ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 6:58 am


ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ ப்ரகாசாத்ம குஹானந்த மூர்த்தயே தே நமோ நம:
ஸ்ரீ குஹசித்அனந்தானந்த நாதாக்ய குரவே தே நமோ நம:

* ஓம் அஸதோமா ஸத்கமய * *தமஸோமா ஜ்யோதிர்கமய * *ம்ருத்யோர்மா அம்ருதம் கமய*

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.
(ஆக்கியது – ஸ்ரீ அருட்சக்தி நாகராஜன்)

1. ஸம்ப்ரதாய குரு ஸ்தோத்ரம்

ஞான யக்ஞம் என்கிற அறிவு வேள்விக்கு வழிவழியாய் வந்த குரு வழிபாடுதான் உயிர் வடிவினது. (ப்ராண ரூபம் என்பர்). எனவே மஹா வாக்யத்தைஉணர்த்துபவராகிய ஸத்குரு பரம்பரையை பயிற்சியாளன் (ஸாதகன்) முதலில் வணங்கவேண்டியவனானதால் பத்ததியின் தொடக்கத்தில் அவ்வாறான துதிகளைக் கூறி வணங்கும்படி ஏற்பட்டிருக்கிறது.

ப்ரஹ்ம லோகம் முதல் ஆதிசேஷனிருக்கும் உலகம் வரையிலும் லோகாலோக பர்வதம் வரையிலும், எந்த தேவர்களும், வேதவிற்பன்னர்களும், உபாஸக ச்ரேஷ்டர்களும் வசிக்கின்றார்களோ அவர்களை தினமும் பலமுறை வணங்குகிறேன்.

ப்ரஹ்மா முதல் ப்ரஹ்மவித்தையை கைக்கொள்கின்ற வழித் தோன்றல் களாகியபெரியோர்களுக்கும் குருக்களுக்கும் நமஸ்காரம்.

உபாதியற்ற பரம்பொருளாயிருக்கும் தன்மை உடைத்தான நானே ப்ரஹ்மமாம்.

ஸ்ரீவித்யா வழிபாட்டின் மந்த்ரங்கள் யாவும் அடங்கின ஆம்நாய வடிவமான நிலையை ஸமஷ்டியாக வணங்குகிறான்.


1. ஸ்ரீநாதர் முதலாக தன் குருநாதர் வரையிலான
குருவின் வடிவங்கள் - 3
2. ஸ்ரீமஹாகணபதி - 1
3. சக்தி பீடங்கள் - 3
4. பைரவர்கள் - 6
5. கூட்டமான ஸித்தர்கள் - 8
6. வடுக நாதர்கள் - 3
7. பதங்கள் (சரணங்கள்) - 2
8. தூதிக்கள் - 1 0
9. ஸூர்யாதி மண்டலங்கள் - 3
10. வீரர்கள் - 10
11. ஸித்த நாமங்கள் - 64
12. முத்ரைகள் - 9
13. வீராவளி - 5
14. அக்ஷரவடிவமான மாலினி மந்த்ரம் - 51
15. மந்த்ர ராஜம் - 1
16. ஸ்வகுருமண்டலத்தின் நாதர்கள்
(மானவௌக குருக்கள்) - 8

*மொத்தம் -- 187
இவ்வாறான தேவதைகளுக்கு வந்தனம் செய்த பின்பு, ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேƒவரன் என்ற காரிய ப்ரஹ்மாக்களைபோன்ற தொழிலில் - ஒரு ஸாதகனின் ஆத்ம எழுச்சியை உண்டுபண்ணி, அதனை ரக்ஷித்து அதற்கு ஏற்படும் இடையூறுகளை ஸம்ஹரித்து ஸாதகளின் எதிரிலேயே கண்கண்ட பரம் பொருளாகக் காணும் உயர் ஸ்ரீ குருவுக்கு நமஸ்காரங்கள் செய்கிறான்.

இவ்வாறான ஸத்குருவுக்கு இரண்டு திருவடிகள், அதில் ஒன்று சிவப்பு(ரத்தநிறம்) மற்றது வெள்ளை(சுக்லம்) முப்புரங்களிலும் ஒளிவீசும் இதன் ஜோதியை, வாக்கினாலும், மனஸினாலும் அறியமுடியாது. இப்படிப்பட்ட ஜோதியை நான் வணங்குகிறேன்.

இதன் பின்பு-அத்வைதமாம் ப்ரஹ்மவித்யா வழிதோன்றல்களை வரிசையாக வணங்குகிறான்.

நாராயணர்,ப்ரஹ்மா, வஸிஷ்டர், சக்தி,பராசரர், வியாஸர்,சுகர்,

கௌடபாதாசார்யாள், கோவிந்தபகவத்பாதர், ஸ்ரீசங்கரபகவத்பாதர், பத்மபாதர் ,ஹஸ்தாமலகர் த்ரோடகாசார்யாள், சுரேச்வராசார்யார், முதல்தொடங்கி தன்னுடைய ஸ்வகுருநாதர் ஈராக அனைவரையும் வணங்குகிறான்


பற்றில்லா பரத்திலே பற்றை யூட்டினான்
பற்றிற்றுப் பரத்தை பற்றுவழி யருளினான்
பரத்திலே பற்றும் பாதங்கள் காட்டினான்
பரத்திலே நின்று பரமா யருளினானே.

----------------------
*
(அ) 1. குருமண்டல தேவதைகள் - 31
2. திதிமண்டல தேவதைகள் - 15
3. ஆவரண தேவதைகள் - 98
4. பஞ்சபஞ்சிகா தேவதைகள் - 25
5. ஷடாதார, ஷட்தர்சன, ஷடாம்னாய
தேவதைகள் - 18
மொத்தம் - 187
(ஆ) ஷடன்வய சாம்பவாக்ய தேவதைகள் - 187

(இந்த 187 என்ற எண்ணின் கூட்டுத்தொகை 16 (ஷோடசீ) என்பது குறிப்பிடத்தக்கது.) -------------1

---------------------------------------------------

ஸ்ரீ காஞ்சீபுர மஹா க்ஷேத்ர ஜ்யோதிஷே தே நமோ நமஃ

2. யாக மந்திர பிரவேசம் – த்வார பூஜை

ஒரு ஜீவனது சரீரமே யாகசாலையாம். இதற்கு தைத்ரீய நாராயணீய உபநிஷத்து பிரமாணமாக உள்ளது. எவ்வாறெனில்
யஜமான் - ஆத்மா
பத்னீ - ச்ரத்தையெனும் சித்தவ்ருத்தி.
இத்மம்(ஸமித்து) - சரீரம்
வேதிகை - மார்பு
தர்ப்பங்கள் - ரோமங்கள்
தர்ப்பமுஷ்டி(வேதம்) - சிகை
யூபஸ்தம்பம் - இதயம்
நெய் - ஆசைகள்
பசு - கோபம்
அக்னி - ஆத்மவிசாரம்(தபஸ்)
தக்ஷிணை - சாந்திக்குக்காரணமான எல்லாம் பரம்பொருள் என்னும் நினைவு
ஹோதா - வாக்கு
உத்காதா - பிராணன்
அத்வர்யு - கண்கள்
ப்ரஹ்மா - மனஸ்

எனவே சரீரமே யாகசாலையாகும் பக்ஷத்தில் பஞ்சகோசங்களாலான இந்த உடலிலேயுள்ள மனம் என்ற மந்திரத்தை அடையவேண்டும். இதுவே சுத்தமனம் என்கிற யாகசாலை. இப்போது இந்த மனம் அமைந்திருக்கிகும் உடலின் மேற்கு வாசலில் நிற்கின்றான் ஸாதகன்.

புருஷார்த்தாஃ ஸாகராஃ- என்கிறது பாவனோபநிஷத்து.

இதன்படி தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் என்ற நான்குவித அடைவுகளும் உடலில் முறையை, மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு என்பதாகும். எனவே உடலாகிய யாகசாலைக்கு மேற்குதிசையிலே உள்ள வாசலே தர்மவடிவமாக இருப்பதாலும், அதுவே மோக்ஷத்வாரமானதாலும் ஸாதகன் மேற்கு வாசலிலே நின்று கொண்டு பூஜையைத்துவங்குகிறான்.

முதலில் த்வாரத்தின் காவலாளிகளான பத்ரகாளி, பைரவன், லம்போதரன் என்ற மூவரை மோக்ஷத்வாரத்திலே- வேதாந்த விசாரணையோடு கூடிய சித்தவ்ருத்தி (உள்ள- செயற்கூறு) என்பதாகவும்“, பைரவன் என்பவர் ஆனந்த அடைவின் வடிவமான சாந்தவ்ருத்தி (அமைதி உள்ளம்) என்பதாகவும்“, லம்போதரன்(கணபதி) என்பவர் அம்ருதநிலை என்கிற முழு ஆனந்தம் (முழுமகிழ்ச்சியோடுள்ள உள்ளம்-ஸந்தோஷமே ஸர்வஸாதனங்களுக்கும் காரணம், அதாவது விஷயங்களிலுள்ள விருப்பத்தை எது நீக்கிவிடுமோ அது ஸந்தோஷம்) என்பதாகும் தத்துவதர்சனத்தோடு இந்த பூஜையைச் செய்யவேணும்.

தூய்மையுடை மனமென்ற துவாரந் தனிலே
தூய்மையுடை சித்தத்தை பூசைசெய்தே
தூய்மையுடை ஆனந்தச் சாந்தச் செயலால்
தூய்மையுடை மகிழ்வெய்த அடியைவைப்பாய்.!

-------------------------------

3. தத்வாசமானம்


ஜீவபாவம் ஏற்படுவதற்குக் காரணமான தத்வங்களை ஒழிக்கும் நிமித்தமாக- ஆணவ மலத்தோடுகூடின ஸ்தூலதேஹ அபிமானியான விƒவன் என்கிற ஆத்மதத்துவம்- மாயாமலத்தோடுகூடின ஸூக்ஷ்மதேஹஅபிமானயான தைஜஸன் என்கிற வித்யா தத்துவம் - கன்ம மலத்தோடுகூடின காரணதேஹஅபிமானியான ப்ராக்ஞன் என்கிற சிவதத்வம் - என்கின்ற தத்வங்களை ஞானம் என்ற நீரினால் சோதனம் செய்துகொள்கிறான், தனித்தனியாக. பிறகு ஸமஷ்டியாகவும் ஸர்வதத்வங்களையும் சோதனம் செய்து கொள்கிறான். (இந்த ஆசமனம் என்றக்ரியை நான்குமுறை செய்யப்படுகிறது. கட்டைவிரல், சுண்டுவிரல் இரண்டையும் நீக்கித்தனித்து-ஆள்காட்டி, நடுமோதிரவிரல்களை ஒன்றாகச் சேர்த்து நிமிர்த்தினால் உள்ளங்கையில் குழி ஏற்படும். இதிலே விடப்பட்ட துளிநீரை பருகுதல்- ஆசமன முறையாம் என்பது அறிஞர் கூற்று.)
ஆணவத்தில் ஆத்மனையே அடைத்து விழுங்கி
ஆணவத்தின் பின் கன்ம மதை சிவத்தால் விழுங்கி
காணாத மாயையை வித்தையால் விழுங்கி
மூணாக தத்வத்தை சோதனை செய்வாய்.!

------------------------------------------------

nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 6:58 am

4. ஸ்ரீ குரு பாதுகா மந்த்ரம்

இது ஸாதகனின் ஸ்வகுரு,பரமகுரு, பரமேஷ்டிகுரு என்ற மூவரின் மஹாவாக்யானுஸந்தானமான மந்த்ரங்களை தன் தலையில் ம்ருகீ முத்திரை(என்ற மான் முக வடிவ)அடையாளத்துடன் உச்சரித்தலாம்.

அதிவேகமாய் ஓடக்கூடிய சஞ்சலமான, பயம் நிறைந்த மனத்தோடுக்கூடிய (ம்ருகீ என்ற) பெண்மானோடு நமது மனதை ஒப்பிடுவது சாஸ்த்திர பிரமாணமாம்.(சஞ்சலம் ஹிமனஃ க்ருஷ்ணஃ-கீதை)இவ்வாறான மனஸை நிரோதம் செய்யவேதான் உச்சிக்கமலமாம் ஆயிரம் இதழ் தாமரையில் ஸ்ரீ குரு பாதுகாஸ்மரணம் என்பது ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று குரவர்களின் மஹாமந்த்ரங்களும் தத்வமஸி என்ற

மஹாவாக்கியத்தின் குறிக்கோளான பொருளின் (லக்ஷ்யார்த்தம்) விரிவே ஆகும். இனி இந்த குருபாதுகாமந்த்ரங்களில் சிலவற்றிற்கு பொருள் காணுகிறோம்.

ஸ்ரீபாதுகா மந்த்ரம் 1. ஹ்ஸ்க்ப்ரேம்

மஹாவைபவத்தோடும் அதிஸூக்ஷ்மத்தோடும் ஆனந்த ரஹஸ்யத்தோடும் கூடிய மஹாவாக்கிய விளக்கங்களெல்லாம் ஸாதகன் உணர்ந்து அந்த உணர்வினாலே ப்ரம்மபோதம் ஏற்பட்டு ஐக்கியமடையவேணும் என்ற ஒரு கருணை திருநோக்கத்தினாலே பெரியோர்கள் ஸாதகன் உயர்வடையவேண்டி மந்திரபூர்வமான அபூர்வ சொற்கூட்டுகளை அமைத்திருக்கிறார்கள். இதிலே அனேகம் இருந்தாலும் ஸாதகன் அடிமனதிலே சிலவற்றின் விளக்கங்களைக் கண்டாலும் இன்னும் காணவேண்டியவைகள் எத்தனையோ.

அவைகளை ராஜச்யாமளையாயும் ராஜயோகினியாயும் உள்ள அந்த பராசக்தியின் அனுக்ரஹத்தால் சொற்களை ஆராய்கிறான் அன்றோ. அவனுக்களிக்கப்பட்ட குருபாதுகா மந்திரம் என்ற பெயரிலே மஹாவாக்கிய உபதேசத்தின் ஒரு சிலவற்றின் விளக்கங்களை இங்கு காணுகிறோம்.

எங்கும் நிறைந்த பரம்பொருள் ஸாதகனுக்குள்ளும் இருக்கிறது. அதனை உணர்த்தியது யார்? சக்திரூபமான ஸத்குருதான். இந்த உணர்வினாலே ஸாதகன் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள இந்தப்ரபஞ்சத்தைக் காணுகிறான். இதிலே தான் அனுபவிக்கும் ஆனந்தங்கள் அத்தனையும் அக்ஞானங்கள் தான் என்பதை உணருகிறான். இவைகள் அனர்த்தங்கள். இந்த அனர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய மூலஅஞ்ஞானம் ரோகமாக ஆகி இவனை கொடுமைப்படுத்துகிறது. கொடுமைக்கு ஆளான இவன் குவலயத்திலே கூனிக்குறுகி-பின்னிப்பிணைந்து இருக்கிறான். இந்த ரோகம் இவனுக்கு நீங்கவேணும். அல்லது இவன் இதிலிருந்து விடுவிக்கப்படவேணும். இதற்கு இவ்வுடலிலேயே கொதிக்கும் சித் அக்னியில் இந்த அக்ஞானங்களையெல்லாம் போட்டு பொசுக்கி ரோகத்தை நிவர்த்தித்துக் கொள்ளவேணும். இதற்கு இவன் ஸத்குரு ரூபமான ரஹஸ்யயோகினிகளின் அனுக்ரஹ த்தினாலே ரோகங்களை நீக்கிக்கொண்டு நிலைபெறுகிறான்.

இப்படிப்பட்ட மஹா அனுபவத்தை இவனுக்கு உணர்த்தவேண்டுமே எனற கருணை திருநோக்கத்தினால் மஹாவாக்கியப் பொருளான ஹ்ஸ்க்ப்ரேம் என்ற சொற்கூட்டமைப்பு ஸாதகனுக்கு அளிக்ப்பட்டுள்ளது. உண்ணும் உணவிலே ருசியறியும் திறம் கொண்ட ஸாதகன் சொல்லும் சொல்லிலும் பொருளறிய வேண்டாமோ? என்பதாலே புரிந்து இவன் புனிதமடைய அந்த புவனத்தாய் கருணை செய்கிறாள்.

ஹ ह என்பது ஈசுவரனைக் குறிக்கும். இந்த ஈƒவரன்

ஸ स என்ற சத்தி உந்துதலால் இந்த ஸாதகனை உண்டாக்குகின்றான். உண்டாகிய ஸாதகன்
க क காரப்க்ருதியான ப்ரம்மாவினுடைய சக்திகள் என்பவர்களான வாக்தேவதைகளான வைகரீவிமர்சத்தினாலே-தான்-அனாதிவாஸனா ரூபமான, அக்ஞானமயமான விறகினாலே ஜ்வலிக்கப்படும் சித் அக்னி மண்டலம் தன்னுடைய இடுப்பு ஸ்தானமான
ப प என்ற அக்ஷர ஸ்தானத்திலே நிலைப்பெற்றிருப்பதை உணர்ந்துகொள்ளுகிறான். ரேபாகாரமான அக்னியிலே தன்னுடைய மூல அக்ஞானங்களை ஆஹூதிகளாக அளித்து சுத்தாத்மாவாக-சுயம்பிரகாச வடிவினனாக ஆகிறான்.

இந்த உணர்வையும் ஆனந்தத்தையும் இவன் இந்த ப்ரபஞ்சத்திலே நின்று கண்டு கொண்டிருப்பதனாலே-ஆனந்தம் என்ற உணர்வு இவனது அனுபவத்தில் நிறைந்திருப்பதினாலே அக்ஷரங்கள் முழுமையில்லாமல் பிந்துவோடு கூடிமட்டும் நிற்கிறது என்பதை ஸத்குரு உணர்த்துகிறான் .

ஸ்ரீபாதுகா மந்த்ரம் 2. ஹஸக்ஷமலவரயூம் -ஸஹக்ஷமலவரயீம்

தன்னிலே தன்மயமாகும் தனியொரு தத்துவம் தரணியிலே விரிந்து நிற்கிறதென்றால் அதன் காரணம் ப்ரம்ம வித்யையே. இதன் சம்பிரதாயத்திலே ஊறி வந்த பெரியோர்கள் ஸாதகன் சிறப்பதற்காக-ஒரு விரிந்த பொருளுடைய -ஞானபரமான-அஞ்ஞானம் அழியும்படியான ஆத்மஸ்வரூபம் புரியும்படியான- சொற்கூட்டமைப்புக்களை மேலும் குருபாதுகா மந்திரத்திலே அழகாக வகுத்துத் தந்திருக்கிறா“õகள். அதிலே நிலை பெற்றிருக்கும்ஆத்மன் தனக்கு அபேதமாக அந்த ஞான நிலையினை தெரிந்துகொள்ள ஸத்குரு க்ருபை தான் இங்கு வழிக்காட்டி. அவருடைய திருமந்த்ரம்தான் இவனுக்கு ஸுகுர்தமான ஒன்று .
ஸ்தூலமான தமது கால்களுக்கு பௌதீகமாக முள்ளாலும், கல்லாலும் துன்பம் ஏற்படாதவாறு பாதுகைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றனவோ அது போல ஸாதகன் செல்லும் ஆனந்த வழியிலே ஏற்படும் துன்பங்களை துடைத்து ஒதுக்கி ஒளி காட்டுமாப்போலே ஸ்ரீ குருபாதுகைகள் அமைந்திருக்கின்றன. இவைகளில் ஒன்று வெள்ளைநிறம், மற்றொன்று இரத்தநிறம். இவைகள் இரண்டும்தான் ஸாதகனுக்கு தூயவழிகாட்டி, ஞானவழிகாட்டி. ஞான ஸ்வருபம் தான் என்பதை உணர்த்தியும் பரமான்மா வெளுத்த நிறமுடையவன், ஸ்படிக நிறமுடையவன் என்பதைக் காட்டியும் அதோடு ரத்த சரணம் அபேதப்படும் போது அதுவும் இதுவாகி அக்ஞானம் அழிந்து , ஸ்படிகத்திலும் ரக்த ஒளியேறி திகழும் நிலை பாதுகாவிமர்சம் என்பர்.

பரமாத்மா சக்திகூடலால் சப்தபிரபஞ்சமானான். அவனே ஆகாய தத்துவமாய் இருப்பதனாலே விரிந்த பொருளாய் இருப்பதனாலே பஞ்சபூதத்திலே ஆகாயபூதம் அன்வயப்பட்டு மீதி நான்காக பரிணமிக்கிறான். சப்தப் பிரபஞ்சம் பஞ்சபூதமாகப் பரிணமித்ததைக் கண்டவன் ஜீவன். இந்த ஜீவன் நிவர்த்தி மார்க்கத்திலே பிரவேசிக்கவேண்டியவன். இவன் இங்கே ஞான ஸ்வரூபத்தை தரிசிக்கவேண்டியவன். இந்த அருட்தெளிவு ஸாதகனுக்கு ஏற்படுமாப்போல குருபாதுகா மந்த்ரத்திலே சில அக்ஷரக்கூட்டு அமைந்திருப்பதை ஸாதகன் உணருகிறான். அதுவே ஹஸக்ஷமலவரயூம் என்ற அக்ஷரக்கூட்டு. ஞானம் ஏற்பட்ட உடனே உத்தரக்ஷணம் அக்ஞானம் அழிந்து விடுகிறது. நிவர்த்தி மார்க்கத்திலே சென்ற இவனுக்கு அக்ஞானம் ஒழிந்து ப்ரம்மஞானம், அஹம்ப்ரம்மாஸ்மி என்ற மஹாவாக்யங்களெல்லாம் மனதிலே தோன்றும். அது எவ்வாறு எனில் சித்சக்தியான பரப்ரம்மம் அவித்யாவாஸனையின் அழிவினாலே தெரியப் பட்டமையால் ஜீவனுக்கு ஆத்மானந்தம் ஏற்படுகிறது. அந்த ஆனந்தத்திற்கு இங்கு மற்றொரு காரணமும் புரிகிறது. வாஸனாமய போக்கியம் நீங்கிய இந்த பிரபஞ்சத்திலே அதாவது பஞ்சபூதத்திலே ஆகாயம் நீங்கிய நிலையில் என்பது இங்கு குறிப்பாகும். எதனால் அக்ஞானம் நீங்கியதோ அது இங்கே பராபோத காமகலையாக பரிணமித்து நிற்கிறது. இந்த காமகலா மஹாவாக்ய விமர்சமே ஸஹக்ஷமலவரயீம் என்ற அக்ஷரக்கூட்டாக அமைந்துள்ளதாய் அறியலாகிறது. அக்ஷரத்தைப் பிரித்து அழகாக விளக்கினால் ஸாதகன் இன்னும் அழகாக புரிந்து கொள்வானோ என்ற நிலையிலே நிற்போம். ஹ என்ற ஈச்வரன் ஸ என்ற சக்தியோடு கூடி க்ஷ என்ற சப்த ப்ரபஞ்சத்தை உண்டாக்குகிறான். ம என்ற ஜீவனானவன் ல வ ர ய என்ற ஆகாச பிந்து நீங்கலான பிரபஞ்சத்திலே ஊம் என்ற நிவர்த்தி மார்க்கத்திலே ஈடுபடுகிறான்.

பிறகு ஸ என்ற சித்சக்தியானது ஹ என்ற பரமனை ஐக்கியப்படுத்தியது. க்ஷ என்ற ஸாதகனது அவித்யா நாசத்தினாலே ல வ ர ய என்ற வாஸனாபோக்கியம் நீங்கிய பிரபஞ்சம் அத்தனையும் ஈம் என்று ஒட்டு மொத்தமாக பராகாமகலையாக ஸாதகன் கண்டு போதம் கொள்கிறான். இத்தனை தத்துவங்களும் இந்த தத்துவங்கள் புரிவதற்கு காரணமாகயிருந்த மந்திரங்கள் அத்தனையும் ஸத்குருநாதனால் உபதேசிக்கப்பட்டு அதாவது ஒலி வடிவிலே கலந்து நின்று காரியங்களை புரிவிக்கிறது. ஆகையினாலே இத்தனை காரியங்களும் ஒலிவடிவிலே உலவி வருவதால் முடிவில் பராகாமகலையும் ஒலிவடிவிலே அன்வயப்பட்டு நிற்பதாலே ய என்ற வாயு பீஜ காரணத்துடன் ஈம் என்ற பராகாமகலை ஒன்றி இணைந்து விடுகிறது. ஐந்தும் வெவ்வேறாக தெரிந்த பூதங்கள், கலா

தத்துவங்கள் ஒன்றிய நிலையிலே வேறுவேறாக தோன்றிய அவைகளெல்லாம் ஒன்றாகவே இணைந்து விடுகிறது. வெவ்வேறாக தெரிவதில்லை என்பதை ஸாதகன் உணருகிறான்.

நவநாத பீஜம்

ஒலி வடிவிலே உலவிவரும் அத்தனை சப்தங்களுக்கும் மூலகாரணமாக பைந்தவ சக்தியோடு கூடி மூலாதாரத்திலே சுற்றி சுழன்றுவருகிற பரா என்ற வாக்கு நாதத்தின் கர்ப்பமாக இருக்கிறது. ஒரு ஒலியினை ஒரு மனிதன் காதால் கேட்கிறான் என்றால் அதற்கு பஞ்சபூதத்திலே ஆகாயம் முக்கிய காரணமாய் அமைந்திருக்கின்றது. ஆகவே இந்த நாதத்திற்கும் ஆகாய பூதத்திற்கும் ஒரு ஒருமைப்பாடு உண்டு. மஹத்துக்கள் இந்த நாதமயமாயிருக்கிற - ஆகாசத்தை எல்லாம் நமக்கு ஆகாசமயமான ஸத்குருநாதர்களாக க்காட்டி குருவை வணங்குவதனால் ஆகாய தத்துவத்தை புரிவித்தும், ஆகாயத்தை புரிந்துகொள்வதனால் நாத ஸ்வரூபம் தெரியும்படியாயும் அனுக்கிரஹிக்கிறார்கள்.

இதனாலே குரு பாதுகா மந்த்ரத்திலே உள்ள ஹஸக்ஷமலவரயஊம் என்ற ஒன்பது அக்ஷரங்களும் ஒன்பது விதமான நாதமய ஆகாச ஸ்வருபமான ஸத்குருநாதர்களைக் காட்டிக் கொடுக்கிறது.

உன்மனி,சமனி, வியாபினி, சக்தி, த்வனி, த்வனிமாத்ரா, இந்து, சிதி, வ்யஸ்த்தா என்கிற ஒன்பதும் நவநாதம் என்பர் பெரியோர். ஆகவே, இந்த நவநாத ஒலிகளுக்கு மேற்சொன்ன மந்த்ராக்ஷரங்களை பீஜமாக அமைத்து, எந்த நாமம் கர்ப்பமாக அமைந்திருக்கிறதோ அந்த நாத ஸ்வரூபமாகவே குருநாதர்களை ஆக்கி சாதகனை பூஜைக்கு அமைத்திருக்கிறார்கள். இதனால் இந்த அக்ஷரங்கள் ஸாதகனை நிவர்த்தி மார்க்கத்தில் இழுத்துச் செல்லும் வழியிலேயே நவநாத ஸ்வரூபமான ஸத்குருநாதனையும் காட்டி கொடுத்துவிடுகிறது. இதுவே இந்த அக்ஷரங்களின் ரகஸ்யார்த்தமாகும்.

ஸ்ரீபாதுகா மந்த்ரம் 3. ஹ்ஸௌம்ஃ -.ஸ்ஹௌஃம் (ப்ராஸாதபரா - பராப்ராஸாதா)

ஸாதகன் வேதங்களை அப்யஸிக்கவேண்டிய காலம் நீண்டு நிற்கிறது, அதற்கு அங்கமாய் உள்ள தத்துவங்களை அறியத்தக்க ஆசானை கண்டு நிற்கிறான். அந்நிலையில் உண்ட உணவு பலவகைப்பட்டதாயினும் அதனாலே ஜீரணிக்கப்பட்டதென்பது ஒன்றேபோல எத்தனைக் காலம் எத்தனை வேதம் இவன் அப்யஸித்தாலும் எத்தனை தத்துவங்களை எத்தனை ஆசான் இவனுக்கு கற்பித்தாலும் இவனடையும் சத்து ஒன்றே. இந்த ஒரே சத்தினை அடைய இவன் எந்தநிலையில் அமையவேணும்-என்ற வழியினை எவர் உணர்த்துகிறாரோ அவரே ஸத்குரு.

ஸாதகன் முதலில் காரணத்தை வேண்டி நிற்கிறான். அதற்கு காரியத்திலே ஈடுபடவேண்டும்- என்ற இந்த நினைவு அதாவது சஞ்சல விருத்தியிலே ஸ்தாபிக்கப்பட்ட ஸாதகன் அந்நிலை நீங்கிய- விகல்பமும் விருத்தியும் அற்ற நிலையில் இவன் ஸ்தாபிக்கப்படவேண்டுமானால்- இந்த உணர்வுகளையெல்லாம் மூலாதார திருத்தலத்திலே ஸ்தாபிக்கப்பட்டு இருக்கிறாளே ஒரு தாய்-பரா-அவளுடைய பரிபூரண ஸ்வருப ரஹஸ்யம் தெரியவேண்டுமானால் இவைகள் அத்தனையும் ஸாதகனுக்கு நினைத்தமாத்திரத்தில் கிடைக்கவேணுமானால் வழி எங்கே? காட்டிவிட்ட ஸத்குரு அதை உனக்கு புகட்டிவிடவேண்டாமோ? நினைத்தமாத்திரத்தில் சிவமாகலாம், (ஸ்மரண மாத்ரேண சிவோஹம்), அந்த மஹாபிரசாதம் உனக்குக் கிடைக்கும், அடைந்து இன்புறலாம் என்றார். குணமோடு கொடுத்து குவலயத்திலே உன்னை ஆட்படுத்திவைத்தார். ஸூக்ஷ்மமாகவும், ரஹஸ்யமாயும் ஸாதகன் அடைந்த அத்தனை தத்துவங்களும்-அத்தனை பிரசாதங்களும் தத்துவங்கள் ஒழிந்த நிலையில் தானாக நின்று-புவனங்கள் பதினான்கிலும் விரிந்து ஜோதி அத்தனையிலும் கலந்து பிந்துவிலே ஒடுங்கிவிடுகிறது.

எதனை எங்கு விளக்க நின்றாலும் ஸ்வரூப விளக்கம் அங்கு தேவைப்படுவதால் இந்த பராப்ரஸாதம் அடைவதற்கு ஒரு ஸ்வரூபம் தேவைப்படுவதால் அதனையும் ஒரு உருவகப்படுத்தி உனக்களித்திருக்கிறார். இதனை தந்தரம் கூறுகிறது - அனந்த சந்த்ர புவனாமிந்து பிந்து யுகாத்மனா. ஆகவே ஸாதகன் எதனை உணர அங்கு நிற்கிறானோ அதனை உணர்த்த ஸத்குரு காத்துக் கொண்டிருக்கிறார். உணரவேணும் என்ற ஸங்கல்பம் உருவாகி உணர்ந்தபின் அது விகல்பம் ஆகாமல் ஸவிகல்பமாகி கரைந்துவிட காமாக்ஷி கருணை செய்யட்டும்.

ஸ்ரீ மஹா குருபாதுகா
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை ஏற்றமிகு சக்கரத்தில் அமைத்து பூஜிப்பது என்பது உபாஸனா முறை. இந்த ப்ரம்ம வித்யா உபாஸனைக்கு துணை நின்று தத்துவங்களை தோன்றச் செய்வது சக்ரராஜமான ஸ்ரீ சக்கரம். இந்த ஸ்ரீ சக்கர பூஜைக்கு ஸாதகன் தயாராக ஆக முதலில் அவன் தன் குருவை அண்டி பரம்பரா தர்மத்தை அவலம்பித்து குருத்ரயத்தை முதலில் வணங்கவேண்டியவனாக இருக்கிறான். குருபாதுகா மந்த்ரம் அருளப்படும்போது தன்னையும் தன்னுடைய ப்ரகாசத்தையும்-தானும் ப்ரகாசமும் ஒன்றாக ஆகும் விதத்தையும் குரு காட்டிக்கொடுக்கும் வண்ணம் அதன் தத்துவம் விரிகிறது . கரசரணாதி அவயங்களுடன் கூடிய குரு ஸ்தூலமாக சிஷ்யனுக்கெதிரில் இருந்தாலும்கூட அவர் இவனது வழிகாட்டிதான். ஆனால் அவருடைய நல்லுபதேசத்தை இவன் மனனம், நிதித்யாஸனம் என்றபடி சாதனையும் பயிற்சியும் செய்து ஆத்ம ஜோதியிலே இரண்டற கலக்க வேணும். பின்பு அங்கு சொல்லிக்கொடுத்தவரும் இல்லை. கேட்டுக்கொண்டவரும் இல்லை. ஸுலபமாகவும் (அந்தர் முகஸமாராத்யா) அதுவே ஆராதிக்கப்படவேண்டிய முறையாகவும் வெளிநாட்டம் கொண்ட பூஜையால் அருளை அடைவது துர்லபம் என்பதும் (பஹிர்முக ஸுதுர்லபா) அவளது ஸஹஸ்ரநாம விளக்கத்தால் உணரலாம். இவ்வாறு ஸுலபமாக இருக்கும் அவள் ஸாதகனுக்கு சாƒவதமான ஆனந்தத்தை, நிலையான நலங்கள் யாவற்றையும் அருளுகிறாள். அதுதானே ஸாதகன் செய்யவேண்டிய கடமையாகவும் விதியாகவும் இருக்கிறது. அவளே எல்லாவற்றிற்கும் தானே முடிவுப் பொருளாக யாவற்றையும் தன்னுள் சேர்த்துக்கொள்ளும் கதி யாக இருக்கிறாள். அதனால்தான் அவளை சோபனா ஸுலபாய கதிஃ என்று அழைக்கிறோம். அப்படியாக உள்ள அவள் அமைந்திருக்கக்கூடிய அதி ஸூக்ஷ்மமான இடம் மூலாதாரம் என்பதை ஸாதகன் கண்டிருக்கிறான். அவள் அங்கு தன் அங்கோபாங்க ப்ரத்யங்க தேவதைகளுடன் அழகுற வீற்றிருக்கிறாள். ஆத்ம யோக பயிற்சியினாலே ஸத்குரு க்ருபையினாலே அவள் எழுந்து ப்ரம்மக்ரந்தியை பேதித்துக்கொண்டு இதயமான அனாஹத பத்மத்தில் அமருகிறாள். அங்கு வீற்றிருந்து உலகை நடத்தும் செயல்களையும் மேல் வைபவங்கள் நடைபெறுவதற்கான யோஜனைகளையும் மந்திரி ஸ்தானத்தில் இருந்து ஸ்புரிக்கச் செய்வதினாலே அவள் அங்கு மந்த்ரிணி என்ற ராஜச்யாமளையாக அழைக்கப்படுகிறாள்.

அந்த செயல்கள் யோஜனையிலேயே நின்றுவிடாமல் செயல்படவும் இன்ன இன்ன செயல்கள் இன்ன இன்னபடி செய்யப்படவேணும் என்கிற ஆக்ஞையையும் செய்யும் முகமாக அவளே எழுந்துவந்து விஷ்ணுக்ரந்தியை பிளந்துகொண்டு ஆக்ஞா சக்கரத்திலே நின்று மஹாவாராஹியாக கட்டளையிட்டு செயலும் ஆற்றுகிறாள். மலங்களையெல்லாம் அறுக்கிறாள். பிரபஞ்சவாழ்மனிதன் மும்மல ஸ்வரூபமானவனாக இருக்கிறான். ஆணவம், கன்மம், மாயை என்கிற இந்த ஆதிமலங்களை இவன் ஒழித்துக்கொண்டால் தானே உருப்பெறமுடியும், ஆகவே ஸ்தூல பிரபஞ்சத்திலே மனிதனுடைய மலங்களை அகற்றும் சிருஷ்டிக்கப்பட்ட பிராணியின் முகமாகவே இவள் அமைந்து ஸூக்ஷ்ம மலங்களான இந்த ஆணவாதி மலங்களை அடியோடு அழித்துவிடுகிறாள். ஸேனாதிபதியாக இருந்து இந்த அசுரக் கூட்டத்தை நாசம் செய்கிறாள். ஆகவே இங்கு இவள் தண்டினி என்ற பெயரோடு நிலை பெறுகிறாள். ஸாதகன் அமிர்த நிலையை அடைய வழியையும் மந்திரியாக இருந்து சொல்லி, வழியிலே நின்றிருக்கும் இடர்பாடுகளையெல்லாம் ஸேனாதிபதியாக இருந்து அழித்து, இவனுக்கு இந்த அமிர்த நிலையை அருளவேண்டும். அது அமிர்த ஸாகர மத்தியில் இருக்கும் த்வாசாந்தம் என்கிற மாத்ருகா கமல பீடமாகும். இதிலே ஸாதகனுக்கு வழிகாட்டிய வள்ளல்கள் ஸ்வரூபமானவளாயும் மஹா வைபவத்தோடுகூட பரதேவதை ப்ரகாசிக்கிறாள். இதுவே மஹாபீடம் என்கிற மஹாகுருபாதுகாபீடம் ஆகும். ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு என்ற மூன்று வழிக்காட்டிகளின் ஸ்வரூபமாகவும், இச்சை, கிரியை, ஞானம் என்கிற செயல் வடிவமாகவும், மந்த்ரிணி, தண்டினி, தலைவி என்கிற பதவி வடிவமாகவுமுடைய இந்த மஹாகுருபாதுகா ஸ்மரணம் நிச்சயமாக ஸாதகனை அமிர்தமயமாக்கிவிடும் என்பதில் சம்சயமே இல்லை.
இது அதிகாலை செய்யும் ரச்மிமாலை என்ற காலை வழிபாட்டில் உள்ளதன் ரஹஸ்யார்த்தமாம்.

ஒன்றந்த உருவமதை உணர்த்தி நிற்கும்
ஒன்றந்த உருவத்தின் ஒளி உணர்த்தும்
ஒன்றந்த உருவத் தோடைக்ய மாக்கும்
ஒன்றான இம் மூன்றும் தலையில் வைப்பாய் !

----------------------------------------------

ஸ்ரீநாதமண்டல மத்யஸ்த ஸ்திதாயதே நமோ நமஃ

5. கண்டா பூஜை

ஸாதகன் செய்யப்போகிற ஞானயோக பயிற்சிக்கு ஆத்ம கோசரவ்ருத்தி(தனக்கு தன்னை ஒட்டிய செயலாக)யாகிற தேவதைகளைக் கூப்பிடவேணும். அவ்வாறில்லாத எண்ணங்களாகிற அஸுரர்களை விரட்டியாக வேணும். இதற்கு நாதம் என்ற வடிவிலுள்ள சப்த ப்ரஹ்மத்தை நினைவு கொண்டால் தான் இவைகளைச் செய்ய ஸாத்யப்படும். எனவேதான் மணி அடித்தல் என்ற செயல் இங்கு செய்யப்படுகிறது.
(மணி எப்போதெல்லாம் அடிக்கவேணும் என்று நமக்கு தந்த்ரங்கள் உரைக்கின்றன-
துõபே ச புஷ்பே நைவேத்ய தீபயோஃ
கண்டா நாதம் ப்ரகுர்வீத விசேஷாத் தூபதீபயோஃ


குணத்தில் ஸத்வத்தின் தேவதை யழைத்து
குணத்தில் வேறிரண்டின் விருத்தியை யோட்டி
உணர்வினிலே ஒலிதன்னை ஒலிக்கச் செய்ய
கணகணவென மணிதனை அடித்திடு வாயே!

---------------------------------------------

ஸ்ரீதேசகால அபரிச்சின்னாயதே நமோ நமஃ

6. ஸங்கல்பம்

நாதத்தினாலே மனிதன் வடிவம் அறியப்பட்டபின் தேசம், காலம் என்றதான வித்யாஸங்களான (பரிச்சேதங்களை) உபாதிகளை ஒழிக்கும் விதமாக ஸங்கல்பம் இங்கு செய்ய வேணும். தன்னை விட வேறல்லாத சிவத்தை அறிவதே இதன் தத்வார்த்தமாம். இனி இதனை பற்றி சற்று விரிவாக காணுவோம்.

செய்யும் செயல் வைதீகமோ தாந்த்ரீகமோ எதுவாயினும் அதற்கு ஸங்கல்பம் செய்து கொள்வது என்பது சாஸ்த்ர ஸம்மதமே. இதற்கு ப்ரமாணங்களாவன -

தேசகாலாதி ஸம்சோத்ய சாஸங்கல்ப்ய மனோரதம்
கரிஷ்யே த்ரிபுராபூஜாம் மனஸ்ஸங்கல்ப சாந்தயே --(ஞானிகளின் வாக்கு)
ஸங்கல்பேன விநாகர்மம் யத்கிஞ்சித் குரதே ஜன“.
ப2லம் சாப்யல்பகம் தஸ்ய த4ர்மஸ்யார்க4க்ஷயோ பவேத்

ஸங்கல்ப மூலகாபா4வ“. யக்ஞாஃ ஸங்கல்ப ஸம்ப4வா“.
வ்ரத நியம தர்மாச்ச ஸர்வே ஸங்கல்பஜாஃ ஸ்ம்ருதா (பரசுராம கல்பஸுத்ரம்)

எனவே பூஜை, பாராயணம், மந்த்ரபுரச்சரணம், ஸ்நானம், த்யானம், விரதம் ஆகிய சகல கர்மங்களும் ஸங்கல்பம் இல்லாமல் பண்ணினால் நிஷ்பலம் என்றாகிறது.

இந்த ஸ்ரீவித்யா ஸங்கல்பத்தில் வைதீக(ச்ரௌத) ஸங்கல்பம் தாந்த்ரீக ஸங்கல்பம் என்று இருவகை உண்டு. (இது பற்றி விரிவான வியாஸம் ஸ்ரீ குருப்ரகாசமலர் என்ற ரிதம்பரா ஞான ஸபா வெளியீட்டில் காணலாம்.)

முன்னதில் ஐந்து அங்கங்களும்(பஞ்சாங்கம்)பின்னதில் 8 அங்கங்களும் (அஷ்டாங்கம்) உண்டு. இந்த அஷ்டாங்கம் என்பது தேவிமான கணனம் எனப்படும். யுகம், பரிவ்ருத்தி, வருஷம், மாஸம், தினம், தினநித்யை, வாஸரம், கடிகா என்றபடியான கணனம் இது. இதனை கணிக்கும் விதம் காலப்ரகாசிகா என்ற நூலிலும், குஹாநந்த மண்டலிப்ரசுரமான நித்யான்னிகம் போன்ற நூலிலும் ததியா பீதாம்பர பீட பிரசுரமான ஸப்தவிம்சதிரஹஸ்யக்ரமம் என்ற நுõலிலும் விவரமாகக் காணலாம்.

(பலமொழிகளில் உள்ள ஸாதக உபாஸக நண்பர்களின் சௌகரியத்தை முன்னிட்டு, அவர்களின் உபாஸனா நேரத்தை வெறும் கணனத்துக்குச் செலவிடும் காலத்தைகுறைக்கும் நிமித்தம் இந்த அஷ்டாங்க கணனம் நவீன காலவசதியில் கணினிமூலம் வாக்ய பஞ்சாங்கங்கள் போன்று தற்போது அஷ்டாங்க, வருஷ காலண்டராக அச்சிட்டு ருதம்பரா ஞான ஸபா சார்பாக வழங்கிவருகிறோம்.)

ஸங்கல்ப சோதனத்தால் ஞான த்ருப்தி உண்டாகிறது. இந்த ஞான த்ருப்தியே சித்த ப்ரஸாதமாம். இதுவே ஈஸ்வரானுக்ரஹமல்லவா? எனவே தேச கால பரிச்சேதங்களை ஸங்கல்பம் மூலம் நிவர்த்திசெய்து கொள்ளுகிறோம்.

ஸங்கல்பம் செய்து கொண்டபின் தன்னை அலங்கரித்துக்கொண்டு ப்ரமுதித சித்தனாக இருக்கவும் சிவோஹம் என்ற பாவனையை செய்து கொள்ளவும் பத்ததி விதிக்கிறது. தன்னை அலங்கரித்துக் கொள்ளுதல் என்பது ஆராதனையைச்செய்ய தன்னை அனுகுணவானாகச் செய்து கொள்ளுதல் என்பதாம். தாம்பூல தாரணத்தை செய்து கொள்ளுதல் என்பதானது ஸாதகன் வாஸனையினாலே தத்வமுணர்ந்து விமர்சிக்கப்பட வேண்டியவனானதினாலே வாஸனையோடு கூடின தாம்பூலத்தை தரித்துக்கொண்டு அதாவது விமர்ச சக்தி விளம்பனத்தை செய்துகொண்டு அதனாலே இவன் ப்ரமுதித சித்தனாக ஆகிறான்.

தொடர்ந்து கூறும் சிவோஹம் என்ற சொல் மட்டும் ஸாதகனை சிவமாக்காது. உண்மையான பாவனை வேண்டும். பாவிக்க வேண்டுமானால் அதன் உட்பொருளான தத்வார்த்தத்தை சிந்தனை செய்ய வேண்டும். செய்வோம் .

ஸபர்யா ஞானத்தை அடைய வேண்டிய ஸாதகன் ஞான பூமிகையிலே ஸதா ஏறிஏறி அப்யஸித்து ஏழு படிகளைத் தாண்டி அமைய வேணும். அல்லது அதனுடைய பாவனாதார்ட்யத்தை (நினைவின் எண்ணவலிவு) அடையவேணும் என்றாகிறது. அவ்வாறான ஏழுபடிகளின் அமைப்பைக் காணலாம்.

முதல்படி - இவனால் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவைகள் நன்றாக தெரிந்து கொள்ளப்பட்டன. மீதம் ஒன்றுமில்லை. இந்த பூமியிலேயுள்ள ஸகலஸந்தேஹங்களும் நிவர்த்தியடைந்து தன்னை மட்டுமே அறியவேணும் என்ற ஆவல் மட்டும் உள்ளது.
இரண்டாவதுபடியில் - இந்த பிரபஞ்சகட்டுக்கு அதாவது பந்தத்துக்கு காரணமான துக்கங்கள், ப்ரச்னைகள் யாவும் நாசம் செய்யப்பட்டுள்ளன. துக்கநிவ்ருத்தி ஏற்பட்டுவிட்டது.

மூன்றாவதுபடியில் - ஸகல இச்சைகளும் பூர்த்தி செய்விக்கப்பட்டுவிட்டன. இதனால் இவன் ஆத்மகாமன் எனப்படுகிறான்.

நான்காவது படியில் - தான் க்ருதக்ருத்யன் என்ற நிலையில்செயலற்றவனாகி விடுகிறான். இவ்வாறு நான்கு படிகளின் அனுபவமான கார்யக்ரமவிடுதலையை அடைந்தபின்

ஐந்தாவது படியில் - புத்தியானது தெளிந்து அதாவது நிர்மலமாகி சோக நிவ்ருத்தி யடைந்து கார்ய நிவ்ருத்தியும் அடைகிறது.

ஆறாவது படியில் - புத்திக்குக் காரணமாக குணரூபங்கள் இவனை விட்டு நழுவிவிடுகின்றன. பிறகு பிரதானமான மூலத்தில் லயமடைந்து விடுகின்றான். இதனாலே புத்தி எதையும் நினைக்காமல் சூன்யமாய் நிற்கிறது. பின்பு

ஏழாவதுபடியில் - இந்த வ்யக்தி தனிமையாக்கப்பட்டு ஸகல பந்தங்களும் விலகி கேவல சிவனாக மட்டுமே நிற்கிறான். அதாவது காரண விடுதலை அடைந்து விடுகிறான்.

இப்போது ஏழு படிகள் தாண்டி வந்த இவனே சிவனாம் இந்த கைவல்ய நிலையை அடைய வேதான் முதல் நான்கு படிகளிலே கார்யக்ரம விடுதலையும், பிறகு மூன்று படிகளிலே காரண விடுதலையும் ஏற்படுகின்றது. இங்கு ஸ்வஸ்வரூப சிவனாதல் என்பது ஸித்திக்கிறது. அதன் பின் பாஹ்ய பூஜை என்ற கர்மா இங்கு ஏது? ஆனாலும் கர்மஸாதனையிலே ஈடுபட்டிருக்கும் ஸாதகனான இவன் (அப்ஸாஸி) பயிற்சியாளன் ஆனதினால் இம்மாதிரியான பாவனையை(திடம்)உறுதி செய்து கொண்டு அடிக்கடி இம்மாதிரியான படிகளில் ஏறிஏறி பயிற்சி செய்து கொள்ள வேணும் என்றாகிறது. ஸ்தூல ஸுக்ஷ்ம காரண தேஹங்களில் தான் எனும் ஞானம் மயக்கத்தினால் ஏற்படுகின்றது. இம்மயக்க உணர்வுதான் ஜீவனுடைய துக்கங்கள் யாவற்றுக்கும் காரணமாம். துவைதமான இந்தபேதம் தான் அல்லாத தேஹங்களில் தான் என்னும் மயக்கத்தினால் ஏற்படுவது. மயக்கம் தெளிந்து யதார்த்தமான அத்வைதமான - அபேத உணர்ச்சி உண்டாவதற்கு, ஆனந்த வடிவமான ப்ரஹ்மம், சிவோஹம் என்ற பாவனை செய்தல் மிகமிக அவசியம்.

தேஹோஅஹமிதி துக்கம் சேப்ரஹ்மாஹமிதி நிச்சயஃ (மஹாவாக்ய ரத்னாவளி)
சீவனத்தால் சிவன் எனல் சீலம் இறந்தாலிந்த சீவனே யந்தச்சிவம் (சித்தாந்த தரிசனம்)

சிவன் வேறு சீவன்வேறு என்று இரண்டாய்ச்செப்பு
மவன் சிவனை என்று மறியாதான் (தக்ஷிணாமூர்த்தி துதி)

தேசகால பொருளதனை தேய்க்கு முகமாய்
வாசனையில் அடுத்ததாக ஸங்கல்பம் செய்க
ஈசனாக அவனே ஏழுபடி தாண்டின்
பூசையினை செய்வதற்கு உரியோனாவான்
சிவனே அவனாய் அமர்ந்த பின்னாங்கே
தவமான பூசைக்கு தகுதியே தானாம்!

----------------------------------
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 6:59 am

7. ஆஸன பூஜை

(முதலில் ஆஸனம் எவ்வாறு இருக்க வேணும் என்று காணுவோம். தரையின்மீது தர்ப்பாஸனம் என்ற குசாஸனம். அதன்மீது புலி அல்லது மான்தோலாஸனம். அதன் மீது வெள்ளை வஸ்த்திரம் போட்டு அமர்தல் வேண்டும்.)

இங்கு மந்த்ர புரோக்ஷணமும் திக்குகளில் பூஜையும் செய்ய பத்ததி விதிக்கிறது. இதன் தத்வார்த்தம்-

நமது மனமே ஆஸனம். அது சுத்தமாகவும், ஸத்வ குணத்தோடும் இருத்தல் அவசியம். அதாவது மனம் ப்ரஹமஞானத்தோடுள்ளது என்பது பொருள். மேலும் தத்வமஸி என்ற மஹா வாக்யானுஸந்தானத்தோடு அமைதல் என்பதே இங்கு உணர்வாம்.

सौ: - (स + : + ओ) இதில்
स - தத்பதம்
: - த்வம்பதம் (விஸர்க்கம்-ஹகாரம்)
ओ - அஸிபதம்

இவ்வாறான ஞானம் திடப்படவேதான் இந்த ஸௌஃ என்ற மந்த்ர அபிமந்த்ரண தீர்த்தப்ரோக்ஷணம் (மனமாகிய) ஆஸனத்தில் செய்கிறோம்.

மேலும் ஸ்திரஸுகமாஸனம் என்ற யோக ஸூத்ரத்தின்படி தான் ப்ரஹ்மா பின்னமானவன் என்ற மஹிமையிலே அவ்வாறான ஆஸனத்திலேதான் இவன் அமரவேண்டியவ னானதினாலேதான் மஹாவாக்யானுஸந்தானம் செய்ய வேண்டியவனாகிறான்.

யோகாஸனாய நமஃ -இது ப்ரஹ்மமும்,ஆத்மாவும் ஒன்றென உணரும் யோகத்திற்குரிய சுத்தமனம்

வீராஸனாய நமஃ - தனக்கன்னியமாகத் தோன்றும் உலகை தான் என்கிற அஹந்தையில் லயம் செய்கின்ற வீரமனம்

சராஸனாய நமஃ - ஆனந்தத்தை நினைக்க வைக்கும் விமர்சவடிவ மனம் ( சம் ஸுகம் ராதி3 ததா1தி3 இதி சரம்)

ஆதாரசக்தி கமலாஸனாய நமஃ - மூலாதாராதி ஆதார கமலங்களில் அவைகளே பாஞ்ச பூதிக ஸ்தலங்களாகவும், அக்னி மண்டலாதி கார்ய ப்ரஹ்மாக்களின் வடிவமாகவும், உள்ளதால் அதிலே உறையும் படியான சித் சக்தியை உணரும் நிலை இங்கு உணர்த்தப் படுகிறது.

ஓம் என்ற பீஜம் - ப்ரகாச வடிவ சிவத்தை உணர்த்தவும் ,

ஹ்ரீம் என்ற பீஜம் - பஞ்சபூதம் 5 + ஸூர்யசந்த்ரர்கள் 2 + மனம் 1 ஆக இந்த 8 ஐயும் குறிக்க இங்கு உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான ஆஸனத்தில்தான் ஸாதகன் உட்கார வேணுமென்றதற்கு எங்கணும் நிறை சித்சக்தியை வடிவ விளக்கம் (ஸ்வரூபவிமர்சம்) செய்ய வேணுமென்ற தத்வத்தை உணரச்செய்தல் என்பதாம்.


பிறகு தேஹோநவரத்ன த்வீபஃ என்பது உபநிஷத் ப்ரமாணமானபடியால் இந்த உடலே ஒரு தீவாகிறது. 12 கலைகளோடு கூடிய தேஜோமண்டலமான ஸூர்யனின் மத்தியில் அமிர்த வடிவிலுள்ள பரம்பொருள் வடிவானவனே இந்த உடலில் உள்ள க்ஷேத்ரக்ஞனான தீவுநாதன் ஆத்மா என்று உணரவே ரக்த த்வா தச சக்தி யுக்தாய த்வீபநாதாய நமஃ என்று பூமி பூஜையாம்.

தன்னிலே தான் தோன்றும் மஹிமையி லமர்ந்து
தன்னிலே மலர்தன்னைத் தூவிய பின்னங்கே
தன்னுடைய யாக்கையினை தான் காத்து நிற்க
தன்னுடைய முத்தேஹத்திற்கு மிங்கே காப்பாம். !

------------------------------------------
8. தேஹரக்ஷை

ஸாதகனின் மூன்று தேஹங்களிலும் நிரந்தரமாய் வஸிப்பவள் தேவி. அவளைக் கூப்பிட்டு தன்னுடைய ஜீவபாவத்தை ஒழித்துக்கொள்ளவும் இன்னொன்றாக எதையும்காணும் (த்வைத) பயத்தினின்றும் இவனைக்காப்பாற்றவும், கோரியே இங்கு உடலின் காப்பைச் (ரக்ஷையை) செய்யும் படி விதி. மூன்று தேஹங்களிலும் இந்த காப்பு ஏற்பட வேண்டியே மூன்றுமுறை இந்த சரீர வியாபகம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு யாகசாலைக்குக் காப்பாக உள்ள தேவதைகள் குரு, கணபதி, துர்க்கா,வடுகன், யோகினிகள்,க்ஷேத்ரபாலகர் என்பவர்களானதினாலே அவர்களையும் இந்த சரீரத்திலேயே கண்டு ரக்ஷையைக் கோருகிறான்.

------------------------------------------------

9. அக்னி ப்ராகார திக்பந்தம்


அபேத தர்சனம் என்ற இன்னொன்றாகக் காணாத பார்வை ஏற்பட மனஸை ஞானம் சூழும்படியாக வைத்துக் கொள்ள வேணும். ஞானம் என்பது அக்னியே. (ஞானாக்னி பஸ்மாத் குருதே...கீதை). எனவே ஸாதனையைச் செய்யும் இந்தஸாதகனின் அருகில் (பேதநாட்டங்கள்) நாமம், ரூபம் இவைகளை நாடும் அசுத்த மனஸைத்தடுக்கவே இந்த திக்பந்தம் என்பது அவசியமாகிறது.

--------------------------------------------

ஸ்ரீ.ஸச்சிதைக்ய ஸுஸம்பூத விக்ரகாய நமோ நமஃ

10. தியானம்

(பாவிக்கவேண்டிய உபாஸனையின் வடிவத்தை தியானித்தல், அனுஸந்தானம் செய்தல்)
பூஜை, உபாஸனை என்பது மூன்றுவகையாம். அவை பரா, பரா(அ)பரா, அபரா எனப்படும். ஞான காண்ட விசாரமானதால் இங்கு பரா என்பதையே சிந்தனை செய்கிறோம். அதாவது ஒருவன் ஸதாகாலமும், நிரந்தரமாய் தான் சிவோஹம் பாவனையோடு செய்யும் எந்தக் செயலானாலும் அது பூஜையே. இதுவே எதிலும் உயர்ந்த தாகக் கூறப்படுகிறது. (உத்தமா ஸா பராஞேயா) இதன் பெருமையை ஸ்ரீ பகவத் பாதர்களின் ஸௌந்தர்யலஹரி ஸ்லோகம் ஜபோ ஜல்பஃசில்பம்....... என்றதில் அறியலாம். மேலும் கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய இந்த ஐந்து உறுப்புகளால் அறியப்படுகிற விஷயங்களில் உள்ள பெயர், வடிவம் இவைகளைநீக்கி அதன் இயல்பான இருக்கிறது(அஸ்தி) ப்ரகாசிக்கிறது (பாதி) ஆனந்தமா யிருக்கிறது(பிரியம்) என்ற தன்மைகளை நாடும் ஒரு அறிவுக்கு ரிதன்பரா ஞானம் என்று பெயர்.

ஸர்வேந்த்ரிய ஜன்யேஷு ஞானேஷû யே விஷயாஸ்தேஷû ஸச்சிதா3னந்த3 அம்ச அஸ்ய அனுகத3ஸ்ய பா4னம், ந த்வஅனுகத3யோர் நாம ரூபயோஃ இத3ம் ரிதம்ப4ரா ஞானமிதி ப்ரஸித்4த3ம் ஸா பூஜா பராஞானமிதி க3த்யதே

இந்த நாட்டமே பராபூஜா எனப்படும்.

இந்த ஸகல உலகங்களும் சர அசர வடிவமானவையே. இதனை அத்வைத பாவனை (இருவேறாக காணாத நிலை) என்கின்ற அம்ருதத்தினால் நனைந்ததாக நினைக்கவேண்டும். பிறகு பேதமாகிற அத்யாஸ விகற்பங்களை முற்றுமற, ஒழித்துக்கொள்ளவேண்டும். பிறகு இந்த ஸாதகன் பரமானந்த பரிதனாக ஆகிவிடுகிறான். பின்பு மிகுந்த உத்ஸாகத்தோடுகூட மனனம் (என்ற நினைத்தலையும்) நிதித்யாஸனம்(என்ற பயிற்சியையும்) இவைகளோடு கூடிய ஆத்மாவை அனுஸரித்த செயலினால் (ஆத்மகோசர வ்ருத்தி)அத்வைத ரூபமான சிவத்தை அறிய வேண்டும். இவ்வாறு உள் வெளி என்ற பேத மில்லாமல் எங்கும் எப்போதும் எதையும் சித்தாகக் காணுவதே பரா பூஜையாம்.

இதை அனுஸந்தானம் செய்வதையே இங்கு த்யானம் என்ற நிலையில் குறிக்கப்படுகிறது.

மூவுலக மனைத்தினிலுந் தீயைச் சொரிந்து
பாவனையாஞ் செயலதனைச் செய்வாய் சிவனே!
பூவுலக மனைத்திலு மகிழ்வுதன்னைச் சொரிந்து
மேவிநிற்குஞ் சிவத்தினை அறிவாய் நீயே !

-----------------------------------------

ஸ்ரீயோகினி மண்டல பரிபூஜிதாய நமோ நமஃ

11. ஸமஷ்டிமந்த்ர அஞ்சலி

ஸ்ரீசக்ரத்திலுள்ள ஒன்பது சக்கரங்களிலும் ஒன்பது விதமான யோகினிகளின் வ்யாப்தி குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்களது தத்வார்த்தம் இவ்வாறு உள்ளது.

யோகினிகள் தத்வம் (நவ வ்ருத்திகள்)
பிரகடம் 1 ஜாக்ரத்(நினைவு)
குப்தம் 2 ஸ்வப்னம்(கனவு)
குப்ததரம் 3 ஸுஷûப்தி(ஆழ்உறக்கம்)
ஸம்ப்ரதாயம் 4 ஈச்வரவிசாரம்
குளோத்தீர்ணம் 5 குருபக்தி,குருஉபஸதனம்
நிகர்ப்பம் 6 உபதேச -சிரவணம்
ரஹஸ்யம் 7 மனனம்(நினைத்தல்)
அதிரஹஸ்யம் 8 நிதித்யாஸனம்(பயிற்சி)
பராபராதிரஹஸ்யம் 9 ஸவிகல்பஸமாதி


பின்னால் ஸாதகனால் பூஜிக்கப்படவிருக்கும் யோகினிகளின் ஸமஷ்டிவடிவத்தை முதலில் இவ்வாறு அறிந்தபின் தேஹ சுத்திக்காக ஐம் ஹ்ரஃஅஸ்த்ராய பட் என்று சொல்ல பத்ததி கூறுகிறது. இதில் ஐம் என்ற வாக்பீஜத்தினால் பரமாத்வைதமான லக்ஷ்யார்த்தத்தை உணர்த்தியபின் ஹ்ரஃஅஸ்த்ராய பட் என்றதினால் மீதியாயுள்ள ஸகல உலகங்களும் பிரகாச விமர்ச வடிவமான பரம் பொருளே என்று தெரிந்து கொள்ளுகிறான். கர்மகாண்டத்தில் இது அஸ்த்ரமானாலும் ஞானகாண்ட விமர்சத்தில் தத்துவஞானமே என்று தெளிதல் வேண்டும்.

நவதாபூஜனம் தத்ர யோகி3னீனாம் விதீயதே
ஏதாஸ்து ஸததம் ரக்ஷாம் குர்வதாம் யோகினிகணா (ஸ்ரீ த்ரிபுராஸ்தவராஜம்)

ஒன்பதான யோகினிகள் நினைவில் நிறுத்தி
தன்னிடத்தில் பேதங்களை தூய்மை செய்வாய்!

----------------------------------------------

ஸ்ரீ குர்வனுக்ரஹ விக்ஞானசாஸ்த்ர தத்வாயதே நமோ நமஃ

12. அனுக்ஞை


முதலில் ஆதிகுரு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியிடம் பூஜைக்கு அனுமதி பெற்றுக்கொள்ளுதல் நடைபெறுகிறது. பக்தகோடிகளுக்கு அருள் செய்யும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி பரமகுருவே ஸ்ரீ சக்ரயாகம் செய்யப்போகும் எனக்கு உத்தரவு கொடுத்தருளுவீராக
. தொடர்ந்து ஸ்ரீ பைரவரையும் ப்ரார்த்திக்கிறான்.

ஊழிக்காலத்து தீயை ஓத்தவரே மிகவும் கொடூரமான பெரிய தேஹத்தோடு கூடினவரே உங்களுக்கு வணக்கம், எனக்கு அனுமதி தருவீராக. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை த்யானிக்கும் போதே அவரது மூலமந்த்ரானுஸந்தானம் செய்வது என்பது ஸம்ப்ரதாய யுத்தமானதால் அதன் பொருளை இங்கு விரிவாக அறியலாம்.

ஓம் நமோ ப4க4வதே த3க்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதா4ம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

ஓம் - ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரணம் என்ற அண்டத்தின் முடிவிடமாயும் ஆத்மாவைவிட வேறில்லாததாயும் தத்வமஸி முதலிய மஹாவாக்யங்களின் பொருளாய் உள்ளதுமான பரம்பொருள்.

பகவத் - ஸகல அறிவாளி (ஸர்வக்ஞன்) ஸகல சக்திமான்

தக்ஷிண - ஸகல விதமான ஆக்கல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்யும் வடிவுடைய பரம்பொருள்.

அமூர்த்தி - மூர்த்தி விக்ரஹங்கள் எதுமில்லா நிர்க்குண நிராகார பரம்பொருள். (ஸமஷ்டியாக முழுஆற்றலுள்ள ஸத்வகுணத்தோடு கூடிய மாயையை அனுஸரித்த பரமாத்மா.)

யே - 4ம் வேற்றுமை உருபு. (ஐக்யத்தைக் குறிக்கும்)

நமஃ - இதில் உள்ள ம கர்மத்தையும், போகத்தையும் தர்மங்களாகக் கொண்ட, மனம் வசப்பட்ட ஜீவன்.

ந மேற்கண்ட பொருளுக்கு நேர் எதிர்மறை அதாவது நான் ஜீவனல்ல என்பது.
மஹ்யம் - மஹிமை(புகழ்)

மேதை - ஸந்தேஹம், விபரீதம் என்ற பாவனைகளற்ற ஞானம் - அறிவு

ப்ரக்ஞாம் - ஜீவனையும் ப்ரஹ்மத்தையும் ஐக்யப்படுத்தும் ஸமாதி வ்ருத்தி

ப்ரயச்ச - (இது க்ரியாபதம்) ஜீவபாவத்தை விட்டுவிட்டு பரமாத்மாவான எனக்கு, ஆவரண விக்ஷேபங்களை உண்டு பண்ணும் அவித்யையை நசிப்பித்து நீக்கமற நிறைகின்ற ஸமாதி வ்ருத்தியை அருள்வாயாக.

ஸ்வாஹா- மேற்கண்ட துண்டாடமுடியாத, எங்கணும் நிறைந்தசெயலை ஸஹஜநிலையில் லயிப்பிக்கிறேன்.

திரண்டபொருள் - (தாத்பர்யம்)

எல்லாம் வல்ல பரம்பொருள் நானே. உபாதியற்ற ஞானம் எனக்கு அருள்வாயாக. அந்தஞான வ்ருத்தியிலேயே நான் அமிழ்ந்து ஸஹஜ ஸமாதியிலே நிலைத்து விடுகிறேன்.
சாந்த விருத்தியை அருளுபவர் பைரவர் என்பதை முன்பே த்வார பூஜையில் கண்டோமல்லவா.மேலும் அனுமதிகோரும் இந்த இடத்தில் முதலில் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயமயகார்யங்களுக்கு ஆதி பரம்பொருளான தக்ஷிணாமூர்த்தியையும், தொடர்ந்து லயம் செய்யும் செயலில் தன்னுள்ளேயே யாவற்றையும் ஒடுக்கிக்கொள்ளும் காரியத்தைச் செய்யும் பைரவரையும், இங்கு நினைவு கொள்வதானது மற்றொரு தத்வத்தையும் இங்கு நமக்கு உணர்த்துகிறது. எதுவெனில் ஸ்ருஷ்டிக்கும் லயத்துக்கும் இடையில் உள்ளது வர்த்தமான காலப்ரபஞ்சம். அதாவது இந்த சரீரம் . எனவே இந்த பூஜா யஜனகார்யம் ஸ்திதி காலமான வர்த்தமான காலத்தில் நடைபெற வேண்டியதை நினைவுபடுத்துகிறது. மேலும் தேவியின் புருவங்கள் மேல் துõக்கிய நிலையில் (ஊர்த்வ ப்ரூவிப்ரமே..) உள்ள காலத்தை ஸங்கல்பத்தில் நினைவு கொண்டதையும் இங்கு உறுதிப்படுத்துகிறது.

தன்னைத்தான் பூஜை செய்ய அனுமதி பெறவே
தானான மூர்த்தி யெனும் தெய்வம் பணிவாய்.

--------------------------------------------
ஸ்ரீ ஸ்வாத்மபஞ்ஜரஸம்லீன தேஜஸே தே நமோ நமஃ

13. லகு பிராணப்ரதிஷ்டை

இந்த ப்ராணப்ரதிஷ்டை என்பது பாவனாரூப மானஸிக க்ரியை ஆகும்.

நாம் பூஜிக்கவிருக்கும் தேவியை வெளியில் நமக்கு எதிரிலிருக்கும் ஒரு சக்ரத்தில் தேவியின் ஸாந்நித்யத்தைப் பொருத்தல் என்பதே அதன் பொருள்.

1. உபாஸனையிலே இருக்கும் ஸாதகன்
2. அவன் அமைந்திருக்கும் இந்த பிரபஞ்சம்
3. அதனை இயக்கும் சித்சக்திக்கு வேறுபடாத பரம் பொருள்.

இந்த மூன்றும் ஒன்றே என்ற ஐக்கிய உணர்ச்சியே ப்ராணப்ரதிஷ்டையாம். பிராணன் என்பது ஆனந்தம். அதாவது ஸுகம். இதுவே சித்சக்தி. இது எப்போதுமே தனது மஹிமையிலே(புகழ்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்ற உணர்வு ஸாதகனுக்கு இங்கு ஏற்படவேணும். ஸ ப4கவஃ கஸ்மின் ப்ரதிஷ்டித இதி ஸ்வமஹிம்னீதி ஹோவாச (வேதம்) நிலையான மங்களமான இடத்தில் சித்சக்தி ஸ்திரமாக வசிக்கிறாள். கல்யாண சைல நிலயா (லலிதா திரிசதி) ப்ராணோ ப்ரஹ்ம, க1ம் ப்ரஹ்ம, க2ம் ப்ரஹ்ம என்பன ச்ருதி ப்ரமாணங்கள்.

இனி இதில் வரும் சில மந்த்ரங்களின் பொருளை அறிவோம்.

ஓம் ஹ்ரீம் க்ரோம் - ப்ரஹ்மசக்தியான பீஜமானது மாயா சக்தியானால் விகஸித்து அங்குச பீஜ கீலகத்தினால் பேத நாட்டம் நீக்கப்பட்டு ப்ரகாசிக்க்கிறது.

ஓம் ஹம்ஸஸ்ஸோஹம் ஸோஹம் ஹம்ஸஸ்சிவஃ- இது மஹாவாக்யோபதிஷ்டாவாகிய ப்ரஹ்மமே நான் மங்கள வடிவமான பரசிவமே நான்தான் என்பது.

இவ்வாறான மங்களகரமான சிவசக்தி எங்கே ப்ரதிஷ்டை செய்யப்படுகிறதென்றால் (யம், ரம், லம், வம், ஹம்,) +(†ம், ஷம், ஸம்) என்றபடி பஞ்சபூதங்கள் ஐந்தும், மனம், புத்தி, அஹங்காரம் என்ற மூன்றும் சேர்ந்த புர்யஷ்டகம் அதாவது அஷ்டப்ரக்ருதிகள் என்றதான இந்த சரீரத்தில் என்று தெரிகிறது.

எனவே இதன் மந்த்ரமே இந்த பிரதிஷ்டையின் பொருளாய் அமைந்திருக்கிறதை உணரலாம். ஸாதகனும், அவனின் ஆத்மஸ்மரூப சித்சக்தியும் ப்ரபஞ்சமும் அதனின் உள்ளார்ந்த பரம் பொருளும் ஒன்றே என்ற ஒற்றுமை உணர்ச்சி இங்கு திடப்படுகிறது.

ஸாதகன் தான் பூஜிக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கு விரிவான பிராண ப்ரதிஷ்டா கர்மாவை ஏற்கனவே செய்திருக்கிறான். இருந்தபோதிலும் ஒவ்வொருபூஜையிலும் தினமும் இந்த ப்ராணப்ரதிஷ்டை செய்யப்படவேணுமா? என்பது ஒரு வினா. இது ஆராயப்படக்கூடியதே.

பாஞ்சபௌதிகமான யந்த்ரத்தை ஸமஸ்காரங்கள் செய்து அதனின் சித்சக்தியை முன்பே விரிவான முறையில் மந்த்ரபுரச்சரணத்தோடு ஹோமங்களும் செய்து ஸம்பாதம் செய்து ப்ராணப்ரதிஷ்டை செய்துள்ளான். பாஞ்சபௌதிகமான பொருளானதிலும், ஜடவஸ்து என்று குறிப்டப்படுவதாலும் இந்த ஸாதகன் பூஜையின் போது மட்டுமே அகண்டாகாரவ்ருத்தி வடிவ சைதன்யமாக தற்காலிகமாக செயல் படுகிறதாலும், பூஜையை

முடித்துக்கொண்ட உடனேயே லௌகீக கர்மாக்களின் ஈடுபடுகிற காரணத்தாலுமே ஒவ்வொரு பூஜா காலங்களிலும் லகுவாக (இந்த நினைவு திடப்படுவான் வேண்டி) ப்ராணப்ரதிஷ்டை என்பது விதிக்கப்பட்டிருக்கிறது என்று உணரவேணும்.

(ஸாதகனின் வலதுகை மூன்று விரல்களினால் ஸ்ரீ சக்ரத்தை தொடுதலே ப்ராணப்ரதிஷ்டையாம்) மனமும் - ஸ்ரீசக்ரமே. ப்ரபஞ்சமும் - ஸ்ரீசக்ரமே . எதிரிலுள்ள பாஞ்சபௌதிகமான யந்த்ரமும் - ஸ்ரீசக்ரமே. இந்த மூன்று சக்ரங்களின் ஐக்யபாவனைக்காகவும் தினமும் ப்ராணப்ரதிஷ்டை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறியலாம்.

தரணியுந்தானும் பூரணமும் ஒன்றேயெனும்
வீரமான எண்ணமிது ப்ராணப் பொருத்தல்
-------------------------------------------
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:00 am

ஸ்ரீப்ரபஞ்சாக்ருதி சக்ரஸ்தமூலபூ தாயதே நமஃ

14.மந்திரபூஜை

நாமம், ரூபம் இவற்றோடு கூடிய இந்தப்ரபஞ்சமும்,அதில் அமைந்திருக்கிற மனமும், சச்சிதானந்தமாகிய சித்சக்தியினுடைய அபிவியஞ்சகங்கள் என்ற பாவனைதான் இந்த 44 மந்திர பூஜையாம். இதன் ஒவ்வொன்றின் தத்வார்த்தம் காணுவோம்.

1. அம்ருதாம் போநிதி - அம்ருதக்கடல். அபாரமான நாசரஹிதமான எங்கும் நிறைந்துள்ள இன்பச்சக்தி. அது நகரத்தின் வெளியிலும் உள்ளது.
2. ரத்தின த்வீபம்- ரத்தினத்தீவு. சித் என்ற கடலில் தோன்றும் ஜடம் என்ற கற்பனைப் பொருள். இதுவே தீவு எனப்பட்டது. (தேஹோ நவரத்ன த்வீபஃ)
3. நாநாவ்ருக்ஷ மஹோத்யானம் - பலவகை மரங்களோடு கூடிய உத்தியானம். இது லிங்க சரீரமே. பலவகையான கர்ம வாஸனைகளுடன் கூடியது . சரீர ஜீவனைக் குறிக்கும்.
4. கல்ப வாடிகை - கற்பக மரங்களுள்ள சோலை. இது மனமே. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரம் போன்று இந்த மனமும் ஒன்றை நினைத்தால் அது எப்போதாவது எந்த ஜன்மத்திலாவது நிறைவேறாமல் போகாது. ஏனெனில் மனத்தின் எண்ண அலைகள் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது. (கல்பகோத்யானம்- பாவனோபநிஷத்)
5. ஸந்தான வாடிகை, 6. ஹரிசந்தன வாடிகை, 7. மந்தார வாடிகை,8. பாரிஜாத வாடிகை, 9. கதம்ப வாடிகை - பஞ்சபூதங்களின் திரண்ட உருவமே அந்தக்கரணம். மேற்கண்ட ஐந்தும்- ஸத்வ ஸமஷ்டியான மனம், புத்தி, சித்தம் , அஹங்காரம், உள்ளம் என்ற ஐந்தைக் குறிக்கிறது.

மேற்கண்ட இந்த வாடிகா பஞ்சகம் 5
அந்தக்கரணபஞ்சகம் 5
சப்தாதி விஷயப்பகுதிகள் 5
ச்ரோத்ராதி ஞானேந்த்ரிய பகுதி 5
பஞ்சபூதம் 5

இந்த 25 தத்வங்களும் உலோகக்கோட்டை, இரத்தினக்கோட்டை என்று 25 பிரகாரங்களாக உள்ளன என்று லலிதோபாக்யானம் கூறுகிறது. (பஞ்விம்சதி தத்வாத்ம பஞ்சவிம்சதிவப்ரகே)

10 . புஷ்பராக ரத்னப்ரகாரம்
11. பத்மராக ரத்னப்ராகாரம்
12. கோமேதகரத்னப்ராகாரம்
13. வஜ்ரரத்னப்ராகாரம்
14. வைடூர்யரத்னப்ராகாரம்
15. இந்த்ரநீலரத்னப்ராகாரம்
16 . முக்தாரத்னப்ராகாரம்
17. மரகதரத்னப்ராகாரம்
18. வித்ருமரத்னப்ராகாரம்
இந்த ஒன்பதும் நவதாதுக்களை குறிக்கும். அதாவது மாமிசம், ஓஜஸ், மேதை,அஸ்தி,த்வக்,சுக்லம்,ரோமம்,சுக்லம், உதிரம், என்பன.
19. மாணிக்ய மண்டபம் - ஓஜஸின் கூட்டம். இதயம்.
20. ஸஹஸ்ரஸ்தம்பமண்டபம் - ஸஹஸ்ராரபத்மம். உச்சிக்கமலம்.
21. அம்ருதவாபிகை - த்வாதசாந்தம் 12 தளகமலம்
22. ஆனந்தவாபிகை - லலாடமத்தி(நெற்றி)
23. விமர்சவாபிகை - ப்ரூமத்தி
மேற்கண்ட 21,22,23 மூன்றும் வாபிகள். வாபி என்றால் ஜலம் நிறைந்த இடம். (ஓம் ஆபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ரஹ்ம........ ச்ருதி) எனவே இவை மூன்றும் நிதித்யாஸனம், ஸமாதி, ஸஹஜஸமாதி என்பனவற்றையே குறிக்கும்.
24. பாலாதபோத்காரம் - 25. சந்த்ரிகோத்காரம்
இவை இரண்டும் ஸந்தோஷத்தைக்கொடுக்கும் விமர்சரூபமான வ்ருத்தியாம். (இதுவே ஸூர்யத்வாரம், சந்த்ரத்வாரம் என்பர்)
26. மஹாச்ருங்காரபரிகை -- உள்நாக்குத்தானம். சிருங்கார சிகரத்தின் நுனி. இந்த இந்த்ரயோனியே மனோலயத்தானமாம். பரிகை என்றால் அகழி. இந்த அகழைத்தாண்டினால் தான் அமனஸ்க நிலை ஸித்திக்கும்.
27. மஹாபத்மாடவீ - இதயம் அல்லது ஸஹஸ்ராரம்.
28. சிந்தாமணிக்ருஹராஜம் - சுத்தஸத்வப்ரதானமான அந்தக்கரணம்.
(இனி வருபவை இதன் வ்ருத்திவிசேஷங்களே.)
29. பூர்வாம்னாய பூர்வ த்வாரம்,
30. தக்ஷிணாம்னாய தக்ஷிணத்வாரம்,
31. பச்சிமாம்னாய பச்சிமத்வாரம்,
32. உத்தாரம்னாய உத்தரத்வாரம் - இவைகள் நான்கு வேதங்களையும் அதன்ஸாரமான மஹாவாக்யங்களையுமே குறிக்கும்
33. ரத்னப்ரதீபவலயம் - விவேக ரூபமான விக்ஞான வ்ருத்தி.
34. மணிமய மஹாஸிம்ஹாஸனம் - குருநாதர் போதித்த மந்த்ரத்தின் அனுஸந்தான வ்ருத்தி.
35. ப்ரஹ்ம மயைக மஞ்சபாதம்,
36. விஷ்ணு மயைக மஞ்சபாதம்,
37. ருத்ர மயைக மஞ்சபாதம்,
38. ஈƒவர மயைக மஞ்சபாதம்
மூலாதாரம் முதல்அனாஹதம் வரை ஸ்ருஷ்டி,ஸ்திதி, லயதிரோதானங்களின் சக்தி.
39. ஸதாசிவ மயைகமஞ்சபலகம் - விசுத்தியில் அனுக்ரஹசக்தி.
40.ஹம்ஸதூளிகா தல்பம் - ஆக்ஞையில் பிரளயம் (அல்லது) ஸுஷுப்தி
41. ஹம்ஸதூளிகாமஹோபதானம்- அவித்யை - அக்ஞானம்
42. கௌஸும்பாஸ்தரணம் -ஸமஷ்டி அஹங்காரம்
43.மஹாவிதானகம் -அவ்யக்தம் - மஹத்தத்வம்
44.மஹாமாயாயவனிகா-மூலாக்ஞானம்-யோகமாயை.

இவ்வாறு இதன் தத்வங்களை பாவித்தல் வேண்டும் என்பது தத் ததகிலம் பா4வயேத் ......... என்று கூறியுள்ளதால் இவ்வாறு தத்வார்த்தம் காண வேண்டியுள்ளது.

பிரபஞ்சத்தை மனத் தோடொன்றாய் சேர்க்கை
பிரமத்திற் கதுவே தான் மந்திர பூஜை.

இனி 34 முதல் 39 வரை உள்ள மந்திரங்களுக்கான அருட்சக்தி எழுதிய கீர்த்தனையும் அதற்குரிய விளக்கமும்

பல்லவி ராகம் ஆரபி

மணிமய மஹாஸிம்ஹாஸனேƒவரி - மாயா(அ)தீத
மங்கள நகர லலிதேச்வரி

அனுபல்லவி

கலாதி வித்யா தத்வாவரண ரஹிதேச்வரி
நித்யத்வாதி மஞ்சபாத ஸ்வதந்த்ரேச்வரி


சரணம்

நிதித்யாஸனாரூட ஹம்ஸதூளிகோபரி
ஸமாதித்வயமான ஸர்வானந்தேச்வரி
மஹாச்மசான வ்ருத்யா வரணேச்வரி
ஸகல காமனாதி கல்பனா ரஹிதேச்வரி

தத்வவாஸனாபூரித வாக்ப்ரதேச்வரி
த்வாதசாதி சக்ரஸ்த அமிர்தகடேச்வரி
சித்பிம்ப பிம்பமான ஜீவப்ராணேச்வரி
காமேச்வர ப்ரியமான குருகுஹேச்வரி

இந்த பாடலின் விளக்கம் இதோ —

ஜீவனுக்கு போகாயதனமாக இருப்பது அவனுடைய சரீரம். இந்தசரீரமாகிற புரத்தில் ஜீவனாகிய அரசன் (க்ஷேத்ரக்ஞன்)ஆட்சி செய்து வருகிறான். ஆனால் அவனடைய ஈச்வரத்தன்மை அல்பமானது. அவன் ஸ்வதந்த்ரமில்லாதவன்.

இவ்வாறெல்லாம் ஸத்குரு உபதேசத்திற்கு முன்பு அவனுடைய நிலை இருந்தது. ஸத்குருவின் கடாக்ஷத்தினால் ஜீவத்துவமானது நீங்கியவுடன் அவன் கலாதி ஆவரணங்களினால் மறைக்கப்பட்டிருந்த தனது உயர்ந்த ஈச்வரத் தன்மையை உணர்கிறான். அப்போது ஸ்ரீ லலிதாமஹாத்ரிபுரஸுந்தரி காமேச்வரியாக அவனுள்ளே எழுந்தருளுகிறாள். இந்த நிலையில் ஸாதகன் ஸத்குரு பாதுகைகளுக்கும், காமேச்வரிக்கும் உள்ள அபேதத்தை உணர்கிறான். இவ்விதம் அவன் உணர்கிறபோது இதய குஹையிலுள்ள அறியாமை இருள் நீங்கியவுடன் காமேச்வரராகிய ப்ரஹ்மத்துக்கு ப்ரியமான காமேச்வரியாகிய சக்தியை ப்பாடுகிறான்.

பல்லவி

காமேச்வரப்ரியமான ஈச்வரி எனது இதயகுஹையில் ஸத்குரு ஸ்வருபமாக எப்படி விளங்குகிறாள் தெரியுமா? அவள் மணிமயஸிம்ஹானத்தில் வீற்றிருக்கும் ஈச்வரியாக இருக்கிறாள். நாட்டை ஆளும் அரசர்கள் ஸாதாரண ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பார். அவர்களது ஈச்வரத்தன்மையும் சிறிய அளவினதே.அன்னை காமேச்வரியோ அளப்பரிய சக்தி கொண்டவள். ப்ரஹ்மாண்டங்கள் அனைத்துக்கும் ஈச்வரியல்லவா. எனவே அவள் வீற்றிருப்பது மணிமயமான மஹாஸிம்ஹாஸனம். நம் மனதால் அவளுடைய இருப்பை அறிய இயலாது என்றால் பின்பு எவ்விதம் அறிந்து கொள்வது? சித்சக்தி வடிவமாக விளங்கும் அவள் - மாயைக்கு அதீதமாக இருப்பவர்களுக்கு மட்டுமே புலப்படுவாள். (அதாவது மூல அக்ஞானம் நீங்கியபோது) அவளிருக்கும் நகரத்திற்குள் அதாவது ஸ்ரீநகரத்துக்குள் நுழையலாம். மங்களம் என்றால் சிவம். மாயைக்கு அதீதமாக அல்லது மாயை நீங்கி எங்கும் தனதாத்மஸ்வரூபமாம் சித்சக்தியைக் காண்பவர் சிவம். அனைத்து விதமான ஐƒவர்யங்களும் அவர்களிடம் அப்போது இருப்பதால் அவர்களுடைய மனதில் ஸ்ரீலலிதேசுவரி வசிக்கின்றாள். அவள் வசிக்கும் நகரம் அப்போது ஸ்ரீநகரம் மற்றும் மங்கள நகரம் என்ற பெயரைப் பெறுகிறது. எனவே காமேச்வர ப்ரியமான குருகுஹேச்வரீ மாயாதீத மங்கள நகரத்தில் மணிமயமான மஹாஸிம்ஹாஸனத்தில் ஸ்ரீலலிதேச்வரி என்ற பெயரில் இவ்விதம் விளங்குகிறாள்.

அனுபல்லவி

இந்த மங்கள நகரத்தில் மஹாஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கும் லலிதேச்வரி - தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனுள்ளவள். அவளை எதுவும், எப்போதும், எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அவள் நித்யத்வாதி ஈƒவர தன்மையின் மேல் அமர்ந்திருக்கிறாள். அதனால் கலை, அவித்தை, ராகம்,காலம், நியதி முதலியன அந்த ஈƒவரத்தன்மைக்குபங்கம் விளைவிக்க முடியாது. ஆனால் இவைகள் ஈச்ƒவர தன்மைக்கு பங்கம் விளைவித்து ஜீவனை கஞ்சுகனாக செய்துவிடுகிறது. இதை ஆவரணம் என்பர். எவ்வாறெனில்-கலை ஸர்வக்ஞத்வத்தை பங்கப்படுத்துகிறது. நித்யத்ருப்தியை ராகம் குலைக்கிறது. நித்யத்வம் காலம் என்ற தத்வத்தினால் கட்டுண்டுவிடுகிறது. நியதியினால் ஸ்வதந்த்ரத்தன்மை இருப்பதில்லை. பூரணத்வம் அவித்தையினால் பின்னப்படுகிறது. இவ்விதம் ஈƒவரத் தன்மைகளுக்கு கலாதி அவித்யா தத்வங்கள் ஆவரணமாக அமைகின்றன என்பர். ஆனால் ஸர்வேƒவரியான லலிதையோ இத்தகைய ஈƒவரத்தன்மைகளுக்கும் மேலே அமர்ந்திருப்பதினாலே கலாதி ஆவரணங்கள் அவளுக்கு இல்லை. அதாவது ஜீவத்துவத்திலிருந்து அவைகளை நீக்கினால் தான் அவள் தெரிவாள். ஆனால் சித்சக்தி வடிவ பரதேவதைக்கு இங்கு இவைகளே -அதாவது ஸர்வக்ஞத்வம் பூரணத்வம் , நித்யத்வம், நித்யத்ருப்தி என்ற நான்கு ஈƒவரதன்மைகளும் மஞ்சபாதங்களாக அதாவது கட்டில் கால்களாக ஆகியுள்ளது. ஸ்வதந்த்ரமோ லலிதையின் கட்டில் பலகையாக ஆகிவிட்டது. இப்படி ஈச்வரதன்மைகளையே ஆளும் ஸ்வதந்த்ரம் இவளுக்கு இருப்பதால் தான் இவள் ஸ்வதந்த்ரேƒவரி என்படுகிறாள்.

சரணம்

சித்சக்தியாகும் காமேச்வரிக்கு இவ்விதம் ஸ்வதந்த்ரமாக வீற்றிருக்கும் தன்மை இயல்பானது. நாம் எவ்விதம் மூச்சு விடுகிறோமோ அதைப்போலவே சித்சக்தி வடிவ லலிதையும் ஹம்ஸதூளிகையில் ஸ்வதந்தரமாக வீற்றிருக்கிறாள். ஹம்ஸதூளிகையின் மேல் வீற்றிருக்கும் இந்த லலிதையின் பூரண இயல்பை ஸாதகர்கள் எதற்குமேற்பட்டு சென்றால் உணர்ந்து கொள்ளலாம் என்ற கேள்வி உண்மையான உபாஸனையை மேற்கொண்டவர்களுக்கு எழுவது இயல்பேயல்லவா. நிதித்யாஸனாரூட ஹம்ஸ தூளிகோபரி என்றதனால் நிதித்யாஸனவிருத்தியின் மேல் சென்றால் அவளது முழு இயல்பை அறியலாம் என்பது பதிலாக அமைகிறது. அதாவது நிதித்யாஸனாரூடமாக இருப்பது ஸமாதித்வயம். அதாவது பாஹ்யானுவித்தம் என்கிற ஸவிகல்பம் ஆந்த்ரானுவித்தம் என்கிற நிர்விகல்பம் இவை இரண்டும் முழுக்க முழுக்க ஆனந்தமே இயல்பாக உடையது அல்லவா. இப்படிப்பட்ட ஸமாதித்வயமான ஸர்வ ஆனந்தங்களுக்கும் ஈச்வரியாக விளங்குகிறாள் லலிதை. நித்யத்வாதிகளை மஞ்சபாதமாகயுடையவள் இங்கு ஸமாதித்வய ஸர்வ ஆனந்தத்தை தலையணையாக கொண்டிருக்கிறாள்.

இவ்விதம் ஸர்வ ஆளந்தமே வடிவாக உடையவள் தன் கண்சிமிட்டலில் அகில ப்ரஹமாண்டங்களையும் ச்ருஷ்டித்து காத்து லயிப்பிக்கின்றாள். அவள் தன் இமையை மேலே தூக்கும்போது (ஊர்த்வப்ரூவிப்ரமே) பிரம்மாண்டங்கள் ச்ருஷ்டிக்கப்பட்டு, கண் திறந்திருக்கும் நேரத்தில் அவைகள் காக்கப்பட்டு, இமையை கீழே கொண்டுவரும்போது அவையனைத்தும் அவளிடம் லயித்துவிடுகின்றன என்கிறது சாஸ்திரம். இவ்விதம் லயிக்கும்போது ப்ரஹ்மாண்டங்கள் அத்தனையும் அவளிடம் ஒடுங்கி விடுகின்றன. இங்கு வ்யவகாரிகமாக பார்த்தோமானால் லயம் ஏற்படும் இடம் ஸ்மசானம் என்பர். இங்கே லயத்துக்கு காரணமாக செய்யப்படும் செயல்கள் ச்மசானவ்ருத்தி என்று பெயரல்லவா. எனவே அன்னையின் புருவ சிமிட்டலில் ப்ரஹ்மாண்டங்கள் லயமடைவதால் அது மஹாச்மசான வ்ருத்தி. லயத்தை மட்டும் கூறினாலும் இங்கு ச்ருஷ்டி ஸ்திதி இரண்டையும் உபலக்ஷணமாகக் கொள்ளவேணும். எனவே மூன்று வ்ருத்திகளும் ஸச்சிதானந்த ஸ்ரூபிணியான பரதேவதைக்கு ஆவரணங்களாக அமைகின்றன. உமாவாகும் பரதேவதையைக்குறிப்பிடும்போது கேனோபநிஷத்தும் ப்ரஹ்மமாக குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ப்ரஹ்மஸ்வரூபிணிக்கு ஸமாதித்வயம் ஸர்வ ஆனந்தமாக இருப்பதால் அவளுக்கு ஸகல காமனாதி கல்பனைகளும் கிடையாது. யஸ்து ஸர்வாணி பூதான்யாத்மன்யே வானுபச்யதி ஸர்வ பூதேஷû சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே (ஈசாவாஸ்யம்) என்ற ச்ருதிப்படி தத்வ வாஸனையோடு கூடிய தேவி வாக்வாதினியாக விளங்குகிறாள். அவள் பனிரெண்டிதழ் கமலத்தில் அதாவது த்வாதசாந்தத்தில் அமிர்தகடத்தில் அமிர்தஸ்வரூபமாக விளங்குகிறாள். இந்த ஈƒவரிதான் சித் . அந்த சித்தே ஜீவனின் இதய குஹையில் அணுமாத்ரமாக உறைகின்றது. இந்த சித்ஸ்வரூபத்தை தனக்கபேதமாக உபாஸனை செய்யும்போதுதான் ச்ருதிகளின் உண்மைப் பொருளை உணர்வதும், சிறந்த வாக்கைப்பெறுவதும், பனிரெண்டிதழ் கமலத்தில் உள்ள அமிர்தகடத்தில் ஈƒவரியை அறிவதுமான ஜீவப்ரஹ்ம ஐக்யம் ஸித்திக்கும், இந்த ஐக்யமே தான் மேலான ஸித்தி என்பர் பெரியோர்.

இத்தகைய ஆத்ம ஞானமாகும் மேலான ஸித்தியை, மணிமய மஹாஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கும் ­ ஸ்ரீலலிதை சித் பிம்பமான ஜீவர்களுக்கு, அருளும்படி வேண்டி இந்த மந்த்ர பூஜையைச் செய்வோம்.
---------------------------------------------



தன்னையே எரித்துக்கொண்டு தனக்கும் பிறருக்கும் ஒளிக்கொடுக்கும் விளக்கின் தத்வார்த்தம் ஞானம் என்பதே. இந்த ஞானமேதான் அக்ஞானமான இருட்டின் நாசத்துக்கு நேரடியான ஸாதனமாம் என்ற தெளிவிற்கே தேவியின் வலது பக்கம் நெய் விளக்கு வெள்ளைத்திரியுடன், தேவியின் இடது பக்கம் நல்லெண்ணெய் விளக்கு சிகப்பு திரியுடன் வைக்கவேணுமென்பது பத்ததி. இதன் தத்வார்த்தம் காணுவோம்.
நெய் வெள்ளை சிவம் எள் சிவப்பு சக்தி
(ரத்தசுக்ல) சிவசக்தி ஸாம்யஞானத்தை ஸாதகன் கொள்வதற்காகவே இம்மாதிரியான அமைப்பின் தத்வமாம். இனி தீபத்தின் பொதுவான தத்வார்த்தம் காணுவோம்.
சுத்தமனம்(அன்பு) - தகழி (கிண்ணம்)
நெய் (அல்லது) எண்ணெய் - ஆத்மகோசர வ்ருத்தி (ஆர்வம்) (ஆத்மாவுக்கு அனுசரணையான செயல்கள்)
திரி - நாம, ரூப, உலகம் (சிந்தை)
காற்று - ப்ராணன் அல்லது நிதித்யாஸனம்
ப்ரகாசம் - அகண்ட (துண்டாட முடியாத) ஞானம்.

அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியாய் - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த யான். - என்ற தமிழ் பாடல் இதற்கு உறுதி.

தீப தேவிக்கு செய்யும் ப்ரார்த்தனையின் பொருள் .

விமர்சவடிவமான(ஞான) தீப தேவியே. எனக்கு ஸதாகாலமும் சுபமான, மங்கள வடிவமான இரண்டற்ற (அபேத) நிலை விளங்கவேண்டும். நான் தொடங்கியுள்ள இந்த (ஞானயாக) பூஜை (வடிவமான நிதித்யாஸன ஸமாதிகள்) எனக்கு (அபரோக்ஷமாக) நானாகவே நிலைபெறும் வரையில் பின்ன பின்னமான அக்ஞானவடிவ

இருட்டு சூழாமல் நன்கு நீ (என்மனதில்) பிரகாசிப்பாயாக.

இரு விளக்கு இனிய சிவசக்தியாகும்
ஒரு விளக்கு அக்ஞான இருளைப் போக்கும்
ஒரு விளக்கு தானெரிந்து ஒளியைக் கொடுக்கும்
கரு விளக்கு(ம்) பாதுகை யுமிரண்டுதானே.(கரு -கருத்து)

கி



(தீப)ஞான அடைவின் பின் வேதாந்தவாக்யத்தின் அனுஸந்தானம் செய்தல் என்ற நிலையில் இங்கு மஹாமந்த்ரத்தினால் புஷ்பாஞ்ஜலி விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இங்கு இந்த பஞ்சதசீ மஹாமந்த்ரத்தின் உள்ளார்ந்த பொருளை சற்று விளங்கிக் கொள்ள வேணும்.

ப்ரஹ்மவித்யோபாஸ்திக்கு ப்ரதான அங்கமான மந்த்ரம், வித்யை பஞசதசாக்ஷரியே . இது மிகவும் ரஹஸ்யமானதாகும். எங்கணும் நிறைந்திருக்கும் பரசித் தை தனக்கு அபேதமாக அறிவதற்காக பரமேƒவரனால் அருளப்பட்டது- சதுர் வேதங்கள், தர்மங்கள், நியாயம், மீமாம்சை, புராணங்கள், சாஸ்த்ரங்கள், ஆகமங்கள் என்றதான 14 வித்யைகள் என்பர். இவைகளில் சிறந்தவை வேதங்களே. இதனில் ஸாரமானது (1) (ஸ்பஷ்டாஸ்பஷ்ட) தெரிந்தும் தெரியாமலும் உள்ள வடிவில் காயத்ரீ . (2) எல்லாவற்றிலும் மேலானதாயும் மிகவும் ரஹஸ்யமாயும் இருக்கின்ற ஸ்ரீ வித்யை.

வேதத்தில் இந்த குப்த வித்யையான ஸ்ரீ வித்யையை காயத்ரீ போல் வெளிப்படையாகக் கூறாமல் காமோயோனிகமலா வஜ்ரபாணி. . . என்று ஸங்கேதவார்த்தைகளினால் கூறப்பட்டுள்ளது. இதையே ஸ்ரீ பகவத்பாதாளும் த்ரிகலாட்யம் த்ரிஹ்ருல்லேகாம் த்விஹஸஸ்வர

பூஷிதாம் யோ ஜபத்யம்ப தே வித்யாம் ஸோ(அ)க்ஷரபரமஸ்வராட் என்று கூறுகிறார்.

(மூன்று க காரங்கள்+ 3 ஹ்ரீம் + 3 ல காரங்கள் 2 ஹ காரங்கள் 2 ஸ காரங்கள் ஏ ஈ இருஉயிரெழுத்து) ஓ தாயே. இந்த வித்யையை யார் ஜபம் செய்கிறார்களோ அவர்கள் நாசமில்லாத பரமாத்ம வடிவினர்களேயாவர்.

இவ்வாறான மஹா வித்யையின் ஸ்வரூபம், இந்த 15 வர்ணங்களின் உற்பத்தி, உச்சரிக்கவேண்டிய காலம், பாவனைகள், 15 விதமான அர்த்தங்கள் என்று மிக விரிவான விளக்கங்களை ஸ்ரீபாஸ்கராசார்யாள் தன் வரிவஸ்யாரஹஸ்யம் என்ற நுõலில் அளித்துள்ளார்கள். அவைகளை அங்கு கண்டு தெளியலாம். இருந்தபோதிலும் இங்கு மந்த்ரத்தை அனுஸந்தானம் செய்தல் என்ற நிலையில் அதன் திரண்ட பொருளை மட்டும் நினைவு கொள்வோம் இவ்வாறு -

ஏ மாயைக்கு ஆட்படாத சித்சக்தியே. எனக்கு அவித்தையினால் ஏற்பட்டிருக்கிற பேத வ்ருத்திகளை நாசம் செய்து வியாபகமாகவுள்ள பரத்தினுடைய ப்ரஹ்மாகாரமாகும் விருத்தியை அடைவிப்பாயாக. (இதுவே தத்வமஸி மஹாவாக்யத்தின் அகண்டமான தாத்பர்யம்)

எனவே இதனால் ஸ்ரீசக்ராகாரமான உலகமும், சரீர மனமும், சித்சக்தியும், அதன் மந்த்ரமும் என்றபடியான வேறுவேறாக காணாத
அத்வைத நிலையான நினைவு ஸித்திக்கவேணும் என்பதை இங்கு அறியலாம்.

கி


ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண மென்ற மூன்று பிரிவு கொண்ட பஞ்பூதங்களாலான இந்த உடல் உபாதிகளற்ற பரசிவத்தோடு- பராசக்தியோடு ஒன்ற வேணுமென்றால் இந்த பாவனைக்கு மனமும், இந்த உடலும் , பாவனையிலாவது சுத்தமாக்கப்படவேண்டும். அல்லது சிவ பாவமாக்கப்படவேண்டும். அல்லது சாம்பவமாக்க வேண்டும். இந்த பாவனாக்ரியை தான் பூதசுத்தி என்பது. அதாவது மனஸுக்கு ஹிதமான வழியில் இந்த்ரியங்களோடு கூடிய சரீரத்தை ஸாதனைக்கு இடையூறு இல்லாமல் ஒன்றோடொன்று அனுகுணமாக செயல்படும்படியாக செய்தலாகும்.

வாக்கினைக் கடந்து ஓங்கி மற்றெங்கணும்
நீக்கமின்றி நிறைந்த அறிவினை
ஊக்கமுற்றுணர்வதற்கு இடனாதலின்
யாக்கையும் குருவாயது அரசனே - (ஸ்ரீ மத் பாகவதம், சுகர் வாக்யம்)

மன ஒருமைப்பாட்டுடன் ஸுகாஸனத்தில் அமர்ந்து
பாவனையாகச் செய்ய வேண்டும்.

யம் என்று 16 தடவைகூறி சங்கோச சரீரத்தை உலர்த்தவேணும். (அதாவது அபூர்ணத்துவம், கிஞ்சித்க்ஞத்வம், திருப்தியின்மை, (ஆசை) அநித்யத்துவம், அஸ்வாதந்தரியம் என்ற தர்மங்களுள்ளவனே ஜீவன். இதனால் குவிந்த (ஸங்கோச) சரீரத்தை (வாயு பீஜத்தால்) உலர்த்துதல்

ரம் என்று 16 தடவை கூறி உலர்த்திய சரீரத்தை எரிக்கவேண்டும். (எரித்தல் என்பது அக்னி கார்யமானதால் இங்கு அக்னிபீஜம் கூறப்பட்டது)

வம் என்று 16 தடவை கூறி அமிர்தவர்ஷணத்தால் முன்புஎரித்த சாம்பலை நனைக்க வேண்டும். ஸஹஸ்ராரத்திலிருந்து பெருகும் அமிர்தமானது முப்புரங்களை எரித்த சாம்பலை

அமிர்தமயமாகச் செய்கிறது.

லம் என்று 16 தடவை கூறி நனைந்த சாம்பலிருந்து ஒரு திவ்ய சாம்பவ சரீரத்தை உண்டுபண்ண வேண்டும். இதுவே திவ்யமான உடல். அதாவது விகாஸ சரீரம். இதில் தான் (முன்பு ஸங்கோசமான) தர்மங்கள் மிக நன்றாக பிரகாசித்து விகஸித்து விளங்கும் என்பதாம்.

எனவே சிவமாயிருந்து சிவனை ஆராதிக்கவேணுமென்பது தாத்பர்யம். (சிவோ பூத்வா சிவம் யஜேத்) மேலும் இந்த ஆராதனையின் தத்வம் ஹம்ஸஃ ஸோஹம் என்பதே. ( நானே சிவம் -சிவமே நான்) இதுவே ச்வாஸம் அல்லவா.

இந்த ஐக்ய நிலையில் அதிகநேரம் நிலைத்த பின்பு இந்த திவ்ய சரீரத்தோடு கூடிய ஆத்மஸ்வரூபத்தை மூலாதாரத்தில் ஸ்தாபித்து இந்த யாகத்தை முடிக்கவும். இப்போது சுத்த ஜீவனே. ஏனென்றால் ஹம்ஸஃ என்ற அகண்டமான ஐக்ய விருத்தியோடு அமைந்த தன்மையால் என்று உணரவேண்டும். மேலும் யம், ரம், லம், ஆகிய பீஜங்களை 16 தடவை உச்சரிக்க வேண்டிய காரணத்தை சற்று ஆராய்ந்தோமானால் என்ன விளக்கம் கிடைக்கும்?

அமிர்த கடேசனான ஆண்டவன் - சிவன், என்றும் பதினாறு என்ற சாச்வதநிலைக்கு அருளியது வரலாறு கண்ட உண்மை. அமிர்தநிலை அடையவே ஷோடசாக்ஷரி ப்ராப்தியாம் என்பது ஸித்தாந்தம். எனவே தான் ஸபர்யா அர்ஹமான சரீரம் நித்ய சாƒவதமாக விளங்கவேண்டி இங்கு இந்த 16ன் நினைவு உறுதிசெய்யவே 16 முறை பீஜ உச்சரிப்பு (சுவாஸ கணக்கு) விதிக்கப்பட்டிருக்கிறது என்று விளங்குகிறது.

அஞ்சான வுடல் தன்னை யம் மாலுலர்த்தி
அஞ்சான வுடல் தன்னை இரம்மால ழித்து
அஞ்சான வுடல் தன்னில் வம்மைப் பொழிந்து
எண்சாணுடலிதனைச் சாம்பவ மாக்கு
கி



பூதசுத்தியால் ஜீவனது அசுத்தபாவம் நீங்கப்பட்டு கூடஸ்தனான பிரகாச ஆன்மாவே மிஞ்சுகிறது. இந்த கூடஸ்த ஆன்மாவை இதய கமலத்தில் பிரதிஷ்டை செய்வதே இங்கு தாத்பர்யம்.

ஓம் - ப்ரஹ்மசக்தி
ஸோஹம் -ஆன்மஸ்வரூப பரசிவம் (ஸஃ + அஹம்)

இவை இரண்டும் ஒன்றான நிலையை இங்கு அனுஸந்தானம் செய்தலே இதுவாம். 3 தேஹங்களிலும் இந்நினைவு திடப்பவே மூன்று முறை சொல்லுவதன் பொருளாம்.

மூன்றுடல் போதைதனை மூலத்தில் பொருத்தி
ஆன்மபொருத்துதலை அறிவாற் செய்வாய்
தன்னுடைய சித்தத்தை ஒருநிலையில் நிறுத்த
வன்மையுடைமூலத்தை வழியாய்ச் சொல்லு.

கி


பிராணாயாமம் பூரகம் - ரேசகம் - கும்பகம் என்ற நிலையில் மூச்சை உள்ளுக்கிழுத்தல், வெளிவிடுதல், உள்ளே நிறுத்துதல் என்றபடி செய்யவேண்டும். இது 1-4-2 (நிமிஷம்) என்ற காலக்கணக்கில் செய்யவேண்டும் என்பர். இது பொதுவான காலஅளவு இதனை ஸாதகனின் பக்குவத்துக்குத்தக்கபடி குருவானவர் மாற்றியமைக்கலாம். பொதுவாகவே மூச்சை அடக்கி செய்யும் பிராணாயாமப் பயிற்சி ஹடயோகத்தின் பாற்பட்டதாம். ஸாதகன் இங்கு ஞான யோகபயிற்சியில் ஈடுபட்ட காரணத்தால் இங்கு கால நேரக்கணக்கு அத்தனை அவசியமில்லை என்பது அறிஞர் அபிப்ராயம். மனஸின் ஒருமைப்பாட்டுக்கு இது ஒரளவு தேவை தான் என்பதை நன்றாக உணர வேண்டும். எனவேதான் மூலமந்த்ரத்தால் ஸாதகனின் பக்குவத்துக்கு தக்கபடி இங்கு ப்ராணாயாமம் விதிக்கப்பட்டிருக்கிறது.





இந்த மந்த்ரத்தின் திரண்டபொருள் -

எந்த பேதத்தோற்றங்களான பூதங்கள் பூமியில் இருக்கின்றனவோ அவைகள் ஓடிஒழியட்டும். எந்த பூதங்கள்(அபேத)ஞானத்துக்கு தடையாக இருக்கின்றனவோ அவைகள் பரசிவனது கட்டளையில் நசிக்கட்டும்.

முதலிலேயே திக்பந்தனத்தில் விக்னங்கள் பேத எண்ணங்கள், நமது உபாஸனைக்குத் தடைகள் என்று கண்டோம். எனவே பேதங்கள் தானே பூதங்கள் . இது கற்பனையே. தேசத்தினாலும், காலத்தினாலும் வஸ்துவினாலும் ஏற்பட்டது. இம்மாதிரியான பேதங்கள் பூதங்கள் மூன்று லோகத்திலும் உண்டு. எனவே தான் பூமி, அந்தரிக்ஷம், ஆகாசம் என்றபடி இந்த தடை ஓட்டப்படுவது நிகழ்கிறது. குரூரத்ருஷ்டியும், தாளத்ரயமும் (வெளிஉலக) பாவனாதார்ட்யத்துக்காக ஏற்பட்டிருக்கலாம்.

(இடது குதிகாலை பூமியில் அடித்துக்கொண்டு வலதுகை ஆள்காட்டி நடுவிரல்களினால் இடது உள்ளங்கையில் மூன்றுதட்டுதட்டி, தலையை நன்றாக தூக்கி குரூர பார்வைபார்ப்பது இதன் செயலாம்)

எண்ணத்தின் விளைவதுவே எல்லாமிங்கே - பேத
எண்ணங்களோட்டுவதே அடுத்த செயலாம்.

கி



சிகை என்பது கர்மகாண்டத்தில் ஒரு அடையாளம். கர்மகாண்டத்தை அனுஸரிப்பவர்களுக்கு சிகை அவசியம் வேண்டப்படுவதாகும். இங்கு இது ஞான யோக பயிற்சி . எனவே இது தத்வார்த்தமாகத்தான் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்றாகிறது.

நான் செயல்படுபவனும், அனுபவிப்பவனுமான ஜீவன் இல்லை. வேதசிகையில் பிரதிபாதிக்கப்பட்ட பரசிவமே நான். என்ற திடபாவனை ஸாதகனுக்கு ஏற்படவேதான் இச்செயல் என்று
அறிய லாம். இதற்கு மந்த்ரம் நமஃ அல்லவா.

இதன் அர்த்தம் முன்பே கண்டிருக்கிறோம். நான் ஜீவனல்ல என்று . எனவே ஜீவ பாவத்தை கல்பித்த அவித்தையையும், அதனால் ஏற்பட்டஸகல அனர்த்தங்களையும் அங்குசமுத்ரை யால் நீக்கி வேதசிகையின் மேல் ஐக்யப்படுத்துவதே இதன் தத்வார்த்தமாம்.

தொன்மைமிகு மறைதனிலுந் தானே யென்னும்
தன்மையதே சிகைதன்னை பந்தஞ் செய்தல்.

கி

ஸ்ரீலகுன்யாஸ மஹான்யாஸ ஸந்துஷ்டாய தே நமோ நமஃ


நியாஸம் என்பதற்கு வைத்தல், பொருத்துதல், விடுதல் என்று பலவகை பொருள் உண்டு. உபாஸகன் தன் சரீரத்தில் ஜடமாக உள்ள அநாத்ம பாவத்தை ஒழித்துக்கொண்டு அதிஷ்டானமாயுள்ள

சித்சக்தி யை பொருத்துதலே இந்த எல்லாவகையான நியாஸங்களின் பொதுவான தத்வார்த்தமாகும். கல்பஸூத்ரம் சொல்கிறது வஜ்ரகவசம் போல் நியாஸங்கள் சரீரத்தை காப்பாற்றுகிறது என்று. தேவ்யஹம் பாவயுக்தஃ ஸ்வசரீரே வஜ்ர கவச ந்யாஸஜாலம் வித்கீத்

நான் வெறும் செயல் செய்பவனும் அனுபவிப்பவனும் ஜனன மரணத்துக்கு ஆட்பட்ட ஸம்ஸாரியும் இல்லவே இல்லை. நான் சித்சக்தியே-என்ற ஸதா பாவனையும் இந்த நியாஸத்தால் ஸித்திக்கிறது. சித்சக்தியின் ஸூக்ஷ்ம ரூபமே மந்த்ர மயமானதாம். அதாவது ஸப்தகோடி மஹாமந்த்ரங்களும் மஹாவித்யைகளும் அகாராதி க்ஷகாராந்தமான மாத்ருகைகளுமே ஸூக்ஷ்ம ரூபங்கள். இவைகளைத் தான் நமது ஸ்தூல சரீரத்திலும், ஸூக்ஷ்ம சரீரத்திலும் பொருத்திக்கொள்ளுகிறோம். (ந்யாஸமுத்ரை - வலதுகை - கட்டைவிரல் + அனாமிகை)

1. பஹிர் மாத்ருகாநியாஸம் - இதனால் குறிக்கப்படும் இடங்கள் சிவஸ்தானங்கள் என்று ஸூதஸம் ஹிதை கூறுகின்றது.

2. அந்தர் மாத்ருகான்யாஸம் - இது அஷ்டமூர்த்தி ஸ்வரூப பாவனையாம்.

3. கரசுத்தின்யாஸம் - அசுத்த கார்யோபாதியை நீக்குவதே இதன் தத்வமாம்.

ஸ்ரீ சக்ரத்தில் ஒவ்வொரு சக்ரத்துக்கும் ஒவ்வொரு சக்ரேச்வரி உண்டு. அவர்களுக்குத்தனித்தனி பீஜங்கள் உண்டல்லவா. அதனால் இங்கு சில நியாஸங்கள் செய்யவேண்டும்.

1. அம் ஆம் ஸௌஃ
2. ஐம் க்லீம் ஸௌஃ
3. ஹ்ரீம் க்லீம் ஸௌஃ
4. ஹைம், ஹ்க்லீம், ஹ்ஸௌஃ
5. ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸ்ஸௌஃ
6. ஹ்ரீம் க்லீம் ப்ளேம்
7. ஹ்ரீம் ஸ்ரீம் ஸௌஃ
8. ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸ்ஸௌஃ
9. பஞ்சதசீ.

(இதில் முதல் சக்ரேம்வரியின் பீஜமே இதில் செய்வதாகும். பிறகு 2,3,4,5,6 என்ற சக்ரேச்வரி பீஜங்கள் பின்வரும். ஆத்மரக்ஷா, ஆத்மாஸனம், சக்ராஸனம், ஸர்வமந்த்ராஸனம், ஸாத்ய ஸித்தாஸனம் என்ற ஐந்து நியாஸங்களின் பீஜங்களாக வருகிறது. பிறகு 7வது மூர்த்தி கல்பனையிலும், 8வது ஆவாஹனத்திலும், 9 என்பது தேவியே என்ற படியும் உள்ளது. )

4. ஆத்மரக்ஷா நியாஸம் - ஜீவ பாவமுள்ளவரை ஜீவனுக்கு பாதுகாப்பில்லை. சித்சக்தியினுடைய அபரோக்ஷம்தான் இவனுக்கு ரக்ஷையைக் கொடுக்கும். இதனை இதயத்தினுள்ளே உள்ள பரம்பொருளிடம் ரக்ஷையை கோருவதனால் ஸித்திக்கிறது.


5. பாலாஷடங்கன்யாஸம் - ஞானப்பயிற்சியின் தொடக்க காலத்தில் விளங்கும் சித்சக்தியே பாலையாம். (இந்நினைவு திடப்படதிடப்பட ராஜராஜேச்வரி மஹாஷோடசீ, பராபட்டாரிகா என்றும் அறியப்பட்டு பரஸ்பரம் அபேத நிலை அமைய வேண்டும்.

6. சதுராஸன நியாஸம் -
1. ஆத்மாஸனம் , 2. சக்ராஸனம், 3, ஸர்வமந்தராஸனம்,4 . ஸாத்யஸித்தாஸனம்.
தன்னுடைய இருப்பினால் (ஸத்தை) எங்கும் வியாபித்திருக்கும் சை தன்யத்துக்கு ஆஸனம் என்று பெயர். அது ஆத்மனுடைய ஜீவ உபாதையால் ஆத்மாஸனம் என்றும் விஷய உபாதையால் சக்ராஸனம் என்றும் ப்ரமாண உபாதையால் ஸர்வமந்த்ராஸனம் என்றும் கூறப்பட்டு உபாதிகளற்ற சைதன்யத்தை தெரிவிக்க ஸாத்ய ஸித்தாஸனம் என்றும் அமைகிறது. அதாவது பிரமாதா, பிரமாண, பிரமேய சேதனங்களின் உபாதிகளை ஒழித்து சுத்த சேதனத்தோடு அபேத பாவனாமாக அன்வயப்படுத்தி அமைவதே தத்வமாம்.

7. வாக்தேவதா நியாஸம் - இதில் அஷ்டவாக்தேவதைகளும்

உள்ளனர். வேத வாக்கான ஸகல சாஸ்த்ர வித்யைகளுக்கும் மூல பீஜம். எனவே இவர்களை தனக்கபேதமாக நினைப்பதே இதன் தத்வம். (மந்த்ரம் பற்றி பின்வரும் 7வது ஆவரண விளக்கத்தில் வாக்கின் விளக்கம் என்ற தலைப்பில் காணலாம்)

8. வெளி - உள் சக்ர நியாஸம்
ஆத்மாஉறையும் இந்தஸ்தூலசரீரமும், ஸூக்ஷ்மமாக உள்ள மூலாதாரம் முதலான ஆதாரங்களும், சித்சக்திஸ்வரூபமான ஸ்ரீ சக்ரமே என்ற நிலைதிடப்படவே இந்நியாஸம் செய்தலாம். தொடர்ந்து ஆக்ஞைக்கு மேல் ஒவ்வொரு விரற்கடை இடத்தில் செய்ய வேண்டிய நியாஸங்கள்-

இதன் தத்வம் -
வெளி, உள்தேகங்களில் நியாஸம் செய்த 9 சக்ரேச்வரிகளின் பீஜங்களை மட்டும் பிந்து, அர்த்தசந்திரன், ரோதினி, நாதம், நாதாந்தம், சக்தி, வ்யாபிகை, சமனி, உன்மனி என்கிற இடங்களில் பொருத்துதல் ஸூக்ஷ்ம நாதத்தை ஸாதகன் அடைவான் வேண்டி என்பதை உணர வேண்டும் . இந்த ஸ்தான ஸூக்ஷ்ம தத்வங்கள் விவரம் வரிவஸ்யா ரஹஸ்யத்தில் காணலாம்.
(மேலும் இவ்வாசிரியர் தனியாக எழுதியுள்ள ஆத்மதர்சனகைவல்யயோகம் என்ற கட்டுரையிலும் விரிவாக காணலாம்.)

9. காமேƒவர்யாதி நியாஸம் - காணும் உலகமானது ஒளி, பீடம், சக்ரம், தத்வம், கிருத்யம், அவஸ்தை, சக்தி, வடிவம் என்ற பல நிலைகளில் இருப்பதால் இவைகள் அத்தனையும் சித்சக்திவடிவமே என்பதை இங்கு உணரலாம்.

10. மூலவித்யா நியாஸம் - ஸ்ரீ வித்யாமந்த்ரமே அவளின் வடிவமாக இருப்பதால் ஸாதகனுக்கு பரதேவதா ஸ்வரூப ப்ராப்தி ஏற்படுகிறது.

11. ஸ்ரீஷோடசாக்ஷரி நியாஸம் - ஞான ஒளி என்பது விமர்சவடிவமாக உள்ளது. இதுவே ஸுதாரஸையாம். இது உச்சிக்கமலத்திலிருந்து பெருகும் சிதானந்த ரஸவடிவே.


இந்தஸ்வராஜ்ய ஸித்தி வடிவமான மோக்ஷமே மஹா ஸௌபாக்யம் எனப்படும். இவ்வாறான வடிவத்தை தன் சிரஸில் பாவிக்க வேண்டும்.

ஸௌபாக்ய தண்டினிமுத்ரை - இவ்வாறான ச்ரேயஸை எனக்கருளி, விஷய அனுபவமாக ப்ரேயஸை தேடுவதை என் மனதிலிருந்து ஒழிப்பேனாகவும். என்று கூறி ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி மற்ற விரல்களை மடக்கி கட்டளையிடுவது போல் குறிப்பிடவேண்டும். மனதை விஷய ப்ரவர்த்தியிலிருந்து தடுப்பதை குறிப்பதே இம்முத்ரையின் தத்வமாம்.

ரிபுஜிஹ்வா முத்ரை - ஆத்மா என்ற பாவனாவிருத்திக்கு காமக்ரோதாதிகளே சத்ருக்கள். ( குருவாக்யமே இதுதான்) இவர்களை தண்டிப்பேனாக. என்று கூறி இடதுகை ஆள் காட்டி விரலை நீட்டி கட்டை விரலை உள்மடக்கி மற்ற விரல்களை அதன் மேல் பொருத்தி குறிப்பிடவேண்டும். இதனால் மேற்கண்ட ஆஸுரஸம்பத்துக்களை பகைவர்களாக எண்ணி அவர்களை தன் இடது பாதத்தின் மத்தியில் போட்டு மிதிப்பதான பாவனையுடன் இங்கு இது செய்தலாம்.

த்ரிகண்டா முத்ரை - ப்ரமாதா, ப்ரமாணம், ப்ரமேயம் என்ற மூன்றின் வடிவமானதே இந்த உலகம். என்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தில் இந்த முக்கூட்டு ப்ரபஞ்சம் எப்போதும் கல்பனையே. இந்த கல்பனா நாமரூபநாட்டம் என்னிலிருந்து விடுபட்டால் அதுவே ஸஹஜ ஸமாதி நிலையாம். இதன் தத்வமே இம்முத்ரை என அறியலாம்.

யோனிமுத்ரை - சிவம் + சக்தி , ப்ரகாசம் + விமர்சம், என்ற இருவேறு நிலை நீங்கி ஸாமரஸ்யமான ஒன்றான உணர்வு மயமான மனஒருமைபாட்டுடன் கூடிய ஸமாதிவ்ருத்தியே இம்முத்ரையாம்.

12. ஸம்மோஹன நியாஸம் - ப்ரபஞ்சம் என்ற பெண்ணை மோஹம் கொள்ளச்செய்து தனக்கு வசமாக ஆக்கிக் கொள்வது என்பது இதன் தத்வமாம்.
சித்சக்தியின் ப்ரபையே செந்நிறமாம். (லௌஹித்ய மேதஸ் ஸர்வஸ்ய விமர்சஃ ....பாவனா) இந்த அனுராகமே தன்னையும்

nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:01 am

ஸ்ரீபராபராஞான விக்ரஹாயநமோ நமஃ
ஸ்ரீஅகதாதி ஹளக்ஷாந்த பீடகாயதே நமோ நமஃ

(பாத்ர + ஆஸாதனம்)
(பாத்ரங்களை பரப்பிவைத்தல்)

பூஜைக்குரிய பாத்ரங்களை தனக்கும் தேவிக்கும் இடையில் குறிப்பிட்ட இடங்களில் பரப்பிவைத்தலாம்.

1. தீர்த்தம்வைக்கும் வர்த்தனீகலசம் என்றகலச பாத்ரம்
2. ஸாமான்ய அர்க்யம் என்ற தீர்த்தம் வைக்கும் ஆதாரத்துடன்கூடிய சங்கு.
3. விசேஷ அர்க்யம் என்ற ப்ரதம த்ரவ்ய தீர்த்தம் வைக்கும் ஆதாரத்துடன்கூடின, மூடியுடன் உள்ள ஒரு கிண்ணம்.
4. சுத்தி த்ரவ்யம் என்ற த்விதீயமான இஞ்சித்துண்டு வைக்கும் கிண்ணம்.
5. குருயஜனம் செய்யும் ஒரு கிண்ணம் .
6. ஆத்மயஜனம் செய்யும் ஸாதகனின் ஒரு கிண்ணம்.
7. ஸாதகனின் பத்னிக்கு - சக்திக்கு ஒரு கிண்ணம்.
8. தேவிக்கு அர்க்கிய பாத்ய ஆசமனாதிகளுக்கான ஒரு கிண்ணம்.
9. பலிபாத்ரம் என்ற தாம்ர உலோகத்தாலான ஒரு பாத்ரம்.
10. விசேஷார்க்கியத்தின் மொத்த அளவையும் வைக்கும் காரணகலசம் என்ற பாத்திரம்.

தந்த்ரங்களிலும், கல்பங்களிலும் இந்தபாத்ரங்களின் அளவும், எண்ணிக்கையும் பலவகையாக இருக்கின்றன. தற்காலத்தில் உபாஸகர்கள் ஆங்காங்கே பாத்ராஸாதன க்ரியையில் - எண்ணிக்கையிலும் வஸ்துவிலும் சிற்சில மாறுதல்களுடன் செய்கிறார்கள். கர்மகாண்ட பத்ததிப்படி எத்தனை பாத்ரங்கள் பரப்பி வைத்தாலும், அதில் வைக்கும் விசேஷ த்ரவ்யம் எதுவாக இருந்தாலும் அதன் உபயோகம் கர்மகாண்டத்தில் மட்டுமே. இங்கு ஸாதகன் ஞானகாண்ட பயிற்சி செய்வதனால் - அதன் தத்வ ரஸனை மனதில் புரிவிக்கப்படவேண்டும் என்பதே அறிஞர்களின் முடிவானதால் இங்கு அதன் பொதுவான கருத்தை மட்டுமே உணருகிறோம்.

(ஸ்ரீபாத்ரம், போகபாத்ரம், வீரபாத்ரம், பலிபாத்ரம் எனவும் சில ஸம்ப்ரதாயங்களில் காணப்படுகின்றன. இதில் ஸ்ரீ பாத்ரத்திலிருந்து மூல மந்த்ர தர்ப்பணம் மட்டுமே செய்யப்படும். போகம் என்பது பஞ்சமகாரங்களில் மைதுனம் என்றதற்கும்,வீரம்என்பது, வீரஉபாஸகர்களுக்கும்,பலிஎன்பது பலிக்காகவும் உபயோகப்படும்) .

வர்த்தனிகலசம் + ஸாமான்யார்க்கியம்.

வரிசை 1, 2 ன் தத்வார்த்தம்.

முதலில் ஸாதகனுக்கும் தேவிக்கும் இடையில் ஸாதகனின் இடது புறத்தில் வர்த்தனிகலசம் அமைக்கப்படுகிறது. கலசம் வைப்பதற்கு முன்பு அந்த இடத்தில் சந்தனம் கலத்த ஜலத்தினால் மண்டலம் என்ற கோடுகள் போடவேண்டும். இது போல் ஒவ்வொரு பாத்ர ஸ்தாபனத்தின் அடியிலும் போடவேண்டும். சிற்சில மாறுதல்களுடன், ஆனால் பொதுவாக - 1. பிந்து, 2. த்ரிகோண , 3. ஷட்கோண, 4. வ்ருத்த, 5. சதுரச்ர என்றபடி போடப்படும். இவைகளின் தத்வார்த்தம் இனி காணுவோம். இவை முறையே - ஆகாசாதி பஞ்சபூதங்களாம். மேலும் உள்ளம் , புத்தி, மனம், சித்தம், அஹங்காரம் என்றபடி பஞ்சபூதங்களின் தத்வஅம்சத்தைக் கொண்டு விளங்குகிறது. ஒரு உள்ளங்கையை கவிழ்த்துக்கொண்டு அதன் மேல் மற்றொன்றையும் கவிழ்த்து நீட்டிய நான்கு விரல்களையும் ஒன்றாய் வைத்துக் கொண்டு பக்கங்களில் உள்ள இருகட்டைவிரல்களையும் அந்தந்த திசைகளில் மீனின் இறகுகள் போல் சலிக்கச்செய்து கீழ்நோக்கியுள்ள மோதிரவிரலால் மண்டலங்களை எழுதவேண்டும். கீழ் குவிக்கும் கை என்பது அந்த சமயத்தில் எந்த நாடியில் சுவாசம் வருகிறதோ அந்த பக்கம் என்று உணர வேண்டும் என்ற நிலையை விளக்கவே அந்தக்கரணவடிவில் தத்வம் கூறப்படும் மீன் முத்திரை இங்கு போடப்படுகிறது என்று உணர வேண்டும்.

தன்னை சுற்றியுள்ள உலகத்தையும், தன்னையும் துண்டாடமுடியாதசெயல் தன்மையுடைய ஞான அடைவின் பொருட்டு எண்ணங்கள் நீங்கி சுத்தி செய்யப்பட்ட மனமாக ஆக்கியபின் - அதாவது சுத்தமனதில் - அதாவது பஞ்சபூதங்களின் சத்வாம்சங்களோடு கூடிய மனதில் - முதல் பாத்ரமான வர்த்தனி கலசம் என்ற அபரஞான வடிவமான கலசம் அமைக்கப்படுகிறது. அபரஞானமென்றால் நான் செயல் அனுபவடிவமான ஜீவன், இந்த உலகம் ஐம்பொறிகளின் விஷய வடிவமானது, என்னுடைய கர்மங்களுக்கும்,இந்த உலகம் ஏற்படுவதற்கும் காரணமானவன் பரமேச்வரனே, என்ற இந்த எண்ணங்கள் எல்லாம்தான் அபரஞானம். அதாவது இது உலகம் என்பது அபரஞானம்.

அடுத்த மண்டலத்தில் அமைக்கப்பட்ட கூர்மாதாரத்துடன் கூடிய சங்கில் நிரப்பப்படுவது ஸாமான்யார்க்கியம். இந்த ஆமை வடிவ ஆதாரத்தின் தத்வம் என்ன? ஆமையின் தலையும், நான்கு கால்களும் உள்ளிழுத்துக் கொள்ளும் சுபாவம் உடையது. இதுவும் அந்தக்கரணத்தை உணர்த்துவதே. மேலும் பஞ்சேந்த்ரியங்களை அதன் இயல்புகளிலிருந்து உள்ளிழுத்தால்தான் ப்ரம்மஞானம் ஏற்படும். எனவே இவைகளை உணர்த்துவதே இந்த கூர்மாதாரத்தின் உபயோகம் என உணரலாம்.
அவாந்தரேண வாக்யேன பரோக்ஷாப்ரஹ்மதி பவேத் ஐ
ஸர்வத்ர மஹாவாக்ய விசாராத் அபரோக்ஷிதிஃ ஐஐ
-இதுவித்யாரண்ய ஸ்வாமியின் பஞ்சதசீ வாக்யம்.
ப்ரஹ்மம் இல்லை என்ற தோற்றத்தைப் போக்கடிப்பது பரோக்ஷஞானம். ப்ரஹ்மம் பிரகாசிக்க வில்லை என்றதோற்றத்தை விளக்குவது அபரோக்ஷஞானம். நீயே ப்ரஹ்மம் (தத்வமஸி) என்று சொன்னபோது தன்னைப்பற்றியஅறிவு, ப்ரஹ்மத்தைப்பற்றி தெளிவு இரண்டும் இல்லாததினால் ப்ரஹ்ம வஸ்துவைப்பற்றி இவன் அறிவானில்லை. முதலில் இவன் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இதன் தெளிவிலேயே ப்ரஹ்மத்தின் உணர்வும் நிலைக்கிறது. ஆத்ம சோதனம் என்கிற தன்னைப்பற்றிய ஆராய்ச்சி செய்து முடிவில் ப்ரஹ்மஞானம் ஏற்படுகிறது. இதனை இங்கு ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வோம்.

மூடப்பட்டிருக்கும் ஒரு பாத்திரத்துக்குள் சூடான பதார்த்தம் உள்ளது. ஒருவன் அந்த பாத்ரத்தை தொடுகிறான். சுடுகிறது. ஆஹா, பாத்திரம் சுடுகிறது என்கிறான்.உள்ளே உள்ள வஸ்து தெரியாத போதும் இவனுக்கு கை சுட்டது வாஸ்தவம். இந்த சூடு பாத்ரத்துக்குச் சொந்தமில்லை. உள்ளே உள்ளபொருள் சூடாக இருந்ததினால் அது பாத்ரத்தை சூடேற்றி தொட்ட இவனையும் சுட்டது. இதனை இவ்வாறு சோதனம் செய்ததினால் அதாவது சூடு பாத்திரத்துக்குச் சொந்தமானதா? அல்லது உள்ளிருக்கும் வஸ்துவால் சூடாக்கப்பட்டதா? என்று ஆராய்ந்ததினால் உண்மையான அறிவு - தெளிவு ஏற்பட்டது . எனவே பாத்திரம் சுடுகிறது என்றதிலேயுள்ள சூடு அதாவது அறிவு சாமான்யஞானம். இதை உணருவான் வேண்டி ஸாமானிய ஞானம் என்கிற வர்த்தனி கலச ஸ்தாபனமும் சங்குஸ்தாபனமும் இங்கு நடைபெறுகிறது. மேலும் ஸாதகனுடைய ஜீவ- உலக- ஈஸ்வரன் என்ற முக்கூட்டு (த்ரிபுடி ) விஷயமான ஞானமும் இங்கு நசிக்கவேண்டும், என்பதே இங்கு தெளிவு.

வர்த்தனீகலச அபர ஞானத்திலுள்ள நாமரூப நாட்டத்தை நீக்கி தன்னை பற்றிய ஸாமான்ய ஞானத்தை சங்கத்திலே நிரப்புகிறான். இங்கு எவ்வாறு துர்நாற்றமுடைய ஜீவத்வத்தை தன்னகத்தே கொண்ட சங்கினை சுத்தம் செய்து (ஸம்ஸ்காரம்) பூஜைக்குரியதாக வைத்திருக்கிறதோ அதைப்போல கர்ப்பவாஸத்திலே இருந்த ஜீவனை சுத்தப்படுத்தி சாமான்ய ஞானத்தினாலே நிறைத்து வழிபாட்டு கர்மாவுக்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது.

அடுத்து மூலம் 7 முறை ஜபிக்கக்கூறுகிறது பத்ததி, இது ஏன் என ஆராய்வோம். ஒரு ஜீவன் -ஸாதகன் முமுக்ஷû - உபாஸகன் என்பவன் மோக்ஷமடைய வேண்டுமானால் அவனிடமிருந்து நிவ்ருத்தியாக வேண்டிய அவஸ்தைகள் 7 உண்டு என நுõல்கள் கூறுகின்றன. அவை -1. மூலாக்ஞானம் , 2. ஆவரணம், 3. விஷேபம் , 4. பரோக்ஷஞானம், 5. அபரோக்ஷஞானம் , 6. சோகநிவ்ருத்தி, 7. ஆனந்தம்.(முக்குணம் , உண்மை மறைவு, பொய்தோற்றம், கேள்விஞானம், சாஸ்திரஞானம், சோகநிவ்ருத்தி, ஆனந்தம்) இதனை உணர்த்தவே இந்த மூல மந்த்ர ஜபமாம்.

க்ஷீரபிந்தும் தத்வா

எனவே ஸாதகனுக்கு (ஸாமான்ய ஞானி) உபாதிகளற்றஞானத்தை- ஆத்மஞானத்தை மஹாவாக்ய உபதே பூர்வமாக -ஸாரமாக- ஸ்ரீ குரு உபதேசித்திருந்தாலும் அதை அவன் சோதனம், மனனம், நிதித்யாஸனம் என்றபடி செய்ய வேணுமென்றும், இன்னும் முழுமையடையாத நிலையிலுள்ளவன் என்ற உணர்வுக்காகவும், இதனைக்கருத்தில் கொண்டு இன்னும் இதுவரை சுத்தி செய்யப்படாமல் காரண கலசத்திலிருக்கும் விசேஷார்க்கியத்தின் ஒருதுளியை சங்கஜலத்தில் விடும்படி பத்ததியில் க்ஷீரபிந்தும் தத்வா என்ற கிரியாபாகமொன்றுள்ளது, அறியவும். இங்கு க்ஷீரம் என்ற பதம் தனியான பாலைக்குறிக்கவில்லை. விசேஷார்க்கியம், வாருணி, பிரதமம்,மது என்ற பர்யாய நாமங்களில் இதுவும் ஒன்று என அறியவும்.

இப்போது சாமான்ய ஞானமுள்ள மனஸிலே விசேட ஞானத்தைப் பெறும் ஸாதகன் அதனை தன் ஸ்வயமுயற்சியினாலே நாளடைவில் சோதனை செய்து உண்மையில் தன்மயமாகப்போகிறான். இதனை உணர்த்துவதே இதன் நோக்கம். ஸாமான்யார்க்ய பாத்ரஸ்தாபனத்தில் கூறப்பட்டபடி அடுத்த இந்த விசேஷார்க்ய பாத்ர ஸ்தாபனம் அபரோக்ஷ ஞானத்தெளிவிற்காக என உணர்கிறோம். ஸாமான்ய ஞானத்தெளிவிற்கு ஸாமான்யார்க்ய ஸ்தாபனமும், விசேஷஞானத்தெளிவிற்காக விசேஷார்க்ய ஸ்தாபனமும் நடைபெறுகிறது என்பதே தத்வமாம்.

பட்டியல்

ஸாமான்ய - விசேஷ தோற்றத்துக்குக் காரணம்
ஆவரண விக்ஷேபம்

ஸாமான்ய(ஞான) வடிவம் விசேஷ(ஞான) வடிவம்
ஸாமான்யார்க்யம் விஷோர்க்கியம்
கயிற்றில் தோன்றி பாம்பு என்பது பாம்பல்ல இது கயிறே என்பது
பிராந்தி காலத்தில் பாம்புடன் பிராந்திகாலத்தில் எதன் வேறுபடாததாய் தோன்றும்வடிவம்
(அபின்னம்) அதாவது இதுதோன்றாமல் எது என்பதான ஸாமான்ய வடிவம் தோன்றுவதால்
பிராந்தி நீங்குகிறதோ அது
கயிற்றின் விசேஷவடிவம்
--------------------------------------
ஸத்ஸாமான்ய வடிவம் நித்யமுக்த தன்மை விசேஷவடிவம்
--------------------------------------
இங்கு தோன்றுவது பாம்பே இங்கு தோன்றுவது கயிறே
உலகமே ப்ரஹ்மமே
அஸங்கம்-கூடஸ்தம் எந்தகாலத்திலும்
பாம்புடன் ஸங்கம் இல்லை. எப்போதும் கயிறே.
---------------------------------------
ஆதாரம். அதிஷ்டானம்.
--------------------------------------
பரோக்ஷம் அபரோக்ஷம்
குருவாக்ய -உபதேசம் ஸ்வானுபவஸாக்ஷாத்காரம்
---------------------------------------

ஐம்பூத மனமென்னும் மண்டல மமைத்து
தம்முடை எளிதான அறிவை யுணர
மும்மூன்று நிலையிங்கு நசித்துப் போக
ஐங்கிண்ண மிங்குளதில் நீரைநிரப்பு.

ஆழ்கடலில் கிடப்பதிந்த வெள்ளைச் சங்கு
ஆழ்ந்தெடுத்திங்கதை பூசைக்குறுவதுபோல்
ஏழேழ்பிறவிபெற்ற(அ)சுத்தஜீவன்
ஆழ்அறிவைபெற்றிடவே ஒருதுளிவிடுக.




விசேஷார்க்யம்
வரிசை எண் 3ன் தத்வார்த்தம்

இது 3 கால்கள் கொண்ட ஆதாரம் - அதிலே பொருத்தும் ஒரு பாத்ரம் - அதிலே நிரப்பப்படும் அம்ருதம் என்றபடியமைந்தது.

ஆதாரம் என்ற மூன்று கால்கள் மூன்று ஜ்யோதி வடிவானது. இதில் அக்னிதான் பிரதானமாம். பொதுவாக தர்மவடிவமாகவுள்ள அக்னிமண்டலமேயிங்கு மூன்றுகால்கள் கொண்ட ஆதாரமாக தத்வார்த்தம் காணுகிறோம். இந்த ஆதாரத்தின்மீது தானே சரீரத்தோடு கூடிய மனமுள்ளது. எனவேதான் மனம் பாத்திரமாகிறது. இந்த மனமான பாத்திரத்தில் உணரப்படும் விஷயங்களின் அனுபவமே இதில் நிரப்பப்படும் அம்ருதமாம். எனவே ஆதாரம் அக்னிமண்டலமானதால் பாத்ரம் ஸூர்ய மண்டலமாகவும் அம்ருதம் சந்த்ரமண்டல மாயும் பிரகாசிக்கிறது. இதற்கு திரிபுரா ரஹஸ்யம் மாகாத்மியகண்டம் (அத்யாயம் 54) தக்க ஆதாரமாக நமக்கு உணர்த்துகிறது. அதாவது 10 கலைகள் கொண்ட அக்னிகோள வடிவில் அமைந்த 500 யோஜனை விரிவுள்ள ஆதாரத்தின் மீது 1000 யோஜனை விஸ்தாரமுள்ள 12 கலைகள் உள்ள ஸூர்ய ஒளியாலான பாத்ரமுள்ளது, அதில் 16 கலைகளுள்ள சந்த்ர ஒளியாலான அம்ருதரஸம் நிரம்பியுள்ளது என்று காணப்படுகிறது. இந்த ஆனந்தம் என்பதே அம்ருதரஸானுபவம். இது சந்த்ரப்ரபை என்பர். இது 16 இதழ் கமலமான விசுத்தியில் உணர்வதாகும் . ஏனெனில் சுக துக்க அனுபவத்தின் வ்யாப்தி இங்குதானே.

இந்த ஞானயாக வடிவமான தேவி பூஜையின் முக்கியபலன் யாதென்றால் விஷயங்களை அனுபவிக்கும் வடிவத்திலுள்ள ஜீவபாவத்தை ஒழிப்பதே. இந்த நிலை ஷோடசகலையையுடைய சந்த்ரமண்டலத்திற்கு மேல் ஆனந்தானுபவ அம்ருதநிலையில் ஸித்திப்பதாகும்.

ஜீவனது பேத நாட்டமாகும் சுக துக்கானுபவங்கள் ஒழிய வேண்டுமானால் மும்மூன்றாக உள்ளவைகளும் நாமரூப நாட்டமும் அழியவேண்டும். இந்த நிலை அகண்டாகார விருத்தி (துண்டாடப்படாத செயல்)தத்வத்தினால் தான் அமைய வேண்டும். இந்த அகண்டாகாரவ்ருத்தியே தான் இங்கு ஸாதகனுடைய பூஜையில் அம்ருதமாக ப்ரதம பாகத்தை வகிக்கிறது.

தேகமுதனா னென்னறு வித விர்த்தி - திகழ் நானென்னல் சாக்ஷிவ்ருத்தி
ஏகபரநானென்னல் அகண்ட விர்த்தியாம் மூன்று விருத்திகளிரண்டைத்தள்ளி
ஆகுமகண்டாகார விருத்தி தன்னை அனவரதமாய் ஆதாரவாயப்யஸித்து
சோகமுறும் சித்தவிகற்பங்கள்தீர்த்து சொன்னவகண் டேகரஸ சொரூபமாய் - ரிபு கீதை.

இந்த அம்ருதத்தின் வடிவம் ஞானகாண்டத்தில் இவ்வாறு கூறப்படுகிறது, - நான் ஜீவன் என்ற மயக்க அறிவு நீங்கி நான் ஸத்-சித்-ஆனந்தமான பரசித் உன்ற உண்மையறிவும், இதுஉலகம் என்னும் மயக்க அறிவு நீங்கி இதுவே சத் -சித்-ஆனந்தமான சிவம் என்ற உண்மை அறிவுமே. இந்த (மனமாகிய) பாத்ரத்தில் (அகண்டாகார வ்ருத்தி வடிவமான) அம்ருதத்தை நிரப்புதலுக்கு முன் ஒரு பிரார்த்தனா மந்த்ரஸ்லோகம் உள்ளது. இதற்கு சித்கலா ப்ரார்த்தனை என்று பெயருள்ளது. (ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மீƒவரி பரமஸ்வாமினி.....ஸ்வாஹா) இதன் பொருள் இவ்வாறுள்ளது.

மேல்நோக்கி பரவியிருக்கும் சிதாகாசத்தில் ஊற்றெடுக்கும் ஆனந்த வடிவினளே, சத்சித் ஆனந்தவடிவினளாயும் எல்லா வித்யாவின் வடிவினளாயும், மஹாவாக்ய வடிவினளாயும் விளங்கும் பரசிதே. சந்த்ரன் - ஸூர்யன் - நெருப்பு என்ற மூன்று மண்டல வடிவமான அகில உலகத்தையும் உண்ணுபவளே. பரம ஆகாசத்தில் ஒளிவிடுபவளே. இங்கு பிரவேசிப்பாயாக. இந்த பாத்ரத்தை

அதாவது சரீரத்தை நீ நன்கு விளங்கும் இடமாகச் செய்து உனக்கே உரிமையாகக் கொள்வாயாக.

இவ்வாறான பரசித் தையே -பாத்ரத்தில் அம்ருதம் நிறையச் செய்யும் முன்பு வெறும்ஆகாசம் நிரம்பிய அதில் -இந்தஸ்லோகத்துடன் கூடிய புஷ்பாஞ்சலியில்இழுத்து இதில் வைக்கவேண்டும். ஆகாயத்தில் விளங்கும் பரசித் தை பாத்திரத்தில் பிரவேசிக்கக்கோருமிடத்தில் சில விக்ஞான உண்மைகளும் இன்றைய மனிதர்களின் மனதுக்கு புரியும் விதத்தில் பொதிந்து கிடக்கிறது. அதுஎவ்வாறு என காணுவோம்.

பூமியிலிருந்து ஒரு மனிதன் விமானம் அல்லது ராக்கெட் மூலம் எழும்பி காற்று மண்டலம், புவியின் ஈர்ப்பு விசை மண்டலம் இவைகளைத் தாண்டி செல்கிறான். பிறகு அவன் வேறு மண்டல ஈர்ப்பு விசைக்குள் வெல்லும் முன்பு சூன்யத்தை உணருகிறான். அந்த சூன்யமண்டலத்துக்குள் கானல் நீரில் காணும் ஒரு நீரோட்டம் போன்ற தோற்றமான ஒரு சூன்யப்ரவாஹமே உள்ளது. இது விக்ஞான அறிஞர்களால் கண்டு கூறப்பட்ட ஒரு உண்மைச்செய்தி. இந்ததத்துவம் தான் ஊர்த்வ சூன்யப்ரவாஹினிஎன்று கூறப்பட்டது. மேலும் இந்த இடத்தில் ஸூர்யக்ரஹணமோ சந்திரக் குளிர்ச்சியோ நெருப்பின் சுடுதன்மையோ இல்லாத ஒரு நிலை எனவும் அவர்கள் கண்டிருக்கின்றனர். (அதாவது - தீப்பிடிக்காது) இதனாலே பரசித் இந்த முன்று மண்டலங்களையும் உண்டுவிட்டாள் என்றபடி ஸோம ஸூர்யாக்னி பக்ஷிணி என்று கூறப்பட்டது. இந்த பராஹந்தா வடிவவினளான ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணி பரசித் அண்டங்களுக்கு அப்பால் எவ்வாறு சூன்யஸாக்ஷிணியாக இருக்கிறாள் என்பது இதனால் விளங்குகிறது. எனவே இது தான் ஸுதாதேவியின் ஸ்வரூபம்.

ஹூம்பட்ஸ்வாஹா என்ற அஸ்த்ரமந்த்ரத்தினால் இது மந்த்ரமயமாக்கப்பட்டு சிந்தனை ஸித்திக்கு உடனடி ஹேதுவாகிறது. இன்றொன்றையும் இங்கே நாம் சிந்திக்கிறோம். யாதென்றால் -இந்த பரசித் ஸுதாதேவி ஆவாஹனமானது, புஷ்பாஞ்சலியால் ஆகாசத்தில் நடைபெற்றுள்ளது. பின்னால் தேவி ஆவாஹனம் செய்யுமிடத்தில் - ஸ்ரீசக்ரத்தில் அதாவது பௌதிகத்தில் (பூமி) ஆவாஹனம் நடைபெற உள்ளது. இறுதியில் -ஹோம ப்ரகரணத்தில் அக்னியிலும் நடைபெறவேண்டும். இவைகளையும் இங்கு ஒரு தத்வமாக உணருகிறோம்.

ஸுதா தேவி ஆவாஹனம் - ஆகாசம் - பாத்திரத்தினுள்ளே
ஸ்ரீ பரசித்தேவிஆவாஹனம் - பூமி - சக்ரத்தில்
ஸ்ரீ சக்தி தேவி ஆவாஹனம் - அக்னி - அக்னி
ஸ்ரீ சக்தி தேவி ஆவாஹனம் - நீர் - கலசத்தினுள்ளே (கலசப்ரதிஷ்டையில்)

சுத்தி பாத்ரம். சுத்தி ஸம்ஸ்க்காரம்

வரிசை எண் 4ன் தத்வார்த்தம் -

இங்கு ஜீவனே சுத்தி செய்வதற்குரியவனாகிறான். ஆனால் இயற்கையாகவே அசுத்தமான ஒரு பொருளை எக்காலத்திலும் எதனாலும் சுத்தி செய்யவே முடியாது. ஜீவன் சுத்தம்தான், ஆனாலும் அசுத்தம் என்னும் பாவனை மயக்கத்தினால் ஏற்ப்பட்டது. இது தத்வ ஞானத்தினால்தான் நீங்கும் (கர்ணன் கதை இங்கு உதாரணமாகக் கூறலாம்) எனவே இந்த ஜீவன் சுத்தப்படுத்தப்பட்டு அதாவது இவனிடம் உள்ளதான (கல்பனா) பசு பாவம் நீங்கி ஒழிகிறது. இதுவே சுத்தி பாத்ரத்தின் ரஹஸ்யார்த்தம்.

ஏவம் பந்தஸ்ததா ஜீவஃ கர்மநா÷† ஸதா‡வஃ
பாசபந்தஸ்ததா ஜீவஃ பாசமுக்தஃ ஸதாசிவஃ
- ஸ்கந்தோபநிஷத்து


ஜீவனிடமுள்ள பாசம் என்பது அனாதிமலமான ஆவரண விக்ஷேபங்களே . இந்த பாசத்தை வெட்டிவிட்டால் ஜீவன் சிவனே. உமிநீங்கின நெல் அரிசி என்ற பெயர் பெறுவது போல. ஜீவனை அக்ஞானதூக்கத்திலிருந்து விழிக்கச்செய்து- அதாவது ஞான விழிப்படையச்செய்து சிவ வடிவத்தை உணரப்பண்ணவேண்டும். இதற்குத்தான் சுத்தி பாத்ரம் என்றதில் உள்ளவற்றை(இஞ்சித்துண்டுகளை) அபிமந்தரணம் செய்ய பாசுபதமந்தரம் கூறப்படுகிறது. மேலும் ஸத்யோஜாதாதி

மந்த்ரங்களும் சிவஸ்ரூபஉணர்விக்கேதான். இனி இந்த பாசுபத மந்த்ரத்தை சற்று விரிவாக ஆராய்கிறோம்.

ஓம் ƒலீம் ப†ú ஹும்பட்.

† + ல +ஈம் - இதிலிலுள்ள ல காரம் பஞ்சபூதங்களையும், † காரம் சப்தாதி விஷயானந்தங்களையனுபவிக்கும் ஜீவனையும், ப†ú என்பது ஆத்மாவற்ற சரீரங்களுக்கும்கூட அதற்குள்ளே உள்ள கூடஸ்தனான ஈம் சிவத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தையும் குறிக்கின்றது. ஹும்பட் என்பது இந்த பாசத்தையறுக்கும் அஸ்த்ரமாகும் என உணரவேண்டும். சாஸ்த்ரங்களில் பசு பாவத்தினுடைய உபாதியாகிய மனதின் பிரதிநிதியாக இஞ்சி சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால் இங்கு இஞ்சி உபயோகப்படுகிறது.

இப்போது விசேஷார்க்கிய பாத்ரத்தில் இடதுகை தத்வமுத்ரையால் பிடித்துக்கொண்டுள்ள இஞ்சி துண்டின் மேலாக - அம் முதல் க்ஷம் வரை எழுத்துக்களை நேராகவும் தலைகீழாகவும் சொல்லிக்கொண்டே காரண கலசத்திலிருந்து எடுத்த அர்க்கியாம்ருதத்தை பாத்ரத்தில் விட்டு நிரப்பவேணும்.

1. காரணகலசம், 2. ஜீவன் (அனாமிகன்+ப்ரஹ்மம்), 3. மனஸ் (இஞ்சி)4. அம்ருதம் (அகண்டாகாரவ்ருத்திவடிவம்), 5. பாத்ரம் (பராகா†ம்), 6. புஷ்பம் (அஷ்டகந்த லோலிதம்).

அனாதியான பெயர் கூறமுடியாத ஜீவன் கட்டை விரலளவான பரம்பொருளுடன் வாஸனை வசப்பட்ட மனதைச் சேதித்துக் கொண்டு இரண்டற இணைவதையே இந்த தத்வமுத்ரையில் கிரஹிக்கப்பட்ட நாகரகண்டம் உணர்த்துகிறது. ஸகல சாஸ்த்ர வடிவங்களானவை மாத்ருகைகள் இதனை மனன நிதித்யாஸனம் செய்தல் வேண்டும். எனவே அவைகளில் உள்ள ஸத்பாவனை தெளிவிற்காகவும், விபரீதபாவனை நீக்கத்திற்காகவுமே இங்கு மாத்ருகைகள் நேராகவும் தலைகீழாகவும் உச்சரிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு நிரம்பிய அம்ருதத்தில் எட்டு விதமான வாஸனைப்பொருட்களின் கலவையில் தோய்த்த புஷ்பத்தைப்போடுகிறோம். அது விவேகம்,வைராக்யம், சமம், தமம், உபரதி, திதிக்ஷை, சிரத்தை, ஸமாதானம். என்ற எட்டு ஸாதனங்களையும் ஸாதகன் ஞானத்தெளிவிக்காக கடைப்பிடிக்கவேண்டியதை இது உணர்த்துகிறது. (முமுக்ஷûத்வமே - புஷ்பமாம் என்கிறது அறநுõல்)
எப்போது தேவர்களுக்கும் அரிதான அமிர்தமானது ஆத்ம ஸாதகனாகிய இவனுக்கு அருகில் அமைந்திருக்கிறதோ அப்போதே இவன் காலனை (ம்ருத்யு) வென்றுவிடுகிறான். இந்நினைவுதிடப்படவே ஓம் ஜும் ஸஃ என்ற ம்ருத்திஞ்ஜயமந்திர ஜபம் உள்ளது. பிறகு அம்ருதத்தின் மீது அகதாதி எழுத்துக்களைக்கொண்டு (48எழுத்துக்கள்) இந்த முக்கோணம் எழுதவேண்டும். இது ஏன்? இந்த அ,க,த என்ற உருவமான பீடத்திலிருப்பவர் ஸ்ரீநாதரான ஸத்குரு, இவரே பரம்பொருளல்லவா. வேத, வேதாந்த, புராண, நிகம, ஆகம, இதிஹாஸம் என்றபடியுள்ள ஸகல வித்யைகளும் இந்த பரம் பொருளில்தான் தாத்பர்யம். தன்னுடைய அடைவுப் பொருளாக(லக்ஷ்யம்)பரம் பொருளையே தெரிவிக்கின்றன. எனவே தான் இந்த அக்ஷரங்களே பரம் பொருட் சிந்தனைக்கு வித்தாக இருப்பதால் -பீடமாக இருப்பதால்- இருப்பாக விருப்பதால் அ க த முக்கோணம் இங்கே போடுகிறோம்.

பிறகு பிந்துவில் ஈம் என்று எழுதுவதால் பராகாமலை இது என அறிகிறோம். மேலும் சிருஷ்டியின் தொடக்கமே இந்த காமகலைதானே. ஆத்மாவின் அனுகுணமான (ஆத்மகோசர)
துண்டாடமுடியாத செயல் தன்மையில் (அகண்டகாரவிருத்தி) தோன்றும் சிவரூபமே இதுவாகும்.

இதன் பின் மேலே கண்டவாறு எழுதிய முக்கோணத்தில் முறையே இடது வலது பக்கங்களில் ஹம் -ஸஃ என்று எழுதப்படுகிறது. இந்த ஹம்ஸபதம் சிவபதத்தை த்தவிர வேறல்ல. உள்மூச்சு, வெளிமூச்சு ரூபமான அஜபை அஷ்டமூர்த்தி வடிவமான ஸ்வ-ஆத்மா என்பதனால் இந்த ஹம் -ஸஃ எழுதுகிறோம். மேலும் இந்நினைவு உறுதிபடவே தான் ஹம்ஸநமஃ என்று பூஜையும் உள்ளது. அதாவது நான் ஜீவத்தோற்றமிருந்தும் ஜீவனல்ல என்ற உணர்வுக்காக.

தொடர்ந்து - தாம் சின்மயீம் ஆனந்த லக்ஷணாம் அமிருதகல†பி‡த ஹஸ்த த்வயாம் தேவிம் பூஜயாமி நமஃ ஸ்வாஹா என்று கூறுகிறோம். இதன் பொருள் - மஹா வித்யையான (பஞ்சதசாக்ஷரீ மூலம் விளக்கப்பட்ட) சித்தாயும் சித்கனமாயும் ஆனந்தமே வடிவமாயும் தன் இரு கரங்களில் அம்ருதகலசத்தையும் மீன் துண்டையும் வைத்திருப்பவளாயும், துண்டாடமுடியாத செயல் தன்மையுடைய ஸுதாதேவியை நான் பூஜிக்கிறேன்.

இவ்வாறு துதியை மட்டும் கூறிநிறுத்தாமல் நமஃ ஸ்வாஹா என்று நான் ஜீவனல்ல என்ற வ்ருத்தியையே சிதக்னியில் ஹோமம் செய்துவிடுகிறோம். அல்லது - துதியை மட்டும் கூறினால் போதாது என்று அதையே மந்த்ரமாக ஆக்க எண்ணி அதன் விகுதியில் நமஃ ஸ்வாஹா சேர்த்துவிட்டனர் என்றும் கொள்ளலாம்.

ஜீவபாவம் நசித்தாலொழிய ஸுதையை அனுவிக்க முடியாது. அல்லது அதுவாகவே ஆகமுடியாது. ஸுதா தேவியின் கையில் உள்ள அம்ருதகலசமானது மோக்ஷத்தைக் குறிக்கும் என்றும், மீன் துண்டமானது விரைவில் அழியும் தன்மையுடைய (நƒவரம்)சுகங்களை உணர்த்துவதாகும் என்றும்தத்வநூல்கள் கூறுகின்றன. மீன் என்பது அசுத்தமனத்தைக் குறிக்கும். இந்த அசுத்த மனஸில் தானே கற்பனையாகத் தோன்றிய ஜீவபாவமுள்ளது. நம்மை நாம ரூப ஜீவனாக எண்ணிசெயல்படுவது ப்ரவர்த்தி மார்க்கம். இதற்கு மாற்றானது நிவ்ருத்திமார்க்கம். இரண்டிலுமே ஆனந்தமான சிவம் எப்போதும் உள்ளது. ஜீவ மயக்க காலத்தில் ஜீவன் அடையும் ஆனந்தம் வெளி விஷயங்களிலிருந்து கிடைப்பதாக ஜீவன் எண்ணுகிறான். வெளியிலிருப்பது எப்போதுமே அழியும் தன்மையுடையது. எனவே இவைகள் நச்வரமானவையல்லவா. இந்த சுக ஸாதனங்களிலுள்ள உபாதிகளை நீக்கிக் கண்டால் அதுவே நிரூபாதிக ஆனந்தம். இதுவே நிவர்த்திமார்க்கம்.

இவ்விடத்தில் ம பஞ்சகம் அல்லது பஞ்சமகாரம் எனக் கூறப்படும் விஷயங்களை -இது ஞானகாண்ட தத்வார்த்த நூலாகயிருந்தபோதிலும் அவைகளும் பூஜா த்ரவ்யங்களாக விதிக்கப்பட்டிருப்பதால் அதன் தத்வ தெளிவிற்காக அவைகளை சற்று இங்கு விளக்கமுற தெளிய ஆராய்கிறோம். இதன் உபயோகம் பூராவும் கௌலாசாரத்தின் பாற்பட்டதாயினும். ஸமயாசாரத்தில் அதன் பிரதி நிதிகள் கூறப்பட்டுள்ளதால் அதன் விளக்கம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதே. பூர்வகர்மாவை துடைப்பதற்கே நாம் சரீர மெடுத்துள்ளோம். இந்நிலையில் நாம் செய்யும் கிரியைகளின் பலத்தை தியாகம் செய்யும் வழியில் தான், நமது உடல் பொருள் ஆவி என்றனைத்தையும் பரம் பொருளுக்கே அர்ப்பணம் செய்யும் வகையில் தான், இந்த பஞ்ச மகாரங்களான நமது தேஹம் சம்பந்தப்பட்ட பொருட்களையெல்லாம் அர்ப்பணம் பண்ணுவதன் சின்னமாகத்தான், இவைகளைப் பிரதிநிதிகளாகவாவது உபயோகிக்கக் கூறுகிறது பத்ததி. (பஞ்சம் என்றால் விரிந்தது,பெருகினது என்பர்.)

பஞ்சபூதங்களின் ஸூக்ஷ்ம வடிவமாய் அனுபவ உலகமாயுள்ளது- சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம் என்பவை இவைகளைத்தான் ம பஞ்சகம் என்று சாக்த தந்த்ரங்கள் கூறும். ம என்று கூறப்படும் ஜீவனுக்கு அவனுடைய வடிவமாக உள்ளதே ம காரம் எனப்படும். மேலும் அதே தந்த்ரங்களில் - ஆகாசாதிபஞ்சமஹா பூதங்களே குலத்ரவ்யங்கள் என்றும் பகர்கின்றன.

குலம் என்றால் ஷடாதாரங்கள் - இவைகளில் முறையே நிறைந்திருக்கும் பூமி, ஜலம், அக்னி, வாயு ,ஆகாசம் என்ற ஐம் பொருட்களே அதாவது த்ரவ்யங்ளே குலத்ரவ்யங்கள். மேலும் பஞ்ச தன்மாத்ரைகளையறியும் மனமும் குலத்ரவ்யம் தான். (பஞ்ச விஷயாப்ரபஞ்சஃ - கௌலோபநிஷத்) ஜீவத்துவத்துவத்தோடு கூடிய ஸாதகன் பஞ்சதன் மாத்ரைகள் மூலம் ருதன்பரா ஞானத்தை அடைவதையே ம பஞ்சக தத்வம் என்பதாக நூல்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.

ஆனந்தம் ப்ரஹ்மணோரூபம் தச்ச தேஹே வ்யவஸ்திதம்
தஸ்ய அபிவ்யஞ்ஜகாஃ பஞ்ச மகாராஃ குலஸம்ஞிகாஃ -குலார்ணவம்

ப்ராணனுக்கு பிரதானமாக தேவையானது அன்னம். எவ்வாறு அதற்கு அனுகுணமாக மற்றகாய்கறி பதார்த்தங்களை மேற்சத்தாக(அபிவ்யஞ்சனம்)பயன்படுத்துகிறோமோ அது போலத்தான் இந்த பஞ்சமாரங்கள் என்று கூறப்படுகின்றன.

இந்த மத்யம், மத்ஸ்யம், மாம்ஸம், முத்ரை, மைதுனம் என்ற ம வில் ஆரம்பிக்கும் குலதிரவ்யங்கள் உத்தம அதிகாரியின் பொருட்டு ஞானகாண்ட விசாரத்தில் எவ்வாறு பொருள் விளக்கப்படுகிறது எனக்காணுவோம்.

1. மது (மத்யம் ) ப்ரதமம் - அக்னி

முதன்மையான பிரதமம் என்று கூறப்படுகிற இதை குலாம்ருதம் என கூறுவார்கள். அதாவது ஜீவப்ரஹ்ம ஐக்யத்தையே நாடும் முமூக்ஷûவான ஸாதகனுடைய குலத்தின் அம்ருதம் ஞானமே என்றும் தத்வநூல்கள் கூறுகின்றன. (ஞானாம்ருதம் ஸமரஸம் ககனோபமோஹம்- அவதூத கீதை .) இந்த ஞான அமிழ்திற்கு பிரதிநிதியாக கர்ம காண்ட பயிற்சியின் பொருட்டு ஸ்வீகரிக்கப்படும் திரவ்யமான எந்த ஒரு அமிர்தமும் (வஸ்துவும்) வயது, காலம், தேசம், வியவகாரம், குணம், பயம், ஸஹாயம் , தேக ஆரோக்யம் இவற்றைப் பொருத்தே அமைய வேண்டும் என்பதை பரசுராமகல்ப ஸூத்ரம் தெரிவிக்கிறது.

வ்யகார தே† ஸ்வாத்மய ப்ராணோத்வேக ஸஹாய ஆமய
வயாம்ஸி ப்ரவிசார்யை வததனுகூலஃ பஞ்சாதி பராமர்சஃ (-பரசுராம கல்ப ஸூத்ரம்)

குலாம்ருதமான ஞான அமிழ்தின் ஸ்வீகாரத்திலும் அதிகாரி பேதங்களுண்டு. தனதான்மாவையும், தன்னால் தனது பஞ்சேந்த்ரியங்களினால் நுகரப்படும் விஷயானுபவங்களையும் எந்த ஒரு ஸாதகன் பரம்பொருட் துல்யமாகப் பாவித்து- காணுவோன், காக்ஷீ, காணப்படும்பொருள் என்ற மூன்றின் அபேதத்தின் அகண்டாகாரவிருத்தி போதத்தில் அமிழ்ந்து- அதாவது அபேத பிரபஞ்சமாக, அதாவது எங்கும் எதையும் சித் தாகக்காண்கிறானோ அவனே சிறந்த பிரதம ஸ்வீகாரியாவான். இதுவேதானே ரிதம்பராஞானமென்பதாய் நூல்கள் கூறுகின்றன.

மேற்கண்ட ஞான அமிழ்தே குலாம்ருதம் ஆகும். (குலாம்ருதைக ரஸிகா) இது பாஹ்யமான மது என்கிற வஸ்துவினால் ஏற்படும் ஒன்றல்ல. தவிர இந்நிலை - பஞ்சபூதங்களில் பிரதான அக்னி தத்வத்தை தனதான்ம வடிவ அகண்ட விருத்தியோடு ஐக்யப்படுத்துவதாகும். சரீரமாகும் ஆத்மபாத்ரத்தில் அக்னிதத்வத்தோடுகூடிய ப்ரபஞ்ச வ்ருத்தியாகிற அம்ருதத்தை மனதின் விருத்திகளோடு இணைத்து தத்துவங்கள் சோதனம் செய்து ஸ்வீகரிக்கும் போது இந்த குலாம்ருதைகரஸிக நிலை எற்படும். இவ்வாறு லலிதையாகவே ஆன நிலையில் யார் நிலைபெறுகிறாரோ, அவரே தீரர், வீரர் என நூல்கள் கூறுகின்றன. இவ்வாறின்றி பொறியின்பத்துக்கு நுகருவோரை நரகம் நல்வரவு கூறிவரவேற்கும் என்பதை சாக்த தந்த்ரங்கள் நன்குவலியுறுத்துகின்றன. இறுதியாக- சரீரத்ரயத்தோடு கூடிய ஜீவனுக்கு மூலாதாரத்திலுள்ள (குண்டலினி) சித்சக்தி எழும்பி மேல் ஆதாரங்களில் சென்று சென்று திரும்பி ஆகாசமான ஸஹஸ்ரார பத்மத்திலிருந்து அமிர்தம் (ஸூதை) பெருக பெருக அதையே இந்த ஆன்மஸாதகன் பருகி பருகி அதனால் ஆனந்தபரிதனாக ஆகிறான் என்பது தான் இந்த (பிரதம)மகாரத்தின் தத்வமாம்.
ஸுதாபானமிதம் ப்ரோக்தம் இதரே மத்யபாயினஃ - (குலார்ணவம்)

2. மீன் (மத்ஸ்யம்) த்விதீயம்- ஜலம்

மனதையும், இந்தரியங்களையும் ஆத்மாவில் ஸம்யோகம் செய்து ஏகாக்ரதையடைவதே இதன் தத்வம்.

மீன் என்பது அசுத்த மனத்தைக்குறிக்கும் என்பதை முன்பே கண்டோம். இது விஷய சுகங்களில்ஆசைவைத்து தன் அழிவை தேடிக்கொள்கிறது. (தூண்டில் முள்ளில் மீன் மாட்டுதல்) இவ்வாறில்லாமல் தன் மனோ வ்ருத்திகளை ஆத்மா என்ற பரம் பொருளில் லயம் செய்வித்தால் அதுவே பரமஸுகமான நித்ய மோக்ஷமாம். இதனால் தான் இந்த தத்வத்தை சுசிப்பிக்கும் தத்வ முறையில் இதனைப்பிடித்துக் கொண்டு அகண்டாகார வ்ருத்திவடிவ அம்ருதத்தை தோய்த்துத் தெளிப்பது என்ற பிந்து தர்ப்பணம் ஏற்பட்டுள்ளது. அதாவது அனுபவ வடிவமான ஜீவபாவத்தை ஸ்ரீ பாதுகையினிடத்தில் அர்ப்பித்தல் என்ற பாவனையே இது . மேலும் இந்த ஜீவன் எண்ணிலடங்காப்பிறவி எடுத்திருக்கிறான். அவைகள் ஒவ்வொன்றினுக்கு இந்தவிஷய சுகங்களின் ஒரு பிந்துவே காரணம் அல்லவா. பிறவிக்கணக்கு இவனுக்குத் தெரியாது. எனவே எத்தனைபிறவி எடுத்திருந்தாலும் அதன் ஒவ்வொன்றிற்கும் காரணமான பிந்துத்வத்தை ஸ்ரீ பாதுகைகளிலே அர்ப்பணித்துவிட்டால் - பிறவிக்கணக்கு ஒயுமே. இம்மாதிரியான தத்வமும் கூட இதற்கு கூறலாம்.

மனஸா ச இந்தரியகணம் ஸம்யம் யாத்மனி யோஜயேத்
மத்ஸ்யா‡ ஸ பவேத்தேவிசேஷாஃ ஸ்யு ப்ராணஹிம்ஸிகாஃ - (குலார்ணவம்)

ஜல சராணாம் து பி‡தம் - தந்த்ரதத்வப்ரகாசிகா

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாருமின்றி வெறித்துத்திரிவன
மேய்ப்பாருமுண்டாகி வெறியுமடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொறியுமே - திருமூலர் (பால் - அமிர்தம்)

ஐம்புலக்கட்டுப்பாட்டினால் தான் அமுதமுண்ண முடியும் என இதனால் தெரிகிறது.



3. மாம்ஸம் (த்ருதீயம்) -பூமி

காமம், க்ரோதம் எனப்பட்டவைகளும் புண்யம், பாபம் என்றவைகளும் பசு (ஹவிஸ்) எனப்படும். இதனை ஞானம் என்ற வாளால் வெட்டி பதியான பரம்பொருளுக்கு நிவேதனம் செய்து விடவேணும் என்ற நிலையே மாம்ஸம் என்றதன் தத்வார்த்தமாம்.

புண்யாபுண்ய பசும் ஹத்வா ஞானகட்கேன யோகவித் - (குலார்ணவம்)
காமக்ரோ தௌ பசுதுல்யௌ பலிம் தத்வா ஜபம் சரேத் -(தந்த்ரதத்வப்ரகாசிகா)

4. சுண்டல் (முத்ரை) சதுர்த்தம் - வாயு

ஜீவனிடமுள்ள ஸகல துர்க்குணங்களையும் ப்ரஹ்ம வித்யை என்கிற நெருப்பால் சமைத்துண்டு எப்போதும் தானே ஒளிவீசும் திவ்ய பாவத்தில் நின்று கொண்டு பூரண திருப்தியுடன் இருப்பதே இதன் தத்வார்த்தமாம்.

நித்யம் ஸம்பாவயேத்தானவ ஹித மனஸா திவ்ய பானானுராகி யோ(அ)ஸௌ
ப்ரஹ்மாண
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:02 am

குருயஜனம்

வரிசை எண் 5ன் தத்வார்த்தம் -

இங்குவைக்கும் குருபாத்ர ஸ்தாபனத்துக்கு மண்டலத்தில் ஹம்ஸஃ சிவ......நமஃ என்ற ஹம்ஸமந்த்ரம் கூறப்படுகிறது. குருவானவர் அவித்யா பாதத்திலிருந்த சீடனை வித்யா பாதத்துக்கு ஏற்றி அதிலே மனன நிதித்யாஸனாதிகள் மூலம் அடையப்படுவதான ஸவிகல்பஸமாதி என்ற ஆனந்த பாத அடைவும், அதன் மேல் துரீய பாதமென்ற ஜீவன் முக்த நிலையும் அடையப்பண்ணியவரல்லவா. எனவே இதனை நன்றாக விசாரணை மூலம் தெரிந்து அறிந்து அந்த அறிவினை அவருக்கே நிவேதனம் செய்யவேண்டும் என்ற தத்வ தெளிவிற்கே இங்கு இந்த குருபாத்ர ஸ்தாபனமும் நிவேதனமும், விதிக்கப்பட்டிருக்கிறது. ஸத்குருவின் ஸந்நிதியில் இது நிவேதனம் மட்டுமே. அஸந்நிதியில் - தானே குருத்ரயத்தை தன்சிரஸில் பூஜா தர்ப்பணம் செய்தபின் - அந்த அர்க்கியத்தை ஆத்ம பாத்ரத்தில் விட்டு அதன் முலம் யஜனம் செய்வது இங்கு ஸம்ப்ரதாயமாம்.

குரோர் ஜீவஸ்ய ச ஐகத்வம் யதா யாதி வரானனே
ததைவ ஸஹஸா ஜப்த்வா ப்ராப்னுயாத் ஸித்தி முத்தமாம் (புரƒ†ரண ரஸோல்லாஸ தந்த்ரம்)

எப்போது குருவும் ஜீவனும் ஒன்றான தன்மை ஏற்படுகிறதோ அப்போதே திடீரென்று அந்தக்கணமே உத்தம ஸித்தி கிடைத்துவிடுகிறது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. -திருமூலர்
(அன்பு = சக்தி என்றுபொருள் கொள்ளவும்)

ஆத்மயஜனம்

வரிசை எண் 6, 7ன் தத்வார்த்தம்

இங்கு ஸாதகனுக்கும் - ஸாதகனின் சக்திக்கும் வைக்கப்படும் பாத்ரங்கள் உள்ளன. எவ்வாறு ஔபாஸனம் என்கிற ƒரௌத கர்மாவில் ஒருவனது பத்னிக்கு என்று விதிக்கப்பட்ட சில கர்மாக்கள் இருப்பது போன்று இந்த யாகத்திலும் சக்தி பாத்ர விசேஷம் உண்டு. இதுலிருந்து ஸாதகனின் பத்னியும் இவனோடு கூடவே தீக்ஷையாகி மனனம் நிதித்யாஸனம் என்ற பயிற்சியையும் செய்ய வேண்டியுள்ளது என்பது புரிகிறது. மேலும் சக்தி வழிபாட்டில் சக்திக்கு விசேஷம் உண்டல்லவா, இதனை இங்கு ஸத்குருவருளால் நன்றாக புரிந்து கொண்டு செய்ய வேணும்.

ஜீவனுடைய மூலாதாரத்தில் அனாதி வாஸனா என்கிற விறகினால் சிதக்னி மண்டலம் ப்ரகாசிக்கிறது. ஜ்வலிக்கிறது. அதிலே இந்த ஜீவனின் கணக்கிலடங்கா பிறவிகளில் சேர்த்துவைக்கப்பட்ட சேஷங்களான - புண்யம்,பாபம், க்ருத்யம், அக்ருத்யம், ஸங்கல்பம், விகல்பம், தர்மம், அதர்மம், என்ற நான்கு இரட்டைகளை ஹோமம் செய்து விடவேணும். ஏனெனில் இவைகள் இவனுடைய வடிவத்தில் உண்மையில் இல்லவேயில்லை. இது மாயாகல்பனையே. எனவே இந்த கல்பனை ஒழிய அதாவது நிச்சயபுத்தி ஏற்பட இந்த யஜனக்ரியை. ஏனெனில் இவனுக்கும் , பரஸ்வரூபத்துக்கும் இடையீடாக விரிந்து நிற்பதாக இவன் இவைகளை நினைத்தானே அதனால்தான். மேலும் கல்பனையான இந்த எண்ண இரட்டைகள் இல்லவே இல்லை என்பதை துவக்க காலத்திலேயே திடம் செய்துகொண்டு ஸத்ய ப்ரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். நியாயஸ்தலத்தில் விசாரணைக்கு முன்பு ஒருவன் எவ்வாறு தன் நிலையை விளக்குமுன்பு ஸத்யப்ரமாணம் எடுத்துக் கொள்ளுகிறானோ அது போல் இங்கே இது உள்ளது.

மூலாதாரத்தில் கொழுந்து விட்டெறியும் சித் அக்னியாலேயே புறத்தில் - பிரபஞ்சத்தில் காணும் அக்னி ஒளிர்கிறது என்பது வேத வாக்யம்.(நதத்ரஸூர்யோபாதி......என்னும் ஸ்ருதி) இவ்வாறான இந்த சிதக்னியில் வெளியே நாம் நுகரும் பொறிச்செயல்கள் அனைத்தையும் ஹோமம் செய்தல் வேண்டும். இந்த ஹோமத்திற்கு ஹவிஸே விஷய வாஸனைகள் தானே. (பாஹ்ய எண்ணங்கள்) ஆனால் இத்தகைய விஷய வாஸனைகள் சாதாரண ஜீவன்களுக்கு போதத்தை உண்டுபண்ணுகின்றன. ஆனால் இங்கு ஸாதகனுக்கோவெனில் - அத்தகைய வாஸனாவ்ருத்திகளாகிற மது சிதக்னியாகத்தில் ஹவிஸாக ஆகிறது.(குண்டலினியாகம்) புண்ணியபாபாதி 8 விருத்திக்களையும் ஹோமம் செய்வதென்பது

அகண்டாகாரவ்ருத்தி ஞானம்என்னும் அமிர்தமில்லாது எப்படிக்கூடும்? சாத்தியமாகும்?
இறுதியில் - ஆர்த்ரம் ஜ்வலதி. . . . . . என்ற பூர்ணாஹூதி வாக்ய மந்த்ரம் ஒன்று கூறுகிறோம். இவ்வாறு--

இந்த அம்ருதமானது என்னுடைய அதிஷ்டான சைதன்ய வடிவமே. இது தானே ஒளிவிடுகிறது. இந்த ஒளிதான் நான். என்னுடைய உண்மை வடிவத்தில் ஜீவபாவமானது வெறும் கற்பனையே. இது அக்ஞானத்தால் உண்டானது. ஞானம் ப்ரகாசித்தவுடன் அக்ஞானம் அழிந்து முன்பே பூரண ஸித்தமான ப்ரஹ்ம பாவம் ஸித்திக்கிறது. இந்த ப்ரஹ்மபாவம் புதிதாக வேறு எங்கிருந்தும் எதனாலும் எற்படவில்லை. இங்கும் எங்கும் எப்போதும் நான் ப்ரஹ்மமே. இந்த தீர்த்தத்தில் இது என்று குறிப்பிடும் அன்னிய பார்வை என்ற உபாதியை ஒழித்து என்னோடு ஐக்யம் செய்கிறேன்.

இதுவரை செய்த பூஜா க்ரியைகளை ஆத்மானுஸந்தானம் என்ற நிலையில் விஜாரித்தபோது இந்த இடத்தில் ஸாதகனுக்கு ஸவிகல்பஸமாதி நிலை ஸித்தித்து இருக்கவேணும். அவ்வாறு அமையாத நேரத்தில்தான் மேற்கொண்டு- பூஜிக்கவேண்டிய செயல்களை சிந்திக்கவேணும் என்றாகிறது.

அம்ஸநமஃ என்றிட்டே ஆத்மனுக்கொன்றுவை
அம்ஸநமஃ என்றிட்டே துணைக்கொன்றுவை
அம்ஸநமஃஎன்பதிங்கே சும்மாவிரு சுகமாம்
அம்ஸநமஃஅம்ஸநமஃ அதுவேதான் தனையறிதல்
எட்டானவர்க்கங்கள் எதற்கு இங்கே?
சிட்டாகபறந்துவிட சீராய் வேள்வி
எட்டானவர்க்கங்கள் எல்லாம் நாசம்
எட்டிவிடும் அறிவிற்கு ஆன்ம யஜனம்.

நீயே தான் அதுவாவாய் அதுவேதான் ஆசானாவார்
தூய்மைமிகு ஆனந்தபாத அடைவினை யருளிடுவார்
உயர் வடைவதற்கொரு பாத்திரமிங்குனது
துயர் மாற மூன்றாம்பாதம் தேசிகனருளிடுமாறே.

நாலான சொற்கூட்டில் நிலையாய் நின்று
மேலான மாகுருவின் மலர்பதம் கண்டு
காலனையும் வென்றுவிடும் கருத்தைக் கொண்டு
சாலச்சிறப்புடனே சந்ததம்கொடுப்பாய்.

பின்குறிப்பு- இதன் பின்பு சிலபத்ததி ஸம்ப்ரதாயங்களில் வீரபாத்ரம், பலிபாத்ரம், போகபாத்ரம் என பாத்ரஸ்தாபனங்கள் உண்டு.

அனைத்தின் தாத்பரியங்களும் ஞானத்தில்தான் என்றிருப்பதால், அவைகளை நாம் தனித்தனியே விளக்கவில்லை. மேலும் - பல பத்ததிக்ரமங்களில் - விசேஷார்க்கிய பாத்ரஸ்தாபனத்தின் அடுத்ததாக ஸ்ரீபாத்ரம் என்பது மத்தியில் ஸ்தாபனம் செய்கிறார்கள். அதுகூட விசேஷார்க்கிய பாத்ரத்தின் முழுதத்வார்த்தத்தை தன்னகத்தே கொண்டுள்ளதுதான் என உணருவோம்.

அர்க்கியபாத்ரம்

வரிசைஎண் 8ன் விளக்கம்

இது தேவிக்குக் கொடுக்கும் அர்க்கியபாத்ய ஆசமனீய பூஜா ஸமர்ப்பணங்களுக்கான பாத்ரம். தேவியின் இடதுகை, இடதுகால் ஸமீபத்தில் இது வைக்கப்படவேண்டும்.

பலி பாத்ரம்

வரிசை எண் 9ன் தத்வார்த்தம்

இந்தபாத்ரம் தாமிரத்தாலானது. ஸாதகனின் இடதுபுறம் வைக்கவேண்டும். இது அகண்டாகாரவ்ருத்தி வடிவவ்யாபக மண்டலத்தில் ஸ்தாபிக்கப்படுவதாகும். ஓம் ஹ்ரீம் என்ற பிரகாச விமர்ச பிரணவங்கள் நமது நாம ரூப நாட்டத்தை ஒழித்து அவற்றை

விக்ன காரியங்களான பூதங்களுக்குத் தந்து அவைகளை தன்னிலிருந்து துறத்திவிடுதலைக் குறிக்கும். (ஹூம்பட்ஸ்வாஹா

-என்றது -துறத்திவிடுதலைக்குறிக்கும்) ஒன்றல்லாத மற்றதில் - ஒன்றைத்தோற்றுவித்து ஸன்மார்க்கத்துக்கு மாறான வழியில் பிரவேசிக்கச் செய்யம் சக்திகளே மாயை. இதுவேதான் பாம்பல்லாத கயிற்றில் பாம்பைக் காட்டினது. பய உணர்ச்சியைக்கொடுத்தது. இதுவே தான் பூதம். இந்த பூத பய உணர்ச்சியை விரட்டவேதான் இந்த பலி ப்ரதான க்ரியை. முன்பே விக்னோத்ஸாரணத்தில் சிவனுடைய ஆக்ஞையால் (தே நƒயந்து சிவாக்ஞயா) பூதங்கள் ஒழியட்டும் எனது திடபாவனை செய்திருந்தும் அந்த பூதங்கள் மறுபடியும் தோன்றிக் கொண்டேதானிருக்கும். இது தான் பாதிதானுவ்ருத்தி என்பர். கானல் நீரில் ஜலம் இல்லை என்று நிர்சயமாகத் தெரிந்தாலும் நீர்தோற்றம் உண்டல்லவா, அதுவே இது. எனவே மறுமுறையும் இங்கு இந்த செய்கை அவசியமாகிறது. (இது-நைவேத்ய உபசாரம் முடிந்தபின் -செய்யவேண்டிய கிரியையாக இருந்த போதிலும்- மண்டலம் போட்டுபாத்ரஸ்தாபனம் என்ற நிலையிலேயே இதன் தத்வார்த்தம் கண்டோம்).

பழுதையிலே பாம்புகண்டால் பயந்தானிங்கே
பழுதையெனும் தெளிவுபெறின் பரமாநந்தமே
பழுதையறியும் தெளிவிற்கே பலிதானிங்கே
பழுதையிலே பாம்பொழிய பலிதானந்தான்.

காரண கலசம்

வரிசை எண் 10 ன் தத்வார்த்தம்

இது வர்த்தனி கலசத்தின் வலதுபுறம் (ஸாதகனின் இடதுபுறம்) வைக்கப்படவேண்டும். இது வாருணி என்ற விசேஷார்க்கிய அமிர்தம் மொத்தமாக வைத்துள்ளபாத்ரம். இதிலிருந்துதான் விசேஷார்க்கிய பாத்ரத்தில் அம்ருதம் விடவேணும்.

அதாவது நமது ஜீவ அணுக்கள் எங்கிருந்து தோன்றிக்கொண்டே இருக்கிறதோ அதுவே காரணம். இதனை

உணர்த்துவதே இதன் நோக்கம். இதனை ஸ்தாபிக்க என்று மண்டலமோ தனியிடமோ ஸ்ரீ வித்யாஸபர்யாபத்ததியில் காணப்படவில்லை. இருந்த போதிலும் அதற்கென ஒரு இடம்

ஒதுக்கப்பட்டு தத்வார்த்தம் கண்டோம். அது இவ்வாறுசெய்யப்படவேண்டியதே.

இதுவரை ஸ்தாபிக்கப்பட்ட பாத்ரங்கள்யாவும் கடைசியில் உத்வாஸனம் நடைபெறும் வரை பூஜைமத்தியில் அவைகள் அசங்குதலோ , ஆடுதலோ கூடாது. அவ்வாறில்லாமல் பிரமாதி தோஷங்களினால் ஆட, அசங்க நேர்ந்தால் உடன் மூலமந்த்ர ஜபம் பிராய சித்தமாக விதிக்கப்பட்டிருக்கிறது. மனமானது சலிக்காமல் ஏகாக்ரதையோடு இருக்க வேண்டியதை இது உறுதிசெய்கிறது. இந்த பாத்ரங்களுக்கு - அளவு, பரிமாணம் இவைகள் பல தந்த்ரங்கள் கல்பங்களில் பல விதமாக உள்ளன. எனவே அவரவர்கள் தன் ஸாதனாபக்குவத்திற்கு தக்கபடி - குருவழியில் பெரியோர் அறிவுரையில் ஸாத்யமானவழியில் தத்வதர்சனத்தோடு செயல்பட்டு அமைக்கலாம் என்பது ஆன்றோர் அபிப்ராயம்.

கி
ஸ்ரீ அந்தர்யாக ஸமாஸக்த மானஸாய நமோ நமஃ


முதலில் -இங்கு உபாஸனையின் வகைகளைப்பற்றி சற்று விளங்கிக் கொள்வோம். நாம் செய்யவிருக்கும் மானஸ பூஜா கிரமங்களை புரிந்து கொள்ள இது வசதியாயிருக்கும். மேலும் பூஜிக்கவிருக்கும் ஸ்ரீ சக்ரம் பற்றியும் சில செய்திகள் உணருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் தெளியலாம்.



ஸ்ரீ சக்ரம்
உத்தார க்ரந்தங்கள்

ஸ்ரீவித்யார்ணவம், ஞானார்ணவம், தந்த்ரராஜம், ஸுபகோதயம், ருத்ரயாமளம், த்ரிபுரோபநிஷத், ஸௌந்தர்யலஹரி,


லலிதோபாக்யானம், லலிதாஸ்தவரத்னம்,சிந்தாமணிஸ்தவம்

ஸ்ரீசக்ர வகைகள்

1. மேருப்ரஸ்தாரம் (ஷோட†நித்யா தேவதைகளாக பாவித்தல்)
2. கைலாஸப்ரஸ்தாரம் (மாத்ருகாக்ஷரமாக பாவித்தல்)
3.பூ ப்ரஸ்தாரம் (வ‡ன்யாதிகள் எண்வராக பாவித்தல்)

ஸ்ரீசக்ர பூஜா கிரமங்கள்

1. ஸ்ருஷ்டி 2. ஸ்திதி 3. லயம்

ஸ்ரீசக்ர அமைப்பு

1. ஸ்படிகம் (ஸதைவ பூஜனம்)
2. ஸ்வர்ணம் (ஜீவன் பர்யந்தம்)
3. ரஜதம் (வெள்ளி) (20வருஷம்)
4. தாம்ரம் (12 வருஷம்)
5. பூர்ஜபத்ரம் (6 வருஷம்)

ஸ்ரீசக்ர பூஜா ஆசாரம்

ஸௌந்தர்யலஹரி - லக்ஷ்மீதரர் வ்யாக்யானத்தின்படி ஆசாரம் இருவகை

1. ஸமயம் (தஹராகாசம் - மனஸ் - இதற்கு மந்த்ரபுரச்சரணம், ஜபம் -பூஜை தேவையில்லை)
2. கௌலம் (பாஹ்யாகாசம் - வஸ்து - மந்த்ரம் , ஜபம், பூஜை, ஹோமம் இவைகள் தேவையுண்டு.
(மிச்ரம் என்பது மேற்கண்ட இருவகையும் இணைந்தது)

உபாஸனை - பட்டிகை

உபாஸனை
(பர்யாயநாமங்கள் - வரிவஸ்யை, பரிசர்யை , †úƒருஷை)

1. பாஹ்யம் (வெளி)

2. ஆந்த்ரம் (உள்)

2. (அ) ஸ்தூலம் (நேரடி)
2.(ஆ) ஸூக்ஷ்மம் (நுண்ணிய)
2.(இ) பராரூபம் (அறிவு)



1. பாஹ்யம் (வெளி)

ஸஹகாரிகள் - சக்ரங்கள், ப்ரதிமைகள், ஸாளக்ராமம், பாணம், உதகும்பம், சந்த்ரபிம்பம், ஸூர்யஒளி, விக்ரஹங்கள் இத்துடன் கந்தாதி உபாசார கர்மாக்கள்.

சிவகீதையின்படி - 1. ஸம்பத்- அல்பவஸ்துவை குணங்களால் உயர்ந்தது எனவும், அணுவான மனஸை ஆனந்தம் எனவும் கொள்வது. 2. ஆரோபம் - ஒங்காரத்தில் உத்கீதம் என்ற பாவனை செய்வது. 3. ஸம்வர்க்கம் - கர்மாவுடன் கலந்து உபாஸிப்பது, 4. அத்யாஸம் - பெண்ணை அக்னி என்று எண்ணுவது.

2. ஆந்த்ரம்(உள்)

ஸஹகாரிகள் - வாக் -துதி மந்த்ரஜபம் மனஸ், த்யானம்- ரூபம்.

சிவகீதையின்படி-ஸகல ப்ரபஞ்ச வ்யாபாரங்களையும் புத்தியில் ஒடுக்கி தன்னை தேவதையாகக் கருதுவது. இதன் பொது அங்கங்கள் ஆறு என்பர்.


1. தீர்த்தயாத்ரை, ƒரார்த்தம் இவைகளை முக்கியமாக கருதக்கூடாது.
2. மனஸுக்கு எங்கு ஏகாந்த நிலை உண்டாகிறதோ அங்கு அஜினம் என்ற ஆஸனத்தில் அமர்க.
3. உடல், தலை வளையக்கூடாது.
4. ஆச்ரம தர்மங்களில் மனம் வைக்கக்கூடாது.
5. இந்த்ரியங்களையடக்க வேண்டும்.
6. பக்தியோடு கூடி குரு வணக்கம் செய்தல் வேண்டும்.

2(அ). ஸ்தூலம்

த்யேயத்தின் கரசரணங்களோடு கூட ஸகுணஸாகார ரூபத்யானம் . இதன் பலன் - மந்த்ரஸித்தி ஏற்பட்டு த்யேயம் பிரத்யக்ஷமாகும்.

2(ஆ). ஸூக்ஷ்மம்

உபாஸ்ய தேவதையின் மந்த்ராத்மகமான எழுத்துவடிவம். (அகாராதி க்ஷகாராந்தம்) பலன் -மந்த்ரத்ரஷ்டா, ரிஷி இவர்களுக்கு ப்ரத்யக்ஷமானது.

2(இ). பராரூபம்

நிர்விகல்ப ஞானரூப சைதன்ய மாத்ரத்தையறியும் சுத்தஸத்வப்ரதான மனோவ்ருத்தியோடுகூடினது. மனோவாக்குக்கு எட்டாத நிலையில் - இரண்டற்ற பரம்பொருளுடன் (ப்ரஹ்மம்) இணைந்த ஆத்ம வடிவமான சித்சக்தி ஐக்யம். (ஸ்ரீவித்யோபாஸ்தியின் பயனே இதுதான். ஞானிகள், ஜீவன் முக்தர்களின் முடிந்த முடிவான உபாஸ்தி இதுவே).

இதுவரை உபாஸனையை விளக்கிக்கொண்ட நாம் பாஹ்யமாக(வெளி) பூஜிக்கத்தொடங்குமுன்பு எந்த தேவதையை பூஜிக்கப்போகிறோமோ அதன் கரசரணங்களுடன் கூட ஹ்ருதயத்தில் தியானித்து, அதனையே எதிரில் ஆவாஹித்து பூஜை செய்யவேண்டும் என்பது மரபு. ஏனெனில் அந்தர்யாகமில்லாமல் பஹிர்யாகம் செய்வது அவைதிகமே என்பது மஹான்களின் முடிவு. மேலும் உத்தம அதிகாரிகளுக்கு பாஹ்யயாகமே அவசியமில்லை என்றும் நூல்கள் கூறுகின்றன.

சுத்தஸத்வ ப்ரதானமான உட்பொறிகளோடு (அந்தக்கரணம்) கூடினவனே இந்த ஸாதகன், இவனே ஆந்த்ர பூஜா அதிகாரியாவான். இந்த மானஸபூஜையின் வடிவம் என்ன என்பதை இனி சிந்திக்கிறோம்.

மூலாதாரம் தொடங்கி ப்ரஹ்மரந்த்ரம் வரையில்பிரகாசிப்பது - தாமரைத்தண்டின் நூல் போல் மெல்லிய அதிநுட்பமான மின்னல் கூட்டத்தைப்போல் பிரகாசிப்பது 10,000ஸூர்யர்களின் திரண்ட ஒளிகாந்தி உடையது. அனேக சந்திரர்கள் அங்கு தன் தண்ணொளியை பொழிகிறநிலையில் உள்ளது. இதுவே தேஜோ தண்ட வடிவமான பரசித்தாம். (ச்ருதி- நீலதோயத மத்யஸ்தா....அனுபமா) சரீரத்தில் பிரகாசிப்பது போல் பிரபஞ்சத்திலும் இந்த மஹாப்ரகாசமே நீக்கமற விளக்குவது என்று பாவித்தலே ஸமயமத ரஹஸ்யம். இக்கருத்தையே ஸ்ரீசங்கரபகவத் பாதர்களும் ஸ்ரீகௌடபாதாசார்யாளும் வலியுறுத்தியுள்ளனர். இந்த பரசித்தை சரீரத்திலுள்ளபடியே ஸ்ரீ சக்ரத்தின் ஆவரண தேவதைகளுடன் எவ்வாறு அன்வயப்படுத்தப்படுகிறது என்று காண வேண்டும்.

சித்சக்தியான ஸ்ரீசக்ரத்தை எவ்வாறு பாவித்தல் வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீசக்ரத்தை ப்ரபஞ்சமாக பாவித்தல் - மந்தமாதிகாரி விஷயம் ஸ்ரீசக்ரத்தை சரீரமாக பாவித்தல் - மத்யமாதிகாரிவிஷயம் ஸ்ரீசக்ரத்தை மனமாகபாவித்தல் - உத்தமாதிகாரி விஷயம்

இங்கு நாம் சிந்திக்கும் இந்த ஞானகாண்டம் உத்தம அதிகாரி விஷயமாதலால் ஸூக்ஷ்மசரீரத்தில் மானஸிக பாவனையே செய்ய இங்கு பத்ததி கூறுகிறது.

மேற்கண்டவாறு (98 சக்திகளை) தியானிக்கும் போது ஜீவனான தன்னை அந்த தேவதைகளுக்கு எதிரில் புஷ்பம் நிறைந்த கைகளோடு நிற்பவனாக பாவித்தல் வேண்டும். பூஜையின் ஸமர்ப்பணத்தை தேவியின் இடதுகையில் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு எல்லாசக்திகளும் ஆவரணதேவதைகளும் பரதேவதையிடம் லயமடைந்ததாக பாவித்து இவ்வாறு லயமான இடம் ஹ்ருதயம் என்பதை உணரவேண்டும். பரதேவதையின் பாதமூலத்தில்- ஜீவன் லயமடைந்ததாக பாவித்தலும் உண்டு. இதைப்போன்ற இடங்களில் தத்வங்களின் முழுவிளக்கமும் குருமுகாது அறிய வேண்டும்.

அகுலஸஹஸ்ராரத்திலிருந்து பெருகும் அமிருத வடிவமான தேவதைகள் - பஞ்ச பூதங்களில் அதிஷ்டிதமாயுள்ளவர்கள். இவர்கள் மூலம் தான் ப்ரஹ்மானந்தம் உணரப்படுகிறது.

இவர்கள் சந்தனாதி பஞ்சோபசார சக்திகள். இவர்களையும் தேவிக்கு எதிராக பாவித்து உபசாரம் செய்தல் வேண்டும். இவர்கள் மூலம் ஜீவனின் அனுபவமேதான் ரஸாம்ருதமான தேவியின் வடிவமாம்.

இந்த்ரிய க்ராம ஸங்க்ரா ஹ்யைர் கந்தாத்யைர் ஆத்ம தேவதாம் ஐ
ஸ்வாபேதேன ஸமாராத்ய ஞாதுஃ ஸோ(அ)யம் மஹாமகஃ ஐஐ

உபாதிகள் நிரஸனமானபின் ஜீவபாவம் ஒழிந்துவிடுகிறது. நாமரூப பிரபஞ்சத்தின் ஜடாம்சமும் நசித்துவிடுகிறது. பிறகு தேவியின் ஸ்வபாவமான அஸ்திபாதி பிரியங்கள் மட்டுமே தான் மிஞ்சுகின்றன அல்லவா. இதுவே தான் உணர்ச்சிக்கு விஷயம். இந்த நிலையே ஸச்சிதானந்த ஆத்மதர்சன நிலை என்பர். உலகமே சிவமயமாக காணும் இந்நிலையில் சோக, மோஹங்கள் இல்லை. கேவலம் ஆனந்த நிலையே. சக்தியின்உல்லாசம் என்பது இதுவே. இந்த ஆனந்தத்தைதான் ஸர்வஸம்க்ஷோபிணி முதலானபத்து முத்ரைகளும் நமக்கு உணர்த்துகின்றன. (முதம் - ராதீதி முத்ராஃ ). ஆனந்தத்தினை கொடுப்பதற்கு முத்ரை என்று பெயர். முத்ரைகளின் தத்வார்த்தம் - சித்சக்தி ஞானமேயாகும் என்பர். இதன் பின் ஸாதகன் ஸ்வரூப நிஷ்டையில் இருத்தல் அவசியம் என்று உணரவேண்டும். இவ்வாறு ஸ்வரூப நிஷ்டையில் இருப்பவனே ஞானியாம். இவன் எந்த சித்த வ்ருத்தியிலே இருந்தாலும் அவனுக்கு ஆனந்தமே.

பிறகு தேவியின் பிரேரணையால் நழுவின மனதினனாய் இந்த ஸாதகன் அகண்டாகார வ்ருத்தியினாலே எதையும் எங்கும் அறிந்து கொண்டு அவனுக்குத் தோன்றும் பிரபஞ்சமேதான் -சித்சக்தியுடைய ஸொந்த உண்மையான லீலையால் அங்கீகரிக்கப்பட்ட சரீரமாம். இதுவே அம்ருதசைதன்ய மூர்த்தி என்ற கல்பனா வடிவம். இதையே தனக்கு எதிரில் உள்ள பாஞ்சபௌதிகமான - பொறிகளுக்கு விஷயமான மூர்த்தி திரவ்யங்களில் ஆவாஹிக்க வேண்டும். எனவே எந்த தேவதையை இந்த ஸாதகன் புறத்திலே பூஜிக்கப்போகிறானோ, அதனுடைய உண்மையான வடிவத்தை இதுவரை உள்ளத்திலே உணர்ந்து அப்படிப்ட்ட உணர்வு மயமான மூர்த்தியை இப்போது வெளியிலே பூஜிக்க இருக்கும் மூர்த்தியிலே, தன்னுடைய த்ரிபுடி ஒழிந்த நிலையை உறுதிப்படுத்திப்கொண்டதற்கு சான்றாக த்ரிகண்டா முத்ராலங்கிருதமான புஷ்பத்தினாலே இந்த அம்ருத சைதன்ய மூர்த்தியை ஆவாஹிக்கப்போகிறான்.

ஒருவன் செய்யும் எந்த தேவதா பூஜைக்கு முன்பாகவும் பூஜிக்கவிருக்கும் மூர்த்தியை இவ்வாறு உள்ளத்திலே கொண்டு உணர்ந்து அதற்கு அங்கே உபசாரங்களைச் செய்து வழிபட்ட பின்பே வெளிபூஜை செய்வது என்பது இவனது ஸம்ப்ரதாயம் மட்டுமல்ல. முடிந்த முடிவான ஸத்யத்தை கண்டானந்தித்த மஹான்களும் யதிகளும் கூட இந்த மானஸ பூஜையை செய்திருக்கிறார்கள். இதற்கு சான்று - ச்ருங்கேரி பீடாதிபதியாயிருந்த ஸ்ரீ நரஸிம்மபாரதிகள், ஸ்ரீ பத்ரிகாச்ரம ஸ்தித ஸ்ரீ அவதூத மஹான் குஹானந்த நாதர் அவர்கள்.

மூலாதார முழுக்குண்டத்தில் மூண்டெழுந்த மூலத்தை
நாலின்மேலாம் பூரகத்தில் காலாலெழுப்பிப்பொருத்திவிட்டு
நூலாம் இயதத்தாமரையில் நன்றாய் நின்று நோக்கிவிட்டு
ஆலாம் விசுத்திசக்கரத்தில் அழகாய் அமர்ந்ததன் பின்பு
நாலில் இரண்டு குறைவதிலே நாட்டம் தன்னை நாட்டிவிடு
நாலும் செல்லுமதன்பின்னே நேராய்இறங்கிவந்துவிடு
காலில் பூஜை செய்துவிட்டால் காலனும் பயந்து ஒடிவிடும்
மேலாம் இதுவே உன்பூசை மேதினி தன்னை மறந்துவிடு

கி

ஸ்ரீ ப்ரபஞ்சாக்ருதி சக்ரஸ்த்த மூலபூதாயதே நமஃ


அண்டபிண்டங்கள் அத்தனையும் பாஞ்சபௌதிக கலப்புள்ளவை அல்லவா. இந்த பஞ்சபூதங்களின் காரியங்கள் ஒரு ஸாதகனுக்கு தன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்வதற்குரிய அபிவியஞ்சகங்களாக (மேற்சத்தாக) அமைந்துள்ளது என்பது தெரிந்ததே. இது முன்பு கண்டது தானே.

ப்ரபஞ்சத்திலுள்ள கடபடாதி வஸ்துக்கள் அத்தனையிலும் இடைவிடாமல் கலந்து ஊடுருவிபரந்து நிற்கிறதுதான் ஆத்மஸ் வரூபமாகிய சைதன்யம். எங்கும் எதிலும் பரவி நிற்கக்கூடிய அப்படிப்பட்ட சைதன்யத்தை ஸாதகன் தன் அகண்டாகாரவ்ருத்தி ஞானத்தினாலே முதலில் பிரித்தறிந்து அதனாலே அந்த சைதன்யத்தினுடைய ஸ்வபாவமானசக்திகளை தெரிந்து கொண்டு அதோடு தானும் ஒன்றறக் கலக்க வேணும் என்ற நிலை திடப்படவே ஏதாவது ஒரு பொருளில் சைதன்யத்தை ஆவாஹிக்க வேணும்.
எனவே இந்த்ரிய விஷயமாகும் மூர்த்தி திரவ்யங்களில் பரசித்தை ஆத்மன் உணருவதுதான் ஆவாஹனம். ஸாதகனுக்கு நிர்விசேஷ ஞானம் ஏற்பட இந்த ஆவாஹனம் அவசியமே. இங்கு ஆவாஹனம் செய்வது தேவியின் ரூபகல்பனையே. இது ஏனென்றால் சின்மயஸ்ய - அத்விதீயஸ்ய நிஷ்கலஸ்ய அசரீரிணஃ என்றுள்ள சித்சக்தியை உபாஸகானாம் கார்யர்த்தம் ப்ரஹ்மணோ ரூபகல்பனா என்றபடி ரூபகல்பனை செய்யப்படுவது உணர்க. இது ராமதாபினி உபநிஷத் மற்றும் குலார்ணவ தந்த்ரவசனமாகும். பக்தானாம் மோக்ஷதானாய பலதோ ரூபகல்பனா... என்று ப்ருஹந்நாரதீயம் கூறுகிறது.

உள்ளிருக்கும் சக்தியை உறுதியாக எடுத்துமே
கல்லிருக்கும் சக்தியில் கடவுளாகப் பொருத்திவிடு
வில்லிருக்கும் சத்தியும் விரைவு பெற்றாவதாய்
உள்ளிருக்கும் சித் துமே உண்மையாக வந்திடும்
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:03 am

ஸ்ரீசதுஷ்ஷஷ்ட்யுபசாரேண பூஜிதாய நமோ நமஃ


ப்ராபஞ்சிக வஸ்துக்கள் ஒவ்வொன்றிலும் நாமம், ரூபம், இருப்பு, விளக்கம், ப்ரியம் என்ற ஐந்தும் ஸ்வபாவம். இதிலே நாமம், ரூபம் இரண்டும் ஜடப்ரபஞ்சத்துத்துக்கும் அஸ்தி, பாதி, ப்ரியம் மூன்றும், சேதன சைதன்யத்துக்கும் முறையே உரியன. ஒரு நிலையில் ஸம்ஸ்காரம் செய்யப்படாத ஸாதகனும் ஜடப்பரஞ்சமே. எனவே இவன் ஜடப்ரபஞ்சமாகிய நாமரூபத்திலே உள்ளவன். சிறிது சிறிதாக விலகி பரசைதன்யத்திலே நெருங்கிவிடவேணும். சமீபத்தில்

வசித்தல் என்பதுதானே உபசாரம் என்பதன் பொருள்.

உப = ஸமீபே சாரஃ = ஸஞ்சாரஃ இதி உபசாரஃ ஐ
பாவனாயாஃ க்ரியா உபசாரஃ ஐ(ஆத்மாவில் லலிதையை பாவித்தல்)

உபசாரங்களை சாஸ்த்திரங்கள் 5, 16, 64 என்று வகைப்படுத்துகின்றன. இந்த ஷோடசோபசாரம் என்ற 16 ன் வகையை ஞான காண்டம் வேதாந்த பரமாக கூறுகிறது. இதன் விதம் மண்டலப்ரஹ்மணோபநிஷத்தில் காணலாம்.

(இந்த ஷோடசோபசாரத்தை மானஸ பூஜையான பாவனாக்ரியையை வாகான கவிதை வடிவத்தில் ஸாதகன் அனுபவிக்க ஆசானருள் ஆக்கிக்கொடுத்ததை ஸ்ரீகுருப்ரகாசமலர் - கவிப்பணிப்பகுதியில் உரையுடன் காணலாம்)

கல்பத்தில் கண்ட 64 உபசாரங்களின் தமிழ் அர்த்தம் தெரிந்தால் - ஸாதகர்களின் அனுபவம் சிறப்பாக இருக்கும் என்பதால் அதனையும் தொடர்ந்து பார்க்கலாம். இவை அருட்சக்திக்கு ஸ்ரீஸத்குருநாதரவர்களால் கூறப்பட்டதாகும்.

64 உபசாரங்கள்

1.பாத்யம் - திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.
2.ஆவராணாவரோபணம் - நகைகளை கழற்றுதல்.

3.ஸுகந்திதைலாப்யங்கம் - வாஸனை எண்ணை தேய்த்தல்.
4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல்.
5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமய ஆஸனத்திலிருத்தல்
6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில்
தேய்த்தல்.
7. உஷ்ணோதகஸ்நானம் -வென்னீரில் குளித்தல்.
8. கனககலசச்யுத ஸகல தீர்த்தாபிஷேகம் - தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.
9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல்
10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல்.
11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.
12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல்.
13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல்.
14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல்.
15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல்
16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலாஃ -மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும் புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள்.
17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல்
18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல்.
19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல்.
20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை.
21.ஸீமந்தஸிந்தூரம்
-வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல்
22. திலகரத்னம்
- நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம்.
23. காலாஞ்ஜனம்
- கறுப்பு மை.
24. வாளீயுகளம்
- காதுகளில் அணியும் வாளி என்ற நகை(ஜிமிக்கி என்பர் இப்போது)
25. மணிகுண்டல யுகளம்
- ரத்ன குண்டலங்கள்.
26. நாஸாபரணம்
- மூக்குத்தி - புல்லாக்கு.
27. அதரயாவகம்
- உதட்டின் சிவப்புசாயம்
28. ப்ரதமபூஷணம்
- மாங்கல்யம்.
29. கனகசிந்தாகம்
- தங்கமயமான புளியிலை போன்ற நகை.
30. பதகம்
- பதக்கம்
31. மஹாபதகம்
- நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று)
32. முக்தாவலி
- முத்துமாலை.
33. ஏகாவளி
- ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை)
34. ச்சன்னவீரம்
- ஒரு ஆபரண விசேஷம்.
35. கேயூரயுகளசதுஷ்டயம்
- ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள்.
36. வலயாவளி
- வளைகள்.
37. ஊர்மிகாவளி
- மோதிரங்கள்.
38. காஞ்சீதாம
-ஒட்டியாணம்.
39. கடிஸூத்ரம்
- அரைஞாண்கயிறு.
40. ஸௌபாக்யாபரணம்
-அரை மூடி(அரசிலை).
41. பாதகடகம்
-கால்காப்பு.
42. ரத்னநூபுரம்
- ரத்னமயமான கொலுசு
43. பாதாங்குளீயகம்
- கால்மெட்டி.
44. ஏககரேபாசம்
- ஓர்கையில் பாசக்கயிறு.
45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி
46. இதரகரேபுண்ட்ரேக்ஷûசாபம்
- வேறொருகையில் நாமக்கரும்பு.
47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள்.
48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள்.
49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபிஃ ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல்.
50. காமேƒவராங்கபர்யங்கோபவே†னம்
- காமேƒவரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல்.

51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.
52. ஆசமனீயம்
- ஆசமனம்.
53. கற்பூர வீடிகா
-பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.)
54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம்
- ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு
55. மங்களாரார்த்திகம்
- தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம்.
56. சத்ரம் - குடை.
57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள்.
58. தர்பணம் - கண்ணாடி.
59. தாளவ்ருந்தம் -விசிறி.
60. கந்தம் - சந்தணம்.
61. புஷ்பம் - பூ
62. தூபம் -சாம்பிராணிதூபம்
63. தீபம் - நெய்தீபம்.
64. நைவேத்யம் - நிவேதனம்.
இவை மஹாஸாம்ராஜ்ய சக்ரவர்த்தினியான லலிதாம்பிகைக் கேற்பட்டதான உபசாரங்கள்.

கி







ஸ்ரீசதுராயதனார்ச்சாத்யைஃ பரிதுஷ்டாய நமோ நமஃ


கணபதி, ஸூர்யன், விஷ்ணு, சிவன் என்கிற நால்வரும் சுத்தஸத்வ ப்ரதானமான தேவர்களிலே ச்ரேஷ்டமானவர்களாக சாஸ்திரம் கருதுகிறது. இவர்கள் சித்சக்தியின் ரச்மிகளே. எனவே இவர்களை இங்கு பூஜிப்பதானது அவரவர்களின் நாம ரூபங்களைவிட்டு அதிலே ப்ரஹ்மாபின்ன ஆத்மஸ்வரூப சித்சக்தியை உணருவதுதான் ப்ரதானமாம். இத்தகைய பாவனை முமுக்ஷûவாகிய ஸாதகனுக்கு வரவேண்டிய அத்யாவசியத்தின் பொருட்டே சதுராயதனம் (தேவிபஞ்சாயதனம்) அத்வைதிகபரமாக ஏற்பட்டுள்ளது. இதுவே அபேததர்சன ஸாதனமாம்.

இந்த சதுராயதன தேவதைகளை தேவிக்கு அபேதமாகக்காணவேணும் என்ற பாவனைக்கு க ட ப யாதி ஸங்க்யா சாஸ்த்ரம் நமக்கு துணைசெய்கிறது. (இதற்கு அடியேன் குருநாதர் எழுதியுள்ள வியாஸம் ஆதாரம்).

1.மஹாகணபதி (5,8,3,5,1,6) 28
கணபதி (3,5,1,6) 15
பௌமஃ (4,5) 9
2. திவாகரஃ (8,4,1,2) 15
க்ருணிஃ (4,5) 9
3. விஷ்ணுஃ (4,5) 9
கோவிந்தஃ (3,4,Cool 15
4. சிவன் (5,4) 9
ம்ருத்திஞ்ஜயஃ (5,1,8,1) 15
5. சண்டி (6,3) 9
லலிதாம்பா (3,3,6,3) 15
லலிதாம்பிகா (3,3,6,3,1) 16 ராஜேச்வரி (2,8,4,2) 16
ஸ்ரீ ராஜராஜேச்வரி (2,2,8,2,8,4,2) 28

கணபதி, ஸூர்யன், விஷ்ணு, சிவன் ஆகியவர்களின் நாமங்களின் ஸங்க்யையானது தேவி மந்த்ராக்ஷர ஸங்க்யை

9,15,16,28, உடன் ஸாம்யப்படுவதால் இதுதேவி பஞ்சாயதனமே என ஸித்திக்கிறது.

கணபதியில் காணுவாய் கடவுளான சித்ததை
கண்டுவிடு சித்தினை ஒளிருகின்ற ஒளியினில்
அண்மையில் நிற்கின்ற நெடுமாலும் சித்துதான்
தண்மையான சிவன் சித்து -ஆயதனம் நான்கிதாம்

இந்த பஞ்சாதனதேவதைகள் பற்றி எனது குருநாதர் குமாரஸுப்ரபாதத்தில் எழுதியுள்ளதை இங்கு காணலாம்.
1. எல்லாமதங்களும் ஒன்று என்ற அத்வைத ஞானம் எற்படும் .
2. பஞ்சபூதங்கள் பரம்பொருளுக்கு நெருங்கியுள்ளன. அதில் இந்த பஞ்சபூத மயமான பஞ்சாயதன தேவதைகளை பூஜிப்பதால் மனதில் ஏற்படும் பேத புத்தி நீங்கி அத்வைத ஞானம் சீக்கிரம் த்ருடமாகும்.
3. மேலும் இதில் ஷடன்வய சாம்பவி பூஜை என்று உண்டு. அதில் இந்த பஞ்சபூதங்களையும் ஒன்றுபடுத்தி பூஜிப்பது வழக்கம் (மானஸம்- மனஸ், நாபஸம்- ஆகாசம், வாயவ்யம்- வாயு, தைஜஸம்- அக்னி, ஆப்யம்- ஜலம், பார்த்திவம்- பூமி,)
கி



வேதாந்தத்தில் அங்கம் அங்கி பாவனை என்பர். அங்கி என்பது மூலகாரண வடிவம். அதனின்று தோன்றியது அங்கங்கள். அதாவது சப்தம், அர்த்தம், காலம், தேசம் என்பன. இந்த அங்கங்களான வஸ்துக்கள் நாமரூபாத்மகமூர்த்தி வடிவிலே உள்ளன. எனவே அங்கங்களை அங்கியோடு அதாவது சப்தாதி வஸ்துக்களை மூலகாரணத்தோடு ஐக்யப்படுத்தும் பாவனையே லயாங்கபூஜையாம். (விரதாதி கல்ப பூஜைகளில் கூட அங்கபூஜை என்று உள்ளதை அறியலாம்).
கி




ஸகுண ஸாகார மூர்த்தியினுடைய சரீர அங்கங்களே ஷடங்கமாம். இந்த மூர்த்திகளுக்கு ப்ரபஞ்ச காரணத்துவத்தை கல்பித்து- பிரபஞ்சவஸ்துக்கள் அத்தனையும் மூர்த்திரூபத்திலே லயமாக்கிவிடும் தத்வத்தை நிருபணம் செய்வதே ஷடங்க பூஜை என அறியலாம்.(பஞ்சதசீ உபாஸகர்கள் - மூலவித்தையின் ஷடங்கத்தாலும், ஷோடசீ உபாஸகர்கள் -அவர்களின் மூல ஷடங்கத்தாலும் இங்கு பூஜை செய்வது ஸம்ப்ரதாயமாம்).

ஆறான அங்கங்கள் அறிவில் லயித்தால்
வேறான உலகபாவம் வேரின்றியகலும்
சாரான சத்தியத்தை சகத்தில் சேர்த்து
சேறான குணமகற்றி ஷடங்கம் பொருத்து.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:04 am

ஸ்ரீ ஷடங்ககாமா நித்யாதி ஸ்வரூபாய நமோநமஃ


(திதிமண்டல பூஜை)
(காலதேசங்களின் காரணத்துவத்தை கண்டறிதல்)

லயாங்க பூஜையிலே காலதேச வடிவங்கள் அங்கங்கள் என்று கண்டோமல்லவா. இங்கும் அதே காலரூபமான அங்கங்கள் மஹாநித்யை என்ற அங்கியிலே லயமாகிவிடுகின்றன என்கிற பாவனை திடப்படவே இந்த நித்யாயஜனம் செய்கிறோம்.

முதலில் மஹாநித்யை 3 முறையும், பிறகு அன்றய திதி நித்யை 3 முறையும், மறுபடி மஹா நித்யையை 3 முறையும் பூஜாதர்ப்பணம் செய்வதம், தொடர்ந்து சுக்லபக்ஷமானால் காமேச்வரிமுதல் அப்ரதக்ஷிணமாகவும், கிருஷ்ணபக்ஷமானால் சித்ரா


முதல் ப்ரதக்ஷணமாகவும் பூஜாதர்ப்பணம் செய்தலும் பத்ததி முறையாம்.

இந்த நித்யாயஜனம் ஸ்ரீ சக்ரத்தின் மத்திய த்ரி கோணத்தில் செய்ய வேண்டும். அவ்யக்தம், மஹத்தத்வம், அஹங்காரம் என்ற முவ்வடி வினதாகவும், பச்யந்தி, மத்யமை, வைகரீ முதலிய வடிவ சப்தாத்மகமானதுமான திரிகோணம் என்பது ப்ரபஞ்சத்தில் எவைஎவை மும்மூன்றாக காணப்படுகிறதோ அவை அனைத்துக்கும் காரணமாம். எனவே கால தேச வஸ்து என்ற பரிச்சேதத்தை மனோகற்பிதமென்று அறிந்து அபேத நாட்டம் அடையவே. பஞ்சதச திதி ரூபேண காலஸ்ய பரிணாமவலோகனம் என்று பாவனோபநிஷத் கூறுகிறது. காலதேசநாட்டம் ஸாதகனுக்கு அங்கியில் லயமாகவே இந்த யஜனமாம். மேலும் இவர்களே ப்ராணன் என்றபடியுள்ள காலரூபிகளாகவும் உள்ளனர். அத ஷோடசநித்யானாம் காலேன ப்ராணதோச்யதே ஐ (நித்யாதந்த்ரம்) என்றபடி சுவாசத்தின் காரணமான ப்ராணனாகவும் இருக்கின்றனர்.
குறிப்பு - இந்த 15 திதிநித்யா தேவிகளுக்கும் தனித்தனி சக்ரம் - வடிவம் ஆவரண தேவதைகள் என உண்டு. இதன்விவரம் தந்த்ரராஜம் கூறும். இந்த 15 தேவிகளின் சக்ரங்களையும் மத்தியில் தேவியையும் முக்கோண படமாக அமைத்து பூஜாகல்பத்துடன் ஒரு கலர்படம் எங்கள் குருஜியவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக எங்கள் ஸபா சென்ற ஜனவரி 2000 ல் வெளியிட்டுள்ளது.

பதினைந்தாய் காலத்தை பிரித்து வைத்தார்
அதிலேதான் அமைந்துவிட்ட தேசத் தோற்றம்
புதிதான பெரிதான நித்யா அங்கி
அதிலே தான் லயமாகும் ஆற்றல்வங்கி.

கி


ஸ்ரீப்ரபஞ்சஸாரபூத ஸ்ரீமஹாபாதுகாய நமோ நமஃ
ஸ்ரீதிவ்யஸித்த மானவௌகாக்ய குரவேதே நமோ நமஃ


சிருஷ்டியான சப்த ப்ரபஞ்சத்துக்குக் காரணம் குருமண்டலமே. ஏனெனில் - அது சப்தப்ரமாணத்தை விமர்சம் செய்யும் சக்தியாக உள்ளது. இந்த சப்த ப்ரமாணமும் மஹாவாக்ய வடிவமே தான். இவைகள் சதுர்வேதஸாரம் அல்லவா. சப்தத்திற்கு அபின்னமான குருமண்டலியினுடைய காரணத்துவம்தான் பரம்பொருளான தேவியின் ஜகத்காரணத்தன்மையின் காரணத்வம் என்னும் துணிவை இந்த குருமண்டலார்ச்சனம் கொடுக்கிறது.

பிரபஞ்சகாரணத்வம் ஷடங்கயஜனம்
காலதேசகாரணத்வம் நித்யாயஜனம்
சப்த ப்ரபஞ்ச காரணத்வம் குருமண்டலார்ச்சனம்

திவ்யௌகம் சிவதத்வம் பரமேஷ்டிகுரு
ஸித்தௌகம் வித்யாதத்வம் பரமகுரு
மானவௌகம் ஆத்மதத்வம் ஸ்வகுரு

இந்த மூன்றின் சமஷ்டிவடிவமே ஸாதகனுடைய குருத்ரயரூபமாக நின்று இவனுக்கு ஆத்மபோதத்தை உண்டுபண்ணுகிறது. மேலும் ப்ரஹ்மா பின்ன ஆத்ம வடிவபோதக மஹாவாக்ய வடிவ சப்தரூபமே ஸ்ரீ குருமூர்த்தியின் சிறந்த வடிவமாம் என்பதே தத்வார்த்தம். மேலும் இதனை ஸ்ரீ ஸத்குருமஹிமை என்ற அருட்சக்தியின் தனி வியாஸத்திலும் காணலாம்.

(இந்த ஸ்ரீவித்யா க்ரமத்தில் ஷடன்வயீ சாம்பவீ பூஜை என்னும் ஒரு க்ரமம் இருக்கின்றது என்று சதுராயதனத்தின் இறுதியில் கண்டோம். அது மானஸம், நாபஸம், வாயவ்யம், தைஜஸம், ஆப்யம், பார்த்திவம் என்னும் ஆறு பகுதிகள் உடையது. மனம்,ஆகாயம், வாயு, ஜலம், பூமி, தீ என்னும் ஆறையும் சித்சக்தியான சாம்பவியோடு ஐக்கிய பாவனை செய்தலாகிய அத்வைதானுஸந்தானமே இப்பூஜையால் பெறப்படும் பயனாகும். இந்த விஷயத்தையே ஸ்ரீபகவத்பாதாள்

ஸௌந்தர்யலஹரியில் மனஸ்த்வம் வ்யோமத்வம் மருதஸி மருத்ஸாரதிரஸி த்வமாபஃத்வம் பூமிஃ த்வயி பரிணதாயாம் நஹிபரம்... -என்று விஸ்தாரமாகக் கூறியிருக்கின்றார்கள். நீயேதான் மனம், நீயேதான்ஆகாயம், நீயேதான்வாயு, நீயேதான்அக்னி, நீயேதான் ஜலம்,நீயேதான் பூமி உன்னைத்தவிர வேறொன்றில்லை என்பதே அதன் பொருள்- பூஜ்யஸ்ரீஅனந்தாநந்தநாதர் அவர்களின் கையெழுத்துப்பிரதி வியாஸத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.)


சப்தந்தான் சத்தியத்தின் சிறந்த சான்று
குப்தமான முக்தியது குருவின் சார்பு
தப்பிதமாய் நடவாமல் தலையில் வைத்து
எப்போதும் நேர்வதுவே ஓகப் பூசை.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:05 am

ஸ்ரீத்ரைலோக்ய மோஹனாகார சக்ரகாய நமோநம”ஃ


1. முதலாவரணம் -
(நினைவு - மூவுலகத்தையும் வசமாக்கும் சக்ரம்)

ஸாதகன் பிர்ம்ம ஆரோபிதமான - ஒரு ஸ்தூல -தொட்டு உணரக்கூடிய ஸ்ரீ சக்ரம் என்ற ஒன்றினை தன் எதிரிலே கண்டு, அந்த ப்ரம்ம சைதன்யத்துடன் தன்னுடைய, தற்போதுள்ள கிஞ்சித் ஸ்வரூபமான ஆத்ம சைதன்யத்தை ஆவாஹித்துவைத்து இருக்கிறான். கிஞ்சித் ஆக தன்னை உணர்ந்து கொண்டிருக்கும் அவன் மஹத் ஆக தன்னை உணரவேண்டிய நிலைக்கு மத்தியில் அனேக இடர்ப்பாடுகளையும் மறைவுகளையும் நீக்கிக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறான்.

அந்த மறைப்புகள் என்கிற ஆவரண சக்திகள் ஒன்பதாக

வகுக்கப்பட்டு ஒவ்வொரு பூஜை செய்யும் நிலையிலும் ஒவ்வொரு மறைப்பை நீக்கிக்கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லும்படியாக அமைந்த இந்த ஆராதனத்திலே முதல் ஆவரணத்தை இந்த ஸாதகன் பூஜிக்கும் நிலையில் தோன்றும் விளக்கங்களை இங்கு உணருகிறான்.

லம் பீஜாத்மகமான இந்த பூமியிலே - ஆஸனத்திலே அமர்ந்திருக்கிறான். அருகிலே கண்ட, பூஜாத்ரவ்யங்கள்அத்தனையும் இவனால் தொட்டு உணர்ந்து காட்சிக்குட்படும் ப்ருத்வீ தத்வத்தோடு கூடிய பொருள். இதனைக்கொண்டு இவன் பூஜிக்கிறான் . ப்ரகடமாய், இருக்கக்கூடிய இந்த ப்ரபஞ்சத்திலே எல்லாவற்றையும் இவன் ப்ரகடனப்படுத்த வேண்டி சப்த ப்ரபஞ்சத்திலே ஆட்பட்டு பூஜிக்கிறான். இங்கு இவனுக்கு எல்லாவிதமான காமனைகளும் பூர்த்தியாகவேண்டிய நிலை உள்ளது. காலதேவதைக்கு இவன் ஆட்பட்டு நிற்கிறான். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஸ்தூலமாக தன் அவயவங்களினாலே பலபல செயல்களைச் செய்கிறான்.

ஆகவே காலத்துக்கும், இடத்திற்கும், பொருளுக்கும் இவன் வசப்பட்டு நிற்கும் இந்த ஆவரணநிலை ஒழியவேண்டும். அத்தனையும் அவனது நினைவு அதாவது ஜாக்ரத் நிலையில் ஆட்பட்ட அல்லல்கள். இந்த நிலைகளை அவன் மாற்றிக்கொள்ள த்ரிபுரா தேவியை வழிபடவேண்டும். ஏனென்றால் ச்ருங்கார ரஸ ப்ரதானமான காமனைகள் முப்புரத்திலே கொழுந்துவிட்டு எரிகிறது. அதனைச் சமனப்படுத்த இவன் அத்ருச்யமான சரீர ஸ்தானத்தை உணரவேண்டி இதனையெல்லாம் சரீர தத்வதோடு ஒப்பிட்டு பொருத்திப் பார்க்கிறான். குண்டலினிச் சக்தியை இவன் உணரவேண்டி முதல் ஆவரண தேவதைகளை அதஸ்ஸஹஸ்ராரம் என்ற சரீர ஸ்தானத்திலே அமைத்து ஆராதிக்கிறான். இவன் இந்த நிலையில் பூமியிலே நின்றிருப்பதினாலே ஸ்தூலமாக அங்கு தன் சரீரத்தைக்கொண்டு விழிப்பு நிலையில் ஆராதிப்பதினாலே இங்கு இவன் எந்த ஆத்மயோக வைபவத்தையும் தாரணாதார்ட்யத்திலே உணரமுடியாது.

சுத்தமனம் அசுத்தமனம் இரண்டின் வசப்பட்டவனாக இருக்கிறான். ஆகவே நினைவெல்லாம் அவளே ஆக

உறுதிகொண்டு விரும்பிய காமனைகள் அத்தனையையும் அணிமா, மஹிமா, லகிமா, ஈ‡த்வ, வ‡த்வ, ப்ராகாம்ய, புத்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாம ஸித்திகளாகவும் (அட்டமாசித்திகளும் அனைத்துள்ள பேறுகளும் கட்டமாங்கதிகள் தரும் பரகதிகாணக் கொடா .... தேவிகாலோத்தரம் -பரமசிவவாக்யம்) செய்த செயல்கள் அத்தனையும் ஸம்க்ஷோபிணி, வித்ராவிணி, ஆகர்ஷிணி, வ†ங்கரி, உன்மாதினி, மஹாங்குசா, கேசரி, பீஜம், யோனி, திரிகண்டா என்ற முத்ரா சக்திகளாவும் சென்றுவரும் இடங்கள் அத்தனையும் ப்ராஹ்மி, மாஹேƒவரி , கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாஹேந்திரி, சாமுண்டா, மஹாலக்ஷ்மி ஆகிய திக்கேவதைகளாகவும் நினைத்து பூஜித்துவிடுகிறான். இந்த நிலையில் அதாவது கண்ணால் ஸ்தூலமாக கண்ட அத்தனையும் அவளிடத்திலே ஐக்கியப்படுத்தியபின்பு ஸாதகனுக்கு ப்ரபஞ்சத்திலே ஒரு அயர்வு ஏற்பட்டு தூங்கிவிடுகிறான். தூங்கியபின் கனவு காணுகிறான். நினைவு நிலையில் தெரிந்த ஆவரணம் மறைக்கப்பட்டு இங்கு கனவு நிலையில் இரண்டாவது ஆவரணமாகப் பரிணமிக்கிறது.

ஸ்ரீஸர்வாசாபரிபூரகாபிக்ய சக்ரகாய நமோநமஃ
இரண்டாவது ஆவரணம் - கனவு
(மனதின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் சக்ரம்)

ஸாதகன் தன் ப்ரபஞ்ச வாழ்க்கையான நித்ய வாழ்க்கையிலே தான் அனுபவித்த அல்லது நினைத்த அத்தனை எண்ணங்களும் இங்கு பரிணமித்து உள்ளே தோன்றுகிறது. அதஃ ஸஹஸ்ராரத்தின்மேலுள்ள விஷûவம் என்ற ஷட்தள பத்மத்திலே ஆத்மனுடைய கனவு நினைவின் பரிபாகமே தவிர வேறில்லை. முதலிலே இவன் விருப்பிய காமனைகள், சென்ற இடங்கள் செய்த செயல்கள் அத்தனையும் நினைவுபோன்றே கனவிலும், மனம், பஞ்சப்ராணன்கள், ஞான, கர்ம உறுப்புகளினாலே ஆசாபாசங்கள் அத்தனையும் உண்மைப்போல உணருகிறான். இந்த உணர்வுகள் இவனுக்கு குப்தமாக இருப்பதினாலே உற்சாகத்தை ஆகர்ஷிக்கக்கூடிய இந்த காமம், புத்தி, அஹங்காரம், சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம், சித்தம், தைர்யம், ஸ்மிருத்தி, நாமம், பீஜம், ஆத்மா, அம்ருதம், சரீரம் ஆகிய நினைவுகளை ஸ காரப்பிருகிருதியாக உள்ள இரண்டாவது ஆவரணத்திலே

குப்தயோகினி யான பதினாறு நித்யாகலாதேவி களாக பூஜிக்கிறான். ஏனென்றால் இந்த நித்யாகலாதேவிகள் அம்பிகையின் லலிதாலயத்திலே ப்ராகார தேவதைகளாக இருப்பதினாலே காமனை வேண்டுதலுக்கு சடுதியிலே இவர்கள் அருளை நல்குகிறார்கள்.

ஷோடச கலையைக் கொண்ட சந்திரன் தன்னுடைய வெண்மை ப்ரகாசத்தினாலே இங்கு ப்ரகாசிக்கிறான். ஸர்வ ஆசாபாசங்களும் இவனுக்கு நீங்கும்வண்ணமாக ஸர்வாசா பரிபூரக சக்ரத்திலே பண்டாசுரனை வதம் செய்த த்ரிபுரேசி இவனை ஒருநிலைப்படுத்துகிறாள். கனவு நிலையில் லகுவாக்கப்பட்ட லகிமாஸித்தியின் வைபவத்தினாலே, உறுப்புக்கள் அத்தனையும் ஒடுங்கப்பட்டு ஸாதகன் ஆழ் உறக்கத்திலே ஆழ்த்தப்படுகிறான்.

ஸ்ரீஸர்வஸம்க்ஷோப ஜனக சக்ரகாய நமோ நமஃ
மூன்றாவது ஆவரணம் - ஆழ் உறக்கம்
(எல்லா சத்ருக்களையும் அழிக்கும் சக்ரம்)

சுஷûப்தி என்கிற ஆழ் உறக்க நிலையிலே நிலைபெற்றிருக்கிற ஸாதகன் சரீரத்தில் மூலாதாரம் எனப்பட்ட ஆதாரசக்தியின் வசப்பட்டவனாக அங்குள்ள தத்வங்களையும் அபூர்வ தத்வங்களையும், தாரணாதார்ட்யத்தினால் தானறியும் வண்ணம் அமைகிறான். இந்த நிலையில் மூலாதாரத்தில் சிவ தத்வமான ஐந்து முகமுடைய ஸாகினி சக்தி பராசக்தி விளங்குகிறாள். அவளை ஆத்மனின் அறிவுக்கு விஷயமாகாத புத்தி விருத்திக்கு விளங்காத ஜோதி ஸ்வரூபமான, அங்கங்கள் அற்ற குப்த தரமான யோகினிகளாக பூஜிக்கிறான். அளவிடப்படமுடியாத மஹிமைகளையும் பயங்கர ஸ்வரூபமுடைய அவர்கள் அஷ்ட சக்திகளாக அமைந்து ஸ்ரீசக்ரத்தில் ஹ கார ப்ருகிருதியாய் அஷ்டதளத்தில் ஆராதிக்கப்பட்டு ஆகர்ஷிக்க ப்படுகிறாள். இங்கு முப்புரங்களிலுள்ள மலங்கள் அழிய வேண்டி த்ரிபுரஸுந்தரி சக்ரேƒவரி அமைந்து அருள்பாலிக்கிறாள். இந்த தேவியினுடைய கருணையினாலேதான் ஆத்மனுடைய தினப்ரளயமான சுஷýப்தி அவஸ்தை ஒழிகிறது என்பது தான் இந்த மூன்றாவது ஆவரணத்தின் தத்வார்த்தமாக அமைகிறது என்பதை கண்டபின் துரியாவஸ்தையிலே நான்காவது ஆவரண சக்திகளைக் காணுகிறோம்.

ஸ்ரீஸர்வஸௌபாக்யதாபிக்ய சக்ரகாய நமோ நமஃ
நான்காவது ஆவரணம்- ஈƒவர விசாரம்
(ஸகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும் சக்ரம்)

ஸ்ரீ தேவியானவள் ஸாதகனுக்கு அருள்பாலிக்கவேண்டி ஈƒவரத்தன்மையிலிருந்த அவள் குரு ஸ்வரூபிணியாக ஆகி குருநாதர்கள் வடிவனளாக மாறி வணங்கப்படும் நிலையை 4-ஆவது ஆவரணமாக ஸ்ரீ சக்ரத்திலே பூஜிக்கிறான். அவன் தன்நினவிலே கொண்டுள்ள இந்தப்ரஞ்ச வாழ்விலே ஆட்பட்டு உழன்று அந்த நினைவின் உறுதிப்பாட்டினாலே கனவுலகிலேயும் அந்நினைவு தொடர்ந்து நின்று - பின்பு அந்த கனவும்மறந்து ஆழ் உறக்க நிலையில் - புத்தி விருத்தி விளங்காத நிலையில் - அங்கங்கள் -அதாவது ஸ்தூல ஸூக்ஷ்ம சரீரங்கள் இல்லாத நிலையில் தற்காலிகமான சுகம் கண்டதாக உணருகிறான். இந்த சுகம் அனுபவித்ததைக் கண்டு கூறியவன் யார்? இந்த ஞான அனுபவம் இவனுக்கு ஏற்படுவதற்கு ஒரு விருத்தி துணை செய்திருத்தல் வேண்டும் என்பது உறுதியாகிறது. இந்த விருத்தியிலே அமைந்துள்ள சித்சக்தியேதான் ஸாதகன் முன்பு கண்ட மூன்றாவது ஆவரண சக்திகளாகும். இந்த விருத்தியே பூரண ஞானமில்லாமையால் இவன் சித்சக்தியான ஈƒவர விசாரம் செய்யவேணும். இந்த அருட்பிரபாவம் குருவருட்தன்மையை உணருமாறு ஆட்படுத்திவைக்கிறது. இதனாலே இவன் சில சம்பிரதாயங்களை கைக்கொண்டு ஸம்பிரதாய யோகினி களை பூஜிக்கிறான். ஏனெனில் இவன் செய்யும் இந்த ஸ்ரீ வித்யா ஆராதனமும் குருநாதர்களுடைய ஸம்பிரதாயங்களை அனுசரித்து செய்வதாகும் என்பதை இவன் உணர்ந்தவன்தான். இவன் அறிந்த 14 புவனங்களையுமே பரமேƒவர ஸ்வரூபமாகக் காணவேணும் என்பதாலே இந்த ஆவரணசக்திகள் இவனுக்கு எல்லாம் வசமாகும்வண்ணமாகவும் ஸர்வஸௌபாக்யங்களையும் அருளுவதாகவும் ஸாதகனால் பூஜிக்கப்படுகிறது. இது துரீயாவரணமாக ஏன் அமைந்திருக்கிறது என்பதை ஆராயும் காலத்தில் ஸாதகனுடைய சரீரத்தில்- நான்காவது இடமான ஸ்வாதிஷ்டானத்தில் நிலைகொண்டிருப்பதாக பாவிப்பதாலும் - நினைவாயும் கனவாயும் குஹ்யமாயும் தோன்றி வந்த நிலைகளெல்லாம் இங்கு அவிழ்ந்து இவனுக்கு விமர்சமாய்

தோன்றுவதாலும் இதன் ப்ருகிருதி ஸ்வரூபம் ஓம் காரமாய் அமைந்துள்ளது என்பதை இவன் காண்கிறான்.

இத்தனையையும் உணரப்பண்ணிய குருவருட்சக்தி காம கலையையும் விளக்கி இங்கு இவனுக்கு திருவருளை நல்கவேணும் என்பதை ப்ரார்த்திக்கிறான். அண்ட சராசரம் அத்தனையும் கற்பனைதான் என்பதை புறத்தே நின்று கண்டஸாதகன் தன் நினைவிலே கண்ட அத்தனை ப்ரபாவங்களையும் அத்தனை செயல்களையும் இங்கு மகாமாயா சொரூபமான சக்தி சமூகங்களாக - அதாவது- ஸம்க்ஷோபிணி சக்தி சமூகங்களாக வழிபடுகிறான். இங்கு குணரூபங்கள் அத்தனையும் குருரூபமாக இருப்பதால் இந்தச் சக்கரம் பதினான்கும் புவன சக்திகளாகக் கண்டபின் ஸாதகன் ஈƒவர ஸ்வரூபத்தினை தன்னளவிலே உணர்ந்து நிற்கும் நிலையில் ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் மேலெழும் வைபவம் நிகழ்கிறது.

ஸ்ரீஸர்வார்த்த ஸாதகாகார சக்ரகாய நமோ நமஃ
5. ஐந்தாவது ஆவரணம் - குரூபஸதனம்
(ஸர்வ அபிஷ்டங்களையும் தரும் சக்ரம்)

ஸாதகன் தன் வாழ்விலே உண்டுவந்த ஆகாராதிகள் அத்தனையும் மணிபூரக சக்ரத்தில் நசிக்கப்பட்டு ஜீரணிக்கப்பட்டு அவனுடைய சர்வ அங்கங்களிலும் சௌபாக்கியங்கள் நிறைவிக்கப்படுகின்றன. உணவு ஜீரணித்தபின் அங்கு ஒரு ஸத்து என்ற அமிர்தம் பெருகி ஜீவனை வளரவைக்கிறது என்பது அறிவு தத்துவம். பொருள்களின் அழிவு ஜீவனுக்கு ஸாதகத்தை கொடுக்கிறது என்பது இங்கு தத்துவமாக நிற்பதினாலே மணிபூரக சக்கரம் ஐந்தாவது ஆவரணத்தின் அமைப்புருவமாக அமைகிறது. இந்த ஸர்வார்த்த ஸாதகம் என்ற சக்ரத்திலே விளங்கும் குலோத்தீர்ண யோகினி தேவிகள் ஸாதகனுக்கு ஸித்தி, ஸம்பத், ப்ரியம், மங்களம், காமம், துக்கம், ம்ருத்யூ, விக்னம் என்ற எண்குணங்களையும் ஜீரணிக்கச் செய்து ஸர்வ அங்கங்களிலும் ஸௌபாக்கியங்களை நிறையப் பண்ணுகிறார்கள் என்ற ஒரு நிலை ஏ கார ப்ருகிருதியான இந்த ஆவரணத்திலே அமைகிறது. நல்குலத்தையும் இங்கு உத்தீர்ணம் செய்கிறாள்.

எந்த பரதேவியினுடைய கர்ப்பத்திலே ப்ரும்மா, விஷ்ணு,ருத்ரர்கள் வசித்துவெளிக்கிளம்பி ப்ரபஞ்சயோக க்ஷேமத்தினை வகித்து வருகின்றார்களோ, அவர்கள் நாதமயஸூக்ஷ்ம ரூபமான இந்த ஸர்வஸித்தி ப்ரத தேவ்யாதி ஸமூகங்களாக ஸ்ரீ சக்ரத்திலே வெளிப்பத்து கோணத்திலே ஆராதிக்கப்படுகிறார்கள்.

ஞானபரிபாகம் சிஷ்யனுக்கு ஏற்படவேணும் என்ற காமனை குருவுக்கு இந்த நிலையிலே ஏற்பட்ட காரணத்தால்தான் உபதேசம் செய்யும் நிலையிலே குரு அமைகிறார். ஆகவே ஞான காமனைக்கு ஆஸ்பதமான உபதேசம் என்ற நிலையும் இங்கு தெளிவாக்கப்பட்டு அனாதி மாயையினாலே ஏற்பட்ட அவித்யா காரணங்கள் அத்தனையும் இங்கு நசிக்கப்பட்டு நின்றுவிடுகிறது. இந்த நிலையிலே ஸாதகனுக்கு தாரணாதார்ட்யம் ஏற்பட்டு தூரதேச தத்துவங்களையும் அறியும்படியான ஸித்தி ஏற்படுகிறது. ப்ரம்ம க்ரந்தியை இங்கு பேதித்த ஸாதகன் தன் யோகபலத்தினாலே ஸார்ஷிணி என்ற தேவியின் சக்திக்கு அருகில் ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்துக்கொண்டு அங்கு ஆனந்தமாக வசிக்கும் படியான வ‡த்வஸித்தி யின் அருள் ஏற்பட்டுவிடுகிறது. ஏனென்றால் அவதாரம் எடுக்கும் அமைப்பில் இருக்கும் திருமால் பத்தினி திருமகள் ஸ்வரூபமான லாகினி யோகினி இங்கு அதிஷ்டானம் உடையவள் ஆனதினாலே இந்நிலை ஸித்திக்கிறது.

ஸதாகால கன்னியாக வேதம் எவளைக் கூறுகிறதோ, நாதத்துக்கும், வேதத்துக்கும் மூலமான ஒலி உடையவள் எவளோ, சிரஸிலே தேஜஸினால் எவள் ப்ரகாசிக்கிறாளோ, சிதாகாசத்திலே சிவந்த தாமரையின் ரூபத்தில் பிரகாச ஜோதியை விமர்சமாய் எவள் காட்டுகிறாளோ அப்படிப்பட்டவளான பராசக்தி ஸாதகனுக்கு இந்த ஐந்தாவது ஆவரணம் பற்றிய விளக்கங்களை வேறொரு கோணத்தில் மேலும் அளிக்கிறாள்.

வெளி விஷய ஸுகங்களால் கவரப்பட்ட ஸாதகன் தன்னுடைய மனோவிருத்திகளைக் கட்டுப்படுத்த முடியாதவனாக இருக்கிறான். ஸத்குருவின் கிருபையாலே ஆத்மயோகப் பயிற்சியில் முற்றியவனாகி மனோவிருத்திகளை நிக்ரஹம் செய்து ஸத்வகுணத்திலே பழகவிட்டு தன்னுடைய வெளி விஷய

ஸுகங்களிலே ஈடுபடுகின்ற இந்திரியங்களை அதனதன் ஸ்பாவங்களைச் செய்யவிடாமல் தன் சொந்த ஆத்மா ஏவுதலுக்கு அடிபணிய வைத்துவிடுகிறான். இவனுடைய இந்திரியங்களே பஞ்சபூதமயமானவைதான். பிரபஞ்ச ஒலியினை கேட்கும் காதிலே ஆகாயபூதம் அதிஷ்டானமாயும், தொடு உணர்ச்சியினை அறியும் தோலில் வாயுபூதம் அதிஷ்டானமாயும், எவற்றையும் பார்க்கும் குணமுடைய கண்ணிலே அக்னிபூதம் அதிஷ்டானமாயும், ருசியறியும் நாக்கிலே ஜலபூதம் அதிஷ்டானமாயும், வாசனையறியும் மூக்கிலேமண்பூதம்அதிஷ்டானமாயும்இருப்பதாலேதான் இந்திரியங்களினுடைய ஸுபாவத்தன்மை பிரகாகிக்கிறது அல்லது பூர்த்தியடைகிறது. இந்த இந்திரியங்களின் பஹிர்ப்ரவிர்த்தி ஆந்த்ர ப்ரவிர்த்தியின் காரியங்களே பஞ்ச ப்ராணன்களாகும். ப்ராணன், ஸமானன், அபானன், உதானன், வியானன் என்கிற இந்தபஞ்ச ப்ராணன்களில் முதலாவது ப்ராணன் உச்வாஸ நிச்வாஸ ரூபமாக ஹ்ருதயாந்தம் சஞ்சரிக்கிறது. இரண்டாவது ஸமானன் ஆகாரங்களை சமப்படுத்தி ஹ்ருதயாதி நாபிவரை சஞ்சரிக்கிறது. மூன்றாவது அபானன் கழிவினை வெளியேற்ற உதவி நாபி முதல் பாதம்வரை சஞ்சரிக்கிறது. நான்காவது உதானன் மனாதி இந்த்ரியங்களை சரீரத்தின் இருப்பைவிட்டு வெளியேறக் காரணமாக இருந்து மூக்கு நுனியிலிருந்து சிரசுவரை சஞ்சரிக்கிறது. ஐந்தாவது வியானன் சரீரம் முழுவதும் சஞ்சரிக்கிறது.

இப்படி ப்ரதானமான பஞ்ச ப்ராணன்கள் தவிர உபப்ராணன்களாக ஐந்து உண்டு. அவை நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாகும். சரீரத்தை நீட்டவும், மடக்கவும்-ரோமம் சிலிர்க்கவும்- தும்மல்,இருமல் விளைவிக்கவும் - ஓட்டம் இளைப்பு, வியர்த்தல் இவைகளை செய்யவும்- உயிர்போன உடலைவீங்கச் செய்யவும்- இவர்களது வேலையாம். ஆகவே பஞ்சபூதம் சம்பந்தப்பட்ட ப்ராணன்கள் இந்த உடல் இயங்குவதற்கு காரணமாக, அனுகுணமாக இருக்கின்றது.

மனாதி இந்த்ரியங்களை இயக்குவது ப்ராணன்களானதினாலே அனாதிமயமான வாஸனை ஒழிய சிவாதி 36 தத்துவங்களாய் அமைந்திருக்கக்கூடிய ஆத்ம ஸ்வரூபத்தை இவன் அறியும் வண்ணம் ஸத்குருவானவர் எதிரிலே நிற்கிறார். அவருடைய

தரிசன பாக்யத்தினாலே ஸாதகன் சகல புருஷார்த்தங்களையும் இங்கு அடைத்துவிடுகிறான் (ஸர்வார்த்த ஸாதகன்) இப்படி இந்த வாயுக்களின்தத்துவ விமர்சத்தை ஸாதகன் கண்டு அதனை தன்னுடைய வித்யா ஸம்ப்ரதாயத்திலே ஸபர்யையை செய்துவரும்போது இங்கு ஐந்தாவது ஆவரண சக்திகளாக பூஜிக்கிறான். ஸர்வ ஸித்திப்ரதா,ஸர்வஸம்பத் ப்ரதா, ஸர்வ ப்ரியங்கரி, ஸர்வ மங்களகாரிணி, ஸர்வ காமப்ரதா, ஸர்வ துக்கவி மோசினி, ஸர்வ ம்ருத்யு ப்ர†மனி, ஸர்வ விக்ன நிவாரணி, ஸர்வாங்க ஸுந்தரீ, ஸர்வஸௌபாக்யதாயினி என்கிற இந்த பஹிர்தசார தேவதைகளை தன்னுடைய ஆந்த்ர ப்ரவிருத்தியான மானஸ பூஜையிலே அன்வயப்படுத்தி சிறக்கிறான்.

ப்ராணா பான வியானோதான ஸமான நாக கூர்ம க்ருகர தேவதத்த தனஞ்சயாதி தச வாயவஃ ஸர்வ ஸித்யாதி பஹிர்தசார தேவதாஃ ஐஐ -(பாவனோபநிஷத்)

இந்த தேவதைகள் ஸூக்ஷ்ம நாதமய ஸ்வரூபிணிகளாக இருப்பதினாலே ஆத்மயோகியான ஸாதகனுக்கு ஏகாக்ர சித்தமேற்பட்டு ஸுஷûம்னாநாடியிலே தசவிதயோக நாதத்தையும் கேட்கிறான். ஆகவே ஸத்குரு ஸன்னிதானத்திலேயல்லாது இந்த ஐந்தாவது ஆவரண நிலை ஒழியாது. வைராக்ய உணர்வை அளிக்கக்கூடிய ஸர்வோன்மாதினி என்கிற முத்ரா பாவனை இங்கு செய்வதினாலே அவருடைய சந்நிதானத்தில் ஸாதகனுடைய ஸாதகத்தின் தீவ்ரதரம் உறுதியாகிறது. மலையை புரட்டித் தள்ளக்கூடிய மஹிமையை இந்த ஸாதகன் அடைகிறான். ஏனென்றால் மலையை புரட்டி அதனை மங்களச் சிலையாக்கும் அற்புத உளி இவனுடைய சாதனையாக இருப்பதினாலே ஸத்குரு க்ருபையை வேண்டி இவன் வாஸனா ப்ரபஞ்சத்திலே காற்றாய் அலைகிறான். அடிக்கும் காற்று ஸுகந்தமாய் இருக்க ஸத்குருநாதன் இவனுக்கு நல்லுபதேசம் அளிக்க காத்துக்கொண்டிருக்கிறார். அதுவே6வதுஆவரணமாக பரிணமிக்கிறது.






ஸ்ரீஸர்வரக்ஷாகரா(அ)பிக்ய சக்ரகாய நமோ நமஃ
6. ஆறாவது ஆவரணம் - நல்லுபதேசம்
(ரக்ஷிக்கக்கூடிய சக்ரம்)

வினையினாலே பிறவி எடுத்த ஸாதகன் பிறவியை நிறுத்திக்கொண்டு அது ஏற்படக்காரணமான வினையையும் ஒழிக்கும் முகமாக குரு உபதேசம் அமைந்துவிடுவதனாலே காதால் கேட்டுக்கொண்டிருந்த உபதேசம் இங்கு ஸ்வரூப விளக்கமாக இவன் கண்டு கொள்ளுகிறான். இந்த விளக்கம் காணும் ஸாதகனை ரக்ஷிக்கவேண்டி ஸ்ரீசக்ரத்திலே உள்ள உள்பத்து கோண யோகினிகள் ஸர்வ ரக்ஷையை உண்டுபண்ணுகிறார்கள். ஆகவே இந்த ஸர்வ ரக்ஷாகர சக்ரத்திலே அமர்ந்துள்ள ஸர்வக்ஞம், சக்தி, ஐசுவரியம், ஞானம், வியாதி-வினாசம், ஆதாரஸ்வரூபம், பாபஹரம் ஆனந்தம், ரக்ஷை, ஈப்ஸிதபலப்ரதம் இத்தனையையும் ஆக்கிவைத்து இவனுக்கு ரக்ஷையைக் கொடுத்து யாசகமாக கோரிய உபதேச முகமாக இவனுக்குக் கிடைத்த பலப்பிரதங்கள் யாவும் இங்கு பூர்த்தி செய்விக்கப்படுகின்றன. குரு உபதேசம் என்பது ஞான உபதேசமே. அதாவது கர்ப்பவாஸம் செய்யா நிலையை இவனுக்கு அருளுவது. இப்படிப்பட்ட நன்னிலையை அருளக்கூடிய இந்த நிகர்ப்ப யோகினிகளின் ரூபமாயுள்ள தேவியானவள் உள்பத்துக் கோணத்திலே ரேப ப்ருகிருதியாக ஆராதிக்கப்படுகிறாள். தான் சுயம்பிரகாசமானவன் என்பதை ஸாதகன் கண்டிருந்தபோதிலும் தான் செய்யும் ஆராதனம்- க்ரியாரூபமாக தற்சமயம் ஆட்பட்டிருப்பதினாலே அபரா பூஜையாக ஆகிவிடாமல் த்வைதம் ஒழிந்து- ஜீவனுக்கு ஷட்குணாதீதமான அத்வைத நிலை ஸித்திக்கும்படியாக இந்த ரக்ஷாகரசக்ரம் அமைந்துள்ளது. இந்த நிகர்ப்ப யோகினிகள் அத்தனைபேரும் தசகரண விருத்திகளை ஒழித்து-ஒழிக்கும் நிலை என்ற அமைப்பில் வஹ்னி ஸ்வரூபமாக பிரகாசித்து ஒழித்து - ஜீவனுக்கு பயத்தை போக்குகிறார்கள். இந்த ஸத் தான உபதேசத்தினாலே தன்னை உணர்ந்துகொண்ட ஸாதகன் இந்த உணர்வு ஏற்பட்ட இடமானதும் ரக்ஷாகர சக்ரத்தின் ஸ்தான பூதமானதுமான அனாஹதம் என்ற ஹ்ருதய ஸ்தானத்தை கடக்கும் நிலையில் விஷ்ணு க்ரந்தி என்ற முடிச்சை அவிழ்த்துக்கொண்டு அந்த தாரணாதார்ட்யத்தினாலே புதிய புதிய சாஸ்திர ரஸனைகளை ஆராயும் மகிமை உடையவனாக ஆகிறான். இந்த ஆற்றல் - ஓங்கார

ஸ்வரூபிணியாயும் பிந்து ரூபமாயுமுள்ள பச்யந்திசக்தியாலே கிடைக்கிறது. இந்த ஒலி ஓங்காரமாய் நின்றுவிட்டால் மட்டும் போதாது. அதனுடைய முழு சொரூப விளக்கத்தினை உருவத்தோடு அமைத்துப் பார்க்கிறான்.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:06 am

ஸ்ரீஸர்வரோக ஹராகாரா சக்ரகாய நமோ நமஃ
7.ஏழாவது ஆவரணம் - மனன விருத்தி
(ரோக நிவ்ருத்தி சக்ரம்)

ஞான உபதேசம் பெற்ற இவன் மனன விருத்தியான சக்தி ஸமூகங்களை உபாஸிக்க வேண்டியவனாக இருக்கிறான். கர்ப்பமாக இருக்கும் உபதேச மொழிகள் இங்கு விசுத்தி என்ற ஆதார சக்ரத்தில் அ காரம் முதலான ஸ்வரங்களாகவும் க காரம் முதலான ஸ்பர்சங்களாகவும், சுத்தவர்ண ஸ்வரூபமாயும் உள்ள கலையான மத்யமா என்ற சக்தி வடிவத்திலே காட்சி அளிக்கிறது. அவைகளே இங்கு வசினி, காமேƒவரி, மோதினி, விமலா, அருணா,ஜயினி, ஸர்வேƒவரி, கௌளினி என்ற வாக்தேவதைகளாக பரிணமிக்கிறார்கள். இவன் இந்த தேவதைகளை பாவனையினாலே தன் சரீரத்தில் சீதம், உஷ்ணம், சுகம், துக்கம், இச்சை, ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணரூபமாக கண்டுள்ள நிலையில் இவைகள் அக்ஞான காரியங்களான அனர்த்தங்கள்- ரோகமாக நிற்பதை கண்ட விடத்து இவைகளை தள்ளிவைத்து ஸ்ரீ சக்ரத்தில் ஸர்வரோகஹர சக்ரத்தில் அமைத்து இந்த ஏழாவது ஆவரணத்தை பேதிக்க எண்ணுகிறான். ƒவாஸ ரூபமான ஹம் பீஜத்தின் தாரணாதார்ட்யத்தினாலே இவனுக்கு இங்கு எல்லா தத்வங்களும் எக்காலத்திலும் மறக்காமல் நினைவிலே நிற்கிறது. ஆகையினாலே ஸ்ரீசக்ரத்தில் அஷ்டாரத்தில் வசினீ முதலான அஷ்டவாக்தேவிகளை பூஜித்து தன்னுடைய மனன நிலை ஸித்திகளை பாகுபடுத்துகிறான். வர்ண வடிவம் அமைந்து சொல் எழும்பாதமுன்பு ஸத்குரு காரணமான உபதேச ரூபமான ரஹஸ்ய யோகினிகளின் கருணையினாலே க காரப் ப்ருக்ருதியாக உள்ள ஸ்பர்†ங்களை உணர்ந்து கொண்டுநிற்கிறான். ஆனாலும் இன்னும் அக்ஞானமாகிய கொடுமை இவனை வளைத்து கூனச் செய்து பின்னிப் பிணைத்து ஆட்படுத்திவைத்திருப்பதை நிவர்த்தித்துக்கொள்ள எண்ணி பாடுபடுகிறான். இதனைத்தான் கேசரீ முத்ரா ஸ்வரூபத்திலே கண்டு முடிச்சை அவிழ்க்க எண்ணி

அப்யாஸத்தை மேற்கொள்ளுகிறான். இனி வாக்தேவிகளின் பீஜமந்தர விளக்கங்களை வேறுகோணத்தில் காணுகிறோம்.
ஸ்ரீவ‡ன்யாதிக வாக்தேவி விக்ரஹாய நமோ நமஃ
வாக்கின் விளக்கம்

ஜீவன் பிறந்து, இறந்து, பிறக்கிறான். இதுதான் ரோகங்களுக்கெல்லாம் பெரிய ரோகமான மஹாரோகமான பவரோகம். இந்த பவரோகத்துக்கு மூல காரணங்கள் ஜீவனின் அக்ஞானமாகிற அனர்த்தங்கள். இந்த அக்ஞானமகன்றால்தான் குருவினால் உபதேசிக்கப்பட்டு, ச்ரவணம் செய்யப்பட்ட மஹாவாக்யம் - மனனம் என்கிற நிலையில் திடப்படும். இந்த அக்ஞானமகலவேண்டித்தான் ஸாதகன் நிவ்ருத்தி மார்க்கத்திலே ஈடுபட்டு ஸ்ரீதேவியை ஆராதிக்கிறான்.

ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமத்தை ஸ்ரீலலிதையின் ஆக்ஞைப்ரகாரம் அவள் முன்னிலையில் கானம் செய்தவர்கள் வசின்யாதி அஷ்டவாக்தேவிகளாவர். அவர்கள்தான் ஸகல சாஸ்த்ரவடிவினர். ஸ்வரங்களாகவும் வ்யஞ்சனங்களாகவும் உடைய அக்ஷரஸ்வரூபமுடையவர்கள். வ‡னி, காமேƒவரி, மோதினி, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேƒவரி, கௌலினி என இவர்களின் நாமங்கள். ஜபாபுஷ்பம் போல் சிவந்த காந்தியுடையவர்கள். இவர்கள் ஸ்ரீதேவியின் அருகிலிருந்து கொண்டு எப்போதும் கத்ய, பத்யங்களாலும், காவ்ய நாடகங்களாலும் வேதாந்தத்தை ப்ரதிபாதிக்கும் துதிகளாலும் அவளை மகிழச்செய்கின்றனர். ஸ்ரீதேவி நவாவரண பூஜையில் 7வது ஆவரண தேவதைகளாக அமைந்து பூஜிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய ஆராதனாவைபவத்தாலும், இவர்களுடைய ஸ்வரூப, மந்த்ர தத்வங்களினாலும் ஸாதகனுடைய மனனவ்ருத்தி தூண்டப்பட்டு அவன் ஸகலவேதஸார பாரங்கத்வமுடையவனாக ஆகிறான். இந்நிலையில் மேற்கண்ட வாக்தேவதைகளின் தனித்தனி பீஜாக்ஷரங்களோடு கூடிய ஸ்வரூப விமர்சனத்தை, அதிலுள்ள உட்கருத்துக்களை விரிவாக பார்க்கப்போகிறோம்.

மாத்ருகா அக்ஷரங்கள் 51. ஸகலசாஸ்த்ரங்களும், ஸகலஸ்ம்ருதிச்ருதிகளும், ஸகல மந்த்ரங்களும் இந்த 51

அக்ஷரங்களுக்குள் அடக்கமேயல்லவா. எனவே இந்த 51 அக்ஷரங்களும் எட்டு வாக்தேவதா ஸ்வரூபமாக அவரவர்களுக்கென்று அதனை பாகுபடுத்தி அதாவது வீதாசாரமாக ஆக்கி, சில அக்ஷரங்களுடன், அர்த்தாக்ஷரங்களை சேர்த்து பிரத்யேக பீஜம் என்றபடி பூஜிக்க பத்ததி கூறுகிறது. இப்போது தனித்தனியாக பீஜங்களையும், அந்த பீஜங்களால் தெரிவிக்கப்படுகிற அக்ஞான நிவர்த்திக்குரிய தத்வங்களையும் பார்ப்போம்.

1. வ‡னி - இவளுக்கு அ முதல் அஃ வரையிலான 16 ஸ்வரங்களும், ர் ப் ளூ ம் என்பதும் பீஜம்,
ர் - ப்ரவ்ருத்தி மார்க்கத்திலிருந்து ஜீவனை நீக்கி
ப்- ப்ரஹ்மஸ்ரூபத்தில்
ள்-ப்ரபஞ்சம்
ஊம்- நிவ்ருத்திமார்க்கம்
அதாவதுஜீவனை ப்ரபஞ்சவ்ருத்தியிலிருந்துவிடுவித்து தன்ஸ்வயமான ஆத்மாபின்ன ப்ரஹ்மத்தை அறியச்செய்பவள் வ‡னி வாக்தேவதை.

2.காமேƒவரி - இவளுக்கு க,க2,க3,க4,ங என்ற 5 வ்யஞ்சனங்களும், க் ல் ஹ் ரீ ம் என்பதும் பீஜம்
க் +ல் - கலா - ஆத்மாவின் லக்ஷ்ணமான கலைகள்
ஹ்ரீம் - ப்ரஹ்மம்
ஆத்மாபின்ன ப்ரஹ்மத்தை அறிந்துகொள்ள ஆத்மாவின் லக்ஷணமான கலைகளை விளங்கச்செய்பவள் காமேƒவரி வாக்தேவதை .

3.மோதினி - இவளுக்கு ச,ச2,ஜ,ஜ2,ஞ என்ற 5 வ்யஞ்சனங்களும் ன் வ் ல் ஈ ம் என்பதும் பீஜம்.
ன் - ப்ரஹ்மம்
வ் - பயன்
ல் - உணர்வு
ஈம்- ஆத்மஞானபோதமான ப்ரஹ்மசக்தி
ப்ரஹ்மத்தை உணரும் பயனை அளித்து ஆத்மஞான ப்ரஹ்மசக்திபோதத்தை அளிப்பவளான மோதினி வாக்தேவதை.
4.விமலா - இவளுக்கு ட,ட2,ட3,ட4,ண என்ற 5

வ்யஞ்சனங்களும், ய் ல் ஊ ம் என்பதும் பீஜம்.
ய் - அக்ஞானம்
ல் - ப்ரபஞ்சஞான உபாதி
ஊம்- சின்மாத்ரமானநிவ்ருத்தி ஞானம்.
ப்ரபஞ்சோபாதியான அக்ஞானங்களை நிவர்த்தி செய்து சின்மாத்ரமான ஞான உணர்வினை அளிப்பவள் விமலா வாக்தேவதை.

5.அருணா - இவளுக்கு த, த2,த3,த4,ந என்ற 5 வ்யஞ்சனங்களும் ஜ் ம் ரீ ம் என்பதும் பீஜம்.
ஜ் - ப்ரதிபாதகம்
ம் - ஜீவன்
ர் - நீக்குதல்
ஈம்- ப்ரஹ்மம்
ப்ரஹ்மாபின்னமான ஜீவன் தன் ஜீவத்வம் ஆகிற ப்ரதிபாதகம் நீங்கப்பெற்றதான நிலையை அருளும் அருணா வாத்தேவதை.

6. ஜயினி-இவளுக்கு ப, ப2,ப3,ப4,ம என்ற 5 வ்யஞ்சனங்களும் ஹ் ஸ் ல் வ் யூ ம் என்பதும் பீஜம்.
ஹ்+ஸ்+ல்=ப்ரஹ்மம்+ சக்தி+ப்ரபஞ்சம் = அகண்டஞானம்.
வ் - பயன் (அர்த்தம்)
ய் - அக்ஞானம்
ஊம் - தருதல் ( நிவ்ருத்தி ஞானம்)
அக்ஞானம் நீங்கியதன் பயனால் அகண்டாகாரஞானத்தை அடைவித்து நிவ்ருத்தி ஞானத்தால் சிறக்கச்செய்பவள் ஜயினி வாக்தேவதை.

7.ஸர்வேƒவரி - இவளுக்கு ய,ர,ல,வ என்ற 4 வ்யஞ்சனங்களும் ஜ் ம் ர் யூ ம் என்பதும் பீஜம்.
ஜ் -(கடபயாதி 9வது அக்ஷரம்) ஆவரண நிவ்ருத்தி - ஜீவன்முக்தநிலை.
ம் - ஜீவன்
ர் - நீங்குதல்
ய் - அக்ஞானம்
ஊம் - அடைதல்
ஜீவனை நிவ்ருத்தி மார்க்கத்திலே ஈடுபடுத்தி அக்ஞானத்தை
விலக்கிமுக்தநிலையை அடையச் செய்பவள் ஸர்வேƒவரி வாக்தேவதை.

8. கௌலினி - இவளுக்கு † ,ஷ,ஸ,ஹ,ள,க்ஷ என்ற 6 வ்யஞ்சனங்களும் க்ஷ் ம் ரீ ம் என்பதும் பீஜம்.
க்ஷ் - அவித்யா
ம் - ஜீவன்
ர் - நாசம்
ஈம் - விதேககைவல்யம்
ஜீவனுக்கு அவனுடைய அவித்யாநாசமடைவினால் விதேஹ கைவல்யமான மஹா மோக்ஷத்தை அனுக்ரஹிக்கும் கௌலினி வாக்தேவதை. இவ்வறு அஷ்டவாக்தேவிகளின் பீஜாக்ஷர விமர்சனத்தால் அவள் ஜீவனை மோக்ஷமடையச் செய்கிறாள் என்பது தெள்ளிதின் உணர்விக்கிறது. மேலும் வேதத்தின் தாத்பர்யமே மோக்ஷம் தானே. எனவே வேதரூபமாகத்தான் இந்த வாக்தேவதைகள் இருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை. மனனத்தைத்தொடர்ந்து அடுத்த ஆவரணமாக நிதித்யாஸனம் பரிணமிக்கிறது.


ஸ்ரீஸர்வஸித்திப்ரதாபிக்ய சக்ரகாய நமோ நமஃ
எட்டாவது ஆவரணம் - நிதித்யாஸனம்
(மனனத்தில் துணிந்த பிரம்மானுவத்தில் சித்தம் அசைவற நிலைத்து நிற்கச் செய்தல்)(அப்யாஸம்)(ஸகல ஸித்திகளையும் அருளும் சக்ரம்)

மனனத்தின் முதிர்விலே ரஹஸ்யத்தை உணர்ந்த ஸாதகன் பரமரஹஸ்யமாயும், அதிரஹஸ்யமாயும், உள்ள த்ரிகோணத்தை தரிசித்து நிற்கிறான். இதனுடைய ஸ்வரூபத்தை முதலிலே த்யானிக்கிறான்.

இது ஸ்ரீசக்ரத்திலே பிந்துவுக்கு மிகஅருகில் த்ரிரேகா ஸ்வரூபமாயும் குணத்ரயமான அவ்யக்தம், மஹத்தத்வம், அஹங்காரம் என்ற குணத்ரயங்களைப் ப்ரதானமாகக் கொண்டும் நாத ப்ரகிருதியாக அமைந்துள்ளது. ஸ்ருஷ்டி,ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற முத்தொழிலுக்கும் மூலகாரணமான த்ரிகோண தேவிகள் இங்கு உள்ளார்கள், இந்த முத்தேவிகளைப்பற்றி இவண் சற்று விரிவாக விளங்கிக்கொள்ளுகிறான்.

முதலில் மஹா காமேƒவரி என்பவள் ஸாதகனுடைய ஆத்ம தத்துவமான ப்ருகிருதி, அஹங்காரம், புத்தி, மனம், தோல், கண், காது, நாக்கு, மூக்கு, வாய், கைகள், பாதம், பாயு, உபஸ்தம், சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம், ஆகாசம், காற்று, அக்னி, நீர், மண் ஆகிய 24 தத்துவங்களை இவனுக்கு அபேதப்படுத்தி, இதிலே ஒவ்வொன்றிலும் இவன் காணும் ஜீவ பாவத்தையும் மஹத் ஸ்வரூபத்தையும் உணரவைக்கிறாள். ஆனாலும் இந்த பரஞானம் விகஸிக்கும் நிலையில் ஸாதகன் இன்னும் புருஷனாக இருப்பதினாலேயும், பூர்ண மாயை இன்னும் விலகாததினாலேயும் கலை, அவித்யை, ராகம், காலம், நியதி, இவைகளுக்கு கட்டுப்பட்டு நிற்கும் வித்தியா தத்துவ நிலையை விலக்கி அருள்பாலிக்கும்படியாக மஹாவஜ்ரேƒவரி அமைந்திருக்கிறாள். இவர்கள் இருவருடைய கருணையினாலே இவனுடைய ஆத்ம வித்யா தத்துவங்களான மேகமூட்டங்கள் கலைந்து சிவ ஜோதியில் இவன் கலக்க வேண்டும். ஆகவே சுத்தவித்யை ஸ்வரூபமானதும், சிவசக்தி ஸாமரஸ்யமானதும், ஈƒவர நிலையான ஸதாசிவ ப்ரம்மத்தை அபேதப்படுத்துவதுமான சிவதத்வ ஸ்வரூபிணியான மஹாபகமாலினி என்னும் தேவீ இங்கு காட்சி கொடுக்கிறாள். இந்த முத்தேவிகளையும் இவன் அதிரஹஸ்யமாக ஆராதிக்கும் காலத்தில் மஹாகாமேƒவரியை காமகிரிபீடவாஸினியாகவும் காதிவித்யையின் அதிதேவதையாகவும், ஸ்ருஷ்டி தொழில் செய்யும் இச்சா சக்தியாகவும், வாகீƒவரியினுடைய உருவிலே காணுகிறான். இதுபோல் மஹாவஜ்ரேƒவரியை ஜாலந்தரபீடவாஸினியாகவும் ஹாதிவித்யையின் அதிதேவதையாகவும் ஸ்திதி தொழில் செய்யும் ஞானசக்தியாகவும் காமகலா வடிவிலே காணுகிறான். மஹாபகமாலினியை ஸோமனுடைய சக்ரத்திலே அமைந்திருக்கக்கூடிய பூர்ணகிரி பீடவாஸினியாகவும் ஸம்ஹார தொழில் செய்யும் க்ரியாசக்தி ஸ்வரூபமான ஸாதிவித்யையின் அதிதேவதையாய்க் காணுகிறான்.

இந்த அக்னி, ஸூர்யன், ஸோமன் என்ற ஜோதி ஸ்வரூபமானதும் இவனுடைய மோஹத்தை நீக்குவதுமான மாளிகை வாசலானது இவனுடைய சரீரத்திலே இந்த்ரயோனி என்கின்ற உள்நாக்கு ஸ்தானம் என்பதை உணர்ந்து அங்கு தான்கண்ட முப்பத்தாறு தத்வங்களையும் அபேதப்படுத்தி பார்க்கிறான்.


த்வைதமாக தெரிந்த இந்த ப்ரபஞ்சம், த்வைதமாக தெரிந்த இந்த சரீரம், த்வைதமாக தெரிந்த ஸ்ரீசக்ரம் இந்த மூன்றும், மூன்று மூன்றாக தெரியும் த்ரிபுடி தத்வங்களும் இங்கு அபேதமாகி அத்வைதமாக நிற்கவேணும். ஆனால் அத்தனை ஸுலபத்தில் இக்காரியம் நடைபெறாத காரணத்தாலும் இந்த ஸகலஸித்திப்ரதமும் இந்த சரீரத்தில் ஸித்தித்துவிட வேணுமானதாலும், மறுபடிமறுபடி, இவன் அப்யஸிக்க வேண்டியவனாக இருக்கிறான். அப்யாஸத்தினாலே மனம் ஒரு நிலைப்படுகிறது. மனம் ஒரு நிலைப்படுவதினாலே நிர்க்குண உபாஸனை ஸித்திக்கிறது. ஆகவே சித்தசஞ்சலம் இல்லாத ஒரு நிலை நிர்க்குண உபாஸனையினாலே ஸித்திக்கதக்கது என்பதைக் கண்ட இவன் ஆக்ஞாரூபமாக இருக்கும் அம்பிகையை த்யானிக்கிறான். இங்கு மேலும் சில தத்வங்களை ஆராய்கிறான்.

பரமாத்ம ப்ரகாசமான ப்ரம்ம ப்ரகாசம் எதிலும் ப்ரகாசிக்கவில்லையானால் . . . . . . என்று ச்ருதி சொல்லியபடி எதற்கும் ஒளி கிடையாது. ஆகவே எது ப்ரகாசிக்காவிட்டால் வேறு எதொன்றும் ப்ராகாசிக்காதோ அந்தப் பிரகாசத்தை சுய ஆத்மாவிலே கண்டு அதிலேயே கலக்கவேணும் என்கிறது வேதாந்தம். இந்த ஸ்வ ஆனந்தம் கோசங்களையெல்லாம் சோதனம் செய்து ஆனந்தமய கோசத்திலே அன்வயப்பட்டு அமைவதாகும். உபநிஷத் வாக்கியங்களெல்லாம் ப்ரம்மானந்தமான ஆத்மானந்தம் அடையவே அருளப்பட்டிருக்கின்றன, இதனை ஆச்ரயிக்கும் இவன் தன்னுடைய தாபத்ரயங்களை சமனம் செய்து கொள்ளுகிறான். அதற்கு அனுகூலமாக இவனுக்கு தேவியினுடைய ஸ்வரூப அவஸரங்கள் அனுக்ரஹத்தை நல்குகின்றன.

ப்ரபஞ்ச வாழ்விலே ஸம்ஸாரம் லக்ஷணம். இதற்கு லக்ஷணமாக ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதெய்வீகம் என்கிற தாபத்ரயங்கள் அமைந்திருக்கின்றன அல்லது இவனால் உணரப்படுகின்றன.

பாஞ்ச பௌதிக சரீரத்திற்கு கர்மேந்திரியங்கள் ஐந்தும்,ஞானேந்திரியங்கள் ஐந்தும், வாழ்க்கை நடத்த துணை செய்கின்றன. இந்த இந்திரியங்கள் செயலாற்றுவதற்கு மனம், புத்தி,

சித்தம், அஹங்காரம் என்ற அந்தக்கரண சதுஷ்டயம் துணை செய்கிறது. இப்படியாக 14 தத்துவ அமைப்போடு கூடிய சரீரத்துக்கு அமைந்து வரும் தாபங்கள் ஆதி ஆத்மிகம் என்று கூறப்படுகின்றன.

இந்த இந்திரியங்கள் செயல்படுவது இதனுடைய விஷயங்களாகிற பஞ்ச பூதங்களினாலும் என்றிருப்பதனாலே பஞ்ச பூதங்களினாலே அதாவது காற்று, அக்னி, ஜலம் என்றதனாலே ஏற்படக்கூடிய தாபங்கள் ஆதிபௌதிகம் என்று கூறப்படுகிறது இந்த பாஞ்சபௌதிகமான ப்ரபஞ்சம் இவற்றின் நடைமுறைக்கு அதிகாரிகளாக விளங்கும் தேவதைகள் அல்லது தெய்வங்களால் சில சமயம் ஏற்படும் தாபங்கள் ஆதிதெய்வீகமாக உருப்பெறுகிறது. திரிபுர தகனம் செய்த சிவன் தன் சிரிப்பினாலே திரிபுரங்களையும் எரித்தாலும் கூட தன் கரத்திலே திரிசூலத்தை ஏந்தியிருக்கிறானல்லவா? அதன் தத்துவமே புறத்திலே உள்ள தாபங்களை ஒழிக்கவேதான். முன்பு ஸாதகன் கண்ட தாபங்கள் அத்தனையும் புறத்திலே அதாவது வெளியிலே தான் அமைந்திருக்கின்றன. ஆகவே திரிபுரத்திலே அமைந்திருக்கின்ற இத்தகைய தாபங்களை தேவி தன் சூலத்தால் சூலினி துர்காஸ்வரூபத்திலே அழித்து விடுகிறாள் என்கிற தத்துவமே இங்கு தெளிகிறது.

திரிபுடிநிலை ஒழியவேணும். மூன்று மூன்றாக அமைந்திருக்கின்ற இந்தப்ரபஞ்சவாஸனைகள் அத்தனையும் மறைந்து மூன்றாக தெரிந்து - பின்பு ஒன்றாக ஆனது என்ற நிலையிலே மறைந்து ஒன்றாகிவிட்டது. இதுவே ஆனந்தம் என்பது. இதுவே வேதாந்தத்தின் முடிந்த முடிவாக இருக்கிறது. நமக்குத் தெரிகின்ற தத்துவங்கள் அறிவுபூர்வமான விளக்கங்கள் யாவும் ஆத்மபிரகாசத்தின் ஒளிக்கதிர்களேயாம். தாபத்திரயங்களையுடைய சரீரத்திற்கு இவைகள் சம்பந்தமில்லை. இந்த சரீர வியாபாரங்கள் யாவும் கருவிநிலையிலே நின்று விடுகிறது. ஓட்டைகள் உடைய குடத்தில் உள்ளே வைக்கப்பட்டிருக்கிற தீபத்திலிருந்து வரும் ஒளி, ஓட்டைவழியே வெளியே வந்தாலும் ஒளிக்கதிர்கள் ஓட்டைகளின் சொந்தமல்ல என்பது எவ்வளவு ஸத்தியமோ அதுபோலதான் ஆத்மப்ரகாச விவகாரமுமாம். இந்த ஆத்ம ஒளிக்கதிர்களால் தாபத்ரயங்களைப் போக்கிக்கொள்வது என்றில்லாவிட்டாலும் கூட

உணர்வு இல்லாத நிலை அமைந்து பிரம்மானந்தம் பெற ஸத்குரு நல்லுபதேசம் ஆக்கிக் கொடுக்கிறது. இந்த திரிபுடிதத்வங்கள் அத்தனையும் ஸாதகனுக்கு ஆத்மயோக பயிற்சியிலே பழகுவதினாலே நிதித்யாஸனம் செய்வதினாலே நிதித்யாஸன வடிவிலே அதன் தத்துவத்திலே அமைந்திருக்கிற எட்டாவது ஆவரண சக்திகள் பூஜையினாலே ஒழிந்து ஒன்றான ப்ரம்மத்துடன் ஒன்றி சமாதி நிலை பெற வாய்ப்பு ஏற்படுகிறது. மஹாவஜ்ரேƒவரீயினுடைய கருனையினாலே இந்த தாபத்ரயங்கள் ஸாதகனுக்கு தெரியாவண்ணம் அமைந்து தாபங்கள் இல்லாததினாலே கர்மம் செய்வதிலோ கர்மம் செய்யாதிருப்பதிலோ பற்றுவிட்டு காமேƒவரியின் அருளை அடைந்து தாபங்கள் கர்மங்கள் இல்லாததினாலே காமமும் இல்லையாகிபகமாலினியினுடைய அருளையும் பெற்று இந்த முத்தேவிகளுடைய அருளினால் இவன் முழுமைபெற்று விடுகிறான்.

சூரிய ஒளியினாலே ப்ரபஞ்சத்தில் உள்ள துர்வாஸனைகளும் துன்பங்களும் நீங்குகின்றன. அக்னியினுடைய உஷ்ணத்தினாலே ஒன்றை மற்றொன்றாக்கும் கர்மங்கள் அதாவது செயல்கள் பிறக்கின்றன. சந்திரனுடைய சீதள கிரணங்களினாலே பாஞ்சபௌதிகமான சரீரத்துக்கு காமம் பிறக்கிறது. இப்படிமூன்று ஒளியினாலே மூன்று வித செயல்கள் விரிகிறது. அக்னியால் ஏற்படும் கர்மாவுக்கு காமேƒவரி தலைவியாகவும், சூரிய ஒளியால் ஒழிபடும் துராசாரங்களுக்கு காரணபூதமாய் வஜ்ரேƒவரியும் சந்திரகிரணத்தால் அமையும் காமங்களுக்கு பகமாலினீ தலைவியாகவும் இருந்து செயலாற்றுகிறார்கள். இந்நிலையை இந்த எட்டாவது ஆவரண ஒளிவிக்கம் ஸாதகனுக்கு காட்டிக்கொடுக்கிறது. குணத்ரயத்தை ப்ரதானமாக உடைய இந்த த்ரிகோண தேவிகள் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்கிற முத்தொழிலையும் கவனித்து, ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷûப்தி, என்கிற மூன்றிலும் அதிஷ்டானமாக இருந்து, வாக்பவகூடம், காமராஜகூடம், சக்திகூடம் என்றபடி மந்திர கூடேசுவரியாக அமைந்து, வாகீƒவரியாகவும், காமகலாவாகவும், பராசக்தியாகவும் நிலைபெற்று விளங்கும் இந்த நிதித்யாஸன யோகவைபவமானது - எட்டாவது ஆவரணத்தில் இவனுக்கு நல்லருள் பாலிக்கும்படிஅமைந்துள்ளது.


இத்தனை தத்துவங்களும் தோன்றி இந்த தத்துவ தரிசனத்தினாலே மோக்ஷானந்தவாசல் என்கிற உள்நாக்கு ஸ்தானம் ஆத்மனுக்கு உணரப்பட்டு அந்த ஸ்தானபூதமான இந்த எட்டாவது ஆவரண நிலை ஒழிந்து, ஸவிகல்ப ஸமாதி அடையவேணும் என்பதே ஸத்குரு ஸாதகனுக்கு உபதேசித்த மஹாவாக்யமாகும்.

இந்த எட்டாவது ஆவரணத்திலே காணும் இன்னும் சில தத்துவங்களை இவன் மேலும் இங்கு கண்டு சிறக்கிறான். ஸச்சிதானந்த ஸ்வரூபமாய் ப்ரகாசிக்கும் ஆத்மா பாஞ்ச பௌதிகமான நல்லுடலிலே பரவி நிற்கிறது. இதனாலே நல்லாத்மா ப்ரகாசிக்கும் இந்த உடலை அதன் பொருட்டாகவே சிலர் போஷிக்கின்றனர். (உடலைஇருந்து ஓம்புகிறேனே - திருமூலர்) ஸ்வயம் ப்ரகாச ஆத்மா பரமாத்ம ப்ரகாசத்துடன் கடாகாசம் மஹா காசத்தில் கலப்பது போல் சரீரம் இற்றுவிட்ட பின்பு இரண்டறக் கலக்க வேணும், அதுவே தான் அதன் ஸ்வபாவம் எனக் கண்ட பெரியோர் இந்த உடலுக்கு என்று தேவதா பாவத்தை பஹிர் முகமாகவும் அந்தர் முகமாயும் ஏற்படுத்த வழி செய்தனர், இந்நிலையில் உடல் தேவதா பாவமாக ஆகியதுடன் மனதும் ஒரு நிலைப்பட்டு அதுவும் தேவதா நினைவோடு நிற்கிறது.

மனதின் விகாரங்களினால் தான் மனிதனுடைய வாழ்வு அமைகிறது. மனதில் ஏற்படும் இத்தகைய தாபங்கள் உடலையும் சில சமயம் பாதிக்கிறதே, ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதெய்வீகம் என்கிற தாபத்ரயங்களை முன்பே அறிவான். இவைகளை போக்கும் தாபாபஹாரிணியாய் பராசக்தி விளங்குகின்ற தன்மையால் அவளை வாழ்த்தி வணங்குகிறான்.

ஸாதகன் செய்யும் ஸ்ரீவித்யா ஆராதனத்திலே பல க்ரமங்களுக்கு மத்தியிலே இவன் தனக்கும் ப்ரம்மத்துக்கும் இடையீடான திரையாக உள்ள ஆவரண சக்திகளை பூஜித்து வரும்போது எட்டாவது நிலையிலே அங்கு உள்ள திரையினை நீக்கிப் பார்த்தால் அங்கு தெரிவது என்ன?

அங்கே ரஹஸ்யங்களுக்கெல்லாம் ரஹஸ்யமாயும், எந்த ரஹஸ்யத்தினுடைய உண்மையை இவன் தெரிந்துகொண்டபோது பிறவி நோய் தீர்ந்துவிடுகிறதோ அந்த அதிரஹஸ்ய யோகினி யான

திரிகோணதேவிகளை தரிசிக்கிறான். அவர்களுடைய ஸ்வரூபங்களை முன்பே விளங்கிக் கொண்டிருந்தாலும் மேலும் புதிய விளக்கங்களைக் காண்கிறான். காமேƒவரி என்பவள் ச்யாமள வர்ணத்திலே அமைந்து இவனுடைய அந்தக்கரணத்தை சோதனை செய்கிறாள். இவனுடைய மனமென்கிற அந்தக்கரணத்தினாலான வில்லில் சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ கந்தம் என்கிற தன் மாத்ரா ஸ்வரூபமான அம்பை வைத்து எய்கிறாள். அவளுடைய குறி இவனுடைய தாபத்ரயங்கள் ஒழிபட வேணுமென்கிறதுதான், இந்த இரண்டுடன் இவனுடைய பேராசையைப் பிடுங்கி பாசமாக ஒரு கையிலும் த்வேஷத்தைப் பிடுங்கி அங்குசமாக மறுகையிலும் வைத்துக் கொண்டு விட்டாள். இவளைக் கண்டு வணங்கியபின் அடுத்தவளான மஹாவஜ்ரேƒவரி யை வணங்குகிறான். அவள் ரத்த நிறத்தோடு †üலினீ துர்க்கா ஸ்வரூபத்தோடு கையிலே †üலம் கபாலத்தை ஏந்தி காட்சி கொடுக்கிறாள்.

ஆண், பெண், அறிவுள்ளவன், அறிவில்லாதவன், நெட்டை,குட்டை, லக்ஷணம், அவலக்ஷணம் என்று கூறுவது இந்த தோல் மூடிய நிலை உள்ள வரைதான். தோல் நீங்கி எலும்பாக வெறும் கபாலமாக நின்றபோது குணபேதங்களும் குணத்ரயங்களும் அங்கு கிடையாதே, இந்த தத்துவம் இவனுக்கு உணர வேணும் என்பதினாலே கபாலத்தைக் காட்டுகிறாள். ஒழிப்படவேண்டிய குணங்கள் ஒழியவேண்டிய தாபங்கள் இவைகள் முப்புறத்திலே கொழுந்து விட்டு எரிகின்றன. அவைகளை ஒரே சமயத்தில் சிரித்துக் கொண்டே அழிந்து விடவேணும். புறத்தே விளையாடும் காமனை த்ரிநேத்ரா ஸ்வரூபமான †üலத்தால் குத்தி விடவேணும். இதற்கு த்ரிபுர தகனம் செய்த த்ரிபுராந்தகன் வரத் தேவையில்லை. த்ரிகோணத்திலே அமைந்திருக்கிற தானே தன் †üலத்தால் ஸாதகனது ஒழிபடவேண்டிய தன்மையெல்லாம் ஒழித்து விடுவேன் என்று தன்கையிலே †üலத்தை தாங்கியிருக்கிறாள். இங்கே தன்மாத்ரையான விஷயங்கள் அந்தக் கரணத்திலிருந்து புறப்பட்டு த்ரிபுவனத்திலும் வியாபித்து விடுகிறது. இதற்குக் காரணம் இவன் இவனுடைய விஷயானுபவ இச்சா ஸ்பூர்த்தியினாலே உண்டாக்கப்பட்ட சரீரத்தை உடையதனால். மேலும் இதற்கு காரணமாய் த்ரிகோணமான பகம் அமைந்திருக்கிறது. ஸாதகன் பகமாலினியை கோண தேவிகளில் ஒருவளாய் வணங்குகின்ற

தன்மையால் பகங்களின் மூலமான பிறப்பு நின்று விடுகிறது. ஸாதகனுடைய பிறப்புக்குக் காலதேச நிமித்தம் காரணமாய் இருப்பதால் இங்கு கால நித்யா ஸ்வரூபிணியான பகமாலினி இரு தத்துவங்களை போதிக்கிறாள். காமத்துக்கு அருகில் பகம் அமைந்திருப்பதினாலே காமத்துக்கு மூலமே பகமாக இருப்பதினாலே இரண்டாவது கால நித்யையாகவும், இவளுடைய ஸ்வரூப வியாபகம் 14 புவனங்களிலும் வியாபித்து இருப்பதினாலே 14 வது கால நித்யையாகவும் அமைந்திருக்கிறாள் என்கிற தத்துவம் புரிகின்றது.
ஆகவே எட்டாத தத்வங்கள் எல்லாம் இந்த எட்டாவது ஆவரண சக்தி பூஜையினாலே இவனுக்கு எட்டிவிடுகிறது. இதனாலே இவன் அடைந்திருக்கிற வாஸனைகளும் க்ஷயமடைந்து விடுகிறது. மனதும் செத்து நாசமாகிறது. இந்நிலையில் இங்கு தத்துவஞானம் ஏற்படுவதல்லாது வேறு என்ன பூஜிக்கப்போகிறான். பூஜையும் ஸகஸ்காரங்களும் புரியாத தத்துவங்களை புரிவிக்கவந்தவைதானே.

அது அஹந்தை என்பதும் இது இதந்தை என்பதும் நீங்கி அவித்யை இல்லாத சுத்தவித்யை ஸ்வரூபமாக இவன் ஆக வேணுமானால் இந்த த்ரிகோண தேவிகளான இவர்களை ஆராதித்து நிதித்யாஸனவிருத்தியோடு ஸகுண ஸாகார ஆராதனத்தின் முடிவிலே நிர்குணமாக குணாதீதமாக கண்டானந்திக்கவேணும். ஆகவே இந்நிலையில் இவன் கண்டுவந்த விருத்திகள் அத்தனையும் இவன் அனுபவித்த அவஸ்தைகள் அத்தனையும், படிப்படியாக விலகி இப்போது நிர்க்குணாகாரமான பிந்துபீடத்தை தரிசிக்கப்போகிறான்.

ஸ்ரீஸர்வானந்தமயாகார சக்ரகாய நமோ நமஃ
ஒன்பதாவது ஆவரணம் - ஸவிகல்ப ஸமாதி
(ஸகல ஆனந்தமயமான சக்ரம்)
இவன் தன்னுடைய அக்ஞானத்தை ஒழித்துக்கொண்டு தத்துவங்களையும் ஒழித்துக்கொண்டுள்ள நிலையில் முக்த நிலையான துரியாதீத அவஸ்தையிலே சகஜ ஸமாதி என்னும் - ஸதா ஆனந்தகனமாயுள்ள ஆத்ம ஸ்வரூப தரிசனானந்தம் காணும் ஒரு மஹத்தான ஞான நிலை இந்த 36 படிகளை கடந்த ஸாதகனுக்கு மட்டுமே அமைவதாகும். 8 ஆவரண சக்திகளையும் இவன் பூஜித்து அதனாலே அவைகளை தள்ளிவைத்து அதன்முடிவிலே

ஸர்வானந்தமயமான சக்கரத்திலேநின்று பரப்ரும்மாத்மகமான மஹாத்ரிபுரஸுந்தரியை மஹாபீடம், வித்யா பீடம் என்று சொல்லக்கூடிய பெரிய இடத்தில் தரிசிக்கிறான். தனக்கன்றி வேறு இல்லாத பராபூஜையிலே அதாவது ப்ரம்மோபாஸனையிலே சென்றடையவேண்டிய கடைசியிலே பராபராதிரஹஸ்யயோகினி யான அந்த ஸுந்தரியை ஸவிகல்ப ஸமாதிஸ்வரூபமான யோனிமுத்ரையாலே வணங்கி - சக்தி கூடத்தினுடைய கடைசியிலே நிற்கிறான். இப்போது மேலும் இவன் அங்கு தரிசிக்க வேண்டிய தரிசனம், செய்யவேண்டிய பூஜை எதுவென த்யானிக்கிறான்.

ஒரு சுத்தவித்யா ஸ்வரூபமான கண்ணாடி. அதிலே சித்சக்தி ரஸமாக பூசப்பட்டுள்ளது. அதன் எதிரே நிற்கும் இவன் எந்த பாவத்திலே நிற்கிறானோ, அமைகிறானோ அதுவே அவனாகும், இங்கு சுத்தவித்யா ஸ்வரூபமாகவேயுள்ள இவன் இந்நிலையில் இங்கு வேறுஎதைக்காணப்போகிறான். நிருபாதிகஞானமான காமகலையைத் தவிர இந்த ஆனந்தநிலையில் வேறுஎதை இவன் உணரமுடியும். ஆகவே இதுவே இவனது ப்ராப்திஸித்தியாக முடிந்து- ஸவிகல்பம்மாறி நிர்விகல்பமான ஜீவன்முக்தி நிலையில் அமைய வேண்டியதனால் அதன் ஸ்வரூபமான த்ரிகண்டாமுத்ரையை காட்டி ஆத்மானந்தம் கொள்ளுகிறான்.

சரீரத்தைக்கொண்டு இவன் ஆனந்தமனுபவித்துக்கொண்டு இருப்பதினாலே அதன் ஸ்தானத்தை இவன்காணவேண்டியும், ஸாரூப்யமுக்தி ஏற்படும் ஸ்தானத்தை உணரவேண்டியும் ஆராய்கிறான். அதுவே த்ரிகோணவிகஸிதமான இருதளமத்தியிலேயுள்ள ஆக்ஞை என்றும் உணருகிறான். ஏனென்றால் இந்தஇடம்தாம் ஸதாசிவதத்வஸாக்ஷாத்காரம் ஏற்படும் இடமானதினாலே இந்த புருவமத்தி ஸ்தானம் மஹத்தான வைபவமுடையது. இங்கு அமைந்திருப்பதான ருத்ரகிரந்தியை பேதனம் செய்வதாலே க்ஷ என்ற ஸாதகனது அவித்யாநாசத்திலே ஹ என்ற ஈƒவரஸாம்யம் ஏற்படுகிறது. இவ்வாறு நினைவுலகின் ஆரம்பத்தில் நின்றிருந்தவன் ஒன்பது ஆவரண சக்திகளையும் ஸ்ரீசக்ரத்திலே பூஜித்துவந்தபின்பு ஆனந்தபரிதனாக ஆகிறான். பாஹ்யமாக செய்த இந்த பூஜையை சரீர ஸ்தானங்களோடு ஒப்பிட்டு நோக்குமிடத்து இவன் ப்ரபஞ்சத்திலே செய்துவரும் செயல்களும்

அதற்கு அனுகுணமாக இருப்பதைக் கண்டு அதிசயிக்கிறான்.

ப்ரபஞ்சம், இதிலே உள்ள ஜீவன், இவன் செய்யும் ஸ்ரீசக்ரபூஜை இந்த மூன்றும் ஒன்றுதான். இதனை தனித்தனியாக காணாமல் தானாகவே கண்டு - கண்டுசொன்ன இந்த ஸவிகல்பஸமாதி நிலைமாறி நிர்விகல்பஸமாதி நிலையான த்ரிகண்டாமுத்ரா தத்துவமான ஜீவப்ரும்மஐக்யம் ஏற்படவேணும் என்பதுதான் இந்த ஸ்ரீதேவி நவாவரண பூஜை என்ற க்ரமத்தின் ரஹஸ்யார்த்தமாம். இவைகளை தெளிந்து இப்படியான நிலைமையிலமைய ஸத்குருசரணபலம் நமக்கு சக்தியைக் கொடுக்கட்டும் என்று ப்ரார்த்தித்து துரீயவித்தையைப்பற்றி விசாரிப்போம்.

மூன்றான கோணத்தின் முதலை ஆய்ந்தால்
முகிழ்வது தான் காமகலை கருத்துத் தெளிவு
நிற்பதுதான் இதன்மேலே அட்டகோணம்
நீள்வதுதான் நிறம் மாறும் மேதினித் தோற்றம்
ஒன்றான ப்ராணன்தான் தசாரத் த்வயங்கள்
ஓடுகின்ற நாடிகளோ மநுவின் பக்கம்
தின்கின்ற புலன் ஐந்தில் த்யாகம் சேரின்
தளமாகி எட்டுவித இயல்பாய் ஆகும்
மனமதனில் ஐந்தான அனைத்தும் நின்று
மாறிவிடும் பதினாறு தளமாய் மின்னும்
தினம் நம்மில் தோன்றுகின்ற தத்துவந்தான்
துறையாக வருகின்ற பூபுரமாம்
நினைவதிலே நிலையாக இவற்றை நிறுத்தி
நான் இன்றி நாடுவதே லயமாம் முக்தி
புனைந்த இந்த பூவுலகம் பரத்தின் மாயை
பூசனையை செய்துவிடு புரத்தில் வாழு.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:07 am

துரீய வித்தை

ஜீவன் முக்த ஸ்திதியாகிய ஸவிகல்ப ஸமாதி வடிவ ஒன்பதாவது ஆவரணத்தை துரீயாவஸ்தையில் விமர்சிக்க வேணும் என்கிறது உபாஸனா காண்டம். ஏனென்றால் அவ்வவஸ்தை

ஜீவப்ரஹ்மஐக்ய ஸ்வரூபமான சிவசக்தி ஸாமரஸ்யமானது. இதற்கு மஹாபூர்த்தி வித்யை என்று நாமதேயமிட்டாலும் இது நாமரூபத்திற்கு அப்பாற்பட்ட மஹாப்ரகாசத்திலே ஒடுங்கும் நிலையாம். இது மஹோட்யணபீட பிர்ம்மானந்தமய சக்ரம். இதில் வியாபித்துள்ள ஸர்வகாமஸித்தியும் ஸர்வதிரிகண்டாமுத்ரையும் ஸாதகனுக்கு ப்ரஹ்மாத்மைக்ய ஞானகாமனா ஸித்தியையும் அகண்டமாயுள்ள தன்னுடைய வடிவத்திலே த்ரிகண்டமான ஸர்வப்ரபஞ்சமும் வ்யாபித்துள்ளதைக் காட்டுவதாக உள்ளதென அறிகிறான். இந்த ஜீவன்முக்தநிலையில் அஸ்தி, பாதி, ப்ரியம் என்ற மூன்றிலே ப்ரியமான ஆனந்தம் இங்கு ஸ்வபாவமானதினாலே மற்ற இரண்டுமே நாஸ்தியாகவும், நபாதியாகவுமாகி ஆனந்தம் மட்டுமே மிஞ்சும். கானல்நீரிலே ஜலமில்லாதது ஸத்யமானாலும் ஜலத்தோற்றம் உண்டு. ஏனெனில் - ஸூர்யகிரணமும், மணல்வெளியும், கண்களும் உள்ளவரை இந்த தோற்றம் உண்டே. இந்த ஸோபாதிகப்ராந்தி எனப்படும் ப்ரபஞ்சத்தோற்றத்திலே கார்ய காரணரூபமான சரீரம் உள்ளவரை ஞானிக்கு உலகத்தோற்றமுண்டு. ஆனுலும் கேவல தோற்றத்தினாலும், அனுபவத்தினாலும் மட்டும் ஞானிக்கு துக்கம் ஏற்படுவதில்லை. வறுத்தவிதையுண்பதன்றி மாநிலத்தைக்கீன்று செறுத்துவிதைப்பாரோ தெளி -(வள்ளலாற் பாசவியல்) வறுத்தவிதை பசியாற்றும். ஆனால் முளைக்காது. இதைப்போன்றுதான் ஞானிகளது யோகத்தில் ஸாதகனது ஸமாதிநிலயை அன்வயப்படுத்தி - இந்த துரீயவித்யா வடிவமான விமர்சம் இங்கு ஸத்குருவருளால் விமர்சிக்கப்பட்டது. மேலும் முன்புகூறின அஸ்திபாதி ப்ரிய வடிவ ப்ருஹ்மஸ்வபாவத்துக்கு எடுத்துக்காட்டாகவே தான் பஞ்சதசீமஹாவித்யையில் - 3 ஹ்ரீங்காரங்கள் உள்ளன. இந்த துரீயநிலையில் - அஸ்தியும் பாதியும் - என்ற இரண்டம்ச ஆவரணமும் இங்கு லயமானதால் இதனை உணர்த்தவே இங்கு துரீயவித்யையில் இருஹ்ரீங்காரம் விடப்பட்டு ஒன்றுமட்டும் இறுதியில் நின்று 13 ஆக விளங்குகிறது என்று குருவருள் விளக்குகிறது.

இந்த விளக்கங்கள் யாவும் ஸத்குருவருளால் அவரவர்களும் தன் சொந்த ஸாதனா பலத்தால் தெரிந்துகொள்ள உதவுமேயன்றி இன்னொருவருக்கு விமர்சிக்க முடியாதது. மேலும் ஸாதகர்கள் இதன்மேல் ஏற்படும் விளக்கங்களை தன்

ஸ்வகுருநாதரிடமே தெரிந்துகொள்ள வேண்டும் என்பது ஸம்ப்ரதாயமாதலால் இவண் இத்துடன் அமைகிறது.

அஸ்தியும் பாதியும் ஆனந்த நிலையினிலே
ஸுஸ்வரமாய் சேர்வதுதான் துரீயப் பார்வை
உஸ்வாஸ நிஸ்வாஸ ஹ்ரீமெனும் மூச்சு
தன்மயமாய் தனியாக நிற்பது நன்று

கி




ஸ்ரீ லக்ஷ்மிகோச லதாதோக்த்ரிரத்ன ரூபாயதே நமஃ


இது பிந்து பீடத்தின் மீது பஞ்சபீடவடிவிலே கல்பனாநிலையில் பரதேவதையை பூஜிப்பதாகும். இங்கு 5 லக்ஷ்மிகள், 5 கோசாம்பாள், 5 கல்பலதாம்பாள், 5 காமதுகாம்பாள், 5 ரத்னாம்பாள் என்ற பெயரோடு மொத்தம் 25 தேவிகள் உண்டு.

பாஹ்யபூஜையின் முடிவிலே ஆனால் பாவனாரூபமான உள்பார்வையோடுகூடிய ஸவிகல்பஸமாதி என்ற நிலையில் கிஞ்சித் ஸமாதி ஸுகானுபவம் காரணமாக நிர்விகல்பனையை திடம் செய்யும் வழி இங்கு காட்டப்படுகிறது. இதனை ஆன்றோர் ஸாம்யம்- லயம்- விநாசம் - அத்யந்தா பாவம் - ஐக்யம் என்ற ஐந்து படிகளிலே கண்டனர்.


1. ஸாம்யம்- (ஆந்தரத்ருƒயானுவித்தஸமாதி), உள்பார்வையாலடையப்பட்ட ஸமாதி நிலை. இது நீரும் பாலும் கலந்தது போல் ஜீவோபாதியானது அகண்டப்ரஹ்மோபாதியில் சுத்த ஸூக்ஷ்மமான த்ருபுடி தோற்றத்தோடு கலந்து நிற்கும் நிலையாகும்(5லக்ஷ்மிகள்).

2. லயம்-(ஆந்த்ர†ப்தானுவித்தஸமாதி), இது உள்ஒலியால் அடையப்பட்ட ஸமாதி. இது ஜீவோபாதி ப்ரஹ்மோபாதி என்னும் சுத்த ஸூக்ஷ்ம த்ருபுடியும் லயித்து ஏகமாய் தனித்த நிலையாம்( 5 கோசாம்பாள்).

3. விநா†ம் - (பாஹ்யத்ருƒயானுவித்தஸமாதி) இது வெளிப்பார்வையாலடைப்பட்ட ஸமாதி. அகண்டாகார வ்ருத்தி ஸ்வரூபமாயுள்ள அகண்டோபாதியின் நாசரூபமான நிவ்ருத்தி நிலை (5 கல்பலதாம்பாள்).

4. அத்யந்தா பாவம் -(இதுவெளி ஒலியாலடையப்பட்ட ஸமாதி). இது ஸாம்யம் என்ற ஜீவபோதம், லயம் என்ற ப்ரஹ்மபோதம், விநா†ம் என்ற அகண்டபோதம் என்றபடிஇந்த ஸா-அபேக்ஷிகபேதம் ஒரு காலத்திலும் முக்காலத்திலும் இல்லவேயில்லை என்ற நிலை.(5 காமதுகாம்பாள்)

5. ஐக்யம் - (இதுபாஹ்யநிர்விகல்பஸமாதி) அதிதோதிதம் - அனாமாக்யை என்ற இது -அது எனக்குறிக்கமுடியாத நிலையாம்.(5 ரத்னாம்பாள்)

இவ்வாறு கூறப்பட்ட ஸாம்யம் லயம் முதலான ஐந்துவகை ஸமாதி நிலைகளிலும் ஒவ்வொன்றிலும் ஸ்தூல மத்திய ஸூக்ஷ்ம காரண துரீய மென்ற ஐந்துவிதமான உட்பிரிவு உள்ளதால் இதனை மேற்கூறியபடி(5*5=25) பஞ்சபஞ்சிகாதேவிகளாக பிந்து சக்ரத்தின் மேல் பாவித்து அந்த ஸமாதி நிலைகளை தேவதா ரூபத்தில் ஐக்யப்படுத்தி இங்கு இந்த விதமாக ஏற்பட்டுள்ளது.

(இதன் விவரங்கள் கோடகநல்லுர் ஸ்ரீசுந்திரஸ்வாமிகள், ஸ்வானூபூதிரஸாயனத்தில் காணலாம்) ஸ்ரீலக்ஷ்மிதரர் -

ஸௌந்தர்யலஹரிக்கு செய்த பாஷ்யத்திலும் இதுபற்றி குறிப்பிடுகிறார்- ஸ்வாதிஷ்டான கதோக்னிஃ அனுவேததிஸஹாயம் கரோதி அதƒச அப்யாஸ வசாத் வாயுனாக்னிம் - ப்ரஜ்வால்ய அக்னி ‡கானுவித்தவிலீன சந்த்ரமண்டல களத்பியூஷதாரானுபவே பஞ்சவிம்†தி தத்வாதீத பரமேƒவரிம் ஞாதும் ஸு சக்ய மிதி உபதேசஃ

மேலும் இந்த பஞ்சபஞ்சிகாதேவிகள் உண்டானவிவரம்பற்றி த்ரிபுராரஹஸ்யம் மஹாத்மியகண்டம் 57வது அத்யாயத்திலும் காணலாம். குறிப்பு - இந்த உயர்ந்த பாவனாநிலையை நூல்களின் நோக்கில் விளக்கப்பட்டதேயன்றி இது அனுபவ ஸாத்யமில்லாதது. கண்டாரும் விண்டதில்லை. ஸமாதி என்பது ஒரே நிலைதான். அதில்பலபடிகளேயில்லை என்பாரும் உளர்.


ஸமாதி ஸுகமது ஸத்தியமாய் நிலைக்கவே
ஸாம்யாதி பூஜையிங்கு ஐந்தாயாகும்!
காமாதி வர்க்கமான காசினித் தோற்றம்
கண்ணுக்குள் தோன்றுகின்ற ஆந்த்ரத்ருƒயம்!
தாமாக நின்றுவிடும் தரணிச் செயல்கள்!
திட அத்யந்தா பாவந்தான் பஞ்சிகா பூஜை!
ஸாமாதி வேதத்தின் எல்லை இதுவே
சீராக நிலைத்துவிடு பீடந் தன்னில்!
கி


ஸ்ரீதாராப்ரஹ்ம‡வேதாப்ஜ†த்தயாகாரதே நமோநமஃ


பௌத்தம், வைதிகம், ø†வம், ஸௌரம், வைணவம், சாக்தம் என ஆறுவித தர்†னங்களிலும் ப்ரஹ்மாபின்ன அத்விதீய சித்சக்தியே அதிஷ்டானமாக விளங்கி அந்தந்த தர்†னத்தின் அதிதேவதையாக நின்று உபாஸகனுக்கு அருள்புரிகிறது என்ற தத்வதர்†னம் ஸாதகனுக்கு வரவேண்டியே இந்த ஷட்தர்†னபூஜை

ஏற்பட்டுள்ளது என அறிகிறோம்.

ஆறான தர்†னங்கள் அனைத்தின் உள்ளும்
பேறான பரமேதான் பரவி நிற்கும்!
வேறான எண்ணங்கள் விரைவாய் துறந்து
தீராத பிறவிநோயை தீர்த்துக்கொள்ளு!

கி


ஸ்ரீஷடாதாரமத்யப்ஜப்ரகாசாயதே நமோ நமஃ


சரீரத்தில் ஆந்த்ரயோக ஆதாரச்சக்ரங்களான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், வி†úத்தி, ஆக்ஞை என்றவைகளில் உறையும் சித்சக்தி முறையே ஸாகினி, காகினி, லாகினி, ராகினி, டாகினி, ஹாகினி என்ற பெயருடைய யோகினிகளாக உள்ளனர். இவர்களே தங்களுடைய உபாதிபேதத்தால் கணநாதர், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஜீவன், பரமாத்மா என்ற ஸ்வரூபபேதத்தில் விளங்குகின்றனர். எனவே இந்த வாஸனாமயசரீரமே சக்ரமாம் - தேவதா ஸ்வரூப சக்தி இடமாம் - என்ற திடமான ஞானம் ஸாதகனுக்கு ஏற்பட இந்த ஷடாதார பூஜையாம்.

ஆதாரம் ஆறாகும் அதனுள் விளங்கும்
சிதராத சீர்பெற்ற ப்ரம்ம சக்தி!
புதிராகும் பூமிக்குள் குண்டலி சக்தி!
அதிலேதான் அகிலத்தின் ஆற்றல் உண்டி.!

கி


ஸ்ரீஷடாம்னாய மஹாமந்த்ர ஸாரபூதாயதே நமோ நமஃ


ஆம்நாயம் என்றால் வேதம் என்பர். சதுர்வேதங்களும் அதாவது அதில்கண்ட மந்த்ரங்கள், ஸ்தோத்ரங்கள், பிரயோகங்கள் - அந்தமாகஉள்ள உபநிஷத்துக்கள் யாவும் ஒரு மனிதன் வாழ்ந்து விறகோடு போகும் வரையில் தேவையே. ஆனால் ஸாதகன் வெறும் வாழ்வு வாழ்ந்து விறகோடு எரிவதற்கு மட்டும் இங்கு வரவில்லை. ஜாஜ்வல்யமாக ப்ரகாசிக்கக்கூடிய பரம்பொருள் எங்கோ அல்ல. அது கேவல ஜீவனாக விறகினாலே எரிவதற்கு வந்திருக்கிற இந்த சரீரத்துக்குள்ளும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதையே வேத- உபநிஷத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன என்று தெரிந்து கொள்ள வந்திருக்கிறான். வழிபாடு - கர்மா - செய்யும் இந்த ஸாதகனுக்கு இங்கு பூரணமான வேதாத்யனங்கள் இல்லாமல் இருக்கலாம். உபநிஷத்துப் பொருளை அறியாமலும் இருக்கலாம், இந்நிலையில் - இவன் தன் குருக்ருபாபலத்தினால்- யோகநிலையிலே விளக்கப்படும் ஷடாதாரங்களையும் க்ஷணத்திலே கடந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே ஷடாதாரக்கடப்பும், ஷட்தர்†ன தத்வவிளக்கமும் அடைந்த ஜீவனுக்கு ஷடாம்னாயமான வேத விளக்கங்களின் உட்பொருள் தானே விளங்கும்.

இந்த சதுர்வேதங்களும் முறையே - பூர்வம்,தக்ஷிணம், பƒசிமம், உத்தரம் என்றபடியும், உபநிஷதங்களின் வாக்கியப்பொருள் ஊர்த்வம் என்றும், உபநிஷதங்களின் - லக்ஷ்யப்பொருள் - அனுந்தரம் என்றபடியும் ஆறுஆம்னாயங்கள் எனப்பெயர் பெறுகின்றன. .
இந்த ஆறுஆம்னாயங்களுக்கும் காரணம் பிரகாச விமர்ச வடிவமான ஸ்ரீசரணங்களே. பிரவணத்தின் அகார, உகார,மகார நாதம் நான்கு பாகங்களும் நான்கு ஆம்னாயங்களாகவும் அதாவது அபர வடிவமான அபராகாம கலைக்கு அர்த்தமாகவும், மந்த்ராதீத ஸ்வரூபமே ஊர்த்வாம்னாயமாகவும், கேவல அனுவபஸிந்தாந்த வடிவமாக உள்ளதே அனுத்தராம்னாயமாகவும் அறிஞர் கூறுவர். இந்த ஆறு ஆம்னாயங்களிலும் அடங்கியுள்ள மந்த்ரங்கள் ஸப்தகோடி (7கோடி) என்பர். இந்த ஸப்தகோடி மஹாமந்த்ரங்களையும் †ப்தகோடி
(ஒலி) யிலே உள்ள ஸாதகன் அறிகிறான் என்பதே தத்வம். இந்த வேதங்கள் கர்மகாண்டம், உபாஸனா காண்டம், ஞானகாண்டம் என்ற முப்பெரும் நிலையில் விளக்கி - அதனாலே ப்ரஹ்மாபின்னமான அத்விதீய சித்சக்தியேதான் அகண்டமாக எங்குமுளது என்ற திடபாவனை ஏற்படவே இந்த ஆம்னாயபூஜை செய்ய பத்ததி விதித்துள்ளது. இதனை ஸமஷ்டியாகவும் வியஷ்டியாகவும் செய்யபத்ததியில் இடமுள்ளது. முதல் நான்கு ஆம்னாயங்கள் பஞ்சதசீ உபாஸகர்களாலும் மற்ற இரண்டும் ஷோடசீ உபாஸகர்களாலும் பூஜிக்கும் வழக்கம் ஸம்ப்ரதாயமாம்.

வேதங்கள் நான்கும் ஸ்ரீசக்ரத்தின் நான்குபக்க த்வாரங்களில் அமைந்துள்ளதாக சாஸ்திரங்களில் காணப்படுவதால் ஆவரண பூஜையின் முதல்நிலையில் பூபுரத்தில் பூஜை துவங்குமுன்பே இந்த ஆம்னாயங்களை பூஜிக்கும் முறை சில ஸம்ப்ரதாயங்களில் காணக் கிடைக்கிறது.
ஸாமாதி வேதங்கள் சகத்தில் உண்டு!
ஸோமாதி யக்ஞங்கள் செய்வோர் உண்டு!
யாராதி என்றறிய இந்த ஸப்த கோடி
ஸாரமான மந்த்ரத்தால் சரணப்பூஜை!
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:07 am

ஸ்ரீஸஹஸ்ரநாம த்ரி†திநாமரூபாயதே நமோ நமஃ


அக்ஞான ஆவ்ருதமான ஜீவன் தன்னிலிருந்து அதனை விலக்கிக்கொள்ள வேணும். இதற்கு லலிதாவின் பூஜையைச் செய்கிறான். அவளே இந்த அக்ஞான திமிரை அடக்க தன்னையே வராஹ வடிவமாக மாற்றிக்கொண்டு அக்ஞானத்தை நாசம் செய்கிறாள். இந்த தத்வம் ஸாதகன் உணருவான் வேண்டி தண்டநாதை என்ற பெயரோடு மஹாவாராஹியாக உள்ள அவளை இங்கு அர்ச்சிக்கிறான்.

இந்த அக்ஞானத்திமிர் தன்னிடத்திலே உள்ளது, அதனை

நீக்கிக் கொள்ள வேணும் என்ற சுத்த தத்வத்தை அறியும் புத்தியைக்கொடுப்பவள், அதே பராசக்தியின் வடிவமான மந்த்ரிணி என்ற ƒயாமளையாவாள். அவளையும் இங்கு அர்ச்சிக்கிறான். பிறகு புத்தி அஹங்கார உபாதிகள் நீங்கிய நிலையில் தத்வாதீதமான லலிதையையும் அர்ச்சிக்கிறான். இந்த 53 நாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவைகள் என்பர். இதன்பின் ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமம், லலிதாத்ருசதி, ஆƒசர்யாஷ்டோத்ரம் என்றபடி அர்ச்சனைகளை செய்ய வேணும். இனி ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமத்தின் ஸாராம்சம் பற்றி விரிவாக காண்போம்.

ஸ்ரீ லலித லாவண்யம்

அருள்விலாசம் ஆன்மாவின் எழுச்சியை உண்டுபண்ணுங்கால் பராசக்தி குணங்களை பாரில் பரப்ப விரும்பி எழுந்த எண்ணக் கூட்டத்தினை எழுத்தில் வடிக்க அருட்சக்தி வழிசெய்கிறது.

உணர்ச்சியின்பம் உருவத்தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. இறையின்பம் பிரபஞ்ச உற்பத்தி. அல்லல் மலிந்து உயிர்கள் அல்லலுறுங்கால் ஆண்டவன் பிரபஞ்சத்தில் - உலகில் உருக்கொண்டு உலவி - அறத்தை நிலைநிறுத்தி வருகிறான் என்பது ஆன்மிக உலகம் நன்கு அறியும். இறைத்தன்மை பொதுவானது. அதை ஆண் என்றோ பெண் என்றோ கூறமுடியாதல்லவா? அல்லல்படும் ஆன்மாக்கள் எந்தப் பெயர்கொண்டு அதை விளிக்கின்றனரோ, அப்பெயரில் அவ்வுருவில் அது உலகில் தோன்றுகிறது. தத்துவத்தையும், வேதாந்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு புராணத்தின் துணை அவசியம் தேவைப்படுகிறது. கதை மூலம் கருத்தினை உணரவைப்பது என்பது அறிவுரையின் அங்கம்.

ஆண்டவன் வானின்றிழிந்து வையகம் வந்தான் என்றால்,வான் எங்குள்ளது? அதன் தூரம் என்ன? என்றெல்லாம் நாம் கதைபடிக்கும்போதோ, புராணம் கேட்கும்போதோ விசாரிப்பதில்லை. ஆகாசத்திலிருந்து இறைவன் வருகிறான் என்றால் ஆகாசம் எங்குமுள்ளது. இறைவன் எங்குமுள்ளவன். எங்கு முள்ளவன் எங்கிருந்து வருவது என்பதெல்லாம் தத்துவ வாதம். தத்துவம் அறிய

தரணியோர்க்குப் பொழுதில்லை. இறைச்சக்தி தன் ஒரு சக்தியை தரணியில் பரப்பி ஒரு ஜீவனாக உருவெடுத்து அல்லல் நீங்கவும், இன்பம் பெறவும்

வழிசெய்கிறது. உலகில் மனித இனத்தில் அவதாரம் செய்து அதாவது இறங்கி வந்து - தன் நிலையிலிருந்து இறங்கிவந்து, அவதாரக் காரியத்தை செய்து முடித்து மறுபடியும் சக்தியுடன் கூடுகிறது. இதுபோல தேவர்கள் துன்புற்றபோது இறைவன் அவர்களது துன்பம் துடைக்க அவதாரம் செய்திருப்பது புராணங்கள் மூலம் புரிகிறது.

முக்கட்பெருமான் மோனத் தவத்தை காமக் கலைஞன் மன்மதத்தேவன் மலரம்பு கொண்டு தாக்கியபோதில் முக்கட்சுடர் அவனை முழுச் சாம்பலாக்கி நிற்க - தேவர்கள் காமக் கலையின் முக்கியமுணர்ந்து காலகாலனைக்கண்டு கழறிநிற்கும் வேளையில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதச்சாம்பல் - பண்டாசுரனாக வடிவெடுத்து தேவர்களை வருத்திய விருத்தாந்தம் வையகம் அறிந்த ஒன்று.

சொல்லடங்காத்துயருற்ற தேவர்கள் வேண்டிய தெய்வம் எதுவென்றால் - அன்னை பராசக்திதான். கஷ்டம், துயரம் வந்தகாலையில் அதனை நீக்கும் மாபெரும் சக்தி அன்னைதானே. அம்மா என்றழைத்தால் அருகே ஓடிவந்து அரவணைக்கும் குணம் அவளுக்குத்தானே உண்டு. குற்றத்தை மன்னிக்கும் குணம் தாய்க்குணம் அல்லவா? முதலில் வணங்கும் உறவும் தெய்வமும் அவளேதானே. ஆகவேதான் ஆதிமுதல் அன்னையை அனைவரும் சரணமெனப் பிடித்தார்கள். அன்னை ஆராதனம் அதிசிறப்பாக நடைபெற்றதன் முடிவிலே - பராசக்தி - கனிந்த தீயின் ஜொலிப்பிலே - ஒருமுகப்பட்ட த்யானத்தின் உணர்வினாலே - தன்னையே தீயில் இடுபொருளாகக் கொண்டு நிற்கும் சரணாகதியின் மத்தியிலே எழுந்த மாபெரும் சக்தி - அக்னிப்பிழம்பு - ஒளிச்சோதி வடிவம் ஒரு உருக்கொண்டு லலிதமான பொன்னுடலோடு கூட லலிதை எனப்பெயர் தாங்கி தரிசனம் தந்தாள். இந்த நிலை தேவியாகத்தின் முடிவிலே தோன்றுவதொன்று. இங்கு பஹிர்யாகத்தின் முன் - பஹிர்முகமாக வேண்டிய தெய்வத்தின் உருக்கொண்டு எழுந்தது. இதையே அந்தர்யாகமாக ஆத்ம யோகமாகச்செய்யும் நிலையிலே - நீயே ஆத்மனாக, நீயே யோகியாக, நீயே தெய்வமாக, நீயே எல்லாமாக

ஆவது அனுபவஸித்தாந்தம். ஆன்றோர் ஸத்யவாக்கு. உண்மை உணர்ந்த நெஞ்சில் ஒளித்தோற்றமுண்டு. இங்கு உண்மை தெய்வத்தை உணர்ந்தபோதில் ஒளித்தோற்றமாய் - இறைவி தோன்றினாள். தோன்றிய தெய்வத்தை தோத்திரம் செய்தார்கள் தேவர்கள் - இப்படியாக -


எல்லையில்லாத பொருளுக்குத்தான் எல்லையற்ற ஸௌந்தர்யம் உண்டு தாயே. உன் ஸௌந்தர்யம் எல்லையற்றதம்மா” அசோகம், சம்பகம் முதலான மலர்களின் நறுமணத்தை உடையவளே. அம்மணம் உன் கூந்தல் கொடுக்கிறதம்மா. கஸ்தூரிக்கு உன் நெற்றியில் இருப்பதால்தான் பெருமையோ? காமக் கலைஞனின் வீட்டுத்தோரணம்தான் உன் புருவங்களோ? வெண்ணிற முகத்தில் வீசும் ஒளி நீரில் உறவாடி நீந்தும் மீன்கள் போன்றுள்ளதே உன் நேத்திரங்கள். நாசியின் அழகை நக்ஷத்திர ஒளியை அள்ளி வீசும் உன் மூக்கணி காட்டுகிறதே. பிரபஞ்சத்தையே உன்னுடலாகக் கொண்டதால் ஸூரிய சந்திரர்கள் உன் காது தோடுகளாகத் திகழ்கிறார்களே. உன் கன்னக்கண்ணாடியில் பிரபஞ்சம் பிரதிபலிக்கிறதே அம்மா. பவழம் போன்ற திருவாய் கொண்ட தாயே. காணக்கண்கூசும் உன் பல் வரிசையழகு சுத்த வித்தையே முளைவிட்டதைப் போன்றுள்ளதே அம்மா. மூகனையும் பேசவைக்கும் வாசனைத்தாம்பூல மணம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறதே. உன் குரல் நாத தெய்வம் சரஸ்வதியின் வீணை ஒலியையும் மிஞ்சுகிறதே அம்மா. உன்மென்முருவல் எங்களை மட்டுமா சொக்கவைக்கிறது? - காமேசனையும் மயக்குகிறதே தாயே. மங்கள ஸூத்திரத்துக்கு மஹிமை, அது உன்கழுத்தில் இருப்பதால்தானே தாயே. காமக்கலையின் ஸூக்ஷ்ம பிந்து காமேசனையும் கலங்கவைக்கிறதடி. உன் திருவுடல் தாங்கிய ரத்தினப்பட்டாடையின் ஒளி உள்ளுருப்புக்களின் உயர்வழகை உள்ளத்தில் உணர்த்தி உவகை கொள்ளச் செய்கிறதம்மா. அக இருளைப் போக்கும் குருவருளாய் புற இருளைப்போக்கும் ரத்தின தீபக்கதிராய் ஒளிவீசித்திகழும் உன் திருவடித்தாமரைகளுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் அம்மா.

-என்று பலபடித்தாய் தோத்திரம் செய்து முடித்தனர் தேவர்கள்.

காமேƒவரனை மணம் கொண்டாள் காமேƒவரி. உடல்

பாதி, உயிர்பாதியல்லவா. சிவமும், சக்தியும் சேர்த்தொன்றாய் இருப்பது நியதியல்லவா. இருக்குமிடம் ஏற்றமிகு எழில் நகரம். அதற்கு ஸ்ரீநகரம் என்ற திருநாமம். இதனையே மனக்கோட்டையில் கண்டுகளிக்கவேணும்.

எந்த மனதில் காணுகிறோமோ அதுவே ஸ்ரீநகரத்தின் பிராகாரமாகும். மனம், புத்தி, அஹங்காரம் இம் முக்கூட்டும் மூன்றாகவும், ஒளிகொண்ட கதிரவன், தண்ணொளி கொண்ட சந்திரன் மன்மததேவன் இவர்களின் ஒளி மூன்றாகவும், நவரத்தினங்கள் - உலோகங்கள் இவைகளினாலானது 19 ஆகவும் ஆக 25

மஹாப்ராகாரங்களையுடைய ரத்தினத்தீவில் அமைந்த அந்நகரத்தின் ஸ்வரூபம் இது. மேருமலை உச்சிச் சிகரத்தில் உறைபவள் ஸ்ரீநகரத்தின் நடுநாயகியாம் நம் தேவியவள். அவளது வீட்டுக்கு சிந்தாமணி என்கிறார்களே, ஏனென்றால் பக்தன், ஸாதகன் சிந்தித்த எதனையும் ஸித்தித்துக் கொடுக்கும் திறமுடைய அவளது திருமந்திரத்துக்கு வாசஸ்தானமாக அது உடையதாலோ? பிரம்மம் ஒன்றுதான். ஆனால் ஒன்றைப் பலவாக்கும் அவளது சக்தி இங்கு பிரம்மத்தையே ஐந்தாக்கி தனக்கு பிரம்ம பீடமாக ஐந்து பிரம்ம ஆஸனமாக அமைத்துக் கொண்டாளாம். பத்மம் என்றால் யானை என்ற பெயரை அறிவோம். இங்கு பெரிய பெரிய யானைகள் நிறைந்தகாடு. அந்த காட்டில் இருப்பவளாக அன்னையைச் சொல்கிறார்கள். மனமே ஒரு காடு, அதில் யானையின் நிறம் போன்று அனேக கரும் புள்ளிகள். அதன்மத்தியில்தான் இறைவியின் ஒளி வடிவம் உள்ளது. இதனைத் தான் மஹாபத்மாடவியில் அமர்ந்து காட்டுகிறாளோ? மேலும் நானாவிதமான எண்ணக் கூட்டத்தில் தவிக்கும் புத்தி மாதிரி உள்ளது அந்த கதம்பவனம்.
துளி அமிர்தம் பெற தேவர்கள் பட்டபாடு நமக்குத் தெரியும். பாத்திரத்தில் பெற்ற அமிர்தத்தை உண்டு சிறந்தனர் வானவர். இங்கோவெனில் அதே அமிர்தம் சமுத்திரமாக - கடலாக- நிறைத்துள்ளது. அதன் மத்தியில் அவள் இருக்கிறாள். கங்கையை, காவிரியைப் பூஜிக்கிறோம். இவைகள் நீர்நிலைகள், இதனைப்போல் அமிர்த நிலையில் உள்ள அமிர்தத்தை பூஜிக்க வேண்டாமா? பூஜிக்கும் முறையும், விதானமும் அன்னை அருள் பெறும் உபாஸக உலகம்நன்கறியும். அன்னை அருள் கொண்டு அமிர்தம் பருகும் மஹாவைபவம் அது. ஸ்ரீஸுதா தேவியின் சுகானந்த க்ருபையை

ஸூக்ஷ்மமாய் உணர்ந்து அவளில் மூழ்கும் ஆனந்த நிலை அவளால், அவளருளால் அடையத்தக்கது, இங்கு சொல்லில்லை, பொருளில்லை, உணர்விர்லை, உருவமும் இல்லை, எல்லையற்ற நிலைகொண்டிருக்கும் நிமலையானவள் காமாக்ஷி என்று பெயர் பெறுகிறாளே.

அக்ஞானமும் அஹங்காரமும் மிகுந்த மனம் படைத்த ஜீவன் மிகுந்து ஆர்ப்பரிக்கிறது. அக்ஞானத்தால் அகந்தை மூடியிருக்கிறது. இவ்விருட்டு நீங்க ஓர் ஒளி வீசுகிறது. ஒளிக்கற்றைகள் பட்டவுடன் அக்ஞானமும் அஹங்காரமும் மடிகிறது. அல்லது மறைகிறது. இதனைப் புராண உருவகப்படுத்தினோமானால் பண்டாசுரன் என்ற பெயர் பெற்ற அசுரன் தம் மமதையால் தேவர்களைத் துன்வுறுத்தியகாலை அதாவது காமனைகளால் பிறந்த பண்டன் காம வெறிகொண்டு அலைந்த காலை பூவுடல் கொண்ட லலிதை பாசம் அங்குசம்,

பஞ்சபாணம் பூட்டிய கரும்புவில் இதனால் பண்டாசுரனை வதம் செய்கிறாள். இங்கு ஞான உணர்வில் தெளிய வேண்டுவது அஹங்காரம் அழிவு. அஹங்காரம் அழிந்து அக்ஞானம் நீங்கி ஒளி உருக்கொண்டுவிட்டால் அது தானே முக்தி - அதுதானே மோக்ஷம். அதுதானே வீடு பேறு. புராணத்திலே வரும் அசுரவதம் நிகழ்ந்து தேவர்கள் இன்புற்றனர். காமபித்துவிலிருந்து கிளம்பிய அசுரகுணம் காமங்களுக்குகெல்லாம், இவ்வுலக, அவ்வுலக ஆசைகளுக்கெல்லாம் மிகத்தொலைவில்- நிலைபெற்று அவைகளில் ஆட்படாத நிலையில் அவைகளை அருளும் தன்மையில் அமைந்து நிற்கும் ஸ்ரீகாமாக்ஷியால் வதம் செய்யப்படுகிறது என்பதைத்தான் இங்கு ஸூக்ஷ்மமாய் உணரவேணும்.

பார்வையாலேயே காமங்களையெல்லாம் ஆள்பவள், பார்வையாலேயே துன்பங்களையெல்லாம் போக்குபவள், பார்வையாலேயே முக்தி பேற்றை அருளுபவள்- என்றெல்லாம் அவள் சிறந்து விளங்குகிறாள். காமங்களை நீக்குபவளும் அவள்தான். கொடுப்பவளும் அவள்தான். ஜன்ம ஜன்மாந்திரங்களில் அனுபவித்த விஷயானுபங்கள் இவனிடத்திலே ஊறிலேசில் இவனை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறது. அவளருளால் இந்த விஷயானுபவ இச்சை நீங்கி ஆத்மாபிவிருத்திக்கு எண்ணம் ஏற்படுகிறது. ஆக விஷய இச்சை நசித்த இடத்திலே ஆத்ம இச்சை பிறக்கிறதென்பதை இங்கு

உணரவேண்டும்.

எங்கும் பரந்துள்ளது பரவெளி. இதனை அறிய ப்ரம்மாண்ட தத்துவம் அல்லது பிரபஞ்சதத்துவம் புரியவேணும். இதுவே உடற்கூறு அமைப்பிலும் பிண்டாண்ட தத்துவமாய் சுருங்கி நிற்கிறது. பிர்மாண்ட தத்துவத்தை பராசக்தியாக உருவகப்படுத்தினால் அவ்வுருவம் மூன்று பாகமாய் தெரியும். முகமண்டலம், கழுத்து முதல் இடுப்பு வரை இடைமண்டலம், திருவடிமுடிய கடை மண்டலம் என்று கூறலாம். அவளை ஆராதித்து அதாவது அவளின் மந்திரத்தை நாத்தழும்பேற நவின்று நலம் பெற்ற மஹான்கள் அவளின் மந்திரமே அவளின் உடல் என்று கண்டு தெளிந்தார்கள். அந்த மஹாமந்திரத்தை மூன்று கூறாய் முதல்கூறு அவளின் முகமண்டலமாயும், நடுகூறு இடைமண்டலமாயும், கடைக்கூறு பாதம் வரை உள்ள பகுதியாயும் தியானிக்க வேண்டுமென்று கூறியுள்ளதை உணர குருவருள் வேண்டும். மஹா மகிமை பொருந்திய மந்த்ரங்களை கூறுபோட்டு அதன் குணங்களை விளக்கும் தனிப்பெருந்தகுதி மகான்களுக்கே உண்டு.


அவளே எல்லாவற்றிற்கும் மூலம். மூலமாய் நின்றவளை காலத்தால் வணங்குகிறோம். வாக்பவம், காமராஜம், சக்தி என்ற முப்பிரிவு மந்திரத்தால் முதல்வியின் முழு உடலை முப்பிரிவாய் வணங்கினோம். இதனை ஸூக்ஷ்மமாய் அறிய வேணும் என்பது ஆன்றோர் வாக்கு. ஸூக்குமத்திற்குள் ஒரு காரணம் உண்டு என்பது தத்துவமல்லவா? அக்காரணத்தை விளக்கப் போகுங்கால், ஒரே பிந்துவாய் பொலிவோடு தன் ஒளிகாட்டி நிற்கிறது. பின் அதுவே இரண்டாகி வசீகரண சைதன்யமாய் அவ்யக்தமாய் வசீகரித்திருக்கிறது. பின் ஒரே பிந்து மூலமாய் ஜகத் காரணமாய் ஸ்தூலக் கண்காணா துரீயமாய்த்தோன்றா நிற்கிறது. ஒரே பிந்து பராசக்தி, இரட்டைப் பிந்து அவளும் இந்தப்ரபஞ்சமும், மறுபடி ஒரே பிந்து விஷயானுபவம் மிக்க ஜீவன். தொடர்புடைய இம் முன்றையுமே இடைவிடாத சுத்த சைதன்யம் ஒட்டிவைத்து இருக்கிறது. அந்த சுத்த சைதன்யம் ஜீவனின் மூலாதாரத்தில் புரிபோல சுருட்டிய நிலையில் இருப்பதாய்க் கண்டு தெளிந்த அறிஞர் கூற்று. உணர்ந்தால் அது கூற்றாயில்லாமல் ஸத்தியம் எனத் தெளியலாம்.


ஸ்தூலமாய் விளக்கப்பட்ட மந்த்ர ஸ்வரூபமும் ஸூக்ஷ்ம காரணமாய் புரிந்த காமகலா வைபவமும் கண்டபின்பு மூலாதாரத்தில் முழுக்கனலாய் சுயம்ஜோதி சைதன்யம் ஒங்காரமாய் எழும். அடுத்தடுத்த ஆதாரங்களில் ஆங்காங்கே நின்று அது புரிவிக்கும் உணர்வெல்லாம் அல்லது அது நகர்ந்துசெல்லும் நடப்பெல்லாம் வாசிக்கட்டிலே நின்று ஆசையறுத்த யோகிகளுக்கே வெளிச்சம். இருந்தும் யோகியுமல்லாமல்,போகியுமல்லாமல் ஆகிவந்த பரம்பரையில் தேடியடைந்த தெளிவினாலே சிறிது தெரியும் தன்மையும் உண்டு. உச்சிக்கமலத்தில் ஓங்காரமாய் நின்று பிச்சிக்கலையாள் பெருகவிடும் அமிர்தத்தை திகட்டாமல் பருக தேனமுதாளின் திருவடிகள் தண்ணுதலில் தெரியவேண்டும். இதனாலே கண்டவர் விண்டிலர் என்று கூறுமாப்போலே அந்நிலையில் பெறும் அனுபவம் ஆனந்த அனுபவம். இந்த ஆனந்தத்தை உணர்த்த அகராதியில் வார்த்தைகள் இல்லை. இதுவே பேரனுக்ரஹம்.

சதாசிவபதிவிரதையாய் இருந்து அனுக்ரஹம் செய்கிறாள். அபேதபாவனம்ஸ்ரீசக்ரபூஜனம் என்கிறது உபநிஷத்தும். நானே நீ - நீயே நான் கொடுப்பதுமில்லை, கொள்வதுமில்லை, மங்களத்தை கொடுப்பவளும் அவள், அவளே தான் மங்களம்.

திக்குத் திசை தெரியாமல் துணையில்லாமல் புகுந்திருக்கிறாய்.

ஜீவனே! உனக்குப் பயமில்லையா? என் பயத்தைப் போக்கி தனிவழி செல்லும் என்னோடு துணையாய் நின்று அமுதூட்டி அரவணைத்து அழைத்துச் செல்கின்றாயே அம்மா! கனமான பாவ மூட்டை கட்டுச்சோறாய் பாரமாய் அழுத்துகிறதே. அதனை லேசாக்கும் நிமித்தம் என்னையே அச்சோற்றை உண்ணச்செய்து பாவத்தைக் கரைத்து லேசாக்கி லேசான நின் திருவடித் தாமரைகள் இரண்டையும் ஜீவனின் சிரசிலே தங்க வைத்து குருவருளாய் குணமருளும் சிவபத்தினி! உன் செந்திருபாதங்களுக்கு சிறிய ஆன்மா சொந்தமடிதாயே!

- என்றெல்லாம் வணங்கும் ஸாதகனுக்கு - பக்தனுக்கு திருவனுக்ரஹம் செய்துவிடுகிறாள் அன்னை. இவளை பக்தன் அன்னையாக மட்டுமா வணங்குகிறான்? இல்லை, சுகாம்பரப்

பெருவெளியாகவும் சிந்தனையிலே கண்டு வணங்குகிறான். இந்த குணமல்லாத, பெயரில்லாத, ஆதாரமில்லாத, குற்றமில்லாத, மாறுதலில்லாத, கூறுபோடமுடியாத, விருப்பு வெறுப்பு இல்லாத என்றுமே அழிவில்லாமல் நிலைபெறும்படியான, பிரபஞ்சக் கட்டில் கட்டுப்படாத, ஸ்தூல ஸூக்ஷ்ம, காரணமூன்றுமல்லாத, தனக்கு அதிபதியாருமல்லாத, கவலை, காமம் எதுவுமற்ற நிர்மலமான ஒரு ஆனந்தத்தை ஆயிரம் பெயர் சொல்லி துதிக்கிறானே.

பிழையெல்லாம் போக்கி, நான்காய் நிற்கும் ஸாதகனது மனம், புத்தி, சித்தம், அஹங்காரம், இதில் தெரியும் தூசிகளையெல்லாம் துடைத்து, அதை பராசக்தி நித்தியமாய் உறையும் புனித இடமாக ஆக்குவதற்கு இந்த ஸ்ரீவித்யாஆராதனம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு சச்சிதானந்த ரூபிணியாய் இருப்பவள் ஸகுணமாய் அன்னை வடிவத்தில் அடிமனதில் தோன்றி 64 விதமான உபசாரங்களை ஸ்தூலமாய் பெற்று ஸாதகனை ஒரு உபாஸனாகர்மாவில் இழுத்து அதனில் சிறக்க வழி செய்பவளும் அவளே.

சுத்த சிவம் சிவோஹம் பாவனையால் ஜகத் காரணமாகிறது. இந்த ஜகம் முக்கூட்டு ப்ரபஞ்சமானது. இம்மாதிரி அனேக அகிலாண்டகோடிப்ரும்மாண்டங்களெல்லாம் இவள் இச்சையால், நடைபெறுகிறது. சிவோஹம் பாவனை சிவத்துக்கு ஏற்படவில்லையானால் அது செத்த சிவம்தான். அம்மாதிரி செத்த சிவம் ஐந்தைத் தன் ஆஸனத்திலே அமைத்து - ஆயிரம் கண்களுடன், ஆயிரம் பாதங்களுடன், படைத்தல் கடவுள் முதல் அணுவரை அவளே படைத்து, காத்து, அழித்து உலகில் நடைமுறைச்சட்டங்களை

வகுத்து(வர்ணாச்ரமம்) வேதங்களின் சிரஸிலே தன் பாத தூலியாய் சிந்தூரப் பொட்டை இட்டு சிறக்கும் செல்வியவள். வாருணீ மதுவால் மெய்மறந்து நிற்கும் அவள் ஆத்மனுக்கு நாபியில் பெருகும் ஆனந்தத்தேன் பருகசெய்து மகிழ்வைக் கொடுக்கும் அவள் - விஜயா முஹுர்த்தத்தில் சிறக்கப்படுகிறாள். இருளைப் போக்கி ஞானம் அருளும் மஹாவாக்யம் கூறும் லட்சியப் பொருள் அவளே அல்லவா? தத்வம் அஸி. அம்மாவை ஆயி என்றழைக்கிறோம். ஞானிகள் ஐயை என்றழைக்கிறார்கள். இதுவே மஹா வாக்கியத்தின் இரு பெறும் சொற்கள் என்பது புலனாகிறது. பாவனையில் செய்யும் பூசனையில்

உலகிற்கு தந்தையாய் வாராஹியைக் கூறி அம்மாவாக குரு குல்லாவையும் கூறியிருப்பதை உபநிஷதம் உணர்விக்கிறது. மேலும் அஜபா காயத்ரி ஸ்வரூபத்தில் ஹம்ஸ மந்த்ரத்தின் உச்சாரணத்தால் சிறப்பவள். இவ்வாறு பலபடித்தாய் ஸ்வரூப வர்ணனைகளும், ஸித்தாந்த சொற்களுமாய் கூறப்பட்ட தேவி குண்டலினிச் சக்தியாய் மூலாதாரத்தில் ஸாகினியாய் குடிகொண்டிருக்கிறாள். பதினாறு தளவிசுத்தியில் டாகினியாயும், 12 தள அனாஹதத்தில் ராகினியாயும், பத்து தள மணி பூரகத்தில் இரக்த வர்ண லாகினியாயும், ஆறுதள கமல ஸ்வாதிஷ்டானத்தில் காகினியாயும், இருதள ஆக்ஞையில் ஹாகினியாய் வெள்ளை நிறத்துடன் பிரகாசிக்கிறாள். ஆயிரம் இதழுடையதும், உச்சியில் உள்ளதுமான ப்ரம்மரந்திரம் என்ற நிலையில் யாகினியாய் சகலவித குண, வர்ண பேதங்களாலும் பிரகாசிக்கிறாள்.

வாசனா விமர்சத்தால் இந்த பிறவி அடைந்திருக்கும் ஜீவன் தன் பிறவியை ஸபலமாக்கிக்கொள்ள அவளை தோத்ததரிக்க வேண்டியவனாக இருக்கிறான். அவளுடைய நாம ஜபத்தினாலோ, அவளுடைய மஹாமந்தர ஜப ஸித்தியினாலோ, அவளுடைய ஸ்வரூப தர்சன பாக்கியத்தினாலோ குருவருளால் இப்பிறவி நோயைத் தீர்த்துக்கொள்கிறான். நீ எவ்வழியில் ஆராதித்தாலும் அவ்வழியில் அவள் உன்னை நடத்திச் செல்கிறாள். ஸாதகன் செய்யும் தீவ்ரபயிற்சியின் பெருமையினாலே, அவளை அறிந்து, அவளதுகருணையில் சிறந்து, தன் அஞ்ஞான இருட்டை போக்கிக்கொண்டு, ஒருவராலுமே மீறமுடியாத அவளது ஆணைகளுக்கு உட்பட்டு, எல்லாம் அவள் உறைவிடங்களாக இருந்தபோதிலும் ஒருமனப்பட அவளது ஸான்னிக்யத்தை ஸ்ரீசக்ரத்தில் கொண்டு ஸம்வித் ஸ்வரூபமான ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி ஸ்வரூபமாய் அவனுக்கு நலம் நல்குகிறாள். ஸாதகனை அது பரம மங்களமான ஒரு நிலையில் அமைக்கிறது. மலரும், மணமும், சொல்லும், பொருளும், அக்னியும், உஷ்ணமும் பிரிக்கமுடியாதது போல சிவத்தையும், சக்தியையும் பிரிக்கமுடியாத ஒரே

வடிவினளான ஸௌந்தர்யமான ஸ்ரீலலிதையை உன் மனதில் கண்டுகண்டு உள்ளம் நெக்குருகி அதனால் உடல் புளகாங்கிதமடைந்து ஒருமைப்பட்டு நிற்கும் ஒரு உத்தமவேளை ஸாதகனுக்கு எது ஸத்தியமாய் ஸித்தித்துக் கொடுக்குமோ அப்படிப்பட்ட குருசரணக்ருபாபலத்தை

வேண்டி குவலயத்தில் இக்குணங்கள் சிறக்கும்படியான ஒரு நிலை அருட்சக்தியால் அமைகிறது.

1. ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமங்களுக்கு மிக விரிவான தத்வார்த்தமான உரை ஸ்ரீபாஸ்கரராயமஹியால் செய்யப்பட்டுள்ளது. (ஸௌபாக்யபாஸ்கரம்) அதனை தமிழில் விளங்கிக்கொள்ள, ஸ்ரீஜி.வி.கணேசய்யர் என்பவர் உரை உள்ளது. மற்றும் அனேக உரைகளும் வெளிவந்துள்ளன.

2. ஸ்ரீலலிதாத்ரிசதி நாமபாஷ்யத்திற்கு ஸ்ரீபகவத்பாதர்கள் உரை கண்டிருக்கிறார். இதனை தமிழில் ஸ்ரீ சிதானந்த நாதர் விளக்கமாக எழுதியுள்ளார்கள்.

3. ஸ்ரீஆƒசர்யாஷ்டோத்தரம் என்பதற்கு இதுவரை உரை இருப்பதாக அடியேனுக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் உபயோகம் பற்றி தந்த்ரங்களில் விளக்கமாக உள்ளன. ஸுவாஸினி பூஜா தத்வம் என்றபடி அடியேன் சென்ற 1978 ல் எழுதிய கட்டுரையில் சில தத்வங்கள் வெளியிடப்பட்டன. (அவைகளில் சில ஸுவாஸினி பூஜையில் விளக்கப்பட்டுள்ளன).

பொதுவாக அர்ச்சனை என்பதே நிதித்யாஸன ஸமாதிவடிவமான உபாஸனம் என்பதே இங்கு தெளியவேண்டியதாகும்.

அர்ச்சனைகள் செய்வதற்கு அவளே மூலம்!
அர்ச்சனைகள் என்பதிங்கு அகண்ட வ்ருத்தி!
அர்ச்சனையால் அகன்றுவிடும் அகங்கார புத்தி!
அர்ச்சனைகள் செய்துவிட்டால் அதுவே முக்தி!
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:08 am

ஸ்ரீதூபதீப ஸுநைவேத்ய ஸந்துதுஷ்டாய நமோ நமஃ


வாமஸ்து ததா தூபமக்ரே வா நது தக்ஷிணே ஐ
தீபம் தக்ஷிணதோ தத்யாத் புரதோ வா ந வாமதஃ ஐஐ

தூபம் தீப உபசாரங்கள் என்பது ஸுவாஸனை அடையவும், அந்தகார நீக்கத்திற்கெனவும் தத்வார்த்தமாக கூறப்படுவது யாவரும் அறிந்த ஒன்று. பாவனோபநிஷதத்திலும் விரிவாக இதன் பொருள் கூறப்பட்டுள்ளது. பொதுவாக சப்தாதி பஞ்சதன்மாத்ராவிஷயங்களும் மனஸினுடைய ஒருமைப்பட்ட தன்மையோடு ஸதா பிரம்ம வடிவத்தில் பொருத்துவதே தூபமாம். அக்னியில் போட்ட வாஸனைப்பொருட்கள் அக்னியுடன் சேர்ந்து ஒன்றாக ஆவதுபோலாம். ஞான வாசம் மிகநீண்ட தூரம் போகுமல்லவா. வ்ருத்தி ஞானத்தால் உள்-வெளி என்றபடி வ்யாபித்த இருளை தீபப்ரகாசம் நாசம் செய்கிறது என்பதே தீபத்தின் தத்துவமாம். விரிவான நவாவரண பூஜையில் இந்த உபசாரங்களை பாவனையாக செய்யாமல் நேரடியாக செய்யவேண்டும் என்பர்.

ஐந்தான பூதங்கள் அனைத்தும் அவளே!
ஐந்திலே ஒன்றாகும் அப்புவின் மூலம்!
ருசியான நெய்வேத்யம் அர்ப்பணம் செய்து
பசியாகும் வ்ருத்திகளை யாகம் செய்யி!

கி



பஞ்சபூதங்களில் ஜல தத்வமேதான் நைவேத்யமாம். ஸாதகன் ஸ்வசித்தனானதினாலே - இவன் பசியில்லாது உணவு உண்ட நிலையில் - த்ருப்தியிலே அமைந்துவிட்டதனாலே இவ்வாறு பஞ்சபூத ஜல தத்வமே உணவாகி விடுகிறது என்பது உபசார

கண்டத்தில் விளக்கப்பட்டது. எனவே அதே தத்வங்களின் ரஸனையோடு இங்கு இஹபரஸௌக்யம் அனைத்தையும் ஒருங்கே கொடுக்கும் காமதேனு வித்யையால் ( ஓம் க்லீம் காமதுகே...) நைவேத்ய ஜாதங்களை அபிமந்த்ரணம் செய்வதும், அவைகள் அனைத்தையும் வித்யாமயமாக்கவேதான் விசேஷார்க்கிய பிந்துக்களால் ப்ரோக்ஷணம் செய்தலும், ப்ராணாதி பஞ்சமுத்ரைகளினாலே - சைதன்ய வஸ்து ஏகீ கரணம் ஏற்படச்செய்தலும் இங்கு நடைபெறுகிறது.

யாமளத்தில் -
நைவேத்யம் தக்ஷிணே பாகேபுரதோ வானப்ருஷ்டதஃ!
பக்வம் ச தேவதாவாமே ஆமான்னம் தேவ தக்ஷிணம்.!!

கி


இந்த குலதீபம் என்பதை மும்முறை தேவிக்கு முன்பு சுற்றி இதனை நிவேதிக்கவேண்டும் என்பது அந்த ஸ்லோகத்தின் பொருளால் தெரிகிறது. மற்று அதன் வடிவம் அது எதனால் செய்யப்பட்டது, எவ்வாறு ஜ்வலிப்பிப்பது என்பதெல்லாம் குருவாக்கியமாக உணரவேணும் என்பதாம். இங்கு அதன் விளக்கம் எதுவும் எழுதப்படவில்லை. அனுஷ்டான ஸம்ப்ரதாயமாக குருவின் வழிப்படிசெய்வதே இங்கு பத்ததியாம். இதிலிருந்து இந்த குலதீபஉபசாரத்தில் மிகுந்த தத்வரஸனை உள்ளது என உணரலாம். ஒருவாறு காணுவோம்.

விமர்மச சக்தி விளம்பனமான தாம்பூல உபசாரம் செய்தபிறகு அடுத்தது இந்த குலதீபம். குலஉத்தீர்ணம் செய்யவந்த சித்சக்தி மூலாதாரத்திலிருந்து ஸஹஸ்ராரம் முடிய ப்ரகாசித்து கொண்டிருக்கிற தேஜோ தண்டரூபமான தேஜஸை ஸாதகனுடைய அகண்டாகார வ்ருத்தி ஞானம் அனுவப்படுவதாலே அந்த ஆத்ம ஜோதியை மஹத்தேஜஸான பரம்பொருட்தத்வத்தோடு ஏகீகரணப்படுத்தும் ஒரு


தன்மையை ஒரு பாவத்தை இந்த குலதீபம் உணர்த்துகிறது. அகண்டாகாரவ்ருத்தி ஞானமாகிய விசேஷார்க்கியத்தை ஜ்வலிப்பிக்கசெய்வதினாலே இது ஒன்றாகஆவதை உணரவே மும்முறை தேவியின் எதிரில் இதனை ஆர்த்தி செய்கிறோம். மேலும் இதில் காணும் இன்னுமுள ரஹஸ்ய தத்வங்கள் குருமுகாதன்றி ரேணுவின் எழுத்தில் உணரவாய்ப்பில்லை என்பதை மட்டும் இங்கு கூறி அடுத்த உபசாரத்துக்கு செல்வோம்.

ஆத்மாவும் அம்பிகையும் அகிலம் மூன்றும்
தத்துவமாய்க் காணுகையில் குலத்தில் ஒன்றே!
வித்தகராம் குரு குலத்தில் வந்த தீபம்
முத்திவரை வந்து நிற்கும் ஞான தீபம்!
கி


ஆத்மாவிலே ஸதாகால ஜோதியாய் தானேபிரகாசித்துக் கொண்டிருப்பது ஆத்மப்ரகாசமாகிய ஸ்வயம்ஜோதி. இது தான் ப்ரஹ்மாபின்னமாய் அகண்டமாய் ப்ரகாசிக்கும் மஹாப்ரகாசம் நதத்ர ஸூர்யோ பாதி ந சந்தர தாரகம் . . . என்று ச்ருதி கூறுவது இதையே. இந்த இரண்டு ப்ரகாசங்களும் ஏகீகரணப்படுவதே, பேதமறக்கலப்பதே ஞானம். கற்பூரம் எவ்வாறு மீதியில்லாமல் எரிந்துவிடுகிறதோ அதைப்போல அகண்டாகாரவ்ருத்தி வடிவமான மஹாப்ரகாசத்திலே இந்த நாமரூபாத்மகமான, பேதவடிவமான ப்ரபஞ்சம் தன்னுடைய இருப்பே தெரியாதவாறு மூலகாரணத்தோடு நாசமடைந்துவிடுகிறது. இந்த தெளிவுதான் கற்பூரநீராஜனத்தின் தத்வார்த்தமாம்.

மீதியின்றி எரிந்துநிற்கும் கற்பூரம் போல
மீதியின்றி மறைந்துவிடும் மனதின் ஆட்டம்!
ஆதியின்றி அந்தமின்றி அனைத்தும் கரைய
ஆதியாகும் நீராஜன உபசாரம் வேண்டும்!
கி



மனனம் செய்பவனை சோகக்கடலிருந்து கடக்கச்செய்வது எதுவோ அதற்கு மந்த்ரம் என்றுபெயர். இதுவே ஜீவப்ரஹ்மைக்யத்தின் உள்ளார்த்தமான மஹாவாக்ய வடிவமாகும்.

ப்ரஹ்மவித்தை என்பது ஒருமரம். ஆத்ம கோசரவ்ருத்திகள் - அதாவது ஆத்மாவுக்கு அனுசரணையான செயல்கள் - என்பது அதன் புஷ்பங்கள். அபரோக்ஷ ஞானம் - உபாதியற்ற ஞானமே அதன் பழம். இதனால் இப்போது தன்னுடைய மஹிமையிலே விளங்கும் ப்ரஹ்மாபின்ன கூடஸ்த வடிவினளான பராசக்திக்கு -சித்ருபிணிக்கு புஷ்பாத்மகமாக உள்ள வேதமந்த்ரங்களினாலே அஞ்சலி செய்வதே இதன் தத்வார்த்தமாம்.

வித்தையாகும் மரத்தினிலே விளைந்த புஷ்பம்!
புத்தியிலே பிறக்கின்ற மந்த்ர புஷ்பம்!
சக்தியிலே சிறக்கின்ற அபரோக்ஷ ஞானம்!
சித்ரூப தேவதைக்கு சீராய் த்ருவோம்!
கி


ஸ்ரீமஹாகாமகலா(அ)பிக்ய ஸ்வரூபாய நமோ நமஃ


வேதமாதா வடிவமான புஷ்பாஞ்ஜலி செய்தபின் இங்கு ஆத்மாவுக்கு வேறுபடாத பரசித் தானே ஒளி விட்டு விளங்குகிறது. இதுவே ஜீவப்ரஹ்மைக்யம். மேலும் இங்கு இதே வடிவமான காமகலையை த்யானிக்கவும், அதன் விமர்சத்தை விளங்கிக்கொள்ளவும் இருக்கிறோம்.

அ என்பது ப்ரகாச வடிவ நிஷ்களமான பரசிவம். அல்லது காமேƒவரி வடிவம்.
ஹ என்பது விமர்சவடிவமான சித்சக்தி சைதன்யம். அல்லது

காமேƒவரி வடிவம்.

இந்த இரண்டின் கூடலால் தோன்றும் அஹம் என்ற பதம் சிவசக்தி ஸாமரஸ்யத்தையும் ஜீவப்ரஹ்மைக்யத்தையும் ஒரு சேரகுறிப்பிடுகிறது. இதுவே ஸ்ருஷ்டிகாமகலை என்ற பெயரில் இந்த அகண்ட உற்பத்திக்கு காரணமாயும் உற்பத்தியாகி விளங்கிக்கொண்டிருக்கும் ஜீவஸ்வசைதன்ய ப்ரஹ்மமாயும், ( நான்) அஹம் என்று உள்ளதான தத்வத்தை இங்கு நமக்கு நாத மண்டலம் உணர்விக்கிறது. ( இது பற்றி இவ்வாசிரியரின் தனிக்கட்டுரை ச்ருஷ்டி காமகலை என்பது தனியே தத்தப்ரஸாதம் மாத இதழில் வெளியாகியுள்ளது).

இந்த காமகலை ஸ்தூலம், ஸூக்ஷ்மம் என இரு நிலையில் ப்ரதிபாதிக்கப்படுகிறது. இதனை ஸ்தூலமாக முகம், குசயுகளம், யோனி என ஸ்தூல அவயவங்களால் ப்ரபஞ்ச காமகலையை ஜீவனுக்கு உணர்த்துவான்வேண்டி தந்த்ரங்களிலும் கிரந்தங்களிலும் இவ்விளக்கம் பரக்கப்பேசப்படுகிறது. ஸூக்ஷ்மகாமகலை என்பதைப்பொருத்து ஜீவப்ரஹ்மைக்யானுஸந்தானம் செய்வதாகும் என தத்வம் தெரிகிறது.

இதிலே ஸ்ருஷ்டிக்கு முன்பு உள்ளதும், ஸ்ருஷ்டிக்கு காரணமானதுமான ப்ரஹ்மசைதன்யமே இங்கு யோனி என்று பெயர் பெறுகிறது. சிருஷ்டிக்கப்பட்ட பொருள் ஸ்தூலம் ஸூக்ஷ்மம் என இரு நிலையில் விளங்கும் வைபவமே இருகுசங்களாக த்யானிக்கப்படுகிறது.

கூடஸ்த சைதன்யமான ப்ரஹ்மம் ஜீவனுடைய அந்தக்கரணத்தில் ப்ரதிபலிக்கும் காலத்தில் ஜீவன் சிதாபாஸன் என்ற நிலையில் பிந்துவானது முகம் எனத்யானிக்கப்படுகிறது. (ப்ரதிபலன காரியத்துக்குத் துணை முகமல்லவா.)

இவ்வாறு அஹம் என்ற காமகலை ஸாதகனுடைய மத்திம நிலையில் வழிப்பாட்டின் நிமித்தம் ஈம் என்ற ப்ரணவகலையாகி விளக்கம் தருகிறது. இந்த ப்ரணவம் - ரக்த, சுக்ல, மிச்ர,ஸம்வித் என்ற வடிவிலே நின்று துரீயாக்ஷரமாய் துரீய நிலையில் ஐக்ய

உணர்வைப்புரியவைக்கிறது.

இந்த காமகலா என்ற பதத்தை கடபயாதி ஸங்க்யா ரீதியாகவும் அக்ஷரங்களாகவும் கணக்குசெய்த காலத்தில் இவ்வாறு விளக்கம் கிடைக்கிறது. அதனை ஸத்குருவருளால் சிந்திப்போம்.

1.காமகலா - அக்ஷரஎண்ணிக்கை
க+அ+அ = கா 3
ம்+அ = ம 2
க் + அ = க 2
ல் + அ +அ = லா 3 =10

2. காமகலா - கடபயாதி எண்ணிக்கை
கா 1 ம 5 க 1
லா 3 =10

3. ப்ரக்ருதி
ப்ர 2
க்ரு 2
தி 6 =10

4. யோனி
ய 1
ன 0 =10

காமகலா பதத்தை பிரித்தும் ஸமஷ்டியாகவும், கணக்குப்படுத்திய காலத்தில் 10 என்று பொதுவாக வருகிறது. இந்த 10ல் 0என்பது பூரணமானப்ரஹ்மம் 1 என்பது சக்தி. எவ்வாறெனில் ஐNஊஐNஐகூஉ ஆன 0 எப்போதும்பூரணமான பொருளே, அதற்கு மதிப்புக்கொடுக்கும் காலத்தில் அதன் முன்புறம் அமையும் எண்களின் மதிப்பைப்பொறுத்து அதன்பொருள் அமையுமல்லவா. இதிலிருந்து 0 ஆன ப்ரஹ்மத்திற்கு முன்பே அதன் ஸ்புரணசக்திவ்ருத்தியானது அதனுள்ளேயே அந்தர்கதமாக விளங்கியிருந்தது எனஅறியலாம்.
எனவே இதுவும் காமகலா தத்வத்தையே உணர்த்துகிறது. இவ்வாறு வெளி, உள் என்ற இருநிலையிலும் காமகலாத்யான விளக்கத்தைக்கண்டானந்திக்க இங்கு வழிசெய்கிறது பத்ததி.

இதற்கு பத்ததியில் இரு ஸ்லோகங்கள் படனத்துக்கு உள்ளது. அதில் ஒன்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் செய்தது. சிலஸம்ப்ரதாயங்களில் இங்கு காமகலா நியாஸமும், ஜபமும் உள்ளது. எப்படிசெய்த போதிலும் தத்வம் உணர்வதே காலச்சிறந்ததாம்.

அஹமென்ற தத்வந்தான் காமகலா!
அருள் என்ற போதந்தரும் ஆத்ம கலா!
தஹராகாச நிலை இப் பூமியெல்லாம்!
தீரனாக விளங்கிடுவான் இத் தரணியெல்லாம்!
மஹாவாக்ய மனனந்தான் மனதிலெலாம்!
மங்களத்தினடையாளம் மாதரெலாம்!
முககுசங்கள்யோனியென மூன்று நிலை!
மூன்றான ஸச்சிதானந்த வலை!

கி



செயல்கள் என்கிற விருத்தி ஞானத்தை பஞ்சேந்திரிய கரண்டிகளினாலே எடுத்து ஆத்மாவாகிய சிதக்னியிலே ஹோமம் செய்வது என்பதே பூஜையாம். இதன் திடபாவனைக்கே இங்கு

பிரத்யக்ஷ அக்னியிலே ஹோமம் செய்யப்படுகிறது. (இதன்வேதாந்த தத்வம் - ஸ்ரீவித்யா உபாஸக தர்மங்கள் என்ற ஸபாவெளியீடான எங்கள் நூலில் விளக்கமாகக் காணலாம்).

பூஜா மண்டபத்தின் ஈசானதிக்கில் ஹோமகுண்டம் அமைக்கப்பட் வேண்டும் என்கிறது பத்ததி. எப்போது கல்பம் பொதுப்படையாக இங்கு குறிப்பிடாமல் ஒரு திசையை குறிப்பிடுகிறதோ அதற்கு விசேட காரணம் இருக்கக்கூடும் என ஆராய்கிறோம். ஸஹஸ்ராரமண்டலம் 1000 இதழ்கள் கொண்டது. இதில் எட்டுதிக்குகளில் திக்குக்கு 125 இதழ்கள்வீதம் அமையும். மனதின் பரிபாகமான இதில் - ஜீவன் தன்மனோவ்ருத்திகளோடு சஞ்சரிக்கிறான். அவ்வாறுவரும் போது ஈசானதிக்கில் இருக்கும் காலம் ஜீவனுக்கு த்யாகபுத்தியும் தானபுத்தியும் வருகிறது. ஹம்ஸோபநிஷத்தில் இதன் விளக்கம் காணலாம்.

ஸஹஸ்ராரகமலத்தைச்சுற்றி சிவசக்தி ரூபமான ஹம்ஸம் சலனம் ஏற்படுத்திக் கொண்டு சுற்றிவருகிறது.

1. பூர்வத்தில் -(கிழக்கு) புண்ணியச்செயல்கள்
2. அக்னியில்- (தென்கிழக்கு) தூக்கம் சோம்பல் முதலியன
3. யமதிக்கு - (தெற்கு) அஸுர எண்ணங்கள்
4. நிருருதி - (தென்மேற்கு) பாபகாரியத்தூண்டல்
5. வாயுவில் - (மேற்கு) உலகில் பல பாகங்களில் அலைதல்
6. வருணனில்- ( வடமேற்கு) விளையாட்டில் மோஹம்
7. குபேரனில்- (வடக்கு) ஸுகாதிகளில் விருப்பம்
8. ஈசானத்தில் -(வடகிழக்கு) திரவியதானத்தில் மனம் ஈடுபடல் மற்றும் தியாகபுத்தி


இந்த யாகமந்திரமே ஒரு சுத்தஉட்பொறியாக இருப்பதினால் இந்தஈசானதிக்கில் தியாக எண்ணஎழுச்சி ஏற்படுவது இயல்பே. எனவேதான் ஈசானதிக்கில் ஸ்தண்டிலம் அமைகிறது என உணருகிறோம். மேலும் அம்ருதநிலையான நித்யத்துவம் இந்த

ஸாதகன் அடைய வேணுமானால் பிரபஞ்ச விருத்தி ஞானத்தை இவன் தியாகம் செய்தால் ஒழிய அமையாது. இதற்கு, நகர்மணா ந ப்ரஜயா. . . . . என்ற வேதமே ப்ரமாணம்.

ஞானயாக பயிற்சியிலே இந்த ஸாதகன் நவாவரண தேவதைகள் அனைவரையும் ஸமஷ்டி நிலையில் நவவிருத்திகளாக அனுஸந்தானம் செய்துவந்து பூஜாதர்ப்பணங்களினால் அதனை உறுதிசெய்துகொண்டு இவ்விடத்தில் அக்னிமுகத்திலும் மேற்கண்ட விருத்திகளை ஹோமம் செய்கிறான். இந்த ஹோமத்தின் முடிவில் பூர்ணாஹுதியாக அளிக்கும் வ்ருத்தி - வாஸனாக்ஷய மனோநாசவடிவம். பாவனோபநிஷத்தும் இதையே உறுதிசெய்கிறது. அஹம் த்வம் அஸ்திநாஸ்தி கர்த்தவ்யம் அகர்த்தவ்யம் உபாஸிதவ்யாமிதி விகல்பானாம் ஆத்மனிவிலாபனம் ஹோமஃ! இந்த பஹிர்யாகமான ஸ்ரீவித்யாஹோமமே ஸாதகனுடைய ஜீவபாவத்தை ஒழிக்கும் மஹாயாகமாக ஆகிறது.

ஹோமத்ரவ்யம் எவ்வவற்றை அக்னியின் எந்தஎந்த நாக்கில் செய்யப்படவேணுமென்று கூறப்படுகிறது.

அக்னியின் ஏழுநாக்குகள் ஹோமத்ரவ்யங்கள்

1. ஹிரண்யா - ஏதாம்ஸி
2. ககனா(கனகா) - சரு, க்ருதம் (ஸர்வம்)
3. பஹுரூபா - ஸித்தாஸித்து
4. ரக்தா - யவா
5. க்ருஷ்ணா - லாஜா
6. ஸுப்ரபா - ஸக்துபிஃ
7. அதிரக்தா -திலா

எனதுனதென்றதெலாம் தீயில் போட்டு
ஈசான திக்கினிலே இந்த த்யாகம்!
கனவாக மறைந்துவிடும் காசினிக் காக்ஷி!
துணையாக நிற்பவளே புத்தி சாக்ஷி!



தனதென்ற எண்ணத்தை த்யாகம் செய்தால்
மனமென்ற குண்டத்தில் மாதா எழுவாள்!
குணமென்ற அக்னியிலே ஹவிஸைப் போடு!
கூடிவிடும் எளிதாக கைவல்ய வீடு!
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:09 am

ஸ்ரீபலிதான குருஸ்தோத்ர பரித்ருப்தாயதே நமோ நமஃ


ஆத்ம ஞானிகளுக்கு பந்தம் இல்லை. போக மோக்ஷத்துக்குத் தடையாக உள்ளது விக்ஷேபம். (என்கிற விபரீத புத்தி) ஞான அடைவுக்கு முன் இது ஆவரணஸஹித விக்ஷேபமாக இருந்தது. ஞான அடைவுக்கு பின்னோ ஆவரணஹித விக்ஷேபமாக உள்ளது. இவ்வாறான இரு வேறு நிலைகளை உணர இந்த தோற்றத்துக்கு காரணமாக அமைகிறது - மனமல்லவா. அக்ஞான ஆவ்ருதமான ப்ரபஞ்சத்தோற்றத்துக்கும் அதற்கு உபாதியாகவுள்ள கார்ய காரண ரூபமான சரீரத்துக்கும் இந்த மனமே காரணம் என்பது ப்ரஸித்தம். எனவே இந்த மன சுத்திக்காகவே இங்கு பலிதான உபசாரம் நடைபெறுகிறது. பூமி, அந்தரிக்ஷம், ஆகாயம் என்ற முவ்விடங்களிலும் உள்ள விக்னங்கள் நிவர்த்திக்கப்படவேண்டும். அதன் பாவனாதார்ட்யத்துக்காகவே குரூரத்ருஷ்டியும், தாளத்ரயமும் விரட்டும் பாவனையும் இங்கு உள்ளது.

ஸாதகனின் மனஸில் எற்படுகிற ஆவரணஸஹித விஷேப பந்தங்களை, ப்ரபஞ்ச நாமரூப நாட்டத்தை ஒழித்து அவ்வாறு ஒழிப்பதை விக்ன காரியங்களான பூதங்களுக்குத் தந்து ஒழித்து அவைகளை முற்றும் மனதிடமிருந்து துரத்தி விடுதல்தான் இதன் தத்வார்த்தம் என அறிகிறோம். இதற்கே தாமிரபாத்ரமும் வ்யாபகமண்டலமும், நைவேத்ய ஜாலங்களில் சிறிது சிறிது இதில் போட்டு, நைவேத்தியம் செய்த விசேஷார்க்கியத்தையும் இதில் விட்டு மேலும் பாத்திரத்தில் வெறும் தீர்த்தமும் விட்டு பின் இடது கை தத்வமுத்ரையில் வலதுகையில் உத்தரணி தீர்த்தத்தினால் மந்திரம் சொல்லி ஜலம் விடுதல் இங்கு கிரியா பாகம் என் ஸம்ப்ரதாயம் கூறும்.

ஆவரண விக்ஷேப பந்தம் நீங்கி
அகற்றிவிடு விக்னமதை பலிதானத்தால்!
தாமிர பாத்திரத்தில் துளிதுளி இட்டு
தத்துவத்தை அறிந்துகொள்ளுதீர்த்தம் விட்டு!
கி



மானஸிக ஜபமே உத்தமாதிகாரிகளின் லக்ஷணமாக இருப்பதினாலே இங்கு இதனைப்பற்றி மட்டுமே விமர்சிக்கிறோம். இந்த ப்ரபஞ்சத்திலே ஸாதகனுக்கு பாஹ்ய ப்ரவ்ருத்திகள் அனேக முண்டு. அவற்றிற்குக்காரணம் ஞான கர்மஇந்தரியங்களே. இதன் மத்தியில் இந்த ப்ரவ்ருத்திகளை கொஞ்சம் கூட லக்ஷ்யம் செய்யாமல் அவற்றை ஒதுக்கிவிட்டு உள்ளிலே நாதானுஸந்தானம் செய்யவேணும். மூலாதாரத்திலிருந்து மூண்டெழும் நாதம் அநாஹதத்தையடைந்து அங்கிருந்து சப்தப்ரஹ்மமாக ஆகி விசுத்தியிலே அக்ஷரங்களாக வடிவெடுத்து வாக்கில் வைகரீயாக வெளிவருகிறது.

எனவே வைகரீ வடிவமான ஜபத்தினாலே எந்த மந்த்ரத்தை ஸாதகன் ஜபிக்கிறானோ அந்த மந்த்ரம் ஒன்றே அவனுக்கு ஸித்திக்கும். ஆனால் இந்த அநாஹத நாதானுஸந்தான வைபவத்தினாலே ஸகல மந்த்ர ஸித்தியும் ஏற்பட்டு பாஹ்ய ப்ரவ்ருத்தியிலே இவன் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் கூட அதுஹிதமாக ஆகி அபரோக்ஷானுபூதி அடைகிறான். இதுவே ஜபமாகும் என்பது தத்வமாம். ( இங்கு ஜபத்தை ஸாதகனும் கூடியிருக்கும் ஸாமயிகர்களும் இந்த நேரம் யதாசக்தி ஆவர்த்திசெய்தல் சாலச்சிறந்ததாம். தபஸின் நேரம் இது என உணரவேணும்.)

ஜபமென்ற தவத்தைதான் ஜகத்தில் செய்து!
ஜன்மமரண சக்ரத்தை நீக்கிக் கொள்ளு!
ஜபமென்றால் மனதாலே மனனம் செய்தல்!
தவமென்றால் மனமதனை தூய்மை செய்தல்!
அபவர்க்கம் அருளுவது ஆத்ம த்யானம்!
அதுவேதான் ஜபமென்னும் மந்த்ர ஸித்தி!
அவதானம் செய்வதெலாம் மறையும் காக்ஷி!
ஆத்மாவில் நிலைத்துவிடல் ஜபத்தின் உத்தி!
கி



தனக்கென்று வேறு இல்லாத தனியொரு சித்சக்தியை அதுவே ஸாதகனான உணர்வாகி இருக்கும் சக்திநிலையில் அதனை ஸ்தோத்ரம் செய்யக்கூறுகிறது பத்ததி. மேலும் அம்பாள் ஸ்தோத்ரப்ரியா (ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் 927 )அல்லவா.

ஸர்வஸித்திகரஸ்தோத்ரம் என்ற 12 துதிகள் இதில் உள்ளன. இவைகளின் மிகவிரிவான அர்த்தவிசாரம் நித்யா ஷோடசிகார்ணவம் அம்ருதானந்த வ்யாக்யானத்தில் காணலாம். ஆனாலும் இந்த ஸ்தோத்ரகாலம் இங்கு உள்ளதன் தத்வம் என்ன? ஆத்மாபின்ன சித்சக்திக்கும், ப்ரஹ்மாபின்ன சித்சக்திக்கும் அபேதம் காணுமுகத்தான் ஸ்தோத்ரம் கல்பிக்கப்பட்டு, உபாஸ்யமாகும் சித்சக்தியினுடைய லக்ஷ்ணங்களை அனுஸந்தானம் செய்தல் என்பதே தத்வம் என உணரவேண்டும்.

வித்தைக்கு வினயந்தான் சிறந்த படி!
லலிதைக்கு ப்ரியமான துதியைப் படி!
முத்திக்கு வித்தாகும் மோன தடி!
மூழ்கிவிடு மோனத்தில் நிலைத்த படி!
கி







ஸ்ரீஸுவாஸினி ஸுபூஜாதி ஸந்துஷ்டாய நமோ நமஃ


ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தேவியை ஸுவாஸினி என்றும் ஸுவாஸின்யர்ச்சனப்ரீதா என்றும் கூறுவது நாமறிந்ததே. ஜீவதசையோடுகூடிய பதியை உடையவளே ஸுவாஸினி எனப்படுபவள். பெண்ணிற்கு தன் கணவனுடன் கூடி வாழும் நல்வாழ்வே தான் ஸுவாஸம். இவ்வாறான ஸுவாஸினிகளான ஸ்திரீகளால் செய்யப்படும் அர்ச்சனை பூஜை முதலியவற்றால் தேவி மகிழ்ச்சி அடைகிறாள். மற்றும் இந்த ஸ்திரீகளான ஸுவாஸினிகளையே தேவியாக (அபேதமாகக்கண்டு) பாவித்து அவர்களை பூஜிப்பதாலும் அவளுக்கு மகிழ்ச்சியே.

ப்ரஹ்மம் என்பது நாசமில்லாததாகவும், நித்யமாகவும் உள்ளது. அதனை அசைவித்த சித்சக்தியே நித்யஸுவாஸினி எனப்படுகிறாள். ஜீவதசையான கௌணஸுவாஸினிகளிடத்திலே ப்ரதான ஸுவாஸினியான நித்ய ஸுவாஸினியான சித்சக்தியை அபேதமாக பாவித்தல் என்கிற உபசாரம்தான் இங்கு ஸுவாஸினி பூஜை என்பதன் தத்வார்த்தம்.

இந்த பூஜைக்கு ஸாதகனின் ஸ்வசக்தியே ப்ரதானமாக பூஜிப்பது பெரும்பாலான உபாஸகர்களின் ஸம்ப்ரதாயமாக உள்ளது. மேலும் இந்த பூஜைக்கு அனுகுணமான கௌண ஸுவாஸினிகள் யார்? அவர்களை தத்வவாஸனையோடு, எவ்வாறு பூஜிப்பது? என்பதெல்லாம் ஸத்குருமுகாது தெளிந்து கொள்ளவேண்டியது முறையானதால் நாம் அதனை பற்றி இங்கு ஆராய்வதில்லை. ஆனால் இந்த உபசாரத்தில் உள்ள அளிபாத்ரதானம் என்ற இடத்தைமட்டும் சற்று அதன் அர்த்தானுஸந்தானம் செய்கிறோம். மேலும் பத்ததியில் காணப்படுகிற ஆƒசர்யாஷ்டோத்தரம் என்ற அர்ச்சனையின் பூர்வாங்க ஸ்லோகங்களில் இந்த பூஜையின் சில தத்வரஹஸ்யங்கள் கூறப்பட்டுள்ளதை இவண் தேவையான விதத்தில் ஸாதகர்களுக்கு எழுதலாயிற்று மேலும் விளக்கம் ஸத்குருதான் கொடுக்க வல்லவர் என்பதை உணரவேணும். முதலில் அளிபாத்ரதானம் பார்ப்போம்.

ஸுவாஸினி பூஜையில் ஸுவாஸினி தன்ஸம்ப்ரதாயப்

படியான பூஜாதர்ப்பணங்களைச் செய்தபின் அவளிடத்தில் பூஜையின் ஏகீகரணத்தின் பொருட்டு செய்யப்படும் ப்ரத்யக்ஷ பூஜா தர்ப்பணங்களுக்குபின் இந்த அளிபாத்ரதானம் செய்யப்படுகிறது. இந்த ஸ்லோகத்தின் பொருளைக்காணுவோம்.

யே ஸுபகயே, கல்யாணியே, ஸ்வயம்ப்ரகாசவடிவினளே. மாம்ஸத்தோடு கூடிய இந்த அம்ருதமானது உங்கள் பொருட்டுத்தரப்பட்டது. இதை தாங்கள் ஸ்வீகரித்துக்கொண்டு காமக்ரோதாதி விரோதிகளை ஜயித்து அமையும் நித்யானந்தமான பெரும் வாழ்வை எனக்கு அருள்வாயாக.

கேள்வி . இந்த காமக்ரோதாதிகள் எதனால் உண்டாகின்றன?
பதில் . நாமரூபபேத நாட்டத்தினால் .
கேள்வி . இதற்குக் காரணம் என்ன?
பதில் . அக்ஞானம் தான் மூலகாரணம்.
கேள்வி . இந்த அக்ஞானம் எங்குள்ளது?
பதில் . இந்த சித்சக்தியினிடமே தான் அத்யஸ்தமாய் உள்ளது.
கேள்வி . இது எப்போது நாசமாகும்?
பதில் . இந்த அத்யஸ்த அக்ஞானம் அதிஷ்டான ஞானத்தினால் நாசமாகும்.
(அத்யஸ்தம் - பாம்பு, அதிஷ்டானம் - கயறு)

எனவே பேத காரணமான இந்த நாபரூபங்களும் கூடவே மூல அக்ஞானமும் நாசமான நிலையில் நித்யானந்த வாழ்வான யசƒ தானாகவே ஏற்படுகிறது. இந்த தத்வத்தை ஸாதகன் உணருவான் வேண்டித்தான் ஸ்தூலமான அம்ருதபாத்ரதானம் இங்கு நடைபெறுகிறது. எனவே அளிக்கப்பட்ட வித்யா ரூபமான அம்ருதத்தில் உள்ள நாமரூப அம்சங்களை தான் ஸ்வீகரித்துக் கொண்டு அதிலே எஞ்சிய ஸச்சிதானந்தங்களையே குழந்தையான இந்த ஸாதகனுக்கு ப்ரஹ்ம சக்தியான, சித்சக்தியான ஸுவாஸினி அனுக்ரஹிக்கிறாள்.

இவ்வாறான உயர்ந்த பாவனாக்ரியையாக இதனை ஸாதகன் உணர்ந்து பூஜிக்கும்போதுதான் இது மஹான்களின் கருத்தை ஒத்தாதாக ஆகும். இல்லையேல் இது ஸ்திரீவழிபாடாக ஆகிவிடுமே

தவிர ஸ்ரீ(வித்யா)வழிபாடாக ஆகாது என்பதை தெள்ளிதின்
உணரலாம்.

அடுத்ததாக ஆƒசர்யாஷ்டோத்தரசதநாமங்களின் பூர்வாங்க தத்வங்கள் ஸ்ரீஸத்குருவருளால் அருட்சக்திக்கு உணர்வாகி அருள்வாக்கினால் வெளிவந்தவைகளை இவண்(ஒரு பகுதியாக)எழுதியுள்ளேன். இதற்கான ஸ்தூலமான ப்ரமாணங்கள் அடியேனுக்குத்தெரியாது. குருவருளே ப்ரமாண தந்த்ரமாம். ஸாதகர்களுக்கு தத்வரஸனையும் பாவனையும் அவசியம் தேவை என்பதை இது ஒரளவு உணர்த்துவதால் இதனை இங்கு எழுதுவதாயிற்று.(ஆதாரக்ரந்தம் எதுவும் தெரியப்படுத்தினால் மிகவும் நன்றியுடையவனாவேன்.)

பத்ததியில் உள்ள அதிரஹஸ்யமான ஆனந்த தத்வங்களையெல்லாம் பராசக்தி புரிவிக்க அவளின் நல்லருளை வேண்டுகிறோம். ப்ரபஞ்ச வாழ்விலே ஈடுபட்டு, கோரஸம்ஸார வாழ்விலே சிக்கித்தடுமாறி கரைகாணா நிலையில் கதறி நிற்கும் ஜீவன்கள், தாங்கள் அம்மாதிரி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்காக தேவி சிவபெருமானிடத்திலே பலபல வினாக்கனை (ஜீவர்கள் சார்பிலே) விடுக்கிறாள். தேவியின் வினாவும், சிவனின் விடையுமாக அனேக தந்த்ரங்கள் ஆங்காங்கே உள்ளன. அதிலே அனேக தத்வரஹஸ்யங்கள் அமைந்துகிடக்கின்றன. அவைகள் ஆச்சர்யகரமான நிலையில், ஆச்சர்யகரமான வேளையில் சேதனங்களுக்கு அருளால் புரியும். அருளால் புரியும் அற்புதக்கருத்துக்கள் ஆன்மாவுக்கு அருமை வழிகாட்டியாய் நின்று கடைத்தேற கருணை செய்கிறது. ஸம்வாதரூபமான இந்த சிவ- சக்தி தத்வம் தான் என்ன?

தேவி சக்தியின் கேள்வி-

சிவனே, எனக்கருளூம் சிவமே, எனக்கு இளகிய மனபரிபாகம் ஏற்பட்டுள்ளது. அது பிறர் பரிஹாஸம்செய்யும்நிலை அல்லவா. புக்தி முக்திக்கு வழிகாட்டியாக உள்ள உங்கள் வாக்கமிர்தத்தை நான் பலமுறை பருகியுள்ளேன். அதனால் இப்போது எந்தனுக்கு விஷயசுகங்கள் அற்றதான, ஸாரமானஅவா ஒன்றுளது. அதனை ஹே,

க்ருபாஸாகரனான பரசிவா, எனக்கு அருளுவிராக.

கர்மகட்டுப்பாட்டுடன் கூடிய ஜபதபாதிஉபாயங்கள் இல்லாததும், ஆனால் அவைகளினால் ஏற்படக்கூடிய ரஸானுபத்தை அருளக்கூடியதுமான எளியவழி ஒன்றினை எந்தனுக்கருளுவீராக. ககனத்தில் பிறந்து கதறிநிற்கும் ஜீவன்களுக்கு காட்டும் இந்த வழியில் உண்மை ததும்பி நிற்கவேணும். சொல்லிலும், செயல்களிலும் சுதந்திரத்தன்மை அமைந்திருக்கவேணும். இந்த ஜீவன்கள் கடுவழிகூறினால் அருகில் வரமாட்டார்கள். எளியவழி ஒன்றுகூறுங்கள். உண்மை சிவமான தாங்களே உபாயம் கூற இயலும். ஏனெனில் தாங்களின் வாக்கமிர்தத்தினால் விரிந்து நிற்கும் வேதம் தங்களால் படைக்கப்பட்ட கர்மகட்டுடன் கூடிய ஜீவன்களின் வாழும் வழியைக்கூறி அதனுடைய உட்பொருளே தாங்கள்தான் என்று பரக்கப்பேசுகின்றன அல்லவா.

சந்தத்தோடு கூடிய இந்த வேதம் சஞ்சலமனத்தானுக்கு சடுதியில் வராத ஒன்று. பரம் பொருள்தத்வத்தினை பாமரனும் உணரவேணும். வேதமொழியின் உட்பொருளை விடலையும் விளங்கிக்கொள்ள வேணும். பாவமும் பக்தியும் கொண்டொருவன் பவித்திரமாய் உணரவேண்டும். சொல்ல வேண்டிய காலத்தை சுருக்கிக்சொன்னேன். சொல்லவேண்டிய பொருளை விளக்கிச்சொன்னேன். இதற்கு விரிந்த விடையினை விடையேறி நீர் விளம்ப வேண்டும் கூறுவீர் என்றாள். (இதற்கு சக்தியின் உந்துதலால் சிவன் பேசுகிறான்.)

சிவனின் பதில் -

தேவி, கருணை கசியும் வாக்யங்களாய் இன்று என் செவியில் விழுகிறது என்றால் அதற்குக் காரணம் சக்தி இறங்கி பக்தி செய்யச் சொல்கிறாள் என்பதே. வினைகளுக்கு தக்கப்படி ஜீவான்மாக்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கடுவினை இருந்தால் கஷ்டப்பட்டும் நல்வினை இருந்தால் நன்றாய் அமைந்தும் ஒரு சுழற்சி தொடர்ந்து நடைப்பெற்றுவருவதொன்றுதானே. இதில் கோரஸம்ஸாரம், என்றும் சாந்தஸம்ஸாரம் என்றும் பிரிவுகண்டு அதிலே பரிவு எற்படக்காரணம் என்ன? ஓ புரிந்துகொண்டேன், சக்தியின் மனம் தான்பெண்என்ற

உணர்விலால்தான் இந்த இளகல் எனஎண்ணுகிறேன்.

கோரஸம்ஸாரத்தில் சிக்கித்தவிக்கும் பல ஜீவன்மாக்களுக்கு கரையேறும் வழிகாட்ட வேணும் என்ற கருணைத்திருநோக்கம் தாயான உனக்கு தோன்றிவிட்ட தென்றால் அதற்கு தந்தையான நானும் விலக்காகி நிற்பேனா? மாட்டேன். சொல்கிறேன் கேள்.

அன்றெரு நாள் சுத்த சிவமாகி சிவோஹம் பாவனையான சுத்தசிவமாகி, சின்முத்ரைகாட்டி, தென்திசைநோக்கி, கால்ஒன்றை மடக்கி, கருத்தொன்றில்வைத்து, கண்மூடி அமர்ந்தேன். எத்தனைநாள் இருந்தேனோ என்ற உணர்வு அசைத்தபோது சக்தி, பாராசக்தி, பரசித்வடிவினள் உன்வடிவில் தோன்றினாள். சுத்த சிவமாகி நின்று விட்டால் மட்டும் போதாது. அசையும் சிவமாகி ஜீவன்களைக் கடைத்தேற்ற வேணும் என்ற உணர்வினை எனக்களித்தாள். இந்த உணர்வினை அளிக்கும் முகமாக - சக்திதத்வம் நிறைந்துநிற்பதும் சிங்காரச்சொல்லழகால் அலங்காரமாய் உள்ளதும், உணர்வும் உணரச்செய்ததும் அதனால் ஏற்படும் பயனும், பயனின் முடிவும், உணர்வும் ஒன்றாகி முடியாமுதலில் கலக்கவைப்பதுமான சக்தியின், பராசக்தியின், பரசித்வடிவத்தின் கருணைத்திருநாமங்கள் ஒரு நூற்றெட்டினை எனக்களித்தாள். அசையாநிலையில் கசியா மனதில் நான் கண்ட அந்த வைபவம், அசையும் நிலையில் கசியும் மனதில் உனக்கருளப்படுகிறது. நீ கேட்டதற்கு விடையும் இதுதான், உள்ளத்திலே பரிவுணர்வு உனக்கு ஏற்பட்டால் உள்ளத்தால் அல்லலுறும் ஆன்மாக்கள் அத்தனையும் பள்ளத்தில் விழாமல் பக்கலில்நின்று உன்னால் பரிந்தருளப்படும் இன்று, என்று பரமசிவன் - தேவிக்குக் கூறினான். எங்கோ- எப்போதோ - எவ்வாறோ - எந்நிலையிலோ அருளப்பட்டது, இங்கு, இப்போது, இந்நிலையில், இம்முறையில் ஸாதகனுக்கு அறியக்கிடக்கிறது. இதுவே அருளின் ஆற்றல். அவளுடைய வாங்மய தத்வத்தை கருணை கசிந்துருகும் கல்யாணப்பெயர்களை சிவன் பேசுகிறான்.

சிவன் - ஏ ப்ரிய பார்வதிதேவி, யான் சொல்லுகிறேன். அளவற்ற மஹிமை கொண்ட பரசித்தின் பெருமையைப் பேசுகின்ற ஒருநூற்றெட்டுநாமாவளியானது தேவர், மூவருக்கும்

கிடைத்தற்கரியது. சக்தியின் கருணையால் எனக்குக்கிடைத்தது. கொண்டநான் குணமோடு காப்பாற்றினேன். நீ எந்தனுக்கு பத்தினியாய் வந்தனைஎன்றால் இதன் பரிவுதான் காரணம். இதனை பாரில் பலருக்கு முன்பே வழங்கினேன். வாமனன், ராமன், பரசுராமன், கண்ணன், வியாஸன் இன்னும் பல மஹரிஷிகள் என இதனைத் தெரிந்தவர் பலர் உண்டு. ஆச்சர்யகரமான, அதிரஹஸ்யமாகக்காப்பாற்றப்படுவதான இந்த 108 நாமங்களை இப்போது உனக்குச் சொல்லுவதன் மூலம் உலகுக்கு அளிக்க அந்த உத்தமத்தாய் விரும்பிவிட்டாள் என்றுதெரிகிறது. உலகம் கடைத்தேறட்டும்.

தேவியின் கேள்வி - முதலில் அந்த நாமங்களுக்குக் காரணமான சக்தித்தாய் எவ்வாறு உள்ளாள்,எனக்கூற வேண்டும்?

சிவனின் பதில் - தேவி, கூறுகிறேன், கேள். ஒரு அம்ருத்கடல். அது அத்புதமானது, அபூர்வமானது. அதிரஸத்தோடுகூடியது. அதன் அலைகளின் மேல் சதுரமான ஒரு தீவு உள்ளது. அதுவே ரத்னத்வீபம். அதன் நடுவிலே கோலாஹலமான ப்ரகாசத்தோடு பூப்ரஸ்தாரமாய் உள்ள ஒரு நகரம் உண்டு. அதுவே ஸ்ரீநகரம். அதன் நடுவில் மேருப்ரஸ்தாரமான அரண்மனையில் மணிமயமஹாஸிம் ஹாஸனத்திலே பஞ்சப்ரஹ்மாக்கள் ஸ்த்ரீவடிவில் கட்டிலைத்தாங்க ஸ்ரீவித்யாஸனமான அந்த பீடத்திலே அமர்ந்திருக்கிறாள் ஸ்ரீகாமேƒவரி. (ஸ்ரீகாமேƒவரரின் மடியில்) அவளை நீ காணவேணும். அவள் ஸ்ரீகாமேƒவரனால் ஆலிங்கனம் செய்யப்பட்டவள். கர்மஸித்தர்களால் ஸேவிக்கப்பட்டவள். யோகினிகளால் வணங்கப்பட்டவள். தேவர்களால் தொழப்பட்டவள். முக்தர்களால் காணப்பட்டவள். பாமரர்களுக்கு பக்கலில் வராதவள். கணபதி, முருகன்,சாஸ்தா, இவர்களை குழந்தைகளாக தன் மடியில் கொஞ்ச வீற்றிருப்பவள். அவளது சிரசிலே ரத்னக்ரீடம் ப்ரகாசிக்கிறது. அதில் ஒளிவிடும் சந்த்ரகலை ஒளியை வீசுகிறது. அவளது கரங்களிலே பாசம், அங்குசம், கரும்புவில், பஞ்சபாணம் என்றபடியான ஆயுதங்கள் ப்ரகாசிக்கின்றன. காமேசனே மயங்கும் அழகுடன் கூடிய குசபாரங்கள். அவளே தந்தையாகவும் தாயாகவும் உலகத்தாரால் வணங்கப்படவேண்டியவள். பரமனுக்கு பரமாய் இருப்பவள், ஆனந்தரூபவதி, ஒளியாய் சித்வடிவமாய் புகழோடு விளங்குபவள்,

அந்த மாதேவியை நீ த்யானிக்க. பின்பு - அவளது சக்திகளையும், ஸாரூப்யங்களை விளங்கிக்கொண்டு நிற்கும் 108 நாமாவளிகளை மனதிற்கு ஆச்சரியம் ஏற்படும்படியாக அதனை அனுதினம் கூறிவா. இதுவே கோரஸம்ஸாரிகளுக்கு எளியவழியாய் உபதேசிக்க உனக்கருளப்பட்டது.

என்று சிவன் சிவைக்கு அந்த 108 நாமங்களைக் கூறக்கேட்ட அளவிலே தேவியும் ஸமாதி நிலை கூடினாள். பின் ஸமாதி தெளிந்தபின், தென்முகத்தேவனாய் நின்று தான் கேட்ட இதன் பலத்தையும் அவளுக்கு உறைக்கின்றான். ஏன் பலன் கூறினானென்றல் பலத்தைக் காணும் போதுதான் பாரிலிருக்கும் மனங்கள் அதனைப் பலமாக பற்றிக் கொள்ளும் என்பதற்காகவும் என கொள்ளலாம்.

சிவனின் பதில் - அவளது சுந்தர நாமங்களைச் சொன்னபோது சொல்லாலும் நாவாலும் விளக்கமுடியா வேதவிளக்கங்கள் யாவும் விளங்கிவிடும், தேவரும் மூவரும் தினம் அதனை கூறுகிறார்கள் என்றால் அருளும் தவமுமில்லாத ஜீவான்மாக்கள் அவசியம் கூற வேண்டும் என சொல்லவும் வேண்டுமோ? வேதம் விளக்கியமெய்ப் பொருளெல்லாம் இதனுள்ளே விளங்கிவரும். நாதம் உள் நின்று மங்களங்கள் தெரிய மஹிமையுடன் இதனைக்கூறவேணும். வேதவழி தெரியாத ஆன்மா -காத வழி ஓடுகிறது. ஓடுவதை நிறுத்தி ஒருமைப்படுத்தி உத்தம வழிக்காட்டும் உயர்ந்த தோத்திரம் இது. மோனத்தவத்தில் முதல்வி சொன்னதை முழுவதும் உனக்கு முடிவாய்ச் சொல்லுகிறேன். சக்தியினைப்பூசிக்க சிவத்துக்கே தகுதி உண்டு என்றபடி உலகில் பலஸாதகர்கள் பராசக்தியினை பலபலவழியில் ஆராதிக்கின்றனர். மந்திரத்திலே கண்டு மஹிமையுடன் உருப்போடுகின்றனர். யந்திரத்திலே கண்டு சிரத்தையுடன் பூஜிக்கின்றனர். தந்திரத்திலே கண்டு தன்மய மாகிவிடுகின்றனர்.

இவ்வாறு பூஜிக்கும் நிலையெல்லாம் சொல்லி அருளினாள் பராசக்தி, எனசிவன் கூறினான். பிறகு இந்த 108 நாமங்களினால் ஒரு ஸாதகன் எவ்வாறு ஸுவாஸினியை ப்ரத்யக்ஷ பரம்பொருளாக கண்டு பூஜிப்பது என்பதும், இந்த பூஜையின் முடிவில் ஸாதகனுக்கு

ஏற்படும் ஆனந்தானுபவமும், தந்த்ரங்களின் உட்பொருளாக- ரஹஸ்யமாக உள்ளவை. அதனை சொல்லில் விளக்கி எழுத்தில் வடிக்கமுடியாதவை.

தரணியில் உழலும் ஜீவான்மாக்களில் எதற்கோ ஒன்றுக்கு கோரஸம்ஸாரம் கொடுமைப்படுத்துகிறது எனக்கண்ட வேளை அதுவே பராசக்திக்கும் ஸ்புரணமாகி ஸம்வாதரூபமாக சேதனங்கள் உய்ய அருளப்பட்டது இது. ஸம்வித் வடிவமான பராசத்தி சிவசக்தியைகரூபிணியாக இருந்து ஆன்ம சைதன்யத்திலே அருள் ஒளிகாட்டி அந்த ஒளியினை பரவவிட்டு பரசைதன்யமாய், காமகலா வடிவினளாய் நின்று அருள் பாலிக்கிறாள். - இவ்வாறான ஒரு பூஜையும், ஆச்சர்யாஷ்டோத்தரநாமார்சனா வைபவமும், இதனால் தெளிந்தபின்பு உலகில் காணும் ஸ்திரீகள் யாவரும் சக்திஸ்வரூப விக்ரஹங்களாக தெரியுமே தவிர வேறொன்றாகக்காண இயலாது. இதனால் தான் ஸ்ரீவித்யாஉபாஸனாதர்மங்கள் ஸ்த்ரீயை கோபிக்கக்கூடாது. கோபிப்பவர்களின் சேர்க்கையும் கொள்ளக் கூடாது என்று தெளிவாய்க்கூறுகிறது.

(குறிப்பு - தன் ஸ்வசத்தியில்லாத நேரத்தில் - அன்னியஸ்திரீகளை பூஜிக்கநேரும் காலத்தில், அவர்கள் தீக்ஷாவதியாக இல்லாதிருக்கும் போது அவர்களுக்கு (ஸத்யதீக்ஷை) தேவி பீஜங்களில் யாதொன்றை கூறி அவர்களைச்சொல்லச்சொல்லிவிட்டு பிறகு வழக்கமான பூஜைகளைச் செய்யவேணும் என்பதும், எந்த நேரத்திலும் ஸ்வசக்தியினிடமும், விஷயம் தெரிந்த ஸுவாஸினிகளிடமும் தான் அளிபாத்ரதானம் செய்யலாம் என்பதும் ஸாதகர்களுக்கு தெரிந்திருக்கவேணுமென்பதால் இது இங்கு எழுதலாயிற்று)

சக்தி சக்தி என்று ஓது, முக்தி வரும்!
முக்தி முக்தி என்று தேடு, சக்தி வரும்!
புக்தி முக்தி இரண்டும் தரும் பக்தி வழி!
ஸத்குருவை அண்டிவிடு, ஜகம் மறையும்!
கி


ஸ்ரீஸாமயிக மஹாபூஜா ப்ரதிசித்தாயதே நமோ நமஃ


சிவ சக்தி ஸாமரஸ்யத்தை உணரும் படியான ஜீவப்ரஹ்மைக்ய அனுஸந்தானபரர்களுக்கு ஸாமயிகர்கள் என்று பெயர். இவர்களை திருப்தி செய்து பூஜைசெய்வது என்பது ப்ரஹ்மாப்யாஸம் செய்வது, செய்விப்பது என்பதேயாகும்.

ப்ரஹ்வித்யா உபாஸனைபற்றி ஸ்ரீவித்யா, உபாஸனை பற்றி மனனம் செய்வது அதனைப்பற்றிக் கூறுவது ஒருவருக்கொருவர் ஸம்பாஷிப்பது, பூஜையினைப்பற்றி ஏகாக்ர சித்தத்துடன் நிதித்யாஸனம் செய்வது என்பதெல்லாமே ப்ரஹ்மாப்யாஸமாம். பூஜைக்கு வருகை தந்திருக்கும் யதிகள், அன்ய மண்டலி உபாஸகர்கள், ஸ்வமண்டலி உபாஸகர்கள் மற்றவர்கள் என வரிசைக்ரமத்தில் உபதேச தீக்ஷாஜேஷ்டக்ரமத்தில் சந்தனம், குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

அவரவர்கள் ஸம்ப்ரதாயத்தை கூடுமான வரை ஸாதகன் தெரிந்துக்கொண்டு அவர்களின் முறையிலேயே உபசரிக்க வேண்டுவது ச்ரேஷ்டமாம். ஸ்வமண்டலிக்காரர்களாயிருக்கும் பக்ஷத்தில் பூஜைக்கு செல்லும் ஸமயங்களிலெல்லாம் தன் ஆத்ம, பாத்ரத்துடன் தான் செல்வார்கள். சிலருக்கு ஏகபாத்ரமும்,சிலருக்கு பஞ்சபாத்ரமும், சிலருக்கு இருபாத்ரங்களும் ஸ்வீகாரம் இருக்கும். அவைகளை அவ்வாறே செய்ய அனுமதிக்கவேணும், அளிக்கவேணும். பிறகு ஸகல ஸாமயிகர்களுக்கும் பூஜாப்ரஸாதம் கொடுக்கவேணும். ஸாமயிகர்களின் குரு அருகில் இருக்கும் பக்ஷத்தில் அவர்கள் குரு பூஜாதர்பணங்களை அவரிடமே செய்ய வேண்டும். அவ்வாறில்லாத நேரத்தில் தன்சிரஸில் செய்து கொண்டு தேவதா பூஜாதர்பணங்களை ஸ்ரீசக்ரத்திலும் செய்யவேண்டும். பூஜாதர்ப்பணம் முடிந்தபின் - பாத்ரத்தை ஸ்வகுருவினடம் தான் கொடுக்க வேண்டும், அவரே பூஜாஸாதகனிடத்தில் சேர்ப்பிப்பார்.

தத்வசோதனம் முடிந்தபின் ஹோஷ்யாமி என்று உரக்கக் கேட்க வேண்டும், ஜுஹுதி என்று அனுக்ஞை கிடைத்தபின்பே யஜனம் செய்வது ஸம்ப்ரதாயம் என்பதை

உணரவேண்டும்.இதன்
விவரம் தத்வசோதனத்தில் விரிவாகக் காணலாம்.

ஆத்மாவை அறிவதற்கு ஆவல் வேண்டும்!
வித்யைக்கு ஸத்சங்கம் நிறைய வேண்டும்!
முத்திக்கு வேண்டுவது மனனச் சேர்க்கை!
எத்திக்கும் ஞானமது நிறைய வேண்டும்.!
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by nakasundaram Tue Oct 15, 2013 7:09 am

ஸ்ரீப்ரக்ருத்யாதி ஷட்த்ரிம்சத் தத்வாதீதாயதே நமோ நமஃ


விசேஷார்க்கிய வடிவமான அகண்டாகாரவ்ருத்தியாலே அசுத்த, மிச்ர, சுத்த தத்வங்களாகும் ப்ருத்விமுதல் சிவாந்தமான 36 தத்வங்களையும் சமஷ்டியாக தன்னிலே சோதித்து அவற்றின் ஓவ்வொன்றிலும் அதிஷ்டானமாயுள்ள சிவாபின்ன ஆத்மவடிவ சித்சக்தியை ஏகரஸமாக அறிந்து கொள்வதே இந்த தத்வ÷சாதனத்தின் பரம ரஹஸ்யார்த்தமாம். சித்தம்தான் பிறப்பிறப்பு வடிவமான ஸம்ஸாரத்துக்குக் காரணம். எனவே சித்தத்தில் ஆத்ம விருத்திகளுக்கு மாறான அநாத்மவ்ருத்திகள் இல்லாதபடி அதனை பரிசுத்தம் செய்தல் அவசியம். ஏனெனில் ஜடவடிவமான அநாத்மாகார விருத்திகளின் கூட்டமே (ஸமஷ்டி) சித்தமல்லவா. ஆதலால் அநாத்மாகார ஜட வ்ருத்திகள் சித்தத்தில் தங்கா வண்ணம் மிகவும் முயற்சிகள் செய்து அதனை சோதித்தால் அதுவே சித்ஆக மிஞ்சுவதைக் காணலாம். எனவே ஸாதகர்களுக்கு இந்த சித்த ÷சாதனமான தத்வ÷சாதனம் அவசியம் தேவை என்பர் பெரியோர்.

கடைசியில் ப்ரஹ்மார்ப்பண ஆஹுதி இவ்வாறு- இந்த அம்ருதம் ஸ்வஅதிஷ்டான சைதன்ய ஆத்மவடிவம். எனவே அது சாƒவதமாய், நித்யமாய், ஸ்வயம்பிரகாசமாய் தன்னிலே ஜ்வலிக்கிறது. இந்த ஜ்வலிப்பான ஜ்யோதிப்ரஹ்மமே நான், ஜீவபாவத்தை நான் அடைந்திருந்தேனாயினும் அது (கல்பனா) அக்ஞானத்தினால் உண்டானது என்று உண்மைச்சோதனையால் உணர்ந்துள்ளேன்.

இவ்வாறு ஸித்திக்கப்பட்ட ப்ரஹ்மபாவம் புதிதாக நூதனமாக சோதனையாலோ,பயிற்சியினாலோ வந்துவிடவில்லை. அது என்னிலேயே எனக்குள்ளேயே ஸங்கல்ப, விகல்பமின்றி ஸதாகாலமும் நீங்காமல் நிலைபெற்றிருக்கிறது என்பதையும் உணர்ந்துள்ளேன். இதுவேதானே ப்ரஹ்மஞானம் என்பது. ஒரு சிறு கிண்ணியிலே, மந்த்ரஸம்ஸ்காரம் செய்யப்பட்ட அம்ருத்ம் ஸாமயிகனாகிய, ஸாதகனாகிய என்னை அடைந்து விடுகிறது. இதுவே இதன் தத்வார்த்தமாய் உணரவேணும்.

தத்வசோதனத்தில் ஐந்து பாத்ரங்கள், ஒரு பாத்ரம் என்று ஸம்ப்ரதாய பேதங்களை உபாஸக உலகம் அறியும். முன்பு கூறின ஏகரஸமானபாவத்தை ஒன்றாய் ஒரே ஆஹுதியில் ப்ரஹ்மார்ப்பணம் செய்வதினாலே ஏற்படும். 5 பாத்ரங்களினால் சோதனம் செய்யும் போது ஜீவனுடைய ப்ரபையும் சித்சக்தியினுடைய ப்ரபையும் பஞ்சாக்னிஸ்வரூபமாக எவ்வாறு ஏகீகரணப்படுகிறது என்பதை அறியலாம். ஜீவத்வமானது 5 இடங்களைத் தாண்டி (ஆஹுதிகளாக அளிக்கப்பட்டு) ஜீவனாக வந்துள்ளான்.

1. ஸ்வர்க்கம் அதிலிருந்து 2.மேகம் அதிலிருந்து 3. பூமி பிறகு அதிலிருந்து 4.புருஷன் அவனிலிருந்து 5. ஸ்திரீ என்றபடி அமைந்துள்ளது. இது ஒரு சுழற்சி. இந்த ஜீவஹோம சுழற்சியை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டாமா? இதற்காகவும் பஞ்ச பாத்ரஹோமம் உள்ளது என்றும் கூறலாம். எனவே இந்த யஜனத்தால் - அனிந்தனமான அக்னியாலே இந்த ஸாதகன் ப்ரஹ்மமாக ஜ்வலிக்கிறான் என்றும் ஒரு தத்வார்த்தம் கூறலாம். இந்த சோதனா முறையை இவ்வாறும் விரிவாக உணர்ந்துக்கொள்ளலாம். தொடந்தும் காணுவோம்.

உபாஸனா காண்டத்திலே பிரதி பாதிக்கப்படுகிற பரசிவம் ஒவ்வொரு ஜீவனுடைய ஹ்ருதயகமலத்தில் அனுப்பிரவேசித்து அவனை இந்த உலகத்திலே அல்லல் படவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பரசிவம் எங்கோ வான வெளியிருந்து தனியாக வந்து இந்த ஜீவனுக்குள் புதியதாகப் புகுந்து விடவில்லை. இந்த ஜீவன் உற்பவிக்கும் காலத்திலேயே அதாவது, கர்ம காண்ட விதிப்படி இவனுடைய கர்ம விபாகத்திற்குத் தகுந்தபடி எத்தனை

பிறவிகள் இவனுக்குண்டோ அத்தனையிலும் இந்த ஜீவ கருவிலிருந்து வேறுபடாதவனாக இந்த பரசிவம் பிராகாசிக்கிறான். இந்த ஜீவன் எண்ண முடியா கோடி ஜன்மம் எடுக்கிறான். கோடி ஜன்மத்தின் ஒரு கோடியிலே கோடி கோடி அண்டங்களிலும் கூடி அமைந்திருக்கும் இந்த பரசிவம் அணுமாத்ரமாய் அவனுக்குள்ளே அமைந்திருக்கிறான். எங்கோ பரந்து விரிந்து நின்ற இந்தப் பரசிவம் காலம், தேசம், நாமம், ரூபம் என்ற பரிச்சேதங்களற்ற இந்தப் பரசிவம் இவனுக்குள் அனுப்பிரவேசித்துள்ளதை இவன் எவ்வாறு பிரித்தறிந்து கொண்டான்? இந்த அறிவுக்குக் காரணமாக இவனுடைய மனம் என்கின்ற அந்தக்கரணத்திலே ஒரு சோதனை ஆராய்ச்சி நடைப்பெற்று இருக்கிறது. இந்தப் பரிசோதனையை இவ்வாறுதான் செய்ய வேணும் என்கின்ற நியதியும் சட்டத்தையும் ஒருவர் உணர்த்து முகத்தான் இவன் தெரிந்து கொண்டிருக்கிறான். அந்த ஒருவரே இந்த ஜீவனுக்கு நன்நிலைக்காட்டிய குரு எனப்படுகிறார். அவர் இவனுக்கு ஆக்கிக் கொடுத்த பரிசோதனைக் கூடத்தையும், அந்த பரிசோதனைக் கூடத்தில் நடைபெறும் பரிசோதனை முறையையும் நாம் இங்கே காணப் போகிறோம்.

இந்த பிரபஞ்ச உற்பத்தியும் ஒரு ஜீவனுடைய உற்பத்தியும் குணங்கள் ஒன்று கூடுவதினால் ஏற்படுகிறது. குணங்கள் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முப்பிரிவாய் நின்று குணசாம்ய ரூபமாக இந்த ஜீவனை உற்பவிக்கிறது. இந்த குணங்களின் மூலமான வஸ்து, ப்ரகிருதி, என்று பெயர் பெறுகிறது. இந்த குணசாம்ய ரூபமான ப்ரகிருதியின் சேஷமான ஆத்மாவின் நிலை இவ்விடத்திலே மனத்தின் மூன்று பரிபாகங்களாக நின்று குணத்தினாலும், வேடத்தினாலும் இந்த ஜீவனுடைய கூட்டுறவை சிந்திக்க வைக்கிறது.

பஞ்ச பூதங்களிலிருந்து அதாவது ஆகாயம், வாயு, தேயு, அப்பு,ப்ருத்வி என்ற ஐந்திலிருந்து சரீர உற்பத்தி. இதனுடைய சாம்யமாக தன் மாத்ரைகளான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்,கந்தம் என்று ஐந்தாகப் பரிணாமிக்கின்றன. அதாவது உபஸ்தம், பாயு, பாதம், பாணி, வாக் என்ற கர்மேந்திரியங்கள் மூலமாக இந்த ஜீவன் ஞானத்தை அறிகிறான். அதாவது, ஒவ்வொரு விதமான ஞானம் வெளிப்படுகிறது. க்ராணம்,ரஸம், சக்ஷû, த்வக் ,ƒரோத்ரம் என்றபடி ஸ்தூல சரீர ஞானத்தை 24 விதங்களான ஆத்ம தத்வம் என்ற

பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றின் தன்மையும் சித்தத்திலே ஆராய்கிறான்.

மனத்தின் பரிபாகங்கள் நான்கு, மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என. இந்த மனம் ஸ்தூலமாக கண்ணால் காணும் வஸ்துவையெல்லாம் பற்றி இழுக்கிறது. உள்ளே இழுத்த வஸ்துவை அதனுடைய நாம ரூபங்களை தன் யுத்தியினால் கற்பித்து அதனை நிர்ணயிக்கிறது புத்தி. வஸ்துவுக்கு நாமரூபம் வைத்தப்பின் அதனுடைய குணத்தையும் செயலையும் இன்னபடிதான் என்று சித்தாந்தப்படுத்தி உறுதி செய்கிறது சித்தம், கண்டதும் அதனை அறிந்தும் இந்த அறிவின் உறுதியையும், செயல்பாட்டையும் நிர்ணயித்ததும் நான் தான் என்று சொன்னது அஹங்காரம். ஆக நான்கு நிலையில் செயல்பட்ட இந்த மனதை இங்கு பரிசோதனைக் கூடத்தில் மூன்றை மட்டும் எடுத்துக் கொள்ளசொல்லியிருக்கிறார்கள். மனம்,புத்தி,அஹங்காரம் என்ற மூன்று நிலையில் இது முக்குண சாம்யரூபமாக அமைந்திருக்கிறதனாலே சித்தத்தை ஏன் விட்டார்களேன்றால், இங்கு முதல் பரிசோதனையிலே ஆத்ம தத்வ சோதனம் நடைபெறுகிறது. இந்த மனதினால் முதல் நிலையில் ஸ்தூலமாக காணப்பட்ட வஸ்துக்களை வைத்துக் கொண்டு மட்டுமே எதனையும் உறுதி செய்ய முடியாத நிலை அமைந்திருப்பதினாலே சித்தத்தைக் இங்கு விட்டார்கள் என்று அறியக் கிடக்கிறது.

உயர்ந்த வஸ்துக்களை உயர்ந்த பரம்பொருளான பரசிவத்துக்கு ஆஹுதியாக அளிக்கும் நிலை இங்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த முதல் பரிசோதனைக் கூடம் வெறும் வறட்டு ஸ்தூல வாதமல்ல. இங்குஒரு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குமுன்னே யாகம் செய்பவன் வீற்றிருக்கிறான். பக்கத்திலே யாகம் செய்யப்பட வேண்டிய ஆஹுதிப் பொருள் ஸித்தமாக உள்ளது. இந்த யாகத்தை இவனுக்கு சொல்லிக் கொடுத்தவன் இவனை அதற்கு பக்குவமாக ஆக்கி யாகத்திற்கு தேவையான ஆஹுதிப் பொருளை தக்கபடி ஸம்ஸ்காரங்கள் என்று கூறும் சுத்திகளை செய்து ஸித்தமாக வைத்திருக்கிறான். முதல் நிலையில் முதல் ஆஹுதியாக இவன் இந்த யாகத்திலே கொடுக்கக்கூடிய பொருள் இந்த 24 தத்துவங்களால்

உருவாக்கப்பட்ட ஆத்ம தத்வம் என்ற ஒரு ஆஹுதி. இந்த முதல் ஆஹுதியினால் இவனுடைய பிறப்பின் தன்மை, தான் எதிலிருந்து வந்தவன் என்பது, என்ற செயல்கள் இவனுக்கு அத்துப்படி ஆகின்றன. இந்த யாகமும் இந்த பரிசோதனைக் கூடமும் எங்கோ வெளியில் அமைக்கப்பட்தல்ல. சத்திய வஸ்துவை உறுதி செய்வதற்காக தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற சித்தம் என்ற மனத்தின் ஒரு பாகத்திலே இந்த யாகம் நடைபெறுகிறது. இந்த சித்தமாகிய இடத்திலே ஸம்வித் என்கிற அக்னியிலே முதலாஹுதி என்கிற ஆத்மதத்வங்கள் 24க்கும் அதனதன் தன்மைகள் தெரிவதினாலே அவைகள் சுத்தி செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகின்றது. அக்னியிலே ஆஹுதி விழுந்த மறுகணம் அக்னி ஜ்வாலை விட்டு எரிகிறது. ஆஹுதியாகப் போட்ட பொருள் கனன்று பிரகாசிக்கிறது. இந்த பிரகாசத்தினாலே 24 குணங்களினாலே ஆக்கப்பட்டிருந்த இந்த ஜீவன், தான்தான் புருஷன் என்பதை அறிகிறான். இங்கு புருஷன் என்பது ஸ்தீரி புருஷன் என்கிற பிரபஞ்ச வேறுபாட்டைக் குறிப்பதில்லை. சர்வத்ர ஜீவன்களும் தன்னை இங்கு புருஷன் என்று கூறிக்கொள்கின்றன. இந்த புருஷன் தன்னை பரசிவனுக்கொப்பாக அபேதப்படுத்திக் கொள்கிறான். எல்லாவற்றையும் தன்னால் செய்ய முடியுமென்றும் தான் நித்யன் என்றும், தான் சுதந்திரமானவனென்றும், சர்வ கார்யங்களையும் செய்து முழு திருப்தியை அடைபவன் தானே என்று எண்ணி இங்கு பரிசோதனைக் கூடத்தில் இரண்டாவது ஆஹுதியைக் கொடுக்கப் போகிறான்.

பரம் பொருளிடத்தில் பக்தி பண்ணுவது, பற்று வைப்பது, பூஜிப்பது ஒரு கலை. இந்த கலையை பயிற்றுவித்தவன் மஹாமேதை. ஆகவே இந்தக்ரியை ஸ்தூலமாக இல்லாமல் மானசீகமாக மனத்துள்ளே நடைபெறும் யாகமாக அதற்கென்று ஒரு வழியோடு (கலாத்வா) அதனை நிர்ணயிக்கிறான். இந்த பூஜையைச் செய்யும் ஜீவன் இன்னும் பூரணமான ஞானம் அடைந்தவனில்லை. பரிசோதித்து அறியும் நிலையில்தான் இருக்கிறான். உண்மையை உணர வேண்டுமென்ற தாபம் உள்ளது. அந்த உண்மை என்பதுதான் வித்யை என்கிறோம், உண்மையில்லாத ஜடரூபமான க்ரியைகளை செய்து கொண்டிருக்கும் இவனுடைய எண்ணமே அவித்தை என்று பெயர் பெறுகிறது. இந்த அவித்யா எண்ண பலத்தினாலே

இவனுடைய வித்யா ப்ராப்தியை அடைய வேண்டிய நிமித்தம் இடையீடான ஒரு ஆசை மனதிலே எழுகிறது. எப்படியும் மஹாவித்யா ப்ராப்தியை அடைந்தே தீருவது என்ற ஒரு பேராசை ராகம் என்ற பெயரிலே இங்கு அதனை பரிசோதிக்கிறான்.

முன்போலவே இந்த ஆஹுதி பொருளையும் பரிசோதனை செய்கிறான். இத்தனை காலம் குருவினால் தனக்கு விளக்கிக் காட்டப்படும்வரை பரசிவத்திற்கும் தனக்கும் பேத புத்தியைக் கல்பித்துக் கொண்டிருந்தானே, அந்த நிலையில் அந்த கல்பனைதான் மாயை. இந்த மாயை இவனுடைய எண்ண பலம் எது வரையில் போய் அழுத்துகிறதோ அதிலே தானும் அழுந்திவிடும். இது அதனுடைய இயல்பு. இந்த மாயையினுடைய இயல்பை வெகுசுலபமாக தெரிந்து கொண்டான் . ஆனால் குரு, இவனுக்கு இவனைத்தான் காட்டினார். இவனுக்குள் அனுப்பிரவேசித்திருக்கும், பரவியிருக்கும் பரசிவத்தைக்காட்டினார். இந்த நிலையில் மாயை என்றால் என்ன என்றோ அது எவ்வாறு ஜீவனையும் சிவத்தையும் பிரிந்து இடையீடாக நின்று கொண்டிருக்கிறதென்றோ இவனுக்கு அவர் விளக்க வில்லை. பரசிவ ஞானம் இவன் அடைந்த போதே அதே கணத்தில் மாயையைப்பற்றி அது மறைந்த விதத்தைப் பற்றி இவனே உணர்ந்து கொண்டான். இப்படி ஜகத்தையும் பரசிவத்தையும் மறைத்துக் கொண்டிருந்த கல்பனா மாயா உணர்வு மறைகிறது.

இந்த சோதனைகளுக்கெல்லாம் அவகாசம் வேணுமே, ஸ்திரமில்லாத ஆயுசைக் கொண்டு சதமான ஒரு பொருளை எத்தனை காலம் ஆராய்ச்சி பண்ணுவது? பரசிவமோ முக்காலும் உள்ளது. ஜீவனோ எக்காலும் நிலையில்லாதவன் என்ற எண்ணம் இவனுக்கெழுந்தபோது, சென்ற காலம், நிகழ் காலம், வருங்காலம் என்ற மூன்றையும் ஒன்றாக்கி கிடைத்த சிறிது காலத்தில் காலத்தை வென்ற குருவின் கிருபையினாலே தன்னுடைய புருஷ தத்வத்தின் லக்ஷணமான நித்யன் என்கின்ற நிலையினாலே கால சோதனை செய்கிறான். காலனையும் சிந்திக்க வைக்கிறான். நித்ய திருப்தனாவும், நித்ய முக்தனாகவும் என்றுமே நித்யனாகவும் உள்ள இந்த புருஷன் தனக்கென்று தனததிகாரத்திற்கு உட்பட்டவர்களுக்கென்று சில சட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறானல்லவா? அதுவே நியதி என்ற நிலையில் அதனை

சோதனம் செய்கிறான். இந்த ஏழு விதமாக வித்யா தத்வங்களான மாயை, கலை , அவித்யை, ராகம், காலம், நியதி, ஆறையும் தன்னோடு அதாவது புருஷனோடு அபேதப்படுத்தி, ஏனென்றால் நித்தியனால்தான் இந்த நியதியீரான தத்வங்களைக் கடக்க முடியுமென்கிறதனாலே அபேதப்படுத்தி இத்தனையும் ஸூக்ஷ்மமான உள்ளுடலிலே உருக வைத்து இரண்டாவது ஆஹுதியாக ஸம்வித் அக்னியிலே ஹோமம் செய்கிறான். இந்த இரண்டாவது ஆஹுதி அந்தராத்மா என்ற பாத்திரத்தினாலே நடைபெறுகிறது. இவ்விரு ஆஹுதியினாலே ஜொலிக்கப்பட்ட அக்னி மேலும் பிரகா†மடைகிறது.

ஜீவனாயிருந்தவன் பரசிவனானான். எவ்வாறெனில், ஹோமத்திலே ஆஹுதி செய்யச் செய்ய ஜ்வாலை மிகுந்தாலும் கூட ஆஹுதி பொருள் எரிந்து வெண்ணிறமாகிறது. இத்தனை சோதனையிலும் இவனுடைய அறிவுக்கு மிஞ்சி நின்றது சிவமானதினாலே மூன்றாவது பரிசோதனைக் கூடத்திலே சிவ தத்துவத்தை பரிசோதிக்கிறான். வெண்ணிறச் சாம்பலிலே எங்கு புரட்டினாலும் வெண்மைதான், இங்கு இவன் சிவம், சக்தி, ஸதா‡வம், ஈƒவரம் என்கின்ற நான்கையும் பிரித்துப்பிரித்து பார்க்கிறான். சிவம் மிகுந்து ஈƒவரனாகவும், சக்தி மிகுந்து சதாசிவமாகவும் சக்தியும் சிவமும் சமமாய்க் கலந்து சுத்தவித்யை எனவும் நிற்பதைக் கண்டதல்லாமல் தனித் தனியாக இவன் காணவில்லை, ஆகவே சிவசக்தி ஸாமரஸ்யமான இந்த சிவதத்வத்தை இந்த ஜீவ உற்பத்திக்குக் காரணமான காரண சரீரத்தோடு ஒப்பிட்டு அதையே பரமாத்ம தத்வமாக பரிசோதனையிலே கண்டு தெளிந்து மூன்றாவது ஆஹுதியாக செய்கிறான். இவ்வாறு மூன்று ஆஹுதிகளுக்குப்பின் ஸமஷ்டியாக நான்காவது ஆஹுதியளித்து இந்த தத்வசோதனத்தை முடித்துக்கொள்ளுகிறான். ( இங்கு ஸாமயிகா பூஜை,மற்றும் தத்வசோதனம் இரண்டையும் ஸாதகர்களின் ஸௌகரியத்துக்காக விவரக்குறிப்பாக கடைசியில் எழுதியுள்ளேன்.)

தத்துவங்கள் சோதிக்கும் ஸாதகனிங்கு
தீராத மும்மலத்தை தீர்த்து விட்டான்
ஆத்மவித்தை அறிந்துணர ஆவல் கொண்டு
ஆத்மவித்யா சிவதத்வம் அறிந்துவிட்டான்

சுத்தாசுத்த தத்துவங்கள் சோதித்தால்தான்
சூக்ஷ்மமாம் ஆத்மாவின் சோதி தோன்றும்
வித்தகராம் குருவினது பாதம் தொட்டு
விரட்டிவிடு அக்ஞானத்தொல்லை நாளும்

கி



பூஜையும், ஜபமும், கர்மாவும், காரியமும் நிதித்யாஸன வடிவமாகும் என்ற நிலைதான் இதுவரை கண்டோம். காலங்காலமாய் கர்மகாண்ட பத்ததிப்படி செய்யும் ஜடகர்மோபாஸனையினால் யாதொரு பயனுமுண்டோ? இல்லை. ஆனால் இதனையே கர்ம காண்டபத்ததியையே வேதாந்த பரமாக மனனம் நிதித்யாஸனம் செய்வதினால் பஹிர்கார்ய வ்ருத்திகள்யாவும் அகண்டாகார வ்ருத்தியாக மாறி செய்பவன், ஏற்றுக்கொள்பவன், செய்வது என்ற மூன்று நிலையும் நசித்து ஸ்வயமாய் பிரகாசிக்கும் ஆத்மஞானமே தான் என்ற கண்டாகிவிட்டது. அதற்கு உதாரணம், உப்பு கட்டி ஒன்று, பனி கட்டி ஒன்று நீருக்குள்ளே இட்டு கரைத்தபின் திரும்ப எடுக்க இயலாமையே. இத்தனை ஸத்யமாக ஆத்மஞான உணர்வு ஏற்பட்டபின்பு செய்த பூஜையை எங்கே ஸமர்ப்பணம் செய்வது? பூஜை செய்ததே நானாயிருந்து, ஏற்றுக் கொண்டதும் நானாயிருந்து, செயலும் நானாயிருந்த காலத்தில் பூஜை ஸமர்ப்பணம் எங்கே செய்வது? அது ஸாதுவாயிருந்தா லென்ன? அஸாதுவாயிருந்தா லென்ன? எனவே நிதித்யாஸன ஸமாதிவடிவ வ்ருத்திஞானம் இங்கு இல்லாதொழிவதே பூஜா ஸமர்ப்பணம் என்று தத்வ நூல்கள் கூறுகின்றன.

நானேதான் அனைத்துமென்று ஞானி சொன்னான்!
நானேதான் செய்தோனும் ஏற்றோனும் ஆம்!
என்னிலே என்னைநான் பூஜை செய்தேன்!
ஏற்பதற்கு யாரை நான் அழைப்பதிங்கு?
விண்ணாக மண்ணாக விரவி விட்டேன்
வேதத்தின்வழி யென்ப தறிந்து விட்டேன்!
பண்ணதிலே ஏற்ற இறக்கம் பழகிய ஒன்று!
பரமாக நிறைந்துவிடு பாதம் பணிந்து!
கி






ஆத்மஸமர்ப்பணம் என்பது ஸஹஜஸ்திதி. இதுதான் அத்வைதாவஸ்தை, இந்த அவஸ்தை சிவசக்தி ஸாமரஸ்யமாக உள்ளது. இதுவே தான் விமர்சமாம். இந்த விமர்சம் ஸஹஜஸ்திதியில் லயமடைகிறது. அல்லது இரண்டும் ஒன்று என்ற ஸாமரஸ்ய உணர்வு ஆகிறது. இதுவேதான் தேவதோத்வாஸனம் என்பதாம்.

தஹராகாசம் என்ற இதயத்தாமரையிலிருந்து ஆவாஹனம் செய்யப்பட்டதினாலே இங்கு உத்வாஸனமும் அங்கேயே செய்கிறோம். கர்மம், பக்தி, வைராக்யம், குரூபஸதனம், லயம், மந்த்ரம், ஹடயோகாதிகள், வேதாந்த ச்ரவண,மனன நிதித்யாஸனம் என்கிறதான பலவகை வடிவமான ஸகல ஆவரண தேவதைகளையும் சித்சக்தி யிலே லயிக்கச்செய்து இதயத்தில்அதனை உத்வாஸனம் செய்கிறோம். (இதற்கு கேசரீ முத்ரையில் நிர்மால்ய புஷ்பத்தை எடுத்து அதன்மூலம் சித்சக்தியை தன்சுவாச ரூபமான ஹ்ருதயாகாசத்தில் ஸ்தாபிப்பது ஸம்ப்ரதாயமாம், தத்வமாம்.)
ஆத்மாவை அளிப்பதுவே ஸஹஜநிலை!
அத்வைத நிலையதுவே விமர்ச கலை!
இதயத்தில் இருத்தி நிற்க கேசரீ முத்ரை!
பதமாக மலரெடுத்து பரத்தில் லயிப்பாய்!
கி




ஸகல விதமான காமனைகளையும் பூரணமாக அடைந்து பொருந்தினவன் ஆத்மஞானி. இவனுக்கு இனிமேல் எங்குமே செய்யவேண்டிய கர்மசேஷம் இல்லவேயில்லை. எனவே ப்ரவ்ருத்தியும், நிவ்ருத்தியும் இல்லை. இது அலையில்லாத , ஆழமுடைய கடல்போல விளங்குவதாலே இதுவே சாந்தி என்பதாகும். இந்த நித்யத்ருப்த நிலையான சாந்தநிலை ஸமஸ்தஉலகங்களுக்கும் ஏற்படட்டும் -என்று கருணை முதலான இயற்கை குணங்களுடைய ஆத்மஞானி துதிக்கும் துதியே சாந்திஸ்தவம் ஆகும்.

லோகாஸ்ஸமஸ்தாஸ் ஸுகினோபவந்து - என்றபடி உலகநலனே எங்கும் நிறைக என்ற வேண்டுதலுடன் இந்த ஸ்ரீதேவி நவாவரணபூஜை என்ற யஜன க்ரியை முடிவடைகிறது.

ஞானியென்பான் சாந்தியிலே நிலைத்து வாழ்வான்!
ஞாலமெலாம் அமைதியாக சிந்தை செய்வான்!
பானத்தில் ஆவஹித்து பூஜை செய்வான்!
பூவுலக மகிழ்ச்சிக்கு பாலம் அமைப்பான்!
வானத்தில் வீர உரை விளங்கச் செய்தான் !
விரவிநிற்கும் மேதினியில் அமைதி நிலை!
கானமென கர்மத்தை நிறைவாய் ஆற்றி!
காசினியை வாழவைத்தான்! வாழி! வாழி!

கி











ஸ்ரீமஹாபூஜா மஹாதத்வ பூரிதாயதே நமோ நமஃ


இங்கு மானஸபூஜையான ஆத்மஞானபயிற்சி முடிவுற்று இருந்தோம், கண்டோம் என்ற இருநிலைமாறி அத்வைத, அத்விதீய சிவத்தோடு, பரசித்தோடு இரண்டறக்கலத்தல் என்ற நிலையில் ஸாதகன் அமைகிறான்.

பழுக்கக்காய்ச்சிய இரும்பிலே தெளிக்கப்பட்ட தண்ணீர் எவ்வாறு அதிலேயே உடனடியாக ஐக்கியமடைகிறதோ அதுபோல இங்கு மஹாப்ரகாசமான பரசித்திலே ஆத்மவ்ருத்தி லயமாகிற நிலையே இங்கு விசேஷார்க்கிய உத்வாஸனத்தின் தத்வமாய் நிற்கிறது.

(விசேஷார்க்கிய பாத்திரத்தை தலைவரை தூக்கி அதிலுள்ள அர்க்கியத்தை வேறுபாத்திரத்தில் விட்டு, உடன் கூடியிருக்கும் ஸாமயிகர்கள் யாவரும் முடிவாக ஒருபாத்ர யஜனத்தை ஆர்த்ரம் ஜ்வலதி . . . என்ற மந்த்ரம் கூறி செய்வது விசேஷ ஸம்ப்ரதாயம்.)

ஸ்ரீஅனந்த வேத ஸிரசி ப்ரசாந்தாயதே நமோ நமஃ
ஸ்ரீகாமேச மனரஞ்சித ஸத்குரவேதே நமோ நமஃ

ஓம் ஸஹநாவவது ஸஹனௌபுனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினாவதீதமஸ்துமாவித்விஷாவஹைஃ

ஓம் சாந்திஃ சாந்திஃ சாந்திஃ
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.  Empty Re: சிதானந்த அலை – நவாவரண பூஜையின் தத்துவ விளக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum