ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Wed Jun 17, 2015 5:37 am

ஸ்வாமி நாமா? இல்லை என்றால்….???

ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள்.

அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். “நான்தான் ஸ்வாமி” என்றுதான் ஹிரண்யகசிபுவும் சொன்னான். அவனை ஸ்வாமியே நரசிம்மமாக வந்து சம்ஹாரம் செய்யும்படி ஆயிற்று. ஆசார்யாள், “நாம்தான் ஸ்வாமி” என்று சொல்வது ஹிரண்யகசிபு சொன்னது போலவா?

இல்லவே இல்லை. “நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார். இப்போது நாம் உத்தரணி ஜலத்தைப்போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணி ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.

நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களுக்கு உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே! எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி! எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, ‘ஸ்வாமியே நாம்’ என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப் பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, ‘ஜீவன் ஸ்வாமி அல்ல; இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து; இவன் வேறு; அவர் வேறு’ என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக வேண்டும்.

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப புண்ணியமற்ற நிலையை அடைந்து, அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்த பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது

தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்?

இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக, அத்வைதமாக ஆகிவிடுவோம். ‘நீ வேறெனாதிருக்க, நான் வேறெனாதிருக்க’ என்று அருணகிரிநாதர் பாடிய அனுபவத்தை அடைவோம்.

நன்றி: தெய்வத்தின் குரல்
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Wed Jun 17, 2015 8:53 am

எளிதில் கிடைப்பவர் யார் ?

நமக்கு பயமாக, கஷ்டமாக இருப்பவைகளை எளிதாக ஆக்கித் தருவதற்குத்தான் நமக்குப் பிள்ளையார் இருக்கவே இருக்கிறார். எங்கே பார்த்தாலும் படர்ந்து கிடக்கும் அருகம்புல்லைப் பிய்த்து அவர்மேலே போட்டுவிட்டால் போதும். அதிலேயே த்ருப்தியாகி விடுவார். மநுஷ்யர்கள் எவரும் வைத்துக் கொள்ளாத பூ, அதனால் கடையில் விலைக்கு வராத பூ, செடியிலே யதேஷ்டமாகப் பூத்துக் கிடக்கிற அந்த எருக்கம்பூவில் நாலு, கைக்காசுக்குச் செலவில்லாமல் பறித்து வந்து பிள்ளையார் பாதத்தில் போட்டுவிட்டால் அப்படியே பரம ஸந்தோஷம் அடைந்து விடுவார். ஏதோ பிரப்பம் பழமோ, கொய்யாப் பழமோ, பரம ஏழைக்குக்கூட கிடைக்கக் கூடியது, அதைக் கண்ணில் காட்டினால் குளிர்ந்து போய்விடுவார். இன்னும் கொஞ்சம் நமக்கு வசதி இருந்தால் ஒரு தேங்காய் அர்ப்பணம் பண்ணலாம். அதைக்கூட மந்த்ரம், கிந்த்ரம் சொல்லி நைவேத்யமென்று பண்ண வேண்டுமென்பதில்லை. “சிதறு காய்” என்று அவருக்கு முன்னால் போட்டு உடைத்தாலே போதும். அந்தத் துண்டத்தை நாலு ஏழை குழந்தைகள் பொறுக்கித் தின்றுவிட்டால் அந்தக் குழந்தைகளின் ஸந்தோஷத்திலேயே ஸாக்ஷாத் ஈசனின் மூத்த குழந்தையும் பரமானந்தம் அடைந்துவிடும்.

இதை விடவும் சௌகர்யம் இருந்தால் இந்தக் குழந்தைக்குச் சாக்லேட்டுக்குப் பதில் மோதகம் நிவேதனம் செய்யலாம். இதையும் அவர் கண்ணில் காட்டிவிட்டு, மற்ற குழந்தைகளுக்குத் தந்து நாமும் சாப்பிட்டே அவரை ஸந்தோஷப்படுத்திவிடலாம். ‘மோதகம்’ என்றால் ஆனந்தம் என்று அர்த்தம். பொங்கும் ஆனந்தமே உருவான ஆனைக்குட்டியாக அவர் இருப்பதால் அவரைப் புதிதாக நாம் ஸந்தோஷப்படுத்துவது என்பது கூட இல்லை. அவரிடம் போய் நின்று விட்டாலே போதும், ப்ரீதியடைந்து விடுவார். நாமும் அவர் ப்ரீதியை ஸம்பாதித்துக் கொண்டு விடலாம். தத் த்வாரா (அதன் வழியே) ஈஸ்வரன் அம்பாள் ஆகியோரின் ப்ரீதியையும் பெற்றுவிடலாம்.

அவரிடம் போய் நிற்பதிலும் கஷ்டமில்லை. அவர் கோயிலுக்கு என்று நாம் ச்ரமப்பட்டுக்கொண்டு, எங்கேயோ அலைந்து திரிந்துகொண்டு போகணும் என்பதே இல்லை. எந்த சந்து பொந்துப் பக்கமாக, ஆற்றங்கரை குளத்தங்கரைப் பக்கமாக, அரசமரப் பக்கமாக நாம் போனாலும் அரை மைலுக்குள் நாலு பிள்ளையார் கோவிலாவது கண்ணில் பட்டுவிடும், கொடிக்கம்பத்துக்கு அந்தண்டை நமஸ்காரம்; கர்ப்ப க்ருஹத்துக்குள்ளே போகப் படாது; நந்திக்குக் குறுக்காலே போகப்படாது – இந்த மாதிரிக் கட்டுப்பாட்டுக்கெல்லாம் இடமில்லை. அவர் இருக்கிறதே ஒரே உள்தான். அல்லது அதுகூட இல்லாமல், ஆகாசம் பார்க்க அவர் பாட்டுக்குக் காற்றாட மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். தீண்டாதாரா, இதர மதஸ்தர்களா-பார்க்கலாமா, கூடாதா என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லாமல் ஸகல ஜனங்களின் கண்ணிலும் படும்படி உட்கார்ந்திருப்பார்.

தகவல்: தெய்வத்தின்குரல்
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Wed Jul 01, 2015 10:11 pm

அத்வைதம்

நன்றி: தெய்வத்தின் குரல் :: இணைய தளத்தில் இருந்து எடுத்தது.

ஸ்வாமி நாமா? இல்லை என்றால்….??
**************************
ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள்.

அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். “நான்தான் ஸ்வாமி” என்றுதான் ஹிரண்யகசிபுவும் சொன்னான். அவனை ஸ்வாமியே நரசிம்மமாக வந்து சம்ஹாரம் செய்யும்படி ஆயிற்று. ஆசார்யாள், “நாம்தான் ஸ்வாமி” என்று சொல்வது ஹிரண்யகசிபு சொன்னது போலவா?

இல்லவே இல்லை. “நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார். இப்போது நாம் உத்தரணி ஜலத்தைப்போல் கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது. இந்த உத்தரணி ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.

நாம் ஸ்வாமியாக இல்லாவிட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களுக்கு உண்டு என்றாகிவிடும். அதாவது, பல வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகி விடும். அவருடைய சம்பந்தமில்லாமல் அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின் அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே பொருந்தாதே! எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி! எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே, ‘ஸ்வாமியே நாம்’ என்று வெளிப்பார்வைக்கு அகங்காரமாகப் பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை. மாறாக, ‘ஜீவன் ஸ்வாமி அல்ல; இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து; இவன் வேறு; அவர் வேறு’ என்று அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில் ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால் நாமும் அவராகத் தான் இருந்தாக வேண்டும்.

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப புண்ணியமற்ற நிலையை அடைந்து, அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்த பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது

தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்?

இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக, அத்வைதமாக ஆகிவிடுவோம். ‘நீ வேறெனாதிருக்க, நான் வேறெனாதிருக்க’ என்று அருணகிரிநாதர் பாடிய அனுபவத்தை அடைவோம்.
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Wed Jul 01, 2015 10:22 pm

மகாபெரியவா ::: தெய்வத்தின்குரல் தலைப்பில் வரும் அனைத்து பதிவுகளும்
தெய்வத்தின்குரல் என்ற வலைதளத்தின் பதிவுகள் இருந்துஎடுக்கபட்டவைஆகும்.
இது அனைவரின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.
அனைவரும் படித்து அதன் சாராம்சத்தை அறிந்துகொள்ள உதவும் என்ற
தாழ்மையான அபிப்ராயத்தில் வெளியிடபடுகிறது.

நன்றி: தெய்வத்தின் குரல் வலைத்தளம்.
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Sun Jul 12, 2015 9:36 pm

தலைகனம், அகம்பாவம்

We all need to read this once in a while to level-set our understanding of what we are capable of :-)

நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும்.

நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம்செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக் குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.



Thanks: mahaperiyavaa.wordpress.com mahesh's picks
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Sun Jul 12, 2015 9:43 pm

பெண்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்?

பராசக்தி என்று அத்தனை ஆற்றல்களுக்கும் பிறப்பிடமாக ஒருத்தியைச் சொல்கிறோமே! அவளுக்கே “ஹ்ரீமதி” – “வெட்க குணம் படைத்தவள்” – என்று சஹஸ்ரநாமத்தில் பெயர் இருக்கிறது!

இதிலே ஒரு பெரியவ தத்துவமே உள்ளடங்கியிருக்கிறது. “பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும்” என்று நாங்கள் சொல்கிறபோது சில பேர் எங்களை ஆக்ஷேபித்து கேட்பார்கள். “நீங்கள் சொல்வது உங்கள் சாஸ்திரதுக்கே விரோதமாக இருக்கிறது. சக்தி என்ற வார்த்தையே பெண்பாலாக இருக்கிறது, ஜகத் வியாபாரம் செய்கிற மஹாசக்தியையும் நீங்கள் ஸ்த்ரீ தெய்வமாகத்தான் சொல்கிறீர்கள். ஸ்திரீகள் எல்லாரும் அவளுடைய ஸ்வரூபங்களேதான். தவ தேவீ பேதா: ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகல ஜகத்ஸு என்கிறீர்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவர்களை அடங்கி இருக்கச் சொன்னால் எப்படி?” என்று கேட்பார்கள்.

பதில் என்னவென்றால்: பராசக்தியிடம் அத்தனைசக்தி இருந்தாலும் அணுவுக்குள் உள்ள சக்தியிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றின் சக்தியையும் வெளியில் தெரியாமல் உள்ளே அடைத்து அடக்கிதானே வைத்திருக்கிறாள்? அது மாத்ரமில்லை. இத்தனை ஜகத் வியாபாரமும் பண்ணுகிற தன்னையும் வெளியே காட்டிக் கொள்ளமால் ஒளிந்துகொண்டுதானே இருக்கிறாள்? அதோடு, அவள் மஹாசக்தியாயிருந்த போதிலும், தன சக்தி சக்தி அத்தனையும் அடக்கி ஒடுக்கிக்கொண்டு, ‘ஸதி’ என்றே பெயர் பெற்ற மஹாபதிவிரதையாகவே பரமேஸ்வரனின் சாந்ததில்தான் தன்னுடைய நிறைவைக் கண்டு அப்படியே ‘சிவசத்யைக்ய ரூபிணியாக’ ஒன்றிக் கிடக்கிறாள். தான் செய்யும் ஜகத்-வியாபாரம் முழுவதையும் ‘பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம்’ என்ற பெயரில் ஈஸ்வரனே நடராஜனாகி ஆடிக்காட்டுவதைத்தான் அவள் சிதம்பரத்தில் காட்டி, தான் வெறுமனே பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிற ‘சிவ நடன சாக்ஷி’ யாக இருக்கிறாள். அதே மாதிரி ஸ்த்ரீகளும் தங்களுடைய சக்தியைத் தாங்களே வெளிக்காட்டாமல், வெளியிலே கொட்டாமல் அதை அடக்கி கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் இன்னும் சோபிதமாக ‘ரேடியட்’ ஆகும். அதில் சந்தேஹமில்லை. நான் ஏதோ அர்த்தமில்லாமல் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

வைஷ்ணவத்தில் ஜகத்வியாபாரம் முழுவதும் செய்கிற சக்தியாக மகாவிஷ்ணுவைச் சொல்லியிருக்கிறது. சாக்தத்தில் ‘சக்தி’ என்று ஸ்த்ரீயாகச் சொல்லியிருக்கிறதென்றால் வைஷ்ணவத்தில் மகாவிஷ்ணுவை ‘புருஷன்’ என்றே சொல்லியிருக்கிறது. ‘புருஷ ஸூக்தம்’ என்றே சொல்கிறது அவரை குறித்துதானே? அதிலே இரண்டாவது அநுவாகதிலே அவருடைய சக்தியை இரண்டு விதமாகப் பிரித்து, இரண்டும் அவருடைய இரண்டு பத்னிகள் என்று சொல்லியிருக்கிறது. ஒரு பத்னி நமக்கெல்லாம் தெரிந்த மஹாலக்ஷ்மி. சாதாராணமாக ஸ்ரீதேவி-பூதேவி என்று சொல்வதில் “ஸ்ரீ” அவள்தான். வெளியிலே பொங்கிக்கொண்டு தெரிகிற அழகும் அன்புமே “ஸ்ரீ” அல்லது “லக்ஷ்மி”. அவளை புருஷ ஸூக்தத்தில் இரண்டாவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படியானால் முதல் பத்னி என்ற பிரதம ஸ்தானம் அந்த ஸுக்தத்தில் – நமது மத மூலமான வேதத்திலேயே வருகிற ‘அதாரிட்டி’ வாய்ந்த ஸூக்தத்தில் – எவளுக்குக் கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், “ஹ்ரீ” என்ற லஜ்ஜா ஸ்வரூபிணிக்கே (வெட்க உருவினளுக்கே”) கொடுத்திருக்கிறது! வெளியிலே தெரிவதைவிட சக்தி வாய்ந்ததான உள்ளடங்கிய அழகையும் அன்பையும்தான் அந்த உள்ளடக்கத்தாலேயே இங்கே “ஹ்ரீ” என்ற வெட்கமாகச் சொல்லியிருக்கிறது! சக்தி இருக்கிறது என்பதற்காக அதை ஸ்த்ரீ தெய்வமான ஹ்ரீ, தானே வெளியிலே அவிழ்த்துக் கொட்டவில்லை. ‘புருஷன்’ என்றே சொல்லப்படும் தன புருஷ தெய்வத்துக்கு அடங்கிய பத்னியாகத் தான் இருந்து கொண்டு அவரே ஜகத் வியாபாரம் செய்யும்படி விட்டிருக்கிறாள்.

பரப்பிரமத்துக்கு வாசகமாக ஒரு மந்த்ரம் இருக்கிறது. “சக்தி பீஜம்” என்றே அதைச் சொல்வார்கள். ஆனால் அதுவே “வெட்கம்” என்பதன் அடியாகப் பிறந்ததாகத்தான் இருக்கிறது! ஹ்ரீ என்றால் “வெட்கம்” என்று சொன்னேனல்லவா? அந்த அக்ஷரதைக் கொண்டேதான் பராசக்தியின் மந்த்ர ஸ்வரூபம் இருக்கிறது. இதை ஸ்பஷ்டமாகத் தெரிவிற்கிராற்போல் சஹஸ்ரநாமத்தில் அந்த சக்தி பீஜாக்ஷரதைச் சொல்கிற நாமாவுக்கு அடுத்ததாகவே அவளுக்கு “ஹ்ரீமதி” என்ற நாமாவைக் கொடுத்திருக்கிறது.

ஆகையினால் ஸ்திரீகளிடம் சக்தி இருப்பது வாஸ்தவந்தான் என்றாலும் அதை அவர்கள் தாங்களே வெளிக்காட்ட வெட்கப்பட்டு, அடங்கி உள்ளே வைத்துக்கொண்டு, அதுவாக புருஷஜாதி மூலம் ரேடியேட் ஆக விடவேண்டும் என்பதுதான் தாத்பர்யம்.

பெண்களுக்கு வெட்கம் முதலான மேன்மைக் குணங்கள் ஜாஸ்தியாக இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் புருஷர்களைவிட சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். பயப்பட்டு விலவிலத்துப் போவது, துக்க உணர்ச்சியில் குபுகுபுவென்று அழுவது இப்படியெல்லாம் அவர்களுடைய “நேச்சர்” இருக்கிறது.

இதெல்லாம் சின்ன அம்சங்கள். பெரிய அம்சங்கள் பரமோத்தமானவை.

HH Vaariyaar Swamigal says in the Ramayana lecture that had Mother Sita wanted to destroy Lanka, she would have done that within no time. When Lord Anjaneya wanted to destroy, she stops Him also by advising that it would not be a right thing to do as it would reflect bad on Lord Rama.



Thanks for mahaperiyavaa.wordpress.com..Sri mahesh's picks
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Thu Aug 20, 2015 9:45 pm


நம் அறியாமை
.================================================================

உலகத்தில் புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு மதத்தினரும் ஏதாவது ஒரு புஸ்தகத்தைத்தான் நிரம்பவும் கெளரவமாக வைத்திருக்கிறார்கள். எல்லாம் புஸ்தகங்களேயானாலும், ஒரு புஸ்தகத்தை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். அதில்தான் ஜன்மம் கடைத்தேறும் வழிகள் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். அந்தப் புஸ்தகத்துக்குப் பூஜை செய்கிறார்கள்; நமஸ்காரம் செய்கிறார்கள். சில மதஸ்தர்கள் அந்தப் புஸ்தகத்திற்கே தனியாகக் கோயில்கட்டி வணங்குகிறார்கள். ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை அவர்கள் “கிரந்த ஸாஹேப்” என்று மரியாதையாகச் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் தங்கள் ஆத்ம க்ஷேமத்திற்கு வேண்டிய மார்க்கங்களைச் சொல்லும் ஒவ்வொரு புஸ்தகத்தைப் பெற்றிருக்கிறார்கள். இவை எல்லாம் ஒரு மதஸ்தாபகரின் பெயரில் இருந்தாலும், வாஸ்தவத்தில் பரமாத்மாவின் வாக்கேதான், பகவானின் ஆக்ஞைதான் அந்தந்த மதஸ்தாபகர் வழியாக வந்தது என்கிறார்கள். இதனால் இவற்றை Revealed Text என்கிறார்கள். இதையே நாமும் “அபெளருஷேயம்” என்கிறோம். புருஷர்கள் (மனிதர்கள்) தாமே செய்வது பெளருஷேயம். இப்படியில்லாமல் பரமாத்மாவே மனிதனைக் கருவி மாத்திரமாகக் கொண்டு வெளியிடுவது அபெளருஷேயம்.

சரி, நம்முடைய வைதிக மதத்திற்கு ஆதாரமாக எந்தப் புஸ்தகம் இருக்கிறது? மற்ற மதஸ்தர்களை ‘உங்கள் மதப்புஸ்தகம் எது?’ என்று கேட்டால் அவர்களுக்கு சந்தேகமில்லாமல், இன்னது என்று தெரியும். கிறிஸ்தவர்கள் பைபிள் என்பார்கள். முஹம்மதியர்கள் குரான் என்பார்கள். பெளத்தர்கள் த்ரிபிடகம் என்பார்கள். பார்ஸியர் ஜெண்டவஸ்தா என்பார்கள். நம்மைக் கேட்டால் – இந்த காலத்தில் சைவர், வைஷ்ணவர், த்வைதி, அத்வைதி இன்னும் நம் தேசத்திலிருக்கப்பட்ட பல ஸம்பிரதாயத்தினருக்கும் பொதுவாக எந்த மதப்புஸ்தகம் இருக்கிறதென்றால் – எல்லோரும் சேர்ந்து எந்த ஒன்றைச் சொல்லலாம் என்பதே தெரியாமல் விழிக்கிறோம்! இதற்கு என்ன காரணம்?

முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. மற்ற ஜனங்களுக்கு எந்த மதத்தில் ஜனனம் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த மதத்தைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். அல்லது மதப் படிப்பை முதலில் இரண்டு அல்லது மூன்று வருஷங்கள் படித்துவிட்டு அப்புறம் லெளகிகப் படிப்பைப் படிக்கிறார்கள். அதனால் சிறு பிராயத்திலேயே அவர்களுக்கு மதத்தைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு விடுகிறது. நம்முடைய மதத்தில் மதத்தைப்பற்றிப் படிப்பதே கிடையாது. அப்படி படிக்காததனால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் நம்முடைய மதத்திலிருந்து பிடித்துக் கொண்டு போகிறார்கள். மற்ற மதஸ்தர்கள் தங்கள் மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு போவதில்லை. காரணம் பால்யத்திலிருந்தே மத சாஸ்திரங்களை அவர்கள் படிக்கிறார்கள். அதனால் அதனிடம் பற்று ஏற்படுகிறது. நாமோ பால்யத்தில் கொஞ்சம்கூட எட்டிப் பார்ப்பது இல்லை. என்ன வாசித்தாலும் ஏறாத வயதில் நாம் வாசிக்கிறோம். நம்முடைய மதப்புஸ்தகங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம்.

நன்றி: தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் தொகுப்பு.

இணையத்தில் இருந்து எடுத்தவை. ( தொடரும்)



Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Sat Aug 22, 2015 5:08 am

நம் அறியாமை....
தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் தொகுப்பு.
இணையத்தில் இருந்து எடுத்தவை. (தொடர்கிறது)

நம் படிப்பெல்லாம் வெள்ளைக்கார முறையில் உள்ள படிப்பு. பேச்சு, டிரஸ், நடவடிக்கை எல்லாமே வெள்ளைக்காரர்களைப் போல இருக்க வேண்டுமென்பதுதான் நம் ஆசை. சுதந்திரம் வந்த பிறகும் இப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறோம். முன்னைவிட அதிகமாக வெள்ளைக்கார நாகரிகத்தையே நம் வாழ்முறையாக்கிக் கொண்டிருக்கிறோம். ஸ்வதேசியம், பாரத நாகரிகம், நம்முடைய தனிப்பண்பாடு என்று பேசுவதில் மட்டும் குறைவில்லை. உள்ளே பரதேசியாக இருந்துகொண்டு வெளியில் சுதேசிப் பேச்சுப் பேசி என்ன பிரயோஜனம்? உள்ளும் புறமும் சுதேசியமாக இருப்பதென்றால், நம் தேசத்துக்கு முதுகெலும்பாக அநாதிகாலம் தொட்டு இருந்து வருகிற மதவிஷயங்களை பால்யத்திலேயே சொல்லிக் கொடுத்தால்தான் அது ஸாத்யமாகும். ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் [மதச்சார்பற்ற ராஜாங்கத்தில்] இதற்கு வழி பண்ணித் தரமுடியவில்லை! அதனால் பழைய வெள்ளைக்காரப் படிப்பே தொடர்ந்து வந்திருக்கிறது. அதில் சொல்லிக் கொடுப்பதெல்லாம் நம்முடைய சாஸ்திரங்கள் ‘ஸூப்பர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்பதுதான்! இதனால், “நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகம் என்ன? ஹிந்துக்கள் என்ற பெயருள்ள ஸகலருக்கும் பொதுவாக என்ன இருக்கிறது?” என்று கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாத நிலையில் இருக்கிறோம்.

விஷயம் தெரியாதவர்கள் மட்டந் தட்டினாலும், இதர தேசங்களிலுள்ள விஷயம் தெரிந்தவர்களும் ஆத்ம ஸாதகர்களும் நமது ஆத்ம வித்யையை (லெளகிகம் என்று தோன்றுகிற வித்யைகள்கூட நம் தேசத்தில் ஆத்மாபிவிருத்திக்கே ஸாதனமாக இருப்பதால் நம்முடைய அரசியல் சாஸ்திரம், எகனாமிக்ஸ், நாட்டிய சாஸ்திரம் உள்பட எல்லாம் ஆத்மவித்யை தான்) பாராட்டுகிறார்கள். தேடித் தேடி எடுத்துக் கொண்டு தர்ஜுமா (ட்ரான்ஸ்லேட்) பண்ணி வைத்துக் கொள்கிறார்கள். எனவே லோகத்தில் நமக்கு ஒரு கெளரவம் வேண்டுமானால், அது எதனால் நமக்குத் தன்னால் பிறரது மரியாதை கிடைக்கிறதோ அந்த சாஸ்திரங்களில் நம் அறிவை விருத்தி பண்ணிக் கொள்வதால்தான் ஏற்படும். ஸயன்ஸிலும் டெக்னாலஜியிலும் மற்றவர்களுக்கு மேல் நாம் பண்ணிக் கெளரவம் பெறமுடியாது. அப்படியே இரண்டொருத்தர் நம்மில் நோபல் பிரைஸ் வாங்கினாலும், இதனால் நாம் பூரிக்கலாமே தவிர லோகம் பூரிக்காது. “ஸயன்ஸும் டெக்னாலஜியும் நிறைவு தரவில்லை என்று நாம் ஹிந்துக்களிடம் போனால், அவர்கள் ஃபிலாஸஃபியை விட்டு விட்டு இதில் வந்து விழுந்திருக்கிறார்களே!” என்றுதான் நினைக்கிறார்கள். இந்தியாவில்தான், மற்ற அத்தனை தேசங்களின் மஹான்களைக் கூட்டினாலும், அதைவிட ஜாஸ்தியான மஹான்கள் தோன்றி ஆத்மானந்தத்தை அடைந்திருக்கிறாரகள் என்பதுதான் நம் பெருமை. அதற்கு ஆதாரமாக அவர்கள் கொடுத்துப் போயிருக்கிற சாஸ்திரங்களை நாம் தெரிந்து கொள்ளாமலிருப்பது ரொம்பக் குறைவான காரியம்.

நமக்கு ஆதாரமான மதப் புஸ்தகத்தின் பேரே தெரியவில்லை. “தெரியாததால் என்ன மோசம்? தெரிந்து கொள்வதால் என்ன லாபம்?” என்றுகூடக் கேட்கிறோம்.

பாரத நாகரிகம் என்று லோகம் பூராவும் கொண்டாடுகிற பெரிய ஸம்பிரதாயத்தின் வாரிசுகளாக வந்திருக்கிற நாம் இப்படி இருக்கலாமா? “நம் பண்பாடு என்னவானால் என்ன? பணம் தான் பெரிசு” என்று கண்டம் கண்டமாகப் பறந்து கொண்டிருக்கலாமா? இப்படி மற்ற தேசங்களுக்குப் போனவர்கள் பல பேர் என்னிடம் வருகிறார்கள். “நாங்கள் போயிருக்கிற தேசங்களில் உள்ளவர்கள் எங்களிடம் நம் மதத்தைப் பற்றி கேட்கிறார்கள். வேதத்தைப் பற்றி, உபநிஷத்தைப் பற்றி, கீதையைப் பற்றி, யோகத்தைப் பற்றி, கோயில்களைப் பற்றி, புராணங்களைப் பற்றி, இன்னம் இப்படி நம் மதத்திலுள்ள அநேக தத்வங்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த அளவுகூட நம் மதத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. ரொம்பவும் அவமானமாக இருக்கிறது. அதனால் நீங்களாவது சுருக்கமாக நம் மத ஸித்தாந்தங்களை, தத்வங்களைப் புஸ்தகமாகப் போட்டுக் கொடுங்களேன்!” என்று கேட்டுக் கொள்கிறார்கள். அதாவது விதேசியமாக இருப்பதுதான் நமக்குப் பெருமை என்று நாம் நினைத்தாலும், அந்த விதேசிகள் நாம் இப்படியிருப்பதைப் பார்த்து மட்டமாகத் தான் நினைக்கிறார்கள். லோகத்துக்கெல்லாம் பழமையான ஒரு நாகரிகத்தவர்களுக்கு அதனிடம் பற்று போய்விட்டதே என்ற நம்மைப்பற்றிக் குறைவாகத்தான் மற்றவர்கள் நினைக்கிறார்கள்.

நாம் எதையுமே படிக்காமல், எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. ஏதோ அறிவு போதாத ஜனங்கள் என்று வைத்து விடுவார்கள். ஆனால் இப்போது நாம் படிப்பதும், பேசுவதும், எழுதுவதும் கொஞ்சநஞ்சமல்ல. அத்தனையும் ஸயன்ஸ், டெக்னாலஜி, அரசியல், வேறு தினுசான ஆராய்ச்சிகள், ஸினிமா, கண்ட கண்ட நாவல் என்று இப்படித்தான் இருக்கின்றன. அறிவு இல்லாத ஜனங்களாக இல்லாமல், நிறைய புத்தியைச் செலவழித்து நாம் இத்தனை படித்த போதிலும், எழுதிய போதிலும், நம் தேசத்துக்கே விசேஷமாயுள்ள அத்யாத்ம சாஸ்திரங்களைப் புறக்கணிக்கிறோம் என்பதாலேயே நம்மைப் பிற தேசத்தார் மிகவும் குறைவாக நினைக்கிறார்கள்.

ஏராள நூல்கள் நம் மத விஷயமாக உள்ளன. நமக்கு அதெல்லாம் வேண்டியிருக்கவில்லை. நாமும் நிறைய படிக்கிறோம். ஆனால் எல்லாம் தேசாந்தர புஸ்தகங்கள்தான். மில்டன், வேர்ட்ஸ்வொர்த் எழுதினதெல்லாம் நமக்குத் தெரியும். பவபூதி என்ன எழுதினார், ஒட்டக்கூத்தர் என்ன எழுதினார் என்றால் தெரியாது. லூயி டைனாஸ்டி, ஃஜார் டைனாஸ்டி நமக்குத் தெரியும்; ஸூர்ய வம்சம், சந்திர வம்சம் தெரியாது. ஏன், நம் கோத்ர ரிஷிகள் பேரே தெரியாது! நமக்கு ஸம்பந்தமில்லாதவை கட்டுக்கட்டாகத் தெரியும். ஆனால், எதைக் கண்டு லோகம் பிரமிக்கிறதோ, அதற்கு ஆதாரமான நம் சாஸ்திரங்களின் பேர்கூடத் தெரியாது. சாஸ்திரக்ஞர்கள் சொல்ல வந்தாலும், நாம் காது கொடுத்துக் கேட்பதில்லை. அசட்டை செய்கிறோம். நம் தேசம் இப்படியொரு ஹீன ஸ்திதியில் இருக்கிறதே என்று ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

‘நம் பண்பாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டால் பணம் வருமா?’ என்று நாம் கேட்டுக் கொண்டிருப்பதால் இப்படி ஆகியிருக்கிறது. வாஸ்தவத்தில் நாம் பணம் சம்பாதிப்பது, வாழ்க்கை நடத்துவது முதலான ஸகல விஷயங்களும் அந்தப் பண்பாட்டை நாம் பூரணமாகத் தெரிந்துகொண்டு, அநுஷ்டித்து, நிறைவு பெறவேண்டும் என்பதற்குத்தான்! என்ன காரணத்துக்காக நம் மதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தப்பான கேள்வி. அதற்கு காரணம், பிரதி பிரயோஜனம் எதிர்பார்ப்பது முழுப் பிசகு. நாம் செய்கிற எல்லாக் காரியங்களுக்கும் பிரயோஜனமாக இருப்பதுதான் மதமே தவிர, இதனால் வேறு பிரயோஜனம் வேண்டும் என்பதில்லை. மதாநுஷ்டானத்தால்தான் எல்லாவற்றையும்விட மிகப் பிரயோஜனமான சாந்தமும், பிரேமையும், மோக்ஷமும் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு, அதனால் பணம் வருமா, வசதி கிடைக்குமா என்று மட்டும் பார்த்து, ‘என்ன பிரயோஜனம்?’ என்கிறோம். பற்று, பிரேமை இருந்துவிட்டால் இப்படி பிரதிப் பிரயோஜனம் எதிர்பார்க்கும் எண்ணமே எழாது. எதற்கு இது காரணமாக இருந்தால் நாம் இதை விரும்புவோமோ, அந்தப் பணம், வசதி முதலானவற்றையெல்லாம் இதற்கு காரணமாக வைத்துக் கொண்டு விடுவோம்.
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Kalyani Sat Aug 22, 2015 11:38 pm


நம் அறியாமை....
தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் தொகுப்பு.
இணையத்தில் இருந்து எடுத்தவை. (தொடர்கிறது)




சாஸ்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ப்ராஹ்மேணன நிஷ்காரணோ தர்ம: ஷடங்கோ வேத அத்யேயோ ஜ்ஞேயச்ச என்று இருக்கிறது*. அதாவது, பிராம்மணனானவன் ஒரு காரணமும் இல்லாமலே வேதங்களையும், சாஸ்திரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. சின்ன வயதில்தான் இப்படிக் காரணம் கேட்காமல், பிரயோஜனத்தை எதிர்பார்க்காமல் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்ளத் தோன்றும். ‘சரித்திரம் எதற்குப் படிக்கிறோம்? பூகோளம் எதற்குப் படிக்கிறோம்?’ என்று கேட்காமலே ஒரு குழந்தை ஸ்கூலில் படிக்கிறபோதே, நம் மதக் கிரந்தங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிற்பாடு காலேஜுக்குப் போகிறபோது இவன் ஒரு உத்தேசத்தை, பிரயோஜனத்தை நினைத்துத்தான் படிக்கிறான். வக்கீலாக வேண்டும் என்றுதான் பி.எல் படிக்கிறான்; வாத்தியாராக வேண்டும் என்றுதான் எல்.டி. படிக்கிறான்; டாக்டராக வேண்டுமென்றுதான் எம்.பி.,பி.எஸ் படிக்கிறான். லெளகிகமான பிரயோஜனத்தில் இப்போது ஆசை வந்துவிட்டது. அதனால் “மதப் புஸ்தகத்தை தெரிந்து கொண்டு என்ன ஆக வேண்டும்? தெரிந்து கொள்வதால் என்ன லாபம்?” என்றுதான் கேட்பான். அதனால் இந்தக் கேள்வி முளைப்பதற்கு முன்பே, பால்யத்திலேயே இந்த விஷயங்களை ஆரம்பித்து விடவேண்டும். அப்போது தானே பற்று ஏற்பட்டுவிடும். அப்புறமும் விடமாட்டான். பணம் காசைக் கொடுக்காவிட்டாலும் Sports-‍ல் (விளையாட்டில்) ஆசை உண்டாகிற மாதிரி, ஸங்கீதத்திலோ ஸினிமாவிலோ ஆசை உண்டாகிற மாதிரி, மதவிஷயத்திலும் ஏற்பட்டுவிடும். தாற்காலிகமான இன்பத்தைக் கொடுக்கிற விளையாட்டு, விநோதங்களிலேயே இப்படி பிரதிப் பிரயோஜனம் எதிர்பார்க்காத பற்று உண்டாகிறது என்றால், சாச்வத செளக்யத்தைக் கொடுக்கக் கூடியதான மதவிஷயத்தில் உண்டாகாமல் போகாது. ஆதாரக் கல்வி (Basic Education)யை நாம் சரியாக அமைத்துத் தராததில்தான் தோஷம் இத்தனையும் இருக்கிறது.

‘மதத்தை பற்றித் தெரிந்துகொண்டால் அது சோறு போடுமா?’ என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். ‘அத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதே! நாம் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதும் அத்யயனம் பண்ணத்தான் என்று ஆக்கிக் கொள்ளு’ என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. காரணம் கேட்காமல் சாஸ்திரங்களைத் தெரிந்துகொள் என்கிறது.

இப்படிக் காரணம் கேட்காமல் படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிற மதத்தில் குழந்தை பிறந்தவுடன் நம்முடைய வித்தையை அறிய முடியாமல் கத்தரித்துவிடுகிறோம்! லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார்.அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும்? அவருக்கும் உபயோகமாக இருக்கும். மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேஹமே வராது. நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகமே இன்னதென்று தெரியாத கேவல நிலை வராது.

அப்படி படிக்காததனால் பலவித அபிப்பிராயங்கள் நம்மவர்களிடத்தில் இருக்கின்றன. ஒருவர் ஆஸ்திகராக இருக்கிறார். வேறொருவர் நாஸ்திகராக இருக்கிறார். மற்றொருவர் பக்தி இல்லாமல் வெறும் கர்மாநுஷ்டானம் மட்டும் செய்கிறார். வேறொருவர் அநுஷ்டானமின்றி பக்தி மட்டும் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதங்கள் ஏகப்பட்ட விதமாக இருக்கின்றன. இதற்காகச் சண்டை வேறு! ஸந்தேஹங்களோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. மதப்படிப்பை இளம் பருவத்திலேயே படித்திருந்தால் எல்லாருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும். ஸந்தேஹம் இருக்காது. மதப்படிப்பைப் படிக்கிற மற்ற மதங்களில் இத்தனை கக்ஷிகள் இல்லை என்பதைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.

நம்முடைய மதப் புஸ்தகம் என்ன? புஸ்தகத்தைத் தீர்மானம் பண்ணுவதே இந்தக் காலத்தில் சிரமமாக இருக்கிறது. நம்முடைய புஸ்தகம் எதுவோ அதில் சொல்லியிருக்கிறபடி நாம் அநுஷ்டானம் செய்து வந்தால் நமக்கு க்ஷேமம் உண்டாகும்.

மத க்ரந்தங்களில் எது சொல்லியிருக்கிறதோ அதே விஷயம் வேறு புஸ்தகங்களில் சொல்லியிருந்தாலும் தமது மதப் புஸ்தகம் இதுதான் என்று ஒன்றையே ஒவ்வொரு மதஸ்தர்களும் கொண்டாடுகிறார்கள். இன்றைக்கு ஒருவன் ஒரு புஸ்தகம் எழுதுவான்; நாளைக்கு ஒருவன் வேறு எழுதுவான். அவைகளில் நல்லதும் இருக்கலாம்; தப்பும் இருக்கலாம். ஆகையால் ஏதாவது ஒன்றை ஸ்திரமாக ஏற்படுத்திக் கொண்டால் நல்லதல்லவா? அதற்காகத் தான் பல மதஸ்தர்களும் தங்கள் தங்களுக்குப் பிரமாணமாக ஒவ்வொரு புஸ்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது மதம் என்ன என்பதை எந்த மதப் புஸ்தகங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்? லைப்ரரிகள் கொள்ளாமல் லக்ஷக்கணக்கில் நம் மத விஷயமாக புஸ்தகங்கள் இருக்கின்றன. விஷயங்களும் அதிகமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் மூளை குழம்பிப் போகும் போல் இருக்கிறது. ஒன்றுக்கொன்று அப்படி வித்யாஸம் இருக்கும். ஆனாலும், இதற்கெல்லாம் ஆதாரமாகப் பொதுவான ஒரு சில நூல்கள் உண்டு.

நம்முடைய மத அநுஷ்டானத்தால் நல்ல அனுபவத்தையடைந்தவர்கள் இருக்கிறார்கள். உலகத்தையே மறந்து ஆனந்தமாக ஏகாந்த நிஷ்டையில் இருந்து கொண்டு, என்ன பண்ணினாலும் பொருட்படுத்தாமல், சாந்த ஸமாதியில் சாகாமற் கிடந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களை நாம் பிரத்தியக்ஷமாகவும் பார்க்கிறோம். புஸ்தகங்களின் மூலம் ஸதாசிவ பிரம்மேந்திரர்கள், பட்டினத்தார் முதலியவர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். இவ்வளவு அநுபவிகள் மற்ற மதங்களில் மிகவும் குறைவு. இத்தகைய மதத்திற்குப் பிரமாண க்ரந்தங்கள் இல்லாமலா போகும்?

*வ்யாகரண மஹா பாஷ்ய‌ம், ப்ரதம பஸ்பசாந்ஹிகம்.


Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

மஹாபெரியவா....தெய்வத்தின்குரல் Empty Re: மஹாபெரியவா....தெய்வத்தின்குரல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum