ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


நைஷ்டிக பிரம்மசாரி யார்?

Go down

நைஷ்டிக பிரம்மசாரி யார்? Empty நைஷ்டிக பிரம்மசாரி யார்?

Post by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

ஒரு நாள் பிரம்ம லோகத்தில், ப்ரம்மாவுக்கும் நாரதருக்கும் இடையே நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதில் ஓர் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சைக்குத் தீர்வு காணும் நோக்கத்தோடு நாரதர் துர்வாச முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார்.

நாரதரை வரவேற்று, வந்த விஷயம் என்ன என்று கேட்டார் துர்வாசர். பிரம்ம லோகத்தில் நடந்த சர்ச்சையை விளக்கி, மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார் நாரதர்.

சந்தேகமின்றி நைஷ்டிக பிரம்மசாரி அந்த பகவான் "ஸ்ரீ கிருஷ்ணரே" தான் என்றார் துர்வாசர். அதற்கு விளக்கம் கேட்டார் நாரதர்.

நாரதா, பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி.

பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறார்.

அவர் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவர் கண்களுக்கு ஒன்றுதான். அவர் அன்புக்கும் அருளுக்கும் ஆண்-பெண் என்ற பேதமில்லை.

அவரை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே!

அவர் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள்.

பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவரே "நைஷ்டிக பிரம்மசாரி" என்றார் துர்வாசர்.

நாரதா, உனக்கு இன்னுமொரு உண்மையையும் விளக்குகிறேன். திரேதாயுகத்தில் பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரித்த போது, தந்தை சொல் காக்க வனவாசத்தை மேற்கொண்டார். வனவாசத்தில் ஆயிரக்கணக்கான மகரிஷிகளும் தபஸ்விகளும் தங்களுடன், தங்கி வாழ வேண்டும் என விரும்பினர். ஆனால் ஸ்ரீ ராமன், ஓர் இடத்திலும் தங்காமல், வனத்தில் திரிந்து கொண்டிருந்தார். அப்போது தபஸ்விகளும் முனிவர்களும் பகவானின் பிரேமைக்காகவும் அன்புக்காகவும், ஆலிங்கனத்துக்காகவும் ஏங்கித் தவித்தனர்.

அவர்களுடைய தவத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே அடுத்த யுகத்தில், அவர்களை பிருந்தாவனத்தில் கோபிகளாக்கி, ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்பாலும் பிரேமையாலும் ஆட்கொண்டிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரையில் கோபியர் எல்லாம் அவருடைய பக்தர்கள். அவருடைய பிரேமை பவித்திரமானது. அதில் காமத்துக்கு இடம் இல்லை. எனவே அவரே "நைஷ்டிக பிரம்மசாரி" என விளக்கம் அளித்தார் துர்வாசர்.

ஆண், பெண் என்ற சரீர பேதத்தை மறந்து பார்க்கும்போதுதான் ஸ்ரீகிருஷ்ணரை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் ஜீவாத்மாக்களை உய்விக்க வந்த பரமாத்மா என்பதை நாரதர் புரிந்து கொண்டார்.

பின்னால் குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன், எல்லா ஜீவாத்மாக்களிலும் தான் நிறைந்திருப்பதையும், தனக்கு பேதங்கள் எதுவும் கிடையாது என்பதையும் எடுத்துக் கூறினார்.

அந்தத் தத்துவத்தை இந்தச் சம்பவத்தின் மூலம் நாரதர் உணர்ந்து கொண்டார். நாரதர் துர்வாசருக்கு நன்றி சொன்னார். அப்போதும் "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" என்றார் துர்வாசர்.

இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்த மகிழ்ச்சியில் நாராயண நாமத்தை பாடிக் கொண்டே பிரம்மலோகம் சென்றார் நாரதர். தன் தந்தை பிரம்மதேவரை சந்தித்து, இந்த அரிய சந்தர்ப்பத்தை தனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

karaikudiravi
Sirappu Padhivar
Sirappu Padhivar

Posts : 47
Join date : 28/03/2015
Age : 55
Location : Chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum