ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்” Part -1

Go down

சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்” Part -1 Empty சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்” Part -1

Post by arutsakthi Thu Oct 16, 2014 8:21 pm

ஜயசக்தி !
இது அன்னதான சிவன் பற்றிய செய்திகள் . இவருக்கு  எனது தயார்  பிறந்த ஊரான தேப்பெருமாள் நல்லூர் தான். எங்கள் தாத்தா வுக்கு உறவு என்பார்கள். ஆனால் எனக்கு விவரம் தெரியாது.  அவர்களைப்பற்றி என் நண்பர் சொன்ன ஒரு செய்தி பிறகு பகிர்கிறேன். இப்போது வலை தளத்தில் கிடைத்த தகவல்களை  பகிர்ந்து கொள்கிறேன். மிக்க உபயோகமான தகவல்கள்.
மஹான்ளைப்பற்றி படிப்பதும் தெரிந்து கொள்வதும் சாதனைக்கு அவசியம்.
உங்கள்
அருட்சக்தி

சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”

கோயில் திருவிழாக்களில், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள், கூட்டம் கூட்டமாகப் பங்கேற்கிறார் கள். பத்து நாட்கள் நடைபெறும் உத்ஸவங்களின்போது, உண்ண உணவும் தங்குவதற்கு வசதியான இடமும் ஏற்பாடு செய்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லாத வர்களும்கூட, கவலைப்படாமல் வந்து குவிகிறார்கள்! ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து நீர்மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் என்று விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்ஸவத்தின்போது, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, இப்போது பாதாம் பால், ரோஸ் மில்க் என்று ஏகதடபுடல். ஆங்காங்கே அன்னதானம் வேறு! இதற்கெல்லாம் முன் னோடியாய் இருந்த ஒருவரை இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் (சென்ற சிவராத்திரியின் போது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்ததாக அமர்க்களப் பட்டதே, அதே தேப்பெருமாநல்லூர்தான்!) 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியவர் இராமசுவாமி. இவர் நடத்திய அன்ன தானங்களினாலேயே இவருக்கு `அன்னதான சிவன்‘ என்னும் புகழ்ப் பெயர் உண்டாயிற்று!
காஞ்சி மடம் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாட்களில், மகாஸ்வாமிகளிடம் அன்புடனும், நெருக்கத்துடனும், ஏன்? உரிமையுடனும் பழகிய பெருமகனார், அன்னதான சிவன்! தமது வாழ்க்கையை காஞ்சி மடத்துடன் பிணைத்துக் கொண்டவர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த மிராசுதார் கயத்தூர் சீனிவாச ஐயர்தான் அன்னதான சிவனுக்கு இன்ஸ்பிரேஷன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயில் களில் நடைபெறும் உத்ஸவங்களில் எல்லாம், சீனிவாசய்யர் செய்த அன்னதான வைபவங்களில் அவருக்கு உதவியாக, தம் சிறு வயதில் ஓடியாடி வேலை செய்தார் சிவன். பின்னாளில் தம் சொத்து, சுகம் அனைத்தையும் இதற்காகவே அர்ப்பணித்து விட்டார். பிரபலமான திருவிழாக்களுக்காகக் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு படைப்பதைத் தம் வாழ்க்கையின் `மிஷன்’ என்று ஆக்கிக் கொண்டார் சிவன்.
திருச்செங்காட்டங்குடியின் அமுதுபடித் திருவிழா, அம்பர் மாகாணத்தின் சோமயாக விழா, காரைக்கால் மாம்பழத் திருவிழா, காவிரிப்பட்டணத்து ஆடி அமாவாசை, மாயூரம் துலா (ஐப்பசி) மாத உத்ஸவம், திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவார விழா, நாச்சியார் கோயில் தெப்பம், திருவிடை மருதூர் தைப்பூசம், கும்பகோணத்து மாசி மகம், எட்டுக் குடி பங்குனி உத்திரம் என்று பெருந்திரளான மக்கள் கூடும் உத்ஸவங்களில் எல்லாம் அன்னதான சிவன் தன் தொண்டர் படையோடு களமிறங்கி விடுவார்!
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உணவருந்தும் இடம் என்றாலும், சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் எல்லாம் படுசுத்தமாக இருக்குமாம்! ஏழைகள் தானே அன்னதானத்திற்கு மொய்க்கிறார்கள் என்கிற அலட்சிய பாவத்தில் சுத்தமும், சுகாதாரமும் இரண்டாம்பட்சமாகி விடும் இந்த நாட்களில், பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்திச் சென்ற அந்த நாளில் சிரத்தையோடு செயல்பட்டார் சிவன்!
இலை போட்டுப் பரிமாறும் இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவே துடைப்பம் வண்டி வண்டியாக வந்து இறங்கும் என்றால், உணவுப் பண்டங்களுக்குக் கேட்கவா வேண்டும்? ஆயிரக்கணக்கில் அரிசி, பருப்பு மூட்டைகள், மளிகைச் சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைக்கட்டுகள்; அடுப்பு எரிக்க விறகு நூறு வண்டிகளில், ஊறுகாய்க்கான நெல்லிக்காய் மட்டும் இரண்டு மூன்று வண்டிகளில்! மலைப்பாக இருக்கிறதல்லவா?
அத்தனை பேருக்கு வேண்டிய தயி ருக்கு என்ன செய்தார்களாம் தெரியுமா? அன்னதானம் நடைபெறும் ஊரில் சில வாரங்களுக்கு முன்னதாகவே தயிரை சேகரிக்கத் தொடங்கி, கிடைக்கும் தயிரை எல்லாம் மரப் பீப்பாய்களில் நிரப்பி மூடி, மெழுகினால் அடைத்து சீல் வைத்து, அந்த ஊர்க் குளத்தில் உருட்டி விடுவார்களாம்! அன்னதானம் நடைபெறும் நாளில் பீப்பாய்களைத் திறந்தால் நேற்றுதான் தோய்த்த தயிர் போல், புளிப்பில்லாமல் சுவையாக இருக்குமாம்! ஆமாம்! திருக்குளங்கள்தான் அந்த நாளின் `கோல்ட் ஸ்டோரேஜ்.’
ஒரு ஊரில் அன்னதானம் என்றால், அதற்கு முன் நாள் இரவு வரை அதற்கான சுவடே தெரியாதாம். இரவோடு இரவாகப் பண்டங்கள் வந்து இறங்கி, பங்கீடு ஆகி, அதிகாலையில் அடுப்பு மூட்டி உலையேற்றினால், பசி வேளைக்கு அறுசுவை உணவு தயார். ஆளுயர அண்டாக்களில் சாம்பார், ரசம், பாயசம்! கொதிக்கும் போது உண்டாகும் வாசனையை வைத்தே உப்பு, புளி, காரம், வியஞ்சனங்கள் போதுமா போதாதா என்று தீர்மானம் செய்வார்களாம். முறத்தில் உப்பை வைத்துக் கொண்டு சிப்பந்தி ஒருவன் நிற்க, ருசிக்கேற்ற வாசனை வரும் வரை உப்பைப் போடுவது வழக்கமாம். முறம் கணக்கில் கொத்துமல்லி விதையை அரைத்து ரசத்தில் சேர்ப்பார்களாம்!
மூங்கில் பரண் கட்டி, ஏணி வைத்து ஏறி, மரச்சட்டத்தில் ராட்டினம் கட்டி, சிறு வாளிகளில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போலக் கொதிக்கும் குழம்பு, ரசத்தை மொண்டு பரிமாறுவார்களாம். ஆறிப் போன சாதமாக இல்லாமல், அதே சமயத்தில் இலை போட்டு விட்டு மக்களைக் காக்க வைக்காமல், சுடச்சுட அரிசிச் சாதம் வடித்துப் போடத் தனி டெக்னிக் வைத்திருந்தாராம் அன்னதான சிவன்!
அன்னதானம் முடிந்ததும், “இந்த இடத்திலா அத்தனையும் நடந்தது!” என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வகையில் இடத்தைச் சுத்தம் செய்யும் அள வுக்கு பெர்ஃபெக்ட் எக்ஸிகியூஷன்! இத்தனையிலும் அன்னதான சிவனது ஆகாரம் என்னவோ நாலு கவளம் பழையதுதான்!.

த.கி. நீலகண்டன் (நன்றி – கல்கி வார இதழ்) BY MAHESH on JUNE 20, 2012 • ( 8 )

2. அன்னதான சிவன் …”

தேப்பெருமாநல்லூர் சிவன் என்றால் சட்டென்று யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அன்னதான சிவன் என்றால் எல்லோருக்கும் தெரியும். அன்னதானம் செய்வதில் என்றைக்குமே சளைக்காதவர்.
அவருக்குக் காஞ்சி மஹானிடம் அளவுகடந்த பக்தியுண்டு. அந்த பக்தியின் காரணமாக மஹானுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார். மஹான் பல தினங்கள் உபவாசம் இருந்த காலம் அது.
இதனால் தனது உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை மஹானுக்குத் தெரிவித்து இதில் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
”மஹான் தொடர்ந்து உபவாசம் இருந்தால் அவரது உடல்நிலை கெட்டுவிடும். அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் பக்தர்கள் நீண்ட காலம் அவரது அருளைப் பெற முடியும். ஆதலால் சிறிதளவேனும் அன்ன பிட்க்ஷை ஏற்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் சீதோஷ்ண ஸ்திதிக்கு ஏற்றவாறு வெந்நீரில் குளிக்கவேண்டும். சமுத்திர ஸ்நானம் செய்யப்போகும்போது துணையோடு போகவேண்டும். நதிகளில் ஆழம் பார்த்துத்தான் இறங்கவேண்டும். பூஜையை முடித்தபின் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு வெகுதூரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. தாங்கள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என்கிற காரணத்திற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்” என்று முடித்திருந்தார்.
மஹான் அக்கடிதத்தை ஒருமுறை அல்ல; இருமுறை படிக்கச் சொல்லி புன்முறுவலோடு அதைக்கேட்டார்கள். மடத்தில் உள்ள அனைவருக்கும் சிவன் மீது அளவு கடந்த மரியாதை. மஹான் அவசியம் இதற்கு பதில் எழுதுவார் என்று நினைத்தார்கள்.
ஆனால் அதற்கு பதிலாக மஹான், ஒரு நபர் மூலம் செய்தியாகத் தன் எண்ணத்தைச் சொல்லி அனுப்பினார்.
“கடிதத்தில் எழுதியுள்ளபடி எல்லாம் நடைபெறும்” என்கிற செய்தி சிவனிடம் சொல்லப்பட்ட பிறகுதான் அவர் மனம் சமாதானம் அடைந்தது.
மஹானிடம் இப்படி வேண்டுகோள் விடுக்க, அப்போது சிவன் ஒருவருக்குத்தான் மனோபலம் இருந்தது. இதே வேண்டுகோளை சிவன், மஹானை நேரில் பார்க்க வரும்போதும் கோரிக்கையாக வைப்பார். மஹான் அவர்பால் பரிவு கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்வார்.
சிவனுக்கு முதிர்ந்த நிலை வந்தபோது அவரைக் கவனித்துக் கொள்ள மஹான் மடத்து சிப்பந்திகளை அனுப்பி இருந்தார். தனது கடைசி காலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற சிவன் அங்கேயே இறைவனடி சேர்ந்தார்.
மஹான் அந்த சமயம் காசி யாத்திரை சென்றிருந்தார். திரும்பிய பிறகுதான் சிவனின் மறைவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
”சிவன் ஒரு சன்னியாசி இல்லை என்றாலும் துறவியைப் போல் பற்றற்ற வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தார். பிறருக்கு சேவை செய்ததுடன் ‘பசி’ என்று வந்தவர்களுக்கு அன்னமளிக்காமல் அனுப்பியதில்லை. மிகவும் புண்ணியம் செய்த அவர் நிச்சயம் மோட்சத்திற்குத்தான் போவார்” என்று சொன்ன மஹான், சிவனின் நற்கதிக்காக கும்பகோணத்திலும் திருபுவனத்திலும் உள்ள கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுமாறு கட்டளையிட்டார்.
சிவன் மறைந்த பத்தாவது நாளன்று, கும்பகோணத்தில் உள்ள மடத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்க மஹான் ஏற்பாடு செய்தார். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத சிவன் இறக்கும் தருவாயில் தன்னிடம் இருந்த சொற்பப் பணத்தை முழுவதும் தர்மத்திற்காக செலவிடும்படி கூறியிருந்தார்.
அதனால் இப்பணத்தைக் கொண்டு ஹரிஜனங்களுக்குப் பயன்படும் வகையில் குளம் ஒன்றை செப்பனிட்டு வழங்கும்படி மஹான் உத்தரவிட்டார்.
அன்னதான சிவன் மீது மஹான் கொண்டிருந்த அன்புக்கு அளவு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. மஹானை ஆதரவோடு பார்த்து அன்புக்கட்டளை இட்ட மாமனிதர் தான் இந்த அன்னதான சிவன்.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

3. மஹாபெரியவாளும் அன்னதான சிவனும்
Source-----மஹாபெரியவாள் விருந்து
Author----ஸ்ரீ ரா. கணபதி.
Publishers----திவ்ய வித்யா ட்ரஸ்ட்.

“சாதம்னா அப்படியே வெள்ளைவெளேர்னு ஹிமயமலை மாதிரி குவிச்சிருக்கும். ஸாம்பார் அண்டாவுல யானையே முழுகிப்போனாக்கூடத் தெரியாது. ஹிமாசல சிவன் மதுரை மீனாக்ஷி கல்யாணத்தில குண்டோதரனுக்காக அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்னு சொல்லுவாளே, அதையே இந்த ஏழைப் பிராமண சிவன் பண்ணாரோன்னு ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார்.”

அந்த ‘அவர்’ தேப்பெருமாள்நல்லூர் ராமஸ்வாமியாகப் பிறந்து அன்னதான சிவன் என்று உலகம் போற்றி வணங்கிய உத்தம ஜீவன். அவரைப் பற்றிக் குழந்தைக் குதூஹலத்துடன் கூறிக் களிப்பவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபெரியவாள்.

அன்னமய கோசத்தை அற்ப மாயையாக ஒதுக்கி, ஆனந்த மயமான அத்வைத ஆனந்த மோனத்தில் அநுபூதி கண்ட மஹாபெரியவாள் என்றோ நடந்த அன்னதான வைபவங்களைச் சொல்லி ஆனந்திக்கிறார். அந்த அன்னதானங்களைச் செய்த சிவன் அதுவே தன் ஜன்மப்பணி என்று எவரிடமிருந்து ஆதேசம் பெற்றாரென்றால் அவரது ஜன்ம ஸ்தலமான தேப்பெருமாள்நல்லூர் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஞான மோன மூர்த்தியான தக்ஷிணாமூர்த்தியிடமிருந்துதான்!
சோற்றாலடித்த சுவர், அதைக் குட்டிச்சுவராக பாவித்து நொறுக்க வேண்டு மென்று கூறும் ஞானியரில் பலர், விந்தையாக மக்களுக்கு அன்னம் படைப்பதில் அசாதாரண ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். த்வைதத்திலிருந்து அத்வைதத்திற்குப் பாலமிடும் அன்னையின் அன்பு விளையாடல்தான் பிரம்ம ஞானத்திலிருந்து அன்னதானத்தை விளைவிக்கும் விந்தையை நிகழ்த்துகிறது. பொருத்தமாக அவளுடைய ஸஹஸ்ரநாமத்தில், ‘நிர்த்வைதா’, ‘த்வைத வர்ஜிதா’, ‘ப்ரஹ்ம—ஆத்ம—ஐக்யஸ்வரூபிணி’ என்ற அத்வைதப் பெயர்களுக்கு இடையிலேயே அவளை அன்னபூர்ணேஸ்வரியாகக் காட்டும் ‘அன்னதா’ என்னும் திருநாமம் வருகிறது.

காமகோடி பீடத்தின் அதிஷ்டான தேவதையான காமாக்ஷி அன்னபூர்ணேஸ்வரியின் மலர்ச்சி கண்ட பரிணாமமேயாவாள். காத்யாயன ரிஷிக்கு மகளான காத்யாயனியாகத் தோன்றிக் காசியில் அன்னபூர்ணியாகிப் பஞ்ச காலத்தில் பசியாற்றியவளே காஞ்சிக்கு வந்து காமாக்ஷியானாள். அதனால்தான் அவளுடைய கருவறை வாயிலில் அன்னபூரணி ஸன்னிதி இருக்கிறதென்று ஸ்ரீ மஹாபெரியவாள் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

‘இருநாழி நெல் கொண்டு அவள் இயற்றும் எண் நான்கு அறங்’களில் அன்னதானம் முக்கியமானது. இதே காஞ்சியில் மணிமேகலை அமுதசுரபியிலிருந்து அக்ஷயமாக அன்ன தானம் செய்ததை மஹாபெரியவாள் எடுத்துக் காட்டியிருக்கிறார். ‘காஞ்சி என்பதும் மணிமேகலை என்பதும் ஒன்றே. மணி கட்டிய ஒட்டியாணத்திற்குத்தான் அப்படி இரண்டு பேர்’ என்றும் அற்புதமாகப் பொருத்தம் காட்டியிருக்கிறார்.

காஞ்சி காமாக்ஷியின் அன்னப் பாலிப்பைப் போற்றியும் பரமசிவனைப் பரிஹாஸம் செய்தும் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியதை மஹாபெரியவாள் மிகவும் சுவைத்துக் கூறுவது வழக்கம். காஞ்சியில் உள்ள பல ஆலயங்களில் ஓணகாந்தன்றளி என்பது ஒன்று. ஓணன், காந்தன் என்ற இரண்டு அஸுரர்கள் ஈசனை வழிபட்ட ஆலயம் அது.

அங்கேயிருந்த பிக்ஷாடன மூர்த்தியை சுந்தரமூர்த்திகள் பார்த்தார்.
பார்த்தவுடன் என்ன பாடினாரென்று, மஹாபெரியவாள் வாய்மொழியாகவே கேளுங்கள். “லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா புராதனமான இந்தக் காஞ்சிபுரத்திலே, ‘கச்சி மூதூர்’லேயே இருக்கா. அவ போட்டு சாப்பிட்டா வயிறு ரொம்பறது மட்டுமில்லே,உயிரும் ரொம்பி விடும்.

‘ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி’ ன்னு ஆசார்யாள் (அன்னபூர்ணியிடம்) பிரார்த்திச்சுண்டபடியே, அவ கையால வாங்கி சாப்பிட்டா ‘உய்நெறி’ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும் இப்படி ஒர்த்தி இந்த காஞ்சிபுரத்திலேயே, காமகோட்டத்துல இருகிறப்போ, ஏ பிச்சாண்டி ஸ்வாமி! நீர் ஏங்காணும் இப்பிடி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சை எடுத்துண்டு திரியறீர்?’ன்னு ஸுந்தரர் ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமாகக் கேலி பண்றார்.”


தையலாள்உல குய்யவைத்த காரிரும்பொழிற் கச்சிமூதூர்க்
காமகோட்டமுண் டாகநீர்போய் ஊரிடும்பிச்சை கொள்வதென்னே,
ஒணகாந்தன் றளியுளீரே?

விருந்து தொடரும்………………………..

4. மஹாபெரியவாளும்  அன்னதான சிவனும்           PART 3

எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாதுன்னு அவர் என்ன பண்ணுவாராம்னா, பத்து மூட்டை, இருபது மூட்டை வடிச்சு அதை அப்படியே நீள நீளப் பாய்லே பரத்திக்கொட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கிற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெல்லிசா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடு கிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து இருபது மூட்டை ஈரப்பச்சரிசியை, ஆமாம் பச்சையா இருக்கிற அரிசியாவேதான் பரத்திக் கொட்டிட்டு,அதுக்கு மேலே கெட்டிக் கோணியாப் போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடி வரையில் அதை ஓரளவு இறுக்கமாச் சொருகி மூடிப்பிடுவாராம். காமணியோ அரைமணியோ கழிச்சுக் கோணியை எடுத்தா அத்தனை அரிசியும் புஷ்பமா சாதமாயிருக்குமாம். அதாவது சாதம் வடிக்கிற கார்யத்தில் பதி மிஞ்சும்படி இப்படி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார்.

“இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய மோர் விடனும்னா அத்தனை பாலுக்கு எங்கே போகிறது? இந்த மாதிரி பெரிய உத்ஸவ சமாராதனைகளில் சிவன் அதுக்கும் ஒரு யுக்தி கையாண்டிண்டிருந்தார். ரிஃப்ரிஜிரேடர், அது இதெல்லாம் இல்லாத நாளில் அவர் ஒரு புது மாதிரி ரிஃப்ரிஜிரேடர் கண்டுபிடிச்சிருந்தார்! ஸமாராதனைக்குப் பல வாரம், மாஸம் முந்தியே தயிர் சேகரம் பண்ண ஆரம்பிச்சிடுவார். சேர சேரப் பெரிய மரப் பீப்பாய்கள்ல அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும் வாயை மெழுகால அடைச்சு, அப்படியே, ஆழமான கொளங்களுக்கு அடியில் தள்ளிப்பிடுவார். அப்பறம் எப்ப தேவைப்படறதோ அப்ப தொறந்தா மொத நா ராத்ரிதான் தோச்ச மாதிரி தயிர் சுத்தமா இருக்கும். கொளத்தோட குளிர்ச்சி மாத்திரந்தான் காரணம்னு சொல்லறதிக்கில்லே, அவரோட மனஸு விசெஷமும் சேந்துதான் அப்படி இருந்திருக்கணும்.”

1921, 1933 ஆகிய இரு மஹாமகங்களில் குறிப்பிட வேண்டிய ஒரு விசேஷமுண்டு. 1919ல் ஸ்ரீ மஹாபெரியவாள் கங்கா யாத்திரை செய்வதாக சாஸ்திரோக்த ரீதியில் சங்கல்பம் செய்துகொண்டு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டார். பின்னர் கிராமம் கிராமமாக அவர் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கங்கை போய் திரும்புவதற்கு இருபத்தோராண்டுகள் பிடித்தது. இக்காலகட்டத்திற்குள்ளேயே அவ்விரு மாமாங்கங்களும் வந்தன. ஸ்ரீராமன் பதினான்கு ஆண்டுகளுக்கு வனவாச சங்கல்பம் மேற்கொண்டதால், தான் அது முடியுமுன் நகரங்களான கிஷ்கிந்தாபுரிக்குள்ளும், லங்காபுரிக்குள்ளும் பிரவேசிக்க மறுத்து லக்ஷ்மணனைக் கொண்டே அவ்விரு இடங்களில் சுக்ரீவனுக்கும், விபீஷணனுக்கும் முடிசூட்டு நடத்தினார். அறக்கட்டுப்பாடுகளை அதே செவ்வியுடன் அநுஸரிக்கும் நம் ஆசாரியப் பெருமானும் இவ்விரு மாமாங்கங்களின் போது கும்பகோணம் மடத்தில் முகாமிடாமல் முறையே ஊருக்கு வெளியேயுள்ள பட்டீசுவரத்திலும், திருவிடைமருதூரிலுமே தங்கினார். அவ்விடங்களிலிருந்து நேரே மஹாமகக்குளம், ஆலயங்கள் முதலியவற்றுக்குச் சென்று திரும்பினார். சரியாக 1933ல் ஸ்ரீமடத்தின் ஜீரணோத்தாரணத் திருப்பணியும் பூர்த்தி அடைந்திருந்தது. முழுக்கவும் கருங்கற் திருப்பணியாகவே அதைச் செய்து முடித்திருந்ததும் அன்னதான சிவனேதான். ஆயினும்கூட, அவருடைய திருப்திக்காக ஸ்ரீ மஹாபெரியவாள் வீதியிலிருந்தவாறே மடத்தின் வெளிப்புறத்தை மட்டும் பார்வையிட்டாரேயன்றி உள்ளே பிரவேசிக்கவில்லை.

ஆயினும் முதல் நாளிரவு அவருடைய அருட்சக்தி புரட்டிக்கொண்டு பெருகி ஓர் அற்புதம் நடந்ததால்தான் மறுநாள் லக்ஷம் மக்களின் உதரத்தில் அன்னலக்ஷ்மி பிரவேசிக்க முடிந்தது.

அப்படி என்ன நடந்தது?

சிவனின் அன்னதானங்களில் ஒரு விசேஷம், முதல் நாள் மாலை வரையில் ‘இங்குதான் பல்லாயிர மக்களுக்கு விருந்து தயாரிக்கப்படப்போகிறது’ என்பதற்கு எந்த அறிகுறியும் இராது. இரவிலிருந்துதான் சாமான்கள் வரத்தொடங்கும். அந்த 1933 மாமாங்கத்தில் என்னவாயிற்று என்றால் இரவு நள்ளிரவாகி மேலும் ஒன்றரை மணி கடந்த பின்பும் கூட ஒரு சாமான் வண்டி கூட வந்து சேரவில்லை. நிலைகுலையாத சிவனும் கலங்கிவிட்டார். ‘சாமான்களை இறக்கிப் பாகுபடுத்தவே சில பல மணிகளாகுமே! அப்புறம் எப்போது சமைத்து எப்போது பரிமாறுவது?’

மஹாபெரியவாள் முகாமுக்கு விண்ணப்பம் பறந்தது.

அடுத்தே ஒவொவொரு வண்டியாகச் சமையற்களத்திற்கு வரவும் தொடங்கின.

அதுவரை ஏன் வரவில்லையென்றால், போக்குவரத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து சிவன் ஸமாராதனைக்கு வரும் வண்டிகளுக்கு மாத்திரம் விலக்குத் தருவது வழக்கம் என்பது அவ்வாண்டு பணி புரிய வந்த போலீஸ் படையினருக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே அவ்வண்டிகளையும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தி விட்டார்கள். மஹாபெரியவாளின் திருச்செவியில் விஷயம் விழுந்த அந்தப் பின்னிரவு ஒன்றரை மணிக்கு ஸர்க்கிள் இன்ஸ்பெக்டருக்குத் திடுமென்று பொறி தட்டிற்று—சிவன் ஸமாராதனை வண்டிகளுக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்களிப்பது வழக்கமாச்சே என்று! அப்புறம் என்ன? ஊருக்கு வெளியே ‘நிப்பாட்டப்’பட்டிருந்த நூற்றுக்கணக்கான வண்டிகள் சாரி சாரியாக உள்ளே வந்தன. அசுர வேகத்தில், இல்லை, அனுக்ரஹ வேகத்தில் சாமான் இறக்கப்பட்டு, பங்கீடு ஆகி, காலை ஐந்து மணிக்கே கோட்டையடுப்புக்களை மூட்டிக் காலம் தப்பாமல் லக்ஷம் ஜனங்களுக்கு அறுசுவை அன்னம் படைக்க முடிந்தது.

மாமாங்க சமாராதனைகள் தவிரவும் ஸ்ரீ மஹாபெரியவாளின் ‘சிவ ஸங்கல்பம்’ அன்னதான சிவனின் கைங்கர்யமாக அமோக உருக்கொண்ட இரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட வேண்டும். ஒன்று 1923ல் மஹாபெரியவாள் ஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்குச் செய்த தாடங்கப் பிரதிஷ்டை வைபவம், மற்றது 1916 நவராத்ரியில் கும்பகோணம் ஸ்ரீமடத்தில் நடத்திய லக்ஷ பிராமண போஜனம். நடமாடும் சிவனும், அன்னம் போடும் சிவனும் ஒன்று சேர்ந்த விமரிசையில் லக்ஷம் என்பது இரண்டு லக்ஷமாகவே விஸ்வரூபம் கொண்டது என்று தோராயக் கணக்கு சொல்வார்கள்.

இரண்டு சிவன்களுமே இந்த மஹத்தான சமாராதனைகளில் ஒரு பருக்கைகூட ருசி பார்த்ததில்லை! அந்த அற்புதத் தியாகமும் அவர்களுடைய அதிசயப் பிரேமையுடன் சேர்ந்த விசேஷத்தால்தான் அச் சமாராதனைகள் அவ்வளவு மஹத்தாக நடக்க முடிந்தது. சந்த்ரமௌளீஸ்வரருக்கு நிவேதித்த அவற்பொறி போன்ற வெகு எளிய உணவு வகை சிலவே மஹாபெரியவாள் உட்கொள்வார். அதுவும் அடிக்கடி நிகழும் உபவாஸ நாட்களிலொன்றாக அந் நாள் இல்லாமலிருந்தால்தான்! அன்னதான சிவனோ, எவரேனும் ஒரு அன்பரின் வீட்டுக்குச் சென்று நாலு கவளம் மோருஞ்சோற்றை உண்பார். அன்னதானம் செய்யாத தினங்களிலும் பழைய சொற்றைத்தான் தன்னுடைய இஷ்டாவான தக்ஷிணாமூர்த்திக்கு மானஸீகமாக் நிவேதித்து விட்டு உண்பார்!

விருந்து தொடரும்…..

arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum