Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 BotNone
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
சிதானந்த அலை - உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
Page 1 of 1

சிதானந்த அலை – உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
ஆக்கியது – ஸ்ரீ அருட்சக்தி நாகராஜன்
நமது ஸ்ரீ சக்ர பூஜையில் ஒவ்வொரு அங்கமும் சரீரத்தை உடங்கொண்டே செல்வதை சிதானந்த அலை யில் அன்பர்கள் படித்திருப்பார்கள். தொடர்ந்து சில தத்வங்கள் காணலாம். ஸ்ரீலலிதாதிருபுரசுந்தரியும் நமதுசரீரரும் இந்தபிரபஞ்சமும் ஒன்றோடொன்று சமன்வய படுவதை முன்பே சிதானந்த அலையில் வேறு விதங்களில் கண்டிருக்கிறோம். இங்கும் சில இடங்களில் மறுபடியும் நான் எழுதி இருப்பேன். அது தவறல்ல. ஏனெனில் நல்ல தத்வங்களை எத்தனை முறை வேணுமானாலும் எழுதலாம். படிக்கலாம். உள்வாங்குவது ஒன்றே முக்யம். அதனால் Repetition ஆனாலும் பரவாயில்லை என்று எழுதினேன்.. படியுங்கள். மேலும் தெரிந்தவர்களுக்கு இது இல்லை. தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இது உதவும்.
'அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே!" ...என்பது சட்டைமுனிவர் கூற்று.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் ……திருமூலர் திருமந்த்ரம்
நாம் வெளியே காணும் பிரபஞ்சமும் நம் உடலும் ஒன்றையே சுட்டுகின்றன.
இரத்தம், தோல், தசை, நரம்புகள் முதலியவற்றாலான இவ்வுடலே பிண்டம் எனப்படுகிறது. இதில் தோல், இரத்தம், தசை நார்கள்,எலும்பு, மூளை என ஐந்தும் சக்திமூலங்கள் என்றும், ஜீவன், பிராணன், சுக்கிலதாது, தேஜஸ் ஆகிய நான்கும் சிவமூலங்கள் என்றும் அறியப்படுகின்றன. சிவ, சக்தி மூலங்கள் சேர்ந்த தேகமே பிண்டம்.
அண்டம் எனப்படுவது, பஞ்சபூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), ஈஸ்வர தத்துவம், சதாசிவ தத்துவம், சுத்த வித்யை, மாயை ஆகிய ஒன்பதின் தொகுப்பாகும். இதில் பஞ்சபூதங்கள் சக்திமூலங்கள். மற்ற நான்கும் சிவமூலங்கள் என்பர்
ஆக, சிவ, சக்தி கோணங்கள் (மூலங்கள்) சேர்ந்த ஸ்ரீ சக்ரம், இந்த அண்டத்தையும், நம் உடலையும் ஒரு சேரக் குறிக்கின்றது .
அண்ட பேரண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் சக்தியே, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக அருளாட்சி புரியும் ஸ்ரீலலிதாதிரிபுரசுந்தரி. நம் உடலிலும் உலகிலும் வியாபித்திருக்கும் மஹாசக்தி அவளே.
ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு படைப்பிலும் அன்னையவள் அருட்காட்சியை காணும் பேறு பெற்றோரே மகான்கள். அம்பிகையின் திருவடிகளின் பால் திடமான பக்தி இருப்பின், நம் வினை எத்தகையதாக இருந்தாலும் அது அவளது அருட்புனலால் அடித்துச் செல்லப்பட்டு நிலையான ஆனந்தப் பெருவாழ்வினை நமக்கு வழங்கும். இந்த மாபெரும் பிரபஞ்சத் தத்துவமே ஸ்ரீசக்ரம். நம் உடலும் ஸ்ரீ சக்ரமும் ஒன்றே.
1. ஸ்ரீ சக்ரத்தின் மையப்புள்ளியே பிந்து ஸ்தானம். 9 ஆவது ஆவரணம். இதில் அண்டமெல்லாம் படைத்து ஆட்கொண்டு அருள்செய்யும் அன்னை பராசக்தி ஆனந்த வாஸம் புரிகிறாள். ஒன்றாய் அரும்பி பலவாய் விரியும் ஆதியும் அந்தமும் இல்லா அம்பிகை, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக அருளாட்சி செய்யும் இடமே பிந்து ஸ்தானம். இந்த பிந்து ஸ்தானம் சிவமூலமாக அறியப்படுகிறது. நம் உடலில், இந்த பிந்து ஸ்தானமே பிரமரந்திரம் எனப்படும் தலைஉச்சி. நம் உடலில் அமைந்துள்ள ஆறாதாரச் சக்கரங்களின்படி பார்க்கும் பொழுது, ஆஜ்ஞை, ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானமாகவும் சொல்வார்கள்.
2.ஸ்ரீ சக்ரத்தின் 8ஆவது ஆவரணமாகிய த்ரிகோணம் (முக்கோணம்) 'ஸர்வ ஸித்தி ப்ரத சக்கரம்' என்ற பெயருடன் விளங்குகிறது. இது ஸ்ரீ சக்ரத்தின் 43வது முக்கோணம். இதில் 'அதிரஹஸ்யயோகினிகள்' எனத் துதிக்கப்படும் மஹாகாமேச்வரி, மஹா வஜ்ரேஸ்வரி, மஹாபகமாலினி என்ற பெயருடன் கூடிய தேவிகள் வீற்றிருக்கிறார்கள். இவர்களின் நாயகியாக, 'திரிபுராம்பா' என்ற திருநாமத்துடன் கூடிய தேவி ரத்தின சிம்மாசனத்தில் அருளுகிறாள். 'அதி ரஹஸ்ய யோகினிகள்' மூவரும் முறையே, இச்சாசக்தி, ஞானசக்தி கிரியாசக்தி, ஸ்வரூபிணியாக விளங்குகிறார்கள். ஸாதகனின் நியாயமல்லாத இச்சைகளை, (விருப்பங்களை) நீக்கி, ஞான ஆற்றலை மேம்படுத்தி, அம்பிகையின் அருளாற்றலைப் பெற தகுதிப்படுத்தும் சக்திகள் இவர்கள். நம் உடலில் தலையும் த்ரிகோணமாக உருவகிக்கப்படுகிறது. யோக நெறியில் பார்க்கும் போது 'இந்திர யோனி' (உள்நாக்கு) த்ரிகோணம் என்று கருதப்படுகிறது..
3.ஸ்ரீ சக்ரத்தின் 7 ஆவது ஆவரணமான, எட்டுக்கோணங்களை உடைய ஸர்வ ரோக ஹரசக்கரத்தில் வாக்தேவதைகள், ரஹஸ்யயோகினிகளாகஇருக்கிறார்கள். இவர்களின் தலைவியாக, திரிபுரஸித்தாதேவி மஹாபீடத்தில் அருளுகிறாள். இந்த ரஹஸ்ய யோகினிகள், ஜனனம் மரணம், பந்தபாசங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். ஆன்மாவின் ஞானமற்ற தன்மையே 'ரோகம்' மற்றும் தொடர்ந்து வரும் பிறவியும் ரோகம் எனக் குறிக்கப்படுகிறது. இந்த ரோகத்தை பவநோயை நீக்கியருளுவதால் இது 'ஸர்வரோகஹரசக்கரம்' எனப் பெயர் பெற்றது.
ரஹஸ்யயோகினிகளிடமிருந்தே, காவியம், இசை, நாடகம் முதலியவை தோன்றுவ தால் இவர்கள் 'வாக்தேவதைகள்' என அழைக்கப்படுகிறார்கள். 'அ' முதல் 'க்ஷ' வரையிலான அக்ஷரங்களின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள் இவர்களே. ஆகவே இவர்கள், 'மாத்ருகாஸ்வரூபிணிகள்' எனவும் துதிக்கபடுகிறார்கள். நம் உடலில், 'நெற்றி' அஷ்ட கோணத்தைக் குறிக்கிறது. இதுவும் சக்தி மூலமே. யோக நெறியில், ஆதாரச்சக்கரங்களின் வழி பார்க்கும் போது, விசுத்தி, ஸ்ரீசக்ரத்தின் அஷ்டகோணத்தைக் குறிப்பதாக அமைகிறது.
4. ஸ்ரீ சக்ரத்தில், 6 ஆவது ஆவரணமாக அமைந்துள்ளது. 'அந்தர்த்தசாரம்' என்ற உள்பத்து கோணம் 'ஸர்வரக்ஷாகரசக்கரம் என்ற பெயர். இங்கு 'நிகர்ப்ப யோகினிகளும்' அவர்களின் நாயகியாக, 'திரிபுராமாலினியும்' வீற்றிருந்து அருளுகிறார்கள். நம் உடலில், இரு புருவங்களின் மத்தியில் உள்ள பகுதி, உள்பத்து கோணத்தைக் குறிக்கும். ஆதாரச் சக்கரங்களில்,அநாஹதம் ஸ்ரீசக்ரத்தின் உள்பத்து கோணத்தைக் குறிக்கும்.
5. ஸ்ரீசக்ரத்தில், 5ஆவது ஆவரணமான, வெளிப்பத்து முக்கோணங்கள் 'பஹிர்த்தசாரம்' என அழைக்கப்படுகின்றன. இதில் வாசம் செய்யும் 'குலோத்தீர்ண யோகினிகளுக்கு' 'திரிபுராஸ்ரீ'' என்ற பெயருடன் தேவி தலைவியாக இருக்கிறாள். இந்த அம்பிகை, தங்கமயமான சிம்மவாகனத்தில் வீற்றிருந்து அருளுகிறாள். இந்த சக்கரம், ஸத்குருவை அடையும் மார்க்கத்தைக் காட்டுவதாகவும், குரு சிஷ்யப் பரம்பரையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. சத்குரு ஒருவரே, பரப்பிரம்ம ஸ்வரூபியாகிய தேவியை அடையும் மார்க்கத்தைக் காட்ட வல்லவர். ஆகவே, குருவை அடைதல், ஞான மார்க்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குலோத்தீர்ணயோகினிகளை, குலம், உத்தீர்ணம், யோகினிகள் என்று பதம் பிரிக்கலாம். இதில் குலம் என்பது, ஞான மார்க்கத்திற்குத் தேவையான குரு சிஷ்யப் பரம்பரையே. உத்தீர்ணம் என்பது நல்ல முறையில் விருத்தி செய்வது. யோகினிகளை தேவிகள் எனபடும்.. குரு சிஷ்யப் பரம்பரையின் விருத்திக்கு அருளுவதால் இந்த தேவிகளுக்கு இத்தகைய திருநாமம் ஏற்பட்டது. சிஷ்யனுக்கு எப்படி குரு முக்கியமோ அப்படியே, குருவுக்கும் நல்ல சிஷ்யர்கள் அவசியம். இந்த ஐந்தாவது ஆவரண பூஜை, அப்படிப்பட்ட ஸத்சிஷ்யர்களை குருவிடம் சேர்ப்பிப்பதோடு, குரு சிஷ்ய இணக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. மனித உடலில், கழுத்துப்பகுதி, வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாக உள்ளது. யோக நெறியில், மணிபூரகச் சக்கரம், ஸ்ரீசக்ரத்தின் வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிக்கிறது.
6.ஸ்ரீசக்ரத்தில் 4ஆவது ஆவரணமாகிய சதுர்தச கோணம் (14முக்கோணங்கள்), சக்தி சக்கரமாகும். இந்த 14 முக்கோணங்களும் பூபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே சாதகன், ஜீவ ப்ரஹ்ம ஐக்கியத்தை உணரும் ஆரம்ப நிலை. சதுர்தச கோணம், ஈரேழு பதினான்கு உலகங்களையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது. மாயையை அகற்றி ஆத்ம ஞானத்தை அருளுவதால் 'ஸர்வசௌபாக்கியதாயகசக்கரம்' என்றும் அறியப்படும் இதில், 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்னும் பதினான்கு சக்திகள் வசிக்கிறார்கள். இவர்களின் நாயகி, 'த்ரிபுரவாஸிநீ' தேவி. தக்ஷிணாமூர்த்தி என்ற திருநாமமுடைய பரமேஸ்வரனே ஆதிகுருவாக அறியப்படுகிறார். அவர் தாமாகவோ அல்லது குருவடிவாகவோ தோன்றி, ஜீவன் ப்ரஹ்மம் இரண்டும் ஒன்றே என்ற பேதம் இல்லாத நிலையை அருளுவதே 'ஸம்ப்ரதாயம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்த சக்கரத்தில் வசிக்கும் சக்திகளுக்கு 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்ற திருநாமம் ஏற்பட்டது. நம் உடலில் இதயப் பகுதி, சதுர்தச கோணத்தைக் குறிக்கிறது. யோக நெறியில் சுவாதிஷ்டானச் சக்கரம், ஸ்ரீ சக்ரத்தின் சதுர்தச கோணத்தைக் குறிக்கிறது.
7. ஸ்ரீசக்ரத்தின் 3 ஆவது ஆவரணமாகிய எட்டிதழ் கமலம், அஷ்டதளபத்மம் எனப்படுகிறது. இது சிவமூலமாக அறியப்படுகிறது. 'ஸர்வஸம்க்ஷோபணசக்ரம்' என்றும் அறியப்படும் இதில், 'குப்ததரயோகினி' களான 8 சக்திகள் வாஸம் செய்கின்றனர். இவர்களின் நாயகி, 'த்ரிபுரஸூந்தரி' என்ற தேவி. இந்த யோகினிகள் மிகவும் கண்டிப்பானவர்கள். இந்த தேவதைகளின் கட்டுப்பாட்டிலேயே, ப்ரகிருதி, மஹத்தத்வம், அகங்காரம், பஞ்சதன்மாத்திரைகள், பஞ்சபூதங்கள், கர்ம, ஞானேந்திரியங்கள், அந்தகரணம், புருஷன் ஆகிய யாவும் இருக்கின்றன. நம் உடலில், தொப்புள், ஸ்ரீசக்ரத்தின் எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது. ஆதாரச் சக்கரங்களில் மூலாதாரம், ஸ்ரீசக்ரத்தின் எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது.
8.ஸ்ரீசக்ரத்தின், 2 ஆவது ஆவரணமாகிய பதினாறிதழ் கமலம், ஸர்வாசாபரிபூரகச் சக்கரம் என்ற பெயருடன் விளங்குகிறது. இதில், 'குப்த யோகினிகள்' என்ற பெயருடன் உள்ள பதினாறு சக்திகள் வசிக்கிறார்கள். ஸாதகன், இந்த ஜென்மத்தில் அனுபவித்தது போக மீதியுள்ள கர்மா நல்ல முறையிலான கர்மாவாக அமைய, இவர்கள் அருள்பாலிக்கிறார்கள். இவர்களின் நாயகி, 'திரிபுரேசி' தேவி. இது சிவ சக்கரமாகும். நம் உடலில், இடுப்பு மற்றும் தொடைகள், ஷோடசதள பத்மமாக கூறுவர், யோக நெறியில், மூலாதாரத்திற்கும், பின் தொடைக்கும் இடைப்பட்ட பகுதி, ஷோடச தள பத்மமாகும்.
9. ஸ்ரீசக்ரத்தின் 1 ஆவது ஆவரணமாகிய மூன்று சதுரங்கள் கொண்ட பூபுரம், 'த்ரைலோக்கியமோகனச்சக்கரம்' என்ற பெயருடன் விளங்குகிறது. இதில் வாசம் செய்யும், அஷ்டமா சித்திகள், ப்ராஹ்மீ, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ ஆகிய அஷ்ட மாத்ருகாதேவிகள், ப்ரகடயோகினிகள் முதலானோருக்கு 'த்ரிபுரா' என்ற திருநாமமுடைய தேவியே சக்ரேஸ்வரியாக விளங்குகிறாள். இது சிவ சக்கரமாகும். நம் உடலில், பாதங்கள், ஸ்ரீ சக்ரத்தின் பூபுரமாக கூறுவர். யோக நெறியில், மூலாதாரத்தின் கீழ் உள்ள பகுதி, பூபுரமாக சொல்வர்.
மேலும் தொடரும்............

Similar topics
» சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.
» ஆலயம் பற்றியது - கண்ணீர் வரவழைத்த செய்தி - முகநூல் பதிவு
» ஆலயம் பற்றியது - கண்ணீர் வரவழைத்த செய்தி - முகநூல் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum