்களை குண்டலினி யோகத்தைப் பற்றி அறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
குண்டலினிசக்கரநிரூபணம் என்பது பெரியளவு மேலைநாட்டுப் பண்டிதர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு பெருமையைத் தேடித் தந்தது.
அவர் எழுதுகிறார் ‘சிருஷ்டி’ என்பது பிரம்மத்தின் முதல் இயக்கமாக ஆரம்பிப்பதுதான்! பிரக்ருதி என்று நாம் சொல்வதும் ஒருவித சக்திதான். ‘ஓம்’ என்ற ஓர் அருமையான மந்திரத்திலிருந்து இந்த வெளிப்பாடுகள் உண்டாகி இயங்க ஆரம்பித்துவிடுகிறது. அப்படியே தன்னிலையிலேயே மனத்தில் ஆழ்ந்து இருப்பது என்பதுதான் மகாநிர்வாணதந்த்ரம் என்ற சம்ஸ்கிருத நூலை ஆங்கில மொழியில் இவர் அழகாக மொழி பெயர்த்துள்ளார்.
இதன் அடிப்படையில் அவர் ஒரு நாடகத்தைக்கூட எழுதியுள்ளார். இவரையும் இவர் எழுதியுள்ள வெளியீடுகளைப் பற்றியும் அந்தநாளில் பிரசித்தி பெற்ற டி.எம்.பி.மகாதேவன் என்பவர், “இவருடைய புத்தகம் ஒரு பூமாலை” என்று தம் முகவுரையில் எழுதியுள்ளார்.
அந்த நாளில் கணேஷ் அண்ட் கம்பெனி இதைப் பிரசுரித்தது. (இந்தக் கம்பெனியின் இந்த வெளியீடுகளை அந்த நாளில் நான் அறிவேன்.....புஷ்பா தங்கதுரை)
அவர் எழுதிய புத்தகங்களின் வரிசையை இங்கே கொடுக்கிறேன்.
சக்தி மற்றும் சாக்தா (1918)
தந்த்ரா கொள்கைகள் பற்றிய அவர் எழுதியுள்ள முகவுரைகள் (2 தொகுப்புகள்)
தந்த்ர சாஸ்த்ரம்
மஹாநிர்வாண தந்த்ரம்
தேவியைப் பற்றிய துதிப் பாடல்கள்
காளியைப் பற்றிய பாடல்கள்
உலகம் சக்தி வாய்ந்தது
மலர்மாலை என்ற கடிதங்களின் கொத்து
பாரதசக்தி; (இந்தியக் கலாசாரம் பற்றிய கட்டுரைகள் மற்றும் முகவரிகள்)
இந்திய நாகரிகம் பற்றிய அருமையான கட்டுரைகள்

தவிர அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்டவை!
இந்திய தத்துவம்
காளி
குண்டலினி
மந்த்ரம்
சக்தியிஸம்
தந்த்ரம்
யந்த்ரம்
“காதலின் டெய்லர்” என்ற ஆங்கிலப் பெண்மணி ஜான்வுட்ராஃப்க்கு உதவியவர்கள் சிலரைக் குறிப்பிட விரும்பி எழுதியுள்ளார்.
தந்த்ரிக் பற்றிய குருக்களில் வித்யார்ணவர் ஒருவர். தவிர ஜயகாளிதேவி என்ற பெண்மணியும் ஒருவர்.
தந்த்ர நூல்கள் ஒரு காலத்தில் பழிக்கப்பட்டன. படித்த இந்தியர்கள் தவிர மேல்நாட்டவரும் அதைப் பழித்துக் கூறினார்கள்.
இந்த சமயத்தில்தான் ஆர்தர் அவலன் தோன்றி தந்த்ர நூல்களில் ஈடுபட்டு அவற்றை வெளியிட்டார்.
அவருக்கு இந்திய ஆன்மிக உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

குண்டலினி சக்தி: ஒரு சாராம்சம்
நம் தேகத்தின் பின்புறம் முதுகு எலும்பு மேலிருந்து கீழ் வரை குறுகிக் கொண்டே போயிருக்கிறது. இவை நமக்கு மிக முக்கிய எலும்புகள்! இவை பின்னலைப் போல் பின்னிக் கொண்டே போகின்றன. இந்த எலும்பு கீழ் உள்ள நுனியின் அருகேதான் குண்டலினி சக்தி உள்ளது. ஒரு பாம்புச் சுருள்போல் தன்னைச் சுற்றிக் கொண்டு படுத்துள்ளது. ஒருவரின் ஆன்ம முன்னேற்றத்தால் இந்தக் குண்டலினி சக்தி எழுப்பப்படுகிறது. அது எழும்பொழுதே ஒருவருக்கு நிறையச் சக்தி ஏற்படும். முகப்பொலிவு, தேகப்பொலிவு எல்லாம் இதனால் ஏற்படும். அந்தத் தண்டின் நடுவிலுள்ள துவாரத்தின் வழியே தான் குண்டலினி சக்தி பயணம் செய்கிறது.
குண்டலினி செல்லும் போது வழியில் 6 சக்கரங்கள் உள்ளன. இதன் ஒவ்வொன்றிலும் அது தங்கித் தங்கிச் செல்கிறது. இப்படிச் செல்வது என்பது எளிதல்ல. நம் ஆன்மிகம் முன்னேற முன்னேறத் தான் குண்டலினி மேலே செல்ல முடியும்.
இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் தங்கிச் செல்லும் போது தான் ஒருவன் கவிஞனாகிறான். பாடகனாகிறான். வித்வானாகிறான். எல்லாரையும் கவரும் பேச்சாளனாகிறான். இப்படி ஒவ்வொரு சக்தியும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. இந்த விதத்தில் முதுகுத்தண்டு வழியாக குண்டலினி மேலே போய் தலை வழியாகச் சென்று கடைசியில் முன்புறம் நம் முகத்தில் உள்ள நெற்றியில் உள்ள புருவத்தின் மத்தியில் வந்து நிற்கிறது. அதனால்தான் ‘புருவமத்தி’ என்பதை ஞானிகள் பெரிதாகக் கூறுகிறார்கள். இந்தப் புருவ மத்தியில் குண்டலினி வந்து நின்றுவிடுவதால் ஒருவன் பெரும் மகான் ஆகிறான். மகாயோகி ஆகிறான். பந்தங்களிலிருந்து விடுதலை பெற்றவன் ஆகிறான்.
Thanks: புஷ்பா தங்கதுரை…நன்றி அம்மன்தரிசனம் – சில இடங்களில் சில பதிவுகள் இப்பால் சேர்க்கப்பட்டுள்ளன.

arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 82
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும் Empty Re: ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும்

Post by nakasundaram Mon Nov 23, 2015 6:09 pm

அருமையான தகவல் பதிவு. நமஸ்காரங்கள். பெரியவா அவரைப்பற்றி சொன்ன தகவல்கள் :

உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. 'தாங்க்' தான் பண்ணுகிறேன். ''யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது' என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது. அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம், மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தை]ச் சொன்னேன்.

இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: 'நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்' என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.

க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், 'இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் - உயிர் பவர் - இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.

ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? 'ஷாக்' தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 52

https://omshanthi.forumta.net

Back to top Go down

ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும் Empty Re: ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும்

Post by Kalyani Fri Nov 27, 2015 8:22 am

ஓம் ஸ்ரீ குருப்யோனமஹா ஜெய சக்தி
மிகவும் அருமையாக உள்ளது. கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

நன்றி
கல்யாணி வெங்கடராமன்
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும் Empty Re: ஸ்ரீவித்யாவும் ஸர் ஜான் வுட்ராஃப்பும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum