ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


ருதம்பராஞானஸபாவின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவுதின நினைவுகள் - 08-02-2014

Go down

ருதம்பராஞானஸபாவின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவுதின நினைவுகள் - 08-02-2014 Empty ருதம்பராஞானஸபாவின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவுதின நினைவுகள் - 08-02-2014

Post by arutsakthi Sat Feb 08, 2014 11:39 am

ஸ்ரீகுருப்யோ நம:
ருதம்பரா ஞான ஸபா, புதுடில்லி
ருதம்பராஞானஸபாவின் வெள்ளிவிழா ஆண்டு
நிறைவுதின நினைவுகள்

விஜயஆண்டு தை மாதம் 26ம் தேதி (08-02-2014) வெள்ளிக்கிழமை

அன்புடையீர்!

காலம் என்பது ஒருபரிமாணம். அதனால்தான் நாம் நமது வயது மற்றும் உலக நடைமுறை என்பதை தெரிந்து கொள்கிறோம். ஆனால் காலத்தை நிறுத்திவைக்க முடிவதில்லை. அது உலகஆக்கல் என்று தொடங்கியதோ அன்று தொட்டு கணக்காகிவிடுகிறது. நாம் நமது கணக்கில் மாதம், வருடம் என்று கணக்கிட்டுவருகிறோம். இந்த சிந்தனை நமக்கு ஏன் இப்போது வந்தது என்று பார்த்தோமானால் நமது ஸபா தொடங்கினது நினைவுக்கு வந்ததால்தான்.

அருட்சக்தியின் மனத்தகத்தில் தோன்றிய இந்த ருதம்பராஞானஸபா என்ற அமைப்பு தொடங்கினதாகக் கொண்டநாள் 1989ம் ஆண்டு ஜனவரி மாதம்17ம் தேதி அதாவது சுக்ல ஆண்டு தை மாதம் 4ம் தேதி மங்களவாரம் கிருத்திகை நÑத்திரம் கூடிய நன்னாள். அன்றேதான் நமது குருநாதர் பரமபூஜ்ய ஸ்ரீஅநந்தாநந்தநாதர் அவர்களின் ஜன்ம நக்ஷத்திரம். அது மட்டுமா குஹானந்தமண்டலி என்ற அமைப்பின் பெயருக்குக்காரணமான பரமபூஜ்ய ஸ்ரீகுஹாநந்தநாதர் அவர்களின் ஜன்ம நக்ஷத்திரமும் ஆகும். இவ்வாறான ஒரு ஸுதினத்தில்தான் அவர்களின் கருணையால் இந்த எண்ணம் தோன்றியது.

உலகில் எங்கெங்கெல்லாம் ஆத்மஞானத்தேடலுடன் மக்கள் இருக்கிறார்களோ, வேதாந்த ஞானத்துடன் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் இந்த ருதம்பராஞானஸபாவின் அங்கத்தினர்கள் ஆவார்கள் என்று அடியேன் மனத்தகத்தில் உறுதிகொண்டேன். அவர்கள் மாதமொருமுறையோ இருமுறையோ தாங்கள் ஒன்றுகூடி பகவன்நாமாவையோ, மந்த்ர ஜபத்தையோ, பூஜை, ஜபம், த்யானம் என்று செய்வதையோ இந்த ஸபாவிற்கு அவர்கள் செலுத்தும் சந்தாவாகக் என்னளவில் கருதிக்கொண்டேன். அவர்கள் பெயர்கள் விவரங்கள் எதுவும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதற்கு பொருளாதாரம் எதுவும் தேவையில்லை. நிதியாதாரமும் ஏற்படுத்திக் கொண்டதில்லை. நமது நடப்புக்கள் தான் இறைவனுக்கோ இறைவிக்கோ தெரியுமே! 'லோகாஸ்ஸமஸ்தாஸ்ஸுகீனோபவந்து' என்பதுதான் வேதமாயிற்றே! அது போதும்.

இவ்வாறு தோன்றின இந்த அமைப்பு திருவருளால் இன்றைக்கு 25 ஆண்டுகள் நிறைவேறி யுள்ளன. அதனால் அதன் வளர்ச்சியை திரும்பிப்பார்க்கிறோம்.

தொடக்கத்தில் பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைவேளையில் 4 மணிமுதல் 7 மணிவரையில் குருதத்வவிமர்சம் என்ற ஸ்ரீஸார் ஸ்ரீசிதானந்தநாதர் அவர்களின் நூல் தொடங்கி ஸ்வாத்யாயம் என்ற நிலையில் படிப்பது விளக்கம் சொல்வது என்றவாறு ஸத்ஸங்கம் நடத்தினோம். நடத்தினோம் என்றால் எத்தனை நபர்கள் என்ற விநா வருகிறதல்லவா! என்னையும் சேர்த்து 4 நபர்கள்தான். வீடோ இரண்டே அறை கொண்டது சமையல் அறையும் சேர்த்து. இந்த நாட்களில் கணினி ஆரம்ப கால Dos Mode பயன்பாட்டில் இருந்ததால் இதிலேயே ஸ்ரீவித்யாபூஜை,பாராயணங்களுக்கான தேவிமானகணனம் என்கிற அஷ்டாங்கத்தை சிவி.நாகசுந்தரம் செய்து நாங்களும் உபயோகி த்ததுடன் சென்னைவாழ் சில உபாஸகர்களுக்கும் அச்சிட்டு மாதகாலண்டராக விநியோகித்தோம். இவ்வாறு தொடங்கின இந்த ஸத்ஸங்கம் 1993 ம் ஆண்டுமுதல் புதுடில்லி வாஸம் ஏற்பட்டதால் அது சென்னை மாறி புதுடில்லியானது. இங்கும் உபாஸக நண்பர்கள் இருந்தார்கள். இதன் மத்தியில் ஸத்குருவின் கருணை இங்கும் ஸபா அங்கத்தினர்கள் ஏற்பட்டு வாராவாரம் ஸத்ஸங்கம் தொடர்ந்தது. இடையில் 'வைகரி' என்ற கையெழுத்து மாதசஞ்சிகை ஒன்றும் ஸ்ரீவித்யா சம்பந்தமான கட்டுரைகளுடன் சில பிரதிகள் அச்சிட்டு விநியயோகித்தோம். சில அங்கத்தினர்களின் உறவினர்கள் என சென்னையில் எற்பட்ட விரிவு மேலும் எண்ணிக்கை கூடியது. இதனால் எனக்கு சென்னை பயணம் அடிக்கடி ஏற்பட்டு வருடாந்திர பூஜை எனவும்,ஜபஹோமங்கள் எனவும், லக்ஷார்ச்சனை எனவும், ஸ்ரீவித்யா பட்டறை எனவும் தொடர்ந்து நடக்க ஏற்பட்ட வாய்ப்பானது அரிய பெரிய செயல்கள் அநாயாஸமாக நடைபெற ஸத்குருவருள் கூட்டிற்று. குறிப்பாக அருட்சக்தி எழுதிய 'ஸ்ரீகுருப்ரகாசமலர்' என்ற ஸ்ரீகுருஜி அவர்களின் வரலாறு,சிதானந்தஅலை என்ற நவாவரணபூஜையின் தத்துவவிளக்கம், ஸ்ரீதிதி நித்யாயந்த்ர படங்கள் பூஜையுடன், ஸ்ரீவித்யாஉபாஸகதர்மங்கள் என பல வெளியீடுகள் ஸபா சார்பில் வெளியிடப்பட்டன.

மேலும் ஸபா அங்கத்தினர்களின் மிகுந்த ஒத்தாசை, பிரயாசையுடன் நடைபெற்ற சில குறிப்பிட்ட நிகழச்சிகள்:

1. உலகில் உள்ள உபாஸகப்பெரியோர்கள், அங்கத்தினர்கள் அனைவரும் கூடி 10 கோடி ஸ்ரீபாலாமஹாமந்த்ர ஜபம் செய்து, அதில் பெரும்பாலானவர்களை சென்னையில் மடிப்பாக்கத்தில் 2007ல் கூட்டி, ஹோமம் செய்ய வைத்ததுடன் 51 பிரயத்யக்ஷகுமாரிகள் பூஜையும் விமரிசையாக இருதினங்கள் செய்தது.
2. கும்பகோணத்தில் 2008ல் ஸ்ரீலலிதாம்பிகா மங்களம் என்ற நாட்டிய நாடகத்தை அறங்கேற்றியது.
3. ஸ்ரீகுருஜி அவர்களின் மனத்தகத்தில் இருந்த ஸ்ரீலலிதாம்பிகா லக்ஷார்ச்சனையை விதிமுறை வழுவாமல் கும்பகோணத்தில் 2011 ல் பல ஸ்ரீவித்யாமண்டலித்தலைவர்கள் மற்றும் உபாஸகர்கள் உதவியுடன் மிக விமரிசை யாக இருதினங்கள் நடத்தியது.

இதனால் எங்கள் ஸாதனைகள் மேம்பட்டன. உபாஸகநண்பர்கள், மண்டலித்தலைவர்கள் என இந்த வட்டம் பெறுகிற்று. இதற்கெல்லாம் இன்றைய வலைத்தளங்களும், இணையதளங்களும், மின்னஞ்சலும், தொலைபேசிகளும் கைபேசிகளும் மிகுதியும் பயன்பட்டன. பயன்பட்டு வருகின்றன. முன்னேறிய கணினி பயன்பாட்டால் ஸ்ரீவித்யாபூஜை, பாராயணங்களுக்கான தேவிமானகணனம் என்கிற அஷ்டாங்கம் ஸங்கல்பத்துடன் இன்று வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் எளிமையாக அன்றன்று கைபேசியிலேயே பார்த்துக் கொள்ளும்படியாக எளிமையாக கிடைக்கின்றன. மிக அபூர்வமான, விசேஷமான ஸ்ரீவித்யாபாராயணங்கள், தினசரி செய்யவேண்டிய பாராயணங்கள் என ஆன்லைனிலேயே இப்போது செய்யலாம். நமது எண்ணங்கள், யோசனைகள், கட்டுரைகள், ஆன்மீகக்குறிப்புகள், ஆன்றோர் அறிவுறைகள் என அத்தனையையும் பகிர்ந்துகொள்ளலாம். பதிலும் கொடுக்கலாம். இதற்கு உலக மொழிகள் எதுவும் தடையில்லை.

இவ்வளவும் நமது ருதம்பராஞானஸபாவின் பெரிய ஸாதனைகள் என்றால் மிகையில்லை. ஆனால் எந்த வேலைக்கும் ஒருவரின் முயற்சியும் உழைப்பும் தேவையல்லவா! அதற்கு எனது குமாரன் திரு.நாகசுந்தரம் தன் பணியினையும், நேரத்தையும் மிகவும் இதற்காக செலவிட்டிருக்கிறான். ஸபாவிற்கென தனி இணையதளம் 'வைகரி' ( vaikari.net ) என்ற பெயரிலும், இணையமன்றம் (Forum) எனவும் தயாரிக்கப்பட்டு உபயோகத்தில உள்ளன. தேவிமானகணணம் என்கிற அஷ்டாங்கத்;துக்கு தனி மென்பொருள் (Software) கண்டதும் அவனே. மேலும் கைபேசியிலேயே இப்போது காணலாம். மேலும் அங்கத்தினர் திரு மு. கிருஷ்ணமூர்த்திஅய்யர் கவிதைகள் பதிவுக்கென தனிமன்றமும்(Forum), திரு நாகசுந்தரத்தின் 'அருள்தரும் ஆயிரம் தமிழிசைபாடல்கள்' என்ற ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்கள் பதிவுக்கென தனிமன்றமும்(Forum) அதிலேயே உள்ளன. அங்கத்தினர்களும் பெரும்பாலும் நமது தளத்தின் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள். பயன் பெறுகிறார்கள். மற்ற வெளியார்களும் பயன் பெறுகின்றனர்.
அனைவரும் தினசரி ஒருமுறை இணையதளம் 'வைகரி' ( vaikari.net ) சென்று பாருங்கள்.
இந்த வெள்ளிவிழா ஆண்டில் 31-01-2014 அன்று தொடங்கிய ஸ்ரீசியாமளா நவராத்திரியை முன்னிட்டும், வெள்ளிவிழாவை முன்னிட்டும் சென்னை திருமதி வி.சாவித்திரி தன் வீட்டில் மிக சுருக்கமாகவும், ஆத்மார்த்தமாகவும் ஸ்ரீலலிதாம்பிகைக்கு லக்ஷார்ச்சனை செய்துள்ளாள். அதன் பூர்த்திதினம் சரியாக 08-02-2014 இருபத்தைந்து (வெள்ளிவிழாஆண்டு) நிறைவாக அமைகிறது. எல்லாம் ஸத்குரு கருணையால் விளைந்த திருவருள் ஆசிகள்.

இவ்வாறாக நமது ருதம்பரா ஞானஸபாவின் 25 ஆண்டு கால வளர்ச்சியினை இங்கு சற்று நினைவு படுத்திக்கொண்டோம். இது இன்னும் மேன்மேலும் வளர்ந்து ஸ்ரீவித்யா உபாஸகர்களுக்கும், மற்ற ஏனையோர்க்கும் பயன்பட்டு ஆத்மஞானதேடல் விரிவடைந்து நமது ஸத்குருநாத மண்டலியின் புகழ் பரவவேணுமாய் எல்லாம்வல்ல பராசக்தியை வேண்டுவோம்.
சாதனையும் பக்தியும் தான் ஒருவனை ஆத்ம ஞானம் அடைய வைக்கும்.. சிந்தியுங்கள் ! உபாசக தர்மத்தை கடைப்பிடியுங்கள் ! தான் தான் என்ற கர்வத்தை விடுங்கள்1 அனைவரிடமும் அன்பாய் இருங்கள். எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டுபோக போவதில்லை. குரு வழி அருள் வழி!
ஆசிகள்.
உங்கள் சொந்த ஆத்மன்.
அருட்சக்தி நாகராஜன்
08-02-2014
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum