ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


நல்ல தத்துவங்கள்

3 posters

Go down

நல்ல தத்துவங்கள்  Empty நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Mon Feb 23, 2015 10:47 am

தன்னம்பிக்கை அவசியம்!
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவனது வழக்கம். ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில் பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. கோபம் கொண்ட அரசர் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.

பிச்சைகாரன் கலங்கவில்லை. கல கலவென சிரிக்கத் தொடங்கினான்.

அரசருக்கு மேலும் கோபம். மற்றவர்களுக்கு திகைப்பு. அரசன் பிச்சைக்காரனை "ஏன் சிரிக்கிறாய்?" என்று கோபமாக கேட்க, பிச்சைக்காரன் "என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே. உங்கள் முகத்தில் நான் விழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்" என்றான்,

அரசன் தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான். தண்டனை ரத்து செய்யப் பட்டது.

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். எதை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்!

(இணைய தளத்தில் இருந்து எடுத்தவை)
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Tue Feb 24, 2015 3:28 am

மேலும் நவராத்திரி கொலு பற்றிய ஒரு தத்துவம


நவராத்திரி கொலு : ஒன்பது படிகளின் தத்துவம்:

மனிதன் படிப்படியாக வளர்ந்து, தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, ஒன்பது கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.

ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், சரஸ்வதி, லக்ஷ்மி, விநாயகர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும் என்பது ஐதீகம்.ff
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by arutsakthi Sat Feb 28, 2015 10:35 pm

ஜெயசக்தி
கலக்குகிறாள் கல்யாணி
தொடரட்டும் அவள் பணி
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Sun Mar 01, 2015 9:35 am

ஓம் ஸ்ரீ குருப்யோனமஹா ஓம் சக்தி
ஸ்ரீகுருவின் அருட்பார்வையில் கிடைத்த ஒரு துளியின் ஒரு சிறு அணுவே இந்தப்பணி. அவரின் அருட்கடாக்ஷம் வேண்டி வணகுகிறேன்.

பணிவுடன்
கல்யாணி
பெப்ரவரி 28 2015
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Sun Mar 01, 2015 10:54 am

யார் புத்திசாலி?

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.

அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில். சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுமே இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.

நான்கு போல்ட்டையும் கழட்டி வைத்து விட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும் போது அவர் கால் இடறி நான்கு போல்ட்டும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார். அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார். அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர், எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.

உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழட்டி, இந்த சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.

இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமனையில் என்று கேட்டார். இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார் மனநல நோயாளி.


எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்.
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Tue Mar 03, 2015 8:53 am

காந்தி கணக்கு!
காந்தி கணக்கு என்றால் என்ன?

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்து கொள்வோம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்.
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Tue Mar 03, 2015 9:01 am

நான் படித்து,மற்றவர்கள் மூலம் அறிந்து, தெரிந்து கொண்ட விஷயங்களை,நல்ல தத்துவங்கள் என்ற தலைப்பில் pathivugal செய்து கொண்டு வருகிறேன். அதில் ஏதேனும் பிழை இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும் . கண்டிப்பாக திருத்திகொள்கிறேன்

Kalyani
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by arutsakthi Wed Mar 04, 2015 11:31 am

jeysakthi!
your posts are very useful and essential. But you post it seperate heads in உறுப்பினர் படைப்புகள் . ok. continue....
see today's post also....
urs
Arutsakthi
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Thu Mar 05, 2015 10:25 am

Om sri gurubyonamahaa
Pranaams to sri Guruji
In future I will post it in உறுப்பினர் படைப்புகள்
I have seen today's post.
Namaskaarams
Kalyani
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Wed Mar 11, 2015 7:50 am

எந்த கோணத்தில் பார்க்க வேண்டும்?

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒரு நாள் ஊர்த் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாக, "அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டார். பையன் ”தங்கம்” என்று சொன்னான்.

”பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” கோபத்துடன் கேட்டார் அறிஞர்.

"தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Thu Mar 19, 2015 9:57 am

வெற்றிக்குக் காரணம்!

சிறியதொரு நகரம். அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மரணத்திற்கு அஞ்சி,மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது, புலம்பி, புரண்டு கொண்டுதான் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியவகைகள் பயிராகியுள்ளன.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன். படகோட்டி வியப்பில் ஆழ்ந்தான்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்குத் தேவையான ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும் வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by arutsakthi Thu Mar 19, 2015 4:30 pm

ஜயசக்தி ! நல்ல பதிவு. தொடரட்டும்.
இந்த வாக்கியம்தான் எனது லக்ஷ்யம்......

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே ......!
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by nakasundaram Thu Mar 19, 2015 5:59 pm

arutsakthi wrote:ஜயசக்தி ! நல்ல பதிவு. தொடரட்டும்.
இந்த வாக்கியம்தான் எனது லக்ஷ்யம்......

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே ......!

நல்ல தத்துவம். தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி.

nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Sat Mar 21, 2015 7:32 am

ஓம் ஸ்ரீ குருப்யோனமஹா
அனேக நமஸ்காரங்கள்
தங்களின் அருள்வாக்குப்படி இந்த பணி தொடர ஆசிகள் வேண்டுகிறேன்.

அனேக கோடி நமஸ்காரங்கள்.
கல்யாணி
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Mon Mar 23, 2015 10:17 am

அன்புள்ள பார்வையாளர்களுக்கு,
". இந்த வெப்சைட் பார்க்கிற எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள்.
தப்பாக நினைக்க வேண்டாம். நான் அனுப்பும் பதிவுகள் உங்கள் பார்வைக்கு வருகிறதா தெரியவில்லை. தயவு செய்து என்னை ஊக்குவிக்க, நீங்கள் எல்லோரும் ஏதாவது பதில் அனுப்பினால் என் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் மேலும் எனக்கும் உங்கள் எல்லோரும் இடம் இருந்தும் நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எனக்காக தயவு செய்து தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஆங்கிலத்திலோ, தமிழிலோ பதிவு செய்தால் கண்டிப்பாக நான் நன்றி உள்ளவளாக இருப்பேன். இது எனது பணிவான வேண்டுகோள். நான் செய்து வரும் பதிவுகள் எல்லாமே நான் உங்களிடமிருந்து நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
நீங்கள் " type tamil " என்ற வெப்சைட் poi அதை டவுன்லோட் செய்தால் நீங்களும் சரளமாக தமிழில் அனுப்பலாம்.ex . ஆங்கிலத்தில் " anbulla " என்று. type செய்தால் தமிழில் " அன்புள்ள " என்று வரும். உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குதான்.

நன்றி.
கூடிய விரைவில் எல்லோருடைய பதிவுகளையும் நிறைய எதிர்பார்கிறேன்.
மேலும் ஓம்சாந்தி வெப்சைட் பார்வை இடும்போது அதன் ரைட் சைடு இல் வரும் down arrow கிளிக் செய்து classic version கிளிக் செய்தல் லேட்டஸ்ட் postings வரும் log in column வரும் அதிலும் பார்க்கலாம்.

நீங்கள் படித்து ,அறிந்த விஷயங்கள் இதில் பதிவிட அந்த விஷயங்களை செலக்ட் செய்து cut or copy clickசெய்து இந்த website இல் log in செய்தால் தான் reply column வரும் அதில் paste செய்தால் இதில் பதிவாகிவிடும்.
மீண்டும் நன்றி
கல்யாணி
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Tue Mar 24, 2015 2:33 am

ஓம்சாந்தி வெப்சைட் இல் ரைட் சைடு இல் தமிழில் எழுத என்றிருக்கும். அதன் கீழே hindi என்றிருக்கும். அதை கிளிக் செய்தால் எல்லா languages வரும் நாம் தமிழ் என்று கிளிக் செய்து இங்கிலீஷ்இல் type செய்தால் தமிழில் வரும் அதை செலக்ட் செய்து cut or copy செய்து reply column இல் paste செய்தால் message reply column இல் பதிவாகிவிடும் பின் send கிளிக் செய்தால் வெப்சைட் கு வந்துவிடும்
website இல் அனைவரும் பார்க்கலாம்

நன்றி
கல்யாணி
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Fri Apr 03, 2015 9:36 am


ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி பேசிக் கொண்டிருந்தார்.

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்
கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Fri Apr 10, 2015 9:34 am

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்........................

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Sun Apr 19, 2015 5:17 am

ஆசையின் அளவு:

ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றான் ஏழை ஆசையோடு.
கடவுள் வலது கையின் சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.

ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.

அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.

சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றான் ஏழை. கடவுள் மயங்கி விழுந்தார்.
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Sun Apr 19, 2015 5:22 am

பொறுமை கடலினும் பெரிது.

ஒருவன் கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது. இவனுக்கு அந்த எழுத்துக்கள் தெரியும். அதனால், அதை படித்து பார்த்தான்.

"இந்த பெருமாளுக்கு எவன் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம்
செய்கிறானோ, அவனுக்கு ராஜ பதவி கிடைக்கும்...' என்று எழுதி இருந்தது. "அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா? ஒரு மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே...' என்று எண்ணினான்.

உடனே, ஓடிப் போய் ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து
தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். ஞாபகமாக ஒண்ணு, ரெண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்தான். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று...

"என்னடா இது... 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று, ராஜ பதவிக்கான அறிகுறி
ஒன்றுமே தெரியவில்லையே! கீரிடத்தை எடுத்துக் கொண்டு யாராவது வருகின்றனரா?' என்று சுற்றும், முற்றும் பார்த்தான். யாரையும் காணோம். இவனுக்கு பொறுமையும் குறைந்தது.

"சரி... எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம்...' என்று எண்ணி, மறுபடியும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தான். 96, 97, 98. ஊஹும்... ராஜ பதவிக்கான அறிகுறியே காணோம்.

பொறுமையை இழக்க ஆரம்பித்தான். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது; பலன் தெரியவில்லை. பொறுமையை இழந்தான். நூறாவது குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி குடத்தை பெருமாள் தலையில் போட்டு உடைத்தான். அவ்வளவுதான், இவன் முன் தோன்றினார் பெருமாள்.
"பக்தா... நீ நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்;
ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம். நூறாவது குடத்து தண்ணீரையும் பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன். "நீ, கடைசி நேரத்தில் பொறுமையை இழந்து, அபசாரம் செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக, கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர் மனித ஜென்மா கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கும்...' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்து விட்டார்.

பொறுமை எவ்வளவு முக்கியம் என்று, இதிலிருந்து தெரிகிறதா?
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Kalyani Fri Jun 12, 2015 11:08 am

மிருக வைத்தியர்
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு , பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும்வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்ககுணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, மனைவி சொன்னள் ` கோட்டான் மாதிரிமுழிக்காதீங்க '
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

நல்ல தத்துவங்கள்  Empty Re: நல்ல தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum