Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
ராஸலீலையும் காமகலையும்-ஆத்மாநந்தமே! - அருட்சக்தி
Page 1 of 1

ராஸலீலையும் காமகலையும்-ஆத்மாநந்தமே!
ராஸபஞ்சாத்யாயீ என்கிற ராஸலீலை ஒரு யோக சாஸ்த்திரம். ஸன்யாச நிலையை அத்புதமாக வர்ணிக்கிறது. கண்ணனும் ராதை முதலான கோபஸ்த்ரீகளும் ஒன்றாகக்கூடி நர்த்தனம் செய்ததை ஸ்ரீமத்பாகவதம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அங்கு ஆண்களும் பெண்களும் ஒன்றாகக்கூடி ஆடியபோதிலும் உலகரீதியான காமம் என்பது துளிகூட இல்லை. இதுவே அகண்டாகார வ்ருத்தியான பராஹந்தா எனக்கூடிய காமகலை என்ற ஒரு யோகவைவபம் ஆகும். (இதைத்தான் ஸ்ரீவித்யா சக்ரபூஜையின் இறுதியில் நமது குஹானந்த மண்டலி பரம்பரையினரால் செய்யப்படுகிற ஸ்ரீஆச்சர்யாஷ்டோத்தர சதநாமாவளி என்ற அர்ச்சனையின் தத்வார்த்தங்கள் தெள்ளிதின் விளக்குகின்றன.)
எங்கு உலகியல் ரீதியான காமம் தென்படுகிறதோ- அல்லது உணரப்படுகிறதோ அங்கு வேதாந்தத்துக்கு இடமில்லை. எனவேதான் இந்த நிலையை அதாவது காம கலையின் உண்மையான தத்வத்தை ஒரு தீவிர ஸாதகன் உணர வேண்டுமெனக்கருதி இங்கு இதனை உண்மையாக உணர்த்தவேதான் இந்த அர்ச்சனையை செய்யப் பண்ணி யிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். இங்கு சிவனும் சக்தியும் எவ்வாறு லீலையில் ஈடுபட்டிருந்தார்கள் என விளக்கமாக உள்ளது. மேலே சொன்ன ராஸலீலை வைபவமேதான் இது என்பது அதன் அர்த்தவிசாரத்தை உணரும்போது தத்துவ தர்சிகளுக்கு தெரியாமல் போகாது. தர்மத்தை செய்யவும் நிலைநிறுத்தவும் எவன் மிகுந்த ஆசையுடையவனோ, உலக நலனில் எவன் கண்ணும் கருத்துமாக இருப்பானோ, துஷ்டர்களை ஸிக்ஷிக்க முடிந்தவன் எவனோ, ஸத் ஜனங்களை ரக்ஷிப்பதில் மிகுந்த ஆசையுடையவன் எவனோ, ஸதாகாலமும் இடைவிடாமல் ஈச்வரியின் ஜபத்தை செய்வதில் விருப்ப முடையவன் எவனோ, எல்லா உயிர்களிடத்திலும் ஸமமான ப்ரியத்தை வைத்திருப்பவன் எவனோ அப்படிப்பட்ட ஸாதகனுக்குத்தான் மேலேகூறிய ராஸலீலையான காமகலையின் முழு தத்வார்த்தமும் புலப்படும் என்பது உறுதி. இதையேதான் ஸ்ரீஆச்சர்யாஷ்டோத்தர சதநாமாவளியின் பலச்ருதியில் தேவியே கூறுகிறாள்.
10000 கோபிகாஸ்த்ரீகளின் மத்தியில் கண்ணன் இருந்தபோதும் அவனுக்கு காமம் இல்லை. இது எவ்வாறு ஸாத்யமாயிற்று? அதுதான் ஜிதேந்த்ரியத்வம். இந்த நிலையில் யார் பரதேவியை பூஜிக்கிறார்களோ அவர்கள்தான் வீரர்கள் என்றும் வீரஸாதகர்கள் எனவும் அறநூல் கூறும். போகமே இங்கு யோகமாக ஆகிறது. ஜன்மாவை போகத்தில் ஈடுபடுத்தி அதனிலேயே உழன்று கொண்டு இராமல் மோக்ஷமான- தன்னை உணரும் ஞானத்தை யார் அடைய முயலுகிறார்களோ அவர்களுக்குத்தான் ஸ்ரீவித்யாப்ராப்தி என்பது மிகவே உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடானுகோடி மக்கள் வாழுகிறோம். உண்ணுகிறோம். உடுத்துகிறோம். பேசுகிறோம். பாடுகிறோம். இதில் என்ன ஸாரம் என்று என்றைக்காவது விஜாரித்திருக் கிறோமா? விசேஷமாக சிந்திப்பதும், விசேஷ ஞானம் அடையவேணும் என்றதில் முயலுவதும் தானே முமுக்ஷுவின் செயலாக அறநூல் பகர்கின்றது. எனவே ஸ்ரீவித்யா ஸாதனை செய்பவர்கள் அத்தனைபேரும் முமுக்ஷுவா என்று வினாவை ஏற்படுத்தினால் இல்லை என்ற பதில்தான் வரும். இது எல்லோரை ப்பற்றியும் குறை கூறும் நோக்கில் எழுதவில்லை. ஏனெனில் ஆசார்யாள் கூறியதுபோல் ஸாதகர்கள் அத்தனை பேரும் ப்ரஹ்மஞானிகளாகிவிட்டால் உலகம் நடைபெறவேண்டாமா? உலகம் என்றால் நல்லதும், கெட்டதும் கலந்ததுதானே! ஆனால் மேலே சொன்னவழியில் அனைவரும் கண்டிப்பாக முயல வேண்டியது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நாம் முயலுகிறோமா? என ஒவ்வொருவரும் தினம் ஒருதரம் தன்னைத்தானே மனதிற்குள் கேட்டுக் கொள்ள வேணும். அதுதான் மிகுந்த இன்பத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கக்கூடியது. அதுவும் குருவால் அனுக்கிற கிக்கப்படுகிற ஆனந்தம் உண்டே அதற்கு ஈடும் இல்லை. இணையும் இல்லை. அது மந்த்ர உபதேசம் என்று மட்டுமில்லை. அவர்வாய்வழி கூறுவது எதுவானாலும், எந்த ஒரு சொல்லானாலும் அது ப்ரஹ்மஞான உபதேசம் என்றவிதத்தில் ஸாதகனாகிய சீடன் எடுத்துக் கொள்ள வேணும். அப்போதுதான் அறநூலில் கண்ட ஆனந்தத்தை இவனும் அனுபவபூர்வமாக அடைவான். அதனால் அந்த ஆனந்தம் பற்றி சிறிது ஆராய்ந்துபார்ப்போம்.
ஆனந்தம் என்பது ஸந்தோஷம். இது ஒரு பொருளாலோ, பேச்சாலோ ஏற்படுமானால் அது நிலையானதல்ல. அந்த பொருளும், பேச்சும் போய்விட்டால் ஆனந்தமும் போய்விடும். எனவே ஆனந்தம் ஏற்படுத்திய பொருளோ, பேச்சோ மறைந்தாலும்கூட ஆனந்தம் சாசுவதமாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான ஆனந்தம். அப்போது ஏற்படும் ஆனந்தம் தான் மோக்ஷம். அதாவது ஆத்மானந்தம். இதைப்பற்றி உபநிஷதங்கள் நிறைய பேசுகின்றன. இந்த ஆத்மானந்தம்தான் மேலே கூறிய ராஸஇன்பம்-காம கலாஇன்பம். கண்ணன் ப்ருந்தாவனத்தைவிட்டு மதுராவுக்கு சென்றபின்பும்- அவனது நேர், சரீர தொடர்பு இல்லாதபோதும் அங்குள்ள வ்ரஜஸ்த்ரீகள் கண்ணன் தங்களுடனேயே இருப்பதாக ஸதாகாலமும் நினைத்தார்கள். அவனுடைய ஸங்க - ராஸ இன்பத்திலேயே திளைத்தி ருந்தார்கள். இதுதான் புறப்பொருளால் ஏற்படாத ஆனந்தம். இதனை இதற்குமேல் எழுத்தில் வர்ணிக்க இயலாது. அதனால்தான் இந்த நிலையை அதாவது காமகலையை வர்ணிக்க- போதிக்க ஸத்குரு விற்குத்தான் தகுதி என்றார்கள். குருமுகாதுதான் இதனை விளக்கமுற கேட்கவேணும். அருட்சக்திக்கு அந்த பாக்யத்தை ஸத்குரு நாதரவர்கள் சுமார் 35 ஆண்டுகளுக்குமுன்- எந்த ஸ்தலத்தில் இந்த காமகலைக்கு முக்கியத்வம் உண்டோ அந்த ஸ்தலமான திருவாரூரில் ஸ்ரீகமலாம்பிகாவின் திருச்சன்னிதியில் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆம். ஒருநாள் அவர்களுடன் கமலாம்பா ஆலய ஆடிப்பூர உத்ஸவ சமயம் அங்கு செல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதுசமயம் ஸ்ரீகமலாம்பிகையை தரிசித்துவிட்டு வெளியில் வரும்போது வெளியே உள்ள ஸ்ரீஉச்சிஷ்டகணபதி ஸந்நிதியில் தர்சனம் செய்தோம். அப்போது அருட்சக்தி கேட்ட வினாவுக்கு விடையாக இந்த காமகலா பற்றி மிக விரிவாக கூறியருளினார்கள். இந்த உபதேசத்தின் பாக்கியந்தான் காரணம் என்று நினைக்கிறேன்- ஸ்ரீஆச்சர்யாஷ்டோத்தர சதநாமாவளிக்கு பின்னாட்களில் அருட்சக்தியால் ஒரு உரை எழுதநேர்ந்தது. ஏனெனி;ல் உச்சிஷ்ட கணபதியின் தத்வமும் ஆனந்த நிலையில் அமைவதாகும் என்பதும் அதன் விரிவாக்கமே சிவசக்தியின் ஸம்மேளன ஸாம்யம் என்பதும் அதன் விளக்கத்தால் தௌளிதின் உணரலாம். இதுதான் அருளின் ஆற்றல் என்பதாம்.

Similar topics
» ஸ்ரீகுருஜி அவர்களின் 111 ஆவது ஜயந்தி தினவிழா - அருட்சக்தி பேச்சு
» வாஞ்சாகல்பலதா- அருட்சக்தி நாகராஜன்
» அன்னையின் பெருமைகள் - அருட்சக்தி
» குருபக்தியால் நற்கதி பெற்றவர்; “ஆருணி” - அருட்சக்தி
» அருட்சக்தி ஸ்ரீகுருநாதரின் 77 ஆம் ஆண்டு ஜயந்திதின கவிதை (இடைமருதன்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum