Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
ஸ்ரீபட்டணத்துப்பிள்ளையார் - பட்டினத்தார் - வரலாறு
2 posters
Page 1 of 1
ஸ்ரீபட்டணத்துப்பிள்ளையார் - பட்டினத்தார் - வரலாறு
ஸ்ரீபட்டணத்துப்பிள்ளையார் - பட்டினத்தார்
பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர். பட்டினத்தாரின் பாடல்கள் 11-ஆவது சைவ திருமுறைகளில் வைத்துப் போற்றப்படுகின்றது. ஞானம் பிறந்த கதை சிவநேசர் – ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம். பட்டினத்தடிகள் அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு “தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்’ எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள். பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. அன்னையின் ஈமச் சடங்கு பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன் நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன் அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ மானே எனஅழைத்த வாய்க்கு அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே எனஅழைத்த வாய்க்கு முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்கமூள்கவே வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும் உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய் வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம் பத்திரகிரியார் தொடர்பு பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம் பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து இவருடைய சீடரானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் “மெய்ஞானப் புலம்பல்” என்று பெயர் பெற்றவை. பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள் சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன: கோயில் நான்மணி மாலை திருக்கழுமலை முமணிக்கோவை திருவிடைமருதூர் திருவந்தாதி திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும். எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்: இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தாம் மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப் பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை பித்தானால் என்செய்வாள் பின் ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு நெஞ்சே உனக்குபதேசம் இதே… நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப் பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே திருவொற்றியூரில் சமாதி தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது
ஜய்சக்தி! அன்புடையீர் ! ஸ்ரீபட்டினத்தார் எழுதிய பாடல்களை தொடர்ந்து காணலாம்.. அவசியம் படியுங்கள். பொருள் புரியாவிட்டாலும் பரவாயில்லை. தானே ஒருநாள் புரியும்.

Re: ஸ்ரீபட்டணத்துப்பிள்ளையார் - பட்டினத்தார் - வரலாறு
ஓம் ஸ்ரீ குருப்யோனமஹா ஓம் சக்தி
திரு பட்டினதடிகளார் வரலாறு படிக்க படிக்க மனதில் ஒரு ஓரத்தில் சிறு சலனம் ஏற்படுகிறது. வாழ்கையின் தத்துவம் என்ன என்பதை உணர்த்துவதாக உள்ளது. கீழ்கண்ட வரிகள் திரும்ப திரும்ப படிக்கதூண்டுகிறது. ஞான உணர்வை ஊட்டுவதாக உள்ளது.
"இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தாம் மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப் பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை பித்தானால் என்செய்வாள் பின் ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு நெஞ்சே உனக்குபதேசம் இதே… நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப் பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் I நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே "
"பெற்ற பிள்ளை பித்தானால் என்செய்வாள் வரிகள் மனதை தொட்டுவிட்டது. "
மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
கல்யாணி

Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Similar topics
» செங்கோட்டை ஸ்ரீஆவுடையம்மாள் - வரலாறு
» திருச்சேறை - வரலாறு
» கோடகநல்லூர் - ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் - வரலாறு
» அருணகிரியார் வரலாறு
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
» திருச்சேறை - வரலாறு
» கோடகநல்லூர் - ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் - வரலாறு
» அருணகிரியார் வரலாறு
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum