ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


குருஉபதேசமும் பெரியவா சிபாரிசும் - நினைவில் நின்ற நிகழ்ச்சி

Go down

குருஉபதேசமும் பெரியவா சிபாரிசும் - நினைவில் நின்ற நிகழ்ச்சி Empty குருஉபதேசமும் பெரியவா சிபாரிசும் - நினைவில் நின்ற நிகழ்ச்சி

Post by arutsakthi Sat Mar 15, 2014 3:16 pm

குருஉபதேசமும் பெரியவா சிபாரிசும்

அருட்சக்தியின் நினைவில் நின்ற நிகழ்ச்சி

எனது ஸத்குருநாதர் பூஜ்யஸ்ரீஅனந்தானந்தநாதர் (பிரஹ்மஸ்ரீஸி.வி.ஸ்வாமி சாஸ்த்ரிகள்) தன் இளமை தொட்டே சென்னையில் வசித்தவர்கள்.. அவர்களுக்கு அருட்கவி “ஸார்” ஸ்ரீசுப்ரமணியஅய்யர் என்கிற குஹானந்த மண்டலி ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் தான் குருநாதர். இந்த ஸ்ரீசிதானந்தநாதர் அவர்களுக்கு காஞ்சி ஜகத்குரு ஸ்ரீமஹா பெரியவர்களிடத்தில் பக்தியும் மரியாதையும் பூஜிதையும் உண்டு. ஸ்ரீ மஹா பெரியவர் சொல்லி பிரதி பௌர்ணமியிலும் காஞ்சி காமாக்ஷி சன்னிதியில் நவாவரணபூஜை செய்து வந்தார்கள். எனது குருஜியிடமும் பெரியவாளுக்கு மிக்க அன்பு உண்டு. இவரும் காஞ்சி அடிக்கடி போவார். ஸ்ரீ ரா.கணபதி அவர்களை விட்டு டாக்ஸியில் அடிக்கடி இவரை அழைத்துவர பணிபார்க்களாம். பலநாட்கள், பலமணி நேரங்கள் இருவரும் மந்த்ரசாஸ்த்ரம், ஸ்ரீவித்யை பற்றி உரையாடுவார்களாம்.
ஸ்ரீஸார் ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் காலத்துக்கு  பிறகு நிகழ்ந்த ஒருநிகழ்ச்சி பற்றி அடியேனிடம் ஸ்ரீகுருஜி சொன்னது. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

சென்னை தங்கசாலை தெருவில் ஸ்ரீஸ்ரீகுருஜி அவர்கள் இருந்த நேரம் அது. ஒருவர் அவரைப்பார்க்க வந்தார். உடனே ஸ்ரீகுருஜி அவருக்கு தீர்த்தம் கொடுக்கச்சொல்லி உட்கார சொன்னார்கள்.

அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலை அப்படியே எழுதுகிறேன்;

ஸ்ரீகுருஜி: யார் ஐயா தாங்கள்?
வந்தவர்: (தன் பெயரைச்சொன்னார்) (எனக்கு ஞாபகமில்லை)
ஸ்ரீகுருஜி: எங்கிருந்து வருகிறீர்?
வந்தவர்: காஞ்சீபுரத்திலிருந்து வருகிறேன். ஸ்ரீபெரியவா அனுப்பிச்சா
ஸ்ரீகுருஜி: ஓஹோ! உமது சொந்த ஊர்?
வந்தவர்: மதுரை
ஸ்ரீகுருஜி: பெரியவாளுக்கு உம்மை தெரியுமா?
வந்தவர்: இம். நன்னா தெரியும். அடிக்கடி அவாளை பார்க்க வருவேன். அவாள்கிட்டே ரொம்ப  நாளா பஞ்சதசாக்ஷரீ மந்த்ரோபதேசம் கேட்டுண்டே இருக்கேன். அவாளும் ஒண்ணும் சொல்லாமே ரொம்ப நாளாச்சு. இன்னிக்கும் அவாளை விடாமே கேட்டுண்டே இருந்தேன்.. அவாளுக்கும் மனசு இரங்கித்துபோலே. உடனே அவா சொன்னா –     “ஏய். நீ உடனே மதராஸ் 313 தங்கசாலை தெருவுக்கு போ. அங்கே ஸ்ரீ ஸ்வாமி சாஸ்த்ரி என்று ஒருவர் இருப்பார். அவர் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லு. அவர் பஞ்சதசாக்ஷரீ மந்த்ரோபதேசம் செய்வார்”. அப்படின்னா.
பெரியவா.  பெரியவா வாக்கு வேதவாக்காச்சே. உடனே நேரே விஜாரிச்சுண்டு இங்கே வந்துட்டேன். நான் என்ன பண்ணனும்.    
ஸ்ரீகுருஜி: ஓஹோ! நீர் பெரிய இடத்து சிபாரிசுடந்தான் வந்திருக்கேள். பெரியவா என்ன சொன்னா மறுபடியும் அவா சொன்னத்தை அப்படியே சொல்லும்!
வந்தவர்: அவா சொன்னா – “ஏய். நீ உடனே மதராஸ் 313 தங்கசாலை தெருவுக்கு போ. அங்கே ஸ்வாமி சாஸ்த்ரி என்று ஒருவர் இருப்பார். அவர் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லு. அவர் பஞ்சதசாக்ஷரீ மந்த்ரோபதேசம் செய்வார்”. (இந்த நான் சொன்னேன்னு…. என்பதை அழுத்தமாக சொன்னாராம்.)
ஸ்ரீகுருஜி: சரி சரி. ஒய். எழுந்திருங்கணும். நேரே அவாளிடத்திலே போய் அவர் மந்த்ரோபதேசம் செய்ய முடியாதுன்னுட்டார் அப்படின்னு சொல்லும். போம்.

-என்று மிக தெளிவாக வேகமாக சொன்னார்களாம். அதற்கு
அவர்:  என்ன ஸ்வாமிகளே இப்படி கோபிச்சுகிரேள். ஏதோ பெரியவா
சொன்னாளேங்கிரத்துக்காக வந்தேன். நான் போறேன். நேரா அவாள்
கிட்டேதான் போறேன்.
-அப்படின்னு சொல்லிட்டு உடன் தயங்கி தயங்கி கிளம்பி சென்று விட்டாராம். ஸ்ரீகுருஜி அவர்களும் பிறகு அது பற்றி மறந்துவிட்டார்கள். அதன்பின் மறுநாளே மறுபடியும் அவர் வந்துள்ளார். வந்தவர் ஸ்ரீகுருஜியை பார்த்தவுடன் சாஷ்ட்டங்கமாக நமஸ்காரம் செய்தாராம். தன்னை மன்னித்து விடும்படி கேட்டாராம். ஏனென்றால் இவர் பெரியவாளிடம் திரும்பி போனவுடன் அங்கு நடந்த செய்தியை வருப்புருத்தி கேட்ட பின்பே அவரே சொன்னாராம்.

ஸ்ரீபெரியவா: ஏண்டா! உபதேசம் பண்ணிண்டு வந்தூட்டியா?
இவர்: பெரியவா என்னை மன்னிக்கணும். போயும் போயும் ஒரு கோபிஷ்டரிடம் என்னை அனுப்பிச்சுட்டேள். அவர் உபதேசம் பண்ணாமே திருப்பிபோ. போய் உங்கள்டேயே நான் முடியாதுன்னு சொன்னேன்னு சொல்லு! அப்படின்னார். பெரியவா வேறே யாராவது இருந்தா சொன்ன நான் அவாள்கிட்டே போறேன்.    
ஸ்ரீபெரியவா: ஏண்டா! அங்கே அவர்கிட்டேபோய் என்ன சொன்னே! ஏதாவது தப்பா நடந்தூட்டயா!  என்ன ஆச்சு.  
இவர்: நா ஒண்ணும் தப்பா நடக்கலே பெரியவா! நீங்க சொல்லித்தானே அவர்ட்டே போனேன். அதைத்தான் சொன்னேன். பெரியவா உங்களிட்டே அனுப்பிச்சா உபதேசம்             பண்ணுங்கோ   அப்படி………..ன்னேன்.
ஸ்ரீபெரியவா: ஓ அப்படியா! நா அனுபிச்சேன் உபதேசம் பண்ணுங்கோ அப்படின்னியா? அதான் உபதேசம் நடக்கலே. ஏண்டா உனக்கு உபதேசம் ஆகணும்னு இருக்கு. ஒரு நல்ல உபாசகாள்ட்டே நடக்கட்டுமேன்னு அவர்ட்டே அனுப்பிச்சென். நீ என்னடான்னா என் ரெகமண்ட்லே அவர் உபதேசம் பண்ணுடுவாருன்னு ஆணவமா கேட்டிருக்கே! என்ன சரிதானா.    
இவர்: ஆமாம் பெரியவா! உங்க பேரை சொன்ன உடனேயே உபதேசம் ஆயிடும்னு நினைச்சு அப்படி சொன்னேன். மன்னிசுடுங்கோ!

ஸ்ரீபெரியவா: ஏண்டா இது சிபாரிசிலே நடக்கிற காரியமா! உன்னுடைய க்ஷேமத்துக்கு இந்த உபதேசம்.  நீ அவரிட்டே போய் என்ன   கேட்டிரு க்கணும்? பணிவான்னா நடந்திருக்கணும். அவரைபத்தி உனக்கு தெரியுமோ! அவர் ஸ்ரீவித்யா வாசஸ்பதி தெரியுமோ ன்னோ! அவாளெல்லாம் சதாகாலமும் ஜபம் பண்ணின்டு அம்பாளை பூஜை பண்ணின்டு இருக்கறவா இல்லியோ. இது என்ன ஒருத்தர் ரெகமண்ட்லே அவர் பஞ்சதசாக்ஷரி மந்த்ரோபதேசம் பண்ணிடுவாரா! அது என்ன அத்தனை சாமானியமா! நீ போய் என்னோட ரெகமண்ட்ன்னு சொன்னதே பெரியதப்பு. உனக்கு நல்ல ஸத்குரு அமையட்டுமேன்னுதான் அவரிட்டே அனுப்பினேன். நீ இப்படி வந்து நிக்கரயே!   நா அவாள்ட்டேலாம் எத்தனை மதிப்பு மரியாதை வச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமோ? அவளோடே குரு இங்கே நம்ம காமாக்ஷிக்கு நவாவரணபூஜை செய்து வந்தாவா.  அவர் மந்த்ரசாஸ்த்ரவிற்பன்னர். ஸ்வதந்த்ரர். இதோ ஒரு குருன்னு காட்டினேன் நீ புடிச்சுக்க வாண்டாமோ! சரி போனது போகட்டும். உன்னோட ஆணவத்துக்கு இந்த   தண்டனை இருக்கட்டும். மறுபடியும் அவரிட்டேயே போ. இப்பபோயி  நா சொன்னதா சொல்லாதே! நமஸ்காரம் பண்ணிட்டு மரியாதையா அவர் என சொல்றாரோ அதை கேளு. இப்பவே போ!
-என்று சொல்லிவிட்டார்கள். பின் அவர் மறுநாளே குருநாதரிடம் தங்கச்சாலை தெருவுக்கு வந்தார். இப்போது மிக்க பணிவு. மரியாதை. தன்னடக்கம். பிறகென்ன. ஸ்ரீ குருஜி தான் அவ்யஜகருணாமூர்த்தி ஆயிற்றே! கிரமப்படி காலந்தரத்தில் எல்லாம் செய்தார்களாம். மேலும் அடுத்த முறை ஸ்ரீ பெரியவாளை ஸ்ரீகுருஜி சந்தித்தபோது ஸ்ரீபெரியவாளே இது பற்றி பிரஸ்தாபித்து சிரித்தார்களாம். இந்த விஷயங்கள் பூராவும் ஸ்ரீகுருஜியே என்னிடம் சொன்னவை. முக்கிய விஷயங்கள் தர்மங்கள் இதில் அடங்கியுள்ளதால் நினைவில் நின்று வருகிறது. (இதனை குறிப்பாக ஸ்ரீகுருப்ரகாசமலரில் எழுதப்பட்டதுதான்.)

ஸ்ரீவித்யாஉபாசகதர்மங்களில் தலையாய தர்மமாக பணிவும், மரியாதையும் ஆன்றோர்களால் சொல்லப்பட்டது. மேலும் சீடனின் தகுதியை பார்த்தே தான் எல்லாம் செய்வார்கள். ஸத்குரு கிடைப்பது என்பது சாதகனின் பூர்வஜன்மபாக்கியம். இதில் குருநாதரின் கருணையும் முக்கியம். இத்தனை விஷயங்கள் இந்த நிகழ்ச்சியால் நமக்கு தெரிய வருகிறது.
ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா எனது குருநாதரிடம் எத்தனை அன்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சான்று.        .
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum