ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


ஸ்ரீஅம்பாள் வழிபாடு - தொடர் கட்டுரை-1

Go down

ஸ்ரீஅம்பாள் வழிபாடு - தொடர் கட்டுரை-1 Empty ஸ்ரீஅம்பாள் வழிபாடு - தொடர் கட்டுரை-1

Post by arutsakthi Sat Oct 10, 2015 3:38 pm

ஸ்ரீஅம்பாள் வழிபாடு - தொடர் கட்டுரை-1

அம்பாள் வழிபாடே சாக்தம் என்பர். ஒவ்வொரு பெண் வடிவமும் உயிருள்ள பெண் தெய்வம். இந்தியாவில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவ கன்னி தெய்வமாகவும்,ஸ்வாஸினி வடிவ தெய்வமாகவும் வணங்கி வழிபடுகின்றனர்.
ஆதிசங்கரருக்கு முன்னால் காளி வழிபாடு வெகுவாக நரர்களை, மிருகங்களை பலியிடுதல் என இருந்துவந்தது. காளி மிகவும் உக்ரமானவள் என நம்பப்பட்டது. ஆதி சங்கரர் தேவியினை அன்புள்ளவளாக விளக்கி ஸ்ரீசக்கரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் முறையினை வகுத்துக் கொடுத்தார். இந்த முறைதான் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. காஞ்சியில் இம்முறையில் ஸ்ரீ காமாக்ஷி சந்நிதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். தாய் உலகம் அனைத்திற்கும் அன்னை என்பதில் மாற்று கருத்துக்கு சிறிதேனும் இடமில்லை. தேவி பாகவதம் தேவிதான் முழுமையான பராசக்தி என்கிறது. தேவி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் படைத்தார். தன்னுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் சரஸ்வதி, லஷ்மி, பார்வதி ஆகிய மூவரையும் படைத்தார். இந்த மூவரையும் மூன்று கடவுளர்கட்கும் அவரவர் படைப்பு முதலான தொழிலினை செம்மையாய் செய்ய அனுசரணையாக இருப்பதற்கென திருமணம் செய்து வைத்தார். படைப்புத் தொழில் செய்பவரான பிரம்மாவிற்கு சரஸ்வதியையும் காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு லக்ஷ்மியையும் அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு பார்வதியையும் மணம் முடித்து வைத்தார். சிவன் பார்வதியுடன் சேர்ந்து இல்லை எனில் தன்னுடைய தொழிலை சரிவர செய்யமுடியாது என்றும் அவள் இல்லையெனில் சவத்தினை ஒத்தவர் எனவும் ஸௌந்தர்யலஹரி கூறுகிறது. சக்தி மூன்று கடவுளர்கட்கும். தேவையானது இது அவர்கள் மூவருக்கும் பொருந்தும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என நாம் உலக வழக்கில் சொல்லுகிரோமே
தேவிக்கு என எல்லாகோயில்களிலும் தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சக்தியினை அவரின் பலவித புகழ் வடிவிலே ஏதாவது ஒரு வடிவில் காண்கிறோம். தற்காலத்தில் தாயின் வழிபாட்டிற்கு சிறந்த முக்கியத்துவம் இருக்கிறது. இன்றைய உலக கஷ்டமான நிலையில் தேவியின் வழிபாடுதான் சுகத்தையும் அமைதியையும் கொடுக்க வல்லது.
நாளையும் தொடரும்..........
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

ஸ்ரீஅம்பாள் வழிபாடு - தொடர் கட்டுரை-1 Empty Re: ஸ்ரீஅம்பாள் வழிபாடு - தொடர் கட்டுரை-1

Post by arutsakthi Sun Oct 11, 2015 1:23 pm

ஸ்ரீதேவியின் மகிமைகள் - ஸ்ரீ தேவிபாகவதம்

ஜனமேஜய மன்னன் அரண்மனை வாசலை நோக்கி வேகமாக நடந்து “வருக, வருக வியாசமஹா முனிவரே வருக. தங்கள் வருகையினால் எங்கள் அரண்மனை புனிதமுற்றது” என்று கூறி வியாசரை வரவேற்றான். விருந்துணவிற்குப் பிறகு வியாசர் தேவியின் பல்வேறு லீலைகளைப் பற்றிக் கூறத்தொடங்கினார். “மகா முனிவரே, ஒரு சந்தேகம், கேட்கலாமா?” என்றான் ஜனமேஜயன். வியாசர் தலையசைக்க “வியாச முனிவரே! இந்திரன் மற்றும் இந்திராணியை தேவிதானே காப்பாற்றுகிறாள்? ஆனால் ஏன் இந்திரனுக்கு அடிக்கடி துன்பம் ஏற்படுகிறது? இதனால் எனக்கு பக்தி, இறையாண்மையின் மீது சந்தேகம் தோன்றுகிறது” என்றான் ஜனமேஜயன்.
சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த வியாசர் பேசத்தொடங்கினார். “கர்மங்கள் என்பது 'சஞ்சிதம்', 'பிராரப்தம்', 'வர்த்தமானம்' என்று மூன்று பிரிவுகளை உடையது. பிறவிகளில் தொடர்ந்து வரும் பாப-புண்ணியம் சஞ்சிதகர்மா எனப்படும். தற்பொழுது எடுத்திருக்கும் பிறவியில் ஒருவர் செய்யும் பாப-புண்ணிய கர்மங்கள் வர்த்தமானம் என்று அழைக்கப்படுகிறது. பிராரப்த கர்மா என்பது அடுத்து எடுக்க உள்ள பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்மாவாகும். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் யாராலும் இதிலிருந்து தப்ப இயலாது. பிறவி மற்றும் உடல் என்பதற்கு கர்மாதான் காரணம்” என்றார்.
“வியாசரே! நான் மனிதப் பிறவி எடுத்துள்ளேன். என் கர்ம வினைகளால் பாப-புண்ணியத்தைச் செய்கிறேன். மற்றும் அதன் பயனை அனுபவிக்கிறேன். ஆனால் தேவர்கள், அசுரர்கள் கூட என் போன்றே அனுபவிப்பார்கள் என்பதை என்னால் நம்ப இயலவில்லை” என்றான் ஜனமேஜயன்.
“அரசனே, தருமனுக்குப் பிறந்த நர, நாராயணன் என்பவர்கள் தான் கிருஷ்ண, அர்ஜுனனாகப் பிறந்தனர் என்பதை நீ அறிவாய். அவர்களுக்கும் பிறப்பு, இறப்பு என்பது உண்டு என்பதை நீ அறிய வேண்டும். கிருஷ்ணர் சிறையில் பிறந்து, தாய் தந்தை விட்டுப் பிரிந்து நந்தகோபரிடம் வளரும் சூழ்நிலை. பதினோராண்டுகளுக்குப் பிறகு மதுராவிற்கு வந்து கம்சனைக் கொன்றார். உக்கிரசேனனை அரசனாக்கி, துவாரகைக்கு வந்து, பல பெரும் கர்மவினைகளைத் தன் கர்ம வசத்தால் செய்தார். பிறகு பிரபாசம் என்னும் இடத்தில் தன் உயிரை நீத்தார். கர்ம வினைகளால் கிருஷ்ணரின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும், ப்ராஹ்மண சாபம் பெற்று, அதன் காரணத்தால் ஏற்பட்ட கர்ம வினையால் பிரபாசத்தில் நாசமடைந்தனர். அதேசமயம் தேவாம்சம் பொருந்திய பாண்டவர்கள் காட்டில் பிறந்தனர். பிறகு நகரத்திற்குச் சென்று தங்களுடைய வீரத்தால் பல வெற்றிகளைப் பெற்று ராஜசூய யாகம் செய்தனர். பிறகு பல்வேறு துன்பங்கள், கொடுமைகள் அவர்களைச் சூழ்ந்தன, நாடிழந்து, வீடிழந்து, காடுகளிலும், மலைகளிலும் திரிந்தனர். வனவாசத்திலும் அர்ஜுனன் பல பெருந்தவங்களை செய்தான். ஆனால் புத்திர சோகக் கொடுமையை அனுபவித்தவன் அர்ஜுனன். பூர்வஜன்மத்தில் நரனாகப் பிறந்தவன், மறு ஜன்மத்தில் அர்ஜுனனாக பிறவி எடுத்தான். அச்சமயம் அவன் செய்த தவங்களையும் மீறி அவனை கர்ம வினைகள் ஏன் சூழ்ந்தன? செய்த தவங்கள் ஏன் அவன் மகன் அபிமன்யுவைக் காப்பாற்றவில்லை? இதற்கான விடைதான் 'கர்மா' என்பதாகும். ஜீவன்கள் பிறப்பு-இறப்பு-மீண்டும்-பிறப்பு எனும் சூழலில் சிக்கும் பொழுது அதில் கர்மத்தின் கதி மறைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வதில்லை. தேவாம்சம் நிறைந்தவன் இவ்வுலகில் பிறக்கும்போது தேவாம்சமுடையவனாகப் பிறந்து, அதிக சம்பத்து, அன்னதானம் முதலிய கர்மாக்களைச் செய்கின்றனர். ரிஷியம்சம் கொண்டவர்கள் பூமியில் காவியங்கள் இயற்றுகின்றனர். ருத்ர அம்சம் கொண்டவர்கள் சிவனை பூஜிப்பவர்களாகப் பிறக்கின்றனர். இது போன்றே இந்திர அம்சம், அக்னியம்சம், யமஅம்சம், குபேர அம்சம் உடையவர்கள் தலைமைப்பண்பு, புகழ், வல்லமை படைத்தவர்களாகப் பிறப்பார்கள். ஆதலால் அரசே! படைக்கப்படும் உயிர்களுக்குத் தன் நினைவு இருப்பதில்லை. ஆனால் தேவியை சதா துதித்து இறையம்சம் பெற்றவர்கள் ஜனை-மரணம், சுக-துக்கங்களை அனுபவித்து மீண்டுவருகிறார்கள்” என்று வியாச முனிவர் ஜனமேஜயனுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் கர்ம பாதையைப் பற்றிக் கூறியுள்ளார்.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum