ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா

Go down

உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா Empty உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா

Post by arutsakthi Tue Oct 15, 2013 7:31 am



உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா

அருள்மொழிகள்.

அம்பாளிடம் நாம் இன்னின்ன வேண்டும் என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?ஆனாலும் மலயத்வஜ பாண்டியனின் புத்திரியான ஹே மீனாக்ஷி. மனஸில் உள்ள குறையை வாய்விட்டுச் சொல்லாவிட்டால், அது உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் இப்படிப் பிரார்த்தனைப் பண்ணுகிறேன். உனக்குத் தெரியாததைத் தெரியப்படுத்துவதற்காக அல்ல. எனக்கு உள்ளே கருணைக்கிழங்கு மாதிரி அரிப்பதைக் கொஞ்சம் , சமனப்படுத்திக் கொள்ளவே பிரார்த்தனை பண்ணுகிறேன் என்று நீலகண்ட தீக்ஷிதர் ஆனந்த ஸாகர ஸ்தவம் என்கிற ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்.
நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களை உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது. லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது. மனஸில் இந்த அன்பு ஊறாமலே வாய்ப்பேச்சில் இன்று சகோதர சகோதரிகளே என்று பிரசங்கம் பண்ணி சமத்துவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறோம். அம்பாளிடம் பக்தி பண்ணாத வரையில் இது அநுபவத்தில் வராத வாய்ச் சவடால்தான். புரளிதான். சாக்ஷ்த் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே, உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா. லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான். அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள் என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபாசிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சந்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது என்கிறார் மூகர்.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா Empty Re: உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா

Post by arutsakthi Tue Oct 15, 2013 7:34 am

இதுதான் உண்மையின் விளக்கம் ---- சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்
வாக்கு சரியாக இருக்க வேண்டும். நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். உண்மையையும், பிறருக்குத் துன்பம் கொடுக்காமலும், அன்பு, பிரேமை, சாத்வீகத்துடனும் நிதானமாகப் பேச வேண்டும். ராமபிரானைப் பற்றிச் சொல்லும் போது "ராமோ தீவிர்நாபி பாஷதே' என்பார்கள். இரண்டு தடவை ராமபிரானிடத்திலிருந்து சப்தம் வராது. "கொடுத்தேன் என்றால் கொடுத்தார்; மறுபேச்சு பேசமாட்டார். "கொடுக்கிறேன்' என்று சொல்லிவிட்டு "நாளைக்கு வா, நாளன்னிக்கு வா' என்று திரும்பத் திரும்பச் சொல்லுகிற பழக்கமெல்லாம் அவரிடத்தில் கிடையாது. அது வாக்கினுடைய தர்மம். மனதிலே என்ன நினைக்கிறோமோ அது தான் வாக்கிலே வர வேண்டும்; அது தான் செயலிலே வர வேண்டும். இதுதான் உண்மையின் விளக்கம். அந்த வகையிலே நாம் இருக்க வேண்டுமென்றால் நல்ல குணத்தோடு கோபமில்லாத நிலையில் இருந்தால் தான், இந்த நிலையெல்லாம் நமக்கு வரும். ஆகவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் நல்லதைச் செய்ய வேண்டும். நல்லதைப் பேசுவதற்குப் பழக்கம் பண்ணிக் கொள்ள வேண்டும். கோபம் என்பது பேச்சிலேயோ, காரியத்திலேயோ, ஏன் மனதிலே கூடத் தோன்றக்கூடாது என்பதை வைத்துத் தான் "ஆறுவது சினம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா Empty Re: உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா

Post by arutsakthi Tue Oct 15, 2013 7:35 am

வாக்கு சரியாக இருக்க வேண்டும். நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். உண்மையையும், பிறருக்குத் துன்பம் கொடுக்காமலும், அன்பு, பிரேமை, சாத்வீகத்துடனும் நிதானமாகப் பேச வேண்டும்.
ராமபிரானைப் பற்றிச் சொல்லும் போது "ராமோ தீவிர்நாபி பாஷதே' என்பார்கள். இரண்டு தடவை ராமபிரானிடத்திலிருந்து சப்தம் வராது. "கொடுத்தேன் என்றால் கொடுத்தார்; மறுபேச்சு பேசமாட்டார். "கொடுக்கிறேன்' என்று சொல்லிவிட்டு "நாளைக்கு வா, நாளன்னிக்கு வா' என்று திரும்பத் திரும்பச் சொல்லுகிற பழக்கமெல்லாம் அவரிடத்தில் கிடையாது. அது வாக்கினுடைய தர்மம்.
மனதிலே என்ன நினைக்கிறோமோ அது தான் வாக்கிலே வர வேண்டும்; அது தான் செயலிலே வர வேண்டும். இதுதான் உண்மையின் விளக்கம். அந்த வகையிலே நாம் இருக்க வேண்டுமென்றால் நல்ல குணத்தோடு கோபமில்லாத நிலையில் இருந்தால் தான், இந்த நிலையெல்லாம் நமக்கு வரும்.
ஆகவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் நல்லதைச் செய்ய வேண்டும். நல்லதைப் பேசுவதற்குப் பழக்கம் பண்ணிக் கொள்ள வேண்டும். கோபம் என்பது பேச்சிலேயோ, காரியத்திலேயோ, ஏன் மனதிலே கூடத் தோன்றக்கூடாது என்பதை வைத்துத் தான் "ஆறுவது சினம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

... ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ மஹாபெரியவாளின் உபதேசங்கள்
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா Empty Re: உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா

Post by arutsakthi Tue Oct 15, 2013 7:36 am

நிலையான இன்பம் எது?
* எந்தச் செயலையும் அதற்குரிய தர்மத்துடன் முறையாகச் செய்ய வேண்டும். முறை பிறழும் போது, அதற்கான பின்விளைவை ஏற்றுத் தான் ஆகவேண்டும்.
* நமக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அநியாயமாகத் தெரியலாம். அதனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான நியாயத்தைச் செய்வது தான் நல்லது.
* நிலையான இன்பம் என்பது கடவுளிடம் கொள்ளும் பக்தி மட்டுமே. ஆசாபாசங்களில் நாட்டம் உள்ள வரை அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும்.
* ஒருவனுக்கு பணமும், பதவியும் இருக்கும்போது உண்டாகும் சுகத்தைவிட, அதைப் பாதுகாக்கவேண்டும், பதவி போய்விடக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது.
* உலகில் இருப்பவர்கள் எல்லாருமே, தாங்களே மகாபுத்திசாலி, ஒழுக்கமுள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல தன்னைப் போல கஷ்டப்படுபவர்களும் வேறு யாருமில்லை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.
* நம் கோபம் எதிராளியை மாற்றாது. மாறாக நம் மீது மேலும் எதிர்ப்பை வளர்க்க செய்யும். அதனால், கோபம் இரு தரப்பிலும் வெறுப்பினை அதிகரிக்கவே செய்கிறது.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா Empty Re: உபாசனை பற்றி-அருள்மொழிகள் - பெரியவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum