ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


தை கார்த்திகை- ருதன்பரா ஞானஸபா - தொடக்கம்

Go down

 தை கார்த்திகை- ருதன்பரா ஞானஸபா - தொடக்கம்  Empty தை கார்த்திகை- ருதன்பரா ஞானஸபா - தொடக்கம்

Post by arutsakthi Mon Jan 18, 2016 7:06 pm

ஸ்ரீகுருப்யோ நம:
ருதம்பரா ஞான ஸபா, புதுடில்லி
28 ஆம் ஆண்டு தொடக்க தின நினைவுகள்
மன்மத ஆண்டு தை மாதம் 05 ம் தேதி (19-01-2016) செவ்வாய்க்கிழமை
அன்புடையீர்!
ஒரு கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் நாளாக இந்த தினத்தை நான் நினைக்கிறேன். அது என்ன கலாச்சாரம் ?

ஸ்ரீவித்யாதான் அது. எது நமது வெளிப்புற மற்றும் உட்புற சூழ்நிலைகளை மகிழ்ச்சியாய் வைக்க கற்றுக்கொடுக்கிறதோ அது. நமது உண்மையான நிலையை அது தெளிவாக்குகிறது. இந்த தெளிவு ஸ்ரீகுருஜி என்று என்னை தொட்டாரோ அன்றே ஏற்ப்பட்டுவிட்டது. அது கனிந்து தன்மயமாக காலம் தேவைப்பட்டது. இந்த காலம் என்பது ஒருபரிமாணம். காலத்தால்தான் நாம் நமது வயது மற்றும் உலக நடைமுறை என்பதை தெரிந்து கொள்கிறோம். ஆனால் காலத்தை நிறுத்திவைக்க முடிவதில்லை. அது உலகஆக்கல் என்று தொடங்கியதோ அன்று தொட்டு கணக்காகிவிடுகிறது. நாம் நமது கணக்கில் மாதம், வருடம் என்று கணக்கிட்டுவருகிறோம். இந்த சிந்தனை நமக்கு நமது வாழ்வில் பலதடவை வரும். ஆனாலும் எனக்கு என்மனதில் பிறந்த நாளை விட மண நாளைவிட எனது குருநாதர் பிறந்த நாளே மனதில் முக்கிய சிந்தனை நாளாக அமைகிறது. ஏனெனில் அவர் ஜனனம் எடுக்காவிட்டால் இந்த அழுக்கு மூட்டை ஜன்மா கரை ஏராதே ! அதனால் தான் அந்த தினம் என்னை கரையேற்ற அவர் உதித்த மங்கள தினமாயிற்றே. அதனால்தான் அந்த தை கார்த்திகை தினத்தில் நமது ருதன்பரா ஞானஸபா தொடங்கினது.

உங்களுக்கு அடிக்கடி சொன்னதுதான். இருந்தாலும் நல்ல விஷயங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிறது தருமம். அதனால் சொல்கிறேன்.
அருட்சக்தியின் மனத்தகத்தில் தோன்றிய இந்த ருதம்பராஞானஸபா என்ற அமைப்பு தொடங்கினதாகக் கொண்டநாள் 1989ம் ஆண்டு ஜனவரி மாதம்17ம் தேதி அதாவது சுக்ல ஆண்டு தை மாதம் 4ம் தேதி மங்களவாரம் கிருத்திகை நக்ஷத்திரம் கூடிய நன்னாள் - நமது குருநாதர் பரமபூஜ்ய ஸ்ரீஅநந்தாநந்தநாதர் அவர்களின் ஜன்மநக்ஷத்திரம். அதுமட்டுமா குஹானந்தமண்டலி என்ற அமைப்பின் பெயருக்குக்காரணமான பரமபூஜ்ய ஸ்ரீகுஹாநந்தநாதர் அவர்களின் ஜன்மநக்ஷத்திரமும் ஆகும். இவ்வாறான ஒரு ஸுதினத்தில்தான் அவர்களின் கருணையால் இந்த எண்ணம் தோன்றியது.
உலகில் எங்கெங்கெல்லாம் ஆத்மஞானத்தேடலுடன் மக்கள் இருக்கிறார்களோ, வேதாந்த ஞானத்துடன் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் இந்த ருதம்பராஞானஸபாவின் அங்கத்தினர்களாவார்கள் என்று மனத்தகத்தில் உறுதிகொண்டேன். அவர்கள் எங்கெல்லாம் மாதமொருமுறையோ இருமுறையோ தாங்கள் ஒன்றுகூடி பகவன்நாமாவையோ, மந்த்ர ஜபத்தையோ, பூஜை, ஜபம், த்யானம் என்று செய்வதையோ இந்த ஸபாவிற்கு அவர்கள் செலுத்தும் சந்தாவாக என்னளவில் கருதிக்கொண்டேன். அவர்கள் பெயர்கள் விவரங்கள் எதுவும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதற்கு பொருளாதாரம் எதுவும் தேவையில்லை. நிதியாதாரமும் ஏற்படுத்திக் கொண்டதில்லை. நமது நடப்புக்கள் தான் குருநாதரான இறைவனுக்கோ இறைவிக்கோ தெரியுமே!
'லோகாஸ்ஸமஸ்தாஸ் ஸுகீனோபவந்து' என்பதுதான் வேதமாயிற்றே! அது போதும்.
இவ்வாறு தோன்றின இந்த அமைப்பு திருவருளால் இன்றைக்கு 27 ஆண்டுகள் நிறைவேறி யுள்ளன. அதனால் அதன் வளர்ச்சியை திரும்பிப்பார்க்கிறோம்.
தொடக்கத்தில் பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைவேளையில் 4 மணிமுதல் 7 மணிவரையில் குருதத்வவிமர்சம் என்ற எனது பரமகுரு ஸ்ரீஸார் ஸ்ரீசிதானந்தநாதர் அவர்களின் நூல் தொடங்கி ஸ்வாத்யாயம் என்ற நிலையில் படிப்பது விளக்கம் சொல்வது என்றவாறு ஸத்ஸங்கம் நடத்தினோம். நடத்தினோம் என்றால் எத்தனை நபர்கள் என்ற வினா வருமே! என்னையும் சேர்த்து 4 நபர்கள்தான். வீடோ இரண்டே அறை கொண்டது சமையல் அறையும் சேர்த்து.
அந்த நாட்களில் கணினி ஆரம்ப கால Dos Mode பயன்பாட்டில் இருந்ததால் இதிலேயே ஸ்ரீவித்யாபூஜை, பாராயணங்களுக்கான தேவிமானகணனம் என்கிற அஷ்டாங்கத்தை சிவி.நாகசுந்தரம் செய்து நாங்களும் உபயோகித்ததுடன் சென்னைவாழ் சில உபாஸகர்களுக்கும் அச்சிட்டு மாதகாலண்டராக விநியோகித்தோம். இவ்வாறு தொடங்கின இந்த ஸத்ஸங்கம் 1993ஆம் ஆண்டுமுதல் எங்களுக்கு புதுடில்லி வாஸம் ஏற்பட்டதால் அது சென்னை மாறி புதுடில்லியானது. இங்கும் உபாஸக நண்பர்கள் இருந்தார்கள். இதன் மத்தியில் ஸத்குருவின் கருணை இங்கும் ஸபா அங்கத்தினர்கள் ஏற்பட்டு வாராவாரம் ஸத்ஸங்கம் தொடர்ந்தது. இடையில் 'வைகரி' என்ற கையெழுத்து மாதசஞ்சிகை ஒன்றும் ஸ்ரீவித்யா சம்பந்தமான கட்டுரைகளுடன் சிலபிரதிகள் அச்சிட்டு விநியயோகித்தோம். சிலஅங்கத்தினர்களின் உறவினர்கள் என சென்னையில் எற்பட்ட விரிவு மேலும் எண்ணிக்கை கூடியது. இதனால் எனக்கு சென்னை பயணம் அடிக்கடி ஏற்பட்டு வருடாந்திர பூஜை எனவும், ஜபஹோமங்கள் எனவும், லக்ஷார்ச்சனை எனவும், ஸ்ரீவித்யா பட்டறை எனவும் தொடர்ந்து நடக்க ஏற்பட்ட வாய்ப்பானது அரிய பெரிய செயல்களை அநாயாஸமாக செய்ய ஸத்குருவருள் கூட்டிற்று.
மேலும் ஸபாஅங்கத்தினர்களின் மிகுந்தஒத்தாசை, பிரயாசையுடன் நடைபெற்ற சில குறிப்பிட்ட நிகழச்சிகள்:
1. உலகில் உள்ள உபாஸகப்பெரியோர்கள், ஸ்ரீவித்யாகுருமண்டலபரிஷத் அங்கத்தி ன ர்கள் மற்றும் நமது ஸபாஅங்கத்தினர்கள் அனைவரும் ஒன்றுகூடி 10 கோடி ஸ்ரீபாலா மஹாமந்த்ரஜபம் செய்து, அதில் பெரும்பாலானவர்களை சென்னையில் மடிப்பா க்கத்தில் 2007ல் கூட்டி, புரச்சரணஹோமம் செய்ய வைத்ததுடன் 51 பிரயத்யக்ஷ குமாரிகள் பூஜையும் விமரிசையாக இருதினங்கள் செய்தது.
2. கும்பகோணத்தில் 2008ல் ஸ்ரீலலிதாம்பிகாமங்களம் என்ற நாட்டியநாடகத்தை அறங்கேற்றியது.
3. ஸ்ரீகுருஜி அவர்களின் மனத்தகத்தில் இருந்த ஸ்ரீலலிதாம்பிகாலக்ஷார்ச்சனையை விதிமுறை வழுவாமல் அவர்கள் எழுதின கல்பப்படியே கும்பகோணத்தில் 2011 ல் பல ஸ்ரீவித்யாமண்டலித்தலைவர்கள், ஸ்ரீவித்யாகுருமண்டலபரிஷத் அங்கத்தினர்கள் மற்றும் நமது சபாஅங்கத்தினர்கள் உதவியுடன் மிகவிமரிசையாக இருதினங்கள் நடத்தியது.
4. நமது அங்கத்தினர்கள் உதவிகொண்டும், அமெரிக்கா ஸ்ரீவித்யா டெம்பிள் சொசைடி. ஸ்ரீஸ்ரீபிரணவானந்தசுவாமிகள், ஸ்ரீவித்யாகுருமண்டலபரிஷத் ஆகியோர் உதவியுடனும் இன்னும் பலரின் துணையாலும் அநேக நூல்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக அருட்சக்தி எழுதிய 'ஸ்ரீகுருப்ரகாசமலர்' என்ற ஸ்ரீகுருஜி அவர்களின் வரலாறு, சிதானந்தஅலை என்ற நவாவரணபூஜையின் தத்துவவிளக்கம், ஸ்ரீதிதிநித்யாயந்த்ரபடங்கள் பூஜையுடன், ஸ்ரீவித்யாஉபாஸகதர்மங்கள், மஹாசக்தி ரஹஸ்யம், ஸர்வம் லலிதா ஓர் இன்பக்கலப்பு, சிவசக்தி மயம் ஜகத், என பல வெளியீடுகள் வெளியிடப்பட்டன.
இதனால் எங்கள் ஸாதனைகள் மேம்பட்டன. உபாஸகநண்பர்கள், மண்டலித் தலைவர்கள் என இந்த வட்டம் பெறுகிற்று. இதற்கெல்லாம் இன்றைய வலைத்தளங்களும், இணையதளங்களும், மின்னஞ்சலும், தொலைபேசிகளும் கைபேசிகளும் மிகுதியும் பயன்பட்டன. இன்றும் பயன்பட்டு வருகின்றன. முன்னேறிய கணினி பயன்பாட்டால் ஸ்ரீவித்யாபூஜை, ஸ்ரீவித்யா பாராயணங்களான- கடிகாபாராயணம், தத்வபாராயணம், மற்றும் சென்னை ஸ்ரீரமேஷ்நம்புதிரியால் அளிக்கப்பட்ட காலசக்ரபாராயணம் செய்ய தேவையான தேவிமானகணனம் என்கிற அஷ்டாங்கம் ஸங்கல்பத்துடன் இன்று வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் எளிமையாக அன்றன்று கைபேசியிலேயே பார்த்துக்கொள்ளும்படியாக எளிமையாக Mobile apps வடிவில் கிடைக்கின்றன. மேற்கண்ட மிகஅபூர்வமான, விசேஷமான ஸ்ரீவித்யாபாராயணங்களையும், தினசரி உபாசகன் செய்யவேண்டிய பாராயணங்களையும் ஆன்லைனிலேயே இப்போது செய்யலாம். நமது எண்ணங்கள், யோசனைகள், கட்டுரைகள், ஆன்மீகக்குறிப்புகள், ஆன்றோர் அறிவுறைகள் என அத்தனையையும் பகிர்ந்துகொள்ளலாம். பதிலும் கொடுக்கலாம். இதற்கு உலக மொழிகள் எதுவும் தடையில்லை. தாய்மொழி தமிழ் பயன்பாடும் அதிகம் உண்டு.
இவ்வளவும் நமது ருதம்பராஞானஸபாவின் பெரிய ஸாதனைகள் என்றால் மிகையில்லை. ஆனால் எந்த வேலைக்கும் ஒருவரின் முயற்சியும் உழைப்பும் தேவையல்லவா! எனது குமாரன் திரு.நாகசுந்தரம் தன்பணியினையும், நேரத்தையும் மிகவும் இதற்காக செலவிட்டு வருகிறான். ஸபாவிற்கென தனிஇணையதளம் 'வைகரி' ( http://vaikari.net ) என்ற பெயரிலும், இணையமன்றம் (Forum) ஸத்ஸங்கம் எனவும் தயாரிக்கப்பட்டு உபயோகத்தில உள்ளன. மேலும் நமது அங்கத்தினர் திரு மு. கிருஷ்ணமூர்த்திஅய்யர் கவிதைகள் பதிவுக்கென ‘இடைமருதன்’ என்ற தனிமன்றமும் (Forum), திரு நாகசுந்தரத்தின் 'அருள்தரும் ஆயிரம் தமிழிசைபாடல்கள்' என்ற ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்கள் பதிவுக்கென தனிமன்றமும்(Forum) அதிலேயே உள்ளன. புராதன தந்த்ரங்கள், புராணங்கள், புதினங்கள், மற்றும் அருட்சக்தியால் எழுதப்பட்டவைகள் என அநேகம் உள்ளன. அனைத்தையும் PDF வடிவில் தவவிறக்கம் செய்துகொள்ளலாம்
அங்கத்தினர்களும் பெரும்பாலும் நமதுதளத்தின் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள். பயன் பெறுகிறார்கள். மற்ற வெளியார்களும் பயன் பெறுகின்றனர். சமீபத்திய சமூகதளமான whatsapp மூலமும் நாம் தொடர்பு கொள்கிறோம்.
தயவுசெய்து அனைவரும் தினசரி ஒருமுறை நமது இணையதளம் 'வைகரி' ( vaikari.net ) சென்று பாருங்கள். பகிருங்கள். அது உங்கள் ஆத்மஞானத்துக்கு கண்டிப்பாக துணை செய்யும். இந்த காலத்தில் குருகுலவாஸம் செய்வது முடியாத ஒன்றல்லவா. அதனால் குரு நமக்கு, அல்லது பொதுவாக என்ன செய்தி சொல்கிறார் என்று அறிய இது நிச்சயம் உதவும்.
இந்த 28ஆம்ஆண்டு தொடக்கத்தில் நாம் என்ன செய்ய போகிறோம்? மஹாபாரதமும், மற்ற புராணங்களும் ஸ்ரீவியாஸமுனிவரால் ஸ்ரீஸூதர் என்பவருக்கு உபதேசிக்கப்பட்டு அவரால் சௌனகாதி முனிவர்களுக்கு புராணங்கள் சொன்ன இடம் நைமிசாரண்யம், அங்கு வியாஸர் தவம் செய்தயிடம் உள்ளது, புனிதமான அந்த இடந்தின் பெருமை நமது காஞ்சி ஸ்ரீமஹாபெரியவர்களின் வாக்கால் அறிகிறோம். எனது இளமை காலத்தில் ஸ்ரீதேவிபாகவதம் படிக்கும் அருள் கிடைத்தது. அதுமுதல் இந்த நைமிசாரண்யம் மனதில் ஒரு மூலையில் நின்றதுண்டு. அதனால் நமது ஸபா உறுப்பினர்களின் துணையுடன் வருகிற 2016 பிப்ரவரிமாத இறுதியில் அந்த நைமிசாரண்யம் சென்று இரு தினங்கள் தங்கி தவமியற்ற குருவருளால் முடிவாகி உள்ளது. நிறைவேற அந்த குருவருளே துணை செய்ய வேண்டுவோம். எல்லாம் ஸத்குரு கருணையால் விளைந்த திருவருள் ஆசிகள்
அவர்களின் துணைகொண்டு இந்த 28ஆம் ஆண்டில் நாம் இன்னும் என்ன செய்யலாம் என்று சற்று சிந்தியுங்கள்! எனக்கும் சொல்லுங்கள். அனைவரின் சிந்தனைகளையும் ஒன்றிணைத்து ஞான பரமாக நிச்சயம் செய்வோம்.
இவ்வாறாக நமது ருதம்பரா ஞானஸபாவின் 27 ஆண்டு கால வளர்ச்சியினை இங்கு சற்று நினைவு படுத்திக்கொண்டோம். ஸாதனைகள் குறைவுதான். ஆனாலும் ஆத்மஞான பிரயோஜனத்தை மட்டுமே நோக்கமாககொண்ட நம்மால் செய்த இவைகளே பெரிய விஷயமாகும். இது இன்னும் மேன்மேலும் வளர்ந்து ஸ்ரீவித்யா உபாஸகர்களுக்கும், நமது உறுப்பினர்களுக்கும், மற்ற ஏனையோர்க்கும் பயன்பட்டு ஆத்மஞானதேடல் விரிவடைந்து நமது ஸத்குருநாதமண்டலியின் புகழ் பரவவேணுமாய் எல்லாம்வல்ல குருமண்டலரூபிணியை வேண்டுவோம்.
ஸாதனையும் பக்தியும்தான் ஒருவனை ஆத்மஞானம் அடைய வைக்கும்.. சிந்தியுங்கள் ! உபாஸக தர்மத்தை கடைப்பிடியுங்கள் ! தான்-தான் என்ற கர்வத்தை விடுங்கள்1 அனைவரிடமும் அன்பாய் இருங்கள். எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டுபோக போவதில்லை. குருவழி - அருள் வழி!
ஆசிகள்.
உங்கள் சொந்த ஆத்மன்.
அருட்சக்தி நாகராஜன்
18-01-2016
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum