ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


மஹாவாக்யங்களின் விரிவுரை-கோடகநல்லூர் - அருட்சக்தியின் சிறிய விளக்கம்

Go down

மஹாவாக்யங்களின் விரிவுரை-கோடகநல்லூர் - அருட்சக்தியின் சிறிய விளக்கம் Empty மஹாவாக்யங்களின் விரிவுரை-கோடகநல்லூர் - அருட்சக்தியின் சிறிய விளக்கம்

Post by arutsakthi Tue Oct 15, 2013 11:01 am

மஹாவாக்யங்களின் விரிவுரை-கோடகநல்லூர்

கோடகநல்லூர் ஸ்ரீஸுந்தரஸ்வாமிகள் என்ற ஸித்த புருஷனான மஹான் எழுதிய நூலில் கண்டது. இந்த பிரகரணம் என்ற ஒரு அத்தியாயத்துக்கு ஒருவாறு அருட்சக்தியின் சிறிய விளக்கம். இது நூலாக குரு மண்டல பரிஷத் மூலம் வெளிவந்துள்ளது.
முதல் பாகமாக லலிதாஒரு இன்பக்கலப்பு என்பது இங்கே பதிவாகி உள்ளது.

2. மஹாவாக்யங்களின் விரிவுரை
(நிஜானந்தவிலாஸம் என்ற நூலில் கண்ட மஹாவாக்யார்த்த ப்ரகரணம்)

ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீசங்கரபகவத் பாதர் முதலான மஹா குருக்கள் உபதேசிக்கும் வேதாந்த ரஹஸ்யத்தை ஏழைகளுக்கு பாஷா வசனத்தால் விவரிக்கிறோம். ஸகல மந்த்ர தபோ யாக யோகம் என்கிற அனேக அனுஷ்டான கலாஜாலங்களுக்கு ஏகமூலமான வேத வேதாந்த அர்த்தங்களை கிரமமான அப்பியாசத்தால் ஆத்ம ஞானத்தையடைய சக்தியில்லா தவர்களுக்கு குருகடாக்ஷத்தால் இந்த மஹாவாக்யார்த்த விவரணம் என்ற ப்ரகரணத்தை நிரூபிப்போம்.

முதலில் குரு உபதேசப்ரகாரம் இந்த நான்கு மஹா வாக்கியங்களையும் ரிஷி- சந்தஸ்- தேவதா- த்யான பூர்வமாக ஜபித்து- இதன் அர்த்தத்தையும் அனுஸந்தானம் செய்வாயாக.

குறிப்பு: ஜபவிதி இதில் எழுதியிருந்தபோதிலும் குரு முகம் உபதேசம் முக்கியம் என்பதை உணர்க.

ஸ்ரீமஹாவாக்யம் - ஜபவிதி

அ. பரமஹம்ஸ (மஹாவாக்ய) மஹாமந்த்ரஸ்ய ஹம்ஸ ரிஷி:
அவ்யக்த காயத்ரி சந்த: பரமஹம்ஸோ தேவதா.
ஆ. ஹம் பீஜம் ஸ: சக்தி: ஸோஹம் கீலகம்.
நித்யப்ரஹ்மானந்தரூப அகண்டைகரஸானுபவ ஸித்யர்த்தே ஜபே விநியோக:
இ-ஈ
ஓம் தத் ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம-
அங்குஷ்டாப்யாம் நம: ஹ்ருதயாய நம:
ஓம் த்வம் நித்யானந்தோ ப்ரஹ்ம-
தர்ஜனீப்யாம் நம: சிரஸே ஸ்வாஹா
ஓம் அஸி நித்யானந்தமயம் ப்ரஹ்ம-
மத்யமாப்யாம் நம: சிகாயை வஷட்
ஓம் அயம் யோவை பூமா-
அநாமிகாப்யாம் நம: கவசாய ஹூம்
ஓம் ஆத்மா யோவை பூமாபதி: -
கனிஷ்டிகாப்யாம் நம: நேத்ரத்ரயாய வெளஷட்
ஓம் ப்ரஹ்மா ஏவமேவாத்விதீயம் ப்ரஹ்ம-
கரதலகரப்ருஷ்டாப்யாம் நம: அஸ்த்ராயபட்
உ. ஓம் அகண்டைக ரஸைவாஹம் இதி திக்பந்த:
ஊ. த்யானம்:
நித்யானந்தம் பரமஸூகதம் கேவலம் ஞானமூர்த்திம்
தத்வாதீதம் ககனஸத்ருசம் தத்வமஸ்யாதி லக்ஷயம்
ஏகம் நித்யம் விமலமமலம் ஸர்வதீஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸத்குரும் தம் நமாமி
எ. பஞ்சபூஜை

ஏ. மந்த்ரம்:
(ஓம்) சிவாத்யவனி பர்யாந்த பரிஹித்ய ஸகல ப்ரபஞ்சா திஷ்டான ப்ரஹ்மைவாஹம் (16 ஆவர்த்தி ஜபம்)
(ஓம்) ப்ரக்ஞானம் ப்ரஹ்மா- அஹம் ப்ரஹ்மாஸ்மி- தத்வமஸி- அயமாத்மா ப்ரஹ்மா (108 ஆவர்த்தி ஜபம்)
ஐ. உத்தராங்கம்.

1. ப்ரக்ஞானம் ப்ரஹ்மா: -

என்னுடைய ப்ரக்ஞானம் ப்ரஹ்மம்தான் என ப்ரக்ஞையால் விளங்கிய தேஹாதி ப்ரபஞ்சமும் நானும் ப்ரஹ்மம் என்றறிவாய். ப்ரக்ஞானத்தைத் தவிர (த்ருசிய) பார்க்ப்படுகிற ப்ரபஞ்சம் வேறாக இல்லாததாலும் என்னைத்தவிர ப்ரக்ஞானம் வேறுபடாததாலும் நான் ப்ரஹ்மத்தைத் தவிர வேறில்லாமையாலும் ப்ரஹ்மமே யாகலாம். இது எப்படியெனில்-

புத்திவ்ருத்தி விளங்கிய ஜாக்ரத்- ஸ்வப்னங்களில் (பார்க்கப்படுகிறது) த்ருச்யம் தோன்றுவதாலும் அவ்வ்ருத்தி உதய மில்லாத சுஷுப்தி மூர்ச்சைகளில் த்ருச்யம் (பார்க்கப்படுகிறது) இல்லாமையாலும் ப்ரக்ஞானமே ஜகத்தாகும். பலருக்கு சுஷுப்தியில் த்ருச்யம் இருக்கிறதே என்ற வினாவுக்கு ஸமாதானம் கூறப்படுகிறது. கல்வழி நடப்பவன் காலிட்ட செருப்பால் தோலிட்ட வழியாய் பார்ப்பது போல முமுக்ஷுவுக்கு இது மறந்துபோகும். தீரவிஜாரிக்கும்போது சிப்பி வெள்ளியாக தோன்றியதுபோல கல்பிதமே இந்த ஜகத்து. பின்பு இந்த புத்தி வ்ருத்தி ப்ரக்ஞானம்- தேஹாதி ப்ரபஞ்சமாக பரிணமிக்கிற வகையைக் கூறுகிறார். ஒரு பூரண தடாகத்தில் ஜலமடை வழிவந்து பெருங்கால் சிறுகால்களில் பிரிந்து- முக்கோண வட்டசதுரங்களான வயல்களில் பாய்ந்து அந்தந்த ரூபமாக தோன்றுவது போல- இந்த ப்ரக்ஞான ஆன்மா அந்தக்கரணவழியால் சக்ஷுஸ் முதலான இந்த்ரிய வழியாக வெளி வந்து- கடபடாதிகளில் பாய்ந்து அந்தந்த விஷயமாகத் தோன்று வதால் ப்ரக்ஞானமே ஜகத்தாகும்.

இந்த ப்ரக்ஞானம்- ஸவிகாரம்- நிர்விகாரம்- ஸ்வாத்மரூபம் என மூன்று ரூபமாகும். ஸவிகாரமாயிருக்க விஷயந்தோன்றும். நிர்விகா ரமாயிருக்க விஷயம் மறந்து போகும். ஸ்வாத்மரூபமா யிருக்க ஜகத் பானபானங்களிரண்டையும் விட்டு- கேவல ஸம்வித் கனமாகவே இருக்கும். ஆனதால் அதுவே ப்ரஹ்மம் என்று சொல்லப்படும். ப்ரக்ஞானமே ப்ரஹ்மமென்றிருந்தால் தானான ப்ரக்ஞையால் தனது வடிவமான ப்ரஹ்மத்தையறிய இதர ஸாதனம் வேண்டியதில்லையே!- மற்றும் உலகத்தில் ப்ராஹ்மணன் தன்னை ப்ராஹ்மணனாக அறியவேண்டி குருகுலவாசம் முதலியன செய்யவில்லையே! - என்றதற்கு ஸமாதானம் கூறுகிறார். ப்ராஹ்மணன் மூன்று-நான்கு வயதுக்குப்பின தன் ஸகவாச த்தால் நான் ப்ராஹ்மணன் என்று தெரிகிறான். தனது ஜனன கால த்தில் தானிருந்தும் தன் ஜன்ம லக்னத்தை அறியாமல் பின்பு மற்றவரால் தெரிந்து கொள்வது போல்தான். ப்ரக்ஞான மாத்மாவும் குரு க்ருபையால் ஸ்வரூபமாகிய ப்ரஹ்மத்தை அறிகிறான். ஆனதால் ப்ரக்ஞானம் ப்ரஹ்மம் என்பது சரி.

மேற்சொன்ன உதாரணம் போல இந்த ப்ரக்ஞானவான்மா வுக்கு வந்திருக்கும் ஸ்திதியை இனி சொல்லுகிறார். எண்ணிமுடியா கல்பங்களில் தான் இன்னான் என்று அறியாமல் ஹானி வ்ருத்தியிலும்- சேதன பசு- புத்ராதி ஹானி வ்ருத்தியிலும்- பாத பாணியாதி கன்மேந்த்ரிய ஹானி வ்ருத்தியிலும் - அததுகளில் ஆன்மா அத்தியாசம் செய்து- நான் கெட்டேன்- நான் வாழ்ந்தேன் என்று புலம்புவான். பின்பு கர்மாதிகாரியாகி விதிநிஷேதத்தை விசாரிக்குமளவில் தேஹத்தைக் காட்டிலும் தான் வேறு என்றறிவான். பின்பு வேதாந்த அப்யாச சமயத்தில் ஜீவன் விக்ஞானவான்மா சிதாபாஸனென்று பரோக்ஷமாக அறிவான். இவ்வாறு யானையைக் கண்ட குருடர் போல அறிந்ததன்றி பர மார்த்தத்தை அறியமாட்டான். அதிகாரி பக்குவ அநுகுண மாக குருப்ரஸாதம் வரும்போது ப்ரக்ஞானமென்ற ஜீவனே ப்ரஹ்மத்வம் என்பதை தசமன் கதைபோல ஸாக்ஷாத்கரிப்பான். இருக்வேத மஹாவாக்யார்த்த நிரந்தர அப்பியாச நிமித்தம் இந்த ப்ரகரணம் உபதேசிக்கப்படுகிறது.

2. அஹம் ப்ரஹ்மாஸ்மி: -

நான் ப்ரஹ்மமாயிருக்கிறேன் என்பது இதன் பொருள். இதில் அஹம் பதத்திற்கு கூடஸ்தன் என்றும்- ப்ரஹ்ம பதத்திற்கு ஸர்வ காரண அகண்ட ஸ்வரூபம் என்றும்- அஸ்மி பதத்திற்கு முன்கூறின இருபதங்களின் ஒருமிப்பைச் செய்வது என்றும் அர்த்தமாகும். இந்த மூன்று பத அர்த்ததிலும் த்வைதவிருத்தி- சாக்ஷிவ்ருத்தி- அகண்டா காரவ்ருத்தி என்ற மூன்று வ்ருத்திகள். சாளக்ராமத்தில் விஷ்ணு சிலா புத்திபோல- தேஹாதியிலும் ஆன்மாவிலும் அஹம்வ்ருத்தி ஸமமாயிருப்பதே த்வைத வ்ருத்தி என்பதாம். இதனை யோக பரிச்சின்ன ஸ்வரூபானுபவ வ்ருத்தி என்றும் கூறுவர். அஹம் பதத்துக்கு அர்த்த மான ஜீவனைவிட்டு கூடஸ்த ப்ரஹ்மமாகவே இருக்கிறோம் என்றும்- தேஹாதி ப்ரபஞ்ச மில்லை என்றும் ஸந்ததம் துணிந்த அனுஸந்தான வ்ருத்தியே ப்ரஹ்ம பத அர்த்தமான சாக்ஷி வ்ருத்தியாகும். அஸ்மி பதஅர்த்தமான ஜீவன்முக்தி ஸ்வரூபம் தமோரஜோ குணங்கள் நசித்து- சுத்த சத்துவகுணம் சேஷித்து- அகண்டான்மா அனுபவம் செய்வது அஸ்மி பதார்த்தமான அகண்டாரவ்ருத்தி என்பதாம். மனம் ராஜஸ தாமஸங்களை சேர்ந்த வேளையில் விஷய துக்கங்களை உண்டாக்கும். தனது ஸ்வபாவம் ஸத்துவத்திலிருந்தால் விஷயம் நீங்கி- தானும் தனது ஸ்வரூபமான ப்ரஹ்மத்தில் ஒன்றாகும். அது எப்படியென்றால் இரு தெளிந்த கண்ணாடிகளை எதிரிட்டால் அது பேதமில்லாமல் ஒன்றாயிருக்கும். அதுபோல ஸத்துவ மனமும் ப்ரஹ்மமும் ஒன்றாய் நிர்விகல்ப மாயிருக்கும். அதனை ஜீவன்முக்தி ஸ்வரூபமான அகண்டாரவ்ருத்தி என்பர். இந்த மூன்று பதத்தின் வியஷ்டி அர்த்த ங்களைக் காட்டிலும் மேலான ஸமஷ்டி அர்த்தத்தை அகண்ட ஏகரஸமெ ன்றும்- விதேஹ முக்தி என்றும் சொல்லுவர். இந்த அகண்டைகரஸமாவது அஹம்ப்ரஹ்மாஸ்மி என்ற மூன்று பதார்த்தங்களையும் மறந்து- செண்டு பிடித்த சுழுத்தன் போல (ஆழ்உறக்கத்தில்- கையில் பிடித்திருந்த பூச்செண்டு நழுவி- கழன்று விழுவதுபோல்) அனந்த மாத்திரமாயிருப்பதே அகண்டைகரஸம். இதனை விதேஹ கைவல்யம்- அரூபநாசம்- லிங்கதேஹாவசானம் என்றும் கூறுவர்.

3. தத்வமஸி -

இதன் ஸமஷ்டியார்த்தம். அது நீ யாகிறாய் என்பதாம். தத்-த்வம்-அஸி. இந்த மூன்று பதத்திற்கு வாச்சியார்த்தம்-3 லக்ஷயார்த்தம்-3 இருக்கின்றது.
தத்- பதத்திற்கு வாச்சியார்த்தம்- ஸர்வக்ஞ த்வாதி குணவிசிஷ்ட ஈச்வரானாம்.
தத்- பதத்திற்கு லக்ஷியார்த்தம்- மஹாகாசம் போல பரிபூரண அகண்ட ப்ரஹ்மம்.
த்வம் பதத்திற்கு வாச்சியார்த்தம்- கிஞ்சிஞித்துவாதி குணவிசிஷ்ட ஜீவனாம்.
த்வம் பதத்திற்கு லக்ஷியார்த்தம்- கடாகாசம் மடாகாசம் போல புத்திக்குஹையில் வளைபட்டவர் போலிருக்கும் கூடஸ்த ப்ரஹ்மம். இங்கு ஒரு வினா வருகிறது. அதாவது ஒரு வஸ்துவில் உபய விதார்த்தம் எப்படிக்கூடும்? இதற்கு ஸமாதானம்- வாச்சியா ர்த்தத்தில்- விட்டுவிடாத லக்ஷணை என்ற ஸோஅயம் தேவதத்த: என்கிற பதார்த்தம் போல கூடும். எவ்வாறெனில்- ஸ: அயம் என்ற அன்னியோன்னிய வ்ருத்த பதார்த்தங்களை விவகார மாத்திரத்தில் அடைந்து தானான தேவதத்த பாவத்தை விடாமலிருப்பான். ஒருவன் வ்யக்திபேதா அபேக்ஷயால் பித்ரு- புத்திர- ப்ராத்ரு- ஜாமாதா- மாதுலாதி சப்தார்த்தங்களை அடைவது போலும்- தேசபேததத்தால் கேரள- சோழ நாமார்த்தங்களை அடைவது போலும்- கால அபேக்ஷயால் பால- தருண நாமார்த்தங்களை அடைவது போலும் ப்ருக்ருதத்திலும் உபயவிதார்த்தம் வருகிறது. லக்ஷியார்த்தத்தில்- தத்பத வாச்சியார்த்த ஹேது அந்தத் தேசகால வ்ருத்திச் சின்னங்களையும்- த்வம்சப்த வாச்சியார்த்தத்தில் ஹேதுவாகிய இந்ததேசகால வ்ருத்தி சின்னங்களையும் தள்ளி விடவும். தேவதத்த சரீர மாத்திரத்திலே ஏகார்த்தம் கூடுவது போல வாச்சியார்த்தமாகிற தத் சப்தம் மஹேச்வரருடைய ஸர்வ க்ஞத்வாதி குணங்களையும் த்வம் சப்த வாச்சியார்த்த ஜீவனுடைய கிஞ்சிஞித்துவாதி ஹீனகுணங்களையும் தள்ளிவிடவும். பின்பு அதிஷ்டான அகண்ட ப்ரஹ்மம் மாத்திரமாய்ப் பார்க்க- கல்பித ஜீவேச்வர நாமாரூபாதிகள் சிப்பி வெள்ளி போல ஒளிருமளவில் ஒரு ஆசாசமே கடாகாசம்- மடாகாசம்- மஹாகாசம் என்று தோன்றுவது போல கூடஸ்தப்ரஹ்மம்- பரப்ரஹ்மம் என விவகார மாத்திரத்தில் இடமாகும். ஆனால் பரமார்த்தத்தில் ஒன்றுதான்.

அஸி பதத்திற்கு வாச்சியார்த்தம்- அது நீயாகிறாய் என்று ஸாமான்யமாகச் சொல்லுவது. தத்-த்வம் பதார்த்தசோதனமில்லா மல் மெதப்பு பார்வையால் ஆகிறாய் என்று வர்த்தமானார்த்தம் வருகிறது.
அஸி பதத்திற்கு லக்ஷியார்த்தம்- கடாகாசம் போல நிர்விகார கூடஸ்தனாகிய நீயே- நித்ய- சுத்த- முக்த அகண்டானந்த ஸ்வரூபமாகவே இருக்கிறாய் என்று பூதார்த்தமாக சொல்லுகிறது.
அஸி என்பதற்கு அனுபதனீதன் இவன். சிலகாலத்தில் வித்வான் என்பதுபோல அந்த வஸ்துவாக நீ பவிப்பாய் என்ற பாவியா ர்த்தமாவது- அப்யாஸியாகிய நீ மஹாவித்வானாகிறாய் என்று காலாந்தர அர்த்தத்தை அறிந்து சொல்வது போலவாவது- வர்த்தமான அர்த்தமாகட்டுமே! என்றால் அதற்கு ஸமாதானம். முன்சொன்னவாறு இந்த கட்டத்தில் அஸி பததத்திற்கு வர்த்தமான- பாவியார்த்தங்களில்லை. லக்ஷியார்த்தமான பூதார்த்தமே பரமா ர்த்தம். ஏதென்றால் ஒரு வஸ்து மற்றொரு வஸ்துவாகிறதில்லை யன்றோ! ஆனால் இங்கு மேலும் ஒரு ஸந்தேஹம் வருகிறது. த்வம் வாச்சியார்த்த ஜீவனாகிய தான் தாம்ரம் மற்றும் சில உலோகங்கள் ஸித்த ஓஷதி ரஸ ஸம்ஸர்க்கத்தினால் ஸ்வர்ண மாவது போல தபஸ்- வித்யா- ஸமாதியினால் தத் சப்த லக்ஷியார்த்தமாகிய ப்ரஹ்மமாகபவிப்பாய் என்று பாவியார்த்தமாவது- வர்த்த மானார்த்தமாவது வந்தால் அந்த ப்ரஹ்ம நிஷ்டனுக்கு என்ன தோஷம்? (இதற்கு ஸமாதானம் கூறுகிறார்.) தாம்ரம் மற்றும் சில உலோகங்கள் ஸித்த- ஓஷதி- ரஸவீர்யம் நசிக்கும் போது ஸ்வர்ணம் போலிருந்த வர்ணமும் நசித்துப்போகும். ஸம்ஸர்க்க ரூபத்தை கொஞ்சகாலம் காட்டி பின்பு மலின வர்ணாதி ஹீன குண ங்களை அடைவதுபோல இந்த ஜீவனும் ஸாதனத்தால் அடைந்த ப்ரஹ்ம த்துவத்தையும் காலக்கிரமத்தில் விட்டு முன்போல துக்கம் முதலான ஹீனகுணங்களை அடைவான். இது சுருதி- யுக்தி அனுபவ விரோத மூலமானது. ஆகையால் அஸி பதத்திற்கு முன்னமேயே நீ ப்ரஹ்மமாகத்தான் இருக்கிறாய் என்பதே லக்ஷியார்த்த ஸாத்யம்.

ஜீவன் ப்ரஹ்மமாகவே இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் தன்னை மறந்து பின்பு குரு உபதேச சிரவணாதிகளால் சைலூஷராஜன் போல தன்னையறிந்து தானாகலாம். ஆனால் உபாஸனா காண்டத்திலுள்ள யோகாப்யாசாதிகள் வேண்டி யதில்லை. ஏனெனில் அதிகாரி பேதங்கள் என சொல்லுவோம். அத்யந்த முக்கிய அதிகாரிகளான வாமதேவாதிகள் ஜனிக்கும் போதே இவையெல்லாம் ப்ரஹ்மமாகிய நாமே என்று வெளி வந்தார்கள். முக்கிய அதிகாரிகளான சுகேசர் முதலானவர்கள் பிப்பலாத குருவுபதேசத்தால் ப்ரஹ்ம நிஷ்டரானார்கள். கௌணா திகாரிகளான தேவேந்திராதிகள் 3- 4- பர்யாய உபதேசத்தால் நிஷ்டையடைந்தார்கள். மந்தாதிகாரிகளான ஜீவர்கள் தத்-த்வம் பதார்த்த சோதனத்தை குருமுகாது ப்ரஸ்தானத்ரய சாந்தி செய்து- அதில் நூற்றிலொருவன் நிஷ்டை பெறுவான். மந்தர்களுக்கு வேதாந்தார்த்தம் காதில் கேளாமலும்- கேட்டாலும்கூட போதம் கூடாமலிருக்கிறது. இதிலும் கீழான விபரீத பாவனைக் காரர்கள் வேதாந்த விசாரஸ்தலத்தில் உபேக்ஷா- விரக்தி- விரோதங்களை அடைவார்கள். ஆகவே மேல்-கீழ் உள்ள அதிகாரிகளைத் தள்ளி பாகுள்ளியமான நடுக்கண்ட முக்கிய அதிகாரியைக் குறித்து இந்த மஹாவாக்யோபதேசம் வரும். அத்யந்த முக்கியஅதிகாரிகளுக்கோ வென்றால்- அவித்யாவாஸனை நீங்கல்- பற்றல் இல்லாமையால் உபாஸனா காண்டத்திலும் உபயோகமில்லை. மற்ற முக்கிய கௌணாதிகாரிகள் இருவருமே தாருகோபாஸனத்துடன் ப்ரஹ்ம நிஷ்டராகவேண்டியது. இவ்வாறிருக்கும்போது மந்தர்களாகிய நம்போலிகளுக்கு (நம்போன்றவர்களுக்கு) உபாஸனையில் சந்தேகிக்க தேவையில்லை.

பின்னும் எவனுக்கு உபாஸனை யில்லாமல் நிஷ்டை கிடை யாதோ அவன் ஜன்மாந்த்ர உபாஸகன் என்றும் ப்ரமாணமுண்டு. நம்மை பரிநிஷ்டித ப்ரஹ்மமாக உபதேசிப்பதால் ப்ரஹ்மமாகிய நமக்கு விதிநிஷேதங்கள் இல்லையென்று யதேச்சாரமும் கூடாது. புண்ணிய-பாபாதிகள் பரமார்த்த திசையில் பொய்யானாலும்- அந்த நிஷ்டா ப்ராப்திவரை ஸத்தியமாக பலம் ஸித்தியாகும். ஸ்வப்ன புலி தர்சனம் பயகம்பாதியுடன் ஜாக்ரகாலம் வரை ஸத்தியமாக துக்கத்தைக் கொடுப்பது போல்தான். ஆகவே தீர்த்தமாடல் முதல் தத்துவபாவனை வரை க்ரமாக முக்கிய அதிகாரிகள் பர்யந்தம் நான்கு பேருக்கும் யதாயோக்யம் அவசியம் அனுஷ்டிக்கதக்கது. இந்த தத் ஆதி பதத்ரயங்களுக்கு லக்ஷியார்த்தமே பரமார்த்தம். வாச்சியார்த்தம் எதெற்காக வென்றால் பரமார்த்தத்தை போதிக்கும் பொருட்டு- இந்த திருடன் வெட்டுக்குத்திதான் என்பதுபோல போதித்தது. ஆகவே மஹாவாக்கிய விதிநிஷேத அவாந்திராதி வாக்யங்களுக்கு எல்லாம் அத்வைத ப்ரஹ்மத்தில் ஸமாப்தி என்றறிந்து- கேவல ஸ்வரூபமாக இருப்பாய் என்று ஸாமவேத மஹாவாக்யம் உபதேசிக்கும். இதுவே தத்துவோபதேசம். இதுவே ஜன்மஸாபல்யம். இந்த உபதேஷ்டாவே தக்ஷிணாமூர்த்தி என்றறிவாய்.

4. அயமாத்மா ப்ரஹ்மம் -

அயம் பதத்திற்கு ஜீவன் என்று பொருள். ஆத்ம பதத்திற்கு ஸமஷ்டி அபிமானியாகிய ஈச்வரன் என்று பொருள். ப்ரஹ்ம பதத்திற்கு- இந்த இரண்டிலுள்ள வாச்சியார்த்த ஹேதுவான உபாதிகளை த்தள்ளி லக்ஷியார்த்த லக்ஷணமான நிரூபாதிக ஸ்வரூபத்தை மாத்திரம் ஸஜாதீய- விஜாதீய- சுகதபேத சூன்யமாக அறிந்து- அகண்டைக ரஸமாக இருப்பது என்பதே பொருளாகும்.

இந்த புருஷன் அகண்டைகரஸமாகவே இல்லாத காரணம் என்ன என்று கூறுவோம். அநாதி அவித்யா வாஸனையால் அன்னமய கோசமென்ற தேஹத்திலும்- ப்ராணமயகோசமென்ற முக்கிய ப்ராணவாயுவிலும்- மனோமயகோசமென்ற ஸங்கல்ப ரூபத்திலும்- விக்ஞானமயகோசமென்ற புத்தியிலும்- ஆனந்த மயகோசமென்ற சுஷுப்தியிலும் நான் என்றும்- எனது என்றும் அபிமானத்தால் அழுந்திவிடுகிறான். நாடகத்தில் அரிச்சந்த்ர வேடமணிந்தவன்- புத்திர மரணசவத்தை காத்தல் ஆகிய சோகங்களை அனுபவிப்பதுபோல் ஸ்வபாவத்தை மறந்து- அகண்டைகரஸமாகவே இருக்கவில்லை. வெகு ஜன்ம புண்ணி யராசிகள் பரிபக்குவம் ஆகும்போது குரு ஸந்நிதியில் ச்ரவணாதி ஸாதனங்களை அடைகிறான். பஞ்சகோசங்களை விலக்கி திரிவித பேத சூன்யமாய் ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே இருப்பான்.

ப்ரஹ்ம சப்தத்திற்கு பொருளாவது: வஸ்து அந்தரமில்லாத பூரண ஸ்வரூபம் ப்ரகாசிக்கும். இப்படியிருக்க முந்திய பேதங்கள் எப்படிக்கூடும்? என்றால் கூறுவோம்.ஸஜாதீய பேதமாவது- ஒரு மரத்துக்கு மற்றொரு மரம்.இப்படி ஸமான ஜாதியான மற்றொரு ப்ரஹ்மம் ப்ரஹ்மத்திற்கில்லை. விஜாதீயமாவது- மரத்துக் கன்னிய மாகிய ஜலம்- கல்- மண் போன்ற விஜாதீயத்ரவ்யங்கள். ப்ரஹ்மம் ஒன்றைத்தவிர வேறு விஜாதீயவஸ்துக்கள் இல்லை. தைத்ரீயம் முதலான சுருதிகளில் பூத-பௌதீக ச்ருஷ்டியை ப்ரத்யக்ஷமாகச் சொல்லியிருக்க மித்தையான ஸ்வரூபம் எப்படிக்கூடும்? அனுபவ விரோதமாக இருக்கிறதே! என்றால் கூறுவோம். ஸாமான்யம்- விசேஷம் என்று இரண்டுவிதம். தைத்ரீயம் முதலான சுருதிகள் உலகம் ஒப்புக்கொண்டவாறு வ்யவகாரிக ஸத்யத்துவத்தை அவலம்பித்து- விவகரித்து- இடைக்கிடை பயமுண்டாகிற சொற்க ளால் ச்ருஷ்டியில் உண்டாகி யிருக்கிறதை அழித்து ப்ரஹ்ம மொன் றையே ஸித்தாந்தம் செய்திருக்கிறது. மாண்டூக்யம் முதலான வெகுசுருதிகள் ஆமூலாக்கிரமாக இகப்ரபஞ்ச வைதத்தியத்தை ஸ்தாபித்து இருக்கிறது. அது ப்ரமாண பரிவினாசக நியாயேன விசேஷோக்தி ப்ரசங்கமானது. மஹா பூத பௌதிகங்கள் கயிறு- பாம்பு போல மித்தையான ஸ்வரூபம். அதனால் விஜாதீய பேதமில்லை. சுகதமேதமாவது- மரத்துக்கு தனது அம்ச பேதமாகிய தோல்(பட்டை) கழிந்த இலை- புஷ்பம்- பழம் போன்ற பேதங்கள் உண்டு. ப்ரஹ்மத்துக்கு தன் அம்சமான வஸ்துக்கள் ஒன்றுமில்லை.

மூலப்ரக்ருதி- மாயா- அவித்தை- ஈச்வராதி பேதங்க ளுள்ளதே என்றால் முக்தாளுக்கு இவையில்லை. முமுக்ஷுவுக்கு சிலகாலத்தில் சிலவுண்டு. சிலகாலத்தில் ஒன்றுமில்லை. வந்திருந்த அத்தியாரோபத்தை (இல்லாதாக்கும்) அபவாதிக்கும் பொருட்டு (உளர் மொத்தக் கணக்கிலுத்தரவு சேர்த்து மானியம் செலவு செய்வதுபோல்) ஆத்மானந்தபோதத்தை அடைந்தவர்களுக்கு ப்ராபஞ்சிக ச்ருஷ்டியாதி மித்யா ஸ்வரூபமென்றும்- அநாதிவித்யா ஆச்ரய சுழுபத்தாளாகிய அக்ஞ ஜனங்களுக்கு ஸத்தியமென்றும்-சுருதி யுக்தி அனுபவங்களில் ஸ்பஷ்டாக இருப்பதால் சுகத பேதமில்லை.

ஆகவே அயமாத்மா ப்ரஹ்மம் என்ற தர்சன மஹாவாக்யம் அகண்டைகரஸத்தைச் சொல்லுகிறது என்றும்- குருநாதர் உபதேசித்தபடி நீயும் நித்திய ப்ரஹ்மானந்த ஸுதாம்புதியாகும் பொருட்டு மஹாவாக்கிய ப்ரகரணத்தை விவரணம் செய்தோம். இந்த மஹாவாக்யார்த்தவிவரணம் என்கிற ப்ரகரணத்தை நித்யானு ஸந்தானம் அப்யாஸம் செய்பவர் ஸந்தேகமுடிச்சுகளையும் பேதித்து அகண்டானந்த ஸ்வரூபமாவார்.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum