Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
ஒன்றே சமயம்- ஒன்றே மந்த்ரம்- ஒன்றே தெய்வம்- ஒன்றே குரு
Page 1 of 1

ஒன்றான தத்துவத்தை உணர்வது எப்படி ?
(ஒன்றே சமயம்- ஒன்றே மந்த்ரம்- ஒன்றே தெய்வம்- ஒன்றே குரு)
ஸ்ரீதேவி எனப்படுபவள் இந்த அண்டம் படைக்கப்படுவ தற்கு முன்பே உள்ள முதல் பொருளான மூலப்ரக்ருதி என்று கூறப்படுபவளாம் !
ஸ்ருஷ்டௌ யா ஸர்க்க ரூபா ஜகதவனவிதௌ பாலனீ யா ச ரௌத்ரீ
ஸம்ஹாரே ச அபி யஸ்யா ஜகததிதமகிலம் க்ரீடனம் யா பராக்யா !
பச்யந்தி மத்யமாதௌ ததனு பகவதி வைகரி வர்ணரூபா
ஸஅஸ்மத் வாசம் ப்ரஸன்னா விதிஹரி கிரீசா ஆராதிதா அலங்கரோது
இந்த ஸ்லோகம் ஸ்காந்த புராணத்தின் முதலிலே ஸ்ரீதேவி பாகவத மஹாத்மியம் என்ற தலைப்பில் உள்ளது. இப்போது பாருங்கள் ! ஸ்ரீதேவி பாகவதம் என்பதும் ஸ்காந்த மஹா புராணம் என்பதும் ஸ்ரீவியாஸராலே இயற்றப்பட்டது தான் ! அவர் தான் எழுதின 18 புராணங்களிலும் உள்ள பலபல நிகழ்ச்சிகளை ஒன்றொன்றிலும் ஒவ்வொரு விதத்தில் புகுத்தி இருக்கிறார். உதாரணமாக ஸ்காந்த மஹா புராண த்தில் அவர் கூற வந்த வரலாறு கந்தனான ஸுப்ரஹ்ம ண்யனைப் பற்றியது. அதில் அவனது தாயாரான தேவியைப் பற்றியும் அவர் எழுதின ஸ்ரீதேவி பாகவதத்தைப் படனம் செய்வதற்கு முன்பாக தேவியை தோத்தரிக்கும் மஹாத்மிய ஸ்லோகங்களையும் எழுதியிருக்கிறார். ஸ்ரீதேவி பாகவதத்தில் ஸ்ரீமத் ராமாயண வரலாற்றையும் அதற்கு முன்பு அந்த ராமனுடைய முன்னோர்களான ஹரிசந்த்ரன் முதலான வர்களுடைய வரலாற்றையும் தொகுத்திருக்கிறார். அவரால் எழுதப்பட்ட மார்க்கண்டேய புராணத்தில் கண்ட ஸ்ரீதேவி மஹாத்மியம் என்கிற ஸப்தசதியின் வரலாற்றையும் அதே தேவிபாகவத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஸ்ரீமத் விஷ்ணு பாகவதத்திலே உள்ள க்ருஷ்ணருடைய ஜனனம் பற்றியும் குறிப்பி ட்டிருக்கிறார். விசேஷமாக தன்னுடைய பிறப்பு பற்றின வரலாற்றைத் தொடர்ந்து பாண்டவர்கள் கதையும் இதிலே வருகிறது. மேலும் யுக லஷணம், மனுக்களின் உற்பத்தி, ஜீவர்களுடைய போக்குவரவுகள், சிவ மஹிமை, காயத்ரியின் தத்துவங்கள், மணித்வீபத்தின் மஹிமை, புவனேச்வரி தேவியின் விபவங்கள் என இதிலே சொல்லப்படாத விஷயங்களே இல்லை எனலாம். இத்தனையும் அவர் எழுதின 18 புராணங்களிலும் ஆங்காங்கேயும் தனித்தனியாகவும் தேவியின் விபவங்கள் பரவி உள்ளன. ஆனாலும் நம்மால் எது முன்னது எது பிந்தியது என்று வரையறுப்பது அத்தனை சுலபமல்ல ! இருந்தாலும் புராணங்கள் 18 எனக் கண்டோ மல்லவா! அவைகளை இங்கு பட்டியலிட்டு காணுவோம்.
1. மத்ஸியம்,
2. மார்க்கண்டேயம்,
3. பவிஷ்யம்,
4. பாகவதம்,
5. ப்ரஹ்மம்,
6. ப்ரஹ்மாண்டம்,
7. ப்ரஹ்மகைவர்த்தம்,
8. வாமனம்,
9. வாயு,
10. விஷ்ணு,
11. வாராஹம்,
12. அக்னி,
13. நாரதம்,
14. பத்மம்,
15. லிங்கம்,
16. காருடம்,
17. கூர்மம்,
18. ஸ்காந்தம்.
இதில் நான்கு புராணங்கள் மட்டும் விஷ்ணுவின் அவதாரங்களை மட்டுமே வர்ணிக்கின்றன் இவை தவிர உபபுராணங்கள் எனவும் உள்ளன. இதன் மொத்த ஸ்லோகங்கள் 4,00,200 ஆகும். இந்த புராணங்களை முதல் எழுத்தை வைத்து ஸுத்ரரூபமாக கூறுவார்கள். அதாவது அ,நா,ப,லி,க,கூ,ஸ்க, என 7, ம-வில் 2, ப-வில் 2, ப்ர-வில் 3, வ-வில் 4, ஆக மொத்தம் 18. இந்த முதலெழுத்தின்படி கடபயாதி கணக்கில் 28 வருகிறது. அதாவது இதுவும் தேவியின் மந்த்ராக்ஷர ஸங்க்யையே என்பதுதான் இங்கு ஸ்வாரஸ்யம்.
இதிலிருந்து நம்முடைய சிற்றறிவைக்கொண்டு நோக்குமிடத்து சில உண்மைகள் புலப்படுகின்றன. அதாவது பரம்பொருள் தத்துவமான அத்வைதத்தை வேதம், உபநிடதம் இவைகளின் துணையோடு அதற்கு விரோதமன்னியில் கதை வடிவில் தெய்வ அவதார நிகழ்ச்சிகளின் மூலமாக நமக்கு ஊட்டவே பல விதங்களிலே கதைகளைப் புகுத்தி தான் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லியதைச் சொல்லல் என்கிற குற்றம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்கிற விதத்தில் தனது 18 புராணங்களையும் இயற்றியிருக்கிறார் என்று நம்மால் நம்பமுடிகிறது. கதைகள் முன்பின்னாக இருக்கலாம். சற்று ஆங்காங்கே மாறுபட்டும் இருக்கலாம். இருந்தாலும் கூட அவர் சொல்ல வந்தது பரம்பொருள் ஸத்யம் என்கிற வழியில் நாம் எடுத்துக்கொண்டால் நமக்கு அந்த குறைகள் தெரியாது. இதற்கு உதாரணமாக நமது வீட்டிலே உள்ள வயதான பெரியவர், உலகியல் அனுபவங்களை அதிகமாக அனுபவித்தவர், தன்னுடை அனுபவங்கள் என்று கூறுகிற நிகழ்ச்சிகளில் சற்று மாறுதல்களும் இருக்கும் - கூறியது கூறல் என்கிற பிழையும் இருக்கும் - இருந்தாலும் கூட நாம் அதனை ஏற்று அவர்களது அனுபவத்திலே உள்ள தத்துவங்ளை மாத்திரம் எடுத்துக்கொள்வதைப் போலத்தான் இங்கும் வியாஸர் கூறவந்தது மூலப்ரக்ருதியான ஆதிசக்தியின் புகழையும் தத்துவங்களையும் நாம் அவரது புராணங்கள் மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
18 புராணங்களிலும் உள்ள உள்ளுறை பொருளான மூலப்ரக்ருதி என்கிற பராசக்தி தத்துவம்தான் இந்த அண்டத்தைப் படைத்து அதற்குள் ஒவ்வொன்றிலும் தானே ஊடுருவி தானேயாகி விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த சக்தியைக் கொண்டுதான் மும்மூர்த்திகளும் தங்களுடைய தொழில்களை சிறப்புற ஆற்றி வருகிறார்கள். மோக்ஷ ஸாதனத்திற்கு உறுதுணையான அகண்டாகாரவ்ருத்தி என்கிற செயல் நமது வைகரி என்கிற சப்தம் மூலமாக அனுபவத்தில் ப்ரஸித்தமாக இருக்கிறது. வைகரீ என்கிற வாக்கு தொடங்குவதற்கு முன்பாக உள்ள நிலைகளான மத்யமா, பச்யந்தி, பரா என்கிற வாக்வைபவங்கள் ப்ரஸித்தமானவை. நாத ரூபமாக உள்ள இந்த பராசக்திதான் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மூலாதாரத்திலே விளங்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறாள். இந்த தத்துவங்கள் நமது வேதத்துக்குள்ளும் பொதிந்திருக்கிறது. வியாஸரே மொந்தாகாரமாக இருந்த வேதங்களை நமது நடைமுறைக்காக நான்காகப் பிரித்து தொகுத்தவர் என்பது தெரிந்ததுதான் ! வேதங்களைத் தொகுத்த அவருக்கு வேதங்களின் உட்பொருளான பரம்பொருள் தத்துவமும் நன்றாகத் தெரியும். எனவேதான் அந்ததத்துவங்களை அதே வடிவில் நமக்குச் சொன்னால் நம்முடைய ஸம்ஸார சூழலால் நம்மால் புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல என்பதனை தெரிந்து அத்தனை தத்துவங்களையும் கதை வடிவத்திலே புராண நிகழ்ச்சிகளாக அவதார அற்புதங்களாக அள்ளி வழங்கியுள்ளார்.
ஒரே தத்துவங்கள் அவர் வாயிலிருந்து பலவிதங்களில் பல இடங்களில் வந்தாலும் கூட அது அதே வாக்கியங்கள் புராணங்களில் பல இடங்களில் ஒன்று போல அமைந்திருப்பது ஒரு ஸ்வாரஸ்யமே ! உதாரணமாக நாம் பார்த்தோமானால் மஹாபாரதம் யுத்த பர்வத்திலே கண்ணனால் அருளப்பட்ட பகவத்கீதை என்கிற தத்துவ வாக்கியங்கள், மார்க்கண்டேய புராணத்திலே தேவி மஹாத்மியம் என்கிற ஸப்தசதியில் சில இடங்களில் ஒன்றேபோல ஸ்லோகங்கள் அமைத்திருக்கின்றன. (இதுபற்றி பட்டியலாகவே அருட்சக்தி எழுதியுள்ள மஹாசக்திரஹஸ்யம் என்ற நூலில் விரிவாக காணலாம்)
தேவிபாகவதம் பல அவதார வரலாற்று நிகழ்ச்சிகளின் ஒரு தொகுப்பு நூல் என்றே கூறலாம். பெரும்பாலும் விஷ்ணுவின் எல்லா அவதார விஷயங்களும் அதிலே காணப்படுகின்றன. மணிவாசகப் பெருமானின் கூற்றான
புல்லாகி புழுவாகி பல் மிருகமாகி. . . . . என்று தன் சிவபுராணத்திலே உலகிலே தோன்றிய முதல் ஜீவ உற்பத்தி விதங்களில் விஷ்ணுவின் அவதார தத்துவமே வெளிப்படுவதாக ஆன்றோர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். தத்துவங்களுக்கு மூலப்பொருளே சப்த ப்ரபஞ்சம். நாதமாக இருந்த இந்த சப்தங்கள் அஷரங்களாக வெளிப்படுகின்றன. அவைகளின் கூடலே மஹிமை உடைய மந்த்ரங்கள். மந்த்ரங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணையும்போது உண்டாகும் பொருளினால் தேவதைகள் தோன்றுகின்றன.
இங்கு தேவி மஹாத்மியம் என்கிற ஸப்தசதியில் 700 ஸ்லோகங்களில் ஸ்ரீதேவியின் மஹிமைகள், அவள் அசுரர்களுடன் செய்த போர்கள நிகழ்ச்சிகள், அசுரர்கள் அழிந்ததனால் தேவர்களின் மகிழ்ச்சித் துதிகள், என விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் அது போர் நிகழ்ச்சி ஆனாலும், துதிகளா னாலும் அவைகள் 700 மே மந்த்ரங்கள்தான் என்று ஆன்றோர்கள் சித்தா ந்தப்படுத்தியுள்ளார்கள். அந்த விதத்தில் அதனை பாராயணம், ஹோமம் என செய்து பலப்ராப்திகளையும் நாம் அடைந்து வருவது கண்கூடு. வேதாந்தத்தையும் மோஷ மார்க்கத்தையும் விவரிக்கும் பகவத்கீதையைக் கொண்டும் பாராயணம், ஹோமம் என செய்வதையும் நாம் கண்டிருக்கிறோம். ஸப்தசதியின் மந்த்ரப் பொருள்களினால் தோன்றின தேவதைகளின் வரலாற்றை மிக விரிவாக ஸ்ரீதேவி பாகவதத்தில் வர்ணிக்க ப்பட்டிருக்கிறது. பகவத்கீதையின் மந்த்ரப் பொருள்களினால் தோன்றின தேவதைகளின் வரலாற்றை மிக விரிவாக ஸ்ரீவிஷ்ணு பாகவதத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்த பகுதிகள் மட்டும் 700 ஸ்லோகங்களினாலே கூறப்பட்டிருக்கிறது என்பதுதான். எண் கணிதப்படி 700 லிலே உள்ள 7 தான். இதுதான் இந்த உலகத்திலே ஒரு ஜீவத்துவத்தின் எழு பிறப்பு என்று சொல்லுகிற ஒரு தத்துவமாக நமக்கு விளங்குகிறது. ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என பிறவி ஏழு எனக்கூறுகிறது தத்துவ நூல்கள். இவைகளையெல்லாம் நாம் ஆராயுமிடத்து - அது புராண அவதார வரலாறாயினும் துதிகளாயினும் போர்செய்திகளாயினும் தத்துவ அறிவுரையாயினும் வேத உபநிஷத உண்மைகளாயினும் வியாஸர் இவைகளை தன் நுண்ணறிவினால் ஒன்று படுத்தி 18 புராணங்களாக ஆக்கி நமக்கு ஒரு நல்ல அத்வைத அனுபவம் ஏற்பட அழகுபடுத்தி உபகாரம் செய்திருக்கிறார் என்பதே உண்மை !
ஆதி சங்கரர் பாஷாண்ட மதங்களையெல்லாம் கண்டனம் செய்து ஒரு ஜீவன் வழிபட முக்தியடைய என சிறந்த தாகவும், அத்வைத பரமாகவும் ஆறு மார்க்கங்களை வகுத்துக்கொடுத்திருப்பது நாம் அறிந்ததுதான். நாம் எந்த தெய்வங்களை வழிபட்டாலும் அவைகளில் ப்ரஹ்ம ஞானம் என்கிற ஒரே விஷயம்தான் நடுநாயகமாக உள்ளது என்பது அறிஞர்களுக்கு தெரியாமல் போகாது. ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் செய்தவரேதான் தெய்வ வழிபாடு என்றும் பாராயண துதிகள் என்றும் அனேகம் செய்துள்ளதை நாம் அறிவோம். ஆகவே உண்மையை உணர்த்த அறிஞர்கள் எந்த விதத்திலும் பாடுபடுவார்கள் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது. பாஷ்யங்களும் தொகுப்புகளும் என சங்கரர் செய்து கொண்டிருந்த நேரத்தில் வியாஸரே அவரிடம் நேரடியாக வந்து அவைகளை ஏற்று அவருக்கு ஆயுளையும் அதிகப்படுத்தினார் என்று சங்கர விஜயம் கூறுகிறது.
எனவே தேவதைகளை வழிபடுபவர்களுக்கு பக்தி அவச்யம். அந்த பக்திக்கும் அத்வைதம் மட்டுமே ப்ரயோஜனம். அத்வைதம் அனுபவத்திற்கு வரவேண்டுமானால் தத்துவ ஞானம் அவச்யம் வேண்டும். திடீரென ஒரே நாளில் தத்துவ ஞானம் ஒரு ஸாதகனுக்கு ஏற்படுவது என்பது அத்தனை சுலபமல்ல. அதற்கு முற்பிறவி வாஸனையும் வேண்டப்படுகிறது. ஆனால் அதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது என்பதனால் நமக்கு ஒரு தெய்வ வழிபாடு என்கிற ஒரு ஸாதனையை ஏற்படுத்தியிரு க்கிறார்கள். ஸாதனைக்கு மந்த்ரங்கள் வேண்டப்படுகின்றன. மந்த்ரங்கள் குரு இல்லாமல் தெரிய வாய்ப்பில்லை. சிவனே குருவாக வருகிறார் என்று புராணங்கள் பகர்வது நாம் அறிந்ததே. எனவே அந்த சிவனான குருவும் குரு தரும் மந்த்ரங்களும் அதனால் நாம் அடையும் ப்ரஹ்ம ஞானமும் பாகவத புராணங்களால் பெறப்படுவதால் அதனை வெவ்வேறு மனிதர்களின் மனோபாவங்களுக்கு எற்ப கதைகளாக வியாஸர் போன்ற மஹான்கள் உருவகப் படுத்தியிருக்கிறார்கள். இதனால் புராணத்தில் வெவ்வேறாக கூறப்படும் தெய்வங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்றும், வழிபடும் சமயங்களுக்குள்ளும் உயர்வு தாழ்வு கற்பிப்பது தவறு என்றும், தத்துவமறிந்தவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வழி நின்று ஒன்றே சமயம்- ஒன்றே மந்த்ரம்- ஒன்றே தெய்வம்- ஒன்றே குரு- என்கிற அத்வைத அனுபவத்தை நாளும் அடைய வேணும் என்கிற வேண்டுதலுடன் இந்த சிந்தனையை நிறைவு செய்வோம் !

Similar topics
» குரு வழிபாடு -2- பிறவிதோறும் தொடரும் குரு
» வியாதி குணமாக மந்த்ரம்
» குரு பரம்பரா நமஸ்காரம்
» ந குரோரதிகம் ஞானம் - குரு தத்வம்
» ஸ்ரீ குரு பாதோதாக மஹிமை
» வியாதி குணமாக மந்த்ரம்
» குரு பரம்பரா நமஸ்காரம்
» ந குரோரதிகம் ஞானம் - குரு தத்வம்
» ஸ்ரீ குரு பாதோதாக மஹிமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum