Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
அனந்தம் நீ, அருளும் நீ - 109 வது ஆண்டு ஜயந்திதின கவிதை
Page 1 of 1
அனந்தம் நீ, அருளும் நீ - 109 வது ஆண்டு ஜயந்திதின கவிதை
அனந்தம் நீ, அருளும் நீ
(109 வது ஆண்டு ஜயந்தி – தைகார்த்திகை- 25, ஜனவரி 2010)
அருளைத்தந்திட்ட அருட்குருவே ! வாழி நீ !
அருட்கவிதன் அருமைச்சீடராய் அவனிவந்தாய் !
குஹையினில் குமரராம் குஹானந்த குரு நீ !
குஹையில் குடிகொண்ட ஆத்மாவின் அறிவு நீ !
விமலப்ரகாச விமர்ச அனந்தவித்து நீ !
அமலம் நீக்கியெனையாண்ட வித்தகா வாழி !
அனந்தம் நீ அருளும் நீ அற்புதம் நீயே !
சடமனதை மடலெழுதி மாற்றி விட்டாய் !
விடயல்கருப்பூர் வந்து விடியல் செய்தாய் !
கடல் சேரும் காவிரியில் கதையைச் சொன்னாய் !
இடம் வேறு இருந்தாலும் உளம் கவர்ந்தாய் !
படம் போட்ட யந்திரத்தால் புடம் போட்டாய் !
உடன் உள்ளேன் நான் என்று உரம் தந்தாய் !
மடம் நான் எழுதிய மடலையும் ஏற்றாய் !
விடமான வாழ்வுக்கு விளக்கமும் தத்தாய் !
உட்கார்ந்த ஆஸனமும் உண்மை பேசும் ! நீ
உட்கார்ந்த ஆஸனமும் உண்மை பேசும் !
சாய்நாற்காலியில் சாய்ந்திருந்தாலும் - மனம்
சாயாத திடம் கொண்ட ஸத்குரு நீ !
வட்டசெந்திலகம் விளக்கம் சொல்லும் !
சட்டம் வகுக்கும் ஸ்ரீவித்தைக்காங்கு !
கட்ட வாழ்விற்கு கருத்துதந்து ஆண்டாய் !
திட்டம் தீட்டியே தயையினைச் செய்தாய் !
தாடியுடன் தடி கொண்ட தயாபரனே!
பாடிவிட மனம் கொண்டேன் பாக்களினால் !
தேடிநான் வரவில்லை தானே வந்தாய் ! -உன்
மூடிவைத்த பாட்டெல்லாம்
தாடிவழி வழிந்து விட்டதோ?
கைகொண்ட தடியினால் கர்மம் கடிந்தாய் !
கையால் முத்ரை கொண்ட கலை தந்தாய் !
மைபோட்டு மயக்குவது ஸித்தி இல்லை! - மடலின்
மையினால் மயக்கத்தை தெளிய வைத்தாய் !
ஐயமற ஞானத்தை அறிய வைத்தாய் !
தையலவள் தாயுமவள் தன்மை சொன்னாய் !
கூடிவிட வழிசொன்னாய் குணம் தந்தாய் !
ஆடிவரும் மனம் தன்னை அடக்கிவிட்டாய் !
கோடிபணம் கொடுத்தாலும் கடமை நீக்கிடாய் !
வாடிநின்ற எந்தனுக்கு வழியும் சொன்னாய் !
தள்ளாமை தேஹம் உமக்கு!
மெள்ள மெள்ள நடையுடையீர் !
விள்ளி விள்ளி வைத்திட்டாய் வேதாந்தத்தை !
அள்ளி குடித்திடவே அழகான கவி தந்தாய் !
தள்ளி வைத்தாயே அக்ஞான அரட்டைகளை !
புள்ளி வைத்த கோலமாக புத்தியில்வந்தாய் !
எள்ளி நகையாடி எமனைத் துறத்திவிட்டாய் !
அன்புக்கு இலக்கணமாம் உன் அன்புமனம்; !
பண்புக்கு பாடமாம் உந்தன் வாழ்க்கை !
வம்புக்கு போகாமல் வேதம் சொன்னாய் !
உம்பரின் உலகத்தை உதறி நின்றாய் !
கம்பரைப் போல் கவிஞனாம் கவி படைத்தாய் !
சும்பரை வதைத்தவளின் சூக்குமம் அறிந்தாய் !
கோபத்தில் குணமுண்டு என்பார் உலகில்- உமது
கோபத்தைக் கண்டவன் யான்- அதனால் எந்தன்
பாபமெல்லாம் போகக்கண்டேன்! - மற்றும் எந்தன்
தாபத்தையும் நீக்கிவிட்டீர்!
பட்டஆசையெல்லாம் பலோன்முகமாயினவே !
இட்ட நிட்டையினை இங்கேயே காட்டினீர் !
துட்ட இச்சையினை தூரமாய் துரத்தினீர் !
அட்டமா சித்திகளும் அருகிலே வந்தனவே !
வட்டமான சக்ரத்தின் வாகினை உணர்த்தினீர் !
சுட்ட பழம்தந்த சுந்தரனாம் உன் வடிவு !
இடப்பட்ட இனிய நீர் என்வாயில் விழுந்ததுபோல்
கிட்டவந்து கிட்டடியது கடிதான ப்ரம்மஞானம் !
பட்டம் படிக்கவில்லை பாரிதிலே ஆசையில்லை !
சொன்ன அறிவுரைகள் காதிலே விழவில்லை?-அன்றி
மனதினிலே நேராக மோதி விழுந்ததுவே !
காஷpப்பொருளினை கண்ணாலே கண்டேனோ?-அன்றி
உன்னி மனம் தன்னிலே உத்தமமாய் ஓடியதே !
கடின இரும்புகூட காசியினில் தங்கமாகும் ! -உன்
நெடிதான உருவத்தால் கடிமனதும் உருகியதே !
வில்விசயனுக்கு வேதாந்தம்சொன்னதுபோல்
கல்மனது எந்தனுக்கும் கடமை சொன்னீரே !
தற்;பெருமை பேசாது தண்மை தந்தீரே ! அதனால்
உற்பவித்த ஞானத்தை உனக்கே தந்திடுவேன் !
அற்புதமாம் உன் வடிவு ஆனந்த மயமேதான் !
சொற்பவித்த உடனேயே சுந்தரமாய் ஆனதுவே !
செறிஞானத்தை சிந்தனையில் கொண்டுவிட்டால்
புரிந்துவிடும் புவனத்தின் பதியாக ஆகிடுவேன் !
அறியவைத்த உன்புகழை பெரிதாகப் பாடிடுவேன்!
இயல்பான உன்புகழை எப்படி நான் பாடிடுவேன் !
மணமான சந்தனம் நல்வாசனை கேட்குமோ? -உன்
மணம்வீசும் உபதேசம் ஒன்றே போதுமைய்யா !
பரந்த ஆகாசத்தை ஏணியால் அளப்போமா? -உன்
பரந்த ஞானத்தில் நான் பாமரனாய் ஆகிவிட்டேன் !
கறந்த பாலாக கையிலே கொடுத்தாயே!உன்னால்
துறந்து தொலைத்திட்டேன் துன்ப அக்ஞானம் !
சிவசக்தி உலகென்று சிந்தித்து வாழ்ந்தவரே !
பவத்தைப் போக்கிடவே உன்னடி பணிந்திட்டேன்
சிவசக்தி ஸர்வமென்று சாத்திரம் படைத்தவரே !
தவமெல்லாம் உன்பாதம் சரணம் அடைவதுவே !
நான் என்ற அஹங்காரம் நீக்கு என்றாய்!
நானாகும் ப்ரம்மத்தை நன்றாய் பாரென்றாய் !
தேனாய் இனிக்கின்ற தத்துவத்தைத் தந்தாய் !
கூனிக்குறுகாமல் தலை நிமிர்ந்து வாழ்ந்தாய் !
ஆனிப்பௌர்ணமிக்கு அழகைத் தந்தாய் !
தேனாம் கணபதிக்கு தந்தாயே பத்ததியை !
தேனிக்கூட்டமென தொடரவைத்தாய் உனையே!
நானிலத்திலுய்யும் வகை நவின்று விட்டாய் !
வானைப்பார்த்த முகமுனக்கு! வீரராம் நீ வாழி; !
சிவமும் சக்தியுமே சேர்ந்த உலகென்றாய் !
பவக்கடலைப் கடக்க ஒரு படகமைத்தாய் !
தவமென்றால் தயையென்று தத்துவம் சொன்னாய் !
புவனமெலாம் பரிபுரையின் படைப்பென்றாய் !
துவளும் உள்ளமதில் சரணம் பதிப்பாய் -என
பவவினை போக்கிடவே பாடம் தந்தாய் !
சவமாகும் ஓர் நாள் யாக்கை என்றே
நவநவ நாயகியின் நோன்பை நோற்றாய் !
தோய்த்து வைத்த துணிக்குவிழுப்பேது என்றாய் !
ஆய்ந்தாலேதான் அதிலும் ஓர் தத்துவமும் உண்டு!
மேய்கின்ற மனமதில் ஞானம் தோய்த்தால் - பின்பு
தூய்மைபெற தத்துவமும் மீண்டும் எதற்கு ?
காய்ந்துபோன கட்டையது துளிர்க்க வேண்டாம் !
ஓய்வாக அமர்ந்துவிட்டால் ஓட்;டம் எதற்கு ?
மண்டலிக்கு மூத்த பெரியோய் நீர்!
சுண்டெலியெல்லாம் சுருளச்செய்தீர் !
கண்டவரெல்லாம் கைதொழவே
மண்ணதில் மஹிமையாய் வாழ்ந்தீரே!
தானே கிடைத்தாலும் கிடைத்தது போகாது -ஞானம்
தானே கிடைத்தாலும் கிடைத்தது போகாது
உலகம் அடைந்திடவே உண்மைஉரைக்கின்றேன்
கலகம் தவிர்த்து நல்ஸத்குருவை சரணடைவீர் !
துரீயமாம் பெண்னொருத்தி தானுமுண்டு !அவளை
அறியாமை நீக்கி அரவணைத்து வாழ்வீரே !
எத்தனை மஹான்கள். எத்தனை ஸித்தர்கள்.
அத்தனைபேரும் அன்னவரின் அருந்துணையாம்.
எத்தனை பிறவியான் எடுத்தாலும்
அத்தனையிலும் அனந்தனே எம்குருவாம் - ஆனால்
பிறவிதான் எனக்குண்டோ ஐயா! எந்தன்
பிறவிகெட என்னையும் பார்த்து விட்டாயே !
(109 வது ஆண்டு ஜயந்தி – தைகார்த்திகை- 25, ஜனவரி 2010)
அருளைத்தந்திட்ட அருட்குருவே ! வாழி நீ !
அருட்கவிதன் அருமைச்சீடராய் அவனிவந்தாய் !
குஹையினில் குமரராம் குஹானந்த குரு நீ !
குஹையில் குடிகொண்ட ஆத்மாவின் அறிவு நீ !
விமலப்ரகாச விமர்ச அனந்தவித்து நீ !
அமலம் நீக்கியெனையாண்ட வித்தகா வாழி !
அனந்தம் நீ அருளும் நீ அற்புதம் நீயே !
சடமனதை மடலெழுதி மாற்றி விட்டாய் !
விடயல்கருப்பூர் வந்து விடியல் செய்தாய் !
கடல் சேரும் காவிரியில் கதையைச் சொன்னாய் !
இடம் வேறு இருந்தாலும் உளம் கவர்ந்தாய் !
படம் போட்ட யந்திரத்தால் புடம் போட்டாய் !
உடன் உள்ளேன் நான் என்று உரம் தந்தாய் !
மடம் நான் எழுதிய மடலையும் ஏற்றாய் !
விடமான வாழ்வுக்கு விளக்கமும் தத்தாய் !
உட்கார்ந்த ஆஸனமும் உண்மை பேசும் ! நீ
உட்கார்ந்த ஆஸனமும் உண்மை பேசும் !
சாய்நாற்காலியில் சாய்ந்திருந்தாலும் - மனம்
சாயாத திடம் கொண்ட ஸத்குரு நீ !
வட்டசெந்திலகம் விளக்கம் சொல்லும் !
சட்டம் வகுக்கும் ஸ்ரீவித்தைக்காங்கு !
கட்ட வாழ்விற்கு கருத்துதந்து ஆண்டாய் !
திட்டம் தீட்டியே தயையினைச் செய்தாய் !
தாடியுடன் தடி கொண்ட தயாபரனே!
பாடிவிட மனம் கொண்டேன் பாக்களினால் !
தேடிநான் வரவில்லை தானே வந்தாய் ! -உன்
மூடிவைத்த பாட்டெல்லாம்
தாடிவழி வழிந்து விட்டதோ?
கைகொண்ட தடியினால் கர்மம் கடிந்தாய் !
கையால் முத்ரை கொண்ட கலை தந்தாய் !
மைபோட்டு மயக்குவது ஸித்தி இல்லை! - மடலின்
மையினால் மயக்கத்தை தெளிய வைத்தாய் !
ஐயமற ஞானத்தை அறிய வைத்தாய் !
தையலவள் தாயுமவள் தன்மை சொன்னாய் !
கூடிவிட வழிசொன்னாய் குணம் தந்தாய் !
ஆடிவரும் மனம் தன்னை அடக்கிவிட்டாய் !
கோடிபணம் கொடுத்தாலும் கடமை நீக்கிடாய் !
வாடிநின்ற எந்தனுக்கு வழியும் சொன்னாய் !
தள்ளாமை தேஹம் உமக்கு!
மெள்ள மெள்ள நடையுடையீர் !
விள்ளி விள்ளி வைத்திட்டாய் வேதாந்தத்தை !
அள்ளி குடித்திடவே அழகான கவி தந்தாய் !
தள்ளி வைத்தாயே அக்ஞான அரட்டைகளை !
புள்ளி வைத்த கோலமாக புத்தியில்வந்தாய் !
எள்ளி நகையாடி எமனைத் துறத்திவிட்டாய் !
அன்புக்கு இலக்கணமாம் உன் அன்புமனம்; !
பண்புக்கு பாடமாம் உந்தன் வாழ்க்கை !
வம்புக்கு போகாமல் வேதம் சொன்னாய் !
உம்பரின் உலகத்தை உதறி நின்றாய் !
கம்பரைப் போல் கவிஞனாம் கவி படைத்தாய் !
சும்பரை வதைத்தவளின் சூக்குமம் அறிந்தாய் !
கோபத்தில் குணமுண்டு என்பார் உலகில்- உமது
கோபத்தைக் கண்டவன் யான்- அதனால் எந்தன்
பாபமெல்லாம் போகக்கண்டேன்! - மற்றும் எந்தன்
தாபத்தையும் நீக்கிவிட்டீர்!
பட்டஆசையெல்லாம் பலோன்முகமாயினவே !
இட்ட நிட்டையினை இங்கேயே காட்டினீர் !
துட்ட இச்சையினை தூரமாய் துரத்தினீர் !
அட்டமா சித்திகளும் அருகிலே வந்தனவே !
வட்டமான சக்ரத்தின் வாகினை உணர்த்தினீர் !
சுட்ட பழம்தந்த சுந்தரனாம் உன் வடிவு !
இடப்பட்ட இனிய நீர் என்வாயில் விழுந்ததுபோல்
கிட்டவந்து கிட்டடியது கடிதான ப்ரம்மஞானம் !
பட்டம் படிக்கவில்லை பாரிதிலே ஆசையில்லை !
சொன்ன அறிவுரைகள் காதிலே விழவில்லை?-அன்றி
மனதினிலே நேராக மோதி விழுந்ததுவே !
காஷpப்பொருளினை கண்ணாலே கண்டேனோ?-அன்றி
உன்னி மனம் தன்னிலே உத்தமமாய் ஓடியதே !
கடின இரும்புகூட காசியினில் தங்கமாகும் ! -உன்
நெடிதான உருவத்தால் கடிமனதும் உருகியதே !
வில்விசயனுக்கு வேதாந்தம்சொன்னதுபோல்
கல்மனது எந்தனுக்கும் கடமை சொன்னீரே !
தற்;பெருமை பேசாது தண்மை தந்தீரே ! அதனால்
உற்பவித்த ஞானத்தை உனக்கே தந்திடுவேன் !
அற்புதமாம் உன் வடிவு ஆனந்த மயமேதான் !
சொற்பவித்த உடனேயே சுந்தரமாய் ஆனதுவே !
செறிஞானத்தை சிந்தனையில் கொண்டுவிட்டால்
புரிந்துவிடும் புவனத்தின் பதியாக ஆகிடுவேன் !
அறியவைத்த உன்புகழை பெரிதாகப் பாடிடுவேன்!
இயல்பான உன்புகழை எப்படி நான் பாடிடுவேன் !
மணமான சந்தனம் நல்வாசனை கேட்குமோ? -உன்
மணம்வீசும் உபதேசம் ஒன்றே போதுமைய்யா !
பரந்த ஆகாசத்தை ஏணியால் அளப்போமா? -உன்
பரந்த ஞானத்தில் நான் பாமரனாய் ஆகிவிட்டேன் !
கறந்த பாலாக கையிலே கொடுத்தாயே!உன்னால்
துறந்து தொலைத்திட்டேன் துன்ப அக்ஞானம் !
சிவசக்தி உலகென்று சிந்தித்து வாழ்ந்தவரே !
பவத்தைப் போக்கிடவே உன்னடி பணிந்திட்டேன்
சிவசக்தி ஸர்வமென்று சாத்திரம் படைத்தவரே !
தவமெல்லாம் உன்பாதம் சரணம் அடைவதுவே !
நான் என்ற அஹங்காரம் நீக்கு என்றாய்!
நானாகும் ப்ரம்மத்தை நன்றாய் பாரென்றாய் !
தேனாய் இனிக்கின்ற தத்துவத்தைத் தந்தாய் !
கூனிக்குறுகாமல் தலை நிமிர்ந்து வாழ்ந்தாய் !
ஆனிப்பௌர்ணமிக்கு அழகைத் தந்தாய் !
தேனாம் கணபதிக்கு தந்தாயே பத்ததியை !
தேனிக்கூட்டமென தொடரவைத்தாய் உனையே!
நானிலத்திலுய்யும் வகை நவின்று விட்டாய் !
வானைப்பார்த்த முகமுனக்கு! வீரராம் நீ வாழி; !
சிவமும் சக்தியுமே சேர்ந்த உலகென்றாய் !
பவக்கடலைப் கடக்க ஒரு படகமைத்தாய் !
தவமென்றால் தயையென்று தத்துவம் சொன்னாய் !
புவனமெலாம் பரிபுரையின் படைப்பென்றாய் !
துவளும் உள்ளமதில் சரணம் பதிப்பாய் -என
பவவினை போக்கிடவே பாடம் தந்தாய் !
சவமாகும் ஓர் நாள் யாக்கை என்றே
நவநவ நாயகியின் நோன்பை நோற்றாய் !
தோய்த்து வைத்த துணிக்குவிழுப்பேது என்றாய் !
ஆய்ந்தாலேதான் அதிலும் ஓர் தத்துவமும் உண்டு!
மேய்கின்ற மனமதில் ஞானம் தோய்த்தால் - பின்பு
தூய்மைபெற தத்துவமும் மீண்டும் எதற்கு ?
காய்ந்துபோன கட்டையது துளிர்க்க வேண்டாம் !
ஓய்வாக அமர்ந்துவிட்டால் ஓட்;டம் எதற்கு ?
மண்டலிக்கு மூத்த பெரியோய் நீர்!
சுண்டெலியெல்லாம் சுருளச்செய்தீர் !
கண்டவரெல்லாம் கைதொழவே
மண்ணதில் மஹிமையாய் வாழ்ந்தீரே!
தானே கிடைத்தாலும் கிடைத்தது போகாது -ஞானம்
தானே கிடைத்தாலும் கிடைத்தது போகாது
உலகம் அடைந்திடவே உண்மைஉரைக்கின்றேன்
கலகம் தவிர்த்து நல்ஸத்குருவை சரணடைவீர் !
துரீயமாம் பெண்னொருத்தி தானுமுண்டு !அவளை
அறியாமை நீக்கி அரவணைத்து வாழ்வீரே !
எத்தனை மஹான்கள். எத்தனை ஸித்தர்கள்.
அத்தனைபேரும் அன்னவரின் அருந்துணையாம்.
எத்தனை பிறவியான் எடுத்தாலும்
அத்தனையிலும் அனந்தனே எம்குருவாம் - ஆனால்
பிறவிதான் எனக்குண்டோ ஐயா! எந்தன்
பிறவிகெட என்னையும் பார்த்து விட்டாயே !
Similar topics
» அருட்சக்தி ஸ்ரீகுருநாதரின் 77 ஆம் ஆண்டு ஜயந்திதின கவிதை (இடைமருதன்)
» அன்பும் அருளும் எந்தன் குருவே
» ஆயிரம் நாமங்களும் ஸ்ரீபெரியவாளின் அருளும்
» ருதம்பராஞானஸபாவின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவுதின நினைவுகள் - 08-02-2014
» பிறந்தநாள் கவிதை !
» அன்பும் அருளும் எந்தன் குருவே
» ஆயிரம் நாமங்களும் ஸ்ரீபெரியவாளின் அருளும்
» ருதம்பராஞானஸபாவின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவுதின நினைவுகள் - 08-02-2014
» பிறந்தநாள் கவிதை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum