Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
ஸ்ரீகாமேச்வரியின் 67 ஆவது ஜயந்தியும் – ஸ்ரீசக்ரநவாவரணபூஜையும்
2 posters
Page 1 of 1

சென்னை - மடிப்பாக்கத்தில் 22-02-2015 ஞாயிறு அன்று நடைபெற்ற வைபவத்தின் விவரம்.
சென்னை - மடிப்பாக்கத்தில் இருக்கும் நமது ஸபா அங்கத்தினரான ஸ்ரீமதி சாவித்திரி தான் வீடுவாங்கி குடிவந்ததிலிருந்து தனது வீட்டில் பூஜையும் அனைவருக்கும் விருந்தும் செய்யவேணுமென அடிக்கடி சொல்லி வந்தாள். அதற்கான சமயத்தை அன்னை இப்போதுதான் ஏற்படுத்திக்கொடுத்தாள் என்று கொள்ளலாம்.
அவள் குறிப்பிட்டவாறு தன் குருபத்னியும் எனது சக்தியுமான ஸ்ரீமதி புவனேச்வரியின் 67 ஆவது பிறந்தநாளான மாசி பரணி நக்ஷ்த்திரத்தில் செய்யலாம் என நினைத்தோம். ஆனால் அன்று புதன்கிழமையானதால் நமது அங்கத்தினர்களின் லெளகீக அசெளகரியத்தை கருத்தில் கொண்டு இருநாட்கள் முன்னதாக 22-02-2015 ஞாயிறு அன்று நடத்தலாம் என எண்ணி தொடங்கப்பட்டது. இதன் மத்தியில் எனது மனதில் வெகுநாட்களாக சிந்தித்திருந்த நவாவரணபூஜையின் விளக்கவுரையையும் இதில் இணைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு ஒரு பெரிய ஸ்ரீசக்ரம் அதில் உள்ள தேவிகளின் பெயர்களுடன் தேவைப்பட்டது. உடன் நானும் எனது குமாரனும் அதனை கணினியில் வரைய முற்பட்டு பல முறை முயன்று முயன்று ஒருவாறாக ஒரு ஸ்ரீயந்த்ரம் உருவானது. அதனை அச்சிடவேணுமே! கணினி கூகுள் உதவியுடன் சென்னையில் ஒரு பிரிண்டரின் விலாசம் கிடைத்தது. அங்கு மெயிலில் படம் அனுப்பினால் அது பெரிய அளவில் இருந்ததால் போகவில்லை. மறுபடியும் வேறு விதத்தில் வரைந்து அனுப்பினோம். அவரும் அச்சிட்டுத்தருதாக சொன்னதில் முதல் வேலை முடிவுக்கு வந்தது. இதன் இடையிலேயே அடுத்ததாக ஸ்ரீசக்ர தேவிகளின் உருவங்கள் தேவைக்கான தேடல்கள் நடைபெற்று வந்தன. அந்தந்த ஆவரணங்களின் இடத்தில் விக்ரகங்களை வைத்து விளக்கம் செய்யலாம் என்ற நிலையில் கும்பகோணம், ஸ்வாமிமலை ஆகிய இடங்களில் சிறிய விக்ரகங்களாக கிடைக்கவில்லை. கிடைத்ததும் முகம் அமைப்பு சரியில்லை. எனவே விக்ரகங்களுக்கு பதில் மஞ்சள் கிழங்கையே வைத்து பூஜிக்கலாம் என்று அருளாணை கிடைத்தது. இந்நிலையில் பூஜையை ஸ்ரீமதி சாவித்திரியின் வீட்டில் எங்கு செய்யலாம் என்று யோஜித்து முடிவெடுக்க அவளே இங்கு டில்லியில் ஸ்ரீகாமேச்வரியின் ஆராதனை-பூஜையில் பங்கெடுக்க வழக்கம்போல் இங்கு இருந்ததால் சுலபமாயிற்று. கீழே கார் ஷெட்டில் மிக அழகாக நடத்தலாம் என்ற நிலையில் ஏற்பாடுகள் செய்தோம்,
கும்பகோணத்தில் மஞ்சள்கிழங்கு வாங்கப்பட்டது. திருவல்லிக்கேணியில் மிக அழகாக தயாரிக்கப்பட்ட ஸ்ரீசக்ரம் (36"x36") வந்துவிட்டது. மற்ற சாமான்களும் தயாரானது. புஷ்பங்களோ வந்து குவிந்துவிட்டன. ஸ்ரீகுருநாதர் எதிரில் நேரில் அமர்ந்திருப்பதுபோல் அவர்களது உருவம் தயாராகி அமர்ந்ததும் அற்புதம்தான். இதன் மத்தியில் நமது அன்புக்கு பாத்திரமான நண்பர் ஸதுபாஸகப்ரியதமா: ஸ்ரீரமேஷ் தம்பதியும் இதில் கலந்துகொள்ள விரும்பி உடனிருந்து மட்டுமில்லை. தக்கவாறு அபூர்வமான விளக்கங்களை தனக்கே உரிய விதத்தில் சொன்னது பலருக்கு நல் வெளிச்சம். பின் பூஜை நடைபெற்றவிதம் நீங்கள் யாவரும் அறிந்ததே! பூஜைக்கான இடமும், வசதிகளும், மனுஷ்யாள் உதவிகளும், நினைத்தவாறு (நினைவே குருவினது) நினைத்தபடி மிக சிறப்பாக நடந்தது அருளின் ஆற்றல்தான். இன்னவாறு இன்னபடி இன்னாரால் இதுநடக்கும் என்பது சக்தியின் நியமனமாயிற்றே! அதுதான் நடந்தது. இதில் நாம் மார்தட்டிக்கொள்ள ஒன்றுமேயில்லை என்பதுதான் உண்மை.
முன்னுரையுடன் யாகமந்திரப்ரவேசம் தொடங்கி சதுராயதனம் வரையும், லயாங்கம், ஷடங்கம், திதிநித்யா, குருமண்டலம் வரையும், முதலாவரணம் விளக்கமும், பின் இரண்டாவது ஆவரணம் தொட்டு முடிவு வரையும் விளக்கங்கள் அருளாலும், ஸ்ரீரமேஷ் அவர்களாலும் கிடைத்ததை அனைவரும் அனுபவித்தோம். விளக்கவுரைகள் தனியாக பெரிய ஸ்ரீசக்ரத்தில் நடைபெற்றதால் முக்கிய பூஜை பெரும்பாகமும் ஸ்ரீசாவித்திரி செய்தது பாராட்டுக்குரியது. பூஜை தெரிந்த, படிக்கத்தெரிந்த மற்றவர்களும் அதற்கு தக்கபடி உதவினார்கள். ஸ்ரீமதி அம்பிகாமாமியை ஸ்வாசினியாக வரித்து பூஜித்தோம். வழக்கம்போல் குருபூஜையும் நடந்தது.
இதனால் யார் யார் பயனடைந்தார், என்ன என்ன கிடைத்தது என்றெல்லாம் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டியதில்லை. அது அவரவர் மனதிற்கு புரிபடவேண்டியது. நேரமும் பணமும் நமக்கு விரயமானாலும் ஒரு தன்மயமான ஆனந்தவுணர்வு என்னை பொருத்தவரையில் மிகுந்துள்ளது. இதுபோல் அவரவரும் தன்னளவில் இதனை உணர்ந்திருப்பாரானால் அதுவே இதன் பயன்.
ஆத்மலாபமன்ன பரம் ந வித்யதே ..... என்றவாறு நமக்கு ஜபமோ பூஜையோ சாதனையோ தபஸோ அல்லது குடும்ப வேலைகளோ எதுவானாலும் அது ஆத்மலாபமான சிவசக்தியில் இணைவதே! எல்லாவிதமான முயற்சிக ளையும் எடுத்துக்கொண்டு பரதேவதையை ஆராதனம் செய்வதன் மூலமாக பூர்ணஞானரூபமான ப்ரஹ்மபாவத்தை இச்சிப்போம். நிர்குணமான ப்ரஹ்மத்தை அபரோக்ஷமாக அடைவோம். தன் உண்மையான ஸ்வரூப லாபத்தை அடைவதைத்தவிர நமக்கு மற்றோன்றில்லை
எனவே இதனை அனுஸந்தானம் செய்தவாறே அமைவோம்.
Arutsakthi Nagarajan,
http://vaikari.net

Re: ஸ்ரீகாமேச்வரியின் 67 ஆவது ஜயந்தியும் – ஸ்ரீசக்ரநவாவரணபூஜையும்
ஓம் ஸ்ரீ குருப்யோனமஹா ஓம் சக்தி
அனேக நமஸ்காரங்கள்
ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜை நடந்த விதம் பற்றிய விளக்கங்களும் படங்களும் பார்த்தோம். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருந்தது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பும், அதை அனுபவித்து மகிழும் பாக்கியமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் படங்களும் விளக்கங்களும் ஓரளவு திருப்தி செய்தது.
ஸ்ரீ குருஜி அவர்களும், திரு ரமேஷ் அவர்களும் அளித்த
விளக்கவுரை கேட்கமுடியவில்லையே என்ற ஆதங்கம்தான்.
மிக்க நன்றி
வெங்கட்ராமன், கல்யாணி
மார்ச் 9 2015

Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: ஸ்ரீகாமேச்வரியின் 67 ஆவது ஜயந்தியும் – ஸ்ரீசக்ரநவாவரணபூஜையும்
ஓம் ஸ்ரீ குருப்யோனமஹா
"குருவின் மகிழ்ச்சியே சீடனின் எழுச்சி "
நமது குருஜி அவர்கள் சொன்ன மேற்கண்ட வாக்கியம் மனதிற்கு நினைவிற்கு வருகிறது இப்பொழுது நடந்துள்ள " ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜை".
ஏனென்றால் நடந்த இடம் திருமதி சாவித்திரி அவர்கள் வீடு. ஸ்ரீ குருவின் திருவருளால் இருந்தால் தான் இப்படிப்பட்ட காரியம் சாத்தியமாகும்.
திருமதி சாவித்திரி அவர்களே,
எங்கள் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நன்றி
கல்யாணி, வெங்கட்ராமன்
"குருவின் மகிழ்ச்சியே சீடனின் எழுச்சி "
நமது குருஜி அவர்கள் சொன்ன மேற்கண்ட வாக்கியம் மனதிற்கு நினைவிற்கு வருகிறது இப்பொழுது நடந்துள்ள " ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜை".
ஏனென்றால் நடந்த இடம் திருமதி சாவித்திரி அவர்கள் வீடு. ஸ்ரீ குருவின் திருவருளால் இருந்தால் தான் இப்படிப்பட்ட காரியம் சாத்தியமாகும்.
திருமதி சாவித்திரி அவர்களே,
எங்கள் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நன்றி
கல்யாணி, வெங்கட்ராமன்
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Similar topics
» ஸ்ரீ குருஜி அவர்களின் 113 ஆவது ஜெயந்தி தினமான தை கார்த்திகை
» ஸ்ரீகுருஜி அவர்களின் 111 ஆவது ஜயந்தி தினவிழா - அருட்சக்தி பேச்சு
» ஸ்ரீகுருஜி அவர்களின் 111 ஆவது ஜயந்தி தினவிழா - அருட்சக்தி பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum