Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
Page 1 of 1

எனது பரமகுருநாதர் பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு:
Written by Sri Arutsakthi Nagarajan
பல மஹான்களை தன் தனமாக கொண்டது நமது பாரதநாடு. அந்த மஹான்களெல்லாம் தங்களுடைய தவ வலிமையினால் காலதேசவர்த்தமானங்களுக்கேற்றவாறு மக்களிடம் தாங்கள் தங்கள் தவ வலிமையினால் அவர்களை நல் வழிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுடைய உபதேசங்களால் வளர்ந்ததே நம் ஸனாதனதர்மம் என்று போற்றப்படும் நமது மதம்.
வழிபடப்படும் தெய்வத்தின் பெயர் வேறாக இருக்கலாம். ஆனால் எல்லா வழிபாடும் அந்தப் பரம்பொருளையே சேரும் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். ஸனாதனதர்மம் என்ற ஆலமரத்தை நெறிபடுத்தி அதில் உள்ள களைகளையெல்லாம் களைந்து அதற்கு புத்துயிர் அளித்தவர் ஸ்ரீஆதிசங்கரர். அவர் நெறிபடுத்திய வழிபாட்டு முறைகளில் சாக்தம் என்ற பிரிவு பராசக்தியை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடப்படுவதே.
பராசக்தி வழிபாட்டில் ஸ்ரீவித்யாஉபாஸனை மிகச் சிறந்தது. பாரத நாட்டில் ஸ்ரீவித்யாஉபாஸனை பரவக் காரணமாய் இருந்தவர் ஸ்ரீபாஸ்கரராயர். ஸ்ரீபாஸ்கரராயர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து செய்து, தவ வலிமையினால் பெண்களுக்கு மந்திரோபதேசம் செய்வதை விரும்பாத காலகட்டத்தில், ஸ்ரீவித்யையை பெண்கள் உட்பட அனைவரும் உயர்வு தாழ்வு கருதாமல் உபதேசித்து அதனைப் பிரபலப் படுத்தியவர் ஸ்ரீஸ்ரீசிதானந்த நாதர் என்ற தீக்ஷாநாமம் கொண்ட அருட்கவி ஸ்ரீஸுப்ரமண்யஅய்யர் அவர்கள்.
ஸ்ரீ குஹானந்தநாதர் அவர்களின் சீடரான ஸ்ரீ சிதானந்த நாதர் இதற்காக ஸ்ரீ ப்ரஹ்ம வித்யா விமர்சினி ஸபா என்ற ஸபையைத் தொடங்கி, அந்த ஸபையின் மூலம் ஸ்ரீவித்யைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீவித்யாஉபாஸகர்களின் சந்தேகங்களையும் நிவர்த்திசெய்து வந்தார். இதுவே பின்னாளில் குஹாநந்தமண்டலி என்று பெயர் பெற்றது. அவர்கள் காலத்துக்கு பின் அவர் வழித்தோன்றலாய் வந்த அநேக உபாஸகர்கள் பல மண்டலிகளையும், ஸபாக்களையும் நிறுவி ஸ்ரீவித்யை பரவச்செய்து வருகிறார்கள்.
வரலாற்றை சுருக்கமாக பாப்போம் :
எனது பரமகுருநாதர் சித்திரபானு ஐப்பசி 30 (1882) சுக்ல சதுர்த்தி பானுவாரம் மூலநக்ஷத்திரத்தில் நெடிமிண்டி ஸ்ரீநரசய்யா-ஸ்ரீமதிகாமாக்ஷிக்கும் மகனாக பிறந்தவர். இவரது தகப்பனார் தணிகை முருகனை வள்ளியை மணக்கவந்த கோலத்திலேயே தரிசித்தவர். இவர்கள் குலெதெய்வம் தணிகை குமரனே. தனது தகப்பனாரிடமே வேதாத்யயனம் செய்தவர். ஸ்ரீநரசய்யா அவர்களுக்கு வெங்கடராமன், குப்புசாமி என மற்றும் இரு புத்திரர்கள். தமது 16 வயதில் ஸ்ரீமான் சேஷய்யாவின் புத்ரி ஸ்ரீமதி விசாலாக்ஷி அம்மாளை விவாகம் செய்து கொண்டார். 1898-ல் தம்பியர் இருவருடனும் காஞ்சிபுரத்திற்கு வந்து ஸகோதரர்களை பள்ளியில் சேர்த்தார். தனக்கும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டதன் பேரில் ஸ்ரீசி.வைத்தியநாதஅய்யர் என்பவர் ஸகாயத்தால் முதல்பாரம் மற்றும் இரண்டாம்பாரப் படிப்பை முடித்து, 1901-ல் பரிட்சையில் சென்னை ராஜதானியில் மூன்றவாதாக தேர்வு பெற்றார். ஐந்தாவது பாரத்துக்கு இரட்டைப் ப்ரமோஷன் கிடைத்தது. இதற்கிடையில் 1901 மார்ச்சு மாதத்தில் ஸ்ரீநரசய்யா அவர்கள் முருகனடி சேர்த்தார்கள்.
11-2-1911இல் தன்னுடையதாயார் அபிலாஷைக்கு இணங்கி உத்திரதேச யாத்திரைக்கு தாயாருடன் கிளம்பி அலஹாபாத் சென்று தாராகஞ்சு சிவமடத்தில் இறங்கினார். அவ்வமயம் கும்பமேளா மஹோதய புண்ணிய காலமாகையால் எண்ணிறந்த ஸாதுக்களையும் யோகிகளையும் தரிசித்தார். தேஜசோடு கூடின விசாலமான நயனங்களோடும் பரமானந்தமான முகமண்டலத்தோடும் விளங்கும் ஒரு அவதூத மஹானைக்கண்டார் “இம் மஹான் என் தந்தையை ஆட்கொண்ட முருகனே! என்னையும் ஆட்கொள்ள இங்கு வந்திருக்கிறார்” என்று நினைத்து ஆனந்த பாஷ்யம் சொரிய கீழே விழுந்து நமஸ்கரித்து "ஏ ஸத்குருநாதா! இந்த ஸம்ஸார ஸாகரத்தினின்றும் என்னை கடைதேற்றி காப்பீராக" என்று கதறியழுதார். கருணையோடு நோக்கிய மஹான் "குழந்தாய்! எழுந்திரு! என்று அபயம் கூறி பார்வையாலேயே அஞ்ஞானத்தைப் போக்கி "எந்த ஊர்? உனக்கு என்ன வேண்டும்" என்று விசாரித்தார். பரமகுரு "நான் காஞ்சிபுரத்தில் பிறந்து தற்காலம் சென்னையில் இருக்கிறேன். கும்பமேளாவை தரிசிக்க இங்கு வந்தேன். தங்கள் அனுக்ரஹம் தவிர மற்றெதுவும் வேண்டிலேன்" என்று கூறினார். இவ்வார்த்தையைக் கேட்டதும் அம்மஹான் "குழந்தாய்! நாளை தினம் கழித்து மறுநாள் திங்கட்கிழமை மஹோதய புண்யகாலம் காலை சூர்யோதயத்துக்கு இங்கு வா" என திருவாய் மலர்ந்தருளினார். மஹோதயத் தன்று காலை அந்த மஹான் தீர்த்த பாத்ரத்தை எடுத்து அபிமந்த்ரணம் செய்து குருநாதருக்கு அபிஷேகம் செய்வித்து பூரணமாக சகல மந்த்ரங்களையும் அனுக்ரஹித்தார். பிறகு ஸ்ரீவித்யைக்கு குருபரம்பரை அவசியம். குருபரம்பரா ஞானமில்லாமல் ஆத்மஞானம் ஏற்படாது என்று கூறி, ப்ரஹ்மண்ய மந்திரத்தையும், குரு பாதுகா மந்திரத்தையும் அருளினார்.
பின் ஸ்ரீ சிதாநந்தநாதர் என்ற தீக்ஷ நாமத்தையும் சூட்டினார். அளவற்ற புதையல் கிடைத்த சந்தோஷத்தோடு சந்தோஷமடைந்து, ஜன்மாகடைதேறிய நம்பிக்கையோடு ஸத்குரு நமஸ்கரித்து நின்றனர்.
பின்பு குருநாதர் ஆக்ஞைப்படிதான் தங்கியிருந்த பைரவ சாஸ்திரிகள் இல்லத்துக்கு வந்தபின், சாஸ்திரிகளுக்கும் குஹானந்தரும் வெகு நேரம் ஹிந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.. அன்று அமாவாசை மஹோதயமானதால் சாஸ்திரிகள் தான் செய்யும் ஆராதனத்துக்கு அவதூதருக்கு பாத பூஜை செய்து, உயர்ந்த ஆஸனத்தில் அமர்த்தி யாவரும் வந்தனம் செய்து கொண்டபின், அவதூதர் கங்கா தீரம் சென்றனர்.
இங்ஙனம் சுமார் ஒரு மாத காலம் பிரயாகையில் குருகுலவாசம் செய்து. காலையிலும் மாலையிலும், குருபரம்பரை, சுப்ரமண்யதத்வம், அத்வைதவேதாந்த நுட்பங்களை எல்லாம் அவதூதர் நமது சிதானந்தருக்கு போதித்தார். பிறகு குஹாநந்தரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு சென்னை வந்தடைந்தார். குஹாநந்தநாதரின் இறுதி கட்டளைப்படி சிதானந்தர் ரகஸ்யமாக ஸ்ரீவித்யா உபாஸனையும், சூதஸம்ஹிதா, மஹாவாக்ய ரத்னாவளி பாராயணமும் 12 வருஷங்கள் செய்தார்.
இந்த 12 வருட இடைவெளியில் கல்லிடக்குறிச்சி ராஜாங்க ஸ்வாமிகளை தரிசித்து, ஸித்தி ப்ரஹ்மாநந்தீயம், கீதை, உபநிஷத்து,பாஷ்யங்கள் . 1933-ம் வருஷம் திருவட்டீச்வரர் சந்நிதியில் அருட்கவி என்ற பட்டம் பெற்றார். காமகோடி ஸ்ரீஸ்ரீமஹாபெரியவாள் ஆக்ஞைபடி, காஞ்சி காமாக்ஷி சன்னிதானத்தில் உள்ள ஸ்ரீ சக்ரத்துக்கு சுமார் 20 வருடகாலம் பிரதி பௌர்ணமியிலும் நவாவரணபூஜை செய்து வந்தார். பலநூறு சிஷ்யர்களுக்கு மந்த்ரோபதேசமும், தீக்ஷையும் செய்திருக்கிறார். பலருக்கு பீடாதிகாரம் கொடுத்து, நவாவரண பூஜை செய்யும்படி கட்டளை யிட்டிருக்கிறார். சுவாஸினிகளுக்கு பீடாதிகாரம் கொடுத்து, பகிரங்கமாக நவாவரண பூஜை செய்வித்த பெருமை இவர்களையே சேரும்.
பின்பு ஒரு சபை அமைக்கப்பட்டு அதற்கு ஸ்ரீப்ரஹ்மவித்யாவிமர்சினி ஸபா என்று பெயர் சூட்டப்பட்டது. மேற்படி சபையின் சார்பில் நம் குருநாதர் அநேக நூல்களை இயற்றியிருக்கிறார்.
அவைகளில் முக்கியமானவை.
1. ஸ்ரீ நகர விமர்சனம், 2. குரு தத்வ விமர்சனம், 3. வரிவஸ்யாரஹஸ்யம் (தமிழாக்கம்), 4. ஸ்ரீ வித்யாஸபர்யாபத்ததி, 5. ஸ்ரீவித்யா ஸபர்யாவாஸனை (தமிழ் & ஆங்கிலம்), 6. ஸ்ரீ லலிதோபாக்கியான விமர்சனம் 7. ஸ்ரீசுப்ரமண்ய தத்வம், 8. ஸ்ரீ வித்யா நித்யாஹிகம், 9. மனீஷா பஞ்சகம், 10. ஞானபிரகாசம், 11. லலிதா த்ரிசதீ பாஷ்யம், 12. ஸ்ரீ காமகலா விலாஸம்., 13. திருத்தணி பிரபந்தத் திரட்டு முதலியன
அவர்களுக்கு ‘’அபிநவபாஸ்கர’’ என்ற விருது அளிக்கப்பட்டது. அவார்கள் 30 க்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி இருக்கிறார். 1937 இல் மேற்படி சபைக்கு ஸ்ரீகுஹாநந்த மண்டலி என்று திருநாமம் சூட்டி அன்று வரை வெளி வந்துள்ள பல நூல்களையும் ஸ்ரீகுஹாநந்த பாதுகைகளுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் 1957-ம் வருஷம்,சரன் நவராத்ரி ஷஷ்டியன்று மஹாவஜ்ரேச்வரி திதிநித்யா ஸ்வரூபமாக மஹாகைவல்யம் அடைந்தார்கள்.

Similar topics
» ஸ்ரீபட்டணத்துப்பிள்ளையார் - பட்டினத்தார் - வரலாறு
» கோடகநல்லூர் - ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் - வரலாறு
» அருணகிரியார் வரலாறு
» செங்கோட்டை ஸ்ரீஆவுடையம்மாள் - வரலாறு
» திருச்சேறை - வரலாறு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum