Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
ஞானாம்பிகை - ஸ்ரீ மஹா பெரியவா
ஞானாம்பிகை - ஸ்ரீ மஹா பெரியவா
ஞானாம்பிகை
ஸ்ரீ வித்யா எனறு தேவி உபாஸனையைச் சொல்கிறோம். வித்யா என்றாலே ஞானம்தான். அவித்யை என்றால் அஞ்ஞானம், ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்திராதி தேவர்களுக்கும் ஞானம் தந்தவள் அவளே என்று ஸாம வேதத்தைத் சேர்ந்த கேன உபநிஷதம் ஒரு கதை சொல்கிறது.
கதை இதுதான்.
ஒரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் ஐயம் பெற்றார்கள். பரமாத்மா தந்த சக்தியைக் கொண்டே யுத்தம் செய்தோம். அவரது அநுக்கிரகத்தாலேயே வெற்றி பெற்றோம் என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாமே மெச்சிக் கொண்டார்கள்.
தங்கள் சக்தியால் தாங்களே வெற்றியைச் சாதித்துவிட்டதாகச் கர்வப்பட்டார்கள். இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்த தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதோ என்று பார்த்தார் பரமாத்மா.
அவர்கள் அப்படிக் கெட்டுப் போகாமல் ரக்ஷிப்பதற்காக அவர்களுடைய கண்ணுக் கெட்டுகிற தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதிஸ்வரூபமமாய் நின்றார்.
இதென்ன யக்ஷவடிவம்? என்று தேவர்கள் அதிசயித்தார்கள். நமக்குப் புரியாததை யக்ஷிணி என்று இப்போதும் சொல்கிறோம் அல்லவா? அம்மாதிரி தேவர்கள் அதை யக்ஷம் என்றார்கள்.அதனிடம் அக்னியை அனுப்பினார்கள்.
அது என்ன என்று தெரிந்துகொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கி c யார்? என்று கேட்பதற்கு முன்பே, அது இவனைப் பார்த்து c யார் என்றது?.
நான் அக்னியாக்கும். ஜாத வேதஸ் என்கிற பெயரும் எனக்கு உண்டு என்றான். சரி. உனக்குள்ள சக்தி என்ன? எனறு யக்ஷவடிவம் கேட்டது. நான் எதையும் எரித்து பஸ்மீகரம் பண்ணிவிடுவேன் என்றான் அக்னி.
ஒஹோ! அப்படியானால் இதை எரி பார்க்கலாம் எனறு சொல்லி ஒரு துரும்பை எடுத்துப்போட்டது யக்ஷம்.
அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின் மேல் பிரயோகித்தான். ஆனால் துரும்பு எரியவே இல்லை. அக்னி வெட்கமடைந்து தேவர்களிடம் திரும்பி வந்து நடந்ததைச் சொன்னான்.
இதென்னடா! நாம் வெற்றி கொண்டாடும்போது இப்படி நம்மில் ரொம்ப சக்திமானான ஒருத்தருக்கு - அக்னிக்கு - அபஜயம் வந்ததே என்று தேவர்கள் நினைத்தார்கள். யக்ஷம் இன்னதென்று தெரியாததே ஒரு தோல்விதான். அப்புறம் இந்த அபஜனம் வேறு. அதன்பின் அவர்கள் வாயுவை யக்ஷத்திடம் அனுப்பினார்கள்.
முன்போலவே, c யார் என்று கேட்டது யக்ஷம்?. நான் வாயு. மாதரிச்வன் என்றும் பெயர் பெற்றவன். எதையும் புரட்டித் தூகக்கிக்கொண்டு போகும் சக்தி வாய்ந்தவனாக்கும்.
சரி. இந்த சின்னச் துரும்பை தூக்கிப்பார் என்றது யக்ஷம். வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் தூக்க முடியவில்லை.
வாயுவும் திரும்பி வந்தான்... c யார்? என்று யக்ஷத்தைக் கேட்பதற்கே வாயில்லாதவனாக.
நாம் அசுரரிடம் அடைந்த ஜயத்தைக் கொண்டாடும் வெற்றி விழாவை இப்படி இது அபஜயமாக்கிவிட்டதே என்று தேவர்கள் யோசித்தார்கள்.
இப்போது தேவராஜனுக்கே ஒருவித அடக்கம் உண்டாகிவிட்டது. தங்களைவிடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்கிற அறிவு உண்டாயிற்று. அகம்பாவம் போய், ஒரு க்ஷணம் ஈசுவர பக்திகூட உண்டாகிவிட்டது.
நாம் ஏதோ சாதித்துவிட்டதாக அவ்வப்போது வெற்றிவிழாக் கொண்டாடுகிறோம். இப்போது இது நம் தேசத்தில் ரொம்ப ஜாஸ்தி. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அந்த வெற்றி எங்கே போச்சு என்று தெரியவேயில்லை. அப்புறம் அவர்கள் கதையும் மாறிப்போகிறது. மாறாத ஜயம் ஆத்ம ஜயம்தான். அந்த ஜயமும் சரி. மற்ற லௌகிக வெற்றிகளும் சரி, பரதேவதையின் கிருபையாலேயே கிடைப்பவை.
இதைப் புரிந்துகொண்டு, தேவதைக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கப்பட்ட இந்திரன் யக்ஷத்தை விநயத்துடன் நெருங்கினவுடன், மகாகாருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அநுக்கிரஹம் செய்வதற்காக திவ்விய vFg ரூபத்தில் நின்றது.
(யக்ஷம் நின்ற) அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதியான உமாதேவி பிரகாசித்தாள் என்கிறது உபநிஷத்து.
உருக்கிய பொன்னைப் போன்ற பிரகாசத்தோடு, அதாவது ஞான ஒளியாக ஒளித்துக்கொண்டு நின்ற அம்பாளை இந்திரன் நமஸ்ககரித்தான். சற்று முன் இங்கு தோன்றிய யக்ஷ வடிவம் என்ன? என்று கேட்டான்.
சாக்ஷ£த் அம்பிகை அவனுக்கு ஆசாரிய ஸ்தானம் வகித்து ஞானோபதேசம் செய்தாள். அப்பா, பிரம்மம்தான் அந்த யஷ வடிவம். இவ்வளவு பிரபஞ்சத்துக்கும், உனக்கும். சகல தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளி இருக்கிறது என்று உபதேசித்தாள்.
முதலில் யக்ஷ வடிவமாக நின்று, தேவர்களை அவமானப்படுத்தினாள்.
அவமானப்படுத்தியது அகம்பாவத்தை அடக்குவதற்கே! அகம்பாவம் அடங்கினவுடன் பரமாநுக்கிரஹமாக ஞானோபதேசம் தந்தாள்.
தேவராஜன் உண்மையை இதுவென (இதம்) முதலில் கண்டுகொண்டதாலேயே (த்ர) அவனுக்கு இந்திரன் என்று பெயர் உண்டாயிற்று. மற்ற தேவர்கள் பிரம்ம ஸ்வரூபத்தை பார்த்ததோடு சரி. இவன்தான் அதன் கருணாமூர்த்தமான அம்பாளைத் தரிசனம் செய்து, அவளிடமிருந்து பிரம்ம ஸ்வரூப ரஹசியத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டு வந்தவன்.
இந்த உபநிஷத்தில், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பாஷ்யத்தில் பஹ§சோபமானா - மிகவும் சோபை பொருந்தியவள் என்பதற்கு அர்த்தம் செய்கிறபோது, சோபை உள்ளவற்றுக்கெல்லாம் மேலான உத்கிருஷ்டமான சோபை ஞானம்தான் - வித்யைதான். அந்த வித்யா ரூபிணியே உமா. ஹைமவதியாகி ஹேம (பொன்) ஆபரணங்களை அணிந்தும், இந்தச் சோபையை வெளிப்படையாகக் காட்டுகிறாள். எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞ தத்துவமே பரமேசுவரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள் என்கிறார்.
அறிகிறவன், அறியப்படுகிற பொருள், அறிவு எல்லாமே தானாக ஆகிய ஏக வஸ்துவான பிரம்மத்தின் சக்தி அவள். சித்தமிசை குடிகொண்ட அறிவான செய்வமே என்று இந்த ஞான ஸ்வரூபத்தைத்தான் தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறார்கள்.
அடி முடி தெரியாத யக்ஷ வடிவம் என்று சொன்னவுடன், இந்தக் கதைக்கும் அருணாசலத்திற்கும் சம்பந்தமாகத் தோன்றும். இந்த உபநிஷக் கதை ஸ்ரீ காளஹஸ்தியுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நான் காளஹஸ்திக்கும் போயிருந்தபோது, கிரிப்பிரதக்ஷிணம் செய்தேன். வழியில் ஒரு மலைமேல் ஏறி, அங்கு வனத்திலுள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துகொண்டேன். அந்த லிங்கம், ஸஹஸ்ர லிங்கம் - அதாவது லிங்காகாரமான ஒரே சிலைக்குள் சின்னச் சின்னதாக ஆயிரம் லிங்கங்கள் வடித்திருக்கும். அந்த ஸஹஸ்ர லிங்க ஆலயத்தில் யஷ லிங்கம் என்று ஒன்றைச் சொல்கிறார்கள். இந்திர லிங்கம் என்று ஒன்று இருக்கிறது. காஹஸ்திப் பெரிய கோயிலில் இருக்கிற அம்பாளின் பெயரே ஞானாம்பிகை.அல்லது ஞானப்பிரஸுனாம்பிகை. ப்ரஸுரம் என்றால் பூ, ஞானப்பிரஸுனாம்பிகையை ஞானப் பூங்கோதை என்பார்கள். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், கேன உபநிஷத்தில் சொல்லியிருக்கிற சம்பவம் - யக்ஷம் தோன்றனதும், பிறகு அம்பாள் ஆவிர்பவித்து இந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததும் - இந்தக் காளஹஸ்தியில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அம்பாளை ஆராதிக்க நாமாகப் புது மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டியத்தில்லை. ஸ்ரீகாளஹஸ்தியைப்போல் தேவர்களும் பெரிய ரிஷிகளும் மகாத்மாக்களும் அவளை ஆராதித்த இடங்கள் இன்று மஹா க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அங்கே போய் நமஸ்கரித்துத் தியானம் செய்தால் போதும். அவளுடைய கடாக்ஷம் கிடைத்துவிடும்.
புஷ்பமும் சுகந்தமும்போல், பாலும் சுவையும்போல், அக்னியும் பிரகாசமும்போல், அவள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாத ஞான சக்தி.
இதேமாதிரி ஸ்ரீமந் நாராயணனோடும் பிரிக்க முடியாமல் சகோதர் பாவத்தில் இருக்கிறாள். அவள் துர்க்கையாக வந்து அசுரர்களை வதைத்தபோது வைஷ்ணவியாக இருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியின் போதே யசோதையின் கர்ப்பத்திலிருந்து விஷ்ணு மாயையாக இந்த துர்க்கை அவதரித்தாள். துர்க்கையை சரத்கால நவராத்திரியில் பூஜிக்கிறோம். கெட்டதை வதைத்தவள் அவள். இந்த சம்ஹாரத்துக்கு பிறகு நல்லதை வளர்க்க வேண்டும். ஞானத்தை வளர்க்க வேண்டும். ஞானோபதேசம் செய்ய அம்பாள் ஆவிர்ப்பதையே வஸந்த காலத்தில் ஒரு நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். கிருஷணனோடு துர்க்கை தோன்றின மாதிரி, ஸ்ரீராம நவமியின்போது ஞானாம்பிகை தோன்றினாள். இந்த நவமி முடிய ஒன்பது நாட்கள் வஸந்த நவராத்திரி எனப்படும். சண்டிகையாக உக்கிர ரூபத்தில் எந்தப் பராசக்தியை சரத்கால நவராத்திரியில் பூஜித்தோமோ, அவளையே இப்போது ஸெளம்ய ரூபத்தில் ஞானாம்பாளாக பூஜிக்க வேண்டும். சண்டிகையாகிக் கெட்டதை சிக்ஷித்தவளே ஞானாம்பிகையாகி நல்லதை உபதேசித்து ரக்ஷிக்கிறாள்.
உமா என்பது பிரணவ ஸ்வரூபம் முன்பே சொன்னேன். நாதமே அவளுக்கு சரீரம் மாதிரி. நம் சரீரம் எத்தனை அழகாக இருக்கிறது என்று நாம் அகம்பாவப் பட்டுக் கொண்டாலும், துளி மேலே கீறிவிட்டால்கூட உள்ளே பார்க்கச் சகிக்காமல் இருக்கிறது. எத்தனையோ கழிவடைகளை உள்ளே அடைத்து வைத்திருக்கிறோம். இதற்குள் எங்கே என்று சொல்லத் தெரியாமல் அறிவு என்கிற ஒரு மணி இருக்கிறது. அவளுடைய சரீரமோ நாதமயம், சப்த மயம், வாக்கு மயம் - ஐம்பத்தோர் அக்ஷரங்களுமே அவளுக்குச் சரீரமாக இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க அறிவே வியாபித்திருக்கிறது. அந்த அறிவைத்தான் ஞானாம்பிகை என்பது.
மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருப்பவைகளைச் சத்தியமென்று நினைக்காமல், மாறாமல் சாசுவதமாக உள்ள ஒரே வஸ்துவை, அதற்கு வேறாக நான் என்று தனியாக ஒன்று இல்லை என்று அநுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவைத் தருகிற பராசக்தி ஞானாம்பிகையாகி திவ்விய மங்கள ஸ்வரூபிணியாக விளக்குகிறாள். அவளை எந்நாளும் தியானம் செய்து அநுக்கிரஹம் பெறுவோம்.அம்பாளை உபாஸிப்பதன் பலன்.
அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. அம்மா!நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். c கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஒடிவிடும். நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா என்று ஒயாமல் அவளிடம் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் - அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை.
அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதர்குப் பலன். ஆனாலும், இந்த லோகத்தின் மாயையில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், நான் என்பதைவிட்டு, அவளை அவளுக்காகவே உபாஸிக்கிற ஆனந்தம் நமக்கு ஆரம்பத்தில் புரியமாட்டேன் என்கிறது. நமக்கு என்று எதையோ எதிர்பார்த்து, அதை எல்லாம் அவள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக அவளை உபாஸிக்கத் தொடங்குகிறோம். இந்த நிலையில் அவளும்கூட நம்மை விட்டுப்பிடிக்கிற மாதிரி, நம் பிரார்த்தனைகளை நிறை வேற்றி வைக்கிறாள். தர்மத்துக்கு விரோதமாக இல்லாத வரையில் நாம் செய்கிற பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கிறாள்.
மநுஷ்ய ஸ்வபாவம் ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். அம்பாள் உபாஸனையால் ஜனன நிவிருத்தி கிடைக்கும். மோக்ஷம் கிடைக்கும், மோக்ஷம் கிடைக்கும் என்று சொன்னால் எடுத்த எடுப்பில் அதில் யாறும் ஈடுபடமாட்டார்கள் என்பது ஆச்சார்யாளுக்குத் தெரியும். அதனால் அம்பாளை உபாஸிப்பதன் பலன் இன்னின்ன என்று ஸெளந்தரிய லஹரியில் சொல்கிறபோது, முதலில் படிப்பு, செல்வம், அழகு முதலியன கிடைக்கும் என்கிறார்.
"ஸரஸ்வதியா லக்ஷ்ம்யா"என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் அம்பிகையே ஆராதிப்பதால் கிடைக்கிற பலன்களை வரிசையாகச் சொல்கிறார்.
இந்த விசேஷம் என்னவென்றால், சாதாரணமாக ஒவ்வொரு ஸ்துதியின் முடிவிலும் கவி, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வதால் இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று சொல்வது ஒரு மரபு - இதை பலச்ருதி என்பார்கள். அதாவது அந்த ஸ்தோத்திரத்தின் சக்தியாலேயே அந்தப் பலன்கள் கிடைக்கும் என்று தொனிக்கிற மாதிரி இருக்கும். இதைப் பாராயணம் செய்வதால் இதையே படிப்பதால் என்று திருப்பத் திருப்ப ஸ்தோத்திர கர்த்தா நூலைச் சிலாகித்துச் சொல்வர். ஆனால் துளிக்கூட அகம்பாவமில்லாத ஆச்சாரியாளோ, ஸெளந்தரிய லஹரி பாராயணத்துக்கு இது பலன் என்று சொல்லாமல், அம்மா உன்னைப் பூஜிப்பவனுக்கு c இப்படியாகப்பட்ட அநுக்கிரஹங்களைச் செய்கிறாய் என்றே சொல்கிறார்.
முதல் பலனாக ஸரஸ்வதீ கடாக்ஷம் கிடைக்கும் என்கிறார். அதாவது நல்ல கல்வி, உண்மையான கல்வியின் பயனாக நல்ல குணம் கிடைக்கும் என்கிறார். அதாவது நிறைய சம்பத்து கிடைக்கும் என்கிறார்.
பொதுவாக யாரும் பணத்தை விரும்புகிற மாதிரி குணத்தை விரும்பி ப்ரார்த்திருப்பதில்லை. ஆனால் குணம் இல்லாத இடத்தில் பணம் இருந்து என்ன பிரயோஜனம். நாம் பணத்தை விரும்பியே உபாஸித்தாலும்கூட, அம்பாளும், இந்தப் பிள்ளை அசட்டுத் தனமாக பிரார்த்தனை பண்ணுகிறது. விவேகம் ஏற்படுவதற்கு முன்பு அர்த்தத்தைக் (பொருளை, பணத்தாக்) கொடுத்தால் அது அனர்த்தமே ஆகும். எவ்வளவுக்கெவ்வளவு பணம் தருகிறோமோ அத்தனைக்கத்தனை பாபத்தையே விலைகொடுத்து வாங்கிக் கொள்வான். எனவே பணத்தை எப்படி தர்ம மார்க்கத்தில் பிரயோஜனப்படுத்துவது என்கிற விவேகத்தை முதலில் தந்து, பிறகு தனத்தைத் தரலாம் என்று எண்ணுகிறாள். குழந்தை பக்ஷணம் கேட்டால் அதைச் செய்துகொடுக்கிற தாயார் பிற்பாடு அதனால் கெடுதல் ஏற்படாமல் விளக்கெண்ணெய் தருகிறாள். ஸரஸ்வதீ கடாக்ஷத்தைத் தந்து பிறகு லக்ஷமீ கடாக்ஷத்தாத் தருகிறாள். தைத்திரியோபநிஷத்திலும் இப்படியேதான். முதலில் மேதை (நல்ல புத்தி) யைக் கொடு என்று சொல்லி, அப்புறம் ஸ்ரீயை (செல்வதை) க் கொடு என்று சொல்லியிருக்கிறது. இதற்கு ஸ்ரீ ஆச்சாரியாள் பாஷ்யம் செய்யும்போது, மோதை இல்லாதவனுக்கு ஸ்ரீயைத் தந்தால் அனர்த்தம்தான் உண்டாகும் என்கிறார். பஜகோவிந்தத்திலும் அர்த்தம் அனர்த்தம் என்கிறார்.
அம்பாளை உபாஸிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவரையும் உபாஸிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இரண்டு பேரும் இவளுக்கு இரண்டு பக்கத்திலும் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. (ஸ சாமர ரமாவாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா) . சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாஸித்தால் இவளே ஸரஸ்வதியையும், லக்ஷ்மியையும் கடாக்ஷிக்கச் செய்கிறாள். காமாக்ஷிக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரண்டு கண்கள். 'க'என்று பிரம்மாவுக்குப் பெயர். சில பத்தினி சிவா என்பதுபோல் 'க'வின் பத்தினியான ஸரஸ்வதிதான் 'கா'. 'மா'என்றால் மஹாலக்ஷ்மி. 'மா'- தவன் என்றால் லக்ஷ்மிபதி. 'கா'வையும் 'மா'வையும் தன் அங்கங்களாக (கண்களாகக்) கொண்டவள் எவளோ அவளே காமாக்ஷி.
ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இரண்டும் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைக்கும் என்றேன். இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மஹா புத்திசாலிகளாகலவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் ¢விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு மிகவும் சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது யாரையும் ஏமாற்றிவிடலாம் என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த புத்திசாலித்தனத்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். ஒருவனைப்பற்றி யாராவது எத்தனை புத்திசாலி என்று பேசினால் எத்தனை சந்தோஷப்படுகிறோம். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ட லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்றால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது. அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளா தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே.
புத்தி, செல்வம் - இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்துகொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக்கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடணம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த - மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவளுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள். ஸரஸ்வத்யா லக்ஷம்யா என்கிற சௌந்தரிய லஹரி சுலோகத்தில் ஆசாரியாள் இதையும் சொல்கிறார். அம்பாளை உபாஸிக்கிறவனுக்கு பிரம்மாவவே அசூயைப்படுகிற அளவுக்கு ஸரஸ்வதியின் அநுக்கிரஹம் கிடைத்துவிடும். இவனைப் பார்த்து மன்மதன்தானோ?என்று ரதியே சந்தேகப்படுகிற மாதிரி லாவண்யம் உண்டாகிவிடும் என்கிறார்.
இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்?அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார்.
இதற்குமேல் வேறென்ன வேண்டும்?என்று தோன்றலாம். ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஒட்டியாச்சு. இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்?இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதையும் பெற்றதாகத் தெரியவில்லையே. இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?என்கிற கோள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும் என்பதெல்லாம் நம்மை மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரம்மையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். பாசம் என்றால் கயிறு. பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்த்துக்கொண்டு, அசட்டுத் தனமாக இதுவே எல்லாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின்
சின்ன சௌகரியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம். பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் பரம்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளாள் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை. முடிந்த முடிவாக அம்பாள், பக்தனை இந்தப் பரமானந்த ரஸத்தில் கிளைத்துக் கொண்டிருக்குமாறு அநுக்கிரஹம் செய்கிறாள் என்று ஆசார்யாள் முடிக்கிறார்.
(காஞ்சி முனிவரின் தெய்வத்தின் குரல் புத்தகத்திலிருந்து............)

Last edited by arutsakthi on Tue Oct 15, 2013 8:05 am; edited 1 time in total
Re: ஞானாம்பிகை - ஸ்ரீ மஹா பெரியவா
பிரம்மாவின் ஆயுள் – காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகள்
"ஹிந்து சாஸ்திரங்களில் ஒரே நான்ஸென்ஸாக விஷயங்கள் இருக்கின்றன. பூமிக்கு வடக்கே மேரு சிகரம் இருக்கிறதாம். அங்கே உள்ள தேவர்களுக்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகி விடுகிறதாம். அந்த மேருவை ஸூரியன் சுற்றுகிறானாம். உப்பு ஸமுத்திரம் மட்டுமில்லாமல் இக்ஷூ(கருப்பஞ்சாற்று) ஸமுத்ரம், க்ஷீர ஸமுத்ரம் (பாற்கடல்) என்று ஏழு விதமான ஸமுத்ரங்கள் இருக்கின்றனவாம். ஐந்து கண்டங்களாகவே பிரிந்துள்ள உலகத்தை ஏழு தீவு கொண்டது ('ஸப்த த்வீபா') என்று வேறு சொல்கிறார்கள். எல்லாம் ஒரே பேத்தல்"என்று பரிஹாஸம் பண்ணுகிறார்கள். இருக்கட்டும். இந்த ஸமுத்ரம் ஏன் இத்தனை உப்புக் கரிக்க வேண்டும்? யார் அதிலே இவ்வளவு உப்பைக் கொட்டினது? இதே மாதிரி தித்திப்பு, பாலின் சுவை முதலி உள்ள கடல்களில் ஏன் இருந்திருக்க முடியாது? சரி, ஸப்த த்வீபா என்றும் ஸப்த ஸாகரம் என்றும் சொல்வது தப்பு என்கிறார்களே, இவற்றைச் சொல்கிற சாஸ்திரத்தில் பூமியின் பொஸிஷனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது?' பூமியின் வடகோடியிலே மேரு இருக்கிறது. அதற்கு நேர் எதிரே த்ருவ நக்ஷத்திரம் இருக்கிறது' என்று சொல்லியிருக்கிறது.
வடகோடிதான் North pole (வட துருவம்) என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது த்ருவ (துருவ) நக்ஷத்ரம் இதற்கு நேரேயா இருக்கிறது என்று பார்த்தால், அப்படியில்லை. Pole -க்கு 'த்ருவம்' என்ற பெயரே அந்த நக்ஷத்திரத்தின் பெயரை வைத்துத்தான். ஆனாலும் இப்போது அதற்கு நேரே 'போல்' இல்லை. "ஆதியில் நேரேதான் இருந்தது. அப்புறம் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுப் பூமி கொஞ்சம் சாய்ந்து விட்டது" என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நேரே சுற்றும் பம்பரமாக த்ருவ நக்ஷத்ரத்தை நேரே நோக்கிய நிலையில் பூமி சுற்றிய காலத்தைச் சொல்கிற சாஸ்திரம் அப்போது இருந்த ஏழு தீவுகளையும் ஏழு கடல்களையும் சொல்கிறது. பம்பரம் சுற்றுவதில் கோணல் ஏற்பட்ட போது, ஸப்த சமுத்ரங்களும் கலந்து உப்பாகிவிட்டது என்கிறேன். அந்த வெள்ளத்தில் ஸ்பத த்வீபங்கள் ஐந்து கண்டங்களாக மாறிவிட்டன என்கிறேன்.
நம்முடைய வட துருவத்தின் மேலே ஒரு ஸ்தானம் இருக்கிறது என்றால், அதுதான் ஸ்வர்க்கம் இருக்கிற மேரு. இந்த பூலோகம் ஒரு எலுமிச்சம் பழம் என்று வைத்துக் கொண்டால் அதன் உச்சியில் உள்ள புள்ளி மேரு சிகரம். அந்த உச்சிக்கு எந்தப்பக்கமும் தெற்குதான். உச்சியான அந்த பாயின்டிலிருந்து கிழக்கேயோ, மேற்கேயோ, வடக்கேயோ, எங்கே போவது? எங்கேயும் போகமுடியாது. கீழே தெற்கில் இறங்குகிறது தவிர வேறு திசையே இல்லை. எலுமிச்சம் பழத்தின் உச்சியில் ஒரு பாயிண்டை வைத்துப் பார்த்தால் இது தெரியும். பூமியில் உள்ள எல்லாத் தேசங்களுக்கும் (வர்ஷங்களுக்கும்) வடக்கு மேருதான். ஸர்வேஷாமபி வர்ஷாணாம் மேரு: உத்தரத ஸ்தித: என்றதன் அர்த்தம் இதுதான்.
துருவத்திலே எப்படியிருக்கிறது? அங்கே ஆறுமாஸம் முழுவதும் பகலாகவும், ஆறு மாஸம் முழுவதும் இரவாகவும் இருக்கிறது. இதை ஆரம்ப கிளாஸிலேயே படித்திருக்கிறோமே! ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள் என்கிறபடி, ஆறுமாஸம் பகலாகவும் ஆறு மாஸம் இரவாகவும் உள்ள துருவதற்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகிறது. இதைத்தான் தேவர்களுடைய ஒரு தினம் நமக்கு ஒரு வருஷம் என்பது.
பூமி சுற்றும்போது அதன் பக்கவாட்டிலிலுள்ள ஸகல பாகங்களும் சுற்றினாலும், உச்சிப் பாயின்டும், இதே மாதிரி அடியில் தென்துருவத்தில் உள்ள பாயின்டும் சுற்ற முடியாது. சுற்ற முடியாத அளவுக்குச் சின்னதுதானே பாயின்ட்? சுற்றுவதினாலேதான் மற்றப் பகுதிகளில் சூரிய சந்திரனோடு தினந்தினமும் பல கோணங்களில் சம்பந்தப்பட்டு ஒரிடத்தில் பதினெட்டு மணி வெய்யில் அடிக்கிறது; ஆறு மணி அளவே ராத்திரியாயிருக்கிறது. அதற்கு நேர் எதிரே ஒரிடத்தில் ஆறே மணி வெய்யிலாகவும் பதினெட்டு மணி ராத்திரியாகவும் இருக்கிறது. இரவு பகலில் பூமியின் பல பாகங்களுக்கிடையில் ஏகப்பட்ட கால வித்யாஸம் இருக்கிறது. சில நாட்களில் மட்டுமே சூரியன் நேர்கிழக்காக உதிக்கிறான்; தலைக்கு நேரே ஒரு டிகிரக் கூடத் தப்பாமல் வருகிறான்; மற்ற நாட்களில் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வரையில் பல கோணங்களில்(angle -களில்) சூரியோதயம் ஏற்படுகிறது. வட துருவத்தில இப்படியில்லை. அங்கே ஆறு மாஸம் பகலிலிருந்து ஆறு மாஸம் இரவுக்குப் போய், மறுபடி அதிலிருந்து ஆறு மாஸம் பகலுக்கு வரும்போது, சூரிய கதியைப் பார்த்தால், அந்த இடமானது சூரியனைச் சுற்றாமல், சூரியன்தான் அந்த இடத்தைச் சுற்றி வருகிறான் என்றே தோன்றும். மேரு ஸூரியனை பிரதக்ஷிணம் பண்ணுகிறான் என்பது இதைத்தான்.
வடதுருவத்தில் ஸூரிய வெளிச்சமுள்ள ஆறு மாஸங்களை உத்தராயணம் என்றும், அங்கே இரவாகித் தென்துருவத்தில் வெளிச்சமிருக்கிற ஆறு மாஸங்களை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம். வடதுருவத்துக்கு ஸுமேரு என்றும், தென் துருவத்துக்குக் குமேரு என்றும் பெயர். (ஸுமேரியா தேசம்கூட 'ஸுமேரு'விலிருந்து வந்ததுதான். அங்கே வேகத்தில் வரும் தேவதைகளின் வழிபாடு இருந்தது எனறு சொல்கிறார்கள்) வடக்கே தேவர்கள் இருப்பது போல் தெற்கே பித்ரு லோகமும் நரகமும் இருக்கின்றன. தேவதைகளையோ, பித்ருக்களான ஆவிகளையோ, நரகவாஸிகளையோ பார்ப்பதற்கு யோக சக்தியினால் திவ்ய திருஷ்டி பெறவேண்டும். நமக்கு அந்த த்ருஷ்டி இல்லாததால் அப்படிப்பட்ட லோகங்களும் இல்லை, ஜீவர்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ருஷ்யாவில் பிறந்து, அமெரிக்காவில் வஸித்துவிட்டு, இந்தியாவில் வந்து 'தியாஸாஃபிகல் ஸொஸைடி' ஆரம்பித்த ப்ளாவட்ஸ்கி முதலானவர்கள் ஆவி உலக, தேவதா லோக விஷயங்களைத்தான் முக்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டுமில்லை. இக்கால ஸயன்டிஸ்ட்களில் ரொம்பவும் முக்யமாக நினைக்கப்படுகிற ஆலிவர் லாட்ஜ் என்பவர்கூட, பிற்காலத்தில் ஸயன்ஸைவிட முக்யமாக இந்த ஆவிகள், தேவதைகள் இவற்றின் ஆராய்ச்சியிலேயே இறங்கி, 'இவை எல்லாம் நிச்சயமாக இருக்கின்றன; இவைகளைக் கொண்டு மனிதன்
அநு கூலங்களை அடையலாம்ட என்று புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜ்யோதிஷம் முதலான சாஸ்திரங்கள் ஒருபுறம் அஸ்ட்ரானமி மாதிரியான ஸயன்ஸ்களைச் சொல்லிவிட்டு உடனே spiritualism -க்கும் போகிறதே என்று கேட்டால், இவை இரண்டுக்கும் விரோதமில்லை என்று சொல்வது போல ஒரு பெரிய விஞ்ஞானியே ஸமீபத்தில் இப்படிப் பண்ணியிருக்கிறார்.
நாம் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கிறதுபோல, மநுஷ்யர்கள் தேவர்களோடு பழகி வந்த புராதன காலத்தில் ஏற்பட்டவை நம் சாஸ்திரங்கள். நம்முடைய (கர்மாக்களைத் தொடங்கு முன் செய்ய வேண்டிய) ஸங்கல்பத்தைப் பார்த்தாலே இது தெரிகிறது. இந்த ஸங்கல்பமானது எத்தனையோ யுகாந்தரங்களுக்கு முன், கோடிக்கு அப்புறம் எத்தனையோ ஸைஃபர்கள் போட வேண்டிய அத்தனை காலத்துக்கு முன் ஸ்ருஷ்டி ஏற்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் காலத்தை நிர்ணயம் பண்ணித்தருகிறது. யுகத்தின் ஆரம்பத்தில் க்ரஹங்கள் எப்படியிருந்தன என்பது கூட ஜ்யோதிஷக் கணக்கால் தெரிகிறது. அப்போது எல்லா க்ரஹங்களும் ஒரே வரிசையில் இருந்தனவாம்.
சில கணக்குகள் இப்போது வித்யாஸப் படுகின்றன, பிரத்யக்ஷத்தில் பார்க்கிற சில நிலவரங்கள் சாஸ்திரத்துக்கு மாறாக இருக்கின்றன என்றால், உடனே 'சாஸ்திரம் புளுகு மூட்டை' என்று ஆரம்பித்துவிடக்கூடாது. எல்லா க்ரஹங்களும் நேராக இருந்த புராதன காலம், துருவ நக்ஷத்ரத்துக்கு சரியாக நேரே பூமியின் துருவம் இருந்த ரொம்பப் பழைய காலம்- இவற்றிலிருந்தே சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன. அதற்குப் பின், பல யுகங்களில் Nature -ல் (இயற்கையில்) மகத்தான மாறுதல் ஏற்பட்டு, பூமி மலையாகவும், மலை ஸமுத்ரமாகவும், ஸமுத்திரம் பாலைவனமாகவும் இப்படியெல்லாம் ஆகியிருக்கிறது. இந்த விவரங்களையெல்லாம் ஜியாலஜிஸ்ட்கள் சொல்கிறார்கள். அதோடுகூட வானமண்டலத்தில் கிரஹ ஸஞ்சாரங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதாக அஸ்ட்ரானமிகாரர்கள் சொல்கிறார்கள். இதனாலெல்லாந்தான் சாஸ்திரத்தில் என்றைக்கோ சொன்னதற்கு வித்யாஸமாகவும் சிலவற்றை இன்றைக்கு பார்க்கிறோம்.
ஜ்யோதிஷத்தில் கணக்குப் பண்ணி சிருஷ்டி எப்போது ஆரம்பித்தது என்று சொல்கிறார்களோ, அதுவே நவீன ஆராய்ச்சியால் அநுமானிக்கிற சிருஷ்டி காலத்துக்குக் கிட்டத் தட்ட சரியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
கலியுகத்துக்கு 4,32,000 வருஷங்கள். த்வாபரயுகத்துக்கு இதைப்போல இரண்டு மடங்கான 8,64,000 வருஷம். த்ரேதாயுகத்துக்கு மூன்று மடங்கான 12,96,000 வருஷம். க்ருதயுகத்துக்கு நாலு மடங்கான 17,28,000 வருஷம். நாலு யுகங்களும் சேர்ந்த 'சதுர்யுகம்' அல்லது 'மகாயுகம்'என்பதற்கு 43,20,000 வருஷம். இப்படி ஆயிரம் மஹா யுகங்கள் சேர்ந்தால், அதுதான் பிரம்மாவின் ஒரு பகல் வேளை. அதுவே கல்பம் என்பது. அது 14 மநுக்களின் ஆட்சிக்காலம். 'மநு'வின் ஆட்சிக்காலம்தான் 'மன்வந்த்ரம்' என்பது. நாம் பல ராஜாக்களையும் குடியரசுகளையும் வைத்துக் கொண்டிருந்தாலும் , லோகம் பூராவுக்கும் மேலாதிக்கம் உள்ளவராக பகவான் மநு என்பவரையே வைதத்திருக்கிறார். இப்படிப்பட்ட மநுக்கள் பதினாலு பேர், மநுஷ்ய இன ஸ்ருஷ்டிலிருந்து அது முடிகிறவரை ஆட்சி நடத்துகிறார்கள். மநுவிலிருந்து தோன்றுவதால்தான் நமக்கு மநுஷ்யர், மநுஜர் முதலான பேர்கள் இருக்கின்றன. Man என்பதும் மநுவிலிருந்து வந்ததுதான். இப்போது ச்வேத வராஹ கல்பம் என்ற பிரம்மாவின் பகல் வேளையில் ஏழாமவரான வைவஸ்த மநுவின் காலத்திலே, இத்தனாம் ஆண்டில் நாம் இருக்கிறோம் என்று ஸங்கல்பத்தில் சொல்லப்படுகிறது. இதிலிருந்து கணக்கு பண்ணி முதலாமவரான ஸ்வாயம்புவ மநு எப்போது தோன்றியிருப்பார், அதாவது இந்த கல்பத்தில் ஸ்ருஷ்டி எப்போது ஆரம்பித்திருக்கும் என்று பார்த்தால், அந்தக் காலக் கணக்கும் மநுஷ்ய் இனம் (Human Species) எப்போது தோன்றிற்று என்று ஸயன்ஸில் சொல்லுகிறார்களோ அதுவும் ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள்.
'மன்' என்றால் 'நினைப்பது'.நினைக்கிற காரியத்தைச் செய்கிற அங்கம்தான் மனஸ். அதை வைத்தே மநுவுக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டது. சிந்தனா சக்தி வாய்ந்த மனிதகுலத்துக்கு முதல்வராக அவர் இருக்கிறார். Man is a thinking animal என்று சொல்வதற்கேற்ப, நினைக்கத் தெரிந்ததே இவனுடைய சிறப்பு என்பதால்தான், மநுவிடமிருந்து வந்தவர்களுக்கும் மநுஷ்யர் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. பதினாலு மநுக்களின் ஆயுட்காலமும் சேர்ந்த ஆயிரம் சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றால் அதற்கு 432,00,000 (432 கோடி) வருஷம்;அதே அளவு வருஷம் ஒரு ராத்திரி. அதாவது 864 கோடி வருஷம் பிரம்மாவுக்கு ஒரு முழு நாள். அதுவே கல்பம் என்பதுமுண்டு. அதிலே பகலில்தான் ஸ்ருஷ்டி நடப்பது. ராத்திரியில் ஸ்ருஷ்டி அடங்கிப் போன ப்ரளயம். இப்படி 365 நாட்கள் ஒரு பிரம்ம ஸம்வத்ஸரம் (வருஷம், ஆண்டு) . இதைப் போல் நூறு வருஷங்கள் அவருடைய ஆயுஸ். இந்த பிரபஞ்சத்தின் ஆயுஸும் அதுவே. அவரது ஆயுள் முடிகிற போது ஸகல லோகங்களும் இல்லாமல் போய்விடும். அதுதான் 'ஆத்யந்திக பிரளயம்' என்பது. அப்புறம் ஒரு பிரம்மா மட்டும் பிரபஞ்சமில்லாமல், தான் மாத்திரமாக இருக்கும். அப்புறம் மறுபடி இன்னொரு பிரம்மாவைக் கொண்டு சிருஷ்டியை ஆரம்பிக்கும். ஆஞ்சநேயர்தான் அடுத்த பிரம்மாவாக வரப்போகிறார் என்று சொல்வார்கள்.
'ஆத்யந்திக ப்ரளயம்' என்றால் சாச்வதமான ப்ரளயம் என்று அர்த்தம். 'அத்யந்தம்' என்ற வார்த்தையிலிருந்து 'ஆத்யந்திக' என்பது உண்டாயிருக்கிறது. 'ப்ரளயம்' என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, உணர்ச்சியில்லாமல் லயித்திருப்பது. ஆத்யந்திக ப்ரளயத்தில் இந்த லயம் என்பது பரமாத்மாவோடேயே சாச்வதமாக ஐக்யமாகி விடுவதாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயஸு பூர்த்தியாகிப் பரமாத்மாவோடு ஐக்யமாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயஸு பூர்த்தியாகி பரமாத்மாவோடு ஐக்யமாகிறபோது, அவர் உண்டாக்கிய ஸ்ருஷ்டியும் சேர்ந்து ஐக்யமாகிவிடுகிறது. அப்புறம் புது ப்ரம்மா புது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போதும் இந்த ஜீவர்கள் அதில் மறுபடி பிறப்பதில்லை. அதனால் இதை 'மஹா ப்ரளயம்'என்றும் சொல்வது.
வேறே இரண்டு ப்ரளயங்களும் உண்டு. ஒவ்வொரு சதுர்யுக முடிவிலும் ஏற்படுவது ஒன்று. இதை வெறுமே 'ப்ரளயம்'என்பார்கள். ஆயிரம் சதுர்யுகத்திற்கொருதரம் பிரம்மாவின் ஒவ்வொரு பகலின் முடிவிலும் ஏற்படும் கல்ப ப்ரளயம் இன்னொன்று. அவருடைய ஒவ்வொரு இராக்காலமும் முடிகிறவரை இது நீடித்து, அடுத்த பகல் உதிக்கும் போது முடிந்துவிடும். இரண்டு பகல்களுக்கு நடுவேயுள்ள 'இன்டர்வெல்' லில் இது நடப்பதால் இதற்கு 'அவாந்தர ப்ரளயம்' என்றும் பெயர். சதுர்யுக முடிவான ப்ரளயத்தில் அடங்கின ஜீவர்கள் அடுத்த சதுர்யுக ஸைக்கிள் ஆரம்பிக்கும் போது மறுபடி பிறக்கத்தான் செய்வார்கள். 'அவாந்தர ப்ரளயம்' அல்லது 'கல்ப ப்ரளயம்' என்பதில் அடங்கியவர்களும் அடுத்த கல்பத்தில் பிறக்கத்தான் செய்வார்கள்.
பூலோகம், புவர் வோகம், ஸுவர் லோகம், மஹர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம் என்று ஏழு. இவற்றுக்குள்தான் மநுஷ்யர்கள், தேவர்கள் முதலான ஸகல இனங்களும் இருக்கின்றன. இவற்றில் பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் இவை மூன்றும் ஒரு group -ஆக இருக்கின்றன. 'பூர்ப்புவஸ்ஸுவ:'என்று இவற்றைத்தான் அடிக்கடி கர்மாக்களில் குறிப்பிடுகிறோம். மற்ற நாலு லோகங்களும் இவற்றைவிட உயர்ந்தவை. பிரம்மா ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போது அவாந்தர ப்ரளயம் ஏற்படுகிறதல்லவா? அப்போது இந்த முதல் மூன்று லோகங்கள் மட்டும் பிரளயத்தில் அழிந்துவிடும். அவரது ஆயுஸ் முடிவான மஹாப் பிரளயத்திலோ மற்ற லோகங்களும் அழிந்துவிடும்.
ஸூரியனுடைய உஷ்ணம் நமக்குத் தெரியாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது என்று நவீன ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஸூரிய உஷ்ணம் இல்லாவிட்டால் லோக வாழ்க்கை ஸாத்யமே இல்லை. ஆஹாரத்திலிருந்து ஆரம்பித்து லோக வாழ்வுக்கு வேண்டிய மழை, பருவக்காற்று எல்லாவற்றுக்கும் ஸூரிய உஷ்ணம் குறைந்து கொண்டே போவதால், எத்தனையோ கோடி வருஷங்களுக்கு அப்புறம் நம் லோகமே இல்லாமற்போக வேண்டியதுதான் என்று ஒரு கணக்குக் கொடுத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி பிரம்மாவின் அடுத்த அவாந்தரப் பிரளயம் எப்போது வரவேண்டுமோ, அதுவும் ஸயன்டிஸ்டுகள் கொடுக்கிற காலக் கெடுவும் சற்றேறக்குறைய ஒத்திருக்கின்றன.
ஸங்கல்பத்தில் சொல்கிறபடி இப்போது பிரம்மாவுக்குப் பாதிக்கு மேல் ஆயுஸ் தீர்ந்துவிட்டது. நமக்கு வாரத்தில் ஏழு நாள் பெயர்கள் மாதிரி ஏழு கல்பப் பெயர்கள் பிரம்மாவின் விஷயமாகச் சொல்கிறார்கள். அதில் இப்போது நாலாவதான ச்வேத வராஹ கல்பத்தில் பாதிக்குமேல் வந்து விட்டோம். பிரம்மாவுக்கு இன்றைக்கு வயது, இத்தனை மாஸம், தேதி, அதில் இன்ன யாமம், அப்புறம் நாம் இன்ன கல்பத்தில், இன்ன மன்வந்தரத்தில், இன்ன சகாப்த்தில், ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில் நம் மநுஷ்யப் பஞ்சாங்கத்தின்படி இன்ன வருஷம், மாஸம், தேதியில், லக்னத்தில் இருக்கிறோம் என்கிற வரையில் எல்லாவற்றையும் ஸங்கல்பத்தில் சொல்கிறோம்.
இந்தக் கணக்குப்படி பிரம்மா எப்போது தோன்றியிருப்பார் என்று பார்த்தால், அதுவும், பிரபஞ்சம் எப்போது தோன்றியிருக்கும் என்று ஸயன்ஸில் போட்டிருக்கிற கணக்கும், ஏறக்குறைய ஸரியாக இருக்கின்றன என்றார்கள்.
பிரம்மாவின் வயஸைச் சொல்வதில் ஒரு வேடிக்கை. 'பரார்ரத-த்வய-ஜீவி' என்று பிரம்மாவைச் சொல்கிறார்கள். அதாவது இரண்டு பரார்தங்கள் உயிர் வாழ்கிறவர் என்று அர்த்தம். பரார்தம் என்றால் 'பர' என்கிற எண்ணிக்கையில் பாதி (அர்த்தம்) என்று அர்த்தம். அதாவது 'பரார்த்த-த்வய -ஜீவி' என்றால் 'இரண்டு *அரைப் பர ஆயுஸ்காரர்' என்று அர்த்தம்.
'இரண்டு அரைப் பர' என்றால் ஒரு 'பர' தானே?அதனால் 'பரார்த்த த்வயம்' என்காமல் 'பர' என்றே சொல்லி விட்டால் போதும். ஆனாலும் பிரம்மா இப்போது பாதிப் 'பர'வைத் தாண்டி 51-வது வயதில் இருப்பதால், 'பர'வில் பாதியை முக்யமாக நினைத்து, 'பரார்த்த'த்தையே குறிப்பிடுகிறோம்.
ஆயிரம் சதுர்யுகம் கொண்டதான பிரம்மாவின் ஒரு பகலுக்குள் 14 மநுக்களின் ஆட்சி நடப்பதால் ஒரு மந்வந்தரத்திற்கு 71 சதுர்யுகங்கள். இந்த வைவஸ்வத மன்வந்தரத்தில் இப்போது நடப்பது 28-வது சதுர்யுகம். அதில் இது கலியுகம். நாம் பண்ணும் ஸங்கல்பத்தில் இவ்வளவும் இருக்கின்றன! திதி,லக்னம் வரையில் சொல்வதுண்டு. இவ்வளவும் காலக் கணக்கு. தேசக் கணக்கு வேறு அந்த ஸங்கல்பத்தில் இருக்கிறது. பிரம்மாண்டம் முழுதையும் வர்ணித்து, அதிலே நாம் இருக்கிற ஊர் வரையில் கொண்டு வந்துவிடுகிறது. நாம் கடிதங்களில் ஊரையும் தேதியையும் எழுதுவது போல ஸங்கல்பத்தில் தேசத்தையும் காலத்தையும் சொல்லிக் கொள்கிறோம். இவ்வளவு அருமையான கணக்குகள் ஜ்யோதிஷ சாஸ்திரத்தினால் அறியப்படுகின்றன.

Similar topics
» ஊழிக் கூத்து.. ஸ்ரீ பரணீதரன் அவர்கள் கைவண்ணம்...ஸ்ரீ பெரியவா ஆராதனை பதிவு
» ஸ்த்ரீ தர்மம - ஸ்ரீ பெரியவா
» குரு பக்தி - ஸ்ரீ மஹா பெரியவா
» “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்...” ஸ்ரீ பெரியவா
» ஸ்ரீ மஹாபெரியவா மகிமைகள் - ஸ்ரீ சுகி சிவத்தின் பேச்சுக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum