Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
திருச்சேறை - வரலாறு
Page 1 of 1
திருச்சேறை - வரலாறு
ஜயசக்தி
நாகரசன்பேட்டை
ஊரின் பெருமை யார்க்கும் அருமை அல்லவா ! அதனால் நமது நாகரசன்பேட்டை அருகில் உள்ள திருச்சேறை என்ற தலம் பற்றி இப்போது நாம் அறிவோம். இந்த நாகரசன்பேட்டை தலம் பற்றி மஹான் ஸ்ரீ காரைச்சித்தர் தனது கனகவைப்பு என்ற நூலில் பஞ்ச ஸார க்ஷேத்ரத்துக்குடபட்டது என்று குறிப்பிடுகிறார். அதனால் நாம் திருச்சேறை பற்றி தெரிந்து கொள்கிறோம்.
திருச்சேறை
பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என்
ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க்காளாமென் அன்பு தானே (1584) பெரியதிருமொழி 7-4-7
என்று பாற்கடலுள் பள்ளி கொண்ட பண்பினையும், கருமேக நிறமொத்து நீண்ட மலைபோல் தோற்றமும் கொண்டு விரிந்திருக்கும் நீல மலர்களைச் சுற்றி எந்நேரமும் வண்டுகள் இசைபாடும் குளிர்ச்சி பொருந்திய திருச்சேறையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சிந்தித்தவர்கட்கு என்
அன்பு ஆட்படுகின்றது, என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம் இன்றும் திருச்சேறை என்ற தூயதமிழ்ப் பெயரிலேயே வழங்கி வருகிறது. இதிலிருந்து மேற்கே 2 கிலோவில் தான் நாகரசன்பேட்டை உள்ளது.
நாச்சியார்கோவில் திவ்ய ஸ்தலத்திலிருந்து குடவாசல் செல்லும் வழியில் 3 கிலோவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாகத் திருவாரூர் செல்லும் எல்லாப் பேருந்துகளும், நாச்சியார்கோவில்,, திருச்சேறை, திருக்கண்ணமங்கை ஆகிய மூன்று திவ்ய தேசங்களைத் தாண்டித்தான் செல்கிறது.
வரலாறு.
இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்டபுராணத்தில் மகேஷ்வர நாரதஸம்வாதத்தில் 1 முதல் 6 அத்தியாயம் வரையிலும் பவிஷ்ய புராணத்தில் 68 முதல் 72 வரை உள்ள அத்தியாயங்களிலும் பேசப்படுகிறது.
முன்பு ஒரு பிரளயத்தின்போது பிரம்மா சிறிது மண் எடுத்து ஒரு கடம் பண்ணி அதில் சகல வேதங்களையும் மறைத்து வைத்துக்காப்பாற்ற எண்ணி பல இடத்தில் மண் எடுத்துப் பானை செய்யவும், எல்லாம் உடைந்து போக இறுதியில் வழக்கம்போல் மஹாவிஷ்ணுவைத்துதி செய்ய, அவர் வழக்கம் போல் பல ரிஷிகளும் தவஞ்செய்யக்கூடியதும், தனக்கு மிகவும் உவப்பானதுமான “ஸார ஷேத்திரத்தில்” மண் எடுத்துக் கடம் செய்யுமாறு கூற பிரம்மனும் ஸாரச்
சேத்திரம் என்னும் இந்தத் திருச்சேறை வந்து மண் எடுத்துக் கடம் செய்து வேதங்களை அதிலிட்டுவைத்துக்காத்தார். மண் எடுத்த இடமே ஸார புஷ்கரணியாயிற்று.
காவிரித்தாய் வரலாறு
ஒரு காலத்தில் விந்தியமலையின் அடிவாரத்தில் கங்கை, யமுனை,சரஸ்வதி, சிந்து, காவேரி, கோதாவரி ஆகிய 7 நதிகளும் கன்னிகைகளாக மாறி விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியாகச் சென்ற விச்வாவஸ் என்னும் ஒரு கந்தர்வன் இவர்களை கண்டு வணங்கிவிட்டுச் சென்றான். இவன் யாருக்கு வணக்கம் தெரிவித்தான் என்று அவர்களுக்குள் சந்தேகம்
வந்துவிட்டது. அப்போது மீண்டும் அவ்வழியே திரும்பி வந்த இந்தக்கந்தர்வனைக் கண்டு தாங்கள் யாருக்கு வணக்கம் செலுத்தினீர்கள் என்று கேட்க உங்களில் யார் பெரியவரோ அவருக்கே என்று சொல்லிச்சென்றுவிட்டான்.
இதில் மற்ற நதிகள் எல்லாம் விலகிக்கொள்ள கங்கையும் காவிரியும் தாமே நதிகளுள் பெரியவர்கள். ஆகவே என்னைத் தான் சொன்னான், என்னைத்தான் சொன்னான் என்று இருவரும் கூற வாதம் வளர்ந்து முடிவில் பிரம்மனிடமே விடைபெறச் சென்றனர்.
அப்போது பிரம்மன் கூறினான். திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது சத்திய லோகம் என்னும் எனது பிர்ம்மலோகம் வரை நீண்ட எம்பெருமானது பாதங்களை நான் திருமஞ்சனம் செய்ய அதுவே பெருக்கெடுத்து ஓடி கங்கையாயிற்று. எனவே கங்கையே புனிதமானவள்,
உயர்வானவள் என்று கூறினார். இதைக் கேட்டு மிகவும் வருத்தமுற்ற காவேரி நான் கங்கையினும் பெருமைபெற்றவள் என்ற பெயரை தனக்குத் தரவேண்டுமென்று கேட்க, அது தன்னால் முடியாதென்றும் ஸர்வ வல்லமை பொருந்திய மஹாவிஷ்ணுவால்தான் அது முடியுமென்றும், உனக்கு அப்பதம் சித்திக்க வேண்டுமென்றால் ஸாரபுஷ்கரிணியில் உள்ள அரச மரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவஞ்செய்யுமாறு கூற, அவ்வண்ணமே காவேரி கோடையில் பஞ்சாக்கினி மத்தியிலும், குளிர் காலத்தில் ஜலத்தின் மத்தியிலும் கடுந்தவஞ்செய்ய, மஹாவிஷ்ணு ஒரு தைமாச பூசநட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த் தோன்றித் தவழ்ந்து வர அந்தக் கோடி சூர்ய ப்ரகாசத்தைக் கண்ட காவிரி இது சாதாரணக் குழந்தையன்று எம்பெருமானே என்று தீர்மானித்துதொழுது நின்றாள். உடனே எம்பெருமான் தனது மழலை வேடத்தை மறைத்து கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, ஸாரநாயகி என்னும் ஐந்துதேவிகள் புடைசூழ சங்கு சக்ர தாரியாக காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்டு பேரானந்தமும் மயிர்க் கூச்செறிப்பும் கொண்ட காவேரி பலவாறு போற்றி எம்பெருமானைத் துதித்துப் பாடினாள். என்ன வரம் வேண்டுகிறாய் காவேரி, என்று பெருமாள் கேட்டதும், தாங்கள் இதேகோலத்தில் இங்கு காட்சி தரவேண்டுமென்றும், கங்கையினும் மேன்மையைத்தனக்கு தரவேண்டுமெனவும் வேண்டினாள். அவ்விதமே அருளிய எம்பெருமான் நான் திரேதா யுகத்தில் நின்னிடத்தில் தங்குவேன் என்று கூறினார். அவ்வண்ணமே இராமாவதாரம் முடிந்து, விபீஷணன் எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில் பள்ளிகொண்டார்.
மூலவர் ஸாரநாதன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் ஸார நாயகி அல்லது ஸார நாச்சியார்.
தீர்த்தம் ஸார புஸ்கரணி
விமானம் ஸார விமானம்
க்ஷேத்ரம் ஸார க்ஷேத்ரம்
காட்சி கண்டவர்கள் காவேரி
சிறப்புக்கள்
108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5 தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை. இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கொப்பானதாகும்.
திருமால் காவேரிக்குப் பிரத்யட்சமானது தை மாதம் பூசநட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகட்கு ஒரு முறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம்
வரும்போது இந்த ஸாரபுஷ்கரணியில் நீராடுவது கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மஹாமகத்திற்கு ஈடானதாகும்.
குடந்தையில் உள்ள சித்திரத்தேர் மற்றும் திருவாரூர்த்தேரினைப்போன்று இங்கு உள்ள தேர் மிகப் பெரியதாகும்.
எம்பெருமான் குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் “மாமதலையாய்” என்றும் காவிரிக்கும் மேன்மை அளித்ததால் “கங்கையிற்புனிதமாயகாவேரி”என்றும் ஆழ்வார்கள் மங்களாசாசித்துள்ளனர்.
திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். மொத்தம் 13 தீஞ்சுவைப் பாக்கள்.
சத்தியகீர்த்தி என்ற சோழவரசன் புத்திரப்பேறு இல்லாது, மார்க்கண்டேய முனிவரால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப் பட்டு, இப்பெருமானை வேண்டி புத்திரபேறடைந்து, விமானம் மண்டபம் போன்ற திருப்பணிகள் செய்து, சித்திரை மாதத்தில் பிர்மோத்ஸவமும்
நடத்திவைத்தான்.
தஞ்சையை ஆண்ட அழகிய மணவாள நாயக்க மன்னராலும் அவரது மந்திரி நரச பூபாலராலும், இக்கோவிலின் பிரதானச் சுவர்களும், சற்றேறக்குறைய இன்றுள்ள அமைப்பில் கட்டப்பட்டது. இம்மன்னர் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலன் சன்னதிக்கு திருப்பணிக்காக வண்டி வண்டியாகக் கல் அனுப்பிய போது, வண்டிக்கு ஒரு கல்லாக, திருச்சேறை கோவில் பரிபாலனத்திற்கு நரசபூபாலன் இறங்கி வைக்க இதைச் செவியுற்ற மன்னன் அது உண்மையாவென்று சோதிக்க அங்கு வந்தான். இதனையறிந்த நரசபூபாலன் இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இராஜ கோபாலனை மனதுள் தியானிக்க மன்னர் வந்து இங்கு இறங்கியதும் இந்த திருச்சேறைத் திருமால் அவருக்கு மன்னார்குடி ராஜகோபாலனாகவே
காட்சியளிக்க அது கண்டு மிகவும் ஆச்சர்யமுற்ற மன்னன், நரசபூபாலனைப்பாராட்டியது மட்டுமன்றி தானும் உடனிருந்து எண்ணற்ற சேவைகள் செய்து பெருவாரியாக நிலங்களையும் தானமளித்தார் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

Similar topics
» செங்கோட்டை ஸ்ரீஆவுடையம்மாள் - வரலாறு
» ஸ்ரீபட்டணத்துப்பிள்ளையார் - பட்டினத்தார் - வரலாறு
» கோடகநல்லூர் - ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் - வரலாறு
» அருணகிரியார் வரலாறு
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
» ஸ்ரீபட்டணத்துப்பிள்ளையார் - பட்டினத்தார் - வரலாறு
» கோடகநல்லூர் - ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் - வரலாறு
» அருணகிரியார் வரலாறு
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum