ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


அன்னையின் பெருமைகள் - அருட்சக்தி

Go down

அன்னையின் பெருமைகள் - அருட்சக்தி Empty அன்னையின் பெருமைகள் - அருட்சக்தி

Post by arutsakthi Tue Oct 15, 2013 11:02 am

அன்னையின் பெருமைகள் - அருட்சக்தி

'ஞானாம்ருதம் ஸமரஸம் ககனோபமோஹம்'

காமாக்ஷீ சரணாம்போஜம் பாவயந்தம் ஸதாஹ்ருதி
அனந்தாநந்தநாதம் தம் ஸத்குரும் சிந்தயே ஸதா

அன்னையே அருளே இன்றுனை போற்றினேன்
பின்னையும் பொருளும் பேறும் அளித்து
தன்னினம் என்று தமியனைச் சேர்த்து
உன்னிலே என்னையும் சேர்த்தருளுவாய்.

காமாக்ஷீம் கமலாம் காந்தாம் கல்மஷக்னீம் குலேச்வரீம்
காமிதார்த்த ப்ரதாம் வந்தே க-ஹ-ஸாதி ஸ்வரூபிணீம்

அருட்குருவின் திருவடியருளால் அருட்சக்தி அன்னையின் பெருமைகள் பற்றி சிறிது எழுத வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. முதலிலேயே சொல்லிவிடுகிறேன்- எழுதுவதெல்லாம் அருட்குருவின் ஆற்றல். இதில் எனது சாமர்த்தியம் எதுவும் இல்லை.

வாங்மே மனஸி ப்ரதிஷ்டதிம்...... என்கிறது ருக்வேதம். அதாவது மனதில் நினைத்ததை பேசவேணும் என்றால் நம்மால் அது மிகவும் அரிதான வேலைதான். ஆனாலும் ஸத்குருவருளால் தோன்றினதை அப்படியே எழுதினதை படிக்கிறேன். குற்றம் குறை தவிர்த்து நல்லன எடுத்துக் கொள்ள வேணும்.

மனிதகணக்கில் காலம் மிகவும் பெரியது. நீண்டது. பல பரிமாணங்கள் கொண்டது. நமக்கு 120 ஆண்டுகள் இந்த கலியுகத்தில் என விதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இதைப்போல பலமடங்ககுள் தேவர்களுக்கும், ப்ரம்மாவுக்கும் ஆயள் என புராணங்களில் பல விதமாக சொல்லப் பட்டடிருக்கின்றன. எங்கோ படித்த காலக்கணக்குப்படி ஒரு பட்டியல் சொல்லுகிறேன்.

60 தத்பரை 1 பரா
60 பரா 1 விப்தம்
60 விப்தம் 1 விநாழிகை
60 விநாழிகை 1 நாழிகை
60 நாழிகை 1 நாள்
30 நாள் 1 மாதம்
12 மாதம் 1 வருஷம்
60 வருஷம் 1 பரிவ்ருத்தி (பிரபவ முதல் அஷய)
3000 பரிவ்ருத்தி 1 யுகம்
4 யுகம் 1 சதுர்யுகம்
71 சதுர்யுகம் 1 மன்வந்திரம்
------------------------------------------------------------------------------------------------
14 மன்வந்திரம் 1 கல்பம்
(432 கோடி மனித வருஷங்கள் கணக்கதிகாரம் என்ற நூலின் படி பரார்த்தம்)
------------------------------------------------------------------------------------------------
18 சதுர்யுகம் 1 மனு
74 மனு 1 இந்த்ர ராஜ்யம்
270 இந்த்ரராஜ்யம் 1 பிர்ம்மநாள்
36500 பிர்ம்மநாட்கள் 1 பிர்ம்மப்ரளயம்(ஆயுள்)
360 பிர்ம்மப்ரளயம் 1 ஆதிபிர்ம்மப்ரளயம்
100 ஆதிபிர்ம்மப்ரளயம் 1 விஷ்ணுகல்பம்
100 விஷ்ணுகல்பம் 1 ரோமகாலம் (ரோமரிஷியின் ஒரு ரோமம் உதரும் காலம்)
10 கோடி ரோமகாலம் 1 செதில்காலம் (மீனசமஹரிஷியின் 1 செதில் உதிரும் காலம்)
1 கோடி செதில்காலம் பரத்வாஜருக்கு 1 நிமிஷம்
30 கோடி பரத்வாஜநிமிஷம் 1 சக்தி காலம்
780 சக்தி காலம் மஹாசக்திக்கு 1 நிமிஷம்

நமது புராணங்களும் சாஸ்த்திரங்களும் நான்கு யுகங்களை நமக்கு காட்டுகின்றன. க்ரேதாயுகம் என்கிற ஸத்யயுகம், தரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம். இதில் கலியுகம் தொடங்கின நாள் 18 பிப்ரவரி 3102 என கிரிகோரியன் காலண்டரில் உள்ளது. இவ்வாறு தொடங்கின கலியுகம் 432000 வருடங்கள் என ஒரு கணக்கு. இதில் பாருங்கள் கலியுகத்தின் 432000 ஆண்டுகளில் உள்ள எண்களைக் கூட்டினால் 9 தான் வருகிறது. இது தேவியின் மந்த்ராஷர எண்ணிக்கையாம். மேலும் நான்கு யுகங்களின் மொத்த காலஆண்டுகள் 4320000. இதுவும் 9 தானே வருகிறது. இதில் இந்த நான்கு யுகங்களை ஒரு தர்மமான எருது என வர்ணித்து அந்த தர்மங்கள் ஒவ்வொரு காலை ஒவ்வொரு யுகத்திலும் இழந்துகொண்டு வந்து கலியுகத்தில் ஒரு காலுடன் நிற்கிறது என்பதாக பெரியோர் கூறுவர்.

அதனால் நாம் இங்கு கலிகாலத்தின் பிரபாவத்தை சற்று சிந்திக்க வேண்டியுள்ளது. நாம் பரவலாக பார்க்கலாம். -நான் என்னசெய்வது? இது கலியின் செயல்.- என்று நம்மால் முடியாததை கலிபுருஷனின் தலையில் சுலபமாக ஏற்றி விடுகிறோம். இப்படி இந்த கலி என்னதான் செய்கிறது? சற்று சிந்திப்போம். இவை வியாஸ பகவானால் ஜனமேஜ யனுக்கு சொல்லப்பட்ட ஸ்ரீதேவிபாகவதத்தில் ஆறாம் ஸ்கந்தத்தில் கூறப்பட்டது என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். கிரேதாயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலயுகம் என்ற நான்கு யுகங்களில் முதல் மூன்று யுகங்களில் ராஷஸர்களாக யார் யார் இருந்தார்களோ அவர்களே கலியுகத்தில் அந்தணர்களாக வந்துள்ளவர்கள். இவர்கள் பாஷண்டர்களிடத்திலே அன்பு வைத்திருப்பார்கள். மக்களை வஞ்சிப்பதில் ஆசையுடையவர்கள். சத்தியம் பேசமாட்டார்கள். வேத தர்மங்களை விட்டு விடுவார்கள். தனக்கு நிகர் யாருமில்லை என்ற அஹங்கார மமகாரமுடையவர்கள். வேத அத்யயனத்தில் விமுகர்கள். பிறரிடத்தில் கூலிக்கு வேலை செய்வதில் விருப்பமுடையவர்கள். தர்மப்ரஷ்டர்கள். தருமவிரோதிகள். தானம் வாங்குதில் ஆசையுடையவர்கள். ஆஸ்திகத்தில பற்று குறைந்து நாஸ்திகம் பேசுவார்கள். பெண்கள் தன் மனம் போன போக்கில் போவார்கள். காம மோஹமுடையவர்கள். பொய் பேசி தன் கணவனை வஞ்சிக்கின்றவர்கள். கற்புநிலைபற்றி பேசுவதில் வல்லவர்கள். தர்மம் தெரிந்தவர்களும் அதர்மமே செய்வார்கள். இப்படி யெல்லாம் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தர்மங்களின் சீரழிவு கலியுகத்தில் அதிகம். ஆட்சியாளர்கள் அதர்மமான வரிகளை விதிப்பார்கள். தாங்கள் ஆன்மீகத்தை வளப்பவர்கள் என உணராது அதற்கு விரோதமாக செயல் படுவார்கள். பாபங்கள் அதிகரிக்கும். குருமார்களுக்கு அவமரியாதையும், சீடர்கள் தன் தவறை உணராமல் அகங்காரம் மமகாரத்தை உடையவர்களாக இருப்பார்கள். ஆனாலும் இதில் கலியுகம் தொடங்கின திலிருந்து 10000 வருடங்களில் பக்தி யோகம் சிறந்து விளங்கும் என பிர்ம்ம வைவர்த்த புராணத்தி;ல் உள்ளது.

இந்த காலநிலையை நாம் கற்பனையில் கூட நினைத்துக் கணக்கிட முடியாது. இதைப்போன்ற அனேக விஷயங்கள் இருக்கின்றன. இதனையெல்லாம் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஏனெனில் நமது ஆயுள் 100 ஆண்டுகள்தான். இதில் பாதி தூக்கத்தில் கழிந்தது. பாக்கி 50 ல் 20 ஆண்டுகள் பால்யம். பாக்கி 30ல் இல்லறம், வாழ்க்கை முதலியன. இதில் இவன் தன் ஆத்மா பிவ்ருத்திக்கு என எத்தனை ஆண்டுகள் ஒதுக்குகிறான் என்பதே இப்போது நம் கண் முன் நிற்கும் வினா. இதல்லெல்லாம் கலியுகத்தின் கூத்து என்கிறார்கள். இதிலிருந்து நாம் மீள வேணுமானால் ஒரே வழி அல்லது மார்க்கம் உள்ளது. அதுதான் ஸ்ரீவித்யா எனப்படுகின்ற தேவி வழிபாடு. தேவியை விட்டால் நமக்கு வேறு கதி கிடையாது.
இவ்வாறு நமக்கு தேவி வழிபாட்டை அளித்த பெரியொர்கள் என்றும், மஹான்கள் என்றும், உபாஸகர்கள் என்றும் அனேகர் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இருந்தவர்கள் வழிகாட்டியவர்கள் என்ற நிலையில் நாம் சிலரை தெரிந்துகொள்வோம். புராணகாலத்தில் அகஸ்த்தியர், துர்வாஸர், லோபாமுத்ரை என்று இருந்திருக்கிறார்கள். பிறகு தேவியை காளியாகவும், மாதங்கியாகவும் கண்டு உபாஸித்து தன்மயமானவரும் கவிக்கே சக்ரவர்த்தி என பெயர் பெற்றவருமான காளிதாஸர் மிகவும் போற்றப் படவேண்டியவர். இந்த கலியுகத்திலேயே சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் வந்தார். பாஷாண்ட மதங்களையெல்லாம் கண்டனம் செய்து அத்வைதமாம் ப்ரஹ்ம வித்யையை பரப்பினார். அதனை செயல் படுத்தவெனவே ஆம்னாய மடங்களை இந்தியாவிலே ஆங்காங்கே ஸ்தாபித்தார். அனேக நூல்கள் இயற்றியது மட்டுமல்ல - தேவி மந்த்ரங்கள் அடங்கிய ஸெளந்தர்யலஹரி என்ற 100 துதிகள் ஆக்கி கொடுத்தார். இந்த ஸெளந்தர்யலஹரிக்கு பிற்காலத்தில் வந்த அனேக மஹான்கள் உரை செய்தார்கள். அவர்களில் குறிப்பிடபடுபவர்கள் லஷ;மிதரர், கைவல்யாச்ரமஸ்வாமி, விஷ்ணுதீர்த்தர், நரஸிம்ம தாகூர் ஆவார்கள். பின் 14 ம் நூற்றாண்டில் வந்த வித்யாரண்யர். இவரே விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட காரணமாக இருந்தவர். சிருங்கேரி பீடத்தை அலங்கரித்தவர். ஸ்ரீவித்யாரண்யம், வேதாந்தபஞ்சதசீ ஆகிற நூல்களை ஆக்கியவர்.
அடுத்து நமக்குத் தெரியும் பாஸ்கரராயர் என்ற மஹான் ஒரு ஸ்ரீவித்யா உபாஸகர், க்ரந்தகர்த்தா, அத்வைதி, நமது தென்னாட்டில் திருவிடைமருதூரில் இருந்து முக்தி யடைந்தவர் என்று. அவர் தந்த ஸெளபாக்ய பாஸ்கரம் என்ற ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களின் உரைநூல்தான் இன்று நமக்கு தனம்.
பின் 18-19 ம் நூற்றாண்டில் சங்கீத மும்மூர்த்திகளில் முதலாவதாக வருபவர் முத்துஸாமி தீஷதர். மற்ற இருவர் தியாகய்யர், சாமா சாஸ்த்திரிகள் என்றவர்களுக்குள் சாமா சாஸ்த்திரிகள் பாடல்கள் அவர் ஸ்ரீவித்யா உபாஸகர் என்பதை நன்கு உணர்;த்துகிறது. மற்ற தியாகய்யர் ராமனைப்பாடினாலும் அவரும் தன் மனத்தளவில் ராமனை அம்பாளாகத்தான் கண்டு பாடியுள்ளார். முத்துஸாமி தீஷதர் தன்னுடைய பல நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளிலும் நவாவரண கீர்த்தனைகளிலும் அதனை நன்றாகவே காணலாம். இன்று நமது வாழ்நாளிலும் அனேகர்; இருந்திருக்கிறனர்.
அடுத்து திருவண்ணாமலையில் வாழ்ந்து அனைவருக்கும் ஆத்ம ஞானத்தை ஊட்டிய ரமண மகரிஷிகள். அவருடைய சீடராக வந்த காவ்யகண்ட கணபதி முனிவர், அவருடைய சீடரான கபாலி சாஸ்த்தரிகள் என்று பலர். அங்கேயே வாழ்ந்து ஸித்தியடைந்த சேஷாத்திரி ஸ்வாமிகள். மேலும் சிருங்கேரி பீடாதிபதியான சந்த்ரசேரகபாரதி மஹாஸ்வாமிகள், நரஸிம்மபாரதி மஹாஸ்வாமிகள் முக்கியமானவர்கள். 100 ஆண்டுகள் வாழ்ந்து ஸநாதனதர்மத்தின் உருவமாகவே நடந்து பல தர்மங்களை உணர்த்திய காஞ்சி மஹா பெரியவர்களை நாம் மறக்கமுடியுமா? அவரது பேச்சும், எழுத்துக்களும் அவர் அம்பாளிடம் வைத்திருந்த பக்தி வெளிப்படுத்துவது மட்டுமல்ல அவரே அம்பாள்தான் என்று அனைவரும் ஒப்பும்படி உள்ள மஹான் அவர்.

இப்போது இன்றைய காலத்துக்கு வருவோம். உலக அளவில் பல குருநாதர்கள் பல மண்டலிகள் என்றும் ஸபா என்றும் கோயில் என்றும் குழுக்களாக வைத்துக் கொண்டு அனேக சீடர்களை தேவி உபாஸனையில் ஈடுபடுத்தி வருவதை நாம் பார்கிறோம்.

இனி ஒரு ஸ்ரீவித்யோபாஸகரின் பெருமை பற்றி பார்ப்போம். அருணோபநிஷத்து கூறுகிறது:
அச்ருதாஸ: ச்ருதாஸச்ச ! யஜ்வானோ யேஅப்யஜ்வன: ஸ்வர்யந்தோ நா பேஷந்தே ! ........23 அருணோபநிஷத்
ஒரு க்ருதோபாஸகனான ஸ்ரீவித்யோபாஸகன் - அதாவது ஸ்ரீசக்ரவித்தையை நன்றாக அறிந்தவன்- நாட்டில் செய்யவேண்டியது என்று மீதம் ஒன்றும் இல்லை. பரிபக்குவம் அடைந்தவர்களும் அவர்கள்தான். பரிபக்குவம் அடையாதவர்களும் அவர்களே. அவர்கள் யாகம் செய்யவேண்டிதும் இல்லை. யாகம் செய்தவர்களும் அவர்களேதான். அவர்கள் ஜீவன் முக்ததசையில் உள்ளவர்கள். ஸ்வர்க்கமே அவர்களுக்கு கிடைப்பதாயினும் விரும்பமாட்டார்கள். ஆனால் ஸாதாரண ஜீவன்களான நம்பொருட்டு;த்தான் அவர்கள் அனை த்தையும் அதாவது யாகம், யக்ஞம், பூஜை, தவம், தானம் செய்கிறார்கள். இவ்வாறு ஒரு ஸ்ரீவித்யோபாஸகனின் பெருமை இருக்கும்பபோது அவர்ளை நாம் எவ்வாறு மதிக்கவேணும் என்று சிந்தித்து தெளியவேணும். மற்றும் ஸ்ரீவித்யையின் உயர்வையும் உணரவேணும்.
இவ்வாறு சிந்தித்து தன் வாழ்நாளை வீண்நாளாக ஆக்காமல் பிறருக்கு உபகாரமாக இருந்து, தன் ஆத்மா பிவிருத்திக்கும் பாடுபடவேண்டிது மனிதர்களுடைய கடமை. ஸாதிக்க பிறந்தவர்கள் நாம். இவ்வாறு ஸாதனை செய்து தானும் மஹத்தானதுடன் தன்னை அண்டிய வர்களையும் மஹான்களாக ஆக்கியவர்கள்தான் ஸத்குரு நாதர்கள்.

அறிவு அல்லது ஞானம். இதனை அறிந்து கொள்வது என்பர். எதனை என்கிற கேள்வி வரும். பஞ்சபூதங்களின் தன்மாத்ரைகளான பஞ்சஇந்திரியங்களால் அனுபவிக் கக்கூடிய அனைத்து அனுபவங்களும் அறிவில் அடங்கும். இந்த அறிவு விரிந்து கொண்டே செல்ல க்கூடிய வல்லமை உடையது. மனிதன் புதிதுபுதிதாக இயற்கையின் ஞானத்தை அறிந்துகொள்ளுகிறான். அவன் இன்னும் பெறவேண்டிய ஞானத்தின் அளவு பன்மடங்காக மிக அதிகமாக உள்ளன. அவை அகண்டாகாரத்தில் விரிந்து விரிந்து கொண்டே சென்று கொண்டு உள்ளன. இதற்கு எல்லை உண்டா என்றால் இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். எதனை அறிந்தால் மற்றது அனைத்தும் அறிந்ததாகுமோ அதனை மட்டுமே அறிய அவர்கள் அறிவுறு த்துகிறார்கள். அதனை அறிந்துகொண்டால் இயற்கையின் மர்ம முடிச்சுகள் அத்தனையும் அவிழ்ந்துவிடும். இவ்வாறு அறிந்து கொண்டவர்களே ஞானிகள். அவர்கள் அறிந்த இந்த மூலதத் துவத்தை ப்ரஹ்மவித்தை என்;று விளக்கினர். அந்த வித்தைதான் அறிவு, மற்றது அனைத்தையும் அறிவிக்கக்கூடிய அறிவு அது- என்கிறபோது அதனையும் அவர்கள் சிவஞானம், பரஞானம், ஆத்மஞானம், ஆத்மானந்தம், ப்ரம்மானந்தம், சிவஜீவஐக்யம், சிவசக்திஐக்யம், ஜீவப்ரம்மஐக்யம் என்றெல்லாம் பல பர்யாய நாமங்க ளில் விளக்கியி ருக்கிறார்கள். எத்தனை விதங்களில் அந்த ஞானத்தின் விளக்கத்திற்கு பெயர்கள் கூறப்பட்டாலும் - பெயர்கள் கூறப்படும் நிலையில் அது வெறும் நாமத்தின்பாற்பட்டதே. பெயர்களையும் விளக்கங்களையும் தாண்டி தனக்குத்தானே தன்னுள்ளத்தில் மாறா அன்பினால் ரஸித்து ரஸித்து பேரின்பத்திலே திளைக்கும் பெருயோக வைபவம் அது. அதனை இந்த ஸாதகன் தன்னுடைய ஸாதனையில் திளைத்து திளைத்து இந்த ரஸானுபவத்தை பெற வைக்க ஆன்றோர்களும் உபநிடதங்களும் நமக்கு அளித்த பர்யாயநாமங்களே மேலே கூறப்பட்டவை.

உலக இன்பங்கள் துய்க்கப்பட வேண்டியவைகள்தான். ஆனால் அவைகளை அனுபவிக்கும் காலத்தில் அதனுடைய தூசு தும்புகள் மனத்தகத்தின் கதவுகளிலே பதிந்து விடுகின்றன. அதனால்தான் வினை வாஸனைகள் என்கிற கர்மசேஷம் ஜீவனை பற்றிக் கொண்டு அடுத்தடுத்த பிறவிகளிலே தொடருகிறான். இந்த தூசு தும்புகளை நாம் ஒட்டாமல் பார்த்துக்கொண்டு விட்டால் கர்ம வினை பதியாது. பிறவி தொடராது. வழி உண்டா? மனத்தகத்தின் கதவுகளிலே தூசு தும்புகள் ஒட்டாத நிலைக்கு செய்ய வேண்டிய செயல் ஞானம் என்கிற கவசத்தை மனதிலே உண்டுபண்ணி க்கொள்ள வேண்டும். ஞான கவசம் அங்கு ஏற்பட்டுவிட்டால் மேற்படி அழுக்குகள் ஒட்டாது. அதற்கு நமது ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு உதாரணம் கூறுவார். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுக்க வேணுமானால் முதலிலே கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ள வேணும். இல்லையானால் பலாப்பழத்தின் பிசின் கையிலே ஒட்டிக் கொண்டு பழத்தை உண்ணவிடாமல் செய்து விடும். எனவே (பரத்தைப் பற்றிய) ஞானபாதுகாப்பை உண்டாக்கிக்கொண்டுவிட்டால் ஆசாபாசங்கள், உலகப்பற்று, பொருளாசை என பலவித தூசு தும்புகள் மனத்தகத்திலே ஒட்டாது.

தைத்ரீய உபநிடதம் கூறுகிறது - ஆகாயம் முதல் ஜீவனுடைய சரீரம் வரை உள்ளதுதான் இந்த ஜகத் என. இதுவே ஆனந்தம்தான். நாம் என்ன தவறு செய்கிறோம் தெரியுமா? - இந்த ஜகத்தையும் நம்மையும் ஆனந்தத்தையும் தனித்தனியே பிரித்து விடுகிறோம். எத்தனைதான் ஆனந்தவல்லி என்ற தனி அத்யாயத்தில் பலவிதங்களில் உபநிடதங்கள் கதறினாலும், அதனை பற்றிய விளக்க ங்களை எத்தனை பெரியோர்கள் உபன்யாஸங்கள் செய்தாலும் நாம் நமது அனுப வத்துக்குக் கொண்டு வருவதில்லை. ஏன் அவ்வாறு நிகழ்கிறது? புத்தகப்படிப்பும் பொது உபன்யாஸமும் உள்ளத் தெளி விற்கே அன்றி அனுபவத்துக்கு ஒத்து வராது. இதற்கு என்ன தான் செய்வது ? ஆம் ! உள்ளம் கேட்டுவிட்டது. அங்குதான் இந்த ஜீவனு க்கு அனுபவமாக அவன் உணர அனுகுண மான அருளுரைகளை அள்ளிவழங்க, அனுதினம் அவனுக்கருள, அருட்குரு ஒருவர் அருகே அமைகிறார். அவரது சொல்லையும் செயலையும் அவன் வழுவாமல் பற்றிவிட்டா னேயானால் மேலே சொன்ன தூசு தும்புகள் அற்ற ஞான விகஸிப்பு உள்ளத்திலே துளிர்விட்டு, அதுவே அவனாக ஆகி, உலகம் வேறு தான் வேறு என்கிற த்வைதபுத்தி நீங்கி அத்வை தமாம் ஆனந்தத்திலே திளைத்து விடுகிறான். மேலே சொன்ன உலக விஷயங்கள் அதாவது ஜகத் வ்யாபார ங்கள் அத்தனையையும் வேதாந்தத்தில் பந்தம் என்பர். இது நீங்கினால் முக்தியாம் ! ஒன்று போய் ஒன்று வருகிறது என்றால் வருகிறதும் நிலையில்லைதானே ! அப்போது போவதும் வருவதுமான விஷயங்கள் அத்தனையும் மனதின்பாற் பட்டதே. அதாவது மனதைப்பொருத்தே அமைவது. இதனால் பந்தமும் முக்தியும் மனதோடு சேர்ந்து நாசமாகிவிடுமோ? என்றால் இல்லை என்பதுதான் வேதாந்திகளின் கோட்பாடு. அதாவது செய்யும் செயல்கள் பந்தமாகி விடுகின்றன. அதனால் ஏற்படும் பயனும் பந்தமாகி விடுகிறது. பயனைத் துறந்து விடுகிறது என்கிறது த்யாகமாகிவிடுகிறது. கடைநிலை முக்தி. மேலே சொன்ன வேதாந்திகளின் கோட்பாட்டைதான் கீதாசார்யன் வேறு விதத்தில் கூறுகிறான் :-

'இறை த்ருப்திக்காக செய்யப்படும் செயல்கள் அத்தனையும் யாகமாக மாறிவிடுகிறது. அவ்வாறு செய்கிறபோது அந்த செயல்கள் அத்தனையும் இல்லாததாகி விடுகிறது '. (கீதை - 4-23)

அதனால் இங்கு பற்று என்கிற விஷயமே மிகுவதில்லை. யாகத்திலே அர்ப்பித்தல் அதாவது ஆஹூதி செய்தல் என்கிற செயல் ஒன்று உண்டு. இவன் பற்றில்லாதவனாக யாகத்தை செய்கிற காலத்தில் செய்பவனும் பரமனே அல்லவா ! யாகத்தை செய்த இவனும் பரமன். யாகத்திற்கு தேவையான யாகப் பொருட்கள் அத்தனையும் பரமே ! (ஜகத்தும் அதன் வ்யாபாரமும் பரம் என்பது முன்பே விளக்கப்பட்டது). யாகப்பொருட்களை ஆஹூதியாக வாங்கி தன்னுள்ளே ஐக்யப்படுத்திக்கொள்ளும் அக்னியும் பரமே ! (இதுவும் ஜகமான பஞ்சபூதத்தில் ஒன்று). முதலிலே கூறினவாறு மனத்தகத்தின் கதவுகளிலே பூசிவிட்ட ஞானக்கூட்டுக்குள் தானே யாகம் செய்பவனும் இருக்கிறான். இந்த யாகத்தினால் அடையக்கூடிய பலன் யாதாக இருக்கும் ? கேட்பானேன் ? பரமேதான் ! இதனால் செய்தவ னும் செய்யப்பட்ட பொருளும், மிகுந்த பலனும் பரத்தை தவிர இங்கு வேறொன்றி ல்லை. இதற்கு ஆதாரமாக மறுபடியும் நாம் கீதா சார்யனைத்தான் அணுகவேண்டியுள்ளது.


ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்;ம ஹவி: ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதினா ! (கீதை:4-24)
கீதை இங்கு ப்ரஹ்மம் என்கிற பரம்பொருளையும் ஜீவன் என்கிற ஸாதகனையும் ஒன்று படுத்தி ஜீவப்ரஹ்மஐக்யம் என்ற ஒரு வேதோபநிஷதநிலையை உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்தியம்பியிருக்கிறது. இதனை நாம் வேறு கோணத்திலும் சிந்திக்கலாம். பாவனோபநிஷத் என்கிற வேத சிகை கூறுவது இங்கு நமக்கு மிகவும் பொருத்தமான வாக்யமாக அறிஞர் காட்டுகிறார்கள்.

ஞாத்ரு ஞான ஞேயானாம் அபேத பாவனம் ஸ்ரீசக்ரபூஜனம்

ஜகத்தை அறியும் ஜீவன் அறிபவன். ஜகம் அறிவு. இந்த ஜகமேதான் பரவஸ்து என்பதை நாம் முன்பே கண்டோம். இதன் மூலம் அறிபடும் பொருளாக ஆண்டவள் ஆகிறாள். ஆக இந்த அறிபவன், அறிவு, அறிபடும் பொருள் என்கிற முக்கூட்டு நிலை என்றைக்குமே- எப்போதுமே இல்லை. இந்த மூன்றும் பிரிபடாத பிரிக்கமுடியாத ஒரே பொருள். அதை பொருள் என்றும் சொல்ல முடியாது. (ஆனாலும் மனதின் புரியும் தன்மைக்காக ஒரு பெயர் பரம் பொருள் என்று சொல்லுகிறோம்.) இந்த பிரித்தறிய முடியாத ஒன்று என்கிற ஒரு பாவிப்பே ஸ்ரீசக்ர பூஜை என்பது. இப்போது பாருங்கள் கீதாசார்யனுடைய ஞானகர்மஸன்யாஸ யோக அத்யாயத்திலே (4-24) கூறிய கருத்துக்கள் இந்த பாவனோபநிஷத் கருத்துக்களுடன் அழகுற பொருந்து கிறது பாருங்கள் !

ஏன் இந்த உபநிடதம் ஸ்ரீசக்ர பூஜையை ப்ரதானமாக எடுத் துக்கொண்டது என்கிற விஷயத்திற்கு வருவோம். ஸ்ரீசக்ரம் என்பது சக்ரராஜம் என்பதாக உயர்ந்த நிலையில் போற்றப்படுகிறது. ஏனெனில் அதுவே பரம்பொருளாம், பராசக்தியாம், சித்சக்தியாம், சைதன்யமாம், ஆத்ம சக்தியாம், லலிதா என்கிற நாமாங்கிதமான ஒரு சக்தி தத்துவம். இந்த சக்திதத்துவமே அண்டசராசரமாக கோடானுகோடி கோளங்கள் நிறைந்த ப்ரஹ்மாண்டம். இப்போது பாருங்கள் ! ப்ரஹ்மா ண்டமும் சக்திதத்துவமும் சக்ரராஜமும் ஒன்று என்ற நிலை ஸித்திக்கிறது. பல உபநிடதங்களிலும் கீதையிலும் நாம் கண்டது இந்த ப்ரம்மாண்டமே ஜீவன்தான்! ஜீவனே ப்ரம்மாண்டம்தான் ! என்பது. இப்போது மேலே கூறின அறிபவன், அறிவு, அறிபடும் பொருள் என்கிற முக்கூட்டு நிலையே ஸ்ரீசக்ர பூஜையாக இந்த உபநிடதம் கூறியிருப்பது எத்தனை பொருத்தமாக அமைந்திருக்கிறது ! ஸ்ரீசக்ரத்தில் உள்ள 9 சக்ரங்களில் 4 சக்ரங்கள் சிவசக்ரம் எனவும் 5 சக்ரங்கள் சக்தி சக்ரங்கள் எனவும் மந்த்ர சாஸ்த்திரம் கூறும். இதன் முழு விளக்க ங்களும் ஸெளந்தர்யலஹரிக்கு பாஷ்யம் எழுதிய ஸ்ரீலஷ;மீதரர் விளக்கியுள்ளார். லலிதா என்கிற நாமாங்கிதமான ஒரு சக்தி தத்துவ த்தை சிவமென்றோ சக்தியென்றோ நினைக்காமல் இரண்டும் கலந்த ஸாமரஸ்யமாக எண்ண வேணும். அதாவது அத்யந்தம் அபேதமாக இருத்தலாம். இதற்கு உதாரணம் சொல்ல வேணுமானால் எள்ளில் எண்ணைபோல, நிலாவில் நிலவொளி போல, கதிரவனில் சூடுபோல என பல சொல்லலாம்.
(தைலம் திலாதிவ, பாஸ்கரஸ்யேவ தீதிதி:, சந்த்ரஸ்ய சந்த்ரிகSmile

இதன்னியில் வெள்ளைநிறம் அதாவது வெள்ளை ஒளிதான் எழுநிறங்களாக சிதறி விரிவடைகிறது (Physics) என்பர். அதுபோல் தான் சிவம் என்ற அசையாத அசலம் சக்தி என்ற அசையும் அசைவாகி இந்த அண்டத்தின் இயக்கம் அனைத்தையும் நடத்துகிறது. மேலும் ஏழுவர்ணத்தின் மினுமினுப்பும் அழகும் நாம் மயிலிடம் காண்கிறோ மில்லையா! பரம்பொருளின் விதவிதமான ரூபம் சக்தியாக பரிணமிக்கிறது- என ச்வேதாச்வரதர உபநிடதம் கூறுகிறது என்பர் ஆன்றோர்.

பல உபநிடதங்கள் ஆதிமுதலை ப்ரஹ்மம் என்று கூறியுள்ளது. பல உபநிடதங்கள் அதே ஆதிமுதலை சக்தி என்று கூறியுள்ளது. அதனால் ப்ரஹ்மம் என்றாலும் சக்தி என்றாலும் ஒரே தத்துவம்தான். அதுவே ஆனந்தம்தான் என்பதையும் பல உபநிடதங்கள் நமக்கு அறுதியிடுகின்றன. அதனால் சக்தி தத்துவங்களை பேச வந்த பல அறநூல்கள் இதனை சிவசக்தி ஐக்யம் என்கின்றன.

இதனாலே ப்ரஹ்மஞானம் என்கிற, ஆத்ம ஞானம் என்கிற ஒரு விஷயத்தை ஸாதகனுக்கு புகட்ட வேதங்களும் உபநிடதங்களும் பலபல விதங்களில் பலபல உதாரணங்களை காட்டி பல நிலைகளில் பாடுபட்டு உபகரித்திருக்கின்றன. இதனாலே அவைக ளுக்குள் நம்முடைய சிற்றறிவின் தன்மையால் ஏற்றத்தாழ்வுகளை கல்பித்துக்கொண்டு குழம்பவேண்டிய அவச்யமேயில்லை. அதற்காக ஸ்ரீபகவத்பாத சங்கரர் ஒரு நல்ல உதாரணத்தை நமக்கு அளித்தி ருக்கிறார். அதாவது -
நமக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது ஏதோ காரணத்தை வைத்துக்கொண்டு பலமாக அழுகிறது. இங்கு தாயின் நிலை என்ன ? அதன் அழுகையை முதலில் நிறுத்த வேண்டும் தானே ! அதற்காக அவள் என்ன செய்வாள் ? தன் கையில் கிடைத்த பலவிதமான திண்பண்டங்கள், பழவகைகள், விளையா ட்டுப் பொருள்கள் என குழந்தைக்கு கொடுத்து முதலிலே அதன் அழுகையை நிறுத்துவாள். ஏன் அழுகையை நிறுத்த வேண்டும் ? அழுதால் அதற்கு உடலுக்கு ஊறு நேரிடும். மனம் பேதப்படும். அது சிரித்து ஸந்தோஷமாக இருந்தால் நல்லதுதானே இதற்காகத்தானே கண்டதெல்லாம் தின்னக்கொடுத்து அதன் அழுகையை முதலில் நிறுத்துகிறாள். -இப்படித்தான் மஹான்களும், ஸித்தர்களும், அறநூல்களும், ஸத்குருநாதர்களும், வேதோப நிஷதங்களும், வேதமாதாவும், தாயான லலிதையும் நம்முடைய ஸம்ஸார துக்க அழுகை நீங்க பல விஷயங்களை நமக்கு அன்னிய மாக உள்ள வஸ்துக் களைக் கொண்டே பலவிதங்களில் நமக்குப் புரிய வைத்து ஆத்மஞானத்தை ஊட்டி தங்களுடன் ஐக்யப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இவ்வாறு அன்னியமாக உள்ள ஜகத், அதிலே ஆட்பட்டிருக்கிற ஜீவன், விஷய வாஸனைகள், இவைகளிலிருந்து விடுபட செய்யக்கூடிய ப்ரஹ்மார்ப்பண- யாக, யோகங்கள் அத்தனையும் - எந்த ஜீவன் இதனை விசாரித்துக் கொண்டு அதனால் புரிந்துகொண்டு- புரிவதானால் ஏற்படும் ஆனந்த பரிதனாக ஆகும் நிலை இருக்கிறதோ அது தான் வேதாந்தத்தில் அகண்டாகார வ்ருத்தி என்று பெரும் பெயரிட்டு சுட்டுகிறார்கள். இதனால் பெயரை க்கண்டு நாம் மலைக் கத்தேவை யில்லை. ஏனெனில் அந்த ஆனந்த த்தை குறிப்பதற்கு- சுட்டுவதற்கு ஒரு பெயர் தேவைப்படுகிறது அல்லவா, அதுதான் அகண்டாகார வ்ருத்தி.
இப்படியாக இந்த கலியுக்த்தில் நாம் கடைத்தேர ஒரே வழி அன்னையின் சரணங்களை பிடித்துக்கொள்வது தான். அதற்கு ஒரு ஸத் குருவை அண்டி நல்லுபதேசம் பெற்று பிறவியை முடித்துக்கொள்ளுவதே புத்திசாலியின் செய்கையாகும்.

வாழ்க குருவின் பெருமை.
ஜய்சக்தி
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum