ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


ஸ்ரீலலிதையே வாக்வாதினி வடிவில். - தமிழ் கவிதை ஆக்கம்: நாக.சுந்தாம்

Go down

ஸ்ரீலலிதையே வாக்வாதினி வடிவில். - தமிழ் கவிதை ஆக்கம்: நாக.சுந்தாம் Empty ஸ்ரீலலிதையே வாக்வாதினி வடிவில். - தமிழ் கவிதை ஆக்கம்: நாக.சுந்தாம்

Post by arutsakthi Tue Oct 15, 2013 11:30 am

ஸ்ரீலலிதையே வாக்வாதினி வடிவில். . . .

குஹானந்தமண்டலி அருட்கவி ஸார் ஸ்ரீ சிதானந்தநாதர் அவர்கள் செய்த ஸ்ரீ வாக்வாதினி ஸ்தோத்ரம் அதன் பொருளை சிந்தித்த வேளையில் ஸ்ரீ லலிதையின் நவாவரண தத்துவத்தை அழகாக விளக்குகிறது. (தமிழ் கவிதை ஆக்கம்: நாக.சுந்தாம்)
-----------------------------------------

ஐம் ஐம் ஐம் பீஜரூபே ஸகலஸுரநுதே வேதவேதாந்த வேத்யே
ருக்ரூபே யாஜுஷாட்யே ருஷிகணவினுதே ஸாமகானானுராகே
ஆதர்வண்யாக்யவித்யே பவபயஹரிணி ச அக்ஷமாலாதிரூபே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 1

ऐं ऐं ऐं बीज रूपे सकल सुरनुते वेदवेदान्त वेद्ये
ऋग्रूपे याजुषाढ्ये ऋषिगण विनुते सामगानानुरागे
आथर्वण्याख्य विद्ये भवभयहिरणी च अक्षमालादि रूपे
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (1)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
பூபுரத்தின் வெளியில் நான்குவேதங்கள், பிருத்வி தத்வம்(பூமி), ஜாக்ரத்வ்ருத்தி (நினைவு), திரிபுரா சக்ரேசி

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் -
ருக்ரூபே யாஜுஷா...............ஐம் பீஜமே நான்கு வேதங்களின் முதலெழுத்தால் உருவானது, இதனால் பூபுரம் என்பது தெளிவு

மூவுலகும் மேவிநிற்கும் மாதாவே மண்ணிதனில்
தாவுகின்ற மனதையாளும் தத்துவமே தயாபரியே
தூவுகின்ற மின்னொளியே திரிபுரையே நினைவலையே
பாவுகின்ற பூபுரத்தில் பரம்பொருளாய் பரந்தவளே
நாவினால் நவிலுகின்ற நாலுவேதம் உறைபவளே
நானிலத்தில் பவபயத்தை நீக்குகின்ற நல்லவளே
கூவுகின்றேனுன்பெயரை ஐம் ஐம் ஐம் எனவே
தாவுகின்ற மனத்தினிலே தங்கிடுவாய் எத்தினமும் 1

வம் வம் வம் பீஜரூபே வரமகுடயுதே வந்த்யலோகார்த்திஹந்த்ரீ
வந்த்யே விச்வப்ரஸூதே விதிபிலநிலயே வேத்யவித்யாதிரூபே
சந்த்ரே சந்த்ரார்த்தசூடே சசிதரநயனே சந்த்ரஸூர்யாதிநேத்ரே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 2

वं वं वं बीज रूपे वरमकुटयुते वंध्यलोकार्तिहन्त्री
वंध्ये विशवप्रसूते विधिबिलनिलये वेद्यविद्यादि रुपे
चन्द्रे चन्द्राध्राचूडे शशिधरनयने चन्द्रसूर्याग्नि नेत्रे
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (2)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
ஸர்வாசாபரிபூரகசக்ரம், ஸகாரப்ரக்ருதி, கனவு வ்ருத்தி, திரிபுரேசிசக்ரேசி, ஷோடச தளம், நித்யா கலாக்கள் (சந்தரஒளி)

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் -
சந்த்ரஒளிவ்யக்தம், வரமகுடம், நீர்-குளிர்ச்சி, சந்திரனும் குளிர்ச்சி-எனவே வம் பீஜம்

ஆசைகளை அருளுகின்ற அன்னையே என்கனவில்
வேசம்பல கொண்டுறையும் கொற்றவளே திரிபுரேசி
பூசைபெறும் பதினாறாம் கலைநித்ய கன்னிகையே
அசைகின்ற இன்னிலவே ஸகார சத்தியமே
நேசமுடன் நானிலத்தோர் வணங்குகின்ற நித்தியமே
ஆசையுடன் வரமளிக்கும் மகுடத்தை தரித்தவளே
ஆசுகவியாகிடவேயுன் பெயரை வம் வம் வம் எனவே
பேசுகின்றேன் மனத்தினிலே தங்கிடுவாய் எத்தினமும் 2

தம் தம் தம் பீஜரூபே நதஜனஸதயே சங்கரார்யேணபூஜ்யே
தஹ்ரே தஹ்ராம்பரஸ்தே தசதிசிவிதிதே பத்ரமுத்ராதிஸேவ்யே
வீணாக்ஷஸ்ரக்வராட்யே ஹ்யபயயுதகரே ஸ்வேதபத்மாஸனஸ்தே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 3

दं दं दं बीज रुपे नतजनसदये शंकरार्येण पूज्ये
दह्रे दह्राम्बरस्थे दशदिशि विदिते भद्रमुद्रादिसेव्ये
वीणाक्षस्रग्वराढये ह्यभययुतकरे श्वेतपद्मासनस्थे
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (3)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
ஸர்வஸம்க்ஷோபணசக்ரம், சுஷூப்திவ்ருத்தி (ஆழ்உறக்கம்),குப்ரதரயோகினி, அஷ்டதளம்

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் -
சங்கரபூஜிதபதம், தம் என்பது கடபயாதியில் 3, 3 ஆவது துதி, இதயகுஹை (தஹ்ரம்)

பகையெல்லாம் போக்குகின்ற படையுடைய பரம்பொருளே
தகைந்திடுவாய் ஆழ்உறக்கம் தினமும் உறங்கையிலே
புகையெனவே பகைபோக்கும் குப்தர யோகினியே
புரியட்டமாகியே ஹகார பிரகிருதியே பார்வதியே
சகம்சுற்றி வந்துநின்ற சங்கரரால் துதிபெற்றவளே
அஹமென்ற இதயத்தில் பத்திரமாய் பதிந்தவளே

சுகம்தரவேயுன்பெயரை தம் தம் தம் எனவே
சொல்லுகின்றேன் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 3
வம் வம் வம் பீஜரூபே வரகமலயுதே வாகதிஷ்டானரூபே
வாராஹ்யாத்யை:ஸுபூஜயே வரவரவரதே மாலினிமந்த்ரரூபே
ஸர்வே ஸர்வாந்தரஸ்தே ஸகலமுனிகணை: த்யேயமானே ரஸாக்யே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 4

वं वं वं बीजरुपे वरकमलयुते वागधिष्ठानरुपे
वाराह्याद्यै: सुपूज्ये वरवर वरदे मालिनी मन्त्ररुपे
सर्वे सर्वान्तरस्थे सकलमुनिगणैध्येयमाने रसाख्ये
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (4)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
ஸெளபாக்யதாயகசக்ரம், ஈச்வரவிசாரம்,
ஸம்ப்ரதாயயோகினி, சதுர்தசாரமான 14 கோணம்

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் -
வாராஹிமுதலானவர்கள், முனிகணங்கள் பூஜித்த பதம்,

இறைவன்யார் என்றறிய என்மனதில் தோன்றிடவே
குறைவின்றி கும்பிட்டேன் கொடுத்திடுவாய் ஸெளபாக்யம்
துறையாவும் விளங்குகின்ற ஸம்ப்ரதாய சக்தியளே
பரையாகி பதினான்கு புவனத்தில் நின்றவளே
மறையோதும் முனிவர்களின் மனதினிலே உறைபவளே
மலரினிலே அமர்ந்தவளே மேதினியாய் இருப்பவளே
குறையகல உன்பெயரை வம் வம் வம் எனவே
கும்பிட்டேன் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 4

தம் தம் தம் பீஜலக்ஷ்யே ப்ரசுரமணி கணோத்க்ருஷ்ட பாதாரவிந்தே
பத்மாஸ்யே பத்மநேத்ரே மதகஜகமனே ஹம்ஸயானேப்ரயாணே
ஸம்பூர்ணே பிந்துசோபே தசசதகமலே தத்ரபீயூஷதாரே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 5

दं दं दं बीजलक्ष्ये प्रसुरमणिगणोत्कृष्ट पादारविन्दे
पद्मास्ये पद्मनेत्रे मदगजगमने हंसयामे प्रयाणे
संपूर्णे बिन्दुशोभे दशशतकमले तत्र पीयूषधारे
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (5)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
அர்த்தஸாதகசக்ரம், குரூபஸதனம், ஸகலஸித்திப்ரதா, தசகோணம்

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் –
தச(சத)கமலம், தகாரவரிசையின் பீஜங்கள், ஹம்ஸ மந்த்ரயுக்தபாதம்

வந்துவிட்டார் வேதகுரு வணங்கியே நின்றிட்டேன்
தந்துவிட்டார் அபீஷ்டங்கள் தாயாக தரணியிலே
எந்தன்குலம் சிறந்திடவே எழுந்தவர் வந்துவிட்டார்
எல்லா ஸித்திகளும் எனக்கிங்கே வந்ததுவே
சிந்தையெனும் தாமரையில் சித்ருபீ வந்தனளே
பிந்து சோபையுடன் பக்கத்தில் வந்தனளே
புந்தியிலேயுன்பெயரை தம் தம் தம் எனவே
பொருத்திட்டேன் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 5

வம் வம் ஆம் மந்த்ரவாச்யே குருபதஸத்ருசே ஸர்வயந்த்ரஸ்வரூபே
ஸர்வாலங்காரயுக்தே ஸகலச்ருதி மஹாவாக்ய லக்ஷ்யார்த்தரூபே
யோக்யேயோகாதிநாதே ஸமரஸவிபவே யோகிபிர்த்யானகம்யே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 6

वं वं वं मन्त्रवाच्ये गुरुपदसदृशे सर्वयन्त्रस्वरुपे
सर्वीलंकारयुक्ते सकलश्रुतिमहावाक्यलक्ष्यार्थरुपे
योग्ये योगाधिनाथे समरसविभवे योगिभिर्ध्यानगम्ये
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (6)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
ரக்ஷாகரசக்ரம், நல்லுபதேசம், தசகோணம்,அக்னி(ரேபம்)

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் -
மஹாவாக்யஉபதேசம், யோகவிபவம், மந்த்ரம், யந்த்ரம், தந்த்ரம் கூடிய உபதேசம்


என்னை ரக்ஷித்து எனக்குபதேசம் நல்கிட்டார்
என்னை உணர்த்தியே என்பயம் போக்கிட்டார்
பின்னை வினையகல பத்துகோணம் புரிபடவே
பரரேபப் பிரகிருதியினை பணியவைத் தருளிட்டார்
என்னில் என்னாகும் நாலுவாக்யம் நவின்றாரே
எங்கும் ஸமரஸமாய் யோகத்தை தந்தாரே
சொன்னேனுன்பெயரை வம் வம் ஆம் எனவே
சீர்பெறவே மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 6

கம் வம் ஆம் பீஜரூபே கணபதிமுக நக்ஷத்ரராச்யாதிபீடே
ஹாகின்யாத்யா ஸுயோகின்யதிகதவிபவே ஹம்ஸமந்த்ரார்த்தரம்யே
மாத்ரே மாத்ராதிரூபே ஹ்யக,ச,ட,த,ப,யாத்யஷ்ட வர்காத்மிகே ஸ்ரீ:
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 7

गं वं आं बीजरुपे गणपतिमुखनक्षत्र राश्यादिपाठे
हाकिन्याद्या सुयोगिन्यधिगतविभवे हंसमंत्रर्धरम्ये
मात्रे मात्रादिरुपे ह्यकचटतपयाद्यष्टवर्गात्मिके श्री:
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (7)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
ரோகஹரசக்ரம், மனனம் (சொல்லசொல்ல), அஷ்டகோணம், கேசரீமுத்ரை

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் -
ஹம்ஸமந்த்ரம், யோகினிகள்விபவம், அஷ்ட வாக்தேவிகள், கசடதபயாதி (Cool அஷ்ட வர்கம்

சொல்லசொல்ல மனதினிக்கும் சுந்தரியின் மந்திரத்தை
வல்லமிகு வாக்தேவி விவரித்து கூறுகின்றார்
நில்லெனவே நின்றுவிடும் நாடிவரும் நோய்களுமே
அல்லவைகள் அவிழ்ந்திடவே ஆங்குளது கேசரீயும்
பல்வகையாம் பீடங்கள் யோகினிகள் கதவிபவம்
சொல்லான கசடதப சூத்திரங்கள் அவள்விபவம்
சொல்லுகிறேனவள்பெயரை கம் வம் ஆம் எனவே
சூக்குமமாய் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 7

தம் இம் திம் பீஜரூபே த்ரிபுவனரஸிகே த்ரைபுரஸ்ய ப்ரகாசே
திவ்யேளகாத்யைஸ்ஸுபூஜ்யே தினமணிநிலயே ஸச்சிதானந்தரூபே
காயத்ர்யாதிரூபே கமனவிரஹிதே கானலாஸ்யாபிராமே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 8

दं इं दिं बीजरुपे त्रिभुवनरसिके त्रैपुरस्यप्रकाशे
दिव्यौधाद्यै: सुपूज्ये दिनमणिनिलये सच्चिदान्दरुपे
गायत्रयाधिरुपे गमनविरहिते गानलास्याभिरामे
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (Cool

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
ஸித்திப்ரதசக்ரம் நிதித்யாஸனம் (முக்திக்கு முன்நிலை). முக்கோணம்,
பாணசக்திகள், காமேச்வர்யாதி முத்தேவிகள்

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் -
திவ்யௌகம், தி என்ற அக்ஷரம் தினமணி நிலையம்- (பகலவன்), காயத்ரி, த்ரிபுவனம் திரிபுரப்ரகாசம், முக்கோணக்குறிப்பு:- த

சித்தியெலாம் வித்தையெலாம் சீக்கிரமாய் சித்தம்வரும்
முத்திக்கு முந்திநிலை மோனத்தில் மனமமரும்
எத்திக்கும் ஒளிருகின்ற முச்சத்தி மனதில்வரும்
புத்திக்கு புலப்படுமே பாணத்தின் தத்துவமும்
புத்தியின் காயத்ரி பிரகாசிக்கும் பகலவனாய்
உத்தமமாம் திவ்யெளகம் உயர்வாக மனதிலுரும்
வித்திட்டேன்னுன்பெயரை தம் இம் திம் எனவே
வீரமுடன் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 8

நம் ஈம் நீம் பீஜரூபே முனிஸுரநராத் யக்ஷயாதாதிரூபே
நானாப்ரகாரயுக்த ஸ்ரீநகரமணித்வீப மத்யாதிவாஸே
காஞ்சீ காமாக்யபீடஸ்தித ககனபிலே வ்யக்தரூபே ஹ்யரூபே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 9

नं ईं नीं बीजरुपे मुनिसुरनगराद्यक्षयातादिरुपे
नानाप्रकारयुक्त श्रीनगर मणिद्वीप मध्याधिवासे
काज्ची कामाख्यपीठसि्थतगगनबिले व्यक्तरुपे ह्यरुपे
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी (9)

ஸ்ரீசக்ரத்தில் (நவாவரணம்) -
ஆனந்தமயசக்ரம், ஸவிகல்பஸமாதி(முக்தி), பிந்து, லலிதாதேவி, தத்வாதீதம் (36)

வாக்வாதினி ஸ்தோத்ரத்தில் - ஸ்ரீநகரமணித்வீபம், சிந்தாமணியின் நடுவில்,காஞ்சீ-காமாக்யம்-இவைஒட்டி யாண பீடம்(இடுப்பு-நடு), ஈம் அக்ஷரம் – நம்=0 (பிந்து)

ஆனந்தம் ஆனந்தம் அகிலமெலாம் ஆனந்தம்
ஆகிவந்த முப்பத்தாறு படிகடந்து வந்திட்டோம்
கனமாக சித்துக்கள் ஸவிகல்பம் சாதித்தோம்
கற்றவித்தை கடுகிதினம் கருத்தினில் வந்ததுவே
வனம்சூழ்ந்த ஸ்ரீநகரம் சிந்தாமணி வீடதுவாம்
வேதம்நிறை காஞ்சியிலே விளங்குகின்ற வாக்தேவி
நினைவினிலேயுன்பெயரை நம் ஈம் நீம் எனவே
நவிலுகின்றேன் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 9

ஸம் வம் ஆம் பீஜரூபே நவநவருசிரே த்ரித்ரிகோணாந்தரஸ்தே
ஸந்த்யே ஸாதாக்யரூபே விதிகமலகலத் க்ஷீரதாராப்ரஸாதே
காலே காலஸ்யகாலே கரகலிதலஸத் ஞானமுத்ராப்ரகர்ஷே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 10

सं वं आं बीजरुपे नवनवरुचिरे त्रित्रिकोणान्तरस्थे
संध्ये सादाख्यरुपे विधिकमलगलत् क्षीरधाराप्रसादे
कोले कालस्य काले करकलितलसत ज्ञानमुद्राप्रकर्षे
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी!10

ஸ்ரீமஹாகாளிவடிவம் -
பிரளயமுடிவு – காலவடிவம் – காளிஸ்வரூபம்-காளியந்த்ரம்-மும்மூன்றாய் உள்ள திரிகோணம் –சந்த்யை என்பது ஒன்றின் கடைசீ – ஸாதாக்யம் –காலத்துக்கும் காலமாய் உள்ளவள்-அதுதான் ஞானம்

ஆவரணம் முடிந்தாச்சு ஆனந்தம் வந்தாச்சு
மேவிநிற்கும் நவநவமாய் நாயகியின் அருளாச்சு
தேவமுனி கணங்களெலாம் ஞானமுத்ரை அறிந்தாச்சு
தூயமனம் தன்னிலவள் தத்துவமும் அறிந்தாச்சு
ஆவலுடன் ஸாதாக்யம் அப்பாலே உணர்ந்தாச்சு
அன்புடைய மனதினிலே அவளுருவம் ஆயாச்சு
நவிலுகிறேனுன்பெயரை ஸம் வம் ஆம் எனவே
நன்மையுடன் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 10

பலஸ்ருதி:

ஹம் ஆம் ஹாம் மந்த்ரரூபே ஹயவதனமனோ ஸோமகாமாதிவந்த்யே
நித்யே நித்யாதிரூபே நிருபமசரிதே நிர்மலக்ஞானமூர்த்தே
கீர்த்தி ஸ்ரீ புத்தி லக்ஷ்மி ஜயவிஜய பல க்ஷேம புஷ்ட்யாதியுக்தே
வாக்தேவீ ஸம்விதாக்யே மம மனஸி ஸதா சாரதே திஷ்டதேவி 11

हं आं हां मन्त्ररुपे हयवदनमनो सोमकामादिवन्द्ये
नित्ये नित्यादिरुपे निरुपमचरिते निर्मलज्ञानमूर्ते
कीर्तिश्रीबुद्धिलक्ष्मी जयविजयबलक्षेमपुष्ट्यादियुक्ते
वाग्देवी संविदाख्ये मम मनसि सदा शारदे तिष्ट देवी11

இதம் வாக்தேவதா ஸ்தோத்ரம் மந்த்ரபீஜாக்ஷரைர்யுதம்
சிதானந்தேனரசிதம் ய:படேத் பக்திஸம்யுத:
ஸவாகீசீப்ரஸாதேன ஸர்வஸித்திமவாப்னுயாத்
தஸ்யாஸ்யகுஹரே தேவி ஸுப்ரஸன்னா பவேத்ஸதா 12

ईदं वाग्देवतास्तोत्रं मन्त्रबीजाक्षरैर्युतं
चिदानन्देन रचितं य:पठेत भक्तिसंयुत:
स वागीशी प्रसादेन सर्वसिद्धिमवाप्नुयात्
तस्यास्य कुहरे देवी सुप्रसन्ना भवेत् सदा (12)

பலஸ்ருதி:

புகழும் புத்தியுடன் பலவிதமாய் பொருட்களுமே
பொங்கிநிற்கும் அருளாக பலனருளும் பராசக்தி
அகத்தினிலே வந்திடுவாய் அருட்சக்தி குருவாக
ஆற்றலுடன் அன்புடனே அழகாக அமர்ந்திடுவாய்
தகதகக்கும் மேனியுடன் தாயருளும் கிடைத்துவிடும்
தீர்மான புத்தியுடை அயமுகனும் பூசைசெய்தார்
உகந்துமேயுன்பெயரை ஹம் ஆம் ஹாம் எனவே
ஓதுகிறேன் மனதினிலே தங்கிடுவாய் எத்தினமும் 11

சிதானந்த பரமகுரு சீராக செப்பியதை
சத்தியத்தின் துணையுடன் சிறிதான கவியிதனை
நிதானமுடன் நன்றாக சிந்தித்து சொல்லிவர
நீக்கமற வாக்தேவி நின்றிடுவாள் நம்நாவில் 12
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum